Skip to content
Home » தட்டாதே திறக்கிறேன் -9

தட்டாதே திறக்கிறேன் -9

வருணின் கேள்வியில் கையில் இருந்த உணவு பவுலை கீழே வைத்தாள் மதி…

வலது கையின் விரல்களை நன்றாக மடக்கிக் கொண்டு இட து கையில் குத்தியவள்,

  “என் லைஃப்ல நான் செஞ்ச பெரிய தப்பு அதான்….

உண்ம எது?…

பொய் எது?…

நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு தெரியாம அந்த பேர வச்சுட்டேன்.

இப்ப அந்த பேர எடுக்க முடியாம என்னோட அடையாளத்த வெளிய காட்ட முடியாம அந்த பேர்லையே எழுதிட்டு இருக்கேன்….”

என்று மதி கூறிட, வருணிற்கு ஒரு முடிச்சு அவிழ்ந்து விட்டது.

ஆனால் யார் அந்த கெட்டவன்.

யாருடைய பெயர் அது என அவளை இடை நிறுத்தவில்லை அவன்…

முடிந்த அளவிற்கு அவள் மேலும் கூறட்டும் என பொறுமை காத்திட,

“இங்கிலீஷ்ல ஒரு டயலாக் இருக்கும்….

கேள்விப் பட்டிருக்கீங்களா வருண்?….”

என்று கேட்டாள் மதி.

அவளின் கூற்றை செவியுற்ற வருணோ,

    “நிறைய டயலாக் இங்க்லீஷ்ல இருக்கு….

இதுல மேடம் க்கு தெரிஞ்சது எது?….”

என்று அவளை இயல்பாக்கிட வினவ,

   “We used pencil when we were small;

but now we use pens …

Do you know why ?

Because mistakes in childhood can be erased, but not now.…..

இதுக்கு அர்த்தம் என்னான்னு தெரியுமா?…..”

என்று மதி சிரித்தபடி வினவ,

   “ம்ம் சின்ன வயசுல நாம பென்சில் யூஸ் பண்ணோம்.

ஆனா இப்ப பேனா யூஸ் பண்றோம்…

அதுக்கு காரணம் என்னான்னு கேக்குறாங்க?…

அதானே….”

என்று ஒன்றும் தெரியாத இளைஞனாக அவன் வினவ,

  “ஆமா சின்ன வயசுல நாம பண்ற தவறுகள் பெரிதாக யாரையும் பாதிக்காது….

அத அழிச்சிடலாம்….

பென்சில் மாதிரி….

ஆனா ஒரு வயசு வந்ததும் நாம செய்யுற தவற அழிக்க முடியாது பேனா மாதிரி…

அதனால தான் பெரிய பசங்களாகிட்டா நம்மல பாத்து பக்குவமா நடந்துக்க சொல்லுவாங்க…..”

என்று விரக்தியாக அதே நேரம் உதட்டில் மாறா புன்னகையுடன் மதி விளக்கம் தந்தாள்.

வருணுக்கு இது தான் சமயம் என்று தோன்றியது.

ஆகவே,

   “இப்ப நீ சொன்ன இந்த பென்சில் பேனால யார் பேனா யார் பென்சில் மதி?….”

என்று கேட்க, உணர்ச்சி பெருக்கில் இருந்த பெண்ணவள்,

   “சின்ன வயசுல எனக்கு முத்தம் கொடுத்ததுக்காக வீட்ட விட்டு மிலிட்டரி ஹாஸ்ட்டல்க்கு போன வசந்த் தான் பென்சில்….

அவன் என் கூட எந்த இன்டென்ஷன்ல பழகுறான்னு தெரியாம அவன லவ்….

ச்சே அது லவ் இல்ல…..”

என நெற்றியில் அடித்துக் கொண்டவள்,

“அவனோட பழிய தீத்துக்க அவன் போட்ட ப்ளானுக்கு கதை, திரைக்கதை எழுத உதவுன பேனா தான் நான்.

அதோட கதைக்குரு தான் அந்த காதல்.


கொஞ்ச நாள் அவன் குடும்பத்த பிரிஞ்ச காரணத்துக்காக என்ன வாழ் நாள் முழுக்க என் தாத்தா பாட்டிக்கிட்ட இருந்து பிரிச்சிட்டான்….”

என்றவள் நடந்ததை அழுதுகொண்டே கூறினாள் மதி.

பத்தாம் வகுப்பு மாணவனாக வீட்டை விட்டு சென்ற வசந்த் அவனின் அன்னை சென்று அழைத்தாலும் விடுமுறைக்கு இல்லம் வரமாட்டான்.

ஜெயாவின் பெற்றோர் இல்லத்திற்கு சென்று விடுவான்.

ஆனால் விதியின் விளையாட்டு மதி எட்டாம் வகுப்பில் பூப்பெய்திருக்க பண்ணிரெண்டாம் வகுப்பு பரீட்சை விடுமுறைக்காக வந்திருந்த வசந்த் தான் மாமன் முறைக்கு அவளுக்கு மாலை அணிவித்து புடவையை தர வேண்டும் என்று பாட்டிக் கூறவும் வேறு வழியின்றி தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இல்லம் வந்தான் வசந்த்.

அப்போது தான் மதி வசந்தை கண்டாள்.

ஏற்கனவே அவளை போல நல்ல நிறம் கொண்டிருந்தவன் மிலிட்டரி அகாடமியின் ஆரோக்கியமான உணவு மற்றும் சீரான உடற்பயிற்சியில் உடலை கட்டில் வைத்திருந்தான்.


அவ்வளவு தான் படங்களில் வரும் கதாநாயகிகள் போல கண்டதும் காதலாக அவனின் மேல் ஆசை வைத்து விட்டாள்.

இதுவே வசந்த் வேறு ஆண்மகனாக இருந்தால் அவனின் அழகில் வீழ்ந்திருக்க மாட்டாள் மதி..

ஆனால் தனக்கு முத்தம் அளித்தவன், தன் மாமனின் மகன் மேலும் சடங்கில் கட்டிக் கொள்ளப் போகும் முறை என வந்தவர்கள் போனவர்களின் பேச்சை காதில் ஏற்றியவள் அதன் பிறகு அவன் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்திருந்தாள்.

ஜெயா, பாட்டி அவனிடம் அலைபேசியில் கதைத்தால் அவளும் போராடி அலைபேசியை பெற்று வெட்கத்துடன் இரண்டு வார்த்தைகள் பேசி விட்டு வைத்து விடுவாள்.

ஆரம்பத்தில் வசந்திற்கு அவளின் இம்மாற்றம் தெரியவில்லை.

அவன் மருத்துவ கல்லூரியில் நான்காண்டுகள் முடித்து விட்டு ஒரு மாதம் விடுமுறைக்கு வந்திருந்த போது தான் அவளின் எண்ணம் புரிந்திட, வசந்தும் அவளுடன் பழகினான்…

அடுத்த வருடம் திருமணம் வைத்துக் கொள்ளலாமா என்று பெரியவர்கள் கேட்குமளவிற்கு மதியின் மனதில் இறங்கினான்.

ஆனால் நிச்சயத்திற்கு மூன்று நாட்கள் முன் அவளை தான் பணிபுரியும் மருத்துவ கல்லூரிக்கு வர சொன்னான்…..

“வசந்த் நான் காலேஜுக்கு வந்துட்டேன்….

நீங்க எங்க இருக்கீங்க?….”

என்று அவள் கேட்க அவனிருக்கும் அறையை கூறினான்.

அவள் தேடி பிடித்து தன்னவன் எதற்காக தன்னை அழைத்தான் என ஓடி வந்து அறைக்குள் நுழைந்தால் அவனைப் போலவே மருத்துவ உடை அணிந்திருந்த ஒரு பெண்ணிற்கு ஆங்கில முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தான் வசந்த்.

மதிக்கு ஒன்றும் புரியவில்லை…

அவ்விடத்தில் இருந்து விலக வேண்டும் என்று கூட அவளுக்கு தோன்ற வில்லை…

அழுதாள், அழுதாள் அழுதுகொண்டே அப்படியே சரிந்தாள்….


முகத்தில் தண்ணீர் பட்டு எழுந்து பார்த்தாள்…

“உன்ன தொடக்கூடாது தான் தண்ணீ தெளிச்சு எழுப்புனேன்…..”

என்று அவன் பேசிய வார்த்தைகளை கேட்டு தான் மயக்கத்திலேயே இறந்திருக்க கூடாதா என நினைத்தாள்.

“இன்னக்கி டேட் என்ன தெரியுமா?……

நீ என்ன வீட்ட விட்டு அனுப்புன நாள்…..”

என்று வசந்த் வெறியுடன் கூறியதை கேட்டாள்.

“இதுக்கப்புறமும் நீ என்ன கல்யாணம் பண்ண மாட்டேன்னு எனக்கு தெரியும்…

ஆனா கல்யாணம் உன்னால நின்னதா இருந்தா உன் மாமாவும் அத்தையும் சேர்ந்து வாழுவாங்க….

இல்ல நீ உண்மைய சொன்னா உங்க மாமா அதான் என் அப்பா என்ன மறுபடியும் வெளிய போக சொல்லுவாரு…

நான் இந்த முற என் அம்மாவோட வெளிய வந்துடுவேன்….

அப்புறம் காலம் முழுக்க நீ, உன் தாத்தா பாட்டி, உன்னால மனைவிய இழந்த ச்சே இழக்க போற மாமா தான் சேர்ந்து இருக்கனும்…….”
என்று ஆடவன் மிரட்டவும், மதிக்கு அவன் எண்ணம் புரிந்தது.

“அவன ஜெயிக்க விடாம நான் உண்மைய சொல்ல ஒரு நிமிசம் ஆகாது….

ஆனா அத்தைக்கு ஆரம்பத்திலேயே மாமா செஞ்ச காரியம் பிடிக்கல…

எனக்கு நல்லது பண்ண போய் மாமாவும் அவங்களும் பிரிய வேண்டாம்னு முடிவு பண்ணேன்….

வீட்ட விட்டு வந்துட்டேன்.

சின்ன சின்னதா கவித கத எழுதுன என் ஃபர்ண்ட் ப்ரஸ்ல எம்ளாயியா ஜாயின் பண்ணேன்….”

என்று அவள் கூற வருணுக்கு அவளுடைய கவலை நன்றாக புரிந்தது…

ஆனால் அவளை அக்கவலையுடன் காண விரும்பாதவன்,

    “என்ன மதி டெக்னாலஜி எவ்ளோவோ வளந்திருச்சு….

பேனால நீ எழுதுனத அழிக்க முடியலன்னா என்ன?…

இன்க் இரேசர் இருக்கு, வொயிட்னர் இருக்கு, ஃபெலிகான் இருக்கு…..”

என்று வருண் வேடிக்கையாக விளக்கக் தந்தவாறே,


தப்பு நடந்துருச்சு, தப்பு நடந்துருச்சுன்னு உட்கார்ந்து நினச்சுட்டு அதையே  ஃபீல் பண்றத விட அதுல இருந்து ஓவர் கம் பண்ணி வர்றது தான் இன்டலீஜன்ட்…

அன்ட் இன்கேஸ் நான் சொன்ன மெதட்ஸ் எல்லாம் உனக்கு சாட்டிஸ்ஃபேக்ஷனா தெரியலன்னா நீ தப்பா எழுதன பேஜ கிழச்சு போட்டுடு மதி…..

புது பேப்பர எடு……

மைண்ட நல்லா செட் பணணிக்கோ…..

ஃப்ரஸ்ஸா எழுத ஆரம்பி……”

என்று சூசகமாக கூறவும் மதி அவனை கூர்ந்து நோக்கினாள்.

தூரத்தில் நின்றிருந்த வருண் அவள் தன்னை நோக்கவும் அவளருகில் வந்தவன் அவள் கையில் இருந்த பவுலை பெற்று,

“பிகாஸ் நானும் ஒரு இங்க்லீஷ் டயலாக் கேள்வி பட்ருக்கேன்….

Don’t close the Book, when the bad things happen in your life…

Just turn the page……

New page is waiting for you ………”

என்று ஒரு ஸ்பூன் புட்டை எடுத்தவன் அவள் எதிர்பாராத சமயத்தில் அவளின் வாயில் திணித்து விட, மதிக்கு அவன் அளித்த புட்டுடன் அவன் கொடுத்த போதனையும் உள்ளே சென்றது..

அவனின் கண்களில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பும் தெரிந்தது.


ஆனால் என்ன என்று அவள் தெரிந்துக் கொள்ளும் முன்

வெளியே ப்ரியாவின் இருசக்கர வாகனத்தின் சப்தம் கேட்கவும், வருண் எழுந்து கொண்டான்…..

“ப்ரியா வந்துட்டான்னு நினைக்கிறேன்…

நீ சாப்ட்டு ரெஸ்ட் எடு…..

நடந்ததையே நினச்சு கவலப் படாம உனக்கான பாதைய உன் வாழ்க்கைய யோசி….

யூ ஆர் ஜஸ்ட் டுவென்டி டூ……”

என்று கண்களில் காதலுடன் வார்த்தையில் நட்புடனும் விடைபெற, மதி அவன் கூறி விட்டு சென்ற வார்த்தைகளை யோசித்தாள்….

ம்ம் சரி தான்….

ஒரு பக்கம் கிழிந்து விட்டால், தவறாக எழுதப்பட்டு விட்டால் அதிலே இடிந்து போய் அமர்ந்திருப்பது தவறு என முடிவெடுத்தவள் தன் வாழ்க்கைக்கான அடுத்த பக்கத்தை எழுத யோசித்தாள்….

ஆனால் எழுத தெரியவில்லை…

அவளால் அந்த இருட்டில் இருந்து வெளியேற வழி தெரியவில்லை.

எங்கே சென்றாலும் எதைக் கண்டாலும் அவனின் நினைவுகள் வந்து தொலைய,  அவளுக்கு எதிரே இருந்த பழைய புத்தகத்தில் அவள் எழுதிய கவிதைக்கு கீழே வசந்தி என்று இருக்கும் பெயர் அவளின் கண்களில் பட்டது.


அந்த பெயர்….

அவளை மிகவும் தொந்தரவு செய்தது…

“இந்த பேர்ல வேண்டாம்….

நான் தொடர்ந்து உங்க ப்ர்ஸ்ல இருக்கேன்….

பட் வேற பேர்ல எழுதுறேனே…..”
என்று மரகத்ததின் சித்தியான அகல்யாவிடம் மதி கேட்டதற்கு,
   “நோ நோ நோ…..

நீ ரீசண்டா எழுதுன தடம் மாறுதே நாவல் ரொம்ப வரவேற்ப பெற்றது….

அதுலையும்,
“உன்னையும் என்னையும் வைத்து ஒரு காதல் காவியத்தை எழுதினேன் மை தீர்ந்து போன பேனாவில்…..”
அப்படிங்கிற கவிதைய எழுதி கதைய பாராட்டி இருந்தாங்க வாசகர்கள்.

இப்போ நீ கத முடிஞ்சதும் பேர மாத்துனா வசந்தி ங்கிற எழுத்தாளர் இல்லன்னு வாசகர்கள் குறைய வாய்ப்பு இருக்கு….”
என்று கூறி மறுத்து விட்டார்.

ஆனால் மதிக்கு இந்த பெயரில் எழுதுவதில் சுத்தமாக பிடிக்கவில்லை.

ஆகவே ஆகாயத்தாமரை என்ற ஒரு அட்டு பழைய கதை கரு கொண்ட கதையை எழுதி வசந்தி என்ற பெயருக்கு வரும் வரவேற்பை குறைக்க நினைத்தாள்.

ஆனால் இப்போது

வருண் கூறி விட்டு சென்றதில் இருந்து அந்த பெயரை மட்டுமல்ல அவன் நினைவுகளையும் தன் வாழ்நாளின் பக்கத்தில் இருந்து கிழித்திட நினைத்தாள்.

இனிமேல் அவன் மேல் கொண்ட காதலை காதல் என்று நினைத்து காதலை கலங்கப்படுத்த கூடாது என தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

காதல் தோல்வி என ஒரு வரி கூட எழுதக் கூடாது.

மொத்தமாக தன் தன் வாழ் நாள் பக்கத்தில் இருந்து அந்த பெயரை கிழித்திட வேண்டும் என  இரண்டு மணி நேர யோசனைக்கு பிறகு ஒரு முடிவுடன் உறங்கியவள் காலை வேகமாக எழுந்து அலுவலகத்திற்கு கிளம்ப, கதவு தட்டப்பட்டது…..

6 thoughts on “தட்டாதே திறக்கிறேன் -9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *