Skip to content
Home » சிநேகம் 2

சிநேகம் 2

புதியொரு லோகம், இளம் தென்னல் மூளூன்ன் கானம்,…
இளவெயில் போலுள்ள சிநேகம்,… .

கினாக்கள் கடம் தன்ன லோகம்,…

மலர் செண்டில் ஓரோ மொட்டும் ஓரோ சொப்னம்
அவையில் காணனும் ஈ ஓரோ மோகம் ஒரே வர்ணம்… என ஹிருதயம் படத்திலிருந்து அக்கூட்டம் பாடிய பாடல் சுற்றியிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. யாரைப் பற்றியும் எவரைப் பற்றியும் யோசிக்காது தங்களின் கவனத்தை சிதற விடாது பாடலிலே முழுமூச்சாக இறங்கி இருந்தனர் அந்த நண்பர்கள் கூட்டம்.

மலையாளம் அறிந்தும் அறியாமலும் அவர்கள் குரலை ரசிக்க பாடல் கேட்டுக் கொண்டிருந்தனர் சில பயணிகள்.
கிருதயம் பட பாடல் முடிந்ததும் சற்று மூச்சு வாங்க பாடுவதை நிறுத்திய தோழர்களே கலைத்தாள் அவர்களுடன் இருந்த அந்த இளம் பெண்

“ஹாய்ஸ் ஸ்டாப் நம்மளே… ஈ ட்ரெயின் டிராவல்னு செட்ஆவுன்ன போலே ஒரு சாங் பாடாமோ?… (காய்ஸ் ஸ்டாப் இந்த ட்ரெயின்‌ ட்ராவலூக்கு செட் ஆகுற போல ஒரு டைமிங் சாங் பாடலாமா? )

அளியா…. இது நம்மள நாடல்லாஏ… தமிழ்நாடாணே… நம்மள நாடெங்கில் மலையாள சாங்ஸ்னு விஜாரிச்சு கொறச்சு வியூவர்ஸெங்கிலும் கிட்டும்..‌ நம்மள் அறியாத்த ஸ்தலத்தில் அடிமேடிக்காதே நாட்டில் எத்தான் நோக்கணும்… ( மச்சான்.. இது நம்ம ஊர் கிடையாது தமிழ்நாடு. அங்க மலையாளம் சாங் என்று கொஞ்சமாச்சும் வியூயர்ஸ் கிடைக்கும் இங்க எதுவுமே தெரியாது சோ அடி வாங்காம ஊர்‌போய் சேருவோம்) என்றான் மற்றொருவன்.

அவன் சொல்றதும் உண்மை தான். ஐ வில் கோ பார் இட்… என்றான் அவனை ஆதரித்து மற்றொருவன்.

“சோ நவ் வாட் வி ஆர் கோயிங் டு, ஆல்ரெடி நமக்கு தனிச்சானு சீட்ஸ் கிட்டீற்றுள்ளது… இட்ஸ் போரிங்… ” என்றாள் அந்த இளம்பெண்

“ஒன்னும் செய்யான் பற்றூலா.. போய் நிங்கள்ட ஸ்தலத்திலிருந்து உறங்கிக்கோ. போ போ..” என்றான்‌ மற்றொருவன். (ஒண்ணுமே பண்ண‌முடியாது.. சோ உங்க ப்ளேஸ்ல உட்கார்ந்து தூங்குங்க.. போ )

PANDE SENTI Musical band (பண்டே சென்டி பாடல் குழுமம்) இது அவர்களின் கனவு. கனவிலே ஒரு சில அடிகள் எடுத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வரும் மலையாளிகள். சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் தங்கள் குழுவின் கலை திறமைகளை வெளிப்படுத்திவிட்டு மீண்டும் தங்களின் ஒரு ஊரான கேரளா நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் அந்த எழூவர் கூட்டம். ஆதவி சென்று கொண்டிருக்கும் அதே ரயில் அதே பெட்டி இருக்கைகள் மட்டும் வேறு வேறு கடைசி நேரத்தில் பதிவு செய்ததால் சிதறிப் போயிருந்தனர் எழுவரும்.
வெற்றிகரமாக தமிழ்நாட்டில் ஒரு நிகழ்ச்சியை முடித்த மகிழ்ச்சியுடன் இருக்கைகள் தனியே பிரிந்து இருந்தாலும் வாசல் புறம் வந்து நின்று முகத்தை தொட்டுச்செல்லும் காற்றை ரசித்தவாறே தங்கள் குரல் வளமையை அனைவருக்கும் காட்டியவர்கள் தங்கள் இடங்களுக்கு கலைந்தனர்.

எழுவரில் ஆறு இளைஞர்களும் ஓர் இளம்பெண்ணும். வெவ்வேறு கல்லூரிகளில் இருந்து இணைந்த இவர்கள் வெவ்வேறு துறைகளை கற்று தேர்ந்து அத்துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் பாடுவது ஒரு பொழுதுக்காக செய்து கொண்டிருக்கின்றனர். தங்கள் திறமையை வெளிக்கொணர இது ஒரு பெரும் வாய்ப்பாக கருதப்பட அவர்கள் தங்கள் வசதிற்கு ஏற்ப அமையும் நிகழ்ச்சிக்கு சென்று பாடல் பாடி வருகின்றனர். அதில் படிச்சுட்டியாக வலம் வருபவள் தான் மாளவிகா. அனைவருக்கும் நல்ல சகோதரியும் நண்பியுமானவள். பெரும்பாலும் அவளுடன் இணைந்து பாடுவது தீபக் சந்து இவர்களுடன் வியான் உத்தவ், அபிராம், மிதுன், அர்னவ், தாமஸ்

இருக்கை பதிவுசெய்ததில் ஏற்பட்ட குளறுபடியால் மாளவிகா ஆதவி அருகில் வந்தமர எப்பொழுதும் எதையாவது பேசிக் கொண்டே வரும் மாளவிகாவிற்கு நண்பர்களும் அல்லாது தனியே இருக்க சற்று கடினமாக இருந்தது. அதனால் தன்னருகே இருந்த ஆதவியிடம் பேச்சு கொடுக்கலாம் என முடிவெடுத்தவள் அவளிடம் பேசவே துவங்கி விட்டாள்.

ஹாய் பியூட்டி ஐ மாளவிகா ஃபிரம் கொல்லம் டிஸ்ரிக்ட் கேரளா…

யாருடா இது வாலன்டியரா வந்து வாய் கொடுக்கிறது என தன் மனதிற்குள்ளே கவுண்டர் போட்டுக் கொண்ட ஆதவி
” ஹாய் ஐ அம் ஆதவி ஃபிரம் சென்னை”
ஆதவி எதுவும் பிகு பண்ணாமல் பேசியதில் மகிழ்ச்சி கொண்ட மாளவிகா மேலும் ” வி வேர் ஆல்சோ ஃப்ரம் சென்னை.. வி வேர் கண்டக்டிங் எ கான்செர்ட் ஆன் தெயர்”

ஆதவி ” சவுண்ட்ஸ் குட்”

மாளவிகா ” இஃப் யூ டோன்ட் மைன்ட் ஞான் மலையாளத்தில் சம்சாரிச்சோட்டே? “

ஆதவி ” எனக்கு மலையாளம் தெரியாதே”

மாளவிகா ” கொழப்பமில்லா… எனிக்கு தமிழ் கொறச்சு கொறச்சு புரியும். நினக்கு மலையாளம் மனசிலாவோ? “

ஆதவி ” கொஞ்சம் கொஞ்சம் புரியும்” என்றவர்கள் தங்களுக்குள்ளே புரிந்தும் புரியாமலும் ஏதேதோ கதைப்பேசிக்கொண்டனர்‌.

மாளவிகா பல இடங்களில் பாடுவதற்காக சென்று பல விதமான மனிதர்களை சந்திப்பதால் புதிதாக ஆதவியிடம் உரையாடுவதில் கடினமாக இருக்கவில்லை. அதுபோல ஆதவிக்கும் பல இடங்களில் பலவிதமான மனிதர்களை சந்திப்பதால் அவளுக்கும் இது எளிதாகவே அமைந்தது‌ மொழித்தெரியா இடத்திலும் அழகான ஒரு நட்பு உருவானது. இங்கனமே நேரம் கடந்திட வானமும் இருட்டிட அவர்கள் இருவரும் தூங்குவதற்கு தயாராகினர்.


செங்குருதியும் வெண்மேகமும் இணைந்தெடுத்த
செவ்வானம் படையெடுக்க கடலளவவை நிறைந்திருந்த செவ்வானமதே மூழ்கடிக்க உயிர்ந்தெழும்பிய கதிரவனும் உச்சியிலே நின்று உலகிற்கு வெளிச்சம் அதை கொடுக்க அந்த காலைப் பொழுதிலேயே இன்னும் நகர்ந்து கொண்டே இருந்தது அந்த ரயில் வண்டி.

அங்கும் இங்குமாய் கலைந்திருந்த மாளவிகாவின் நண்பர்கள் அவளை எழுப்பி விட நினைத்து அவள் இருக்கைக்கு வந்தனர் அதிசயமாய் ஆச்சரியமாய் சீக்கிரமே விழித்திருந்த மாளவிகா ஆதவியுடன் இணைந்து கதை பேசிக் கொண்டிருந்தாள். நண்பர்களை கண்டதும்

“புகப்பறத்தி பாயுந்த கல்கரி வண்டியில்கேறி மதராசி போயி வீண்டும் நாட்டிலே எத்தியது நம்மட சொந்தம் பண்டே சென்டி குரூப்” மாளவிகா

” மாளு… நாட்டில் எத்திட்டில்லா மோளே… ட்ரெயின் அல்பம் வைகி போயி.. ” (இன்னும் ஊர் வரல.. ட்ரெயின் லேட் ஆகிருச்சு)அர்னவ்

” ஓ மை குட்னஸ்…. ஹே கைய்ஸ் மீட் மை நியூ ப்ரெண்ட் ஆதவி ப்ரம் சென்னை.. எடா நிங்கள் மாத்ரம் வந்திட்டுள்ளூ..‌ உதுவும் தீபுவூம் மிதுவும் எவிடே? “மாளு (நீங்க மட்டும் வந்திருக்கீங்க..உதுவும் தீபுவும் மிதுவும் எஙகே?)

ஆதவி நண்பர்களை பார்த்து புன்னகைத்திட அவர்களூம் சிநேகமாய் புன்னகைத்தனர்.

“அவரு இரண்டுபேரும் உறக்கம்…” என்றான்‌ தாமஸ்

ஆ… பெஸ்ட் என்ற மாளவிகா ஆதவியை நோக்கி திரும்பி ஆதவி.. எனக்கு இவரே இன்ட்ரோ தரான் இஷ்டமானு..பட் தட்ஸ் நாட்சோ இம்போர்ட்டண்ட். இப்ப நினக்கு ஞான் மாத்ரம் ப்ரெண்ட் ஆயிட்டு மதி… ( எனக்கு இவங்க எல்லாரையும் அறிமுகம் செய்ய ஆசை தான் ஆனா அது ரொம்ப முக்கியம் இல்ல. இப்போதைக்கு நான் மட்டும் உனக்கு பிரண்டா போதும். இவங்க எல்லாம் வேணாம்..) மாளவிகா‌‌

“அது வேற ஒந்நுமில்லா. ஷி ஈஸ் வெரி பொசசிவ் அதா” என்றான் தாமஸ்..

அவர்களின் உரையாடல்களை கேட்டு புன்னகை மட்டுமே பதிலாக கொடுத்திருந்தால் ஆதவி. ஒரு நிமிட அமைதி தொடர மாளவிகா

” கமான் ஹைய்ஸ்… நமக்கு வாதல்ன்றே அடுத்துபோகாம்.. ஆதவி நீ வருந்துண்டா? ( வாங்க கைஸ் நம்ம வாசல் பக்கம் போகலாம் ஆதவி நீ வரியா?)

ஆதவி வரவில்லை என்று கூறிட நண்பர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். அவர்கள் சென்றதும் பெரும் அமைதி அங்கே சூழ்ந்திட ஆதவியின் மனதில் மாளவிகாவை குறித்த சிந்தனைகள் எழும்பின. அவளது கள்ளக் கபடமில்லா பேச்சும், மகிழ்ச்சி நிறைந்த முகமும், எளிதில் நட்பு கொள்ளும் குணமும் அவளை ரசிக்கவே வைக்க செய்தது. அதை நினைத்து புன்னகையில் அமர்ந்திருந்தவள் ஜன்னல் வழியே வெளியே பார்க்க அங்கு அவன் நின்று கொண்டிருந்தான் அவளை நோக்கி ஆனால் அவளைக் காணாமல்……

3 thoughts on “சிநேகம் 2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *