Skip to content
Home » தட்டாதே திறக்கிறேன் -3

தட்டாதே திறக்கிறேன் -3

விடிந்த செவ்வானம்!!!!

கரு மேகத்தையும், ஆதவனையும் வர்ணிக்காத கவிஞன் இவ்வுலகில் இருக்க முடியாது.

ஏனெனில் பரந்து விரிந்த வானத்தில் எங்கே நின்று கண்டாலும் தன் செந்நிற கைகளை காட்டிய வண்ணம் போர் புரிந்த வீரனை போல நின்று ஜொலித்தது சூரியன்….

தான் விடியலை இவ்வுலகிற்கு காட்டி விட்டதில் ஆதவன் கம்பீரமாக உரைத்து கொண்டிருந்த அதே நேரம் தானும் எழுந்து விட்டதை அருகில் இருக்கும் மதியின் வீட்டிற்க்கு காட்டிடும் எண்ணத்தில் வருண் என்னும் ஆடவனும் நின்றிருந்தான்.

வாகனத்தை வாங்கியதில் இருந்து மழைநீரை தவிர மற்ற நீரை காட்டிடாதவன் கையில் ஹோஸ் பைப்பையும் மனதில்,

என்ன இவ மணி ஏழாகிடுச்சு இன்னும் எழுந்து வெளிய வராம இருக்கா….

என மதியின் எண்ணங்களையும் சுமந்த படி தன் வீட்டு வாசலில் நிற்க, சில்வர் டம்ப்ளரை அவனிடம் நீட்டினார் ரேணுகா….

“என்ன டா இது புதுசா இருக்கு….

வண்டியெல்லாம் கழுவுற?

வாங்குனதுல இருந்து ஒரு தடவ கூட கழுவுனதே இல்லையே நீ….”

என்று விஷயம் புரிந்தாலும் ரேணுகா வேண்டுமென்றே வினவ,

  “அதான் நீயே சொல்லிட்டியே, வாங்குனதுல இருந்து கழுவலன்னு.

அதான் ரெக்காட பிரேக் பண்றேன்…..”

என்று மீண்டும் மீண்டும் சுத்தம் செய்ய,

  “நீ நினக்கிறது நடக்காது மகனே….

பேசாம உள்ள வந்து குளிச்சிட்டு வேலைக்கு கிளம்புற வழிய பாரு……”

என்று அறிவுறுத்து விட்டு செல்ல, வருணோ அதையும் தான் பார்க்கலாமே என்று நின்று கொண்டு இருக்க கால் தான் வலித்திட தொடங்கியது. …..

ம்ஹ்ம் அம்மா சொன்ன மாதிரி அவ வரமாட்டாளோ…..

பேசாம உள்ள போயிடலாமா?

காலையிலேயே டையர்ட் ஆகிட்டா இன்னக்கி நிறைய வேல இருக்கே…. என நினைத்தபடி தேநீரை உறிஞ்சிட, இன்று அவளின் தரிசனம் அவனுக்கு கிடைக்கும் என விதியில் இருந்திருக்கிறது போல…

அடர் ஊதாவில் சுடிதாரும், வெள்ளை நிற துப்பாட்டாவும் அணிந்துக் கொண்டு இடது பக்கம் கைப்பையை வைத்தப்படி வெளியே வந்தாள் பானுமதி.

வந்தவளை இமைக்காமல் கண்டான் வருண்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு பார்த்த மதியை விட இப்போது அழகு மங்கையாக தெரிந்தாள் பானுமதி….

அதே இடை வரை நீண்ட கூந்தல், ஆனால் குளித்து விட்டு பின்னாமல் மயில் தோகையை போல திறந்து விட்டிருக்க, நெற்றிப் பொட்டு….

அப்பப்பா….

அவளின் பாலின் நிறத்தோடு அந்த அடர் ஊதா பொட்டும் சேர்ந்து அவனை பித்துக்கொள்ள செய்தது.

வில்லாக வளைந்திருந்தது புருவம். ஆனால் அழகு நிலையம் சென்று திருத்தம் செய்யாமல் விட்டிருப்பால் போல இரண்டு புருவமும் சேர்ந்து கொச கொசவென இருந்தது…

அடுத்தாக மூக்கு என வருணின் பார்வை அவளின் நாசியிடம் இறங்க அதற்குள் குட்மார்னிங் வருண் என அவனுக்கு காலை வணக்கம் வைத்தாள் பானுமதி.

மகிழ்ந்து போனான் வருண்…..

கௌதம் மேனன் படத்தில் வரும் கதாநாயகர்களிஅன் ஓரங்க வசனங்களை போல்,

  “மதி என்ன பாத்துட்டா…

நான் எதுக்காக நின்றிருந்தேனோ அது நடந்திருச்சு….

அவ குட் மார்னிங் சொல்லி என் கிட்ட பேச தொடங்கிட்டா…..

இவ்வளவு நேரமா நான் அவளுக்காக நின்றுருந்தேன்னு அவ உணர்ந்திருக்கனும்…..”

என்று நேற்று இரவு கே.டி.வி யில் கண்ட அச்சம் என்பது மடமையடா படத்தின் தாக்கத்தால் தனக்குள் பேசிக் கொண்டிருந்தான் வருண்..

தான் காலை வணக்கம் கூறியும் அவனிடம் பேச்சில்லாமல் போகவும், அவனை ஒரு மாதிரியாக கண்டாள் மதி.

ஆனால் அவனிடம் பேசி ஆக வேண்டுமே…..

பேசிட வேண்டும் என்ற கட்டாயம் இருக்க,

“என்ன க்ளீனிங்க் வொர்க்கா?…..”

என்று அவனிடம் மேலும் தன் உரையாடலை தொடர்ந்தாள் மதி…..

ஆனால் இப்போதும் வருண்,

  “ஆமா மதி உனக்காக தான் இந்த க்ளீனிங்க் வொர்க்….

உன்ன பாக்கத்தான்……”

என்று மீண்டும் மனதிற்குள் ஓரங்க நாடகம் நடத்திட, பின் மண்டையில் அவனை தட்டினார் ரேணுகா…..

அன்னை தட்டிய பிறகே சற்று நிதானத்திற்கு வந்த வருண் என்னம்மா என்று திருவாய் மலர டம்பளர் என்றார் ரேணுகா……

ரேணுகா வை அவ்விடத்தில் கண்டதும் மதி தான் வருணிடம் கூற வந்ததை எப்படி உரைப்பது என யோசித்தப்படி நிற்க, ரேணுகா மகனின் மானத்தை காப்பாற்ற,

“என்னம்மா பேகோட நிக்குற…

இவ்வளவு சீக்கிரம் வேலைக்கு கிளம்பிடுவியா?…..

என்று பேச்சை திசை திருப்பினார்.

“ஆமா ஆன்டி…..

எட்டு மணிக்குள்ள ப்ரஸ்ல இருக்கனும்…

திருமதி ப்ரஸ் தெரியுமா உங்களுக்கு?…..”

என்று அவள் வினவிட, ரேணுகாவின் கண்கள் சட்டென வருணை தழுவியது.

அதே போல வருணும் அவரை நோக்கிட,

  “அங்க இலக்கியம் அப்புறம் மகளிர்ன்னு இருக்குற ரெண்டு செக்ஷனுக்கு எடிட்டரா இருக்கேன்…..”

என்று அவள் கூறியது தான் தாமதம்,

  “ஹேய் மதி நீ ஐ.டி தானே படிச்சே…..

பர்ஸ்ல எப்படி?….”

என்று வருண் வினவ, பானுமதியிடம் பெருத்த மௌனமே……

ஆனால் ரேணுகாவோ சரி ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அமைதியா நிக்கட்டும்….

நாம குக்கர ஆஃப் பண்ண போவோம் அப்பவே மூனு விசில் வந்திடுச்சு….. என்று அங்கிருந்து நகன்றிட,

  “வாட் ஹேப்பன் மதி…

ஏன் சைலண்டா ஆகிட்டா……”

என்று வினவினான் வருண்.

ஆனால் மதி வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்,

   “நத்திங் வருண்…..

நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்…”

என்று அவள் ஏதோ கூற விழைய, வருணின் கற்பனை குதிரை ஒரு நொடியில் அவனிருக்கும் பகுதியை தாண்டி விட்டது.

“ஆக்சுவலா இத நான் ஆன்டிக்கிட்ட தான் சொல்லனும்….

ஆனா அவங்க இத எப்படி எடுத்துக்கிறாங்கன்னு தெரியல…..”

என்று அவள் மென்று முழுங்க, வருண் சற்று நிதானமானான்.

“என்ன மதி?….

என்ன ப்ராப்ளம்?…..

எதுவா இருந்தாலும் ஓபனா சொல்லு?…”

என்று கம்பீரமாக வினவினான்.

“பெருசா எல்லாம் ஒன்னும் இல்ல…

ஆன்டியும் எங்க அத்தையும் ரொம்ப திக் ஃப்ரண்ட்ஸ், உங்களுக்கே தெரியும் இன்னும் வர டச்ல இருக்காங்கன்னு…..”

என்று அவள் விஷயத்திற்கு வந்துவிட,

  “ஆமா ஆமா நல்லா தெரியும்….

லாஸ்ட் வீக் கூட உங்க அத்த ஃபோன் பண்ணியிருந்தாங்க.

வசந்த்க்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு…

கண்டிப்பா எங்கள நிச்சயத்துக்கு வரனும்னு கூப்ட்ருந்தாங்க……”

என்று அவன் கூறிட, மதியின் முகம் கண நேரத்தில் சுணங்கியது…

ஆனால் அதே நொடிப் பொழுதில் மறைத்துக் கொண்டவள்,

  “அதனால தான் சொல்றேன் எந்த ஒரு சிட்யூவேஷன்லையும் நான் இங்க உங்க நெய்பர்ஸா இருக்குறேன்னு அவங்க கிட்ட சொல்லிடாதீங்க…

குறிப்பா தாத்தா பாட்டிக்கு நான் இங்கு இருக்கேன்னு தெரிய வேண்டாம்……”

என்று அவள் முடிக்க, வருணிற்கு குழப்பமாக பார்த்தான்.

“வாட் உங்க ஃபேமிலிக்கு தெரிய வேண்டாமா?…..

என்ன மதி சொல்ற?…..

அப்ப யாருக்கும் தெரியாமா தான் நீ இங்க இருக்கியா?…..”

என்று அவன் அவன் சிறிது சப்தத்துடன் வினவ,ஸ்ஸுஸ்ஸு என்று அவனை அடக்கினாள் மதி…..

“ப்ளீஸ் வருண்.

இங்க என் கூட இருக்குற பொண்ணுக்கு கூட தெரியாது நான் யாரும் இல்லாம இருக்கேன்னு…..

கொஞ்ச நாள் தான் நான் இங்க இருப்பேன்….

அதுக்கப்புறம் நான் பர்ஸ் பக்கமே இருக்குற கேர்ள்ஸ் ஹாஸ்ட்டலுக்கு போயிடுவேன்.

இருக்குற வரைக்கும் சேஃப்டி முக்கியம்…

நீங்க எல்லாம் ஒன்ஸ் அபான் ஏ டைம் என் கூட ஒரு நல்ல ஃப்ரண்டா இருந்தீங்கன்னு தான் உங்க கிட்ட மட்டும் இத சொல்றேன்…….”

என்கையில் வருணிற்கு அவள் ஏதோ ஒரு பிரச்சனையில் இருப்பது புரிந்தது…..

அதே நேரம் அவள் தன் மீது இன்றளவும் நம்பிக்கை கொண்டிருக்கிறாள் எனவும் புரிந்தது.

ஆகவே,

“ம்ம் கண்டிப்பா அப்ப மட்டும் இல்ல எப்பவும் நான் உன் ஃபர்ண்ட் தான் மதி…..

அம்மா கிட்ட நான் சொல்லிக்குறேன்…..

ஆனா பட் எதுக்கு இது?…

அவங்க தானே உன் ஃபேமிலி….

சின்ன வயசுல இருந்து அவங்க தானே உனக்கு கார்டியனா இருந்தாங்க……”

என்று அவன் வினவ,

  “அதான் அதனால தான்…

அந்த ஒரு நன்றிக்கடனுக்காக தான் நான் இருக்குற இடம் யாருக்கும் தெரிய வேண்டாம்னு சொல்றேன்…..

ப்ளீஸ் ஹோப் யூ அன்டர்ஸ்டாண்ட்…”

என்றிட,

ச்சே லூசு மதி…

இதுக்கு போய் எதுக்கு ப்ளீஸ் எல்லாம்….

நான் அம்மா கிட்ட சொல்லிடுறேன்….

மம்மி கண்டிப்பா சொல்ல மாட்டாங்க…..”

என்கவும்,

  “தேங்க்ஸ் வருண்…..

ஆபிஸுக்கு டைம் ஆச்சு..

இனிமே அடிக்கடி பேசலாம்….

கௌரி அக்கா நல்லா இருக்காங்களா?…..”

என்று தன் இருசக்கர வாகனத்தில் சாவியை நுழைத்தாள் மதி….

“ம்ம் நல்லா இருக்காங்க…

ஈவ்னிங் வா அவங்க கிட்ட பேசலாம்.

உன்ன அடிக்கடி அம்மா கிட்ட கேப்பாங்க.

மதி எப்படி இருக்கான்னு ஜெயா ஆன்டி என்னா சொன்னாங்கன்னு…..”
என்றான் ஆடவன்.

“கண்டிப்பா வர்றேன்…

நானும் அவங்கள ரொம்ப மிஸ் பண்ணேன்….”
என்றவளிடம்,


அப்ப திருமதி ப்ரஸ்ல தான் வேலையா உனக்கு?….

ஏன் என்ன ஆச்சு?…

ஐ‌.டி ஃபீல்டு இப்ப நல்லா டாப்ல தானே இருக்கு?….”

என்று அவளின் இருப்பிடத்தை உறுதி செய்ய வினவினான் வருண்.

“இருக்கு தான்….

ஆனா சிட்யூவேஷன்…

இதுல வந்துட்டேன்….

பட் சிட்யூவேஷன்னு சொல்றத விட இப்ப இந்த ஜாப் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு……”

என்று ஹைல்மெட்டை அணிந்துக் கொண்டு பறந்து விட்டாள் மதி….

அவள் சென்றதும் பறக்கும் முத்தம் ஒன்றை அவளுக்கு கொடுக்க சொல்லி காற்றிற்கு வழங்கியவன்,

  “செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் துள்ளுதடா.…..”

என்று பாடிக்கொண்டு வீட்டிற்குள் நுழைய,

   “என்ன ப்பா மீட்டிங் முடிஞ்சதா?….

இப்ப எங்க நேரா திருமதி ப்ர்ஸுக்காக?…..”

என்று ரேணுகா வினவ,

   “அம்மா ன்னா அம்மா தான்…..

ஆமா திருமதி ப்ரஸ்க்கு தான்….

ஆனா நேரா ப்ரஸுக்கு இல்ல….

ஆபிஸுக்கு போறேன்…..

ஷில்ஃபா கிட்ட ஃப்ராஜெக்கு ஹெட்டா வேண்டாம்னு சொல்ல போறேன்…..

அனிதா க்கு இந்த ப்ராஜெட்க்க ரெக்கமண்ட் பண்ணிட்டு அவளோட இந்த ப்ராஜெட்க்ல சேர்ந்துக்க போறேன் ….”

என்று உடையை கழட்டி வீச,

  “அடப்பாவி ப்ராஜெக்ட்டே வேண்டாம்னு சொல்ல போறியா?…

ஏன்டா இப்படி பண்ற?….

என்று குளிக்க சென்றவனை வினவ, ஆனால் அவனோ அன்னை கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல்,

  “அப்புறம் ஆர்வக்கோளாறுல உன் ஃப்ரண்ட் கிட்ட மதி இங்க தான் இருக்கான்னு சொல்லிடாத…..

அவ ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டா……”

என்று தன் காரியத்தை மட்டும் பேசி விட்டு செல்லும் மகனை கண்டவர், ரொம்ப ஹேப்பியா இருக்கான். நாம எதுவும் சொல்லி அவன டவுன் பண்ண வேண்டாம்.

மதி மூலமா

உண்ம தெரிஞ்சா அவனா விலகிடுவான்…

ஒரே ஒரு பையன வச்சுட்டு தேவ இல்லாம வில்லியாக வேண்டாம்….. என நினைத்தவராக அவனுக்கு உணவை தயாரிக்கும் வேலையில் இறங்கினார் ரேணுகா.

5 thoughts on “தட்டாதே திறக்கிறேன் -3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *