திருவனந்தபுரம் டூ திருச்சூர் இரவு 7 மணி அளவில் ஆதவி, மாளவிகாவும் இணைந்திட வேன் புறப்பட்டது. வேனில் ஏறியதும் தன்னை எப்பொழுதும் கலகலப்பாகவே வைத்திருக்கும் மாளவிகா அனைவரிடமும் ஹாய் சொல்லிவிட்டு மிதுனின் அருகில் அமர்ந்தாள். ஆதவிக்கோ ஓர் தயக்கம் மிதுன் தீபக் உத்தவ் மூவரும் இவளுக்கு முன்னமே தெரிந்ததால் அவர்களை நினைத்து பெரிதாக ஒரு தோற்றதில்லை ஆனால் அங்கிருந்து மற்றவர்கள் அவளுக்கு புதியவர்களாக இருக்க அமைதியை கடைப்பிடிக்கும் பொருட்டு தனியாக ஜன்னலோரத்தில் அமர்ந்து கொண்டாள். அபிராம், அரனவ், தாமஸ் மூவரும் அவளைப்பார்த்து புன்னகைக்க அவளும் நட்பாய் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அமர்ந்து கொண்டாள். அவளது அருகே இருக்கைகாலியாக இருக்க அவளிடம் பேசலாம் எனும் எதிர்பார்ப்போடு அர்னவ் வந்தமர்ந்தான். மெதுவாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தவன் அதற்கு ஏற்றார் போல் ஆதவியும் பேச இருவருக்குள்ளே நல்லதொரு நட்பு உருவானது. அதிகமா பேசாமல் அலட்டிக் கொள்வது போலவும் பேசாமல் இருவரும் பேசி இருந்தனர். அதைக் கண்ட தீபக் உத்த மிதுன் மூவருக்கும் தான் வயிற்று எரிச்சலாய் போனது. ஆதவி வந்து ஒரு வாரம் தாண்டி இருந்தும் அவர்களிடம் பழையது போல் பேசவில்லை. பழையது போல் என்ன ஒழுங்காகவே அவள் பேசவில்லை. ஆனால் இன்று கண்ட அர்னவிடம் எப்போதுமே பேச ஆரம்பித்திருந்தாள். என்ன செய்யலாம் எனயோசித்து கொண்டிருக்கையில் டிரைவர் உணவருந்த வண்டியை நிறுத்த அனைவரும் இறங்கினர். அப்பொழுதும் அர்னவ், ஆதவி இருவரும் சேர்ந்தே செல்ல உத்தவின் நிலமை தான் கவலைக்கிடமாகியது. அவளை அடம்பிடித்து வரச்செய்ததே உத்தவ், ஆதவி இருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளியை குறைத்து, குழப்பங்களை சரிசெய்து அவர்கள் உறவை மீண்டும் நிலைநாட்டவே… இங்கோ அவனிடம் பேசுவதற்கே காசு கேட்கும் அவள் அர்னவிடம் நன்றாக பேசியிருந்தாள். திருவனந்தபுரத்தில் தொடங்கி கொல்லம், ஆலப்புழா, கொச்சி, ஆலுவா சாலக்குடி தாண்டி திருச்சூர் சென்றடையும். சுமார் 6 முதல் 7 மணிநேரப்பயணம். பகலில் பயணம் என்றால் இருக்கும் போக்குவரத்து நெரிசல் சென்றடைவதற்கு தாமதமாகும் அதனாலேயே இரவு பயணத்தை துவங்கினார் ஏழு மணி போல் கிளம்பினால் 9:00 மணி போல் எதிர் வருடத்திலிருந்து இரவு உணவை முடித்துவிட்டு நேராக திருச்சூர் செல்லலாம் என திட்டமிடப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி 7:00 மணிக்கு கிளம்பியவர்கள் 9 மணி அளவில்திருவல்லாவிற்கு முன்னே பந்தளம் என்னும் இடத்தில் இரவுணவை முடித்துக் கொண்டனர். இரவுணவை முடித்துவிட்டு வேனில் வந்ததும் மிதுன் தான் “நல்ல படம் ஏதாச்சும் போடுங்க” என்றுகூற மற்றவர்களோ வேண்டாம் என்று கூறினர். வேண்டும் வேண்டாம் என்பதை சண்டையாகிட யாருக்கும் வேண்டாம் ட்ரூத் ஆர் டேர் விளையாடலாம் என மாளவிகா கூற மற்றவர்களும் அதனை ஆமோதித்தனர். ஏற்கனவே கடுப்பில் உழன்று கொண்டிருந்த உத்தவ் அர்னவினை அழைத்து ” நீ இதை ஹோஸ்ட் பண்ணு ” என்றுரைத்திட அவனும் எழுந்து வந்து அனைவருக்கும் முன்பாக நின்றான். இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என நினைத்த உத்தவ் ஆதவியின் அருகில் சென்றவமர்ந்தான். அவன் அமர்ந்ததும் ஒரு முறை அவனை திரும்பி பார்த்தவள் கடமையே கண்ணென வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். இந்த இருட்டில் இவளுக்கு என்ன தெரியுதோ… எல்லாம் வெட்டி சீன் என அவளுக்கு கேட்குமாறு முணுமுணுத்தவன் ” நைட் காற்று குளிரும், கோல்ட் வந்திரும் நாளைக்கு பாட்டு பாட முடியாது” என அவனே கூறிவிட்டு ஜன்னலை அடைத்தான். அவள் ஏதாவது பதில் கூறுவாள் என அவன் எதிர்பார்த்து இருக்க அவளும் ஒருமுறை அவனைத் திரும்பி முறைத்து விட்டு மீண்டும் மூடி இருந்த ஜன்னலையே பார்த்தாள். “ரசனை கெட்டவங்க.. அன்பா அடக்கமாஅழகான ஒரு மலையாளி பையன் பக்கத்துல இருக்க சும்மா இருட்டியிருக்க வானத்தை பார்த்துட்டு வரது..” என மீண்டும் அவளுக்கு கேக்குமாறு முனுமுனுத்தான் சலிப்பாக. இம்முறை தன் திருவாயை திறந்தாள் அவன் காதலி ” சோ சாரி சார், உங்களை ரசிக்கிறதுக்கு தான் உங்க கேர்ள் ஃபிரண்ட்ஸ் இருக்காங்களே… அவங்க இருக்கிறப்போ நானெல்லாம் எம்மாத்திரம்” என்று அவனிடமே கேட்டிட “ஓஓ… மை கேர்ள் ப்ரெண்ட் ஸ்ரீயை சொல்றியா.. அவதான் இங்க இல்லையே அப்புறம் என்ன?” என்றே கேட்டிட அவளோ வெகு சாதாரணமாக “ஒன்று கேட்டா உண்மையை மட்டும் சொல்வீங்களா?” என்றாள். உத்தவோ படு ஸ்டைலாக ” நான் சொல்வதெல்லாம் உண்மை..உண்மையை தவிர் வேறொன்றுமில்லை” என்று கூறினான். ” உண்மையாவே நீ ப்ளே பாய் தானா?” ஆதவி “ஹே… நீ என்ன சொல்ற ?” என்றவன் முழிக்க ” கேர்ள் ஃப்ரெண்ட் இங்கே இல்ல தைரியமா உங்கள சைட் அடிக்கலனு வெந்து நொந்து வாக்குறுதி தருகிறீர்களே அதான் கேட்டேன்” என சிரிக்காமல் கூறினாள் ஆதவி. அவை கூறியதை கேட்டதும் அசடுவழிந்தபடி “இப்பவும் நான் தான் அவுட்டா?” என கேட்டான் உத்தவ். அவனது முக பாவனைகளைக் கண்டதும் அதனை வெகுவாய் ரசித்தவள் உதடு விரிய புன்னைகையும் அவனுக்கு பரிசாய் தந்தாள். அவளது புன்னகையில் மனம் குளிர்ந்தவன் ஜன்னலில் கரங்களை ஊன்று கொடுத்தபடி அவளை நெருங்கியமரந்து ” என்னோட கேர்ள்ப்ரெண்ட் இங்க இருக்கிறப்போ நானும் வேற யாரையும் ரசிக்க மாட்டேன்..அவங்களும் வேற யாரும் ரசிக்கிறத விரும்ப மாட்டேன்” என்றவன் கண்ணசைவில் அர்னவை காட்ட அவளோ புருவம் உயர்த்தி அவனைப்பார்த்தாள். பெமினிசம் பேச வந்த வாயையும் அவனது நெருக்கம் பேச விடாமல் செய்திட அவனிலே பார்வையை செலுத்தியிருந்தாள். ” யாரோ ஒருத்தன் நீ அழகா இருக்க அப்படின்னு சொல்றப்போ கேட்க நல்லாயிருக்கும் தான். என்ஆளுனு ஜாலியா இருக்கும். ஆனா அதுக்கு மேல ஒருத்தர் ரசிக்கிறத எந்த லவ்வராலயும் தாங்கிக்க முடியாது. அதுவும் கூடவே இருக்கிறத ரசிக்கிறது எல்லாம் நோ சான்ஸ். இவன் என்னடானா பேசவே ஆரம்பிச்சுட்டான்… இப்போ நல்லவனா போசுனாலும் போக போக ப்ளார்ட் பண்ணுவான் பீ கேர்புல்”என்றிட ” எங்களுக்கு தெரியும்.. நீங்க வேற பொண்ணுங்ககிட்ட ப்ளார்ட் பண்ண மாட்டீங்க பாத்திங்களா?” என ஆதவி வெடுக்கென கூறிட சற்றே விலகி அமர்ந்து ” அதனால தான் சொல்றேன் சான்ஸ் கிடைச்சா கமிட் ஆனவனும் ஆகாதவனும் ப்ளார்ட் பண்ணதான் செய்வான். சில பேருக்கு போரடிக்கும் இல்லயா லவ் பண்ற பொண்ணுக்கு பயந்து பேசாம இருப்பாங்க” என்று கூறினான் உத்தவ். அவனது விளக்கம் கேட்டு அவனையே அடிக்கலாம் எனும் முடிவுக்கு வந்தவள் தனது கைப்பையை எடுத்து அவனை அடித்தாள். அவள் அடித்ததில் சிரித்தவன் ” இப்படி பொசசவ்வா இருந்தா கண்டிப்பா உனக்கு பயந்தே யார்கிட்டயும் பேசவே மாட்டேன் நான்” என சிரிப்புடனே கூறினான். அவனது சிரிப்பை ரசித்தவள் ” அதெப்படி கமிட் ஆனாலும் ப்ளார்ட் பண்ண வருது” என்று குதர்க்கமாக கேட்டிட ” கமிட் ஆனதுனால பொண்ணுங்க கிட்டே பேசக்கூடாது அப்படின்னு இருக்கவங்க நூத்துல பத்து பேர் தான் மத்த 90 பேருக்கும் ஏதாவது சோசியல் மீடியால பொண்ணோட ஐடியில் இருந்து மெசேஜ் வந்துச்சுன்னா கட்டாயம் ரிப்ளை பண்ண தான் செய்வாங்க அந்த பொண்ணு குடுக்குற இடத்தை வச்சு நார்மலா பேசுறது ஃபிளார்ட் பண்றதும் அதுக்கு மேல போறதும் இருக்கு. ஒரு பையன் ஒரு பொண்ண உண்மையா லவ் பண்றானா கண்டிப்பா ரெண்டு மூணு நாளு மேல அவனால இன்னொரு பொண்ணு கிட்ட ஒழுங்கா பேசவே முடியாது அந்த இன்ட்ரஸ்ட் போய்விடும் கண்டிப்பா அவன் மனசு அவன் காதலியே தான் தேடும். உனக்கு இப்போ ஒரு கேள்வி வரும் எப்படி உண்மையான லவ் பண்றது இன்னொரு பொண்ணுகிட்ட பண்ணுவான்னு? ” அது ஏன் எதனாலன்னு எனக்கு தெரியல… ஆனா இங்க பாதிக்கு மேல பசங்க அப்படித்தான் இருக்காங்க… ” என்றான். சார் எப்படி என ஆதவி கேட்டிட “இந்த ரெண்டு மூணு நாளுக்கு அப்புறமும் விடாம பேசிக்கிட்டே இருப்பாங்க இல்ல அவங்க ஒரு பொண்ணோட அப்பியரன்ஸ்ல மட்டும் அட்ராக்ட் ஆகி லவ் பண்றவங்க.. அது ஒரு ரகம்.. நான் ஒருவன்…எனக்கு ஒருவள் னு இருப்பாங்க .. அது இரண்டாம் ரகம். பாக்குற எல்லா பொண்ணுங்க கிட்டயும் பேசுறவங்க ஒரு ரகம். நிறைய பொண்ணுங்கள பார்த்தாலும் சுத்தி இருக்கு பொண்ணுங்க கிட்ட பேசினாலும் ஒருத்தியை மட்டும் மனசுல வச்சிருக்கிறது ஒரு ரகம்..இதுல நான் எந்த ரகம்னு நீயே கண்டுபிடி ” என்றிட அவளோ கேவலமான ஒரு லுக் விட்டு ” இதை சொல்ல அசிங்கமா இல்ல” என்று கேட்டாள். ” இத சொல்றதுக்கு அசிங்கம் என்ன இருக்கு உலகத்துல நடக்கிறது தான் நான் இப்ப சொன்னது. இங்க யாருமே காவிய காதல் பண்ணல. இது 2k கிட்ஸ் இருக்குற ஜெனரேஷன் கொஞ்சம் இங்க ஜெனரேஷன் ஏத்த மாதிரி உலகத்தை புரிஞ்சுங்கோங்க.. நல்லவன்னு சொல்ற எவனையும் நம்பவும் முடியாது கெட்டவன்னு சொல்றவன் எவனையும் ஒதுக்கவும் முடியாது.. எல்லார்க்குள்ளயும் ஒரு நல்லது இருந்தா ஒரு கெட்டது இருக்க தான் செய்யும். அதை புரிஞ்சுக்கோடி என் அம்பிளிக்குட்டி” என்றவன் வேனில் நடந்து கொண்டிருந்ததை கவனித்திட அங்கோ மாளவிகா டேர் தேர்வு செய்திருந்தாள். அவளுக்கு என்ன டேர் கொடுக்கலாம் என யோசித்து கொண்டிருந்தனர். ” ஹே… மாளு உனக்கு டேர் நான் தரேன்” எனறவன் அவளுக்கான டேரை சொல்லிட அனைவரும் கொல்லென சிரித்தனர். மாளவிகாவோ அசடு வழிந்தபடி நின்றாள். மிதுனின் பார்வை அவளில் நிலைத்திருந்தது.
Pingback: சிநேகம் 14 -
NICE