Skip to content
Home » சிநேகம் 15

சிநேகம் 15

மாளவிகாவின் முறை வந்ததும் டேர் தேர்வு செய்தவளுக்கு அதிகமாய் அவள் ப்ளார்ட்(flirt) செய்த நபரின் சாட்டை காட்ட வேண்டும். என்ற டேர் வர அனைவரும் சிரித்தனர். மிதுனோ அவளை ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தான்.

மாளு… வேகம் செய்…. என தீபக் நக்கல் குரலில் கூறிட

” நீ போடா பட்டி(நாய்)” என திட்டியவள் “டேர்‌ மாற்றி தருவோ” எனக்கேட்டிட நண்பர்களோ மறுத்தனர் .‌ அசடு வழிந்தபடி தன் மொபைலை எடுத்தவள்
மிதுனின் சாட்டை காட்டிட அவனுக்கோ பெரும் அதிர்ச்சி. அவன் அறிந்த மாளவிகா அவனிடம் ஆர்வமாக பேசுவாள். அந்த ஆர்வத்தை அவன் காதல் என நினைத்திருக்க அவளது செயல் அவனைத்தாக்கியது. தீபக் உத்தவ் அவளைப் பார்த்து நக்கலாய்ச் சிரிக்க மற்றவர்கள் அனைவரும் கிண்டல் அடிக்க முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்தவள் அப்பொழுதுதான் மெதுவாக மிதுனின் முகத்தை பார்த்தாள். என்னவென்று கூறப்படாத உணர்ச்சிகள் அதில் அடங்கியிருக்க மெதுவாய் அவனது கரத்தை பற்றியவள் ” தப்பா நினைக்காதீங்க” என மலையாளத்தில் சொன்னவள் தனது மொபைல் போனை அவனிடத்தில் கொடுத்து வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்ய சொன்னாள். அவள் சொன்னதையே அவனும் செய்ய அங்கு இவனது சாட் பின் செய்யப்பட்டிருந்தது. பெயரும் amor என பதிக்கப்பட்டிருந்து. அதைக் கண்டதம் என்ன சொல்வது என தெரியாமல் அவளது முகம் நோக்க
” எனக்கு பிடிக்கும் உங்களை பிடிக்கும் ஆனால் எவ்வளவு பிடிக்கும் னு எல்லாம் தெரியாது. என்னோட லவ் லாங்குவேஜ் கதை கதையா வசனம் பேசுறதும் கடலை போடுறதும் கிடையாது. உங்க கிட்ட பேசினா சந்தோஷமா இருக்கும் மனசு லேசாகும் அதனால உங்க கிட்ட பேசுறேன் இதையும் தாண்டி உங்களை என்னால எப்படி சந்தோஷமா வச்சுக்க முடியுமோ அதை பண்ணுவேன். அவ்ளோ தான்” என்றிட அவளை வியப்பாக பார்த்தான் மிதுன்.

நண்பர் குழு அறிந்திருந்த மாளவிகா விளையாட்டாக கலகலப்பாக எப்பொழுதும் சிரித்த முகத்துடனே வலம் வரும் அவளை அனைவரும் ஒரு குழந்தையாகவே எண்ணிருந்த நிலையில் இந்த மாளவிகா மிதுனுக்கு புதிதாக தெரிந்தாள். அவன் எதுவும் பேசாமல் மௌனத்தையே தொடர அவளும் அமைதியாகவே அமர்ந்தாள். ஆனால் இணைக்கப்பட்டிருந்த இருகரங்களும் அங்கனமே இருந்தது. கரங்களை பிரிக்கவும் இருவருக்கும் தோன்றவில்லை.

அதற்குள் ட்ரூத் ஆர் டேர் முடிந்து பாட்டுக்கு பாட்டு துவங்கியிருந்தனர் நண்பர்கள‌ அனைவரும் பாடலை அதிகம் விரும்புவர்கள் ஆதலால் சந்தோஷமாகவும் கலகலப்பாகவும் பயணம் தொடர்ந்தது. நள்ளிரவு இரண்டரை மணி போல் திருச்சூர் சென்றடைந்தவர்கள் அங்கு தீபக்கின் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்க முடிவு செய்திருந்தனர். அங்கு ஒரு வீடும், இரண்டு விருந்தினர்கள் மாளிகையும் அமைந்திருந்தது. பெண்கள் இருவருக்கும் ஒரு வீடூம் ஆண்கள் அனைவரும் மற்றொரு மாளிகையும் பகிர்ந்து கொண்டனர். இது ஒரு வார பயணம் ஆதலால் பெரும் செலவை குறைக்கும் வண்ணமாகவே தீபக் இதனை திட்டமிட்டு இருந்தான்.

பயணக் களைப்பு அனைவரையும் வாட்டி எடுக்க தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று ஓய்வு எடுத்தவர்கள் காலை மெதுவாகவே விழித்தனர். மறுநாளே அவர்களுக்கு இசைக்கச்சேரி இருந்த காரணத்தினால் பாடகர் குழு தங்கள் பயிற்சிகளை எடுக்க ஆரம்பித்தனர்.
ஆதவியும் உத்தவும் தங்கள் கேஸ் விஷயமாக வெளியே செல்லலாம் என முடிவெடுத்து மதியம் உணவையும் முடித்து கொண்டவர்கள் இரண்டு மணி போல் கிளம்பியிருந்தனர்.

இவர்களின் கேஸ் காணாமல் போன ஒரு பெண் கண்டுபிடிக்கப்படாமல் இருக்க விசாரணை சென்ற இடங்களில் எல்லாம் முடிச்சு விழ அதனை அவிழ்க்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வழக்கு. அதனுடைய ஆதாரங்களை திரட்டி அதனை குறித்து தொகுத்த எழுத வேண்டியது இவர்களது வேலை.
கோட்டயம் அருகில் இருந்து காணாமல் சென்ற பெண் கடைசியாக இருந்தது திருச்சூரில் நண்பியின் வீட்டில். அதன் பிறகு எங்கு சென்றாள் யாருடன் சென்றாள் என எதுவும் தெரியாத காரணத்தினால் நண்பியின் வீட்டிலிருந்து அவர்களது திரட்டுதல் பணியை துவங்கலாம் என கிளம்பி இருந்தனர். இவர்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து நண்பியின் வீடு ஒரு மணி நேர பயணமாதலால் தீபக்கின் நண்பனின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினர்.
அந்த ஒரு மணி நேர பயணம் இவர்களுக்கு தங்களுக்கு கடந்த காலத்தை நினைவு படுத்த அதனிலே மூழ்கி போயினர். காதல் மட்டுமே கொண்டிருந்த அவர்கள் கடந்த காலமும்
மனது முழுக்க காதலை வைத்துக் கொண்டு மௌனத்துடன் கடந்து போகும் நிகழ்காலமும்…. எதிர்மறையான இந்த நாடகம் என்று முடியுமோ எனும் ஏக்கம் இருவர் மனதிலும் எழாமல் இல்லை. தங்கள் மனதில் எழுந்த ஏக்கத்தினை அடக்கிக் கொண்டு தங்கள் பயணத்தை நோக்கி முன்னேற இந்தப் பயணத்தின் முடிவு இவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது எனத்தான் தெரியவில்லை. போகும் வழியில்
தள்ளு வண்டியில் ஐஸ்கிரீம் செல்வதை பார்த்த உத்தவ் வண்டியை நிறுத்தி ஆதவியை ஐஸ்கிரீம் வாங்க கூறினான்.அவளது விருப்பங்களை இன்றும் நிறைவேற்றும் காதலனாக அவன் இருப்பதை எண்ணி நெகிழ்ந்தவள் அதைக்காட்டாது
அவனை முறைத்தவாறே ” ஹைவே ரோடு .. ரோட்டுக்கு அந்த பக்கம் ஐஸ்கிரீம்.. இந்த பக்கம் பைக்ல நீயும் நானும்… உனக்கு என்ன நியாபகம் வருது உதி” என பொறுமையாக கேட்க அவளது கேள்விக்கு பதில் யோசித்தவன் பதில் கிடைக்காது போக ” சென்னைல ஊர் சுத்துறப்போ எதாச்சும் நடந்து மறந்திருப்பமோ?” என்னும் யோசனையில் கடந்த காலத்தை அலசினான். அங்கும் பதில் கிடைக்காது போக அவளிடமே இல்லை என்றுவிட்டான். “நடிக்கிறாயா துரோகி.. ராஜாராணி படம் நியாபகம் வருதா.. நஸ்ரியா ஐஸ்கிரீம் வாங்க ரோடு கிராஸ் பண்ணி ஆக்சிடன்ட் ஆகி செத்து போயிருவாங்க.. ” எனக்கேட்க “ஆமா.. அதுக்கு” என்றவன் முழிக்க ” விளக்குமாறு..‌ என்ன ஒரு பைத்தியம் லவ் பண்ணுச்சு.. நான் ஐஸ்கிரீம் வாங்கி கேட்டா நானும் நஸ்ரியா மாதிரி செத்துருவேன்னு படம் ஓட்டும். அந்த டுபாக்கூர் இப்போ ஐஸ்கிரீம் வாங்க சொல்லி நிப்பாட்டுதுனா நயன்தாரா இல்லனாலும் சிக்ஸ்தாரா, செவன்தாரா பாத்து வச்சிருக்குமோ? ” என்றாள்.

“ஐயயோ… நான் விட்ட க்ரின்ஜ் டயலாக் எனக்கே அப்பீட் ஆகுதே ” என வாய்விட்டு புலம்பியவன் ” ஏன் ஆதவி.. ஒரு சிக்ஸ்தாரா, செவன் தாரானு நானும் பாத்திருக்கலாமோ?” என்று கேட்க
” அட. கஞ்சப்பயலே உனக்கு நானே பெரிசு.. இதுல சிக்ஸ் செவன் கேட்குதா?” என்றவள் அவன் மண்டையில் அடித்து வண்டியை கிளப்பு .. சீக்கிரம் போயிட்டு வரலாம் என்றிட வண்டியும் காணாமல் போன பெண்ணின் தோழி வீட்டிற்கு கிளம்பியது.

காணாமல் சென்ற பெண்ணின் தோழியின் வீட்டினை அடைந்தவர்களை பூட்டி இருந்த வீடு வரவேற்க அருகில் இருப்பவர்களை கேட்டால் தோழி காணாமல் சென்றபோது போலீசார் விசாரணை அன்று அடிக்கடி வருவதும் போவதுமாக இருக்க அதுவே அக்குடும்பத்தினருக்கு இடைஞ்சலாகவும் சுற்றத்தாரிடம் சற்று அவமானமாகவும் இருந்தது. அதனால் காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை என கேஸ் முடிக்கப்பட்டதும் இவர்களும் வீடு காலி செய்திருந்தனர். எங்கிருக்கிறார்கள் என தெரியவில்லை என அக்கம் பக்கத்தினர் கூற அதனை குறித்துக்கொண்டவர்கள் திரும்பி வந்தனர். வரும் வழியில் சமைப்பதற்கு காய்கறிகள் வாங்க வேண்டும் என்று ஆதவி கூற உத்தவ் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நிறுத்தினான். ஆதவிக்கு மொழி பிரச்சனையாக இருப்பதால் உத்தவினை துணைக்கு அழைத்தாள். “புருஷன் பொண்டாட்டியா வீட்டுக்கு தேவையான திங்ஸ் வாங்க வேண்டிய நான் சம்பந்தமே இல்லாம ஊரு விட்டு ஊரு வந்து சூப்பர் மார்க்கெட்டில அலைய வேண்டியிருக்கு” என எனக்கு ஏக்கத்தை சலிப்பாக கூறியவன் அவள் பின்னே சென்றான். அவன் கூறியது அவளுக்கும் நன்றாகவே விளங்கியது அவள் செய்த முட்டாள்தனத்தை காட்டுகிறான் எனவும் புரிந்தது. தவறு தன் மீதுதான் ஆனாலும் இறங்கி வந்தால் அவள் அதுவே இல்லையே அதனால் அவன் கூறியது கேட்டும் கேட்காதது போல உள்ளே சென்றாள்.
உள்ளே சென்றவர்கள் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு திரும்பும் போது அங்கு ஒரு மூலையில் நின்றிருந்த இளம் பெண்ணை கண்டதும் அதிர்ச்சி அடைந்து நின்றாள்
ஆதவி. அவள் பின்னே வந்த உத்தவ் என்னாயிற்று என அவளைக் கேட்க நின்றிருந்த இளம் பெண்ணே ஆதரி சுட்டிக்காட்ட அதனை கண்டதும் உத்தவும் அதிர்ச்சி அடைந்தான். ஆனால் அந்தப் பெண்ணோ இவர்கள் யாரென அறியாதவள் போல் தன் பாட்டுக்கு தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தாள்.

1 thought on “சிநேகம் 15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *