Skip to content
Home » தட்டாதே திறக்கிறேன் -7

தட்டாதே திறக்கிறேன் -7

சுட்டெரிக்கும் சூரியனை ஒய்வெடுக்க கூறிவிட்டு நிலவு மகளை செவ்வானம் தன் காவலாளியாக மாற்றிக் கொள்ள மலர்களின் வாசனையும் மண்ணின் வாசனையும் கலந்த சுகந்தமான நறுமணத்தை வந்து அளித்தது மாலை வேளை.

ஆனால் அதை ரசிக்கத்தான் நேரமில்லாமல் போன இப்பூலோக வாசிகள் செயற்கை விளக்குகளை எரிய விட்டு விட்டு மிச்ச சொச்ச வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருக்க, வார இறுதியான சனிக்கிழமை அன்று கட்டிட சீரமைப்பிற்க்காக வந்திருந்த ஊழியர்கள் வார சம்பளத்தை பெற்றுக் கொண்டிருந்தனர் வருணிடம்….

“டீம் ஹெட் அனிதா தானே….

அவ எங்க போனா?…

அவ கிட்ட இந்த பொறுப்ப தராம நீங்க ஏன் இதெல்லாம் செய்யுறீங்க?….”

என்று கேட்டவாறு மடிக்கணினி பையை இடைவாக்கில் மாட்டினாள் கிறிஸ்டினா.

கேட்ட பெண்ணவளுக்கு சிரிப்பை பதிலாக தந்தவன்,

“திங்கட்கிழமை எல்லாம் வால் டிசைனிங்கஸ் வந்து இறங்கிரும்…

அத ஒன் வீக்ல முடிச்சிட்டு நெக்ஸ்ட் ரூஃப் டிசைனிங்கஸ் இருக்கு…

சோ மண்டே லீவ் போடாம ஆளுங்கள வர சொல்லியிருங்க சார்…..”

என்று கட்டிட உழியர்களுக்கு மேலாண்மையாளராக இருப்பவனிடம் குறிப்பிட்ட தொகையை அளித்த வருண் அம்மனிதர் சென்றதும்,

“அனிதா நியூ கலெக்ஷன்க்காக நம்ம ஹெட் ஆஃபிஸ் வர போயிருக்கா மேம்…

மதியம் போனது…

வர லேட்டாகும்னு என்கிட்ட தர சொல்லிட்டு போனா…

அதான் நான் தந்தேன்…

அன்ட் இவரோட நான் ரெண்டு ப்ராஜெட்க்ல இருந்துருக்கேன்….

சோ பேமெண்ட் என்ன தான் பேச சொல்லியிருந்தா….

டீம் ஹெட் சொன்னா கேட்டு தானே ஆகனும்……”

என்று வருண் தன் சாம்பல் நிற சட்டையின் கையை மடித்து விட, புக்கு வந்திருச்சு டா என அவனிடம் விரைந்து வந்தான் குமார்….

கையில் திருமதி வார இதழுடன் வந்தவன்,

“அன்னக்கி மதி கூட நின்னுட்டு இருந்துச்சுல ஒரு பொண்ணு அவ கொடுத்தா..‌‌.”

என்று கூறுவும் சட்டென அவனின் கைகளில் இருந்து பறித்தான் வருண்.

அவர்களின் இந்த கூட்டத்தில் இணைய விருப்பம் இல்லாமல் சரி பை வருண், பை குமார் என கழண்டு கொண்டாள் கிறிஸ்டினா.

ஆனால் அவள் செல்வதை கூட காண நேரமில்லாத ஆடவர்கள் ஓகே ஓகே பை என்றவாறு புத்தகத்தில் தலையை விட்டு தேடிக் கொணடிருந்தனர்.

வருண் கூட தன் காதலுக்காக தேடுகிறான் என்று வைத்துக் கொண்டாலும், இந்த குமாரும் இதில் இணைந்து கொள்ள காரணம்

துன்பம் இல்லாத உலகுக்கு

உன் தோள்களில் சுமந்து சென்று விடு……..

என்ற வரி தான்…

அவனின் 90 சதவீத கணிப்பு யாதெனில் கவிதை மற்றும் கதை எழுதுபவர்கள் தன் சொந்த அனுபவங்களில் சற்று கற்பனை கலந்து எழுதுகின்றனர் என்பது தான்.

ஆகவே இந்த மதி என்னும் சிறு பெண்ணுக்குள் அப்படி என்ன துக்கம்…

யாரை தூக்கிக் கொண்டு செல்ல சொல்கிறாள்… என அந்த கவிதையின் ஆதி மற்றும் அந்தத்தை தெரிந்து கொள்ள நினைத்து தேடியவன் ஏதோ நியாபகம் வந்தவனாக,

“அஞ்சாம் பக்கம்னு சொன்னா டா புக்கு கொடுத்த அந்த பொண்ணு…..”

என்று இவ்வளவு நேரமாக புத்தகத்தை புரட்டி எடுத்தப்பின் கூறினான் குமார்.

வருண் தன் நண்பனை நன்றாக முறைத்தான்.

ஆனால் குமார் சரி சரி பாரு… என்று சமாளித்திட, ஐந்தாம் பக்கத்தை எடுத்தான் வருண்….

கதை ஒன்று அதில் இடம் பெற்றிருந்தது…..

அதற்கு ஆகாயத்தாமரை என்று பெயரிடப்பட்டும் இருந்தது.

“என்ன கவிதைன்னு சொன்னாங்க….

ஆனா ஏதோ கத மாதிரி இருக்கு…”

என்று குமார் வினவ,

சட்டென வருண் அதன் எழுத்தாளர் பெயரை கவனித்தான்.

வசந்தி என்று பெயரிடப்பட்டு இருந்தது…

வசந்தியா?…..

நம்ம ஆளு பேரு மதி ஆச்சே….

பானு மதின்னு தான் இருக்கனும்….. என நினைத்தவன்,

“இது வேற ஏதோ எழுத்தாளரோட கத டா….

பாரு எழுத்தாளர் வசந்தின்னு பேரு போட்ருக்கு…..

மதி எழுதன கவித எல்லாம் இதுல இல்ல….”

என்று வருண் தான் கண்டுப்பிடித்ததை வைத்துக் கூறிட, இப்போது குமார் அதே பக்கத்தில் ஏதோ ஒன்றை கண்டு விட்டு  காட்டினான் அவனுக்கு…

“டேய் கத தான் ஆனா இங்க பாரு….”

என்று கதைக்கு இறுதியில் அழுத்தக் கருப்பில் ஒரு தொகுதியாக சாய்வெழுத்தில் இருந்தது ஒரு நீண்ட கவிதை…..

“உன் சேலை வாசம் மறக்கவும் இல்லை.

நீ எனை அள்ளிக் கொஞ்சிய நாட்கள் என் நெஞ்சை விட்டு நீங்கவும் இல்லை…

இன்னமும் வாடுகிறேன்…

நீ இறந்தும் உனை தேடுகிறேன்…

எங்கே சென்றாய் அம்மா?…..

எனை மறந்து!….

இமயம் போன்று இடர்கள் வந்து இதயத்தை நொறுக்குகிறதே….

பல கோடி துன்பங்கள் எனை சூழ்ந்து வதைக்கிறதே….

உன்னுயிர் அளித்து என்னுயிர் தந்தவளே…..

என் துயர் தீர வழி சொல்?….

மீண்டும் குழந்தையாய் மாற்றி உன் மடியில் எனை உன் மடியில் கிடத்திக் கொள்..

இல்லையேல் துன்பம் தீண்டா உலகுக்கு உன் தோளில் சுமந்து கொண்டு சென்று விடு…..

என்று அக்கவிதை இருக்க, இருவரும் தங்களின் மனதுக்குள்ளே மீண்டும் ஒரு முறை அந்த கவிதையை படித்தனர்.

சற்று அழுத்தமான கவிதையாக இருந்தது….

அப்படியே மேலே இருந்த கதையையும் படிக்க, காதல் கதை……

சிறுப் பெண் ஒருத்தி பூப்பெய்தி இருக்கிறாள்…

ஆனால் அதை அவள் மகிழ்வாக எடுத்துக் கொள்ள அவளுக்கு பெற்றோர்கள் இல்லை….

இருந்த போதிலும் வீட்டு வேலைகளை அவள் செய்வதற்கு அவள் தீட்டாக இருக்கக்கூடாதென்பதற்காக அவளுக்கு அவ்வீட்டின் எஜமானி சடங்கு நடத்திக் கொண்டிருக்க இருளடைந்து மூலையில் அமர்ந்திருந்தவளின் முகத்தில் வெளிச்சமாக அவனின் நிழல் பட்டது…

திரும்பி பார்த்தால் உயரமும், ஆகுஜபாவனை உடலோடும் பதினான்கு வயது பெண்ணை கவர்ந்திழுத்திருந்தான் அவளின் எஜமானியின் மகன்.

வருணுக்கு ஒரு நொடி எதுவும் புரியவில்லை….

இவ யார பத்தி சொல்ல வர்றா?….

என்று நினைத்துக் கொண்டு மேலும் படிக்க, அவள் மேல் ஏதோ புடவை ஒன்றை போட்டான் அவன்..

அவளை பார்த்து லேசாக சிரித்து, ஆசிர்வாதம் செய்தான் அவ்விளைஞன்.

நாயகிக்கு அந்த நொடியில் இருந்து அவனின் மீது காதல் வந்து விட்டது.

தன்னை பெண்ணாக அவள் அந்த தருணத்தில் தான் உணர்ந்திருக்க, அதன் பிறகு நாயகனை விரட்டி விரட்டி காதல் செய்கிறாள்…

அவனே அவள் உயிர் என்று வாழ்கிறாள்…

அவனுக்காக பணிவிடைகளை பார்த்து பார்த்து செய்கிறாள்….

அவனும் இளம் வயது வேலைக்காரி என்று அவ்வபோது சிரித்து விட்டு கடக்க, நாயகி அவனும் தன்னை விரும்புகிறான் என்று நினைத்து வலம் வரும் நேரத்தில் அன்று மீண்டும் ஒரு முறை புத்தம் புதிய புடவையுடன் வந்து நின்றான் அவன்.

நாயகிக்கு கைகால்கள் உதறியது….

நன்றாகத் தெரிந்தது புது புடவை என்று…

ஆனால் தனக்கெதற்கு என்று நினைத்தவள் ஒரு வேலை நாடகங்களில், திரைப்படங்களில் வரும் காட்சிகளில் ரோஜாப்பூ, விலையுயர்ந்த மோதிரங்கள் அளித்து அவரின் காதலை சொல்லப் போகிறாரோ என நினைத்துக் கொண்டு நிற்க, ஆனால் அவனோ அவனின் அவசர திருமணத்திற்காக அவளுக்கும் சேர்த்து எடுத்த புடவையை தன் வீட்டில் வாழும் ஒரு ஜீவன் என்ற ரீதியில் அளிக்கிறான்….

செய்தியை செவியில் கேட்டவளுக்கு சிந்தையில் வேதனை பொங்கினாலும் கிடைக்காத ஒன்றிற்கு இத்தனை நாட்களாக ஆசைப்பட தன்னையும், தன் கண்ணீரையும் அடக்கிக் கொண்டு புடவையை பெற்றாள், தூக்கத்தில் மடி தேடும் குழந்தையை போல தன் துக்கத்தை நினைத்து அன்னையை தேடி கவிதையுடன் நிறைவடைந்திருந்தது அந்த கதை..

“ச்சே என்னடா கத இது?…..

காலங்காலமா தமிழ் சினிமால வர்ற கத மாதிரி இருக்கு…..

அறிவில்லையா இந்த பொண்ணுக்கு….
அவன் பணக்காரன் இவ வேலைக்காரி…

இது போய் ஒரு கதன்னு…

ஆனா சொல்ல முடியாது…

எப்ப யார் மேல யாருக்கு காதல் வரும்னு….

பட் டைட்டில் சூப்பர்…

கதைக்கேத்த தலைப்பு தான்ல..
அன்ட் கவிதையும் சூப்பர்…..”(🤪)

என்று தொடக்கத்தில் விமர்சகனாக கழுவி ஊற்றினாலும் இறுதியில் ரசிகனாக மாறி குமார் புகழ்ந்திட, வருணின் சிந்தை இங்கில்லை…

அவன் எண்ணம் முழுவதும் அன்னையில்லாத பெண், சடங்கு நடக்கிறது, புடவையை அளித்தவன் ஆகுஜபாவனை, எஜமானியின் மகன் என கதையில் முக்கிய வரிகளை குறித்தவன் இறுதியில் எழுத்தாளர் பெயர் வசந்தி என்பதை நடுமண்டையில் ஏற்றிக் கொண்டு குமாரிடம் விடைபெற்றான், புத்தகத்தோடு மதியை தேடிச் சென்றான்….

அதே நேரம் மதி தன் நான்கைந்து காகிதங்களை பரப்பி வரிசையாக வைத்தப்படி, அதை தன் கேமராவில் புகைப்படமாக எடுத்துக் கொண்டிருக்க, ஹாய் மதி என உள்ளே நுழைந்தான் வருண்…

அவன் தான் என்றதும்,
“ம்ம் வாங்க வருண்………”
என்று கண்ணாடி கதவிற்கு வெளியே கண்டவள்,
  “மரகதம் இல்லையே என்ன விஷயம்?…”
என்று வினவ,
  “இல்ல இல்ல நான் மரகதத்த பார்க்க வரல….

இதோ இந்த கதைய எழுதனது யாருன்னு கேட்க வந்தேன்….”
என்றான் ஆடவன்.

மதி அழகாக உதட்டை விரித்தாள்.

நான் தான் வருண்…..

அதுல இருக்குற கவிதையும் நான் தான் எழுதுனது…

ஏன் நல்லா இல்லையா?…

போரிங்கா இருக்கா?…..”
என்று மதி சிரித்தபடி வினவ,
  “இல்ல வசந்தின்னு பேர் இருந்ததா அதான் வசந்தி யாரு.
இது உன் கவித இல்லையான்னு கேட்க வந்தேன்….”
என்று வருண் அவளின் முகத்தை ஆராய, கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது மதியின் முகத்தில்.

அதுவரை இருந்த  வெண்மேகமாய் இருந்த புன்னகை எங்கோ சென்று ஒளிந்து கொண்டு,

  “புனைப்பெயர் வருண்…

மேக்ஸிமம் ரைட்டர்ஸ் எல்லாரும் ஒரிஜினல் நேம் யூஸ் பண்ண மாட்டோம்…

எங்களுக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு பேர போட்டு அதுல பப்ளிஷ் பண்னுவோம்…..”

என்று இறுக்கமான குரலில் பதிலளித்திட, வருணுக்கு அவன் எதிர்பார்த்த பதில் கிடைத்து விட்டது….

எனவே அதற்கு மேல் அவளின் மனநிலையை சோதிக்க விரும்பாமல் அப்புத்தகத்தோடு வீட்டிற்கு சென்றவன் கதவு திறந்திருக்க கண்டான்…

அன்னை வேலையில் ஈடுபட்டு இருக்கிறார் போல என நினைத்துக் கொண்டவன் கதவை பூட்டி விட்டு உள்ளே நுழைய ப்ளூடூத் ஸ்பீக்கரில் யாரிடமோ கதைத்துக் கொண்டு இருந்தார் ரேணுகா….

“இந்த கிழவியோட இம்ச தாங்க முடியல ரேணு….

பேத்தி எங்க இருக்காளோ என்ன பண்றாளோ?…

கல்யாணம் வேண்டாம்னு சொன்னது ஒரு குத்தமா அவள தேடி கூப்டு வா….

இன்னும் ரெண்டு நாள்ல அவ அம்மா, அப்பா நினைவு நாள் வருது..

அன்னக்கி தான் அவளோட பிறந்த நாள்ன்னு போட்டு அவர இம்ச பண்ணுது…..”

என்று ஜெயா கூறிட,

  “சரி நீ சொல்ல வேண்டியது தானே….

அம்மா அப்பா நினவு நாளுக்காவது அவ அங்க ஊருக்கு வரட்டுமே…..”

என்று ரேணுகா கிரைண்டரில் மாவை எடுத்துக் கொண்டே தோழியிடம் கதைக்க,வருணைக் கண்டதும் விழி பிதுங்கினார்.

ஆனால் அலைபேசிக்குள் இருக்கும் ஜெயாவிற்கு வருண் நிற்பது தெரியாததால்

  “நீ வேற அவன் கல்யாணம் முடியுற வரைக்கும் அவள வீட்டுக்குள்ளேயே விடக்கூடாதுன்னு என் பையன் என்கிட்ட சொல்லிட்டான்…

நான் மட்டும் அங்க உங்க ஊர்ல தான் அவ இருக்கான்னு சொன்னேன்…..”
என்றிட மாவுக்கையோடு ரேணுகா அலைபேசியை அணைத்து விட்டார்.

5 thoughts on “தட்டாதே திறக்கிறேன் -7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *