ஆடி மாதக்காற்றின் அசைவில் கிளைகளின் ஆட்டங்கள் அந்த புர மஞ்சள் நிற அழகிகளை போல காட்சியளிக்க, செதுக்கப்படாத சிலையாக ஓவியங்கள் தோற்று போகும் ஒப்பற்ற ஒய்யாரத்தில் ஒப்பனைகள் ஏதுமின்றி அழகு மேகங்களுடன் பத்து மணி வெயிலில் உலா வந்து கொண்டிருந்தான் கதிரவன்….
சுள்ளென்று அடித்த வெயிலில் தண்ணீரை ஊற்றி விட்டு தான் மீண்டும் தன் இருசக்கர வாகனத்தில் அமர முடியும் போல என குமார் புலம்பி கொண்டிருக்க, காலை பொழுதில் பானுமதியை வழியனுப்பி விட்டு பாடிய பாடலின் (அதான் செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் துள்ளுதடா) இசையை விசில் அடித்துக் கொண்டே அவன் அருகில் நிறுத்தினான் வருண்.
கனகாம்பரம் பூவின் நிறத்தில் ஃபார்மலான ப்ளேன் சட்டையும் அந்த சட்டையின் நிறத்திற்கு ஏற்ப கருப்பு நிற நயகரா பேண்டும் அணிந்த வண்ணம் கருப்பு நிற புது கைகடிகாரத்தில் ஆண்களின் சகவாசமே வேண்டாம் என செல்லும் பெண் கூட தன் நாசியில் நறுமணத்தை பிடித்துக் கொள்ளும் படியான அடர் பாடி ஸ்ப்ரேயும் அடித்து கொண்டு கே.கே இன்ட்ரீயிரஸில் நின்றவனை கண்ட குமார்,
“என்னடா படு ஜோரா இருக்கே…..
ஏதும் கல்யாணத்துக்கு போகுற வேல இருக்கா?…
பெர்மிஷன் போடப் போறியா?….”
என்று வினவ,
“இல்லடா புது ப்ராஜெக்ட் க்காக திருமதி ப்ரஸ்க்கு போகனும்ல….
அதான் கொஞ்சம் அழகா வந்திருக்கேன்…..”
என்று ஹெல்மெட்டை கழட்டிட,
“ஓஹ் அப்ப ஷில்ஃபா ப்ரோபசல அக்ஸப்ட் பண்ணிக்க போறியா?…
அது சரி…..
ஷில்ஃபாவ போய் பிடிக்காத பசங்க யாராவது இருக்காங்களா?…
அதுவும் அவ்ளோ அழகான பொண்ணு வந்து ப்ரோபசலும் கொடுத்து ப்ராஜெக்ட்டும் குடுத்தா யாராவது வேண்டாம்னு சொல்வாங்களா?…..
என்று குமார் கிண்டலாக வினவிட,
ஆனால் வருண் ஹெல்மெட்டை தலையில் இருந்து கலட்டியதால் லேசாக குலைந்து போன தன் அடங்கி கிடந்த முடியை கைக்குட்டையால் துடைத்து சீர் செய்தவன்,
“நோ நோ நான் திருமதி ப்ரஸ்க்கு போகனும்னு தான் சொன்னேன்.
அதர்வைஸ் ஐயம் கோயிங் டூ ரிஜெகட் ஹெர்…”
என்றான் மிடுக்காக….
வருணின் இவ்வுரையை கேட்ட குமார் ஒரு நொடி புரியாமல் விழித்தான்.
“எது ரிஜெகட் பண்ண போறியா?…
நீ ரிஜெகட் பண்ணா அப்புறம் எப்படி டா ப்ராஜெகட்ல இருப்ப…..
அவள நீ ரிஜெகட் பண்ண கோபத்துல அவ உன்ன டெர்மினேட் பண்ணை கூட சேன்ஸ் இருக்கு வருண்….
தேவ இல்லாம ரிஸ்க் எடுக்காத.
சொன்னா கேளு….”
என எச்சரித்தான் ஒரு தோழனாக…
ஆனால் வருண்,
“ஜஸ்ட் வெயிட் அன்ட் வாட்ச் மேன்…..”
என்று கூறியவனாக கே.கே இன்ட்ரீயிரஸ் அன்ட் டிசைனர்ஸ் எனப்படும் அவர்களின் அலுவலகத்திற்குள் நான்கு கால் பாய்ச்சலில் நுழைந்தான் வேகமாக.
ஏனெனில் இன்னும் பத்தே நிமிடங்களில் நேற்று ஷில்ஃபா கூறிய ப்ராஜெக்ட் பற்றிய கலந்தாய்வு நடைபெற இருப்பதால் தன் அடையாள அட்டையை கொண்டு பயோ என்ட்ரி வைத்தவன், மடிக்கணினி கொண்ட தன் பையை தன் இருப்பிடத்தில் வைத்து விட்டு அனிதாவை கண்டான்.
அவளும் அவனை தீர்க்கமான ஒரு பார்வையுடன் கண்டவள் மீட்டிங் ஹாலிற்குள் நுழைய, அங்கே ஏற்கனவே கே.கே இன்ட்ரீயிரஸின் முதல்வரும், அவருடைய உதவியாளரும் மற்றும் ஹெர் ஆர் எனப்படும் ஷில்ஃபாவும் என மூவர் அமர்ந்திருக்க, வரிசையாக வந்து ஒரு பத்து பேர் அமர்ந்தனர்.
ஷில்ஃபா வருணை நன்றாக கூர்ந்து கவனித்தாள்.
தன் அலைபேசியில் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
ஆனால் வருணிடம் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அவள் அனுப்பிய குறுஞ்செய்தியை கண்டு விட்டு சாதாரணமாக அமர்ந்திருக்க, ஏதோ அங்கே அவளின் பெண்மை அடிவாங்கியதை போல ஒரு உணர்வு உண்டானது.
ஆக இவன் தன் காதலை ஏற்றுக் கொள்ள வில்லை என முடிவுக்கு வந்த ஷில்ஃபா தன் ஒரு தலை காதலால் எழுந்த துக்கத்தை மனதில் மறைத்துக் கொண்டு,
“நவ் ஐயம் ஈகர்லி கோயிங் டூ அன்னௌன்ஸ் தி எயித் ஃப்ராஜெக்ட் ஆஃப் அவர் கம்பெனி…..”
என உரையை தொடங்கியவள், இதுவரை எடுக்கப்பட்ட ஏழு ப்ராஜெக்ட்களும் அது முடிக்கப்பட்ட கால நேரங்களையும் குறித்து தகவல் தந்தவள் இப்போது எட்டாவதாக திருமதி வார இதழை பற்றி தெரிவித்தாள்.
அதற்கு தலைமையாக ஏற்கனவே இரண்டு மூன்று முறை ப்ராஜெக்ட்களில் இருந்து பணியாற்றிய மற்றும் சிறந்த பங்களிப்பாளர் என்று விருதை பெற்ற அனிதாவிற்கு தருவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், அனிதா இதை சிறப்பாக வழி நடத்துவாள் என நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தன் உரையை முடிக்க, அங்கிருந்த பத்து பேரில் மூவரை தவிர மற்ற ஏழ்வருக்கும் அதிர்ச்சி.
இன்னும் சொல்ல போனால் முதல்வருக்குமே அதிர்ச்சி தான்.
ஏனெனில் அனிதா இந்த அலுவகத்தில் இணைந்து வெறும் இரண்டு வருடங்களே ஆகிறது.
ஆனால் வருண் மூன்றரை வருடங்களுக்கு மேலாக நான்கு ஐந்து ப்ராஜெக்ட்களில் சிறப்பாக பங்காற்றி இருக்க இப்போது ஷில்ஃபா இவ்வாறு கூறவும் அதிர்ந்தனர்.
ஆனால் சில நொடிகளுக்கு பிறகு அனிதாவிற்காக கை தட்டினர்.
மேலும் ஷில்ஃபா,
“நவ் அனிதா உங்க டீம்ல யார் யார் இருக்கனும்னு நீங்களே சொல்லுங்க…
யார் உங்க கூட இருந்தா உங்களுக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கும்?…..”
என்று கேட்கவும், இதற்காகத்தான் காத்திருந்ததை போல எழுந்த அனிதா,
“கிரிஸ்டினா மேம், குமார் சார் அன்ட் வருண் சார்…..
இவங்க மூனு பேரும் நல்லா எக்ஸ்பீரியன்ஸ்டு கைஸ்…..
சோ இவங்க என் கூட இருக்குறது எனக்கு கன்வீனியன்ட்டா இருக்கும்….”
என்று கூறிட, ஷில்ஃபா வருண் வேண்டாம்.
அவனுக்கும் கிறிஸ்டினா விற்கும் அலுவல பணி இருப்பதாக தெரிவித்தாள்.
ஆனால் அனிதா அவர்கள் தான் வேண்டும் என்றிட, ஷில்ஃபாவால் ஏதும் கூற முடியவில்லை..
ஆதலால் அனிதாவிடம் ப்ராஜெக்ட்கான கோப்புகள் வழங்கப்பட்டது.
இன்ட்ரீயிரஸின் முதல்வர் அவளுக்கும் அவளுடன் பணிபுரிய இருக்கும் மற்ற மூவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இன்றிலிருந்தே அவர்களின் வேலையை தொடங்குமாறும் அவர்களை சைட்டிற்கு செல்லுமாறு பணிக்க, வருணிற்கு ஏகாபோக மகிழ்ச்சி.
வெளியே வந்ததும் முதல் ஆளாக அனிதாவிற்கு நன்றி கூறினான்.
ஆனால் அனிதாவோ,
“என்ன ப்ரோ நீங்க. எனக்கு போய் தேங்க்ஸ் சொல்றீங்க?….
ஆக்சுவலா நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்….
நீங்க மட்டும் மேம்க்கு ஓகே சொல்லியிருந்தா இது உங்களுக்கு கிடைச்சிருக்கும்…
பட் நீங்க எனக்கு விட்டுக் கொடுத்திருக்கீங்க….”
என்று அவனை கட்டிக் கொள்ள, இங்க என்ன நடக்குது என கேட்டான் குமார்.
“அது ஒன்னும் இல்ல ப்ரோ மார்னிங் ஆஃபீஸ்க்கு கிளம்பிட்டு இருக்கும் போது வருண் ப்ரோ ஷில்ஃபா மேம் போட்ட கண்டிஷன சொன்னாரு…
அன்ட் அவருக்கு இந்த ப்ராஜெக்ட் கண்டிப்பா ஒரு அப்கிரேடா இருக்கும். பட் ஷில்ஃபா கண்டிஷனுக்கு என்னால ஓகே சொல்ல முடியாது.
பொய் சொல்லி அப்புறம் பின்னாடி கூட பிரேக் அப் பண்ணிக்கலாம்.
பட் நான் அத செய்ய விரும்பல…..
சோ இந்த ப்ராஜெக்ட்ட நீ எடுத்துக்கோ….
ஷில்ஃபா என்ன கோபத்துல டெர்மினேட் பண்ணாம இருக்க இந்த ப்ராஜெட்க்ல சேர்த்துக்க….
கொஞ்ச டைம் இருந்தா போதும் நான் வேற வேலைய கரெக்ட் பண்ணிடுவேன்னு கேட்டுக்கிட்டாரு…
என்றிட, இவர்களுடன் கிறிஸ்டினாவும் இணைந்து திருமதி அச்சகத்திற்கு கிளம்பினர்.
திருமதி வார இதழ்…..
எடிட்டர் பானு….
“கதையின் நிகழ்வுகளை வண்ணமயமாக காட்சிப்படுத்தும் உங்கள் அற்புத எழுத்தாணிக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்…..”
என்ற விமர்சனத்தை படித்த பானுமதி,
அடுத்ததாக,
“கதைக்குள்ள கதை….
மிகவும் அருமை சகோதரி…..
நீங்க ஷேக்ஸ்பியரோட ஃபேனா இருக்கனும்னு நினைக்கிறேன்…..
என்ற அடுத்த விமர்சனத்தை படித்தவள் சிரித்தபடி அதை குறித்து கொண்டாள்.
“மதி மேத்யூவுக்கு கதை மூலமா எல்லாத்தையும் விளக்க போறா…..”
என S.B எனப்படும் எழுத்தாளர் எழுதிய மேத்யூ vs மதி என்ற கதைக்கு வந்த தபால் விமர்சனங்களை படித்துக் கொண்டிருந்த பானுமதி அதில் முக்கியமான விமர்சனங்களையும் கதையை படிக்காத வாசகர்களை கூட இறுதி பக்கத்தில் குறிப்பிடப்படும் இந்த விமர்சனங்களின் மூலம் விளம்பரம் செய்ய குறித்துக் கொண்டு இருக்க மரகதம் அவள் முன் நின்றாள்.
வந்தவள் குட் மார்னிங் பானு….. என மதியிடம் காலை வணக்கம் வைக்க, குட் மார்னிங் டி என்ற பானு மீண்டும் வேறு வேறு தபால்களை படித்தாள்.
“என்ன கதைக்கான விமர்சனங்கள பாத்தாச்சா?….
மோடிவேசன் கதை பகுதிக்கு பரிசு கதைய ஏதாவது தேர்வு செஞ்சிருக்கியா?….”
என்று வினவ,
“ம்ம் மூனு கதைய தேர்வு செஞ்சிருக்கேன்…..
அதுல இரண்டு ஆண்கள் சம்பந்தப்பட்டது…
மற்றொரு ஒரு பெண்களை சம்பந்தப்பட்டது……
இதில எத தேர்ந்தெடுப்பதுன்னு கொஞ்சம் குழப்பமா இருக்கு….”
என பானுமதி கூறிட,
இதில் என்ன குழப்பம்?….
இந்த வார இதழ் பெண்கள் சம்மந்தப்பட்டதும் பெண்களுக்குமான வார இதழ் டி….
அதனால பெண் சம்பந்தப்பட்ட கதையே போடு…
அதுக்கே பரிசையும் அறிவிப்பு செய்….”
என்றிட,
“இது வழக்கமான செயல் மரகதம்….
இந்த வார இதழ் பெண்களுக்கானதாக இருந்தாலும் ஆண்களும் இந்த இதழ படிக்கிறாங்க மரகதம்…
எப்பவும் பெண் சுதந்திரம், பெண்ணுரிமை, ஆண்கள் அடக்குமுறையிலிருந்து வெளி வரனும் இது போன்ற கதைகளே போடுறதால படிக்கும் ஆண் வாசகர்களுக்கு மனம் குன்றும், படிக்குற ஆர்வம் குறைய வாய்ப்பு இருக்கு.
அதனால ஒரு பெண் எழுத்தாளர் ஒரு ஆணை பற்றி உயர்வாக கூறிய ஒரு மோடிவேசன் கதைய தான் நான் தேர்ந்தெடுக்க நினைக்கிறேன்….
ஆனா அதற்கு உங்க சித்தி என்ன சொல்றாங்க்ன்னு தெரியல….”
என்று அவள் கூறிக் கொண்டு இருக்கும் போது,
“செம சூப்பர் சூப்பர் பானு.
வெல் செட்..
ஆண்களுக்கும் மனம் உண்டு என யோசிக்குற உன் சிந்தனை மிகச்சிறப்பு”
என கை தட்டினான் வருண்.
அந்த இடத்தில் திடீரென வருணை கண்ட பானுவிற்கு லேசான அதிர்வை தந்தது….
ஆனால் வெளிக் காட்டிக் கொள்ளாத பெண்ணவள் வருண் நீங்க இங்க என வினவ, அவனுடன் அனிதாவும் இணைந்து வந்தாள்.
வந்தவள் நேராக மரகதத்திடம்,
“நாங்க கே.கே இன்ட்ரீயிரஸ்ல இருந்து வர்றோம்….
அகல்யா மேம பாக்கனும்….
பட் ரிஷெப்சன்ல உங்கள பாக்க சொன்னாங்க.
அதான் இங்க தேடி வந்தா இவங்க வருண் சாரோட ஃப்ரண்ட் போல….”
என எதார்த்தமாக கூறிட, அவளுக்கு முன்னால் இருந்த இரண்டு பெண்களும் அவளின் கூற்றை நம்பி விட்டனர்.
ஆனால் வருணுக்கு பின்னால் இருந்த குமார்,
“ஓஹ் இதான் காலையில சொன்ன அந்த கரெக்ட் பண்ற வேலையா?…..”
என்று வினவ, ம்ம் என்று கண்களை சிமிட்டினான் வருண்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Interesting
💕💕💕💕💕💕💕😍😍😍😍😍😍😍
Interesting next varun oda step enathu