ஆதவி கூறியதனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தவன் “சோ என்கிட்ட இருந்து உனக்கு என்ன பதில் தேவைப்படுது” என்றவன் குரல் சற்று இறுக்கமாகவே இருந்தது. “கோபிகா அன்னைக்கு நைட் எங்க போயிருந்தா?அவ காணாம போறதுக்கு முதல் நாள் நைட்டு மிதுன் அப்படின்னு சேவ் பண்ணி இருந்த நம்பருக்கு கால் பண்ணி நான் நாளைக்கு வந்துருவேன்.. என்னை பஸ் ஸ்டாப்ல வந்து கூட்டிட்டு போ என சொல்லிட்டு இருந்தத நானும் கேட்டேன். மறுநாள் எக்ஸாம் முடிஞ்சு வந்ததும் அவளும் கிளம்புறேன்னு சொல்லி போயிட்டா.. மிதுன் கூட போறானா கண்டிப்பா நீங்களும் அதுல இருக்கீங்க நாலு பேர் சேர்ந்து தான் போயிருப்பீங்க என்கிற நம்பிக்கையில் நானும் பெருசா கண்டுக்கல.. மறுநாள் காலையில அவங்க அம்மா கூப்பிட்டு கோபிகா எங்க? அவ கால் பண்றப்போ எடுக்கல கிளம்பிட்டாளா இல்லையான்னு கேக்குறப்பதான் எனக்கே தெரிஞ்சது அவ வீட்டுக்கு போகலன்னு. மிதுன் கிட்ட கூப்பிட்டு கேட்டா அவன் ஒண்ணுமே தெரியலன்னு என்கிட்ட சொன்னான். எனக்கு அந்த நேரத்துல அது பொய்யாகவே பட்டுச்சு. உன்கிட்ட கேட்டா கோபிகா எங்கேயாவது போய் இருப்பா வந்துருவான்ட்டு அசால்ட்டா பதில் சொன்ன… தீபக் கிட்ட கேட்டா அவனும் ஏதேதோ சொல்லி மழுப்பினான். அவ எங்கேயோ தலைமறைவாகுறதுக்கு நீங்க மூணு பேரும் உடந்தையா இருந்தீர்கள் என்று நம்பி தான் உங்ககிட்ட பேசாம அவாய்ட் பண்ண.. அது போக போக கோபத்தையும் உண்டு பண்ண சண்டை போட்டு உங்ககிட்ட மொத்தமா பேசுறது நிப்பாட்டிட்டேன்” என்று கூறினாள். அவள் கூறும் போது அவள் குரலிலே ஒரு தயக்கம் தெரிந்தது. “நீங்களா ஒண்ண இ மேஜின் பண்ணி என்ன பிராப்ளம் என்று கூட சொல்லாம சண்டை போட்டதுக்கு இதுதான் பிராப்ளம்னு முன்னாடியே சொல்லி இருந்தா இத்தனை வருஷம் நாம பிரிஞ்சி இருக்க தேவையில்லை. இவ்வளவு தான் நீ எங்க மேல நம்பிக்கை வச்சிருந்தியா ” எனக் கேள்வியுடன் நிறுத்தினான். அதிலும் அந்த நாம் எனும் வார்த்தையை அழுத்தி கூறியிருந்தான். அவளோ எதுவும் பேச முடியாமல் அமைதியை தத்தெடுத்து இருந்தாள்.உப்பு சப்பில்லாத காரணத்திற்காக தனக்குள்ளே வெறுப்பை வளர்த்து கொண்டு பிரிந்தும் சென்ற இந்த முட்டாளை என்னத்தான் செய்வது என மனதிலே நொந்து கொண்டான் அவன். அதைக்காட்டிலும் இத்தனை நடந்த பின்பும் வருடங்கள் கடந்த பின்னும் அவள் ஒருத்திக்காகவே இவன் காத்திருக்க அனைத்தும் முடிந்தது என அவளாகவே முடிவு எடுத்து ஒதுங்கினேன் என்றது அவனை நன்றாக வருத்தியது. அவனுக்கு தன் காதல் கூட அவளுக்குள் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா? என கேள்வி எழும்பியது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அவளும் நண்பர்கள் பிரிந்தது பற்றி பேசினாலே ஒழிய இவர்கள் இருவரின் காதலைப் பற்றி வாய் கூட திறக்கவில்லை அது உத்தவினை நன்றாக மனம் நோகச் செய்தது. கல்லூரியில் படிக்கும் பொழுது ஆதவி தோழியாக வந்தவள் தான் கோபிகா அழகானவள். மலையாளிகளுக்கு சிறப்புமிக்க நீண்ட நெடிய கருங்கூந்தலை கொண்டவள். பரதம் கற்று அதில் அரங்கேற்றமும் முடித்து இருந்தாள். அதனால் பெரும்பாலும் அவள் கண்களும் அழகாய் பேசும். கல்லூரிகளில் தொழிலாக பலம் வந்தவர்கள் ஆறுமாதம் இன்டர்ன்ஷிப்பில் இன்னும் நெருங்கியிருந்தனர். ஆறுமாதமும் ஆதவியும் கோபிகாவும் ஒரே அறையில் தான் தங்கியிருந்தனர். கோபிகா மூலம நட்பாய் கிடைத்தவர்கள் தான் தீபக், மிதுன், உத்தவ்… இவர்கள் மூலம் அறிமுகமானவர்கள் உண்ணியும், சச்சினும். கோபிகா காணாமல் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு கல்லூரி முடித்து நேராக அறைக்கு வராமல் தீபக்குடன் வெளியில் சென்றேன் மிதுனுடன் வெளியில் சென்றேன் என ஒவ்வொரு நாளும் கூறி வந்தாள். ஆதவியோ பெரும்பாலும் உத்தவுடன் பேசுவதை பொழுதுபோக்காக கொண்டிருந்ததால் அவளும் இதைக் குறித்து பெரிதாக யோசிக்கவில்லை. நண்பர்கள் ஊர் சுற்றுகிறார்கள் என நினைத்துக் கொண்டாள். நாட்கள் செல்ல செல்ல இரவும் வெளியில் தங்க துவங்கி இருந்தாள். அதனை கேட்டதற்கு ஏதேனும் பதில் கூறி மழுப்பிருந்தாள். தீபக் அல்லது மிதுன் இருவர் இடத்தில் யாரோ ஒருவருடன் காதல் வயப்பட்டு இருக்கிறாள் என நினைத்தவன் உறுதியாய் தெரிந்த பின் உத்தவிடம் கூறலாம் என நினைத்தாள். அதே நேரம் உத்தவ் அறிந்து இருந்தால் அவனும் தன்னிடம் சொல்வான் என நினைத்திருந்தாள். ஆனால் அவள் அறியவில்லை இது அனைத்துமே கோபிகாவின் திருவிளையாடல் என. இவன் உறுதியாக அறிந்து கொள்வதற்கும் அல்லது உத்தவ் உண்மை அறிந்து இவளிடம் கூறுவதற்கும் அப்படி ஒரு சம்பவமே நடந்திருக்கவில்லை. தீபக் மற்றும் மிதுன் இருவரின் பெயரை பயன்படுத்தி அவள் வேறு யாருடனோ வெளியில் சுற்றிக் கொண்டிருந்தாள். நாட்கள் சென்றிருக்க ஒருநாள் வகுப்பறையில் சக தோழர்கள் பேசிக் கொண்டிருப்பது ஆதவி கேட்க நேர்ந்தது. ” நம்ம கோபிகாவை நேத்து நைட் மகாபலிபுரம் ரிசார்ட்ல வச்சு பார்த்தேன் அப்போ கூட நம்ம சீனியர்ஸ் மூணு பேரும் இருந்தாங்க” என்றான் ஒருவன் “சீனியர்ஸ்க்கு வந்த வாழ்வுடா என மற்றொவன் ” அங்கலாயித்துக் கொண்டான். அவர்கள் சீனியஸ் என குறிப்பிட்டது தீபக், மிதுன், உத்தவ் இவர்கள் மூவரையும் தான் என ஆதவி உறுதியாக நம்பினாள். ஏனெனில் அன்றைய தினம் காலையில் தான் நண்பர்களுடன் மகாபலிபுரம் சென்று விட்டு வந்திருந்தான் உத்தவ். அவனிடம் இதைக் கேட்டு தெளிவுபடுத்தி இருக்கலாம் தான். ஆனால் கோபிகாவின் நடவடிக்கையிலேயே பாதி அறிந்திருந்தவள் இப்பொழுது மீதமும் அறிந்து ஏமாற்றுபவன் எப்படி உண்மையை ஒத்துக் கொள்வான் எனும் கேள்வியும் மனதில் எழுந்திட கேட்க வேண்டாம் என முடிவெடுத்தாள். அதிலேயே சில பிணக்குகள் இருந்திட கோபிகா காணாமல் போனதற்கு இவர்கள் மூவர் தான் காரணம் என உறுதியாக நம்பினால் அதுவே அவளுக்கு வெறுப்பை உண்டு செய்திட முகத்திலேயே முழிக்காதீர்கள் என அவர்களிடம் கூறிவிட்டு உத்தவுடனான உறவினையும் முறைத்துக் கொண்டாள். கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்… இது ஆதவிக்கு தான் பொருந்தும். கண்ணால் கண்டதையும் காதால் கேட்டதையும் வைத்து தனக்குள்ளே இப்படித்தான் இருந்திருக்கும் என முடிவு செய்தவள் மூன்றாவதாக வரும் விசாரணையை கைவிட்டு இருந்தாதல் இதோ வருடங்கள் தாண்டிய பின் மீண்டும் துவங்கியிருக்கிறாள். அமைதியாகவே இருந்தவளை மீண்டும் கலைத்தது உத்தவின் குரல். “இங்க வந்து ஏதாவது கண்டுபிடிச்சிருக்கியா?”” எங்க.. நீங்க ஒழுங்கா பேசியிருந்தால் கூட ஏதாவது தெரிஞ்சிருக்கும். நான் பேசலன்னு மூஞ்சி திருப்பிகிட்ட ரோசகாரங்களாச்சே நீங்க”.. எனஅவர்கள் மீது விளையாட்டாய் பழி சுமத்திட ” எப்பவும் எங்களையே குறை சொல்லு” என உத்தவ் கூறியதும் முகம் வாடியவள் “சாரி ” எனக்கூறிட இட்ஸ் ஓகே என்றவன் அவளையும் வீட்டில் விட்டு விட்டு சென்றான். ஒரு வாரம் கடந்த நிலையில் பண்டே சென்டி பாடல் குழு திருச்சூர் செல்லும் நாளும் வந்தது இவர்களுடன் ஆதவி செல்லவிருக்கிறாள். ஏனென்று அறியாமலே ஒருவித உணர்வு ஆதவியை ஆட்கொள்ள யோகா செய்து தன்னை ஒருநிலைப்படுத்தியவள் உடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்ப தயாராகினாள். (இனி அனைவரும் பேசுவது தமிழில் தான். தேவையான இடங்களில் மட்டுமே மலையாளம் இணைக்கப்படும்.) இரவு ஏழு மணிவாக்கில் ஓர் வேன் வீட்டுக்கு வெளியே ஹாரன் அடித்திட மாளவிகாவும், ஆதவியும் அதில் ஏறினர். இனியெல்லாம் வசந்தமே…டூர் போலாம் வாங்க 😌😌
NICE