Skip to content
Home » தித்திக்கும் நினைவுகள்-14

தித்திக்கும் நினைவுகள்-14

அத்தியாயம்14

சாதனா அதான் தாமரை அத்தையோட பொண்ணு” என்று கௌதம் விளக்கினான்.

அவ எப்படி உங்கிட்ட சொன்னா அவகூட உனக்கு எப்படி பழக்கம்” என்றதும் வேலையை நிறுத்தியவன் மெல்ல மெல்ல மாட்டினேன் என்ற படி வேதாவை பார்த்தான்.

சொல்லுடா எப்படி தெரியும் என்றாள் அம்முதியவள்

ஒரு பேட்டி என்னயுடையது ஒரு புக்ல வந்ததா காட்டினேன்ல அதை எடுத்ததே அவ தான்.

  அவ அங்க ஒர்க் பண்றதே எனக்கு அப்போ தான் தெரியும் என்னை பார்த்து ஷாக்காகி பேய் முழி முழிச்சா நானா பேட்டி முடிச்சுட்டு பேசினேன். அவ தயங்கி பேசினா அப்போ பழக்கம்” அப்பாடி எப்படியெல்லாம் பதில் சொல்றது பட் இது பொய் இல்லையே என்றும் தோன்றிடவேதாவிற்கு தான் சப் என்று ஆகிவிட்டது.

ஆக பையன் நிஜமாவே சும்மா தான் பார்த்திருப்பானா என்று வேதா நொடித்து கொள்ள மீண்டும் கேள்வி முன் வைத்தாள்.

நீயும் அந்த பொண்ணும் ஒரே சிவப்பு நிற ஆடையை போட்டு வந்திங்க

வேதா அதுக்கு பேரு தான் கோ-இன்சிடென்ட்…

அதுசரி அவளுக்கு ஏன் நீ புடவை எடுத்து கொடுத்தஅதுவும் என்கிட்ட இந்த நிமிடம் வரை சொல்லவே இல்லை” ஆக வேதாவுக்கு டவுட் ஆகிடுச்சே… சமாளி கௌதம்.

வேதா அவ நம்ம ஜோதிக்கு சேலை தேர்ந்து எடுத்து கொடுத்தா. அதுக்கு சும்மா தேங்க்ஸ் பண்ண தான் வாங்கி கொடுத்தேன். என்ன நீ கேள்வி மேல கேள்வி கேட்கற?” என்று முறுக்கினான்.

ஒன்னுமில்லை அதான் சொலிட்டேயே ஒன்னுமில்லை நானும் ஏதாச்சும் இருக்கும் என்று கேட்டா இந்த பயல் ஒன்றும் சொலிக்கறாப்பல இல்லை… இவன் அப்பன் இவன் வயசுல இரண்டு கல்யாணத்தை பண்ணிகிட்டான் மூனு பிள்ளையை பெத்தான். இவன் இன்னும் வேலை விவசாயம் கம்ப்யூட்டர்-பெட்டி என்று இருக்கான்.

கண்ணுக்கு லட்சணமா ஒருத்தி இருக்காளே பார்க்கலாம் என்று இருக்கானாகூட வேலை பார்க்குற பொண்ணுங்க இருந்து கூட்டாளி வரைக்கும் எல்லாம் ப்ரெண்ட்ஸ் அப்படினு சொல்லிட்டு இருக்கான்.

  சரி அந்த சிவப்பு கலர் சேலை கட்டி இருக்கறவளை கொஞ்சம் பார்த்து பார்த்து நழுவரனே என்று பார்த்தா அவளுக்கு சேலை வாங்கி கொடுத்தது தேங்க்ஸ் பண்றதுக்காம்.. இவனுக்கு ஒரு கல்யாணம் செய்து கொள்ளு பேரனை பார்த்துட்டு கண்ணு மூடலாம் என்று பார்த்தா விட மாற்றானே…. என் காலத்துக்கு பிறகு யார் இருப்பா…” என்று புலம்பி கொண்டே போனார் வேதா.

அவனோ மனதினுள் வேதா கவலைப்படாதே அவ தான் உன் பேத்தி‘ என்று முறுவலித்தான்.

ஊரில் எல்லோருக்கும் விஷயம் தெரிந்து பாதி பேர் சந்தோஷம் அடைய மீதி பாதி பேரோ ஜாதி விட்டு ஜாதி திருமணத்தை அவலாக மென்றனர். அதுவும் இன்று சின்னதாக வரவேற்பு வைக்கவும் செய்தார்கள்.

வளர்மதியின் வீட்டில் கூட நேசமணி குடும்பத்தில் பாதி உறவுகள் வர மறுத்து விட்டார்கள். கொஞ்சம் பேர் மட்டும் மகள் சந்தோஷம் முக்கியம் நெசமணி முடிவு சரியே என்று பேசி கொண்டார்கள்.

அதுவும் வளர்மதியை சியாமளவும் ஜோதியும் கண்ணும் கருத்துமாக கவனிக்க கண்டு எல்லோரும் பாராட்டவே செய்தார்கள். சனா சேலையில் இருந்தாலும் கௌதம் இயல்பாகவே ஆடை அணிந்தான். ஆனாலும் கௌதம் பார்க்க ராஜ களையாக இருந்தான்.

ஒரு சமயத்தில் மாடியில் இருந்து படிக்கட்டில் வேகமா இறங்க கௌதம் ஏற மோதி கொண்டனர். சனா விழ போக பிடித்தவன் அவளது வெற்றிடையில் அவன் கரம் பதிய துணுக்குற்று வேகமாக அவளை நிற்க வைத்து கையை விலகி கொண்டான்.

ஓஹ் காட் கௌதம் நீ தொட்ட இடம் இன்னும் குருகுருகுது… என்ன டா பண்ணி தொலைச்ச…உன்னை பார்த்ததிலருந்து நான் நானவே இல்லை… எல்லோரையும் சட்டுனு பேசி வாயடைத்து விடுவேன் ஆனா உன்னை பார்த்தா எனக்கு பேசவே திக்குது… அதுலயும் இப்படி இருந்தா எப்படி டா லவ் சொல்லுவேன்…‘ என்று அவள் நினைக்க

ஐயோ சனா செம ஃபீலிங்க்… தனியா உன்னை சந்திக்க முடிஞ்சா லவ் சொல்லிடுவேன் பட் என்னை சுற்றி நிறைய பேர் வந்துட்டே இருக்காங்க… இதுல சாரல் மாதிரி உன் இடை பற்றியது… என் லவ் நான் சொல்லாமலே உனக்கு தெரியாதா என்ன இருந்தும் நேரிடைய சொல்லணும் எல்லோரும் எப்போ போவாங்க என்று இருக்கு என்று அவனும் எண்ணினான்.

மேடையில் அதிகம் நிற்காமல் இருந்தான். குடும்ப சகிதம் ஐந்து புகைப்படத்திற்கு மட்டுமே தலை கட்டினான். பின்னர் வந்தவர்கள் கவனிக்க நேரம் போனது. அப்படி இருந்தும் சனாவை அவன் கண்கள் ரசிக்கவே செய்தது. அதை இன்னும் ஓர் ஜோடி கண்கள் குரோதத்துடன் கண்டன.

புதிதாக மாற்றப்பட்ட வீட்டின் அமைப்புகளில் வண்ண நிறம் கொண்ட வீடாக மாற்றி இன்னோரு அறையும் கட்டி இருப்பதை கண்டு சனா கேட்ககௌதம் கட்ட சொன்னான் கட்டியதாக பணியாளர்கள் சொல்லிட அது இப்பொழுது வளர்-சிவா அறையாக மாறியது.

சியாமளா வேதவள்ளி சனா ஜோதி சிவா வளர்மதி வளர்மதியின் சொந்தம் என வீடே விழா கோலமாக காட்சி அளித்தது.

சனா கௌதமிற்கு டீ உணவு எடுத்து செல்வதை கண்டு தாமரை அவளை தடுத்து அவள் தங்கை ஜோதிய அனுப்பிவிட்டாள்.

அதற்கு அடுத்த நாளே தாமரை சாதனாவை அழைத்து சென்னை வந்துசேர்ந்தார். காந்தன் கூட இருந்து வந்து இருக்கலாம் என்றதற்கு சாதனா வேலை பாதிக்கும் என்றுரைக்க மவுனமானார்.

சாதனாவை கௌதம் கண்களில் இருந்து படாமல் பார்த்து கொண்டால் போதும் என்று நினைக்க தாமரைக்கு தெரியாது கௌதம்மை விட சாதனா தான் கௌதம்மை பன்மடங்காக விரும்புகிறாளென்று.

நாட்கள் உருண்டோட அன்று ரவீந்திரன் நினைவு நாளும் வந்தது. அமைதியாக வழிபட்டு மவுனத்துடன் அவரவர் திரும்பினார்கள். சியாமளா மட்டும் அதிகம் கண்ணீர் கண்டு எதுவும் செய்ய முடியாமல் தவித்தனர். இரு தினம் கழிய சியாமளா தன்னை தானே சமாதானம் செய்து கொண்டார்.

தாமரையும் இதற்கு மேல் இனி அண்ணி முறையோடு பட்டும் படாமலும் இருக்க முனைந்தாள்.

அன்று சாதனாவின் உடைகளை மடித்து வைத்து மூடும் சமயம் அவளின் உடைகளின் அடியில் ஒரு புத்தகம் இருப்பதை கண்டு அதனை எடுக்க அது அவள் பணிபுரியும் இதழின் புத்தகம் என்று தெரிய வந்தது.

படிச்சிட்டு அப்படியே வச்சிட்டா போல என்ன பொண்ணு துணிக்கிடையில் வச்சி இருக்கா?” என்று டேபிளில் வைக்க அது அருகே இருந்த ஜன்னல் வழியே காற்றின் உதவியோடு புத்தகம் திறந்தது.

சாதனா கெட்ட நேரம் அது கௌதம் இருக்கும் பக்கத்தை எடுத்து காட்டியது.

முதலில் யாரோ ஒரு அழகிய ஆடவன் என்று நினைத்து இருந்த தாமரைக்கு அது கௌதம் சாயல் தெரிய நன்றாக புரட்டி பார்த்தாள். சந்தேகமே இல்லை கௌதமே தான் அப்படி என்றால் என்ற கோவம் பற்களை நறநறவென கடித்து கையில் இருந்த புத்தகத்தை சுக்குநூறாக கிழித்து எறிந்தாள்.

அதே நேரம் சாதனா வர என்ன குப்பை இது என்றே உற்று நோக்க அது கௌதம் இருக்கும் புத்தகம் என்றும் அது தன் தாய் பார்த்துவிட்டதாக அறிந்து கொண்டாள்.

உயிரே உருவியது போல பதறி அதனை கையால் எடுத்து துடித்தாள்.

புத்தகத்தை தானடி கிழிச்சேன் அதுக்கு என்ன உயிர் போன மாதிரி பதறற…

நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதுல என் உயிர் இருக்கு” என்றே அழுத்தமாக சொன்னாள் சனா.

நீ செய்த காரியத்துக்கு நான் கோவப்படணும் நீ என்னனா இப்படி கோவப்படற” என்றதும்

ஆமா உனக்கு இப்போ என்னதெரியுதுல நான் கௌதம் மாமாவை விரும்பறேன் என்று அன்னையிடம் மல்லுக்கு நின்றாள்.

அடிக்கழுதை யாரடி மாமா சிவாவை ஒரு முறையாவது அப்படி கூப்பிட்டு இருப்பியாஅப்படி ஆசையா கூப்பிட்டு இருந்தா அவன் வேற ஒருத்தியை விரும்பி இருப்பானாஇப்ப எவனோ ஒருத்தன் மாமாவா என்றார் தாமரை.

இங்க பாரு உனக்கு கௌதம் மாமாவை பிடிக்காது எனக்கு கௌதம் மாமா மட்டும் தான் பிடிக்கும் இது எனக்கு முன்னவே தெரியும்” என்ற போது தாமரை அவளின் கன்னத்தை பதம் பார்த்தார்.

என்னை அடி கொல்லு உனக்கு உரிமை இருக்கு. என்னை பெத்தவ. ஆனா கௌதம் மாமாவை பற்றி எதையும் பேசாதே நான் மனுசியா இருக்க மாட்டேன்” என்று கண்ணீர் வழிந்தாலும் கூறி முடித்தாள்.

ஓஹோ உன்னை அந்த அளவு மயக்கி வச்சி இருக்கானாசியாமளா தான் அவன் அப்பா அப்படி மயக்கி இருந்தார் என்று பார்த்தா இப்போ அவர் பிள்ளையுமா?” என்று நொடித்தார்.

அம்மா நீ கௌதம்மை இழிவா பேச பேச எனக்கு அவர் மேல இருக்கற காதல் அதிகரிக்குமே தவிர குறையாது. இதுவரை நான் கௌதம்மை விரும்பறது அவருக்கே தெரியாது நான் சொல்லியது இல்லை.

  பெற்றவ என்று உனக்கு மரியாதை இருக்கு அதுக்காக உன் இஷ்டத்துக்கு பேசாதே. நான் என் வாழ்க்கையை எனக்கு பிடிச்ச மாதிரி தான் வாழ்வேன். கௌதம் மாமா ஒன்றும் என்னை மயக்கலை… நான் தான் அவரை விரும்பறேன்

என்னடி என்கிட்டயே இப்படி பேசறே. அவன் அப்பா ஒரே நேரத்தில் இரெண்டு குடும்பத்தையும் நடத்தி இருக்கார். நீயும் அது போல வாழணுமாஅப்படி ஒரு அசிங்கம் உனக்கு தேவையா?” என்று அன்னையாய் கேட்டார். தாமரைக்கு கௌதமை அறவே பிடிக்கவில்லை.

எனக்கு கௌதம் இந்த நிமிஷம்  தாலி எடுத்து கட்டிக்கிட்டு அவரோட வாழ்ந்தாலும் சரி வச்சிக்கிட்டு வாழ்ந்தாலும் சரி நான் கௌதமிற்கு தான் சொந்தம் போதுமா கௌதமை அசிங்கமா பேசின…” என்று வார்த்தையின் வீரியம் தெரியாமலே பேசினாள்.

அடிப்பாவி என்ன வார்த்தை பேசற… இதுக்கு தான் படிக்கச் வச்சி வேலைக்கு அனுப்பியதா?”

” என்னை பேச வச்சிட்ட… உன்னை யாரு போட்டோ கிழிக்க சொன்னது” என்று கிழிந்த பேப்பரை எடுத்து பொறுக்கினாள். அழுகையோடு எடுத்தாலும் அது ஒட்டாமல் போக சாதனா பேப்பரை போல நொறுங்கி போனாள்.

சாதனாவிற்கு அந்த புகைப்படம் கிழித்ததை எண்ணி கோவத்தில் என்ன பேசுகின்றோம் ஏது பேசுகின்றோம் என்றெல்லாம் அறியாமல் பேசினாள். நல்ல வேளை கௌதம் சட்டையினை பார்க்கவில்லை. சாதனா ஆண்களை போல சட்டையினை அணிவதால் அது கௌதம் சட்டை என்று யோசிக்கவில்லை என்று சனா நினைத்தாள்.

தனது அன்னைக்கு தெரிந்தால் அதை தீவைத்து கொளுத்தினாலும் கொளுத்துவார்கள் . அவனின் வாசம் அவளின் காதலை அதிகரிக்க செய்தது.

தாமரைக்கு இதற்கு மேல் சாதனாவிடம் சண்டை போட திரணியில்லை … இதற்கே இப்படி பேசுகின்றாள் என்று அதிர்ந்து போனார்.

-நினைவுகள் தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.

1 thought on “தித்திக்கும் நினைவுகள்-14”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *