Skip to content
Home » தீயாகிய தீபம் 7

தீயாகிய தீபம் 7

தீயாகிய தீபம் 7

விக்கி மற்றும் ருத்ரா ரிசப்ஷென் விமர்சையாக களைக்கட்டியது.

ஒரு பக்க தனி மேடையில் இசைக் கலைஞர்கள் தத்தம் வாத்திய கருவிகளை அதன் உரையிலிருந்து துகிலுரித்துக் கொண்டிருந்தனர்.

கல்யாண ரிசப்ஷனில் பலர் புடவைக்கு மாற்றாக  விதவிதமான பல வண்ண வடநாட்டுப் பாணியில் ஆடைகள் அணிந்திருந்தனர்.

விவரம் தெரிந்த யாரும் ஆறு மணிக்கு வர மாட்டார்கள்ஆனால் சில அப்பாவி மனிதர்கள் ஆறு மணிக்கே  வந்தமர்ந்து   பே பே என முழித்து கொண்டிருந்தார்கள்.

நேரம் ஆகிவிட்டது என்பதால் விருந்து முதலில் உண்பதாஅல்லது பரிசுக் கொடுப்பது முதலாஎன  வயதானவர்கள் பட்டிமன்றம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.

சர்க்கரை வியாதிகார்கள் இன்று ஒருநாள் மட்டும் சலுகையில்  ஈடுபடத் தயாராகினர்.

சிறு பிள்ளைகள் கல்யாண மண்டபத்தில்ச் சுற்றிச் சுற்றி ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனஅவர்களுக்குள் பெண் வீட்டார்  ஆண் வீட்டார் என்னும் எந்த பாகுபாடும் இல்லைசந்தோஷமான விளையாட்டுஎதிர்காலத்தைப் பற்றி கவலை இல்லாமல்  நிகழ்காலத்தை இனிமையாக சுவைத்துக் கொண்டிருந்தனர்.

சில பெண்கள் தங்கள் ஆடை ஆபரணம் பற்றிச் சிலாகித்துப்  பேசினர்.

லைட் மியூசிகில் பிள்ளையார்சுழியாக “கல்யாண மாலை  கொண்டாடும் பெண்ணே”“நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொன்னும்தான்” என  டிரேட் மார்க் பாடல்களைப் பாடித் துவங்கினர்

அதனோடு காவாலா பாட்டும் சேர அந்த இடத்தில் இளசுகள்  நடனம் ஆடத் தொடங்கினர். அவ்வப்போது  ரசிகர் விருப்பம் என ஏதோ ஒரு பாடல் பாடினார்கள்.

ஆட்டம் பாட்டத்தின் பலத்த ஓசையில் “அந்த பையனுக்கு வரனே  கிடைக்கலயாம்..  ” என வம்பு பேச முடியாத சோகத்தில் சில  தலைகள் இருக்க … வேறு சில தலைகளோ பாட்டை கேட்டு  ரசித்துத் தலையாட்டின.  

ருத்ரா லைட் பர்பிள் நிறத்தில் வெள்ளி நிற வேலைப்பாடுகள் நிறைந்தஹெவி டிசைன் கொண்ட லெஹங்கா  மற்றும் அதற்கு  ஏற்றார் போலச் சிகை அலங்காரம் நகைகள் எனத் தேவதை போல காட்சியளித்தாள்விக்கி அவளின் ஆடை நிறத்திற்கு ஏற்றாற்  போல ஷெர்வானி அணிந்திருந்தான்.

இருவரும் கைகோர்த்தபடி மேடைக்கு வர . . . போட்டோ கிராபரின் பலபல கிளிக்ஸ் . வீடியோ எடுப்பவன்  கணக்கு பாடத்தில் இல்லாத கோணத்திலும் ரெகார்ட் செய்தான்சொன்ன பணத்தைவிட ஐந்தாயிரம் மேலே பெற வேண்டிய  அத்தனை முயற்சிகளையும்  வீடியோ மற்றும் புகைப்படக்காரர் செய்தனர்.

கீழே இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் போட்டோ மற்றும்  வீடியோகாரர்களின் முதுகை நன்கு தரிசித்தனர்ஆங்காங்கே  வீடியோ எடுப்பவரின் சாதனங்களின் வொயர்கள் (wire) கருப்பு  இடியாப்ப சிக்கலாய்  சுருண்டும் நீண்டும் இருந்தன.   திருமணத்திற்கு வந்தவர்கள் அதை மிதிக்காமல் வீழ்வதும்  எழுவதும் அவரவர் சாமார்த்தியம்.

விக்கி மற்றும் ருத்ராவை தங்களுடன் ஆட இளசுகள் இழுக்காத  குறையாக அழைத்து சென்றனர். விக்கி அமைதியானவன்  அவனுக்கு இவையெல்லாம் புதிது. ஆனால் ருத்ரா நன்றாகவே  ஆடினாள். அவளுடன் பவித்ரா மற்றும் நண்பர்களும் ஆட ..  அவர்களைக் கண்டு ஆடுவே தெரியாத சில ஆன்ட்டிகள் தங்களை தில்லானா மோகனாம்பாளாய்  நினைத்து ஆடி மற்றவர்க்கு  அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். அவர்களின் கணவர்கள்  தடுக்க முடியாமல் ஈஈஈயென இளித்துச் சமாளித்தனர். (வேற வழி)

ருத்ரா அம்மா போதும்” எனக் கண்களால் எச்சரிக்க அவளும் நிறுத்திக் கொண்டாள்.

கல்யாண பொன்னா லட்சணமா இருக்க மாட்ட” என அம்மா எப்படியும் அறிவுரை என்ற பெயரில் காதில் ரத்தம் வராத  குறையாக அறிவுரையை அள்ளி வீசுவார்.

அடுத்துப் போட்டோ ஷீட் என்ற பெயரில் மணமக்களை  ஜிம்னாஸ்டிக் செய்ய வைத்தனர் புகைப்படக்காரர்அத்தனை  பேர் முன்னிலையில் சில போஸ்களில் நிற்க இருவருக்குமே  சங்கடமாக  இருந்தது

மணமக்களுக்கு விட்டால் போதும் என்றிருந்தது  .. இறுதியாக அனுமார் வாலைவிடப் பெரிய க்யூ  ஒன்று சென்றதுமணமக்களுக்குப் பரிசுகளைக் கொடுத்து  மாணவர்களைப் போல “உள்ளேன்ஐயா” என அட்டனென்ஸ்  கொடுத்துவிட்டுப் போட்டோ வீடியோவிற்கும் போஸ்  கொடுத்தார்கள்பின்பு  அப்படியே  டைனிங் அறைக்குச்  சாப்பிடச் சென்றுவிட்டனர்.

கூட்டம் அதிகமாயிருந்தது சிலர்  டைனிங் ஹாலுக்கு வெளியே  நின்றபடி எப்போது முதல் பந்தி முடியும் என எட்டி எட்டிப்  பார்த்துக்கொண்டிருந்தனர்எப்பொழுதும் முதல் பந்தியில் தான்  தட்டுப்பாடு இல்லாமல் எல்லா சாப்பாட்டு வகைகளும்  கிடைக்கும் என்பது எழுதப்படாத விதி.

திருமணத்தில் வகைவகையான சாப்பாடு தின்பண்டங்கள்  இருக்கும்ஆனால் பாவம் மணமகளும் மணமகனும் சரியாக  ருசித்துச் சாப்பிட முடியாது 

“அந்த பாதாம் கீர் பிரமாதம்” எனச் சிலர் தாங்கள் சாப்பிட்ட  பதார்த்தங்களை சிலாகித்து கொண்டிருக்க அவை திவ்வியமாய் பசியோடு இருந்த ருத்ரா விக்கி  காதில் நாராசமாய் விழுந்து  தொலைத்தது.

மணமக்களின் பெற்றோர் ஆனந்தமாய் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்தனர். தாங்கள் கண்ட  கனவு நினைவாகிறது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. அன்றைய நாள் இனிதாக நிறைவடைந்தது.

திருமணத்தன்று காலை ருத்ரா மங்கள நீராடி தயாரானாள்.  அன்றைய நாளுக்கே உரியப் பரபரப்பு அனைவரையும் தொத்திக் கொன்றது. இனிமையான மங்கள  வாத்தியங்களின் வாசிப்பு  சத்தம் இன்னும் அந்நாளை முழுமையாக்கியது.

மாம்பழ நிறத்தில் பச்சை வர்ண பார்டர் உடைய பட்டுச் சேலையும்பச்சை நிற ஆரி வொர்க் செய்த பிளவுஸ் அணிந்திருந்தாள்பரிமளம் பவித்ராசித்ரா என அந்த குடும்பமே தங்கள் இளவரசியை அழகாய்  சிங்காரித்தனர்.

தொல்லியல் துறையில் பணிபுரிவதால் திருமணத்தன்று அணியும் தன் நகைகள் அனைத்து ஆன்ட்டிக் நகைகளாய் அதாவது பண்டைய காலத்து நகைகள் போன்று இருக்கும் நகை வகையாக இருத்தல் வேண்டும் என்று எண்ணினாள் ருத்ரா

நகைகள் அணிகையில் ருத்ராவிற்கு அதை வாங்குகையில் நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது.

நகைக்கடையில் பவித்ரா  “நான் டெண்டிஸ்ட் பல் நகைனு எதாவது இருக்கா?” என ருத்ராவிடம் விஷமமாய் கேட்க

பெரியதாகச் சிரித்த ருத்ரா “நாட் எ பேட் ஐடியாநாமளே டிரண்டை செட் பண்ணுவோம்யார் கேட்க போறாங்கநீ டிசைன் சொல்லுஅப்படியே செய்யலாம்

அதெல்லாம் சரிதான் இந்த ஆன்ட்டிக் நகைப் பாக்க டல்லா இருக்குலஇதையா  கல்யாணத்துல போட போற ருத்ரா

இதோட தனிச் சிறப்பே அதுதான்பழைய நகைனா மினுமினுப்பு குறைவா இருக்கணும்

சரி உன் விருப்பம் …  நான் என்ன சொல்ல” என விட்டுவிட்டாள் பவி.

ருத்ரா நகைகளை அணிந்து தயாரானாள்கோதாவரி வந்து பார்த்துவிட்டு அணைத்துக் கொண்டவர் கண்களில் லேசாய் கண்ணீர் மினுமினுப்பு.

விக்கி மனையில் உட்கார்ந்து ஐயர் சொன்ன பூஜை செய்ய ஆரம்பிச்சிட்டான்இன்னும் கொஞ்ச நேரத்துல ருத்ராவை கூப்பிடுவாங்க” என்றவர் ஏதோ நினைவு வந்தவராக பரிமளாவிடம் “தாலியை கலசத்துல வெச்சி  பூஜை செய்யணும். நாங்க செய்துட்டோம் நீங்களும் தாலிக்கு பூஜை செய்யணும்  …”

இதோ இப்பவே வரேன் .. சித்ரா நீயும் வாம்மா” எனப் பரிமளம் சொன்னார்.

அவர்கள் பேசியபடி வெளியே செல்ல பவி மற்றும் சித்ராவும் அவர்களைப் பின்த் தொடர்ந்துச் சென்றுவிட்டனர்.

ருத்ரா அறையில் தனியாக இருந்தாள்கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டாள்அலங்காரம் திருப்தியாக இருந்ததுசெல்போனில் நான்கைந்து செல்பீ எடுத்துக் கொண்டாள்.

இப்படியா அம்போனு விட்டுடு போவாங்க என முணுமுணுத்தபடி வாட்சப்பில் போட்ட கிராபர் அனுப்பிய லிங்கை திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்புகைப்படங்கள் அதிகம் இருந்தபடியால் சின்னதாக இருந்ததுஅதைப் பெரிதுபடுத்திப்  பார்க்க வேண்டியிருந்தது.

மிக அழகான டிசைன் கண்ணில் பட்டது “வாவ்” என்றபடி அதைப் பெரிது படுத்தினாள். ஆணின் வலது கரம் பெண்ணின் இடது கரத்தை மென்மையாக பற்றியிருந்தது. இருவருக்கும் ஒவ்வொரு ஆர்டின். கைகள் இணைந்த இடத்தில் இரண்டு இதய வடிவும் சேர்ந்திருந்தது.

அதைப் பெரிதுபடுத்திப் பார்த்தாள்அந்த ஆண் விக்கிஅவள் கண்கள் பார்த்து மூளைக்கு உணர்த்தி அவள் இதயத்தைத் தொட்டதுஇன்னமும் நம்ப முடியாமல் சூம் செய்து பார்த்தாள்விக்கியே தான்.

விக்கியின் முகத்தில் மந்தகாசமான புன்னகைகைகோர்த்தவள் முகத்தில் வெட்க புன்னகை.

அதிர்ந்தவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.  இதயம் சுக்கு நூறாக உடைந்து போனது. ஆயிரம் மின்னல் ஒன்றாக தாக்கிய அதிர்வு. அந்த நொடியே விக்கியிடம் சென்று கேட்க வேண்டும் போல இருந்தது.

அப்போது ருத்ராவின் உறவுப் பெண்களும் அவள் அம்மாவும் பரபரப்பாக உள்ளே வந்தனர் “வா ருத்ரா தாலி கட்ட நேரம் ஆச்சு” என அழைத்தனர்.

அவளின் சித்தி செல்போனை வாங்கி பவியிடம் கொடுத்தார்பவியும் அவசரமாக அதை ருத்ராவின் ஹேண்பேக்கில்  திணித்தாள்.

ருத்ராவை அனைவரும் அழைத்துச் சென்று விக்கி அருகில் மனையில் அமர்த்தினர்ஐயர் பூ அட்சதை கொடுத்து முதலில் கணபதிக்கும் அடுத்து கௌரி தேவிக்கும் பூஜை செய்வித்தார். இயந்திரதனமாக சொன்னதைச் செய்தாள்.

ருத்ரா தன் நகையைச் சரி செய்வது போல ஒரு நொடி விக்கியை கண்டாள்அவன் எப்பொழுதும் போலவே இருந்தான்.

“கெட்டிமேளம் கெட்டிமேளம்” என ஐயர் நாதஸ்வர கோஷ்டி  பக்கம்  கைகாட்டினார். பின்பு  ”மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா” என மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே தாலி  வைத்திருந்த  பெரிய  வெள்ளித்தட்டை விக்கி முன் நீட்டினார். 

அதில் வெற்றிலை பாக்கு பூ மஞ்சள் குங்குமம் போன்ற மங்கள பொருட்கள் இருந்தனதேங்காய் ஒன்றில் முழுவதுமாக மஞ்சள்  தடவி நான்கு பக்கம் குங்குமம் வைத்து அதன் மேல் தாலி  வைக்கப்பட்டிருந்தது.

அழகான தங்கத் தாலி, முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசி.     மணமக்கள் வீட்டினரின் குலதெய்வம் மற்றும் முன்னோர்கள் ஆசிகள் பெறப் பூஜைகள் செய்வித்து பின்பு திருமண மண்டபத்தில்  கூடியிருக்கும் அத்தனை பெரியவர்களின் ஆசீர்வாதமும் பெற்ற திருமாங்கல்யம்.

மங்கள வாத்தியம் இசைக்க . . . தேவ மந்திரம் ஒலிக்க விக்கி   தாலியை எடுத்து  ருத்ரா கழுத்தில் பூட்டினான்அந்த  நொடி முதல் வேறு வேறான இருநபர்கள் கணவன் மனைவி  என்னும் புனிதமான பந்தத்தில் இணைந்தனர்.

அனைவரும் பூவும் அட்சதையும் அவர்கள் மேல் பூமாரியாகப்  பொழிந்தனர்மணமக்களின் பெற்றோர் இதயம்  ஆனந்தத்தில்  திளைத்ததுமணமகன் வீட்டாருக்கு  மேலும் ஒரு நபர் வருகையால் தங்கள் குடும்பம் முழுமை அடைந்தது என்னும்  நிறைவு.

மணமகள் வீட்டாருக்கு தங்கள் பெண் தங்களைவிட்டு பிரிய  நேரிடும் என்பது வேதனை அளித்தாலும்ஒரு பெண்ணாய் அவள் மனைவி தாய்  என்று வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டத்திற்கு  செல்லப் போகிறாள் என்பதில் இன்பமே.

ருத்ரா என்ன செய்து எனத் தெரியாமல் கண்களை இறுக மூட கண்ணீர் வழிந்தது. அது ஆனந்த கண்ணீர் என அனைவரும் நினைத்தனர்.

ருத்ரா மனதில் யார் அவள்? என்னும் வினா விஸ்வரூபம் எடுத்தது.

ஒளிரும் …

10 thoughts on “தீயாகிய தீபம் 7”

  1. Kalidevi

    Ithu ena thedirnu athuvum ippadi thali katurathuku munnadiya theriyanum ovalum ethum kekama thali kattikitta avanum normala irukan .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *