Skip to content
Home » தித்திக்கும் நினைவுகள்-13

தித்திக்கும் நினைவுகள்-13

அத்தியாயம் –13

சாப்பிட்டு கௌதம் தனது வீட்டிற்கு அழைத்து வந்தான். சாதனா முதலில் தயங்கி நிற்க கௌதம் முறைப்பில் தானாக வந்தாள்.

அது அபார்ட்மெண்ட் அடுக்ககம். இரெண்டாம் அடுக்கில் மூன்றாம் வீடு. மூன்று அறை அட்டாச் பாத் ரூம் ஹால் என்றே இருந்தது.

வளர் மட்டுமில்லை வளர் குடும்பத்தினர் சேர்த்து சிவா சியாமா கூட இந்த வீட்டிற்கு முதல் முறையாக நுழைகின்றார்கள். சனாவும் தான்.

வேதா ஜோதியை விட்டு எல்லோருக்கு குடிக்க ஜூஸ் போடா சொல்ல வளரின் அப்பா அம்மா டீ என்றதும் கௌதம் டீ போடா ஜோதி ஜூஸ் ஊற்றி கொடுத்தாள்.

நான் டீ போடறேன் உனக்கு எதுக்கு சிரமம்” என்ற சியாமளா பேச்சினை விடுத்து நீங்க உட்காருங்க நானே கலக்கறேன்” என்று பிரம்மிக்க வைத்தான்.

ஜோதி அறையில் சென்று பார்த்தபோது அவளுக்கு அவன் செய்து வைத்திருக்கும் சலுகைகள் எல்லாம் கண்டு சிவா கௌதம்மை எண்ணி பெருமையே அடைந்தான்.

முன்பு கௌதம்மை பார்க்க தந்தை அழைத்து செல்லும் போதெல்லாம் கௌதம் தந்தையும் தன்னையும் மதிக்காதது போக சிவாவிற்கு கௌதம் என்றாலே பிடிக்காமல் போனது. ஒவ்வொரு முறையும் தந்தை கவலை முகமே பார்க்க கூடுதல் வெறுப்பே வர தந்தை சுகவீனமாக இருந்த போதிலும் வர மறுத்தவனை எண்ணி கோவமே கொண்டான். ஏனோ இப்பொழுது கௌதம் கோவத்திற்கு நியாயம் இருப்பதாக பட்டது. அவனின் சில மாற்றம் இது தான் தன் அண்ணனின் சுயரூபம் என்று எண்ணி அகம் மகிழ்ந்தான்.

அதற்கு ஏற்றார் போல இன்று நடந்த நிகழ்வுகள்.

சென்னையில் இது மாதிரி அபார்ட்மெண்ட் வாழ்கை தான்… என்ன பண்ண எனக்கு செட் ஆகிடுச்சு” என்று கமல் பார்வையை அறிந்து சொன்னான்,

எனக்கு கூட இப்படி வீடுகட்டணும் ஆசை தான் கலைரசனையோடு அழகா வாங்கி இருக்கீங்க

கொஞ்சம் நிறுத்திட்டு உங்களுக்கு எப்படி விஷயம் தெரிந்தது எப்படி வந்தீங்க என்ன ஆச்சு என்று சொல்லிடுங்க எனக்கு தலையே சுத்துது” என்று டீ யை பருகி சாதனா வினவினாள்,

நானே சொல்றேன் மா. ரெண்டு வாரம் முன்ன கௌதம் தம்பி எங்க வீட்டுக்கு வந்தது.

அன்றைய நிகழ்வை கண் முன்னே……

யாரு வேணும்?” என்று கதவை திறக்க,

வளர்மதி?”

என் மகள் தான் காலேஜ் போயிருக்காநீங்க யாரு எதுக்கு கேட்கறீங்க?” என்றார் பெற்றோர்

உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்

வாங்க உட்காருங்க” என்று மோரை கொடுக்க சொல்லிவிட்டு என்ன விஷயம்” என்றார்.

நான் கௌதம் கார்த்திக் இப்போ கொஞ்ச நாளுக்கு முன்ன இந்த ஊரில் ரவீந்தர் என்று இறந்தாரே அவரோட மூத்த மகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

ஓஹ் நீங்க தானா கேள்விப்பட்டு இருக்கேன் முதல் சம்சார மக்கா டவுன்ல இருக்கறதா

ஆமாம். நான் இப்ப பேசவந்தது என் தம்பி சிவா உங்க மகள் வளர்மதியை விரும்பறான்.

கண்டதை பேசாதீங்க எங்க மகளை… என்று கோபமாய் ஆரம்பிக்கும் முன்

வளர்மதியும் விரும்பறா” என்று குறுக்கிட்டான்.

அதுக்கு என்ன பண்ண சொல்றிங்க உங்க வீட்டு பிள்ளைக்கிட்ட சொல்லி என் மகளிடம் பேச வேண்டாம் என்று சொல்லிடுங்க. வரட்டும் இன்னிக்கு அவள் வந்த பிறகு படிப்பும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று கல்யாணத்தை முடிக்கிறேன்” என்று சினத்தோடு பேசினார்.

சார் நான் அவங்களை பிரிக்க சொல்லி கேட்டுக்க வரலை. சேர்த்து வைங்க என்றதற்கு தான் வந்தேன் என்று வந்த நோக்கத்தை கூறினான்.

நீங்க வேற ஜாதி நாங்க வேற ஜாதி இதெல்லாம் சரிப்படாது தயவு செய்து பேச்சை விட்டுட்டு உங்க வேலைய கவனிங்க

உங்களுக்கும் அவனுக்கும் ஏதோ நிலதகராறு இருப்பதாகவும் கேள்விபட்டேன் இந்த ஜாதி மதம் எல்லாம் தயவு செய்து அதை மறந்துவிட்டு இரெண்டு மனசை மட்டும் புரிந்து பேசுங்க என்று கௌதம் எடுத்துரைத்தான்.

இங்க பாருங்க என் மகளை நாங்க கண்டிச்சு சொன்னா கேட்டுப்பா மீறினாலும் நாங்க கட்டாயப்படுத்தி கட்டி வைப்போம். நீங்க வந்த வழி பார்த்து… என்று வாசலை கைகாட்டி பேசினார்.

ஏன் சார் உங்க கையில பிறந்தப்ப பூ மாதிரி உங்க பொண்ணு கையில் கொடுத்து இருப்பாங்க. அப்போ என்ன நினைச்சு இருப்பீங்க. மகள் ஆசைப்பட்டதை எல்லாம் எவ்ளோ விலை என்றாலும் அதை ஒரு தந்தையா இருந்து வாங்கி தரணும் அது அந்த நிலவா இருந்தாலும் என்று நினைச்சு இருப்பிங்க இல்லையா. அப்படிப்பட்ட பெண்ணை இளவரசியா வளர்த்துவிட்டு இப்போ அவள் வாழ்க்கையில் அவள் கடைசி வரை மனசில ஒருத்தனை உயிரா நினைச்சு இருக்கா என்று தெரிந்தும் ஒரு அடிமாட்டு மாதிரி உங்களுக்கு பிடிச்ச மாதிரி கட்டி வச்சா அவளுக்கு சந்தோஷம் கிடைச்சுடுமா?

மனசுல என் தம்பி சிவாவை சுமந்துக்கிட்டு நீங்க கை காட்டுற மாப்பிள்ளைக்கு கட்டி வச்சிட்டா அவ அந்த நாலு சுவற்றில் வாழும் வாழ்கை சந்தோஷமா இருக்குமாஇல்லை பிணமா வாழ்வாளா?” என்று கேட்டான்.

ஊசி விழுந்தாலும் கேட்டும் அளவிற்கு நிசப்தம். அவனும் யோசிக்க அவகாசம் தந்தான். வளரின் தந்தை நேசமணி தாய் வடிவும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க கிச்சனில் இருந்து கமலின் மனைவி அனிதா எட்டி பார்த்தார்.

தம்பி நீங்க சொன்னபடி செய்தா எங்க சொந்தத்துல ஜாதி சனம் எல்லாம் எங்களை ஒதுக்குவாங்க ஒரு பைய மதிக்க மாட்டாங்க என்றார் ஆதங்கமாய்.

சார் நாமெல்லாம் மனுஷங்க. ஜாதிமதம் எல்லாம் பார்த்து பழகற காலம் எப்பவோ போயிடுச்சு. இப்ப எல்லாம் மனிதாபிமானம் உள்ள மக்கள் தான் சமத்துவம்  எதிர் பார்க்கறாங்க. புரியாதவங்களுக்கு சொல்லி புரியவைங்கஇல்லையா உங்களை புரிச்சுக்காதவங்களை நீங்க கவலை படத்தேவையில்லை.

உங்களுக்கு உங்க ரத்தம் உங்க மகள் சந்தோஷம் முன்ன இதெல்லாம் பெரிய விஷயமா

பேச்சுக்கு இதெல்லாம் நல்லா தான் இருக்கும் ஆனா நடைமுறைக்கு…” என இழுத்தார்.

ஏன் சார் இப்படி எல்லோரும் சொல்லிட்டா யாரு தான் நடைமுறைப்படுத்தறது?”

நீங்க சிவாவுக்கு என்ன வேண்டும் என்றே பின்னால் இருந்த கமல் கேட்டான்.

அண்ணா… அவன் என் அப்பாவின் இரண்டாவது மனைவியோட மகன். ஆனாலும் அவங்க நல்லவங்க தான்” என்றதும் கமல் சற்றே யோசித்தான். இந்த உலகில் இப்படி பட்டவர்கள் அவர்கள் மேல் பழி சுமத்தி தடுக்க நினைக்கும் யுகத்தில் சின்ன அன்னையின் மகனை பற்றி உயர்வாக சொல்லி பெண் கேட்கும் கௌதம்மை கமலுக்கு மிகவும் பிடித்து இருந்தது. நிலதகராறில் கூட சிவா பக்கம் நியாயம் என்று அறிந்த கமல் அவன் தந்தையை பார்க்க,

எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க யோசிக்கணும்” என்று தந்தை மகன் இருவரும் சொன்னார்கள்,

நேரம் எடுத்துக்கோங்க நல்ல முடிவா சொல்லுங்க அப்பறம் இது பற்றி வளர்மதியிடம் பேச வேண்டாம். அவங்களுக்கு தெரிந்தால் என் தம்பி சிவாவுக்கு தெரிய வந்துடும். நான் வந்து பேசியது அவனுக்கு தெரியாது.

எப்படியும் நீங்க நல்ல முடிவா எடுப்பிங்க என்று நம்பிக்கை இருக்கு. அப்படி நல்ல முடிவா எடுத்தப்ப சொல்லி விடுங்க நாளைக்கும் வர்றேன்” என்று கை குப்பி வணங்கி சென்றான்.

கௌதம் சொல்லியது போலவே வந்து நின்ற போது அவர்களும் நல்ல முடிவே சொ?னார்கள். இருந்தும் ஊர் கூட்டி திருமணம் என்பது சாத்தியம் இல்லை திருமணம் முடிந்த பிறகு ஊருக்கு தெரிந்தால் கூட பரவாயில்லை. என்று நேசமணி சொல்லிடசிவா வளர் திருமண பிளானை சொல்லி அவர்களுக்கு நாம் ஒரு இனிய அதிர்ச்சி தரலாம் என்று கௌதம் சொல்ல அவர்களுக்கு சிம்பிள்ளாக மணமுடித்து சொல்லிக்கலாம் என்று தோன்றிட இதோ திருமணமும் இனிதே முடிந்தது.

அப்பா உங்களுக்கு எல்லாம் என் மீது கோவம் இருக்கா சொல்லிடுங்க நான் இப்படி வீட்டுக்கு தெரியாம ரிஜிஸ்ட்டர் ஆபிஸ்ல அப்பா அம்மா உனக்கு… அண்ணா நீ…” என்று வளர் இப்பொழுதும் அழுது கேட்டாள்,

அதெல்லாம் இல்லை டா கண்ணு நீ சந்தோஷமா இருக்கியா அது போதும் நீ நல்ல இடத்தில் தான் வாழ்க்கை பட்டு இருக்க” என்று சொல்லிட நிம்மதி அடைந்தாள்.

அப்பாடி எனக்கு இப்ப ஓகே” சாதனா நிம்மதி அடைந்தாள்.

சரிங்க தம்பி நாங்களும் கிளம்பறோம் வீட்டுக்கு போய் ஆகா வேண்டிய வேலை வேற நிறைய இருக்கு சடங்கு எல்லாம் பெண் வீட்ல செய்யணும்” சிவா ஒரு அர்த்த பார்வையோடு வளரை பார்க்க வளரோ தானாக நிலம் நோக்கினாள்.

சரிங்க சென்னை வந்தா கண்டிப்பா இனி இங்க வரணும்” என்று கைகுலுக்க கமலோ கண்டிப்பா” என்று சொன்னான்.

ரொம்ப தேங்க்ஸ்… அப்பறம் என்னை மன்னிச்சுடுங்க” என்று சிவா கௌதம்மிடம் சொன்னான்

தேங்க்ஸ் எதுக்குன்னு தெரியுது சாரி எதுக்கு?” என்று கௌதம் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு ஒய்யாரமாய் கேட்டான்.

இல்லை நான் உங்களை தப்பா நினைத்தேன். மதிப்பு கூட கொடுத்ததில்லை… இப்போ உங்களுக்கு முன்னாடி மேரேஜ் பண்ணிட்டேன். சாரி அண்ணா” என்றான்.

புதுசா மரியாதை எல்லாம் கொடுக்காதே நல்லா இல்லை. நானும் அதே தவற தான் செய்தேன். சோ நோ மன்னிப்பு ஓகே. அண்ட் எனக்கு மேரேஜ் ஆகலை என்று சொல்லிட்டு தியாகம் அது இது என்று இன்னிக்கு நைட் வேஸ்ட் பண்ணிடாதே… ஹாப்பி மேரீட் லைப் ஓகே” என மனதார வாழ்த்தி கைகொடுக்க சிவாவும் கைகொடுத்து முறுவலித்தான்.

காரில் சிவா-வளர் கமல்-அனிதா நேசமணி-வடிவு என ஆறு பேரும் செல்ல ஓலா புக் செய்து வழி அனுப்ப செய்தான்.

என்ன வேதா எப்படி போச்சு இன்னிக்கு நாள்

போடா நீ ரிஜிஸ்ட்டர் ஆபிஸ் வாங்க என்று சொல்லிட்ட நான் உனக்கு ஏதாவது கல்யாணமா என்று கூட நினைச்சு வந்தேன். சிவா கல்யாணம் சந்தோஷம் தான் இருந்தாலும் உனக்கு முடிச்சு பண்ணி இருக்கலாமே?”

சொல்லி இருந்தா எப்படியும் எனக்கு முடிக்கற வரை வெயிட் பண்ணனும் எனக்காக யாரும் வெயிட் பண்ண வேண்டாம்

இல்லை கௌதம் எனக்கும் மனசுல அதே நினைப்பு தான் உனக்கு முடிகாம” என்று சியாமளா சொன்னார்.

வேதாக்கு சொன்னது தான் உங்களுக்கும்மா எல்லாம் நல்லபடியா முடியும் இனி அத பேசவேண்டாம்” என்று வாயடைத்து விட்டான்.

ஓகே அத்தை நான் கிளம்பறேன்” என்று சாதனா சொல்லும் போது

ஏன் டி நீ அவன் காதலுக்கு உடந்தையாஉனக்கு அங்க வரும் போதே தெரியுமா உங்கிட்ட சொல்லாம இருக்க மாட்டானே” என்று காதை பற்றி திருகினார்.

ஆ காது வலிக்குது அத்தை விடுங்க… காதலிச்சது உங்க பையன் தாலி கட்டிக்கிட்டு போனது உங்க பையன் கேள்வி கேட்டு காதை திருக்கறது மட்டும் என்னையா?” என்று சொல்ல காதை விடுவித்து

சரி சரி உங்க அம்மா தாமரைக்கு இது தெரியுமா?”

இனிமே தான் சொல்லணும். அத்தை நீங்க வீட்டுக்கு வந்து அப்படியே சொல்லிடுங்க. ஜோதிக்கு பிறந்த நாள் வேற வாங்க அத்தை” என்றதும் சனா கௌதம்மை பார்க்க ஹ்ம்‘ என்று சொல்லிட வேதா வீட்டில் இருக்க கௌதம் அவர்களை காரில் அழைத்து சென்றான்.

கௌதம் வீட்டு வாசலில் விட்டுவிட்டு ” அம்மா எனக்கு வேற வேலை இருக்கு நீங்க கிளம்பும் போது போன் செய்யுங்க நானே வந்து பிக் அப் பண்ணிக்கறேன்” என்று சொல்ல சனா முகம் வாடியது. இருந்தும் தன் தாய் அவனை குறை கூற கேட்பதை விரும்பாமல் அவன் செல்வதே மேல் என்றும் தோன்றிட அமைதியாக ஆனாள்.

வா சியாமளா வா ஜோதி என்ன எதாவது விழாவா?” என்று வாசலில் வந்ததும் மகிழ்வாய் வரவேற்றார்.

பஸ்ட் ஜோதிக்கு விஷ் பண்ணுமா அவளுக்கு பெர்த்டே” சாதனா சொல்லி உள்ளே சென்றாள்.

என்ன ஜோதிக்கு பிறந்த நாளா…வாழ்த்துகள் டா ஜோதி அண்ணி நீங்க எப்போ வந்தீங்க

காலையில் தான் என்றார் சியாமளா.

சிவா வந்து இருக்கானா?” என்று ஆர்வமாய் கேட்டார்.

அது அண்ணி சிவா வந்து

அம்மா நான் ஒரு கல்யாண வீட்டுக்கு போயிடு வந்து இருக்கேன் என்று சாதனா பீடிகை போட்டாள்

யாருக்கு உன் கூட இருப்பாளே மாலதியா கீர்த்தியா?” என்று தான் தாமரை கேட்டார்.

உன் அண்ணி பையன் சிவாவுக்கு என்று கொஞ்சி சென்றாள்.

விளையாடாதே சாதனா…. என்றார் தாமரை.

நான் விளையாடல சிவா வளருனு ஒரு பெண்ணை விரும்பி கல்யாணம் பண்ணிகிட்டான். இன்னிக்கு தான் நடந்துடுச்சு. அதுவும் என் தலைமையில்…” என்று பெருமை பட்டாள்.

சாதனா என்ன இது விளையாட்டுஎனக்கு பிடிக்கலை அண்ணி என்ன ஆச்சு நீங்க ஏன் தயங்கறீங்க..” என்று கேட்டுவிட்டார். சியாமளா தயங்கவும். “அப்படினா சாதனா சொல்றது

உண்மை தான் அவன் இப்படி தீடீரென்று கல்யாணம் செய்துப்பானு நினைக்கலை

நீங்க அதுக்கு தான் இப்படி கிளம்பி போனிங்களா… என் பொண்ணு சிவா கல்யாணம் என்று கனவு கண்டுக்கிட்டு இருந்தேன்… இப்படி பொசுக்குன்னு சொல்றிங்க…..  என்று மூக்கை உறிஞ்சினார்.

அங்க போகிற வரை எனக்கு தெரியாது என்று சியாமளா எடுத்துரைத்தார்.

இது என்ன புதுசா இருக்கு…. கல்யாணம் போக பட்டு புடவை எல்லாம் அணிந்து கொண்டு போய் இருக்கிங்க அங்க போற வரைக்கும் தெரியாது என்றால் என்ன அர்த்தம்…. எனக்கு என்னவோ நீங்களே வேண்டுமென்றே பண்ற மாதிரி இருக்கு… உங்க அண்ணாவுக்கு தெரியுமாசாதனா பற்றி யோசிச்சீங்களா?” என்று குமைந்தார்.

” ஐயோ தாமரை அண்ணாவுக்கும் தெரியாது. எனக்கே கொஞ்ச நேரம் முன்ன தான் விஷயம் தெரியும். கௌதம் தான் எங்களுக்கு தெரியாம வர சொன்னதே இல்லை என்றால் சிவா திருமணம் யாருமில்லாம நடந்து இருக்க வாய்ப்பு இருக்கு  என்று கூறினார் சியாமளா.

என்ன அண்ணி சொல்றிங்க கௌதமா ஓஹோ இது அவன் வேலையாஇப்ப நடந்து இருக்கறதுக்கு மட்டும் என்னவாம் அப்படி தான் நடந்து இருக்கு ஏன் ஊரை கூப்பிட்டு நடக்கவேண்டியதை இப்படி பண்ணி வச்சி இருக்கான்

ஐயோ அம்மா சிவா தான் யாருக்கும் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிவை என்று என்கிட்ட ஒற்றை காலில் நின்றான். கௌதம் மாமாவுக்கு தெரிந்து அட்லீஸ்ட் அத்தையிடம் தீடீரென சொல்லி புரிய வைத்து அதே போல வளர்மதி வீட்ல சொல்லி புரிய வைத்து அவங்களும் கலந்துக்கற மாதிரி பண்ணினார் அது கூட சிவாவுக்கு தெரியாது.

சிவா தான் திருட்டுத்தனமா யாருக்கும் தெரியாம பண்ணிட்டு அதுக்கு பிறகு பார்த்துக்கலாம் என்றது ஆனா கெளதம் மாமா தான் யாருக்கும் தெரியாம கல்யாணம் செய்ய வேண்டாம் என்று இப்படி பண்ணினார்

நீ பேசாதே நீ சிவா மேல எவ்ளோ ஆசை வைச்சே அதெல்லாம் அவனுக்கு எப்படி தெரியும்… வேண்டுமென்றே இப்படி செய்யறான்….

அய்ய அம்மா நானும் சிவாவும் நல்ல நண்பர்கள் மட்டுமே மற்றபடி நீ நினைப்பது போல யோசிச்சது கூட கிடையாது அதுவும் இதுல கெளதம் மாமாவுக்கு சம்மந்தமே இல்லை…

சிவா ஏற்கனவே வளர்மதியை இரண்டு வருஷமா விரும்பறான்… என்கிட்டயே ஆறு மாசத்துக்கு முன்ன தான் சொன்னான்

தன் மகளின் மனதில் அவன் இல்லை என்றதும் சிவா திருமணம் எப்படி நடந்தால் என்ன என்று நினைக்கஅடுத்து பெண்ணை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டாள். இதற்கிடையில் சாப்பிட ஐஸ்பெட்டியில் ஐஸ் எடுத்து எல்லோருக்கும் கொடுக்க சாப்பிட்டு முடித்தனர்.

தாமரை மனதில் ஓரத்தில் இதனை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் நடந்ததை மாற்றவா முடியும் என்று அமைதியானாள்.

ஜோதியின் அலைப்பேசி மணி அடிக்க எடுத்தாள்.

அம்மா அண்ணா வந்துடுச்சு நாம கிளம்பலாமா?”

யாரு சிவா வந்து இருக்கானா?” என்று கேட்டு வாசலில் கால் வைக்க,

கௌதம் தாமரை, ஜோதி அண்ணாவை உள்ள கூப்பிடு

அம்மா அண்ணா வராது வா நாம போகலாம்” என்று சொல்லி கையை பற்றி அழைத்து செல்ல தாமரை சியாமளாவை வழி அனுப்ப வர கௌதம் கண்கள் சென்ற திசையை பார்க்க அங்கு சாதனா நிற்க சாதனா திட்ட முடியாமல் இருந்தார் தாமரை.

அத்தை நீங்க கிளம்புங்க” என்று சொல்லிடவும்

கௌதம்… உள்ள வர சொல்லு ஜோதி

ஐயோ அம்மா நீ வா” என்று ஜோதி சியாமளாவை காரில் ஏற்றி அமரவைத்தாள்.

கார் சென்றதும் உள்ளே வந்த தாமரை கௌதம்மை வசை பாடினாள். அங்கோ காரினில்

அம்மா அண்ணா அங்க உள்ளே வராது அத்தை முகத்தில் அடித்தார் போல பேசும் அண்ணா உள்ளே வராமல் இருக்கிறதே நல்லது” என்று முடித்தாள்

ஏய் குட்டிம்மா என்ன அங்க கிசுகிசுன்னு

ஒன்னுமில்லை அண்ணா” என்று சொல்லி ஜோதி மறுத்து விட்டாலும் அவனுக்கு ஜோதியின் புரிதல் தெரிந்து சந்தோஷம் அடைந்தான்.

சிவா வளரின் வீட்டில் இருப்பதால் சியாமளா இரு தினம் கௌதம் வீட்டில் இருந்தார்.

காலையில் ஏலக்காய் டீ தயாரிக்கும் கௌதம் பார்த்து வியந்தாள். இரவு தோசை சுட்டு ஜோதிக்கு தருவது ரசித்தாள். பின்னர் தானாக நிம்மதியோடு கால் டாக்ஸியில் கௌதமே வழியனுப்பினான்.

வேதவள்ளி கௌதம்மிடம் வந்து முன் நிற்க,

என்ன வேதா அப்படி பார்க்கற” என்று லேப்டாப்பில் கவனம் பதித்தபடி கேட்டான்,

ஏன் டா சிவா உங்கிட்ட எப்பதிலேருந்து பேசறான்

இங்க நம்ம வீட்ல இருக்கும் போது தான் பேசினான்” என்று மவுசில் வேலையை தொடர்ந்தான்.

அப்போ அவன் காதல் விவகாரம் உனக்கு எப்படி தெரியும்?”

சனா சொன்னா வேதா என்றான் இயல்பாய்.

யாருடா அது சனா” என்றார் வேதவள்ளி.

-நினைவுகள் தொடரும் 

-பிரவீணா தங்கராஜ்

1 thought on “தித்திக்கும் நினைவுகள்-13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *