Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 18

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 18

ம்ப்ச் நான் என்னவா இருந்திருந்தாலும் இப்ப ஒரு ஆத்மா. இந்தஉலக வாழ்க்கையை விட்டே தள்ளிப் போயிட்ட எனக்கு இந்தியா பாகிஸ்தான்ங்கறஇந்தஉலகத்தோட எல்லைகள் ஒரு கணக்கே கிடையாது. தேவையில்லாம எனக்கு நீதி வாங்கிக்கொடுக்குறேன். நியாயம் வாங்கிக்கொடுக்குறேன்னு நீ உன்னோட வாழ்க்கையைப் பாழாக்கிக்காதஉன்னால உயரதிகாரிகளை அணுகத்தான் முடியும். அந்தஅருணாச்சலத்தாலஅந்தஉயரத்தில இருந்து அவங்களைக் கீழே தள்ளி விட முடியும். உன்னையும்தான். நீ என்னநினைக்கிற? என்னைக் கொலைபண்ணதை யாரோ எங்களுக்குத் தெரியாம வீடியோ எடுத்துருக்காங்க… அதுதான் அந்தலேப்டாப்லஇருக்குன்னுதான…”

அவள் ஆமாம் என்பது போலத் தலையசைக்க, விரக்திப்புன்னகையொன்றை சிந்தியவன், “அங்கே கேமரா இருந்தது அருணாச்சலத்துக்குத் தெரியும்…” என்றான்.

“வாட்?”

அவனைக் குழப்பமாகப் பார்த்தவள் “நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு ஒண்ணுமே புரியல… அங்க கேமரா இருந்தது அருணாச்சலத்துக்குத் தெரியும்ன்னா எப்படி இதைப் பண்ணாரு? அதுவுமில்லாம அவரோட இடத்துல இருந்த கேமராவோட வீடியோ இங்க இருக்குற லேப்டாப்ல எப்படி வந்துச்சு… முதல்ல இந்த இடத்துல லேப்டாப் எப்படி வந்துச்சு? நீங்க இறந்ததுக்கப்பறம் எப்படின்னாலும் போலீஸ் இந்த வீட்டை செக் பண்ணிருப்பாங்கல்ல… அவங்களுக்கு எப்படி தெரியாம போச்சு?”

“பொறு… பொறு… ஒவ்வொண்ணாக் கேளு…ஒண்ணொண்ணா சொல்றேன். அந்த லேப்டாப் என்னோடதுதான். இந்த மாதிரி ஏதாவது இல்லீகலா பண்றதுக்கான இடமா அவங்க வச்சுருந்த இடம் அந்தக் குவாரி…
“ என்னது அது அவரோட குவாரியா? அவரோட குவாரிக்குள்ள நீங்க போய் எப்படி ஆக்ஸிடன்ட் ஆக முடியும்? ஆக்ஸிடன்ட் ஆகறவரு அவரோட குவாரிக்குள்ள போய்தான் ஆக்ஸிடன்ட் ஆவிங்களா? இதை யாரும் யோசிக்கலையா? அந்த அருணாச்சலத்துக்கும் உங்களுக்கும் ஏற்கனவே க்ளாஷ் ஆகிருந்துச்சுன்னா போலீஸ் சந்தேகம் ஆட்டோமேடிக்கா அவர் மேல தான போயிருக்கணும்? அதுவும் நீங்க அந்த குவாரியில இறந்துருக்கறப்ப… அவரை யாரும் விசாரிக்கலையா?”

ப்ச்… ஒண்ணொண்ணாக் கேளுன்னு சொன்னேன்ல… குவாரின்னு தான சொன்னேன்… அவரோட குவாரின்னு சொன்னேனா? அந்தக்குவாரி அவரோட பினாமியோடது… அதுவே பாதிபேருக்குத் தெரியாது… அதோட அந்தக் குவாரி தனியாரோடதா இருந்தாலும் குவாரிக்குள்ள இருக்குற ரோடு பொதுமக்கள் பயன்பாட்டுக்கானது… அந்த ரோட்ல நான் இறந்துக்கிடந்தா யாருக்கு அவர் மேல சந்தேகம் வரும்?அப்படியே சந்தேகம் வந்தாலும் விசாரிக்க வேண்டிய வேலியே பயிரை மேஞ்சுருக்கும்போது என்ன பயன்?”

“அப்ப அந்தக்குவாரில யாரு கேமரா பிக்ஸ் பண்ணது?”

“ அதைத்தான சொல்ல வந்தேன்… என்னைப் பேசவிடு, அங்க கேமரா பிக்ஸ் பண்ணிருந்ததும் நான்தான்… நெட்வொர்க் கேமராவா பிக்ஸ் பண்ணிருந்தேன். அதாவது இங்க இருக்குற லேப்டாப் மூலமா அங்க இருக்குற கேமராவை ஆப்ரேட் பண்ண முடியும்… இங்க பார்க்க முடியும்… ஆட்டோமேடிக்கா வீடியோ சேவ்வாகிற மாதிரி செட்டிங்க்ஸ் பண்ணி வச்சுருந்தேன். ஆனா இந்த லேப்டாப்ல மட்டும் இல்ல. இன்னொரு லேப்டாப்லயும் இதே மாதிரி பண்ணிருந்தேன். அருணாச்சலம் என்னைக் கொலை பண்ணுறதுக்கு முன்னாடி அந்த லேப்டாப் அவர் கைக்குப் போயிருந்துச்சு. யார் மூலமா தெரியுமா? அந்த கமிஷனர் மூலமா… நானும் உன்னை மாதிரி முதல்ல சட்டம், போலீஸ்ன்னு அந்த கமிஷனர் கிட்டதான் போனேன். என்னை அந்த அருணாச்சலத்தோட இடத்துல கேமரா பிக்ஸ் பண்ண சொன்னதே அந்தக் கமிஷனர்தான். நல்லவன் மாதிரி கடைசி நேரம் வரைக்கும் பேசிட்டே இருந்தான். அவன் கூட இருந்த தைரியத்துல தான் நான் அந்த நேரத்துல அவங்க இடத்துக்கே போனேன். முகத்துக்கு நேரா இருந்த எதிரி மேல முழுகவனம் வச்சுருந்த நான் முதுகுக்குப் பின்னாடி இருந்த அந்த துரோகியைக் கவனிக்க மறந்துட்டேன். அதுதான் நான் பண்ண தப்பு… ஆனா ஏதோவொண்ணு அப்பவே கிளம்புறதுக்கு முன்னாடி மனசுக்குள்ள இடிச்சதுன்னாலதான் இந்த இன்னொரு லேப்டாப்டை பழையசாமான் போட்டு வைக்கற ரூம்ல இருந்த ஒரு உடைஞ்ச டேபிள்க்குள்ள வச்சுட்டுப் போயிருந்தேன். நான் இறந்ததுக்கப்பறம் இந்த வீட்டைச் சோதனை போட்டாலும் அந்த லேப்டாப் அவங்க கைக்குப் போயிருச்சுங்கற நம்பிக்கைல நான் பயன்படுத்தின அறையில இருந்த ஒரு மெமரிகார்டு விடாம அள்ளிட்டுப் போனவங்க வீணாப்போனதோட வீணாப்போனதா கிடந்த டேபிள்க்குள்ள இருந்த இந்த லேப்டாப்பைக் கவனிக்கல. உனக்கு முன்னாடி கலெக்டரா இருந்தவனோட வொய்ப் இந்த டேபிளோட கலைநயத்துக்காக இதைத் தூக்;கிட்டு வந்து இங்க வச்சுருந்தாங்க. ஆனா அவங்களும் மேலாப்புல தூசியைத் துடைச்சுவிட்டு டேபிளை அழகுப்படுத்தினாங்களே தவிர உள்ள இருந்த லேப்டாப்பைப் பார்க்கல. உன் தங்கச்சிதான் அதை உன்னோடதுன்னு நினைச்சு எடுத்திட்டா. ஆனா அதுனால எந்த அற்புதமும் நடக்கப்போறது கிடையாது.”

அவள் கண்களால் வினா தொடுக்க, அவன் தொடர்ந்தான்.

“ஆதாரத்துக்காகத் தானே கேமரா பிக்ஸ் பண்ண… நீயே அந்த ஆதாரமா மாறிரு. ஆனா அந்த ஆதாரம் யார் கைக்கும் கிடைக்கப்போறதில்ல… அப்படியே கிடைச்சாலும் அதை ஆதாரமாக்;க நினைக்கறவங்களுக்கும் இதே நிலைமைதான் வரும்ன்னு சொல்லிட்டுதான் என்னைக் கொலையே பண்ணாரு… எந்தப் புத்துல அந்த கமிஷனர் மாதிரி எந்தப்பாம்பு இருக்கும்ன்னு தெரியாது.அதனால நீ இப்ப போலீஸ், கேஸ்ன்னு போனாலும் உனக்கும் இதேதான் நடக்கும்…அது எனக்குத் துளியளவு கூட விருப்பம் கிடையாது.” தெளிவாகச் சொன்னான்.

“அதுனால தான் காலையில நான் அந்த கமிஷனர்கிட்ட பேசிட்டு வந்ததுக்கு அவ்வளவு கோபப்பட்டீங்களா?” அவளது மனதில் இனம்புரியாத ஆறுதலொன்று உருவானது.

“ம்ம்… அவன் பண்ண கொலைக்கு அவன் கிட்டயே கம்பெளையின்;ட் கொடுத்துட்டு வந்துருக்க… இப்ப அவங்களோட சந்தேகக் கண்ணோட்டம் உன்மேல விழ ஆரம்பிச்சுருக்கும்…”

ஒரு கணம் தயங்கியவள் “அந்த எம்எல்ஏ கிட்டயும்…” என்று இழுத்தாள்.

“ச்ச். தெரியும் நான் அங்கதான் இருந்தேன்…”

“ அங்கையா?  என் கண்ணுக்குத் தெரியவே இல்ல…”

“ எப்பப் பார்த்தாலும் உன் கண்ணுக்குக் காட்சி கொடுத்துகிட்டே இருப்பாங்களா?” எரிந்து விழுந்தவன்,

“இப்ப விஷயம் அது கிடையாது. கவனமா இரு… ம்ம்; சரியா சொல்லணும்ன்னா கொஞ்சம் ஸ்மார்ட்டா இரு… இப்பேர்தைக்கு நீ என்னைப் பத்தி சொன்னதைச் சும்மா சொல்றன்னுதான் நினைச்சுருப்பாங்க…அந்தக் கமிஷனர் அவங்க ஆள்ன்னு தெரிஞ்சுகிட்ட மாதிரி காட்டிக்காத… ஏதாவது விசாரிச்சால் சும்மா ஒரு போலிக்கும்பல் என்பேரை வச்சு ஏமாத்திட்டு திரியுதுன்னு பினாத்திகிட்டு இருந்தியே அதையே வச்சு மேனேஜ் பண்ணு… சரியா?” என்றொரு அறிவுரையுடன் முடித்தான்.

“ம்ம் அப்ப அவங்களுக்குத் தண்டனை?”

“அதை நான் கொடுத்துக்குறேன்…”
அவன் கண்களில் ஒரு தீவிரம் தெரிய, இவளுக்குள் பயம் உருண்டோடியது. அதை மறைத்துத் தைரியத்தை வரவழைத்தாள்…

“அதாவது உங்களோட பழிவாங்குதலுக்காக எந்தத் தப்பும் செய்யாத சக்தியைப் பலி கொடுக்கறது… அதுதான உங்க தண்டனை? அப்படித்தான? இது என்ன லாஜிக்ன்னு எனக்குத் தெரியல… அருணாச்சலம் வேணும்ன்னா தப்பானவரா இருக்கலாம்… ஆனா சக்தி ரொம்ப நல்லவன் தெரியுமா? யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுக்கணும்ன்னு நினைச்சுதுல்ல… அவருக்காக அவனைக் கொல்றது எப்படி நியாயமாகும்? உங்களுக்கு என்ன சக்தி அவர் கூட இருக்கக்கூடாது… அவ்வளவுதான? நான் எப்படியாவது…”

“இல்ல…இருக்கட்டும்…”அவன் இடையிட்டான்.

அவள் புரியாமல் பார்க்க, “சக்தி அருணாச்சலம் கூடவே இருக்கட்டும்…” என்றான் ஒரு அர்த்தம் பொதிந்த புன்னகையுடன்.
அந்தப் புன்னகையில் அவளை மீண்டும் கிலி பிடித்தாட்டியது.

“இல்ல…இல்ல… இந்த வீடியோவைக் காட்டுனா சக்தியே அவரை வெறுத்து விட்டுட்டுப் போயிடுவான்…அவன் அவரை விட்டுட்டுப் போயிட்டா அவனை விட்டுறேன்னு காலையில சொன்னீங்கள்ல…”

“ இப்ப அவரை விட்டுப் போகாம இருந்தா விட்டுடுறேன்னு சொல்றேன்…”

“ நிஜமாவா?” ஒருகணம் அவள் மனதில் நிம்மதி படிந்தாலும் மறுகணமே அது மடிந்தது.

அவளது முகமாற்றத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தவன் என்னவென்று வினவினான்.

“ இல்ல நீங்க மாத்தி மாத்தி பேசுறீங்க… ஒரு நேரம் கோபப்படுறீங்க… ஒரு நேரம் நல்லாப் பேசுறீங்க… நைட்டு உனக்கு எதுவும் ஆகக்கூடாதுங்கறதுக்காக உனக்குத் துணைக்கு இருக்கேன்னு சொல்றீங்க… காலையில நானே உன்னைக் கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறீங்க… எப்படி நம்புறது எதை நம்புறது?”

“ உனக்கு அவ்வளவு சீக்கிரம் எது மேலயும் நம்பிக்கை வந்து தொலைக்காது போல… ஆனா நீ என்னை இந்த விஷயத்துல நம்பலாம். நீங்க என்னோட எண்ணத்துக்கு எதிரா நடந்தா தான் நானும் மாற வேண்டியிருக்கும்.. நீங்க நான் சொல்ற படி நடந்தா நானும் மாற வேண்டிய அவசியம் இருக்காது.”

அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் யோசிக்க,

“இவ்வளவு யோசிச்செல்லாம் நீ ஒண்ணும் பண்ண வேண்டாம். நான் பேசாம ‘அந்த அரசைப் போட்டுத்தள்ளி என் பழியைத் தீர்த்துக்குறேன்…”

“யாரது அரசு?”

“பாருடா மேடத்துக்கு பிரெண்டு பேரே மறந்துருச்சு போல. சரி சரி விடு… எனக்கு இது இன்னும் வசதிதான்.”

“அய்யோ நீங்க சக்தியைத்தான் அப்படி சொன்னீங்களா?” 

“ஓய்… அன்னைக்கு என்னமோ அவனைப் பார்த்தவுடனே அரசன்னு சொன்ன? இப்ப என்னடான்னா அரசுன்னு சொன்னா யாருங்கற…

” அவனுக்கு அரசன்னு கூப்புட்டாலே பிடிக்காது. அதனால் அவனை வம்பிழுக்கணும்ன்னு நான் மட்டும்தான் அரசன்னு கூப்புடுவேன், சும்மா பட்டப்பெயர் மாதிரி, அதனால அந்தப்பெயரை அதைச் சுருக்கி வேற நீங்க சொல்லவும்  சட்டுன்னு என் மனசுல பதியல. அது சரி, நான் அவனை அரசன்னு கூப்புட்டதை நீங்க எப்பக் கேட்டீங்க?” 

“அந்த அருணாச்சலம் அந்தப்பாலத்துல வச்சு அவர் பையனை உச்சிமுகர்ந்துகிட்டு இருந்தாரே, அப்பதான நீ அவனை அரசன்னு கூப்புட்;ட.
அப்ப அங்கையும் நீங்க இருந்தீங்களா?”

அவன் வெறுமனே முறைக்க,

“அய்யோ முறைக்கிறானே, இவன் எப்ப நம்ம கூட இருப்பான்னும் தெரியல, இவன் என்னத்தை நினைச்சு இதெல்லாம் பண்றான்னும் தெரியல. இவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலாம் சக்தியை விடுறேன்னு சொன்னமாதிரி தெரியல…இவனுக்கு சக்தியால ஏதோ காரியம் ஆகணும்ன்னு நினைக்குறேன்…வசமா மாட்டிக்கிட்டமோ?” 

 
“ஆமாம் ஆகணும்…”

பேந்தப்பேந்த விழித்தவள், 

“நான் மனசுக்குள்ள நினைக்குறது கூட உங்களுக்குத் தெரியுமா?”  

“தெரியணும்ன்னு நினைச்சாத்தெரியும்…இல்லைன்னா எப்படி நீ கூப்பிடவும் நான் வருவேன்?

“இது வேறயா? அய்யோடா… தலையில் கைவைத்தவள், கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா? எனக்கு ஒண்ணுமே புரியல. உங்களுக்கு சக்தியால என்ன ஆகணும்?”

“தெளிவா சொல்றேன். நல்லா கேட்டுக்கோ… உனக்கு ஒரே ஒரு வழிதான். நான் சொல்றமாதிரி பண்ணா, அதாவது அந்த சக்தியைப் பண்ணவச்சா அவனை நான் ஒண்ணுமே பண்ணமாட்டேன்… ஆனா பண்ணலைன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” அவனது குரல் கடினமாக கடினமாக அவளுக்குப் பயமாகத்தான் இருந்தது.

தான் மிகவும் தைரியசாலி என்று அவள் நினைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் இப்பொழுது அந்த எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தோன்றியது. அது சரி, ஒரு பேயிடம் இப்படி நட்டநடுராத்திரியில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பாள் என அவளென்ன கனவா கண்டாள்? தூங்கப்போறதுக்கு முன்னாடி நிஜமாவே சந்தனாவை வேப்பிலை அடிக்கச்சொல்லலாம் போல என்று கூடத்தோன்றியது அவளுக்கு.

அவள் அரண்டு நிற்க, அதைப் பார்த்தவன் சற்று இளகி,” நான் சொல்றதைப் பண்ணலன்னா தான்…”என்றான் .

 
“அப்படி என்னதான்யா பண்ணனும்? அதை முதல்ல சொல்லித்தொலை… பைத்தியம் மாதிரி மாறிமாறி பேசிட்டுக் கிடக்க? செத்துமா உனக்கு இன்னும் தெளியல…”

அவன் முறைக்கவும்தான் தான் என்ன சொன்னோம் என்பதை உணர்ந்தாள்.

“ஐயோ அமி, சும்மாவே ஆடுற பேய் கொட்டுக்கண்டா விடுமா? அவன் வேற மனசுக்குள்ள நினைச்சாலே கேக்கும்ங்கறான்… நீ வாயைத் தொறந்தே இப்படி பேசி வச்சுகிட்டு இருக்க…நீ பேயடிச்சுதான் சாகப்போற…” அவள் மனதுள் புலம்ப,

“என்னது?” என்றான் அவன் வந்த சிரிப்பை மறைத்துக்கொண்டு.

அவள் இடவலமாக, பின் வலஇடமாகத் தலையசைத்துவிட்டு “அப்படி என்னதான் பண்ணனும் பேய்சார்” என்றாள்.

                                                                                                                              ( தொடரும்…)

2 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 18”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *