Skip to content
Home » சிநேகம் 11

சிநேகம் 11

தீபக்கை கிண்டல் அடித்து விட்டு வெளியே சென்ற உத்தவ் நேராக தேடி சென்றது ஆதவியின் இருப்பிடத்தை தான். கட்டாயம் உள்ளே நடந்ததற்கு வருத்தத்தில் இருப்பாள் என நினைத்து அவன் சென்றால் அங்கே இருந்ததை பார்த்து கண்கள் இரண்டும் விரிய அதிர்ச்சி கொண்டான். அங்கே ஆதவியுடன் பேசிக் கொண்டிருந்தாள் ஓர் மலையாள யுவதி. அந்தப் புதுப் பெண் மலையாளத்திலேயே ஆதவியிடம் கேள்விகள் தொடுக்க ஆதவியோ தனக்கு மலையாளம் தெரியாது என அவளிடம் ஆங்கிலத்தில் கூறியிருந்தாள். அவளோ அதனை சற்றும் பொருட்படுத்தாது மீண்டும் அவளிடம் ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தாள். அவளது பேச்சு வழக்கில் அவள் பேசுவது மலையாளம் என புரிந்தாலும் என்ன பேசுகிறாள் என்பது ஆதவிக்கு புரியவில்லை. ஏனெனில் அது காசர்கோடு(கேரளாவில் ஒரு ஊர்)மலையாளம். தமிழில் எப்படி வட்டார வழக்குகள் உண்டோ அதுபோலவே மலையாளத்திலும் ஒவ்வொரு இடங்களுக்கு ஏற்றது போல் அதைப் பேசும் விதங்களும் வேறுபடும். அது போலவே புதிதாய் வந்த பெண் பேசிய மலையாளம் புரியாமல் முழித்துக் கொண்டிருந்த ஆதவியைப் பார்த்து அங்கு முன்னரே பணிபுரியும் இளைஞன் வந்து “மே ஐ ஹெல்ப் யூ” என்று கேட்க ஆதவியும் அந்த இளம் யுவதியை அவருடன் அனுப்பி வைத்தாள். அவர்களே பார்த்துக் கொண்டிருந்த உத்தவிற்க்கு ஒரு புறம் அந்த இளம் யுவதி எரிச்சலை கொடுத்தாலும் மற்றொருபுறம் அதைவிட உதவி செய்வதாக பேச முயற்சித்த அந்த இளைஞனின் பார்வை மிகவும் எரிச்சல் ஊட்டியது. நேரம் கெட்ட நேரத்துல இந்த பொசசிவ் வேற என தனக்குள் நொந்து கொண்டவன் ஏன் இந்த பொசசிவ் வச்சு ஆதவியிடம் விளையாட கூடாது என விபரீதமாக யோசித்தான். தான் மட்டுமே யோசித்தால் எதுவும் ஒழுங்காக நடைபெறாது எனும் உண்மையே அறிந்தவன் தீபக் உடனும் மிதுனிடமும் கலந்துரையாடி ஐடியா ஒன்றை உருவாக்குவதற்காக மீண்டும் தீபக் அறைக்குள் நுழைந்தான.யாரோ என்னென்னமோ சபதம் எல்லாம் எடுத்துக்கிட்டு இங்கிருந்து போனாங்க போன ஸ்பீட்ல என்னடா திருப்பி வந்து இருக்காங்க என்று மிதுனிடம் கேள்வி கேட்டான் தீபக். என்ற‌ விதி, அவ்ட ஸ்ரீமா ஆதவியிரெடுத்து சம்சாரிக்குன்னு” (ஸ்ரீமா ஆதவிகிட்ட பேசுறா) என்ற உத்தவ் பெருமூச்சுடன் இருக்கையில் அமர்ந்தான். சோ வாட் என்று கூலாக கேட்டான் தீபக்இவன்றே ஒரு காரியம் என்றவன் ஆதவிக்கு ஸ்ரீமாவை தெரியும் என்று கூறிட அதிர்ச்சி அடைவது நண்பர்கள் முறையாயிற்று. ஆனாலும் அவர்கள் அதிர்ச்சியடைந்தது சில வினாடிகளே. அவர்கள் தங்கள் அதிர்ச்சியை குறைத்துக் கொண்டு பெருங்குடல் எடுத்து சிரிக்க ஆரம்பித்தனர் அவர்களின் முறைப்பதை தவிர வேறொரு வழியும் உத்தவிற்கு அமையவில்லை. சற்று நேரத்தில் அவர்களை தங்கள் சிரிப்பினை கட்டுப்படுத்திக் கொண்டு உதவிடும் எப்படி ஆதவிக்கு ஸ்ரீமாவை தெரிந்தது என அறிந்து கொள்ள ஆவலுடன் கேட்டனர். அது லவ் பண்றப்போ ஆர்வக்கோளாறுல எனக்கு ஃபேன்ஸ் இருக்காங்கன்னு சீன் போட்டுக்க அவகிட்ட சொல்லி வச்சேன். ஸ்ரீமா விஷயத்துல ஆதவிக்கு கொஞ்சம் பொசசிவ்வும் இருந்திச்சு..ஆனா இப்போ அவ ஸ்ரீமாவை தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல.”என்று கூறிட ” என்னடா நீ பெரிய கதை சொல்லுவேன் எதிர் பார்த்தா இப்படி பொசுக்குன்னு நாலு லைன்ல முடிச்சுட்டேன்…” என்று தீப கூறிட “ரொம்ப முக்கியம் என் வாழ்க்கையே முடிஞ்சிடுற மாதிரி இருக்கு இவனுக்கு நாலு லைன்ல கதை முடிஞ்சது பெரிய விஷயமா இருக்கு” என புலம்பிக்கொண்டான் உத்தவ். டேய்.. உண்மையை சொல்லு ஆதவி இல்லனா ஒரு மாதவினு செட் ஆகிட மாட்ட? என தீபக் கேள்வி கேட்க அவனைத் தொடர்ந்து மிதுன்”அளியா என்க்கொரு சம்ஷியம்(டவுட்) கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல… சோலி முடிஞ்சு. அப்படி சொல்ல வரியா” மிதுன்”நான் அப்படி சொல்லல..‌ஆனாலும் அப்படி தான்” என சோர்வாய் கூறினான். அவனை நினைத்து நண்பர்களுக்கும் பாவமாகத்தான் இருந்தது. தீபக் ” வீ ஆர் வெரி சாரி.. நின்ற பிரேமத்தினு ஞங்கட்கு ஹெல்ப் செய்யான் பற்றில்லா” ( உன்னோட காதலுக்கு எங்களால உதவி செய்ய முடியாது) உத்தவ் “வொய் மேன்?” என‌சோர்வாக கேட்க தீபக் “ரூல்ஸ்” என கூறி நேரம் பார்த்து பழிவாங்கினான். ஆனால் அவர்களால் முன்னரே கலந்துரையாடப்பட்ட விஷயம் ஒருவரின் காதலுக்கு மற்றொருவர் இந்த விதத்திலும் உதவி செய்யக்கூடாது ஏதேனும் பெரிய பிரச்சினையாக இருந்தால் மட்டும் உதவி செய்ய வேண்டும் அதுவும் மற்றவர்க்கு அறிவுரை கூறுவதும் இல்லை சண்டையிட்டால் சேர்த்து வைத்து அந்த மாதிரியான எந்த உதவியும் செய்யக்கூடாது என முடிவெடுத்து வந்திருந்ததால் உத்தவின் பிரச்சனையை அவனே முடித்து கொள்ள வேண்டும் என அமைதியாய் இருந்தனர். மூன்றாம் நபர் இருவருக்கிடையே நுழைந்தால் அது உறறவில் விரிசலையே ஏற்படுத்தும்.‌ஏனெனில் மூன்றாம் நபர் இருவருக்கிடையே நடக்கும் பிரச்சினைகளை மூன்றாம் நபராய் யோசித்து பதில் கூறுவர். அது மற்றவரை சார்ந்து இருப்பதாய் தோன்றினாலும் பல நேரங்களில் சரியாக வராது. இதுவே அவர்களின் கருத்து. உத்தவ், தீபக் மற்றும் மிதுனின் காதலிற்கு இதையே காரணமாக கூறி தப்பித்து வந்தான். அதுவே அவனையும் பழி வாங்கிற்று. “போங்கடா”என சலித்துக்கொண்டு அறையிலிருந்து வெளியே செல்ல ஆதவி, ஸ்ரீமா மற்றும் அந்த புதிய இளைஞன் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றான். அவனைப் பார்த்ததும் முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் ஸ்ரீமா ஹாய் சொல்ல இவனும் தன் வசீகர புன்னகையை காட்டி சிரித்தவன் ஆதவியையும் நோக்கி சிரித்தான். ஏற்கனவே அவன் மீது கோபத்தில் இருந்தவளுக்கு அவனது இந்தப் புன்னகை மேலும் கோபத்தை உண்டு பண்ணியது. அதை மறைத்தவள் ஸ்ரீமாவை பார்த்து புன்னகைக்க ஸ்ரீமா உத்தவைக்காட்டி ஏதோ பேசத் தொடங்கினாள். அவள் பேச வந்ததை இடைவெட்டி தானே பேச தொடங்கினான் உத்தவ்.ஆதவி.. திஸ் இஸ் ஸ்ரீமா‌‌. மை சைல்ட்குட் ப்ரெண்ட். ஆதவியை நோக்கி கூறியவன் ஸ்ரீமாவிடம் திரும்பி ஸ்ரீமா திஸ் இஸ் ஆதவி. மை கேர்ள் ப்ரின்ட். ஸ்ரீமா அதனை புன்னகையுடனே எதிர்கொள்ள ஆதவிக்கு தான் கோபம் பெருக்கெடுத்தது.”நான் இங்க யாருக்கும் கேர்ள்ப்ரெண்ட் கிடையாது” என ஆதவி கோபம் பொங்க கூற உத்தவ் நல்லவேளை ஸ்ரீமாவிற்கு தமிழ் புரியாது என்பதில் ஆசுவாசம் அடைந்தான். ஆனால் அவனது அந்த நிம்மதி சற்று நேரத்திற்கு நீடித்தது. ஸ்ரீமா ” உத்தவ்.. நினக்கு எத்ர கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் டா? ஒரு ஒரு பிராவஷ்யமும் வேறே வேறே கேர்ள்ப்ரெண்ட்… ஷெரிக்கும் நீ கோழி(கோழி மீன்ஸ் ப்ளேபாய்) ஆனோ? என நக்கலாக வினவினாள். “ஷேஏஏ… ஐம் நாட் ” என பதறியவாறே கூறியவன் பார்வை முழுவதும் ஆதவிடமே நிலைத்திருந்தது. அவளோ ஒரு ஒரு முறையும் ஒரு ஒரு கேர்ள் பிரண்டு என ஸ்ரீமா கூறியதையே யோசித்து கொண்டிருந்தாள். “ஐயோ இவள எப்படி சமாதானம் பண்ணுகிறது” என யோசித்தவன் ஆதவியிடம் ” எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் இன்னைக்கு வொர்க் முடிச்சு சேர்ந்தே போகலாம்” என கூறிவிட்டூ ஸ்ரீமாவிடம் “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது அப்புறமா சந்திப்போம்” என மலையாளத்தில் கூறி விட்டு சென்றான். ஆதவிக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும், சரிப்படுத்த வேண்டிய சில உறவுகளும் பாதியிலேயே தொடர்பற்று இருப்பதால் வேலை முடித்துவிட்டு உத்தவ் கூறியது போலே சேர்ந்து போகலாம் என முடிவெடுத்தாள்.

1 thought on “சிநேகம் 11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *