அத்தியாயம் –12
நெற்றி வேர்வை வழிய கர்சீப்பை கொண்டு நொடிக்கு ஒரு முறை துடைத்தபடி ”இந்த சாதனா இப்படி நேரத்தை கடத்துறாளே… எனக்கு டென்ஷனா இருக்கு” சிவா கூறி முடித்தான்.
”சிவா எனக்கு பயமா இருக்கு. அப்பா அம்மா வீட்ல நான் இன்னும் வரலை என்று தேடுவாங்க” என்று விசும்பி ”சிவா பேசாம வீட்டுக்கு போய்டலாமா?” என்றாள் வளர்மதி.
”சரி போ யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கோ” என்று எரிந்து விழந்தான்
”இப்ப ஏன் கோவப்படற?” என்று வளர் அழுவும் நிலையில் கேட்டாள்.
”பின்ன என்ன வளர் நானே பயத்துல தடுமாறறேன். நீ வேற இப்படி பேசற… இந்த சாதனா வேற இன்னும் வரலை. திக்கு திக்கு என்று இருக்கு”
”என்னடா திட்டி முடிச்சிட்டியா” என்ற குரல் பின்னால் இருந்து வர
”போடி… பயந்தே போயிட்டேன்” என்றவன் அவள் அண்ணியாக வர போவதை அறியாது தோழியாக டி போட்டே விளித்தான்.
”சாதனா நீங்க வருவத்துக்குள் செம டென்ஷன் சிவா வேற திட்டுறான்”
”ஓகே அவன் கிடக்குறான். நீங்க இந்த டிரஸ் எல்லாம் பக்கத்துல இருக்கற பியூட்டி பார்லர்ல போய் மாத்திக்கிட்டு அலங்காரம் பண்ணிட்டு வாங்க” என்று தனது தோழி மாலதியிடம் வளர்மதியை அனுப்பி வைத்தாள்.
”டேய் நீயும் இந்த டிரஸ் மாத்திட்டு வா. நான் வெயிட் பண்றேன்” அது யூனிசெஃஸ் பியூட்டி பார்லர் என்று சொல்லிட, அவனும் அந்த கவரை வாங்கி ”இதெல்லாம் எப்ப வாங்கின” என்று ஆராய்ந்தான்.
”அட பாவி கல்யாணம் சிம்பிள் தான் அதுக்காக சின்னதா சேலை கூட கட்டிட்டி நிற்கலான என்ன டா? அதான் அவளுக்கு சேலையும் உனக்கு இந்த டிரஸ்சம்”
”தேங்க்ஸ் டி அத்தை பொண்ணு” என்று அவனின் நண்பனோடு கிளம்பினான்.
”ஏய் நில்லு… இனி என்னை டி போட்டு எல்லாம் கூப்பிடதே….”
”ஏன் நான் உன்னை எப்பவும் அப்படி தானே கூப்பிடுவேன்..” என்று அவசரமாய் கூறினான்.
”அது அப்போ இனி கூப்பிடாதே ஓகே வா….”
”என்னமோ சொல்ற சரி சாதனா…” என்று கிளம்பினான். சனாவோ மனதில் பின்ன உங்க அண்ணா கெளதம் கல்யாணம் செய்துகிட்டா உனக்கு அண்ணி ஆச்சே…. என்று நினைக்க அவளின் கெளதம் இல்லாமல் போக போனை எடுத்தாள்.
கௌதமிற்கு கால் செய்தாள்.
”எங்க இருக்கீங்க நான் வந்துட்டேன் சிவா வளர் டிரஸ் மாத்த போய் இருக்காங்க”
”டூ மினிட்ஸ்ல வந்துடுவேன் சனா” என்றான். சொல்லியது போலவே வந்து நின்றான்.
கண்களில் கூலிங்க் கிளாஸ் அணிந்து ரெட் கலர் டீ-ஷர்ட் அணிந்து வந்தவனை கண்டு இமைக்க மறந்தாள் சாதனா.
‘கௌதம் மாமா நீ மட்டும் ஆணழகன் போட்டிக்கு போடா நீ தான் வின் பண்ணுவ‘ என்றெ மனதில் சொல்லி கொண்டாள். அதே நேரம் சனா தான் வாங்கி கொடுத்த ரெட் சேலையை இன்று அணிந்து வருவாள் என்று அவனும் நினைக்கவில்லை. அவளை முதல் முறையாக சேலையில் காண்கின்றான். நல்ல வேலை கூலிங் கிளாஸ் அவன் பார்வை தடுமாற்றத்தை காட்டி கொடுக்கவில்லை.
”நான் உள்ள ப்ரோசீஜர் என்ன என்று பார்க்கறேன்” என்று நழுவினான். அவளும் அவனின் மீதே பார்வை பதிப்பதை எண்ணி தலையை மட்டும் ஆட்டினாள்.
மணப்பெண் அலங்காரத்தோடு வளர்மதி வந்து நின்றாள்.
”என்ன வளர் சேலை பிடிச்சு இருக்கா?”
”ஏ ஒன் செலெக்ஷன் சாதனா. எனக்கு நிறைவா இருக்கு என்ன என் அப்பா அம்மா அண்ணா அண்ணி இருந்தா இன்னும் நிறைவா இருக்கும்” என்று கலங்கி நின்றாள்.
”சாதனா வேற என்ன பார்மாலிட்டீஸ் இருக்கும்? எனக்கு ஒன்னும் புரியலை.” என்றபடி சிவா வந்து கூறினான்.
” நீ ஒன்னும் டென்ஷன் ஆக வேண்டாம் எல்லாம் அவர் பார்த்துப்பார்” என்று சொல்லி கர்வமாய் நிமிர்ந்தாள்.
”யார்?” என்று சிவா குழம்பினான்.
”திரும்பி பார்” என்று கைகாட்ட அங்கே கௌதம் அங்கிருந்த ஆஃபிஸ் சாரிடம் பேசிக்கொண்டு இருந்தான்.
”போச்சு என்ன சாதனா இவன் இங்க இருக்கான். போச்சு எல்லாம் போச்சு இனி ஒன்னும் நடக்காது இவனுக்கு யார் சொல்லி இருப்பா?”
”டேய் பேச்சை நிறுத்து நான் தான் சொன்னேன்”
”போ சாதனா என் லைப்ப ஸ்பாயில் ஆகிட்ட”
”அதெல்லாம் இல்லை வா இங்க” என்று கையை பற்றி சாதனா இருவரையும் உள்ளே அழைத்து சென்றாள்.
”சார் ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டார் அந்த அலுவலக பதிவாளர்,
”சார் கொஞ்ச பேர் வந்துட்டு இருக்காங்க டென் மினிட்ஸ்” என்றதும் சாதனாவிற்கு கூட பகிர் என்று ஆனது.
வேற யாரு என்று குழம்ப கௌதம் போனில் பேசி கட் செய்து மீண்டும் யாருக்கோ அழைத்து பேசி புன்னகையோடு சாதனாவிடம் பார்வையாலே என்ன என்றே கேட்க, அதற்குள் வேதா ஜோதி மற்றும் சியாமளா வந்து கொண்டு இருப்பதை கண்டு சிவா பயந்தே போனான்.
சாதனாவிற்கும் தான் ஆனால் அவர்கள் ஏதோ திருமணத்திற்கு போவது போல தானே வந்து இருப்பது மனதில் பட்டது.
”சிவா என்ன கோலம் டா இது” என்று சியாமளா அதிர்ச்சியாய் கேட்டார்
கௌதம் முன் வந்து ”அம்மா பார்த்தா தெரியலை கல்யாணம் தான். நீங்க வேதா ஜோதி உங்க முன்னால் நடக்கணும் என்று வரவழைச்சேன். அவங்க இரண்டு பேரையும் மனதார வாழ்த்துங்கள்” என்று சொல்லியதும் இதுவரை கௌதம் பேசியதே வெறும் மொட்டையாக இன்றோ ‘அம்மா‘ என்று அழைத்ததை கண்டு மேலும் பேச்சிழந்து இருக்க , அந்த நிலையிலும்
”கௌதம் நீ நீ இருக்கும் போது அவனுக்கு…” என்று கேவி அழுதார்,
”அம்மா…. பையனுக்கு கல்யாணம் இப்படியா அழுது சீன் கிரியேட் பண்ணுவீங்க. அப்பா இறந்து ஐந்து மாசம் ஆகிடுச்சு கெட்டது நடந்த வீட்ல ஒரு நல்லது நடக்கட்டும். இதுல என்ன தப்பு…” என்றான் இயல்பாய்.
”சரி அப்படியே என்றாலும் உனக்கு முடிக்காம”
”எனக்குனு வர்றவ இன்னும் நெருங்கி வரலை வந்த பிறகு எனக்கு கல்யாணம் பார்க்கலாம் இப்போ அழாம மனதார ஆசிர்வதிங்க ப்ளீஸ் மற்றதை வீட்ல போய் பேசிக்கலாம்” என்றதும் சற்றே குழம்பி சரி என தலையாட்டினார்கள்.
சனாவிற்கு தான் அடப்பாவி நான் இவ்ளோ பக்கத்தில இருக்கேன் இன்னும் என்ன நெருங்கி வரணும்…. இவனுக்கு கொழுப்பு ஜாஸ்தி… என்று மனதில் வறுத்தாள்.
”ஏன் டா இவ நம்ம ஊர்ல இருக்கற…?” என்றே சியாமளா கேட்டார்.
”ஆமா ம்மா என்று சிவா சியாமளாவை அணைத்து கொள்ள வளர் சியாமளா கால்களையும் வேதா கால்களையும் தொட்டு வணங்க சற்றே வருத்தம் கலந்து சந்தோசத்துடன் ஆசிர்வதித்தார்கள்.
மாலதி அருகே வந்து சனாவை அழைத்து ”என்ன டி இரெண்டு பேரும் ஒரே கலர் டிரஸ் எனக்கு தெரியாம லவ் சொல்லிட்டியா..?”
”ஏன் பக்கி… இன்னும் சொல்லலை…. சொல்லி இருந்தா மிட் நைட்ல கூட போன் பண்ணி உனக்கு சொல்லி இருப்பேனே..”
”அதானே ஜுரத்தையே கண்டுக்காம போன் பண்ணி புலம்பியவள் தானே நீ… ஏய் கௌ என்னை முறைக்குது” என்று மாலதி சொல்ல கெளதம் முன் வந்து
”நீங்க தானே மாலதி… எப்படி இருக்கீங்க…” என்றான் கெளதம்
”ம்ம் சூப்பரா இருக்கேன்… இந்த சனா தொல்லை தான் தாங்க முடியலை…. சீக்கிரம் இவளுக்கும் ஒரு கயிறு கட்டி வாயை அடைங்க” என்று சொல்ல சனா அவளை கிள்ளினாள்.
”எந்த கயிறு…? எல்லோ வா?” என்றவன் போன் அடிக்க அதில் கவனம் பதித்தான்.
என்ன சனா மஞ்சள் கயிறு எல்லாம் கேட்கறார்… நிஜமாவே லவ் சொன்னியா இல்லை என்கிட்ட மறைக்கிறீயா?”
”நிஜமா இன்னும் என் லவ் சொல்லலை…”
”எனக்கு என்னவோ நீ ஏற்கனவே சொல்லிட்டேபோல தோணுது… கார்த்திக் பார்வை பாரு அப்படியே இழுக்குது… டேய் கார்த்திக் என்னை அப்படி பாரு டா இப்பவே மேரேஜ் பண்ணிக்கலாம்” என்று மாலதி புலம்ப சனா அவளை முறைக்க அவளின் முறைப்பில் மாலதி நைசாக சிவா அருகே சென்றாள்.
”என்ன சிவா கீர்த்தி இல்லாமல் கல்யாணம் செய்யறீங்க..?”
”சே சனா மாதிரி எனக்கு கீர்த்தி நல்ல ப்ரெண்ட் அவள் இப்போ போய் வெளி ஊருக்கு போயிருக்கா… கஷ்டமா இருக்கு” என்றான்.
”இன்னும் எதுக்கு வெயிட் பண்ணனும்” என்று சனா கௌதமிடம் கேட்டாள்.
”இன்னும் ஒரு குடும்பம் வரணும் என்றதும் எல்லோரும் யாராக இருக்கும் என்று குழம்பினார்கள்.
கெளதம் எல்லோரிடமும் திகிலை கூட்டி நின்றான்.
”ஹலோ இதுக்கே இப்படியா கொஞ்சம் அங்க பாருங்க?” என்ற கௌதம் பேச்சில் அவன் சொல்லிய திசையில் பார்க்க, வளரின் தாய் தந்தை அண்ணன் அண்ணி என்று காரில் இருந்து புன்னகையோடு இறங்கி வந்து கொண்டு இருந்தார்கள்.
சிவா முன்பு போல பயப்படவில்லை இருந்தும் அதிர்ச்சி அடைந்தே பார்க்க வளர் ஓடி வந்து அம்மா அப்பா என்று அழுதாள்,
”கல்யாண பொண்ணு அழுதா மேக்கப் கலைஞ்சுடும் எல்லாம் பிறகு பேசிக்கலாம் நல்ல நேரம் முடிஞ்சிட போகுது வா மதி” என்று அவர்கள் கையை பற்றி ரிஜிஸ்ட்டர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றார்.
”அம்மா என் மேல யாருக்கும் கோவம் இல்லையே” என்று வளர் கேட்டாள்.
”அதல்லாம் ஒன்னுமில்லை டா எங்களுக்கு மனபூர்வமனா திருப்தி தான்” என்று வளர் தந்தை சொல்லிட மற்றவர்கள் ஆம் என்பது போல புன்னகைக்க, வளரின் தாயோ திருஷ்டியாக நெற்றி முறித்தாள்.
”வாங்க சார்… லேட்டா ஆகிடுமோ என்று நினைத்தேன்”
”என்ன தம்பி இன்னும் சாருன்னு மாமா என்று கூப்பிடுங்க எனக்கு நீங்க சிவா மாப்பிள்ளை ரெண்டு பேருமே ஒன்னு தான்”
”சாதனா தேங்க்ஸ்” என்று சிவா வளர் இருவருமே சொல்லி கொள்ள,
”எனக்கே இது தெரியாது எனக்கு எதுக்கு தேங்க்ஸ். எல்லாம் உங்க அண்ணா ஏற்பாடு போல” என்று சாதனா சொல்லி வைக்க சிவாவிற்கு முதல் முறையாக கௌதம் மீது நல்ல அபிப்ராயம் வந்தது.
இருக்குடும்பம் முன் மாலை மாற்றி ரிஜிஸ்ட்டர் கையெழுத்து பதிவிட்டு தாலி எடுத்து மாட்டி இனிதே சிம்பிள்ளாக அத்திருமணம் நிறைவடைந்தது.
முதலில் யாரிடம் காலில் விழ என்று வேதவள்ளியிடம் நெருங்கும் போதே ”சிவா ஜோடியா உன் பொஞ்சாதி கூட சேர்ந்து அவங்க பெத்தவங்க காலில் முதலில் வணங்கு டா” என்றதும் அவன் ‘திரு திரு‘ என முழிக்க,
”அதான் வேதா சொல்லிடுச்சே கேளு” என்றான் கௌதம். இருவரும் சேர்ந்த தம்பதியாக முதலில் சேர்ந்து இருக்கும் ஜோடியோடு விழவே வேதவள்ளி சொல்கின்றார்கள் என கௌதம் அறிந்தது போல சிவாவும் அறிந்து கொண்டான்.
அடுத்து வேதவள்ளியிடம் பாதம் வணங்கினான். அடுத்து சியாமா பாதம் வணங்கியவன் கௌதம் காலில் விழணுமா இல்லை எப்படி என்று திணற, கௌதமே ”ஹாப்பி மேரிட் லைப்” என்று கை குலுக்கினான்.
”தேங்க்ஸ்….” என்று சிவா கூறியதே சாதனாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது.
”டேய் இங்க ஒரு பெரிய மனுசி இருக்கேன் சிவா என் காலிலும்” என்று சாதனா கௌதம் அருகே வந்து நின்றாள்
”ஆமா நீ யாரு…?” என்றான் சிவா.
”டேய் டேய் இப்பவே என்னை தெரியலையா… நீ நடத்து அப்பறம் ஏதாவது பிரெண்டுனு சொல்லிக்கிட்டு வருவல அப்போ கவனிக்கிறேன்” என்று சாதனா முறுக்கி கொண்டாள்.
”ஏய் ரொம்ப தேங்க்ஸ் சாதனா நீ தான் எனக்கு மாறல் சப்போர்ட்” என்று சொன்னதும் சிரித்தாள்.
”அப்படி வா வழிக்கு” என்று குரூப்பாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்கள்.
அவளை போலவே கௌதமும் புகைப்படம் எடுத்தான். சாதனா அசந்த நேரம் மற்றவர்களும் கவனமின்றி இருந்த அந்நொடி சாதனா-அவனோடு அருகே இருந்த அந்த சமயம் செல்ஃபீ எடுக்க அவளும் அவனும் மட்டுமே இருந்தார்கள்.
அவன் அதிர்ஷ்டம் போட்டோ க்ளிக் செய்யும் போது சனா போனை பார்த்து திரும்ப கிடைத்த கேப்பில் அவளோடு சேர்ந்து புகைப்படம் எடுத்து திரும்பினான். கௌதம் தன்னோடு செல்ஃபீ எடுக்கின்றானா என்ற ஐயமிட்டு மீண்டும் திரும்ப அவனோ ஏதோ தீவிரமாக யாரின் எண்ணை தேடி கொண்டு இருந்தான்.
அதன் பின் அப்படியே பெரிய உயர் தர உணவகத்துக்கு சென்று பேமிலி டேபிளில் சாப்பிட அமர்ந்தார்கள். அதையும் செல்ஃபீ எடுத்து மகிழ்ந்தார்கள்.
”சார் நீங்க சொன்ன ஹோமில் உணவு எல்லாம் கொடுத்து விட்டோம்” என்று ஹோட்டலில் ஒரு ஆள் வந்து சொல்லியதும்
”தேங்க்ஸ் பார் டெலிவரிங்க” என்று கை கொடுத்து சென்றிட, சிவா புரியாத பார்வையை கௌதம்மிடம் வீசினான்.
”என்ன ஹோம்… என்ன டெலிவரி…? என்றே சாதனா கேள்வி கேட்டாள்
”கல்யாண சாப்பாடு போட வேண்டாமா? அதான் ஒரு ஹோமிற்கு லஞ்ச் அனுப்புவதா கேட்டு எத்தனை பேருக்கு என்று விசாரித்து நேரத்துக்கு ஹோட்டலில் இருந்தே பார்சல் அனுப்பிட சொல்லிட்டேன். அவங்க அனுப்பி விட்டாங்களாம். எனக்கு ஹோம்ல இருந்து ஆல்ரெடி மெசேஜ் வந்துடுச்சு. இவங்க இப்போ வந்து சொல்லிட்டு போறாங்க” என்று உண்பதில் கவனம் செலுத்தினான்.
”என்ன கௌதம் எவ்ளோ பெரிய விஷயம் நீங்க சாதாரணமா சொல்லிட்டு சாப்பிடறீங்க” என்று வளர்மதியின் அன்னன் கமல் கேட்டான்,
”வாட்.? ஓஹ் இப்ப நடந்தத சொல்லிறீங்களா? சார் இது எல்லாம் பெரிய இஸ்ஸுவே இல்லை. எப்படியும் கல்யாணம் பந்தல் மேளம் தாளம் அப்படி இப்படி என்று செலவு ஆகி இருக்கும் அதோட கம்பேர் பண்ணி இருந்தா இது கொஞ்சம் தான். அப்பா இறந்ததால் கிராண்டடா செய்ய முடியலை கொஞ்சம் வருத்தம் இருக்கு. பட் சிவா-வளர் பயந்ததால் சீக்கிரம் மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க எனக்கு இரண்டு குடும்பத்துக்கு தெரியாம கல்யாணம் செய்ய விருப்பம் இல்லை அதனால் தான் உங்ககிட்ட பெர்மிஸ்ஸின் வாங்க உங்க வீடு வந்ததே… சிவா லவ் பற்றி பேசியதே”
”இருந்தாலும் கிரேட் தான்” என்று கமல் சாப்பிட்டார்கள்.
வேதவள்ளிக்கு முதலில் கொஞ்சம் மனவருத்தம். தனது பேரனின் திருமணம் முடியாமல் சிவாவிற்கு என்றதும். கௌதம் எந்த விஷயத்தையும் யாரின் மனம் புண்படாமல் முடிவு எடுக்கவே விரும்புவான். அதனால் இந்த கல்யாணத்தில் இரு குடும்பமும் சேர்ந்து வந்தது பெரிதாக தோன்றவில்லை . ஆனால் பேரன் நடவடிக்கை அவருக்கு சற்றே வித்தியாசமாக இருந்தது. ஏன் அவசரமாக செய்தான். இதே திருமணத்தை இருவீட்டார் சம்மதத்தோடு கொஞ்ச காலங்களில் பின்னரே கூட செய்யலாமே? ஏன் அவசரமாக செய்தான் என்று யோசிக்க குறுக்கும் நெடுக்குமாக சாதனா சிவப்பு நிற சேலையிலும் கௌதம் சிவப்பு நிற டீஷர்டிலும் இருப்பதை கண்டு ஏதோ புரிவதாக பட்டது.
ஜோதி வேறு அவர்களின் எண்ணத்தை ஊர்ஜிதம் செய்வதாக
”அண்ணி இது அன்னிக்கு கடையில எனக்கு வாங்கும் போது அண்ணா உங்களுக்கு வாங்கி கொடுத்த சேலை தானே” என்றதும் கௌதம்மை பார்த்து சற்றே சேலைக்கு போட்டியாக வெட்கம் சிவக்க தலையை ஆட்டிவிட வேதாவிற்கு சந்தேகம் தீர்ந்தது. பேரன் ஒருத்திக்கு சேலை வாங்கி தந்து இருக்கின்றான். அதுவும் என்னிடம் சொல்லவில்லை.
சாதனாவை மேலும் கீழும் நன்கு ஆராய்ந்து பார்வை செலுத்தினால் அம்முதியவள். பேரன் சும்மா கூட வாங்கி கொடுக்கலாம் எதற்கும் நானாக கேட்டு குழப்ப வேண்டாம் கத்திரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வர தானே செய்யும் அப்பொழுது பார்க்கலாம் என்று விட்டு பிடித்தார். அவரின் மனம் தற்போது நிறைந்து விட்டது.
கௌதம் சேலையை பார்த்து எதுவும் சொல்லவில்லையே ஒரு வேலை மறந்து இருப்பானோ? நானா எப்படி கேட்பது நீங்க வாங்கி கொடுத்த சேலை நல்லா இருக்கா என்று கேட்பதென யோசித்தவள் அவன் தினமும் அவளது வாட்சப் ஸ்டேட்டஸிற்கு கமெண்ட் செய்வது நினைவு வர தன்னை வீட்டில் ஒரு முறை தனியாக செல்பீ எடுத்த புகைப்படத்தை பதிவில் ஏற்றி கீழே ”நான் சேலை கட்டி இருக்கேனாக்கும்” என்று ஸ்மைலி போட்டு வைத்து விட்டு கௌதம் அதை பார்த்துவிட்டதாக காட்டியதா என்று ஆவலாக பார்த்தாள்.
பத்து நிமிட கழித்து அவன் அவளை பார்க்க அவளும் அவனை பார்த்து என்ன என்று கேட்க, வாட்ஸப்பில் ”சேலை கட்டி இருக்கறது பார்த்தாலே தெரியுது” என்று அனுப்பினான்.
”நீங்க வாங்கி கொடுத்தது” என்று அவளும் அனுப்பினாள்.
”ஐ நோ” என்றான். இவன் இப்படி கல்லுளிமங்கன் மாதிரி பதில் அனுப்பறானே? என்று அவளாகவே,
”எப்படி இருக்கு?”
”ரொம்ப ரொம்ப அழகா இருக்க சனா” என்று அனுப்பினான். அதன் பிறகே முகம் மெங்கும் ஆயிரம் வால்ட் பல்பு போல அவள் முகம் மேலும் பிரகாசம் ஆனது சனாவிற்கு.
-நினைவுகள் தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
Nice epi
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️