முந்தைய தினம் முயற்சிகள் செய்தும் அவளால் தீபக்குடன் இருந்த அவளது டீம் நபரை மாற்ற முடியவில்லை. சரி என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் இன்று வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தாள். கிளம்பி விட்டு வெளியே வந்தவள் ஆட்டோ கிடைக்குமா என்று சுற்றிலும் பார்க்க அங்கே சிரித்துக் கொண்டிருந்தான் உத்தவ் தன் இருசக்கர வாகனத்தில். அவனை பார்த்ததும் கோபமும் எரிச்சலும் போட்டி போட ஒரு வெட்டு வெட்டி முகத்தை திருப்பியவள் முன்னே நடந்தாள் ஆதவி. அவனும் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அவள் பின்னே வந்தான். அவன் பின்னே வந்ததும் தனக்காக தான் வருகிறான் என தன்னுள்ளே பூரிப்பு கொண்டவள் அதை அவனிடம் காட்டாது எரிந்து விழ தொடங்கினாள். அவன் “ஹலோ” என அழைத்திட ஒரு நிமிடம் நின்று திரும்பியவள் மீண்டும் நடக்கத் தொடங்கினாள். அவள் பின்னே நடந்தவனைப் பார்த்து “ஒரு பொண்ணு ரோட்ல தனியா நடந்தா இப்படித்தான் ஃபாலோ பண்ணுவீங்களா.. படிச்சு இருக்கீங்க தானே புத்தி இல்ல.. எனக் கத்தியவளைப் பார்த்து நக்கலாய் ஒரு சிரிப்பு சிரித்தவன் “இவ பெரிய உலக அழகி இவள பார்க்க வரிசையில் நிற்கிறோம்” என்று கூறிட அவனது நக்கல் பேச்சு அவளுக்கு கோபத்தை உண்டாக்கியது. அவள் கோவப்படுவாள் அறிந்து அதை கூறியவன் “உன்ன பாக்க யாரும் வரல மாளவிகாவுக்காக தான் வந்தேன்.அவளை காலேஜ்ல டிராப் பண்ணனும் குறைச்சு(கொஞ்சம்) வெள்ளத் தோல் இருக்குன்னு ரொம்ப ஆடாத” எனக்குறி விட்டு அவன் திரும்ப மாளவிகாவோ “சேட்டாஆ” என அழைத்துக் கொண்டு வந்தாள். மலையாளத்தில் அண்ணனையும் சேட்டா, கணவனையும் பெரும்பாலும் மக்கள் சேட்டா என அழைப்பதால் சற்று யோசனையில் வந்தாள் ஆதவி. யார் யார் எப்படி போனால் எனக்கென்ன எனத் தன்னை சுதாகரித்து நிதானத்திற்கு வந்தவள் மீண்டும் சற்று தூரம் நடக்க வழியில் வந்த ஆட்டோவில் ஏறி அலுவலகம் சென்று விட்டாள். அவள் சென்றதும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த மாளவிகா ” என்தினு அவளிடத்தே இங்கன தேஷ்ஷியம் காட்டுந்நே? ( எதுக்கு அவகிட்ட கோபம் காட்டுறீங்க)என்று கேட்டிட அவனோ ” இப்ப அவளெடுத்து போய் ஆதவி என்றெடுத்து சம்சாரிக்குவோனு கேட்டா கேட்குன்ன வாயிலு வச்சு அவளடிக்கும்.. அவளெடுத்து இங்கன சம்சாரிச்சாலே அவள் அடங்கும்” ( அவ கிட்ட போய் ஆதவி என்கிட்ட பேசு சொன்னா சொல்ற வியில அடிப்பா.. அவகிட்ட இப்படிலாம் பேசுனா தான் அடங்குவா) என்றவன் “வா நின்ன காலேஜ்ல டிராப் செய்திட்டானு எனிக்கு வொர்க் போணம்” எனக்கூறிவிட்டு அவளை அழைத்து சென்று விட்டான். இருவரின் பயணம் அரை மணி நேரத்திற்கு நீண்டு கொண்டே இருக்க ஏதோ நினைவு வந்தவனாக மாளவிகாவிடம் கூறினான் ” எந்தாயாலும் ஈ ரைட்டர் செய்யுன்னது ஷெரியல்லா..” ஏன் என்று குழம்பிய மாளவிகா அவனிடம் அதையே கேட்டு விட அவனும்” பின்னல்லாண்டு ஈ சினேகத்தின்றே ஹீரோ ஞானானு.. ரைட்டர் என்னை மாத்ரம் இன்ட்ரோ கொடுத்தில்லா….”என்ற அவனது புலம்பலை கேட்டதும் சிரித்த மாளவிகா அது “ஒன்னும் இல்ல நெக்ஸ்ட் எபிசோட்ல பறையுமா காணும்.” “மாழு.. அவரு அது ஒண்ணும் பறையில்லா… அதான்னு போயே எபிசோட் அவள் என்றேதானு எல்லார்க்கும் ஞானாயிற்று பறஞ்சது.. ஆதவி ஹீரோயினென்னு எல்லார்க்கும் அறியாமல்லே… எங்கன என்ற ஐடியா..” ( அவர் அது எல்லாம் சொல்ல மாட்டா. அதனாலதான் போனை எபிசோட் ல ஆதவி என்னுடையவள் என எல்லாவர்க்கும் சொன்னேன்.. எப்படி என் ஐடியா..)என்றான். அதனை கேட்டதும் நன்றான சிரித்த மாளவிகா “ஷெரி ஷெரி ஈ எபிசோட்டில் பேரு பறையான் சொல்லாம்” (சரி சரி இந்த எபிசோட்டில் பெயர் சொல்ல சொல்லிடலாம்)என்றிட ம்ம்ம் என்றவன் அவளைக் கல்லூரியில் இறக்கிவிட்டு அலுவலகத்திற்கு சென்றான். அங்கு தீபக் வந்துவிட்டானா என பார்த்தவன் நேராக ஆதவியின் இடத்திற்கு சென்றான். காலையில் இவள் செய்தததின் பிரதிபலன் அவள் முகத்தில் தெரிய குதுகலத்துடன் அவளருகே சென்றவன் ” ஆதவி நம்ம கேஸ் ஓட முதல் ஸ்டேப் இன்னைக்கே எடுத்து வைக்கிறோம்” என்றுக்கூறிட ” அதுக்கு என்ன பாத பூஜை செஞ்சு வழி அனுப்பி வைக்கணுமா மிஸ்டர். உத்தவ்” என நக்கலாகக் கேட்டாள். அவளது பதில் மூக்குடைப்பது போல் இருந்தாலும் அவன் உள்ளே ஒரு பேரானந்தம் நிறைந்தது. அது அவனது முகத்தில் தெளிவாக தெரிந்திட “யார்ரா இவன் பைத்தியமா இருப்பானோ?” என யோசனையில் புருவம் சுருக்கினாள் ஆதவி. அவளது உருவம் சுருக்கலிலே அவளது எண்ணம் புரிந்து கொண்டதன் அர்த்தமாக “நீதன்ன பைத்தியம்.. ஞானல்லா”( நீதான் பைத்தியம் நான் இல்ல” என்றிட அவளோ “கன்ஃபார்ம் முத்திருச்சு” என மனதில் உறுதி செய்து விட்டாள். வீண் பேச்சு தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்தவள் இன்னும் பேச்சை வளர்க்காமல் “கேஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணனும் எப்ப பண்ணலாம்” என்று கேட்க “இப்பவே பண்ணலாம் ” என்றான் உத்தவ். அவரது இருக்கையின் அருகே ஒரு நாற்காலியை எடுத்து போட்டு அமர்ந்தவன் வேலையே கண்ணாக அந்த கேசை பற்றி விவரித்தவன் அதை தொடர்ந்து,”லுக் மிஸ். ஆதவி இன்னைக்கு முழுதும் “ஃபைலை ஒழுங்கா படிங்க அதுல உங்களுக்கு ஏதாவது வித்தியாசமா தெரியுதுன்னா சொல்லுங்க. நானும் ஓரளவுக்கு கெஸ் பண்ணி சில நோட் எடுத்து வச்சிருக்கேன். நீங்க படிச்சு முடிச்சதும் அதை டிஸ்கஸ் பண்ணிக்கலாம்” என்றிட அவளும் சரி என தலையசைத்தாள். அவன் கேசை பற்றி விவாதிக்கையில் சற்று முன் அவளிடம் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த உத்தவ் வேறோ என எண்ணும் அளவிற்கு இருந்தது அவரது பேச்சும் செயலும். அந்த அளவிற்கு இந்த கேசிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறான் என புரிந்து கொண்டவள் அதுபோலவே நாமும் செயல்பட்டால் இதன் முடிச்சுகள் அவிழ்ந்து விடும் என நினைத்துக் கொண்டாள். அதற்கான முயற்சிகளை இன்றே தொடங்க வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டவள் முன்னரே இந்த பைலை படித்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை கவனமாக படிக்க ஆரம்பித்தாள். பைலை படித்து முடித்தவளுக்கு சில சந்தேகங்கள் இருக்க உத்தவிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என நினைத்தவள் அவன் எங்கிருப்பான் எனத் தெரியாததாலும் மலையாளம் புரியுமளவுக்கு பேசத்தெரியாதததாலும் வெறுமனே அமர்ந்திருந்தாள். சில நிமிடங்கள் கழித்து அவள் அருகே வந்த உத்தவ் ” ஆதவி “தீபக் உன்ன விழிச்சுட்டு(கூப்பிட்டு )வரசொன்னான்” என்று கூறிட அவளும் அவனுடனே சென்றாள். இங்கு வந்த இரண்டு நாட்களில் ஓராயிரம் முறை அவசரப்பட்டு இங்கு வந்து விட்டோமோ நினைத்து விட்டாள். ஆயினும் நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்னும் ஓர் பழமொழியை நினைத்துக் கொண்டு தீபக்கின் அறை நோக்கி சென்றாள். அங்கு தீபக் சச்சின் உண்ணி மிதுன் நால்வரும் அமர்ந்திருந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். ஆதவியின் மனம் உரைத்ததெல்லாம் என்ன நடந்தாலும் மீண்டும் பழைய உறவுகளுடன் சேர இயலாது என்பது மட்டுமே. அந்த முடிவு உறுதியாகவும் இருந்தாள். ஆனால் தீபக்கின் அறையில் அமர்ந்திருந்தவர்களுக்கோ எப்படியாவது மீண்டும் மகிழ்ச்சியாக திரிந்த அந்த நாட்களை சுவைத்திட வேண்டும். அதற்கு ஆதவியுடன் இணைய வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. அவர்களில் இருந்த சில குழப்பங்களும் முடிச்சுகளும் அனைவரும் சேர்ந்தாலே அவிழ்க்க முடியும் என அவர்கள் யாவரும் நினைத்திருக்க ஆதவியோ தான் தனித்து நின்றாலே முடியும் என உறுதியுடன் இருந்தாள். அதனாலயே உத்தவ் அவளுடன் இணைந்தது பெரிதும் விருப்பம் இல்லாதிருந்தாள். இரு வேறு மனநிலையுடன் ஒரே நோக்கம் கொண்டிருந்த இவர்களின் நோக்கம்தான் என்ன? எதற்காக இந்த முயற்சி எதனால் ஆதவிடத்து இத்தனை கோபம் இத்தனை வெறுப்பு இத்தனை எரிச்சல். அவளின் கோபத்தையும் வெறுப்பினையும் பொருட்டாக மதிக்காது அவளை தன்னோடு இணைப்பதிலேயே முழுமூச்சாக நண்பர்கள் இறங்கி இருப்பதன் காரணம் என்னவோ? விடைகள் வரும் அத்தியாயங்களில்…
nice