புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

தாரமே தாரமே வா-8

58 / 100 SEO Score

அத்தியாயம்-8

 

இதுநாள் வரை ஐஸ்வர்யா பற்றி பேசிய பேச்சுகளுக்கு எல்லாம் ஒரே முடிவாக மூன்று முடித்து போட்டு முடித்து வைத்தான் ரித்தீஷ்.

ஐஸ்வர்யாவின் நடத்தையை குறிப்பிட்டு ஒதுங்கிய வரன் எல்லாம் ரித்தீஷ் மனம் முடித்த அடுத்த கனம் இவளின் முன் பழையபடி மாறி பேசிட செய்தார்கள். தணிகாசலம் தான் அதே போல பேசியதை வைத்து மனம் நிறைந்து கொண்டார்.

நேற்று கோர்ட் சூட் என ரித்திஷின் தோற்றத்தில் ஐஸ்வர்யா ஆச்சரியமான பார்வையில் பார்க்க செய்தால் என்றால் தணிகாசலம் அதற்கு மேல் வாயை பிளந்து தான் பார்த்தார் எனலாம்.

இன்று பட்டு வேஷ்டியில் ரித்தீஷ் ஐஸ்வர்யா பட்டு புடவையிலும்  ஜோடி பொருத்தம் அவ்வளவு பாந்தமாக பொருந்தியது. வைதேகி மனம் பூரித்தது. வைதேகிக்கு தம்பிக்கென்று இந்நாள் வரை வரன் பார்க்காமல் இருந்ததுக்கு காரணம் மகள் திருமண வயதில் ஒரு வார்த்தை ஈஸ்வரன் மணமகனாக கேட்க நினைத்ததே ஒரு காரணம்.

இன்று தம்பியுடன் மகள் மணக்கோலத்தில் நிற்க கண்டு கண்களில் ஆனந்த கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்தது வைதேகிக்கு.

ரித்தீஷ் வரவேற்ற எல்லோரையும் ஓர் பொருட்டாக கூட பார்க்காமல் நின்றாள். ஆனால் அதுவே பெண்கள் யாரேனும் வந்து அவனிடம் பேசினாலோ பரிசு பொருள் கொடுத்தாலோ அவர்களை உச்சி முதல் பார்வையில் அலசி தள்ளினாள்.

யாரையாவது இலக்கியா என்று அறிமுகபடுத்திட செய்வானா?! என ஆவலாக காத்திருந்தாள்.

ஆனால் ஒருவரையும் அப்படி அவன் அறிமுகபடுத்தவில்லை… ஏமாற்றம் வந்தாலும் அவனோடு முகமும் சுழிக்கவில்லை அதே சமயம் அவள் புன்னகைத்து பூரித்து கொள்ளவும் இல்லை… சாதாரணமாகவே இருந்தாள்.

இரவு ஒன்று வர அவளின் அறையிலே மல்லி சரம் முதல் அலங்கரித்து இருக்க அவளின் அறையில் இருக்கும் ரித்தீஷ் தான் தலையில் கையில் வைத்து பெறும் போராட்டத்துக்குள் சுழன்றான்.

முதலில் அறைக்குள் அம்மா தன்னை அனுப்ப பயந்தே போனவள் ரித்திஷின் அதே சாதாரண பார்வையில் தான் நடப்புக்கு வந்தாள்.

அவன் மட்டும் பார்வை வேறு விதமாக தன்னை தீண்டி இருந்தால் என்ன செய்து இருப்பாளோ என்னவோ அவன் அவனாக இருக்க இவளும் அதே பிடிவாதமான திமிருடன் இருந்தாள்.

கையில் இருந்த செம்பை அவளின் தனிப்பட்ட வசதிக்கு வைத்த பிரிட்ஜியின் மேலே வைத்தவள். கை முழுதும் வளையலில் ஓசை குலுங்க அவனுக்கு முதுகுக் காட்டி படுத்துக்கொண்டாள்.

பார்க்க மட்டுமே அமைதியாக படுத்தாலே தவிர அவளின் உதடு மட்டும் ‘எப்படியோ ஒரு வகையில் சொத்து கிடைக்கும் பணம் கிடைக்கும் ஊரில் தனிகாசலத்தின் மாப்பிள்ளை என்ற பெயர் கிடைக்கும் எல்லாம் கிடைக்கும் கூடவே நான்… எனக்கு அங்கே ஒன்னும் நடக்கலை என்று தெரிந்து தான் கூலா இருக்கார் இதுல அம்மா அப்பாகிட்ட தியாகி மாதிரி நடந்து கொல்றார்.. இவர் லவ் பண்றேனு இவரே சொல்லி இருக்கார் ஆனா அதை அவங்க அக்காகிட்ட சொல்ல வேண்டியது தானே… இலக்கியாவாம் இலக்கியா… ஹுக்கும்….” என முனங்கி கொண்டே இருக்க அவன் எதுவும் பேசாமல் இருக்க யோசித்தவள் திரும்பி பார்க்க, அவனோ கீழே போர்வை விரித்து இரு கையை மடக்கி நிமிர்ந்து இமை மூடி படுத்துக் கிடந்தான்.

அவன் அப்படி படுக்க கை தசை வளைவு முறுக்கேறிய விதமே ஆண் அழகன் என்று சுட்டிக்காட்ட அடுத்த கணம் ”சே நான் ஒரு லூசு இவர் எப்பவும் போல ஒரு ரியாக்சன் இல்லாமல் அமைதியா மாறி தூங்க ஆரம்பித்து விட்டார். என இவளும் அப்படியே படுத்து உறங்கினாள்.

அதிகாலை விழித்த ரித்தீஷ் இமையை திறக்க, ஐஸ்வர்யா தனது கைகள் இரண்டும் கன்னத்தில் வைத்து கொண்டு கால்களை சுருக்கி படுத்திருந்த திடுக்கிட்டு எழுந்தான்.

அதன் பின்னே தனக்கும் அவளுக்கும் திருமணம் நடந்த நிகழ்வுகள் தோன்றி மறைய பெருமூச்சொன்றை விடுத்து எழுந்தான். அவளது அறை, அவளது பாத்ரூம், அவளது பால்கனி என்றிருக்க, அதில் பழக கூட ஒரு வித அசௌகரியம் அடைந்தவன், அவள் எழும் முன் குளித்து முடித்து தயாராகி நின்றான். வெளியே போகலாமா வேண்டாமா மாமா என்ன மாதிரி நம்மளை ட்ரீட் பண்ணுவார்? இவ வேற நல்லா தூங்கிட்டு இருக்கா மணி ஏழு ஆகுது என யோசித்தவன் தலையை பிடித்து திரும்ப புயல் ஒன்று தன்னை கடந்தது போல ஐஸூ சென்றதை அதன் பின்னே அறிந்தான்.

குளிக்காமல் பல் விளக்காமல் தன்னை கண்ணாடியில் கூட பார்க்காமல் அப்படியே சென்ற ஐஸூவை வைதேகி தலை முதல் கால் வரை பார்த்து முடித்து கோபத்தோடு வாயை எடுக்க அதற்கு முன்னே

”ம்மா காபி…” என சொல்லியவள் அப்பாவை கண்டு அதே திமிரோடு சோபாவில் அமர்ந்தாள்.

வைதேகி தலையில் அடித்தபடி காபி கொண்டு வந்தவள் அதனை வாங்கிட ஐஸூ கைகளை நீட்ட வைதேகியோ நேராக தனது தம்பியிடம் நீட்டினார். அவனோ ஐஸூவை பார்த்து சங்கடத்துடன் வாங்கி பருகினான்.

”போய் பல் விலக்கிட்டு வா” என்ற வைதேகியின் அதிகார குரலில் ‘சே’ என தரையில் காலை உதைத்து அறைக்கு சென்றாள். வைதேகி கிச்சேனுள் நுழைந்தவுடன் தணிகாசலம் ரித்தீஷிடம் ”அவள் ஹோட்டல் வரை போய் அப்படியே வந்தாலும், அவளுக்கு சில பேரிடம் கெட்ட பெயர் தான்… அதை மாற்ற உடனே என்னால முடியலை… உன்னை கட்டிக் கொண்ட பிறகு அவளுக்கு நல்ல பேர் கொஞ்சம் பழைய நிலையில் திரும்புது… நீ படித்ததை எல்லோரும் பார்த்து என்னோடவே வேலைக்கு இருக்க வேண்டியது தானே சொல்றாங்க… ஏன் எனக்கும் இப்போ உன்னிடம் கேட்டு கூட வச்சிக்க தோணுது”

”இல்லை மாமா நான் உங்களிடம் முன்ன சொன்னது போல தான் எனக்கு அப்போ இருந்த, அதே தன்மானம் இன்னும் இருக்கு. நான் இங்க வீட்டோட மாப்பிள்ளையா இருக்க மாட்டேன்…  ஆனா உங்க பொண்ணை உங்க அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவு நல்லபடியா பார்த்துப்பேன்.. எனக்கு இப்போ ஆட்டோ ஓட்டற வேலை போதும்… கொஞ்ச நாள் ரிசல்ட் வந்ததும் ஏன் கைக்கு சர்டிபிகேட் வந்த பிறகு உங்களுக்கு அவமானம் ஆகாத வகையில் வேற உத்தியோகத்துக்கு போயிடுவேன் மாமா” என்றான் அதே அடக்கத்துடன்.

”அவள் உன்னை கட்டிக்கிட்டதால் தான் இப்போ இப்படி நடந்தாலும் நான் பொறுமையா இருக்கேன்.. நீ அவளை வைதேகி மாதிரி பார்த்துப்ப என்ற நம்பிக்கை தான்… அவள் மேல எனக்கு நம்பிக்கை இல்லாமல் கட்டி கொடுக்கறதா தான் அவள் இன்னும் என் மேல கோவமா திமிரா இருக்கா…. அவளுக்கு பெண்கள் ஒரு முறை சமூகத்துக்கு பேசும் பொருளா மாறினாலே திரும்ப நல்ல விதமா மாறும் வரை உலகம் பேசும் என்பது புரிய மாட்டேங்குது. அதுக்காக அப்பா யோசிச்சு கல்யாணம் செய்தார் என்பத சொன்னாலும் புரியாது… புரிந்து கொள்கின்ற வயசும் இல்லை” என சொல்ல உள்ளிருந்து ஐஸூ வர பேச்சு நின்றது.

சத்தமாக பாட்டை வைத்து கேட்க தணிகாசலம் கோவதோடு மாடிக்கு சென்றார். வைதேகியை பார்த்து முறைத்து மகளை அடக்க கண்களில் ஆணை பிறப்பித்து போனதும் ரித்தீஷ் தானாகவே வெளியே சென்று இருந்தான்.

அவர்கள் இருவரும் சென்றதும் ”ஏன் டி உனக்கு அறிவு இருக்கா? நேற்று என்ன சொன்னேன்… காலையில் எழுந்து தலைக்கு குளிச்சு முடிச்சு சேலை கட்டிக்கிட்டு வா என்று தானே சொன்னேன்.. எல்லாம் அமைதியா கேட்டுட்டு காலையில் முகம் கூட கழுவாம அப்படியே வந்திருக்க? அறிவு இருக்கா?” என கத்தினார்.

”ஹ்ம் அறிவு உங்களுக்கு இல்லை என்றால் கறிகடையில் போயி கேளுங்க  மூளை ஒன்றுக்கு நாலு வாங்கி நீங்க உங்க புருஷன் உங்க தம்பி எல்லோருக்கும் சேர்ந்து மூளை வறுவல் செய்து சாப்பிடுங்க.. நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக தான் காலையில உங்களை வெறுப்பேற்ற அப்படியே வந்தேன்… உங்க புருஷனுக்கு நல்லா வயிறு பத்திட்டு இருக்கும் முதலில் இளநீர் வாங்கி கொடுங்க” என காலை டீ பாயின் மீது வைத்து சேனலை மாற்றி கொண்டு இருந்தாள்.

வீடே ஒலியின் அதிர்வால் அதிர்ந்தது. உள்ளிருந்து வந்த பரத் கூட ‘சவுண்ட் கம்மி பண்ணு’ என சொல்ல அவனோட மல்லுக்கு முடியாது என வம்பு இழுத்து மேலும் சவுண்டு அதிகமாக வைத்து வீட்டையே அல்லோலப்படுத்தினாள்.

இதை எல்லாம் பெரிதாக எண்ணாமல் ரித்தீஷ் சிரித்தபடி யாரிடமோ போனில் பேச நேரம் கழித்தே உணர்ந்த ஐஸூ கொஞ்சம் கொஞ்சமாக ஒலியை குறைத்து அவன் பேசும் சத்தம் கேட்குமா என்ற அளவில் வைத்து முடித்தாள்.

அவனோ பேசுவதில் கூட மெல்ல பேசினான். அதற்காக ரகசியம் போல இல்லை… தெளிவாக எல்லோர் போல தான் பேசினான் அதிலும் ஒரு நிதானம் அமைதி இருந்தது.

கடைசியாக அவன் ‘ஓகே இலக்கியா நான் வைக்கறேன்’ என்றபடி வீட்டில் நுழைய அவன் பேசியதை கடைசியில் கேட்டவளுக்கு கோவம் கோவமாக வந்தது.

”அக்கா நான் வெளியே போகவா?” என சமையல் அறையில் வந்து கேட்க

”எதுக்கு டா இரெண்டு நாள் வெளியே போக வேண்டாம் மாமா உன்கிட்ட சொல்லி தானே இருக்கார் ஈஸ்வர்” என்றார்.

”ஐயோ அக்கா எனக்கு போரடிக்கு… சும்மா ஆட்டோ எடுத்துட்டு வெளியே போயிட்டு வந்துடறேன்”

”சரி டா பார்த்து போ” என சொல்ல அறைக்குள் வந்து சாவி எடுத்தவன் திரும்ப மோதுவது போல வந்து நின்றாள் ஐஸ்வர்யா.

”எங்க போறிங்க?” என கேட்க ரித்தீஷ் ‘என்ன இது? புதுசா நான் எங்க போறேனு கேட்கறா?’ என மனதில் நினைத்தவன் அவளை வினோதமாக பார்க்க

”ஹலோ உங்களை தானே கேட்கறேன்…. உங்க லவ்வர் அது யாரு இலக்கியா அவளை பார்க்க போறிங்களா?” என்றதும்,

”ஏய்… சீ…” என்றவன் அக்கா மகளை அதற்கு மேல் திட்ட கூட முடியாமல் போனது.

”என்னது சீ யா? சொல்லுவிங்க சொல்லுவிங்க.. என் அப்பாவே என்னை இழிவா எண்ணினா இப்படி தான் பேசுவிங்க… உங்களுக்கு தெரியும் தானே நான் நல்லவ என்று அங்க போனதும் திரும்பிட்டேன். தெரியும் தானே… எதுக்கு சீ சொல்லறிங்க” என்று அழ ஐஸூ அழுவதை இதுவரை கண்டிராத ரித்தீஷ் கலங்கி போனான்.

”அப்படி இல்லை மா ஐஸூ… சாரி உனக்கு ஐஸூ சொன்னா பிடிக்காது..” என்றவன் ”இங்க பாரு எனக்கு இங்க கொஞ்சம் இருக்கவே புதுசா இருக்கு அதனால தான் வெளியே போக யோசிச்சேன்”

”இல்லை நீங்க அந்த இலக்கியா பார்க்க தானே போறிங்க” என்று கேட்க அவள் எதுக்கு இவனிடம் இதற்கு பொறாமை கொள்கின்றாள் என்று அவளுக்கே தெரியவில்லை… அதே சமயம் தான் ஏன் ஐஸூவிடம் கலங்கி போக காரணம் சொல்கின்றோம் என்றும் புரியாத நிலையில் தான் ரித்தீஷ் இருந்தான்.

”எதுக்கு அழுவற நான் எங்கயும்‌ போகலை அவுட் ஹவுஸ் போறேன் போதுமா?” என மென்மையாக சொல்ல அவளோ தலையை சரியென்றே அசைத்தாள்.

ரித்தீஷ் வேகமாக வெளியே வந்தவன் இது என்ன புதுசா இருக்கு ஐஸூ இப்படி பேசறா… நானும் ஏதோ சமாதனம் எல்லாம் செய்யறேன்.’ என எண்ணியவன் ‘ஐஸூ மனசல உடைந்து போயிருக்கா… ஐஸூ…சே அவளுக்கு தான் ஐஸூ சொன்னா பிடிக்காதே’ என சோர்ந்தவன் ஐஸ்வர்யா… என்ன மா செய்ய? என்றவன் சிந்தனைக்குள் பேச்சு வழக்கில் ஐசுவரியா என்றதில் ‘ரியா’ என்றவனின் சொல் அவளின் திமிரான நடவடிக்கைக்கு அந்த பெயர் அழகாக பொருந்த ‘ரியா’ என்றே மனதில் சொன்னவன் அவுட் ஹவுஸ் போனான்.

அங்கே போனை எடுத்து மஸ்தானுக்கு அழைத்து பேசிக் கொண்டு இருக்க திடீரென பின்னால் கொலுசொலி கேட்க திரும்பியவன் அங்கே ஐஸூ அவன் போனை வாங்கி உடைத்து எறிய அது மூன்று நான்கு பாகமாக சிதறியது.

”ஏய் ரியா.. என்னாச்சு உனக்கு?’ என ரித்தீஷ் கேட்க அங்கே ஐஸ்வர்யா கோவமும் அழுகையும் மாறி நின்றிருந்தாள்

 

-தொடரும்.

1 thought on “தாரமே தாரமே வா-8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!