Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – ஆசிரியர் குறிப்பு.

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – ஆசிரியர் குறிப்பு.

முதலில் இந்தக் கதையை இதுவரை வந்து படித்த அனைவருக்கும் மனதார்ந்த, நன்றி என்னும் ஒற்றை வார்த்தைக்குள் அடங்க மறுக்கின்ற, நன்றி. இரண்டாவது கதைப் பதிப்பித்தலை இடையில் 20 நாட்கள் நிறுத்தியமைக்காக மன்னிக்க வேண்டுகிறேன். கொஞ்சம் தனிப்பட்ட சிக்கல்கள். அந்தச் சிக்கல்களுக்குள் தொடர்ந்து வர இயலுமா என்று தெரியாத காரணத்தினாலேயே மொத்தமாகப் பதிப்பித்துவிட்டேன். இடையில் யாராவது கருத்துத் தெரிவித்திருந்து நான் அதைப் பார்க்காமலோ, பதிலளிக்காமலோ இருந்திருந்தால் அதற்கும் பொறுத்தருள வேண்டுகிறேன். தங்களுடைய எந்தக் கருத்தாயினும் இந்தப் பதிவில் தெரிவிப்பீர்களாயின், மிகுந்த மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் ஏற்றுக் கொள்வேன்.

இது என்னுடைய முதல் கதை. நான்கரை வருடங்களுக்கு முன் என்னுடைய இருபது வயதில் எழுதியது. முதல் கதைக்கே உரிய தடுமாற்றங்கள் இந்தக் கதையிலும் இருக்கும். அதையெல்லாம் தாண்டி, இவ்வளவு தூரம் நீங்கள் இந்தக் கதையை வாசித்து வந்திருப்பீர்களாயின், அருளும் அமியும் தங்கள் மனதில் சற்று நேரமாவது இடம்பிடித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

பிரவீணா அக்கா, என்னுடைய நட்புள்ளங்களுள் ஒருவர். அவருடைய தளத்திற்காகப் புதிய கதை ஒன்றை எழுதித்தரவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், என்னுடைய தற்போதைய சூழலில் எழுத்திற்கு நேரத்தைக் கொடுக்க வேண்டுமானால், எதிலிருந்தாவது பிடுங்கித்தான் கொடுக்கவேண்டும். ஆனால், அதற்குக் கூட இயலாத நிலை. என் நிலையைப் புரிந்துகொண்டு, அருள், அமிழ்தாவோடு வருகிறேன் என்றபோதும் இன்னகையுடன் என்னை வரவேற்றார். அக்காவிற்கு அன்பும் நன்றியும்.

என்னுடைய பழைய வாசகர்களும் இங்கே இருக்கலாம். பெரும்பாலும் பழைய வாசகர்கள் தான் இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். நான்கரை வருடங்கள் கழித்து, இந்தக் கதையை மறுவாசிப்பு செய்யுமளவு என் எழுத்திற்குத் தங்கள் மனதில் ஒரு இடமிருப்பின், எத்தனை நன்றி சொன்னாலும் அது தங்களுடைய அன்பிற்கு நியாயம் செய்துவிடாது. என்றும் அன்புடன் அறிவுமதி. மீண்டும் சந்திப்போம்.

16 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – ஆசிரியர் குறிப்பு.”

    1. Avatar

      So sweet of you sis. Sure!inga kandippa part 2 poduven. Atha konjam edit pannanum. Last parts la kulapi vachuruken. So edit pannitu poduren. Thank you SO much! Sorry for the late reply.

  1. Avatar

    Soooper..! Omg first story ya nu நம்பமுடியல 👌🏼🥰.. ச்ச அவங்க ரெண்டுபேரும் உயிரோட இருந்துருக்கலாம்னு தோணும்.. Part 2 காக i m waiting!!

  2. Avatar

    ஹாய்…. மதி, நா உங்கள பிரதிலிபில எதிர்பாத்து இருந்தேன் ரெம்ப நாளா… எப்டி இருக்கீங்க… நா பிரதிலிபில முதலில் படித்த நாவல் ஆழினி தான்… பதிலையே நிறுத்திட்டு அப்புறம் 1.5 வருஷம் கழிச்சு போட்ரா வர.

  3. Avatar

    அப்புறம் சுடுகாட்டில் தென்றல் வீசினாள்.. அப்புரம் மறுபடியும் விழி மறைத்த வழிகள்… மருபடியும் அருள் ஆமியோட வரேன் சொன்னேங்க ஆனா அதுக்கப்புறம் பக்காவே முடில உங்கள ..இங்க உங்கள பார்த்ததுல மகிழ்ச்சி

  4. Avatar

    ஹாய்,மதி எப்டி இருக்கீங்க. நா பிரதிலிபிலா முதலில் படித்த நாவல் ஆழினி தான்.. அதுக்கும் 1.5 வருடங்கள் வெயிட் பண்ணி படிச்சேன்.அதே தான் சுடுகாடு மற்றும் விழி மறைத்த வழிகள். நீண்ட நாட்களாக உங்கள் நாவலுக்காக காத்திருக்கிறேன் சகோதரி

    1. Avatar

      ஹாய் சிஸ், நான் நல்லா இருக்கேன். நீங்களும் நலம் ன்னு நம்புறேன். நிஜமாவே உங்க கமெண்ட் பார்த்து ரொம்ப மகிழ்ச்சி. மீண்டும் ஒரு நீீண்டகால வாசகரை மீண்டும் பார்த்ததுல எனக்கும் மகிழ்ச்சி. கொஞ்சம் படிப்பு சார்ந்து கவனம் குவிக்க வேண்டியிருக்கிறது. முடித்துவிட்டு முழு மூச்சாக வருகிறேன். மனமார்ந்த நன்றி

      1. Avatar

        கண்டிப்பா தோழி…. மீண்டும் மீண்டும் நல்ல நாவல்கள் உங்களால்ட்ட இருந்து வரும்னு நம்புறேன் மற்றும் ரெம்ப ரெம்ப மகிழ்ச்சி பா

  5. Avatar

    ஹாய் சகி மா!!! அருள் அண்ணா அமி அண்ணி கதைன்னா நாங்க எத்தனை தடவன்னாலும் படிப்போமே😁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *