மதியவள் வழிவிட்டு கொடுக்க பூமியில் தன் ஆதிக்கத்தை காட்ட வெண்கதிர்களோடு படையெடுக்க துவங்கியிருந்தான் கதிரவன். கதிரவனின் வெண் கதிர்கள் ஆதவி முகத்தில் பட்டுத்தெறிக்க தூக்கம் கலைந்து விழித்தாள் அழகு மங்கை. சுற்றுமுற்றும் பார்த்தவள் நேற்று ஒரு நாளில் தனக்கு கிடைத்த அதிர்ச்சிகள் மொத்தத்தையும் ஒருமுறை நினைத்து விட்டு அவளுக்கு இஷ்ட தெய்வமான விநாயகரிடம் தன் மனதின் வேண்டுதலை வைத்தாள். அவளுக்குத் தெரியும் அதிர்ச்சிகள் நேற்றுடன் முடியப்போவதில்லை இன்னும் அவள் சந்திக்க வேண்டியது பல உள்ளன என்பது. அதனாலே முதல் நாள் நல்லவிதமாக அமையவும் அமைதியுடன் களியவும் விநாயகரிடம் வேண்டுதலை வைத்துவிட்டு தனது நாளை துவங்கினாள். ஆதவியும் மாளவிகாவும் தங்கி இருப்பது ஒரு இரண்டு பெட்ரூம் ஒருகால் ஒரு கிச்சன் கொண்ட வீடு. அந்த வீட்டில் ஒரு அறையை மாளவிகாவும் மற்றொரு அறையை ஆதவியும் எடுத்துக் கொண்டனர். காலைக்கடன்களை முடித்துவிட்டு வெளியே வந்தவள் பக்கத்து அறையை பார்க்க அது இன்னமும் மூடியே இருந்தது. நேரம் ஏழு ஆகிட இன்னுமா அவள் விழிக்கவில்லை எனும் கேள்வி மனதில் எழ அதை ஒதுக்கிவிட்டு கிச்சன் சென்று தனக்கான காபி போடலாம் என நினைத்து சென்றவள் மாளவிகாவிற்க்கும் சேர்த்து தேநீரை தயாரித்தாள். காலை சிற்றுண்டிக்கு என்ன செய்யலாம் என யோசித்தவள் கிச்சனில் சமைப்பதற்கான பொருட்கள் ஏதுமின்றி காலியாக இருப்பதை கண்டவள் புரிந்து கொண்டாள் மாளவிகாவும் இந்த வீட்டிற்கு புதிது என்பதனை. சிற்றுண்டி எதுவும் செய்யாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிடலாம் என நினைத்துக் கொண்டு அலுவலகத்திற்கு செல்ல ரெடியாகி வந்தாள். அப்பொழுதும் மாளவிகாவின் அறை திறக்கப்படாமல் இருக்க கதவைத் தட்டி அழைத்தாள். இவள் தட்டிய பின்பும் கதவு திறக்கப்படாததால் என்னவோ ஏதோ என நினைத்தவள் மனம் எங்கெங்கோ யோசிக்க அனைத்தையும் ஒரு புறம் தள்ளியவள் யார் எப்படி போனால் நமக்கு என்ன என நினைத்துக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள் . வீட்டை விட்டு வெளியே வந்தவள் தனக்கு தெரிந்த மலையாளத்தில் பேசி ஆட்டோப் பிடித்து அவரது அலுவலகத்திற்கு சென்று சேர்ந்தாள். ஆட்டோக்காரன் அதிகமான பணம் கேட்க தனக்கு மொழி தெரியாத காரணத்தினால் ஒன்றும் செய்யாமல் அவர் கேட்ட தொகையைக் கொடுத்து தன்னைத்தானே நொந்து கொண்டாள். இதுவே சென்னையாக இருந்திருந்தால் அவள் நடவடிக்கையே வேறாக இருந்திருக்கும் என தனக்குள் நினைத்துக் கொண்டவள் ஆரம்பமே சரியில்ல என எண்ணி கொண்டு தனது புது அலுவலகத்திற்குள் நுழைந்தாள். அவள் அறியவில்லை அவள் மனதில் கொண்ட பல முடிச்சுகளின் பதில் இங்கிருந்துதான் கிடைக்கப்போகிறதென. தன் இஷ்ட தெய்வத்தை ஒருமுறை மனதில் நினைத்துக் கொண்டு அந்த அலுவலகத்திற்குள் அடியெடித்து வைத்தாள் ஆதவி.. அது ஒரு தொலைக்காட்சி சேனல் அலுவலகம். அங்கிருந்த ரிஷப்ஷனிஸ்டிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு காத்திருந்தாள். இது பணியிட மாற்றாதலால் அவளுக்கு பெரிதாக எந்த கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை. அடுத்த பத்து நிமிடத்தில் அவளுக்கான இருப்பிடம் என்னென்ன வேலைகள் அனைத்தும் அவளுக்கு விளக்கப்பட்டிருந்தது. முதல் நாள் பெரிதாக வேலை எதுவும் இல்லை ஆதலால் அங்கே அமர்ந்திருந்தவள் மலையாளம் பெரிதாக தெரியாத காரணத்தினால் யாரிடமும் பேச்சு கொடுக்கவில்லை. அவளிடம் தானாக அறிமுகம் செய்ய வந்தவர்களிடமும் ஆங்கிலத்தில் பேசி வைக்க சீன் போடுகிறாள் என நினைத்து மற்றப் பணியாளர்களும் அவளிடம் பேசவில்லை. அவள் தேடி வந்த தனிமை அவள் அலுவலகத்தில் கிடைத்தது என அவள் நினைத்துக் கொண்டிருக்க வில்லங்கமே அங்கு தான் காத்துக் கொண்டிருக்கிறது.&&&&&&&&&அந்த அலுவலகத்தில் மற்றொரு அறையில் தீபக் எனப் பதிக்கப்பட்டிருந்த பெயர் பலகை அவன் அடையாளத்தை காட்ட விரைப்பாக அவன் எதிரே அவனை முறைத்துக் கொண்டிருந்தான் மிதுன். “இப்ப எதுக்கு நீ இப்படி பண்ற? இப்படி பண்றது நீ தான் தெரிந்தாலே அவ வேலையை விட்டு போவதற்கு யோசிக்க மாட்டா” என தீபக்கிடம் திட்டிக் கொண்டிருந்தான் மிதுன். “கண்டிப்பா இல்ல அவ காசு சம்பாதிக்கிறதுக்காகவோ இல்ல பெயர் புகழ் சம்பாதிக்கிறதுக்காகவோ இங்க வரல அப்படி வரவேண்டும் என்று நினைத்தால் தமிழ்நாட்டில் இருக்கிற ஏதாவது ஒரு பிரான்சுக்கு போயிருந்திருக்கலாம் ஆனா அவ இங்க வந்த காரணம் வேற அப்படி இருக்கிறதுனால கட்டாயம் வேலை விட்டு போக மாட்டா” என உறுதியுடன் கூறினான் தீபக் சந்து.”அவ வந்தது அவ காரணம் எல்லாம் ஓகே தான் ஆனா நம்ம இவ்ட இருக்குன்னு தெரியறது பிரச்சனை தானே” மிதுன்”அதுக்காக எத்தனை நாள் ஓடி ஒளிய முடியும் ஏற்கனவே மூணு வருஷம் ஒளிஞ்சிருந்தாச்சு இனியும் ஒளிஞ்சிருக்க சொல்றியா?” என எரிச்சலுடன் கேட்டான் தீபக் “நான் அப்படி மீன் பண்ண சொல்லல. ஆனா அவளை கொஞ்சம் சமாதானப்படுத்தி இருக்கலாம். இப்படி சமாதானப்படுத்தாம அவளோட ஹையர் ஆபீஸியலா அவ கிட்ட பேசினா அவளை டாமினேட் பண்ற மாதிரி கதை சொல்லுவா” மிதுன் “இல்ல கதை சொல்றதுக்கு என்ன இருக்கு. இந்த டைம் அவகிட்ட பணிந்து போற ஐடியால நான் இல்ல என்ன வந்தாலும் பாத்துக்கலாம் ” என உறுதியுடன் கூறியவன் தொடர்ந்து ” காதல் மன்னன் எங்க? நம்ம கூட பிரச்சினை இல்லை.. அவன அவ பார்த்தா படபட பட்டாசு தான்” தீபக் ஹாஹா… சத்தியம்… இவங்க ரெண்டு பேரும் முட்டிக்கிட்டு என்ன பண்ண போறாங்களோ என்னமோ?… அவனும் இன்னைக்கு தான் இங்க ஜாய்ன் பண்றான்.. நோக்காம்(பார்க்கலாம்) என்ன நடக்க போகுனு” எனக்கூறிக் கொண்டான் மிதுன்.மிதுன் தீபக் இருவரும் சென்னையில் எம் ஏ கிருமினாலஜி மற்றும் டிப்ளமோ இன் மாஸ் அன்ட் கம்யூனிகேஷன்(diploma in mass and communication) முடித்து கோயம்புத்தூரில் இரண்டு வருடம் வேலை பார்த்துவிட்டு தீபக்கின் தந்தை நடத்திக் கொண்டிருந்த தொலைக்காட்சி சேனலை பார்த்துக் கொண்டிருக்கிறான் தீபக். அவனுக்கு உதவியாக மிதுனும் அங்கே அவனுடனே பணிபுரிகிறான். இவர்கள் மலையாளிகளாக இருந்தாலும் தமிழ்நாட்டில் ஐந்து வருடத்திற்கு மேல் இருந்த காரணத்தினால் தமிழ் சரளமாகவே பேச வரும். வெறுமனே அமர்ந்திருந்த ஆதவியை அழைத்த சக பணியாளர் அவளை கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு செல்ல சொன்னார். அவளும் அங்கு செல்லும் வழியை கேட்டு விட்டு அங்கு சென்றாள். கான்ஃபரன்ஸ் ஹாலில் அவளைப் போல் புதிதாக இணைந்த ஐந்து பேர் இருக்க அவர்களுக்கு சில பல விதிமுறைகளும் அறிவுரைகளும் அந்த சேனல் மூத்த பணியாளரால் கொடுக்கப்பட்டது. அங்கிருந்த மற்றவர்கள் புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பதால் அவர்களுக்கான அறிவுரைகள் எப்போது முடியும் என புதிதாக இணைந்தவர்களுடன் பொறுமையாக அமர்ந்து நடப்பதை கவனிக்கலானான் உண்ணி. அவன் வந்த ஐந்து நிமிடம் கழித்து கான்ஃபரன்ஸ் காலை திறந்து விட்டு உள்ளே வந்தான் தீபக் அவனுடன் மிதுனும். வந்தமர்ந்த தீபக், மிதுன் இருவரும் புதியவனை கண்டு புன்னகைத்திட மூவரைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தாலும் சாதாரணமாக இருக்க முயற்சித்த ஆதவியின் கண்கள் அவளது அதிர்ச்சியை விழிகளோடு காட்டியது. அதைக் கண்டு உள்ளுக்குள் ஒரு பேரானந்தம் பூக்க அவளை கண்டும் காணாது கடந்து சென்றனர் தீபக்கும் மிதுனும். மூத்த பணியாளர் தீபக்கினை பேச அழைக்க நேரே முன்னால் சென்று நின்றவன் அவர்கள் அங்கு அழைக்கப்பட்டதன் காரணத்தை கூறினான். உங்க முன்னாடி 5 பைல் இருக்கு.. தட் மீன்ஸ் 5 கேஸஸ்(cases) இதுல ஆளுக்கு ஒன்னு சூஸ் பண்ணனும். இதே மாதிரி இன்னொரு டீம் வந்து இதையே அஞ்சு பேர் எடுப்பாங்க. சோ ஒரு பைல் ரெண்டு பேர் செலக்ட் பண்ணுவீங்க. அந்த ரெண்டு பேரும் வர்ற மூணு மாசத்தில அந்த கேஸ் பத்தின உங்களோட அனுமானத்தை கொடுக்கணும். ஐந்துமே போலீஸ் கிட்ட இருந்து சிபிஐக்கு மாத்தி முடிவுறாத நிலையில் இருக்க ஒரு கேஸ். அதுக்காக நீங்க என்ன மாதிரியான முயற்சிகளும் எடுக்கலாம். ஆனா உங்களோட அடையாளத்தை எங்கேயுமே காட்டிக்க கூடாது. இட்ஸ் கைன்ட் ஆஃப் டிடெக்டிவ் வொர்க் என்று கூறினான் அதை கேட்ட ஆதவியோ புருவம் முடிச்சுடன் எதையோ யோசித்தாள். தீபக் ஆதவியின் பெயரை முதலில் வாசிக்க அவள் சென்று ஐந்து பைல்களையும் பார்வையிட்டாள் பைலின் முகப்பிலேயே அது யாருடைய கேஸ் என எழுதி இருக்க அதில் நான்காவது இருந்த பைலை பார்த்ததும் அவள் கண்கள் விரிந்தது. இது அவள் சற்றும் எதிர்பாராத ஒன்று. அங்கு கண்டது அவள் அதிகம் படித்த அவளுக்கு நன்கு தெரிந்த கேஸ். அவளது முதுகலைப்படிப்பில் அவளு ப்ரொஜொக்ட். அதனை கண்டபின் அவளது மனது வேறு எங்கும் அசையாமல் இருக்க அந்த பைலை தேர்வு செய்துவிட்டு தன்னிருக்கையில் வந்து அமர்ந்தாள். அதுபோலவே மற்ற நால்வரும் அவர்களுக்கென ஒரு பைலை தேர்வு செய்து இருக்க ஐந்து நிமிடங்கள் கழித்து மேலும் ஐந்து பேர் அந்த அறைக்குள் வந்தனர்.அவர்களில் ஒருவனை பார்த்ததும் ஆதவியின் கண்கள் கோபத்தையும் வெறுப்பையும் கக்கியது. அதற்கும் மேல் தீபக் கூறிய காரியம் அவளை எரிச்சலூட்டியது. ஆம் அவளைப் போலவே அவனும் அந்த நான்காம் எண் பைலை தான் தேர்வு செய்திருந்தான்.
nice