Skip to content
Home » தட்டாதே திறக்கிறேன் – 11

தட்டாதே திறக்கிறேன் – 11

தங்க நதியுடனான கலந்துரையாடலை தற்காலிமாக முடித்து கொண்ட வானம் வெள்ளி நதியுடன் ஓருடலாக கை கோர்த்தபபடி உலா வந்துக் கொண்டிருக்க, இப்படி ஒரு அழகான ரம்மியமான இரவுப் பொழுதை கண் கொட்ட காண முடியாமல் மடிக்கணினியில் மூழ்கி போய் இருந்தாள் மதி…..

ஆம் எழுத்தாளர் வேலை வேண்டாம் என வந்து விட்டாள்.

ஆனால் உடலையும் மூளையையும் வருத்தி உழைத்து சாப்பிடும் அளவிற்கு ஒரு வேலை வேண்டும் என அவளை வருத்தி எடுத்தது மனம்….

என்ன தான் அடுத்த வேளை உணவைப் பற்றிய கவலை இல்லாமல் இருக்குமளவிற்கு அவள் தாய் தந்தையின் சொத்துக்களில் இருக்கும் பங்கீட்டில் இருந்து பணம் வந்தாலும், தான் யார்?…,

தன்னால் என்ன முடியும்?…,

தனக்கு இன்னமும் என்னென்ன திறமை இருக்கிறது?….,

தன் பெற்றோர் தனக்கு சேர்த்து வைத்ததை விட சற்று அதிகமாக சம்பாதிக்கும் அளவிற்கு தன்னால் ஏதாவது சாதிக்க முடியுமா?….

பல இளம் தொழிலதிபர் பெண்களை போல தானும் கௌரவம் அடைய ஏதேனும் வழி இருக்கின்றதா என காண நினைத்தவளாக அவள் படித்த பி.சி.ஏ மற்றும் ஒரு சில டாட். நேட் கோர்ஸுகளை உள்ளடக்கியதாக ஒரு சுய படிவத்தை உருவாக்கினாள்….

அதை அவளுக்கு தெரிந்த மற்றும் வலை தள விளம்பரங்களின் வரும் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு அனுப்பிட முயன்றால் அவர்களோ, இரண்டு டிகிரி, இரண்டு வருட அனுபவம்,

அல்லது இரண்டு டிகிரி ஒரு வருட அனுபவம் என ஏதாவது நிபந்தனை இட்டிருக்க, அவள் படித்து வைத்திருக்கும் ஒற்றை பட்டப்படிப்பிற்கு ஏற்றார் போல வேலைத் தேட முடியாமல் இல்லை இல்லை வழி தெரியாமல் விழி பிதுங்கி போய் சோர்வுடன் மடிக்கணினியைத் தட்டிக் கொண்டிருக்க, அவள் இல்லத்தின் கதவும் தட்டப்பட்டது.

மதிக்கு யோசனை.

என்ன யாரா இருக்கும்.

இப்போ தானே ப்ரியா வெளிய போனா நைட் டியூட்டின்னு என நினைத்தபடி கதவை திறக்க தெளிந்த புன்னகையுடன் நின்றிருந்தான் வருண்.

வருணைக் கண்டதும், சட்டென மலர்ந்த மதி,

  “அட வாங்க வருண்……”

என்று இப்போது எதற்கு வந்தான் என அவளின் மனதில் கேள்வி எழுந்தாலும் தன்னையும் தேடி வர ஒரு ஆள் இருக்கிறது என அழைக்க,

   “வேலைய விட்டுட்டியாமே….

உன் ஃபர்ண்ட் சொன்னா.

அதுவும் ரொம்ப சோகமா நீ இந்த வேலையே வேண்டாம்னு போய்ட்டதா சொன்னா….”

என எடுத்ததும் தான் வந்ததிற்கான கேள்வியை கேட்டான் வருண்.

ஏனோ அவனின் இந்த கேள்விக்கு பிறகே இதுவரை தேவ இல்லாம வேலையை விட்டு விட்டு வந்துட்டோமோ என குழப்பத்துடன் வேலைத் தேடிக் கொண்டிருந்தவளின் குழப்பம் நீங்கி ஒரு வித தெளிவு பரவுவதை போல உணர்ந்தாள் பெண்ணவள்.

ஆம் இவனால் தானே…

இவன் அளித்த அறிவரையால் தானே தனக்கு நரக வாழ்வை தந்தவனை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் விருப்பம் இல்லாமல் மூளை குழம்பி போய் அவனைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தவள் ஒட்டு மொத்த புத்தகத்தை மூட இருந்த சமயம் பக்கத்தை மாற்றினாள், தன்னை அதிலிருந்து  மீட்டுக் கொண்டும் வெளி வந்தாள்.

எனவே அவனைக் கண்டதும் புத்துணர்ச்சி கொண்டவளாக,

   “ம்ம் ஆமா வருண்…

வேலைய விட்டுட்டேன் தான்.

பட் வேண்டாம்னு பண்ணல.

எனக்கு வசந்த் நேம்ல…..

என ஆரம்பித்தவள்,

“முடிஞ்ச அளவுக்கு அகல்யா மேம் கிட்ட பேசி பாக்கலாம்.

அந்த நேம்ல எழுத வேண்டாம்னு சொல்லலாம்னு தான் நினச்சேன்.

அகல்யா மேம் தான் எழுதுனா அந்த பேர்ல எழுது இல்லன்னா..

அதர்வைஸ்….. ன்னு ஆப்ஷன் தராதப்போ கிளம்பிடனும்னு நினச்சேன்.

என்னால இதுக்கு மேல அந்த நேம் ல கன்டினியூ பண்ண பிடிக்கல…

அசிங்கமா அவமானமா இருந்தது….”

என்று அவள் கூறிட, வசந்த் என்ற பெயரை கூட உச்சரிக்க பெண்ணவள் மறுப்பதை கவனித்தான் வருண்

“அதுக்காக எனக்கு அவன பழி வாங்க எல்லாம் பிடிக்கல.

அட் சேம் டைம் நடந்ததையே நினச்சு நினச்சு அழுதுட்டு அவன நினச்சிட்டு இருக்கவும் எனக்கு பிடிக்கல.

இக்நோர் பண்ணிட்டு மூவ் ஆகனும்னு நினச்சேன்….

அதுக்கு முதல்ல அவன் நேம்ல எழுதுறத நிறுத்தனும்னு தோணுச்சு…..”

என்று பெண்ணவள் பகிர்ந்துக் கொள்ளவும், வருணுக்கு இதை கேட்கையில் உண்மையாகவே மனம் நிம்மதி அடைந்தது.

அவனுடன் உண்டான காதலில் இருந்து தன்னை கடக்க நினைத்து முயற்சி செய்து கொண்டிருக்கிறாள் என்று.

“ஓகே ஃபைன்.

குட்..

ரொம்ப ரொம்ப நல்ல டெஷிசன் தான்….”

என்றிட,

  “அது சரி நீங்க எதுக்கு போய் மரகதம் கிட்ட கேட்டீங்க….

ரொம்ப வருத்தப்பட்டாளா?….”

என்று வினவினாள் மதி.

“ம்ம் ஆமா தெரியாத ஊரு….

நீ என்ன பண்ண போறேன்னு ஃபீல் பண்ணா….”

என்று வருண் பதில் அளித்திட,

  “அச்சோ எனக்கு ஒரு ஃபோன் பண்ணியிருந்தா எங்க இருக்குன்னு நானே சொல்லியிருப்பேனே…..

பாவம் அவ….”

என்று தன் தோழிக்காக இப்போது மதி வருத்தப்பட்டாள்.


இல்ல மதி உனக்கு ஃபோன் பேசனும்னு எனக்கு ஓடவே இல்ல…

ஆஃபீஸ்ல நுழஞ்சதும் உன்ன தேடுனேன்…

ஆனா நீ வரலன்னு அவன் சொன்னதும் ஒரு மாதிரி பதட்டமா ஆகிடுச்சு.

என்று அவன் கூறிட, மதி வருணை கவனித்தாள்.

எது ஆஃபிஸ்ல நுழஞ்சதும் எதுக்கு என்ன தேடனும்?…

அதுவும் ஏன் பதட்டமடையனும் …. என அவள் யோசித்துக் கொண்டிருக்க,

“என்னடா நம்ம முன்னாடி தானே ஆஃபிஸுக்கு கிளம்பிட்டு இருந்தா என்ன ஆச்சு ஏன் அவன் வரல..

ஒரு வேள குமார் தான் சரியா பாக்கலையான்னு அவ கிட்ட கேட்க போனேன்.

அப்ப தான் நீ கிளம்பி போனதா அவ சொன்னதும் உனக்கு ஃபோன் பண்லாம்னு நினச்சேன்.

சரி நீயே ஆசப்பட்டு செஞ்சிட்டு இருந்த வேலைய விட்டுட்டு போயிருக்க…

உன்ன டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.

வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம்னு விட்டுட்டேன்…..”

என ஒவ்வொரு பேச்சிலும் மதியின் உள்ளத்தை முன்னிருத்தி அவன் பேசிட, மதிக்கு வருணின் பேச்சுகளில் அன்பா அக்கறையா என ஏதோ ஒன்றில் வேறு எதுவோ கலந்திருப்பது புரிய வர, ஆனால் வருணோ தன் கை கடிகாரத்தை பார்த்தவனாக,

  “ஓகே டைம் ஆச்சு….

நான் போய் குளிச்சிட்டு சமைக்கனும்……”

என்று கிளம்பிட,

  “நீங்களா சமைக்க போறீங்க?…. என்று கேட்டு அவனை நிறுத்தினாள் மதி.

“ம்ம் ஆமா நான் தான்….

ஏன்?…”

என்று அவன் கேட்கவும்,

   “இல்ல உங்களுக்கு சமைக்க தெரியுமா?….”

என கேட்டாள் மதி.

“ரொம்ப எல்லாம் இல்ல…

ஜஸ்ட் ஓரளவு தெரியும்.

அம்மா மாவு வச்சிட்டு போயிருக்காங்க…

போய் சட்னி போட்டு சாப்பிடனும்..

அவ்வளவு தான்..

சாம்பார், ரசம், பொறியல் எல்லாம் தெரியாது….

இன்னும் மூனு மாசத்துக்கு ஹோட்டல் தான்”

என்று அவன் சிரிக்க, மதி சிந்தித்தாள்.

“அதுக்கில்ல வருண். எனக்கு வொர்க் இல்லன்னு நான் நைட் டின்னர் வெளிய வாங்கல…

நான் தான் ப்ரிப்பேர் பண்ண போறேன்….

உங்களுக்கு ஓகே ன்னா நான்….”

எப்படி கேட்பது புரியாமல்‌ காலையில் அவன் அன்னை தனகளித்ததை போல ஒரு பண்டமாற்று முறையை மேற்கொள்ள நினைத்தாலும் அவன் தன்னிடம் உணவுன்ன நினைப்பானா அல்லது மறுப்பானா என அவனைப் பற்றி தெரியாமல் அவள் தயங்க,

  “வெரி வெரி தாங்க்ஸ் மதி….

தாராளமா சேர்த்து சம….

எனக்கு ஒரு வேல மிச்சம்.

பத்தே நிமசத்துல குளிச்சிட்டு வந்துடுறேன்…..”

என்று ஆடவன் பறந்தே விட்டான்.

மதிக்கு உண்மையாகவே மகிழ்ச்சி தான்.

ஏதோ வருணை கானும் போதெல்லாம் சிறு வயதில் அவனுடன் அவள் கழித்த மகிழ்வான தருணங்கள் நினைவில் வந்து நிற்க, அவனருகில் அவள் சிறுபிள்ளை அவளை உணர்ந்தாள்.

ஆதலால் தன்னுடன் உணவருந்துவதாக சொல்லி விட்டு சென்றவனுக்காக தன் மடிகணினியை ஓரம் வைத்தவள் வேக வேகமாக காய்கறிகளை நறுக்கி, நூடுல்ஸை வேக வைத்தாள்.

கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை தாளித்து நூடுல்ஸை தயாரித்து முடித்தவள் ப்ளேட்டிங் செய்து கொண்டிருக்க, யாருடனோ பேசியபடி உள்ளே நுழைந்தான் வருண்.

வந்தவன் நேராக அவள் பறிமாறிய தட்டிடம் அமர்ந்தவன்,

  “ம்ம் ஓகே ம்மா. நீயும் உடம்ப பாத்துக்கோ…

ஸுவட்டெர், குல்லா எல்லாம் போட்டுக்கோ….

அங்க ரொம்ப குளிரா இருக்கும்…

கௌரி எழுந்ததும் ஃபோன் போடு…..”

என்று அணைப்பைத் துண்டிக்க,  

  “ஆன்டியா வருண்.

சேஃபா ரீச் ஆகிட்டாங்களா?….”

என்று கேட்டாள் மதி.

“ம்ம் ரீச் ஆகிட்டாங்க.

மாமா வந்து பிக்கப் பண்ணிக்கிட்டாராம்.

கௌரி கிட்ட பேசனும்னு சொன்னேன்.

அவ இப்ப தூங்கிட்டு இருக்காளாம்…….”

என்றவன் தனக்கு முன்னே வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி என தட்டையான வடிவமைப்பில் தட்டில் சுற்றி நறுக்கி வைக்கப்பட்டு அதற்கு நடுவில் காய்கறிகளுடன் மிளிர்ந்த நூடுல்ஸ் என ரெஸ்டாரன்ட் அமைப்பில் இருக்க,

“இவ்வளவும் இப்ப நீ தான் பண்ணியா?…

இந்த வெஜிடபிள்ஸ் எல்லாம் இப்படி ஸ்லைஸா நீ தான் கட் பண்ணியா?…”

என தக்காளியை எடுத்து சுற்றி முற்றிலும் பார்த்தப்படி ஆச்சரியம் பொங்க கேட்டான் வருண்.

மதியும் சிரித்தவாறு,

  “ஆமா எல்லா வெஜிடபிள்ஸும் நான் தான் கட் பண்ணேன்….

ஏன்?….”

என்று வினவ தாமதிக்காமல் அதை தன் அலைபேசியில் புகைப்படமாக எடுத்தான் வருண்.

எடுத்தவன்,

  “என் கூட வொர்க் பண்றான்ல குமார் அன்னக்கி உனக்கு சமைக்க தெரியாது.

நைஸா எஸ்கேப் ஆகிடு…..


என்

ஃபியூச்சர் மோசமா இருக்கும்னு என்ன மிரட்டுனான்…

அதனால ஃபியூச்சர் ல நான் நல்லா தான் இருப்பேன்னு இவ்ளோ ஃபாஸ்டா நீ சமச்சுருக்கிறத அவன் கிட்ட காட்டுறேன்…”

என்றபடி,

“ஆன்லைன் ல தான் இருக்கான்…..”

என்று வாட்ஸப் புலனில் அனுப்பிட, மதி வருணின் வார்த்தையில் சற்று குழம்பினாள்.

இப்ப இவன் என்ன சொன்னான்.

எஸ்கேப் ஆகிடு, ஃப்யூச்சர் மோசமான இருக்கும்னா‌….

நான் ஃபாஸ்டா சமச்சா இவன் ஃபியூச்சர் எப்படி நல்லா இருக்கும்?…

“வாட் யூ மீன் வருண்……”

என்று அவள் கேட்க வாயெடுக்க சரியாக அவனுக்கு அழைத்தான் குமார்.

வருணும் சட்டென அழைப்பை ஏற்றவன்,

  “என்ன பாத்தியா?…

ஏதோ அன்னக்கி குற சொன்ன?….

இப்ப பாரு மதி எவ்ளோ சூப்பரா சமச்சிருக்கான்னு…..”

என்று இவன் கூறிட, எதிர் முனையில் என்ன கூறப்பட்டதோ,

  “டேய் நூடுல்ஸா இருந்தாலும் அதுவும் ஒரு டிஷ் தான்டா…

சும்மாவா?…

நான் குளிச்சிட்டு வந்துடுறேன் மதின்னு சொல்லிட்டு தான் போனேன்.

அதுக்குள்ள எவ்ளோ வெஜிடெபிள்ஸ் பாரு..

கேரட்,. பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, முட்டைகோஸ், வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் ஸப்பா சொல்லும் போது எனக்கே மூச்சு வாங்குவது….

இதெல்லாம் ஜஸ்ட் ஜஸ்ட் டிவென்டி மினிட்ஸ் ல பண்ணியிருக்கா?….”

என்றபடி உண்ண, மதியும் அவனெதிரில் அமர்ந்தாள்.

ஆனால் கேள்வியுடன்….

இப்ப எதுக்கு இவன் இதெல்லாம் அவன் ஃபர்ண்ட் கிட்ட சொல்லிட்டு இருக்கான்.

அதுவும் நம்மல பத்தி எதுக்கு இப்படி பேசிட்டு….

என யோசித்தவள் அலைபேசியை அணைக்கட்டும்‌ என அமைதி காத்தப்படி அவளும் உண்ணத் தொடங்க, ஆனால் வருண் அழைப்பை துண்டித்தால் தானே, நீ தான் என் எதிர்காலம் என நண்பனிடம் பகிர்ந்ததை‌ போல மறைமுகமாக அவளுக்கு தெரிய வைத்தவன் அவள் தன்னிடம் கேள்வி கேட்டிடக் கூடாதென சாப்பிட்டு கொண்டே உண்டவன், பேசியபடியே தட்டை முடித்து விட்டு,
  “டேய் ஒரு நிமிசம் இருடா…..”
என குமாரிடம் கூறிட, மதி அவனைக் கண்டாள்.

“ஓகே மதி ரெஸ்ட் எடு.

மார்னிங் பாக்கலாம்…..”
என அவள் ஏதோ கேட்க வருவதற்குள்,
  “ஹான் சொல்லுடா அதுக்கப்புறம் என்ன ஆச்சாம்?….”
என அவன் பாட்டிற்கு பேசிக் கொண்டே வெளியே சென்றிட, உணவை வைத்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருக்கும் இந்த பெண்ணிடம் யார் சொல்வது அவளின் இதயக் கதவை வருண் தட்டத்தொடங்கி விட்டான் என்று.

5 thoughts on “தட்டாதே திறக்கிறேன் – 11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *