உத்தவ் ஆதவி இருவரும் வந்திட தீபக் வரவிருக்கும் இசைக்கச்சேரி குறித்து பேச ஆரம்பித்தான். அவர்கள் பேசுவதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்பதால் அவர்கள் பேசுவதற்கு செவிமடுக்காமல் இருந்திருந்தாள். பேசிக் கொண்டிருந்த போதும் தீபக்கின் பார்வை அடிக்கடி ஆதவியின் மேல் விழ அவள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது புரிந்து கொண்டான. அவளை அவர்கள் பேச்சில் இணைக்க வேண்டி ” மிஸ். ஆதவி… உங்கள நாங்க இங்க எதுக்கு கூப்பிட்டு இருக்கோம்னு ஏதாவது கெஸ் இருக்கா” என்று கேட்க அவள் இல்லை என தலையசைத்தாள். “நீங்க இப்போ எடுத்திருக்கிற கேஸ் நாங்க போற திருச்சூர் சரவுண்டிங் ஏரியால தான் வருது சோ நீங்க அண்ட் உதவும் இரண்டு பேரும் சேர்ந்து எங்க கூட வரீங்க எங்க ப்ரோக்ராம் முடிய த்ரீ டேஸ் ஆகும் அதுக்கு முன்னாடி உங்களால ஏதாவது கண்டுபிடிக்க முடியுதான்னு பாருங்க” என்றான் தீபக். அவன் கூறி முடித்ததும் அவள் மீண்டும் அவர்கள் பேசுவதை வேடிக்கையாக பார்த்து கொண்டை இருக்க அவளது அலட்சியத்தில் கோபம் கொண்டவன் “யு மே லீவ் நவ்” என்றான். “தேங்க்யூ சார்” என்றவள் அவ்வறையை விட்டு வெளியே வந்தாள். இதுவரையிலும் அவர்கள் மேல் வெறுப்பையும் கோபத்தையுமே கொண்டிருந்த அவள் கண்களிலோ கண்ணீர் சுரந்தது. ஆம்.. அவர்களின் பாரமுகம் ஆதவியை வதைத்தது. ஆதவி சென்னை விட்டு கேரளம் வரும் போது இவர்களை மீண்டும் சந்திக்க நேரிடும் என நினைக்கவில்லை. ஆனால் அவளது புதிய பயணம் துவங்கிய பொழுதே அவர்களை சந்தித்தவள் விலகி இருக்க முடிவு செய்திருக்க அவர்களோ ஏதேதோ திட்டங்கள் தீட்டியது போல் அவளிடம் பேச முனைந்தனர். இப்பொழுது அவர்கள் அனைவரும் ஒன்றாய் இணைந்து இருக்க தன்னை அறிந்தது போலவே காட்டிக் கொள்ளாதது அவளது மனதை வெகுவாய் பாதித்தது. அவர்களை நிராகரிப்பும் அவளை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அதன் வெளிப்பாடு இந்த கண்ணீர். இவை அனைத்திற்கும் அவள் மட்டுமே காரணம், இப்போது நடந்ததற்கு அவளின் அலட்சிய குணமே காரணம் என்பதை அவள் வசதியாய் மறந்து போனாள். தன் இருக்கைக்கு வந்தவள் மேஜையில் படுத்து கடந்த கால நிகழ்வுகளை நினைக்கலானாள். அதனை உள்ளே அறையில் இருந்த நண்பர்களும் கண்டனர். ஆனால் எதுவும் செய்யவில்லை. இப்படி செய்தால் தான் அவர்கள் கண்ட அழகிய காலமதையும், அவர்களை அதிகமாக சிரிக்க வைத்த ஆதவியையும் காண முடியும் என உறுதியாய் நம்பினர்.நிராகரிப்பே நேசம் கொண்டவய்களை நெருங்கி வரச் செய்யும் என்பது உத்தவின் கூற்று. கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்தவளுக்கு தலைவலியும் இணைப்பாக கிடைத்திட அரை நாள் விடுப்பிற்கான தீபக்கிற்கு மெயில் செய்தாள். ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் அதை ரிஜக்ட் செய்து விட்டான். அவனிடம் ஒருமுறை நேரில் சென்று கேட்கலாம் என நினைத்து அங்கு அறைக்கு செல்ல வந்த இரண்டாவது நாளில் ஹாப் டே லீவ் கேட்கிறீர்களா? வந்து முதல் 30 டேஸ் லீவ் பர்மிட் கிடையாது. அதுக்கு அப்புறம் மாதம் ஒரு விடுமுறை அவ்வளவு தான்.. எனப் பேச்சை முடித்து விட்டான். இது அவை பாத்திராத தீபக்கின் மறு முகம். எப்பொழுதும் ஆதவிக்காக மட்டுமே ஆதரவாக நிற்பவன், இவளுக்கு தலைவலி என கூறிய பிறகும் மனம் இர்ங்காதது ஆதவிக்கு வருத்தமளித்து. தீபக்கிற்கோ வந்து இரு நாட்கள் ஆன பிறகும் ஒதுங்கியே நிற்கும் அவளை நினைத்து கோபம். நண்பர்களை ஒருங்கிணைத்து ஒரே அறையில் கொண்டு வந்த பிறகும் அவர்களை கண்டு கொள்ளாது தன் பாட்டுக்கு அவள் இருந்தது கோபம். இவளுக்கு நாங்கள் அப்படி என்ன தீங்கு செய்து விட்டோம் எனும் கேள்வியோடு கூடிய கோபம் அனைத்தையும் காரண காரியான அவளிடமே காட்டி விட்டான் தீபக்.அவன் திட்டுவது எல்லாம் கேட்டுக் கொண்டு வந்த அவளை அவளது தன்மானம் தட்டி எழுப்ப ” இவன் என்னடா எனக்கு லீவுக்கு பர்மிஷன் தர்றது. போடா டேய் நானே எனக்கு லீவ் எடுத்துப்பேன். நீ என்ன செய்திருவனு நானும் பார்க்கத்தான் போறேன்” என மனதினுள்ளே கூறியவள் மதிய இடைவேளைக்கு முன்னே கிளம்பியும் விட்டாள். அதை சிசிடிவி மூலம் பார்த்து சிரித்துக் கொண்டான் தீபக். அவன் எதைப் பார்த்து சிரிக்கிறான் என கேட்டுக்கொண்டு வந்த உத்தவ்வும் மிதுனும் மானிட்டரைப்பார்க்க அங்கே கேமரா முன் நின்று இடிப்பது போல் சைகை காட்டி விட்டு சென்றிருந்தாள் ஆதவி. நேராக வீட்டுக்கு வந்தவள் மதிய உணவு எடுத்துக்கொண்டு ஒரு குட்டி தூக்கம் போட அவளை இம்சித்தது அத்யாவின் அழைப்பு. எடுத்தவள் பொதுவான விசாரிப்புகளுக்கு பிறகு தனது வேலை குறித்தும் அங்கு அவளுக்கு கிடைத்த அதிர்ச்சிகளையும் கூறிக்கொண்டிருக்க கேஸ் செலக்ட் செய்ததைக்கூறவும் ” ஆது.. எனக்கு தெரிஞ்ச ரீசன்ட் டைம்ஸ்ல அவன் அருள்நிதி நடிச்ச டைரி மூவி பார்த்திருப்பான் அதனால் தான் இப்படி ஒரு பிளான் பண்ணி இருக்கான்” என்று கூறிட ” அப்படியே இருக்கலாம் இல்ல” என்று கூறிய ஆதவி சட்டென எதனையோ யோசித்து விட்டு ” ஹேய்.. போன சண்டே நீ தானே டைரி மூவி பார்த்துவிட்டு யாருக்கோ கதை சொல்லிட்டு இருந்த? ” என்று கேள்வி கேட்டிட ” அது..அது.. நான் இப்போ என்ன சொல்றது ” என வடிவேல் பாணியில் நடித்தவள் ” ஆது அம்மா கூப்பிடுறாங்கடீ… நான் கிளம்புறேன் டாட்டா ” என அழைப்பைத்துண்டித்தே விட்டு சென்றிருந்தாள். அனைத்தும் ஆதவிக்கு எதிராக முன்னமே திட்டமிட்டு செய்யப்பட்டிருந்தது என புரிந்து கொண்டவள் இத்தனை திட்டமிட்டு செய்த பிறகு என்னிடம் பாராமல் எதற்கு காட்டுகிறார்கள் என்பது புரியாமல் யோசித்து கொண்டிருந்தாள். “நம்மளையும் டெரர் பீஸா நினச்சு மாஸ் ப்ளான் பண்ணுதுங்களே இதுங்க… என் குடும்பத்தை கம்பெனி புடிச்சி எனக்கு எதிரா திருப்பி வச்சிருக்கீங்களா.. உங்க குடும்பத்து கூட க்ளோஸ் ஆகி ஓட ஓட விரட்டுறேன் பாருங்கடா” என தனக்குள்ளே சபதம் எடுத்துக் கொண்டாள். ஆனால் அவள் மறவாத அந்த நிகழ்வே அவளுக்கு ஒரே ஒரு தடையாக தான் இருக்கிறது . இந்தத் தடை அவளை கோமாளியாக்கி அவர்கள் முன் நிற்க வைக்காமல் இருந்தால் சரிதான். அத்யாவுடன் பேசிய பின் இனி என்ன செய்ய வேண்டும் என யோசிக்கலானாள். முதலில் அலுவலகத்தில் இருந்து பாதியிலே கிளம்பி வந்ததற்கு என்ன செய்ய வேண்டும் என யோசிக்கலானாள். கண்டிப்பாக இது வேறொரு இடமாக இருந்திருந்தால் அவள் இத்தகைய செயல் செய்திருக்க மாட்டாள் என்பது உறுதி அதையும் தாண்டி தெரிந்தவரின் இடமாக இருந்தாலும் அதற்கான சலுகை எதுவும் பெறாமல் இருக்க வேண்டும் என நினைத்திருந்தவள் மனதை வருத்திய அவர்களுக்கு இது தேவை தான் என நினைத்துக் கொண்டாள். அவள் யோசனையில் நிலைத்திருக்க அதனை கலைத்தது மாளவிகாவின் குரல். அதனைக் கேட்டதும் மாளவிகா வந்துவிட்டாள் என நினைத்து மாளவிகாவின் அறைக் கதவைத் தட்டி கதவைத் திறந்து உள்ளே சென்றாள். அங்கு மாளவிகா ஒரு புறம் நின்று இருக்க மற்றொருபுறம் வேறொருத்தி நிற்க இவர்கள் இருவருக்குமிடையில் புன்னகை முகமாய் நின்று கொண்டிருந்தாள் உத்தவ். அவர்கள் இருவரையும் கண்டவள் கண்கள் கண்ணீர் சுரக்க தான் எடுத்து வைத்திருந்த சபதங்கள் அனைத்தும் துவண்டு போய் நிற்க மீண்டும் சென்னைக்கு கிளம்பி விடலாம் என்ன முடிவிற்கு வந்தாரள் இதற்கு மேலும் இவர்களுடன் இருந்து பாடுபட முடியாது என்னும் முடிவிற்கே வந்து விட்டாள். ஆனால் அவள் புரிந்து கொள்ளாத ஒன்று அவளை இங்கு வர வைத்ததும் வீடு ஒழுங்காக்கி கொடுத்ததும் அவளுக்கு துணையாக மாளவிகாவை தங்க வைத்தது எல்லாம் அவர்களாய் இருக்க அவள் இங்கிருந்து செல்வதற்கும் அவர்களே முடிவு எடுக்க வேண்டும் என்பதை.