Skip to content
Home » தித்திக்கும் நினைவுகள்-5

தித்திக்கும் நினைவுகள்-5

அத்தியாயம் -5

ஜோதியினை ஐந்து வயதில் பார்த்த குழந்தை முகம் இன்று கல்லூரி அடியெடுக்கும் வயதில் பார்க்கின்றான் அதுவும் சிறு வயது வேதவள்ளி ஆச்சியின் சாயலில்… இருக்காதா பின்னே அத்தை முகம் சாயலில் பிறந்து இருக்கும் ஜோதி. வேதாவின் பழைய போட்டோவில் கண்டது போலவே பாவாடை தாவணியில் பார்த்தால்…

எப்பொழுதும் உணவு மேலயே வந்து விடுவதால் கீழே செல்லும் வேலையே வருவதில்லை என்பதால் இம்முறை கீழே போய் சுற்றி பார்க்கலாம் என்று வந்தான்.

ஹாலில் நுழைந்து பார்த்தபொழுது அங்கே தனது தந்தை குடும்பம் சகிதம் எடுத்த புகைப்படம் அவனை வரவேற்றது.

தன்னோடு அவர் அப்படி எடுக்கவில்லை என்று தோன்றும் வேளை தான் அவரிடம் பதினைந்து வயதில் இருந்து பேசுவதில்லை என்ற உண்மை மனம் எடுத்துரைக்க இது அவர் தவறில்லை என்று நகர்ந்து அறையை கவனித்தான்.

அங்கே தாமரை சிவா சாதனா ஜோதி எல்லோரும் பேசிக் கொண்டு இருக்க இவன் வந்ததும் சிவா நிமிர்ந்து பார்க்க முயலவில்லை. சாதனா மட்டும் கண்களை சுழற்றி செய்வது அறியாது திகைப்பது புரிய தாமரை முகத்தை நொடித்து கொள்ளஜோதி மட்டுமே அண்ணா வாங்க உட்காருங்க” என்று அன்புடன் அழைத்தாள்.

இல்லை டா குட்டிம்மா வீடு ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்கறேன் நீ பேசு” என்று நகர கிட்சேன் சில இடங்களில் கீறல் இருக்க கண்டவன் பின்வாசலை பார்க்க அங்கு கிணத்தின் அருகே இருக்கும் கல் பக்கத்தில் சியாமளா அமர்ந்து எங்கோ வெறித்துப் பார்ப்பதை அறிந்து சப்தமில்லாமல் வெளியேறினான்.

அவன் வயலினை தாண்டி இருக்கும் அரசமரத்தடிக்கு செல்ல போவதை அறிந்து ஜோதி அவனோடு சேர்ந்தாள். அப்படியே சாதனாவையும் இழுத்து வந்தாள்.

ஜோதி நீ உன் அண்ணாவோடு போ” என்றதற்கு

அண்ணி நீங்களும் இங்க வந்ததேயில்லை . வாங்க” என்று அழைத்துச் சென்றாள்.

ஜோதி அங்கிருக்கு கால்வாய் நீரில் கால் பதித்து விளையாடசாதனா தொட்டியில் இருக்கும் நீரை அவள் மீது தெளித்து விளையாடினாலும் அவள் கண்கள் கௌதமை அடிக்கடி பார்க்க மறக்கவில்லை.

அவனோ அரசமரத்தடியில் கீழே முட்டி போட்டு எதையோ தேட அவன் தேடி வந்ததையும் கண்டான் .

சட்டென புன்னகைக்க அவன் எதை கண்டு புன்னகை செய்கின்றான் என அவள் எண்ண அவனோ அவளை பார்த்து அந்த இடத்தையும் பார்த்து சனா‘ என்று கூறிக் கொண்டான். அவன் எழுந்து அந்தப் பக்கம் நகர ஜோதி கவனிக்கவில்லை என்றதும் அம்மரத்தடியில் கீழே குனிந்து சாதனா பார்க்க சனா‘ என்ற வார்த்தை கண்டு உள்ளமெல்லாம் மகிழ்ச்சி பொங்க கௌதமை பார்க்க அவனும் அதே நேரம் அவளை கண்களால் இதயத்தில் நுழையும் போது பின்னால் இருந்து சிவா சாதனா கைப்பற்றினான்.

வா உனக்கு இப்ப அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்று மொட்டையாக கூறி இழுத்துச் சென்றான்.

அவள் திரும்பி திரும்பி செல்வதை கண்டு வேறு எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக வீட்டை நோக்கி நடந்தான் கௌதம்.

ஜோதியும் பின் தொடர்ந்தாள். சாதனா சிவா மட்டும் அரை மணி நேரம் கழித்தே வந்து சேர்ந்தனர். சாதனா சிவா முகம் மலர்ந்து பேசிக் கொண்டு வருவதை கண்டவன் 16 நாட்கள் முடிந்ததும் திரும்பிட வேண்டும் பிறகு வரவே கூடாது என்று நினைத்தான்.

பதினாறாம் நாளும் வந்தவுடன் தந்தை புகைப்படத்தை வைத்து கும்பிட்டு கிளம்பிவிட்டான். சிறு வயது சனா‘ வேண்டுமானால் அவனுக்கு சொந்தமாக இருக்கலாம். இப்பொழுது இருக்கும் சாதனா சிவாவிற்காக வாழும் பெண் என தவறாக நினைத்து மறக்க துவங்கினான். மறக்க முடியுமா?

போன் மணி அடித்தது. ஜோதி தான் எடுத்தது.

ஹலோ ஜோதி?”

ஆ கௌதம் அண்ணா?”

ஆமா டா. உனக்கு காலேஜ் சீட் வாங்கிட்டேன். நீ பி.பி.ஏ பண்ண ஏற்பாடு பண்ணியாச்சு சோ எப்ப வர்ற?”

அண்ணா நிஜமா?”

ஹ்ம்

ஆனா அண்ணா. காலேஜ் இங்கயே இல்லையாஅங்க என்றால் எப்படி?”

என் அன்பு தங்கச்சி இந்த கௌதம் அண்ணா வீட்ல தங்கி படிக்கப் போறா

அண்ணா சிவா அண்ணா…. ?”

நீ உன் அம்மாகிட்ட கொடு” என்றான். அவனின் உன் அம்மா என்ற சாடுதல் அவள் அறியவில்லை.

அம்மா கௌதம் அண்ணா பேசறாங்க” என்று கொடுக்க அந்தப் பக்கம் என்ன பேசியிருப்பானோ சரிப்பா” என்று அமைதியாக போனை வைத்தாள் சியாமளா.

ஜோதி நீ அங்க போய் படிக்க போற கௌதம் அண்ணாவுக்கு தொந்தரவு கொடுக்காதே… அப்பறம் வேதவள்ளி அத்தை ஏதாவது சொன்ன பெருசாக எடுத்துக்காதே” என்று தலையை வருடி விட்டாள்.

போய் உன் டிரஸ் எடுத்து வை அண்ணா வந்துகிட்டு இருக்கானாம்” என்றதும் வேகமாக ட்ரெஸ் எடுத்து வைக்க முயன்றாள்.

வீட்டிற்கு வந்ததும் சிவா விஷயம் அறிந்து ஏன் இங்க இருக்கற காலேஜ் போனா என்னஅவன் வீட்டுக்கு எல்லாம் என் தங்கைச்சி போக வேண்டாம்” என்று சீறினான்.

அண்ணா நான் படிக்கணும் என்று தான் சொன்னேன் சென்னை போய் படிக்கிறேன் என்று சொல்லவே இல்லை. கௌதம் அண்ணா ஏற்பாடு” என்று பயந்தாள்.
சிவாவோ அவளை முறைத்து சியமளாவிடம் சண்டை போட்டு கொண்டு இருந்தான்.

சிவா அண்ணா பக்கம் பேசுவதாகௌதம் அண்ணா பக்கம் பேசுவதாதன்னால் இந்த சண்டை பேசாமல் படிப்பே வேண்டாம் என்று முடிவு செய்தாள் ஜோதி.

கௌதம் வந்து நின்ற சமயம் ஓரளவு அவன் யூகித்து இருந்த ஒன்றே.

ஜோதி கிளம்பளாமா?” என்றான் கௌதம்.

அண்ணா நான் இங்கிருக்கற காலேஜ்ல படிக்கிறேன் இல்லை என்றால் எனக்கு படிப்பு வேண்டாம்” என்று சொல்லி முடிக்க,

நீ என்னை அண்ணா என்று கூப்பிடறது உண்மை தானே. இந்த அண்ணா உன் கெடுதலுக்கு எதுவும் செய்ய மாட்டேன். என்னை என் அப்பாவோடு தான் வாழ விடலை இப்போ தங்கையை நினைக்கற உன்கூட கூட வாழ விடமாட்டாங்களா?” என்றதும் சியாமளா சிவா பேச்சினை எல்லாம் மறந்து,

ஜோதி நீ அண்ணாவோடு போ” என்ற சியாமளா குரலில் விழித்து நிற்க,

ஜோதி வீட்ல எல்லோர்கிட்டயும் சொல்லிட்டு வா” என்று சிவா அறையினை காட்டி நிறுத்தினான்.

அண்ணா நான்…” என்றதும் சிவா கோவத்தில் வேகமாக வெளியேறி கிளம்பி விட்டான்.

கட்டு பணம் ஒன்றை டேபிளில் வைத்து நாளைக்கு வீட்டை ஆல்டர் பண்ண ஆளுங்க வர்றாங்க முடிஞ்ச அளவு வீட்டிலே சப்பாடு டீ செஞ்சு கொடுத்துடுங்க” என்று சொல்லி பதிலை கேட்கச் செய்யாமல் கௌதம் அமைதியாக காரில் லக்கேஜ் ஏற்றி காரில் உட்கார்ந்தான். ஜோதி கிளம்பி சியாமளாவை பார்த்து தலை அசைத்தாள்.

கௌதம் காரினை ஒட்டியபடி

என்ன ஜோதி உன் ஆசையை என்கிட்ட சொன்னது தப்பா போச்சு என்று பீல் பண்றியா?”

இல்லை அண்ணா ஆனா சிவா அண்ணா மனசை கஷ்டப்படுத்துறேனே என்று தோணுது

ஏன் ஜோதி அப்போ உன் கௌதம் அண்ணா மட்டும் கஷ்ட படலாமா?”

அண்ணா… அப்படி இல்லை

லுக் ஜோதி நீ இவ்ளோ நாள் உன் சிவா அண்ணா கூட தானே வாழ்ந்த இப்போ த்ரீ இயர்ஸ் இந்த அண்ணா கூட இருக்கலாமேஅதுவும் இல்லாம நீ இங்க இருக்கற காலேஜ்ல படிப்பதை விட சென்னையில் படி உனக்கே வித்தியாசம் தெரியும்” என்று பேச்சை முடித்தான்.

அவளுக்கும் பேச முடியவில்லை. அங்கு வேதவள்ளி அத்தை வேறு எப்படி நடந்து கொள்வார்களோஎன்ற திகில் கொஞ்சம் இருக்கவே செய்தது.

வீட்டிற்கு வரும் போதே இருட்டி விட்டது. உணவு வரும் போதே ஒரு ஹோட்டலில் சாப்பிட்டதால் இறங்கியதும் குட்டிம்மா நீ போய் இந்த அறையில் தூங்கு மற்றதை காலையில் பார்க்கலாம்” என்றதும் சின்ன இருட்டில் அங்கிருந்த கட்டிலில் போய் உறங்கினாள். நீர் அருந்த வந்தவன் அவளின் கட்டிலில் இருக்கும் கொசு வலையை முழுதும் இறக்கி விட்டு சென்றான்.

-நினைவுகள் தொடரும். 

-பிரவீணா தங்கராஜ். 

2 thoughts on “தித்திக்கும் நினைவுகள்-5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *