Skip to content
Home » தித்திக்கும் நினைவுகள்-3

தித்திக்கும் நினைவுகள்-3

அத்தியாயம் -3

Thank you for reading this post, don't forget to subscribe!

அதிகாலை ஜன்னல் வழியே சூரியன் தனது கதிர்களை கௌதம் முகத்தில் செலுத்தகிளிகள் கிசுகிசுக்க அச்சத்ததில் எழுந்தவன் இருக்கும் இடத்தினை நினைவு வந்து திரும்ப டேபிளில் சூடாக டீ ஆவி பறக்க இருந்தது.

   பல் விலக்கி அதனை ருசித்தான். ஜன்னல் வழியாக கீழே இருக்கும் மரங்களை பார்க்ககதவின் ஓரத்தில் சாதனா வந்து நின்றாள்.

அவளே “டம்ளர் எடுக்க வந்தேன்” என்று காரணம் கூறினாள்.

டிபன் எடுத்து கொண்டு வரவா?” என்று அவனின் பதிலுக்கு காத்திருந்தாள்.

ம்” என்று சொல்லிவிட்டு அவள் எடுத்து வந்த நாளிதழ் புரட்டினான்.

இதற்கு முன் யாருக்காவது இப்படி சேவகம் செய் சாதனா என்று சொல்லி இருந்தால் பத்திரக்காளி அவதாரம் எடுத்து இருப்பாள். ஆனால் இன்று அவள் சேவகம் செய்வது கௌதமிற்காக… அவள் கௌதம் அதனால் மட்டுமே. அது அவளுக்குக்கே தெரியவில்லை…

சூடாக இட்லி தக்காளி சட்னி தண்ணீர் எடுத்து வந்து தர வாங்கி உண்டான். அவள் கொடுத்துவிட்டு செல்லாமல் அங்கயே நிற்க,

என்ன ஏதாவது பேசனுமா?” என்றான்.

ஆமாம்…. அ… அது… நான் காரில் வரும் போது மாமா இறந்தது தெரியாது. இங்க வந்தப் பிறகு தான் தெரியும். நான் என் ஃப்ரெண்ட் கீர்த்தி இரண்டு பேரும் ஒரு கட்டுரைக்காக கிராமம் போகணும் என்று இருந்தோம்.

இந்த சிவா என்கிட்ட சொன்னா இங்க வரமாட்டேனு அவனா முடிவு செய்து அவகிட்ட சொல்லி இங்க வர வைக்க செய்திருக்கான். மாமா இறப்புக்கு என்று சொல்லி இருந்தா நானே வந்து இருப்பேன்” என்று சொல்லி முடிக்க,

எனக்கு நீ காரில் ஏறி பேசும் போதே புரிஞ்சுடுச்சு” என்று அவளை பார்த்து சாப்பிட்டான்,

அதுவும் இல்லாம நீங்க தான் கௌ…மா… அது சிவாவோட அண்ணா என்றும் தெரியாது” பெயரை குறிப்பிட தோன்றாமல் தடுமாறி பேசிடஅவன் பார்வை அவளை கூர்ந்து நோக்கியது.

என்ன படிச்சி இருக்கஎன்ன பண்ற?” என்றான்.

பி.ஏ இங்கிலீஷ் லிட்.ஜெர்னலிஸ்‌ட்-ஆ ஒர்க் பண்றேன்

குட்” என்றே கை அலம்பி நீரை பருகினான். அவள் தட்டை எடுத்து கிளம்பிய பின்னரும் அவளையே பற்றியே யோசித்தான்.

உனக்கு நான் கௌதம் என்றோ கௌதம் மாமா என்றோ மறந்துடுச்சு சிவா அண்ணா தான் நினைவு இருக்கா சனா…. என்றே மனம் ஒடிந்தான்.

கீழே ஜோதி அம்மா வேதா ஆச்சி வந்து இருக்காங்களா என்று கேட்காறாங்க கௌதம் அண்ணாவையும் பார்க்கணுமாம்” என்றதும் தான் சியாமளா நினைவு வந்தவளாக

வேதவள்ளி மதினி வரவில்லையே ஏன்?” என்று அப்பொழுது தான் தோன்றியது தனது தம்பி இறப்பிற்கு கூட ஏன் வரவில்லை அவ்வளவு வெறுப்பாஇருக்காதே எப்பொழுதும் மாதம் ஒரு முறை சந்திப்பரே அப்பொழுது தவறை மறந்து தம்பி தானே என்ற நல்ல முறையில் தானே பேசிவிட்டு வருவார்கள் பின் ஏன்? “சாதனா கௌதம் வந்து பேசுவானா?” என்றதற்கு கூப்பிட்டு வர்றேன் அத்தை” என்று கிளம்பினாள்.

வேகமாக மாடி வந்தவள் அவன் பார்வையில் நிதானம் அடைந்து உங்களை பார்க்க ஊரில் இருக்கறவங்க வந்து இருக்காங்க. அவங்களால் மாடி ஏற முடியாது படி கொஞ்சம் பெருசு” என்றாள் சாதனா.

வர்றேன்” என எழுந்து நடக்க, ”வேதவள்ளி ஆச்சி ஏன் வரலை. மாமா மேல் இன்னும் கோவமா?” என்று கேட்டாள்

அவங்களுக்கு இப்ப தான் ஹார்ட் ஆபரேஷன் முடிஞ்சு இருக்கு ஹஸ்பிடலில் இருக்காங்க டாக்டர் டிராவல் பண்ண கூடாது என்று ஆர்டர். அவங்களுக்கு அவங்க தம்பி மேல கோவம் எல்லாம் இல்லை எனக்கு தான்…

உங்களுக்கு இன்னும் மாமா மேல கோவம் இருக்கா?”

இருந்தது இப்ப இல்லை” என்று ஜோடியாக கீழே இறங்கினார்கள்.

அங்கிருந்த முதியவர்கள் அவனை சுற்றி சூழ்ந்தார்கள். அதில் ஒரு மூதாட்டி

ஐயா இது தான் உன் பொஞ்சாதியா?” என்றதும் சாதனா தாய் தாமரையோ சட்டென

” சிவாவுக்கு சாதனா தவிர கண்டவங்களுக்கு இல்லை” என்ற முனங்கல் அவன் காதில் அழுத்தமாகவே விழுந்தன.

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை பாட்டி” என்றான் நிதானமாக.

வேதவள்ளி ஏன் உனக்கு பொண்ணு பார்க்கலை” என்று ஒரு கிழவியும்

ஏன் வேதவள்ளி வரலை” என்று ஒரு கிழவியும் கேட்கசாதனா மெல்ல அவர்களிடம் இருந்து நழுவி செல்வதை கண்டு அவனுக்குள் ஏனோ வண்டாய் குடைந்தது.

அது வந்து வேதவள்ளி ஆச்சிக்கு ஹார்ட் ஆபரேஷன் நடந்து இரண்டு நாள் தான் ஆகுது. இப்போ டாக்டர் விடமாட்டாங்க. அவங்க தொலைவா பயணம் செய்ய கூடாது அப்படி செய்தா அவங்க உயிருக்கு ஆபத்து” என்று தெள்ள தெளிவாக கூறி முடித்தான்.

ஏன் ஐயா இந்த பிள்ளை வயசுக்கு வந்தப்பவாது வரலாமில்லை” என்று கேட்டதும் யாரை குறிப்பிடுகின்றார்கள் என அறிந்து பார்க்க பாவாடை தாவணி அணிந்து மிரண்ட விழிகளோடு தன்னை மறைந்து இருந்து பார்க்கும் அவளை கண்டான்.

யாராக இருக்கும் என்று யோசித்தவனின் பார்வையில் சியாமளா ஜோதி தங்கச்சி” என்று முன் நிறுத்தினார்.

இங்க வா” என்றான்.

நான் யாருனு தெரியுதா?” கேட்க,

அண்ணா… கௌதம் அண்ணா…” என்று சொன்ன நொடி அவளை தன் நெஞ்சில் சாய்த்து தலையில் முத்தமிட்டான்.

சிறிது நேரம் பேசி பாட்டிகள் எல்லோரும் சென்றிட ஜோதியை தனது கை வளைவில்லே இருத்திக் கொண்டான்.

உனக்கு என்னை நியாபகம் இருக்கா?” என்றான்.

இல்லை ” என்றாள் தலையை ஆட்டினாள் ஜோதி.

சாரி ஜோதி” என்று மன்னிப்பு வேண்ட அவன் எதற்கு மன்னிப்பு கேட்கின்றான் என்று முழித்து இருந்தவளை

என்ன படிக்கற?”

ப்ளஸ் டூ முடிச்சுட்டேன். காலேஜ் போகணும்…..

” ஓஹ் எந்த காலேஜ் சேர போறஎந்த குரூப் எடுக்க போற?” என்றதும் முகத்தை வாட்டமாக வைத்து

நான் படிக்க வேண்டாம் என்று சிவா அண்ணா சொல்லிட்டார். கல்யாணம் செய்யணுமாம்” என்று நிறுத்தினாள்

யாருக்கு உனக்கா?” என்ற 

 அதிர்ந்தான்.

ஹ்ம்

உனக்கு என்ன விருப்பம்?”

படிக்கணும்… அட்லீஸ்ட் சிங்கிள் டிகிரி ஆவது முடிக்கணும் அண்ணா” என்றதும்

என்ன சொன்ன?”

அ.. அண்ணா

குட் நீ இனி என்னை அண்ணா என்று தான் கூப்பிடனும். நீ விருப்பப்படற மாதிரியே டிகிரி முடி. இப்ப கல்யாணம் வேண்டாம் சரியா?”

சிவா அண்ணா?”

நான் பார்த்துக்கறேன்

நிஜமா அண்ணா?”

நிஜம்” என்றதும் புது துள்ளலோடு இருக்கஹாலில் நுழைந்தான்.

சியாமளாவோ மதனி உடம்பு இப்ப எப்படி இருக்கு கௌதம்எனக்கு அவங்க நிலைமை தெரியாது

பரவாயில்லை. நான் யாரிடமும் சொல்லவில்லை” என்றான் அவன்

இப்போ?”

நல்லா இருக்காங்கஆனா ட்ராவல் பண்ண கூடாது

என் மேல உனக்கு இன்னும் கோவம் இருக்கும்

அதை விடுங்க ஜோதி மேல் கொண்டு படிக்க போகட்டும். இப்ப கல்யாணம் வேண்டாம்” என்று சொல்லி முடிக்க இதுவரை அறையில் இருந்து தாயும் கௌதமும் பேசியதை கேட்டு இருந்த சிவா,

அம்மா ஜோதி என் தங்கை அவளுக்கு என்ன செய்யணும் என்று எனக்கு தெரியும் மத்தவங்களை அவங்க வேலையை மட்டும் பார்க்க சொல்லுங்க” என்றதும்

டேய் சிவா அவன் உன் அண்ணாடா

யாருக்கு யாரு அண்ணன். எனக்கு ஒரு தங்கை மட்டும் தான்” என்றான் சிவா.

ஜோதி மேல படிப்பா இது நடக்கும்” என்று அவனுக்கு மேலே பிடிவாதமாக கௌதம் மாடி ஏறி அவனுக்கு கொடுத்த அறையில் சென்றான்.

இவன் யாரு தீடிர் என்று வந்து சட்டம் போடுறது” என்ற குரல் கோவத்தில் ஒலித்தது. எல்லாம் இவளை சொல்லணும்” என்று ஜோதியை முறைத்தான்.

சிவா வாயை மூடு” என்றதும் அவனின் தாய் அதட்டுவதை எண்ணி வேகமாக வயலுக்கு கோவத்தோடு கிளம்பினான்.

பின்னாடியே சாதனா சிவா சிவா…” என்று ஓடி செல்வதை ஜன்னல் வழியே கௌதம் பார்த்துக் கொண்டு இருந்தான்.

-நினைவுகள் தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.

4 thoughts on “தித்திக்கும் நினைவுகள்-3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *