Skip to content
Home » தட்டாதே திறக்கிறேன் -6

தட்டாதே திறக்கிறேன் -6

வருண் கூறியதை கேட்ட குமாருக்கு ஒரு நொடி ஏதோ போல ஆகிவிட்டது.

மதி என்ற அழகான பெண்ணுக்குள்ளே இப்படி ஒரு கதை இருக்கிறதா என்று.

எனவே தொடர்ந்து கதை கூறும் வருணை அவன் நோக்கிட,
“சின்ன வயசுல அவ சொன்ன விஷயம் ஆணி அடிச்ச மாதிரி எனக்குள்ள நல்லா பதிந்திருச்சு.

நான் தான் அம்மா கூட சண்ட போட்டு எனக்கு அம்மா இல்லாம போச்சு.

ஆனா நீ உன் அம்மாவ  பத்திரமா பாத்துக்கோன்னு மதி சொன்ன மாதிரி இருந்தது.

அப்ப இருந்து எங்க அம்மா கிட்ட பேருக்கு கூட நான் சண்ட போட்டதில்ல.

அம்மா கிட்ட என்ன கௌரி அக்கா கிட்ட கூட சண்ட போட மாட்டேன்.

அன்ட் எங்க அம்மாவ பாக்கும் போதெல்லாம் எனக்கு அவங்கள கை காட்டுன மதியோட நியாபகம் தான் வரும்.

அதனால அவள என்னோட பெஸ்ட் அன்ட் ஃபேவரைட் ஃப்ரண்டா மாத்திக்கிட்டேன்.

எங்க அப்பா எனக்கு வாங்கிக் கொடுக்குற காட்பரில இருந்து, எங்க ஸ்கூல்ல நான் கீழ விழுகுறது முதற்கொண்டு அவக் கிட்ட ஷேர் பண்ணிப்பேன்.

அவளோட தான் விளையாடுவேன்….

அவளும் தான்…

அவ வாங்குற ரேங் ல இருந்து, அவ வின் பண்ற ப்ரைஸஸ், அவ எழுதுற குட்டி குட்டி அம்மா கவித, அவளுக்கு கிடைக்கிற ஃபர்ண்ட்ஸ், அவள யாராவது ஏரியால டிஸ்டர்ப் பண்ணா அவங்க கிட்ட என்ன கூப்டு போய் அடிக்க விடுறது, ப்ராப்ளம் வந்தா ஓடி வந்துறதுன்னு அவளும் என் கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்பா…..”
என்று குமாரிடம் கூறியவன் ஒரே ஒரு விஷயத்த தவிர என்பதை தன் மனதோடு புதைத்துக் கொண்டான்.

ஏனெனில் அதை வெளி நபரிடம் கூறும் அளவிற்கு ஆரோக்கியமான பகிர்வு இல்லையே….

அதனால் தான் மதியே அவனிடம் மறைத்து விட்டாள்.

ஆனால் தடுக்கி விழுந்தால் வருண் வீட்டு காம்பௌண்டில் விழும் அளவிற்கு பக்கத்து வீட்டில் இருப்பதால் அவள் மறைத்த அந்த ஒரு விஷயமும் ஆடவனுக்கு தெரிந்து விட்டது.

ஐந்தாம் வகுப்பை படிக்கும் மதிக்கு பத்தாம் வகுப்பை படிக்கும் வசந்த் என்னும் அவளின் மாமனின் மகன் தந்த முத்தம் அவனை அவர்களின் இல்லத்தில் இருந்து விடுதிக்கு மாற்றிவிட காரணமான பிறகே தெரிய வர, அதுவும் அவனின் அன்னை மூலமாக வெளி வந்தது.

“இதுக்கு தான் பொம்பள பிள்ளைங்களுக்கு பெத்தவங்க இருக்கனும்ங்கிறது…

அவங்க இருந்திருந்தா மதிக்கு இவ்ளோ இன்செக்யூர் ஃபீல் வந்திருக்காது….

உங்க அம்மா அவளுக்கு அது சொல்லித் தர்றேன். இது சொல்லித் தர்றேன்னு அவ ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டா போல.

வசந்த் ஏதோ ஒரு சின்ன பொண்ணுன்னு ஆசையில முத்தம் கொடுத்திருப்பான்…

இதுக்கு போய் எதுக்கு அவன ஹாஸ்ட்டல்ல எல்லாம் சேர்த்து விடுறீங்க?

பாவங்க வசந்த் நமக்கு ஒரே ஒரு பையங்க…..”
என்று மதியின் அத்தை ஜெயா என்பவர் தன் கணவர் சிவாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்க,
   “சின்ன பொண்ணுன்னு ஆசையா முத்தம் கொடுக்கிறதா எங்க கொடுக்கும் டி….

இங்கயா?..
இல்ல இங்கயா?… என்று முதலில் கன்னத்தை காட்டி விட்டு பிறகு உதட்டை காட்டிட, ஜெயாவிடம் பதில் இல்லை.

“அவ சின்ன பொண்ணு தான்.
நான் இல்லன்னு சொல்லல…

ஆனா வசந்த் சின்ன பையன் இல்லையே?….

ஹீ இஸ் இன் டென்த் ஸ்டான்டர்ட்….

மதிய கிஸ் பண்றதுக்கு ஃபோர்ஸ் பண்ணியிருக்கான்..

பாவம் அவ பயந்துட்டா…..”
என்றிட, ஜெயாவிற்கு இதற்கு மேல் தன் கணவரிடம் மறைக்க ஒன்றும் இல்லை என்று அமைதியாகி விட்டார்.

ஏனெனில் சிவா தன் அன்னை மதியின் அழுகையை பற்றி மேலோட்டமாக கூறவும் தனியே அழைத்துச் சென்று விசாரத்து விட்டாரே…

அதில் மதி என்னென்ன கூறி விட்டிருப்பாள் என்று ஜெயாவிற்கும் தெரியும் தானே…

ஆனாலும் பெற்ற மகனுக்காக ஒன்றே ஒன்று கேட்டார்..

“ஏங்க அவளுக்காக நம்ம பையன கொண்டு போய் ஹாஸ்ட்டல்ல விடுவீங்களா?…

இந்த நேரத்துல அவனுக்கு அன்பும் அக்கறையுமான அறிவுர தான் வேணுமே தவிர ஹாஸ்ட்டல் தேவ இல்லங்க.

வேணும்னா மதிய ஏதாவது கேர்ள்ஸ் ஹாஸ்ட்டலுக்கு அனுப்…..”
என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ஜெயாவின் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.

“மகன் பண்ணது தப்பா தெரியல, அவன சரியா வளக்கலன்னு உறுத்தல் இல்ல…

சரி இனிமேலாவது அவன் ஒழுங்கா இருக்கட்டும்னு மிலிட்டரி ஹாஸ்ட்டல்ல போடலாம்னு சொல்லும் போது அமைதியா இருக்காம….

பாவம் சின்ன பொண்ணு அம்மா அப்பாவ இழந்துட்டு பயந்து நிக்குற புள்ளைய கொண்டு போய் ஹாஸ்ட்டல்ல விட சொல்றியே நீயெல்லாம் பொம்பள தானா?….”
என்று தங்கை மகளுக்காக மனைவியை வெளியே இருக்கும் தோட்டத்தில் வைத்து அடித்துவிட, அதை கறிவேப்பிலை பறிக்க வநத ரேணுகா கண்டு விட்டார், கேட்டும் விட்டார்.

“எங்க அந்த வசந்த் பையன் ஆளையே காணோம். மூனு நாள் ஆச்சு பாத்து

கிரிக்கெட் டோர்னமெண்ட்க்கு ஏதாவது போய்ட்டானா?.

டென்த் ஆச்சே……”
என்று ரேணுகாவின் கணவர் அதான் வருணின் தந்தை பிரசாத் வினவியதற்கு வருண் உறங்கி விட்டான் என நினைத்து நடந்ததை கூறியும் விட்டார் ரேணுகா…

அப்போது தான் வருணுக்கும் இந்த செய்தி தெரியவந்தது….

அன்றிலிருந்து தனக்கு அன்னையின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுத்த மதிக்கு காலம் முழுக்க, அன்னையாகவும் தந்தையாகவும் இருக்கவும் இனி வரும் காலங்களில் அவளுக்கு தானே பாதுகாப்பாக இருக்கலாம் என்று நினைத்திருந்தான் வருண்.

ஏனெனில் இச்சம்பவம் நடைபெறும் பொழுது வருணும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனாகத் தான் இருந்தான்.

ஆகவே அவனுக்கு எட்டிய அறிவிற்கேற்ப மதிக்கு மட்டும் அன்னையோ தந்தையோ இருந்திருந்தால் தன் வீட்டில் இருக்கும் தமக்கையை போல பாதுகாப்பாக இருந்திருக்கலாம்…. என்பது அவனின் கணிப்பு.

ஆனால் அதற்கு சிறிது கூட இடம் கொடுக்காமல் அச்சம்பவத்திற்கு பிறகு மதி வசந்த் மட்டுமல்ல வேறு எந்த ஆண் நபர்கள் இன்னும் ஏன் ஆண் நண்பனான வருணை கண்டால் கூட ஓடி ஒளிந்து விட, இவன் தான்
ஏய் மதி!
ஏய் மதி!
விளையாட வா… என்று கத்திக் கொண்டிருப்பான்.

ஆனால் மதி வெளியே வரவே மாட்டாள்…

அவளின் பாட்டி தான்,
  “அவ தூங்கிட்டா வருண்….

அவ ஹோம் வொர்க் எழுதுறா வருண்….”
என்று சமாளிக்க, ஒரு சில நாட்களுக்கு அவர்களின் நட்பு அதுவாகவே பிரிந்து விட்டது.

ஆனால் அவ்வப்போது பார்த்து கொண்டால் குறைவாக பேசி விட்டு செல்வாள், பெண்களான கௌரி மற்றும் ரேணுகாவிடம் மட்டும் நன்றாக கதைத்து கொள்வாள்.

வருணிடம் அதிகமாக உறவை வளர்த்துக் கொள்ள வில்லை.

இதனால் வருணுக்கும் தேடிச் சென்று அவளிடம் நட்புறவை வளர்த்துக் கொள்ள மனம் வரவில்லை.

ஆனால் அன்று தான் அவன் ஆழ் மனதில் உறங்கிக் கொண்டிருந்த காதல், காமம், பாலின ஈர்ப்பு என அனைத்து உணர்வுகளும் எழுந்து அவனுக்கு மதி யார் என காட்டியது.

வேறு ஒன்றும் இல்லை..

மதி பண்ணிரெண்டாம் வகுப்பின் ஆண்டு விழாவிற்காக பால் வண்ணம் கலந்த பன்னீர் ரோஜா இதழில் வேலைப்பாடுகள் ஓரளவுக் கொண்ட டிசைனர் புடவையில் பள்ளிக்கு கிளம்புவதற்காக தன் மாமாவின் மகிழுந்தில்  ஏறிக் கொண்டு இருக்க, இன்ஜினியரிங் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவனாக இருந்த வருண் தன் தந்தையின் இருசக்கர வாகனத்தில் கிளம்பி கொண்டிருந்தவன் அவளைக் கண்டதும் தொபுகடீரென அவள் அழகில் விழுந்து விட்டான்…

அதன் பின்னர் அவளை அவன் பார்க்கும் பார்வையும் மாறி விட்டது.

சிறு வயதில் இருந்தே ஏதோ ஒரு விதமான ஈர்ப்பு அவள் மேல் ஆடவனுக்கு இருந்து வந்தது தான்.

ஆனால் இடைப்பட்ட காலத்தில் நட்புறவில் இல்லாமல் போகவும் சற்றே தொலைந்து போன ஈர்ப்பு மீண்டும் காதலாக வந்து ஒட்டிக் கொள்ள, என்ன வருணால் மதியிடம் சாதாரணமாக கதைக்கத்தான் முடியவில்லை…

அவனாக கதைக்க சென்றாலும் ஓரிரு வார்த்தைகளுடன் விலகிடவே பெண்ணவள் நினைப்பாள்.

ஆகவே நெருங்குகிறேன் என்ற பெயரில் அவளை சங்கடத்திற்கு ஆளாக்காமல் தூரத்தில் இருந்து கண்டு அவளை கண்டு ரசிப்பதோடு நின்று கொள்வான்…

வெளியே இரு வீடுகளுக்கும் பொதுவான தோட்டத்தில் நின்றபடி கௌரியிடம் அவள் கதைக்கும் போது அவளின் குரலை கேட்டுக் கொள்வான்.

தான் இல்லாத நேரத்தில் அவள் தன் இல்லத்திற்கு வந்திருந்தால் சப்தமில்லாமல் தன்னறைக்குள் சென்று இருந்து ஒளிந்து விடுவான்…..

இப்படியாக சென்ற இவர்களின் வாழ்க்கையில் அக்குடும்பம் பிரசாத்தின் இடமாற்றத்திற்காக இங்கு வந்து விட்டது.

அதன் பிறகு ஆடவன் தனக்கொரு வேலை என்றானப்பின் பெண்ணவளிடம் தன் மனதை சொல்லி விடலாம் என்று தான் நினைத்தான்.

ஆனால் கௌரியின் திருமணத்தன்று குடும்பமாக இணைந்து வந்திருந்த சிவாவின் இல்லத்தினர் அடுத்ததாக வசந்ததிற்கும் பானுமதிக்கும் திருமணம் என்று கூறி விட, ஆடவன் பச்சை நிற பட்டு சுடிதாரில் கௌரியின் தோழிகளிடம் கதைத்து கொண்டிருந்த மதியை கண்டான்….

அழகி……

என்றும் அழகு தான் இவள்…

ஆனால் எனக்கானவள் இல்லை என்று மனதில் அப்படியே தன் காதலை பூட்டிக் கொண்டவன் இரண்டு வருடத்திற்கு பிறகு ஜெயாவின் மூலம் வசந்திற்கு நிச்சயம் என்று கேள்வி பட்டான்.

ஆனால் அந்த நிச்சயம் மதியுடன் அல்ல வேறு பெண்ணுடன் என்று தெரிந்துக் கொண்டவனுக்கு மதி என்ன ஆனாள் என்ற சந்தேகம் எழுந்தது…

அமெரிக்காவில் புகுந்த இல்லம் சென்ற கௌரிக்கும் அந்த ஐயம் எழுந்தது…

ஆனால் ரேணுகாவிடம் இருந்து பதில் தான் வரவில்லை.

“கேட்கல அவங்க கிட்ட…

அவ பையன பத்தி சொன்னா அது மட்டும் தான் கேட்டேன்…..”
என்று முடித்து கொள்ள அடுத்த ஒரு வாரத்தில் அவன் கண் முன்னே வந்து நின்று விட்டிருந்தாள் பானுமதி…

இறந்த கால கதையில் முதல் பாதியை குமாரிடம் பகிர்ந்துக கொண்ட வருண் மறுபாதியை மனதிலேயே அசைப் போட்டப்படி தான் வந்த வேலையில் கவனம் செலுத்தினான்.

அகல்யா என்று அழைக்கப்படும் மரகதத்தின் சித்தியிடம் தங்களின் வடிவமைப்பை பற்றி விளக்கியவர்கள் அதற்கான பொருட்கள் வந்து இறங்கவும், நாளை முதல் வேலையை தொடரலாம் என்று ஏழு மணி இரவில் அலுவலகத்தில் இருந்து பார்க்கிங்கில் நின்று கொண்டு இருந்த நேரத்தில் மழை வெளுத்து வாங்க,
  துக்கம் இல்லாத உலகுக்கு
உன் தோள்களில் சுமந்து சென்று விடேன்.…….
லாஸ்ட் லைன் ரொம்ப அருமை மேம்…..

எப்படி மேம் இப்படி எல்லாம் கவிதை எழுதுறீங்க.

பிரிண்ட் பண்ணும் போது பாத்தேன்….”
என்று மதி வேலை பார்க்கும் அச்சகத்தை சேர்ந்த ஒரு பெண் மதியிடம் கூறிக் கொண்டு இருக்க, தேங்க்ஸ் என்ற மதி அவர்களை கவனிக்கும் வருணை கண்டாள்.

அவனுடன் அருகில் குமாரும் நின்றிருக்க,
  “அது என்ன கவித…
சொன்னா நாங்களும் கேட்போம் தானே.

போரும் அடிக்காது….”
என்று குமார் வினவ, அதற்கு மதியின் அருகில் நின்றிருந்த பெண் ஏதோ கூற வந்தாள்.

ஆனால் மதி,
   “இன்னும் ரெண்டு நாள்ல இதழே வெளி வந்திடும்…

அத வாங்கி பாருங்க…..

என்னோட கவித அதில இடம் பெற்றிருக்கும்……”
என்று பெண்ணவள் கூறிட….

அடுத்த எபில அந்த கவித என்ன்னான்னு நாமலும் பாக்கலாம்.
 

5 thoughts on “தட்டாதே திறக்கிறேன் -6”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *