Skip to content
Home » தித்திக்கும் நினைவுகள்-8

தித்திக்கும் நினைவுகள்-8

அத்தியாயம்-8

பாதி தூரம் சென்றதும் தான் சே கௌதம் மாமா நம்பர் வாங்கிக்கவே இல்லையே அஷோக்கிட்ட கேட்கலாமாவேண்டாம் ஏற்கனவே நான் ஷாக்காகி இருந்தப்ப என்னை ஒரு மாதிரி லுக் விட்டான். இப்போ நம்பர் கேட்டேன் அவன் ஏடாகூடமா நினைப்பான். சென்னை போய் மாலதிகிட்ட வாங்கிக்கலாம் ஆபிஸ்ல இருக்கும்.

தனது பேக்கை கட்டிலில் வைத்து விட்டு இன்றே மாலதி வீட்டிற்கு போய் நம்பர் வாங்கலாமாவேண்டாம் சாதனா மனசுக்கு ஒரு பட்டிமன்றம் வைத்து பிறகு கொஞ்சம் பிரேக் கொடு வெயிட் பண்ணியே வாங்கு என்றதும் சரி என்று தோன்றியது.

என்ன நீ தனியா பேசிகிட்டு இருக்ககுளிச்சியாஇல்லையாபோ போய் இந்த டிரஸ்சை மாற்று” என்றதும் எழுந்து குளிக்கச் சென்றாள்.

எனக்கு பதில் இந்த அம்மாவை ரிப்போர்ட்டர் வேலைக்கு அனுப்பனும் எப்ப பாரு கேள்வி கேட்டு முறைச்சுக்கிட்டு… என்று அன்றைய நாள் முடிய.

ஆபிஸ் வந்ததும் வராததும் நேராக இரண்டு முறை மாலதி கேபினுக்கு சென்று திரும்பினாள். எருமை சீக்கிரம் வர்றாளா பாரு… என்று திட்டிக்கொண்டு இருக்க இவள் முனங்குவதை வரும்போதே பார்த்துவிட்டு,

ஏய் ஏன் டி இப்படி வந்ததும் திட்ட வந்துட்டஅதான் மன்னிப்பு கேட்டேனே” என்று மாலதி பாவமாய் கூறினாள்.

நான் மன்னிக்கறேன் எனக்கு முதலில் கௌதம் நம்பர் வேணும்

அய்… உங்க அத்தை பையன் நம்பர் உனக்கு தெரியாதா?”

விளையாடாதே நானே ரொம்ப வருஷம் கழிச்சு பார்த்தேன்” என்று அவனை சந்தித்த நிகழ்வை சொல்லி முடிக்க,

சோ மேடம் லவ் பண்றிங்களா?”

அதெல்லாம் இல்லை… எனக்கு அவரை பிடிக்கும்

எனக்கு மட்டும் இப்படி ஒருத்தன் இருந்தான் விட மாட்டேன் உனக்கு தோணலயா?”

பச் மாலதி அதெல்லாம் தோணுதோ இல்லையோ என் மாமா எனக்கு அந்த வயசுல இருந்தே பிடிக்கும். என்னை அவர் ஒரு முறை துரத்திக்கிட்டு வந்தார் அப்போ வேதவள்ளி அவரோட ஆச்சி அவர் கையை புடிச்சுகிட்டு என் மேகலை இறந்த இந்த வீட்ல இனி என் பேரன் வர மாட்டான். நீங்களே இந்த வீட்ல இருந்து வாழுங்க. என் பேரனை நானே வளர்த்துப்பேன் என்று சொல்லிட்டு கூட்டிட்டு போனாங்க.

அப்போ சும்மா சொல்லறாங்க என்று இருந்தேன் அப்பறம் நிஜமாவே என் மாமா இல்லை. ரெண்டு வருஷம் போய் போய் பார்த்து சிவாவை கேட்டேன். அவன் இனி என் அண்ணா இல்லை இனி அவன் இங்க வரமாட்டன் என்று சொன்னான்.

அதோட எனக்கும் அங்க போக பிடிக்கலை. சிவா ஜோதி மட்டும் எங்க வீட்டுக்கு வருவாங்க. சம் டைம் சிவா அப்பறம் ரவீந்தர் மாமா வீட்டுக்கு வருவாங்க. அவர் கௌதம் மாமாவை பார்க்க போயிட்டு கவலையா வருவார். அப்போ சிவா கூட கௌதம் பேச மாட்டார் போல அதனால் சிவா நான் அவனை பார்க்க வரமாட்டேன் என சொல்லிட்டு இருப்பார். மாமா சிவாவை எங்க வீட்ல விட்டுட்டு கௌதம் மாமாவை பார்க்க போவார். எப்போ போனாலும் திரும்ப வரும் போது சோகமா இருப்பார்.

அவன் எல்லாரையும் மறந்துட்டான் பேச மாட்றான்…என்றே சதா அழுவார் அதனால் என்னையும் மறந்து விட்டார் என்று நினைத்து இருந்தேன் . ஆனா அவருக்கு என்னை நல்லா நினைவு இருக்கு.

இப்போ மனசில் காதல் இருக்கா இல்லையாஅத சொல்லு?”

இது காதல் இல்லை அபக்ஷன்” என்றாள் சாதனா.

ஓகே இவ இப்ப இப்படி தான் சொல்லுவா அவளுக்கே தெரியாம சேவகம் செய்தவ… அவனோட தனியா தங்க செய்து இருக்காஇவளுக்கே அது காதல் என்று புரியலை. ஓகே இப்ப நம்பர் கொடுப்போம் அது காதலா மாறி அவளே சொல்லுவா. என்னையும் கீர்த்தியும் விட்ட இங்க யாருகிட்ட சொல்லிட போற‘ என்றே

இந்தா இது தான் உன் கௌதம் மாமா நம்பர்” என்று பத்து இலக்கம் கொண்ட என்னை நீட்டினாள்.

தேங்க்ஸ் மாலதி” என்று பெற்றுக் கொண்டு மாலதியை கட்டி அணைத்து சிறு பிள்ளையாய் ஓடினாள்.

ஜஸ்ட் நம்பர் கொடுத்ததிற்கே கட்டி பிடி வைத்தியம் பண்றா கொஞ்ச நாளில் வந்து ஐ லவ் கௌதம் என்று என் முன்ன நிற்க போற அப்போ இருக்கு‘ என்றாள் மனதினுள் ஆருடம் பார்த்தாள்.

கௌதம் எண்ணை கௌதம் மாமா என்றே சேவ் செய்ய அடுத்த நொடி (வாட்ஸப்பில்) புலனத்தில் அவன் முகம் கருப்பு நிறகாரில் சாண்டல் சட்டை அணிந்து அவன் காரில் சாய்வாக நிற்கும் புகைப்படம். வாவ் செமயா இருக்கு பிச்சர். மனதில் சொல்லி கொண்டவள் அவனுக்கு மெசேஜ் typing செய்து சென்ட் செய்யாமல் அதனை அழித்து முடித்தாள். இப்படியே இரு தினம் செய்துக் கொண்டு இருந்தாள்.

ஒரு முறை கால் செய்தாள். அடுத்த நொடி என்ன பேச என்று புரியாமல் நிற்க அவன் நம்பர் எப்படி கிடைச்சது என்று கேட்டால் என யோசிக்க அழைப்பதையே விட்டுவிட்டாள்.

ஒரு வாரம் போன பிறகு மாலதி சாதனாவிடம் கேட்க செய்தாள்.

உங்க மாமா என்ன சொல்றார் பேசினியா?”என்றதும் இல்லை என்பது போல தலையை ஆட்டினாள்.

ஏன்?”

எப்படி பேச என்ன பேச?” என்றவளை முறைத்து இதுக்கு தான் என்கிட்ட அப்படி ஆசையா நம்பர் கேட்டு வாங்கிட்டு போனியாகால் பண்ணு தானா பேசிடுவ” என்றாள்.

பயமா இருக்கு” என்றாள் சாதனா

யாருக்கு உனக்கா அடிப்பாவி பொய் பேசாதே கால் பண்ணு” என்ற அதட்டலில் அவளின் தைரியத்தில் கால் செய்தாள்.

ரிங்க் போகுது மாலதி ஐயோ என்ன பேச” என்று புலம்ப மாலதி தலையில் அடித்துக் கொண்டாள். நேரம் ஆகின்றதே தவிர அவன் எடுப்பதாய் இல்லை என்ற பொழுது,

ஹலோ கௌதம் ஹியர்” என்ற ஆண்மை ததும்பும் குரலில் பேச அந்தப் பக்கம் ரெஸ்பான்ஸே இல்லை என்ற முடிவுடன் கௌதம் போனை கட் செய்ய ஹலோ என்ற சாதனா குரல் கொடுக்க செல் அணைக்கப்பட்டு இருந்தது. கௌதமிற்கு அந்த நம்பர் கடைசி எண்ணை பார்த்தான் டபுள் த்ரீ என்று முடிய கால் செய்யலாமாஎன்று நினைத்தவன் வேண்டாம் என விட்டுவிட்டான்.

என்ன லைன் போகலையா? மீண்டும் கால் பண்ணு” என்றதும்

இல்லை மாலதி அவர் எடுத்து ஹலோ சொன்னார் நான் பேசுவதற்குள் கட் ஆகிடுச்சு இனி நான் கால் பண்ண மாட்டேன். நீ சொன்னது போல இது லவ் என்றால் தானா இன்னோர் வாய்ப்பு வரும் அதுவரை காத்திருப்பேன்” என்றே கலங்கியவளை மாலதி ஆறுதல் மட்டுமே செய்தாள். காதல் வந்ததும் அவளை கேலி செய்ய காத்திருந்தவள் சாதனாவின் கவலையில் ஓகே இன்னோர் வாய்ப்பு வந்தா விடாதே” என்றாள்.

மாலதிக்கும் சாதனாவை தூண்டிவிட மனமில்லை. காதல் வலியினை தருவது என்று புரியாதவள் இல்லையே.

இதற்கிடையில் ஜோதி ஊருக்கு சென்று இருந்தாள். அவளை பார்த்த சியாமளா கண்களால் நம்பவே முடியவில்லை. முன்பு இருந்த ஜோதிக்கு நேர் எதிராக இருந்தாள். சிவா கூட அதிசயப்பட்டான். அவனுக்கும் சாதனா போல தன் தங்கை இருக்க வேண்டும் என ஆசை தான் ஆனால் சாதனாவிடம் பேசுவது போல ஜோதியிடம் அவன் பேசியதில்லை.

ஜோதிக்கு செமஸ்டர் பீஸ் கட்ட வேண்டிய நேரம் வர சியாமளவிடம் கேட்டாள். அப்பொழுது சிவா ஏன் அவள் புது அண்ணாவை கேட்க வேண்டியது தானே” என்றான் இடக்காக,

அண்ணா நான் கௌதம் அண்ணாகிட்ட கேட்டால் கொடுத்துடுவார் நான் தான் கேட்கலை” ஏன்றாள் ஜோதி.

ஏன் கேட்கலை. அவன்கிட்ட போய் கேளு எப்படியும் கொடுக்க மாட்டான். அப்போ தான் கூட பிறந்த அண்ணாவுக்கும் அவனுக்கும் வித்தியாசம் புரியும் உனக்கு” என்று முகத்தில் அடித்தாற் போல சொன்னான்.

சியாமளா நான் அவனிடம் பணம் வாங்கி உனக்கு அனுப்பறேன்” என்றதும் சரி என்று இருந்தாள். அதற்கு இரண்டு நாளில் கிளம்பி விட்டாள். பணம் வாங்காமலே.

அடுத்த நாள் காலேஜ் போன பிறகே நினைவு வர அவள் வகுப்பு ஆசிரியரிடம் போய் நின்றாள்.

மேம் என் செமஸ்டர் பீஸ் நான்…” என்று தடுமாறினாள்,

உன் அண்ணன் கௌதம் கட்டிட்டார் ஏன் உனக்கு தெரியாதாநீ தான் முதலில் பீஸ் கட்டியது” என்றதும் உறைந்து நின்றாள்.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக சியாமளாவிடம் தெரிவித்தாள். நீ சொன்னியா பீஸ் கட்டணும் என்று” அன்னை கேட்டதற்கு,

இல்லைம்மா அண்ணாவுக்கு எதுவும் தெரியாது. நான் தான் முதலில் பீஸ் கட்டி இருக்கேனு மேம் சொன்னாங்க

சரி நீ வேற தொந்தரவு கொடுக்காத. நான் சிவாகிட்ட சொல்லிடறேன்” என்று அவனிடமும் சொன்னாள்.சிவாவிற்கு ஆச்சரியம் தான். தான் சிறு வயதில் அவனை பார்க்க தந்தையோடு செல்லும் போதெல்லாம் அவன் தந்தையை உதாசீனம் படுத்துவதை கண்டவன் தன்னிடமும் கௌதம் பேச முயலாதது சிவாவிற்கு பிடிக்காமல் தான் அவனும் தந்தையோடு போக மறுத்தான். ஆனால் ஜோதியிடம் நிஜமாகவே பிரியம் காட்டுகின்றான் என்பதில் மகிழ்ந்தான். 

-நினைவுகள் தொடரும் 

-பிரவீணா தங்கராஜ். 

4 thoughts on “தித்திக்கும் நினைவுகள்-8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *