நேற்று இருந்த பதட்டம் துளியும் இன்றி நம்பிக்கையோடு அந்த அலுவலகத்தில் நுழைந்தாள் தென்றல். தன்னை தவிர வேறு யாரும் நேர்காணலுக்காக வரவில்லை என்று சற்று குழப்பம் இருந்தது தென்றலுக்கு.
Thank you for reading this post, don't forget to subscribe!தென்றல் பெயர் அழைக்கப்பட்டது. அனுமதி கேட்டு உள்ளே செல்ல புன்னகையோடு வரவேற்றான் மதன்.
தென்றல் குழப்பமாக பார்க்க “என்ன மிஸ்.தென்றல் உள்ளே வரவே இப்படி யோசிக்கிறீங்க… ப்ளீஸ் கம் சிட்” என்று இருக்கையை காட்ட
“சார்… இன்னைக்கு எம்.டி சார் இன்டர்வியூ பண்ணுவாரு னு சொன்னீங்க?” தென்றல் கேட்க
“யா… மிஸ்.தென்றல் பாஸ் தான் இன்டர்வியூ எடுக்கிறதா இருந்தது. பட் ஒரு அவசர வேலையா வெளியூர் போய்ட்டாரு.” என்று சொல்ல “ஓ…” என்று கேட்டுக் கொண்டவளை பார்த்து இன்னும் புன்னகை மாற்றாமல் இருப்பதை கண் சுருக்கி தென்றல் பார்க்க
“மிஸ்.தென்றல்” என்று மதன் எதுவோ கூறப்போக
“சார் ப்ளீஸ்… வார்த்தைக்கு வார்த்தை இந்த மிஸ் வேண்டாமே…” என்று கேட்டுக் கொள்ள
“ம்ம்… ஓகே தென்றல்… சொல்லுங்க எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்குறீங்க?” என்று மதன் கேட்க புரியாமல் விழித்தாள் தென்றல்.
“என்ன தென்றல் இப்படி பார்க்குறீங்க?”
“சார் இன்டர்வியூ?” என்று தென்றல் கேட்க
“தென்றல் ஆக்சுவலா இந்த இன்டர்வியூ பாஸோட பி.ஏ அண்ட் இந்த கம்பெனி மேனேஜர் ரெண்டு வொர்க்கும் நானே பார்த்துக்கிறேன். அதனால ஒரு அசிஸ்டன்ட் ரெக்ரூட் பண்ண தான்… பாஸ் என்னையே செலக்ட் பண்ண சொன்னாரு. பட் நான் தான் அவரோட இன்டன்ஷன் தெரியாம நானே பண்ணக் கூடாது னு தான் நான் ஒரு ஃபைவ் மெம்பர்ஸ் செலக்ட் பண்றேன் அதுல ஒருத்தரை நீங்க செலக்ட் பண்ணுங்க னு பாஸ்கிட்ட கேட்டுக்கிட்டேன். பட் பாஸ் ஊருக்கு போகும் போது நானே இந்த இன்டர்வீயூ ஹேண்டில் பண்ணனும் னு சொன்னதும் உங்களை பத்தி சொன்னேன். உடனே செலக்ட் பண்ண சொல்லிட்டாரு. அதான் நேத்து இன்டர்வியூ அட்டன்ட் பண்ண எல்லாருக்கும் அவங்க செலக்ட் ஆகலை னு மெய்ல் போட்டாச்சு..” என்று விவரித்து சொல்லியும் புரியாமல் பார்த்தாள் தென்றல்.
“தென்றல்… நீங்க செலக்ட் ஆக்கிட்டீங்க… ஃப்ரம் டுடே நீங்க உங்க வொர்க் ஸ்டார்ட் பண்ணலாம். நீங்க ரிசப்ஷன் ல உங்க அப்பாய்ண்மெண்ட் ஆர்டர் வாங்கிக்கோங்க..” என்றபடி இன்டர்காம் மூலம் சித்ரா என்ற பெண்ணை அழைத்த மதன்
“சித்ரா இவங்க இன்னைக்கு புதுசா ஜாய்ன் பண்ணிருக்காங்க… ஸ்டாஃப் எல்லாரையும் இன்ட்ரோ பண்ணுங்க. உங்களோட கேபின் ல வச்சே நம்ம கையில இருக்கிற ப்ராஜெக்ட்ஸ் டீடெயில்ஸ் எல்லாம் சொல்லுங்க..
தென்றல் உங்க கேபின் பாஸ் ரூம்ல தான்.. பாஸ் ஊருக்கு போயிருக்கிறதால அதுவரை நீங்க சித்ராவோட பக்கத்து கேபின் ல வொர்க் பண்ணலாம். இட்ஸ் பாஸ் ஆர்டர். ஓகே நீங்க ரெண்டு பேரும் இப்போ கிளம்பலாம்” என்று படபடவென்று பேசி முடித்தான் மதன்.
இத்தனை நேரம் பொறுமையாக பேசிக் கொண்டு இருந்தவன் இப்போது படபடவென்று உத்தரவுகளை வழங்க ஒரு நொடி மிரண்டு பார்த்த தென்றல் சித்ரா என்ற பெண்ணோடு வெளியேறினாள் தென்றல்.
சித்ரா அலுவலகத்தில் அனைவரையும் அறிமுகம் செய்து இது யார் என்று கேட்டவர்களுக்கு பதில் சொல்லி தன் இருப்பிடத்திற்கு அழைத்து வந்து தற்போது இந்த நிறுவனம் மூலம் நடந்து கொண்டிருக்கும் வேலைகள் பற்றி விளக்க மதிய உணவு இடைவேளை நேரம் வர ஒவ்வொருவராக சாப்பிட கிளம்ப
“தென்றல் லஞ்ச் டைம் ஆச்சு வாங்க சாப்பிட போகலாம்” என்று சித்ரா அழைக்க
“இல்ல சித்ரா… நீங்க போங்க” என்று தயங்க புரிந்து கொண்ட சித்ரா
“என்ன தென்றல் லஞ்ச் கொண்டு வரலையா? இட்ஸ் ஓகே தென்றல் வாங்க என்னோட லஞ்ச் ஷேர் பண்ணிக்கலாம்” என்று சொல்ல
“வேண்டாம் ங்க…. நான் வெளியே பார்த்துக்கிறேன்” என்று தயங்கினாள் தென்றல்.
“அட இங்க பக்கத்துல எதுவும் ஹோட்டல் கூட இல்ல… நீங்க ஏன் வெளியே அலையனும். நான் ஒன்னும் அந்த அளவுக்கு நல்லா நளபாகாம் மாதிரி சமைக்க மாட்டேன் தான். பட் சாப்பிடுற மாதிரி இருக்கும். வாங்க தென்றல்” என்று பேசி அழைத்து வந்தாள் சித்ரா.
டிஃபன் பாக்ஸ் மூடியில் வைத்து தந்த உணவை தென்றல் சாப்பிட்டு கொண்டு இருக்க அவளி ஃபோன் சிணுங்கியது.
‘அண்ணன் பொண்டாட்டி 💸’ என்ற பெயர் திரையில் மின்னி மின்னி ஒளிர தென்றல் அழைப்பை ஏற்பதற்குள் நின்று போனது அழைப்பு.. புன்சிரிப்புடன் அதை பார்த்த தென்றல் ‘சாப்பிட்டு விட்டு பேசிக் கொள்ளலாம்’ என்று வைத்து விட திரையில் ஒளிர்ந்த பெயரை சித்ரா வித்யாசமாக பார்ப்பதை அறிந்து
“என்னாச்சு ங்க?” என்று தென்றல் கேட்க
“இல்ல நீங்க தப்பா எதுவும் நினைக்கலைனா சொல்லுங்க… அதென்ன அண்ணன் பொண்டாட்டி.. அதுகூட ஓகே பக்கத்துல கரன்சி இமோஜி ஏன்?” ஒரு ஆர்வத்தில் கேட்டு விட சிரித்தாள் தென்றல்.
“அது ஒன்னும் இல்ல ங்க... என் கூடப்பிறக்காத அண்ணனோட மனைவி தான்… பெயர் ரூபிணி நாங்க ரூபா னு கூப்பிடுவோம் அதுக்காக மட்டும் இல்ல மேடம் கொஞ்சம் சேமிப்பு பேர்வழி… எந்த அளவுக்குனா இவளோட சேமிப்புக்காக எங்க அண்ணன் எக்ஸ்ட்ரா வா ஓவர் டைம் பார்க்கனும்… அந்த விஷயத்தில சண்டை வந்து தான் குழந்தையோட இப்போ அம்மா வீட்டுக்கு போயிருக்கா…” என்று பேசிக் கொண்டு இருக்க மீண்டும் அழைப்பு வந்தது.
இம்முறை அழைப்பை ஏற்று காதில் வைக்க “ஏன்டி… ஒரு ஃபோன் பண்ணினா எடுக்க மாட்டேங்குற அந்த அளவுக்கு பிஸியா?” என்று கோபத்தில் பொரிந்தாள் ரூபா.
“என்ன பண்றது அண்ணியாரே… ஒரு மாசம் வேலை வெட்டி இல்லாம தான் கிடந்தேன்… ஆனா நானே எதிர்பார்க்காம இன்டர்வியூ வந்த இடத்துலே உடனே வேலை கிடைச்சிருச்சே..” என்று தென்றல் சொல்ல
“ஹேய் சொல்லவே இல்லை…” என்று ரூபா மகிழ்வாக கூற
“எனக்கே இன்னைக்கு காலையில தான் தெரியும் ரூபா… வொர்க் முடிஞ்சு வீட்டுக்கு வந்து பேசலாம் னு நினைச்சேன்…” என்று தென்றல் சொல்லி கொண்டு இருக்க
“ஓ… அப்போ இப்போ வேலையா இருக்கியா?”
“இல்ல ரூபா… லஞ்ச் டைம் தான்… இங்க ஒரு கொலிக்… அவங்க கூட லஞ்ச் ஷேர் பண்ணி சாப்பிட்டு கிட்டு இருக்கேன்… சரி எங்க அண்ணன் கிட்ட உப்புக்கு பெறாத காரணத்தை சொல்லி சண்டை போடுற மாதிரி போட்டுட்டு புள்ளையை கூட்டிட்டு லீவை உங்க அம்மா வீட்ல என்ஜாய் பண்ண போய்ட்ட… இன்னும் ரெண்டு நாள்ல லீவ் முடியுது… எப்போ திரும்ப வரப்போற?” என்று தென்றல் கிண்டலாக கேட்க
“ஏன்டி... நான் உப்புக்கு பெறாத காரணத்தை சொல்லி சண்டை போட்டு வந்துட்டேனா? அடியே… நீயும் நானும் ஆளுக்கொரு பொட்டைப்புள்ளைய வச்சிருக்கோம்… ரெண்டு பேர் பெயர்லயும் மாசம் பத்தாயிரம் நகை சீட்டு போடச் சொன்னேன்… பொம்பளை பிள்ளைங்க வளர்ற காலத்துல நகை சேர்க்க வேணாமா? அதுக்கு உங்க நொண்ணன் என்னை என்ன பேச்சு பேசுறான்…. அதனால நான் எங்க அம்மா வீட்டுக்கு வந்தா நீயே என்னை கிண்டல் பண்றியா..?” என்று பொரிந்து தள்ளினாள் ரூபா.
ரூபா பேச தொடங்கியதுமே காது அடைப்பது போல பாவனை செய்து விட்டு ஸ்பீக்கர் மோடில் ஃபோனை வைத்து கீழே வைத்து விட்டாள் தென்றல். ரூபாவின் பேச்சை கேட்டு சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டு இருந்தாள் சித்ரா.
“சரி டி… அண்ணா மாட்டேன் னு சொல்லலையே… ஏற்கனவே போட்ட சீட்டு முடியட்டும் னு தானே சொல்லுச்சு.. உனக்கே தெரியும் ல யாரு வீட்டுக்கு வந்தாலும் அந்த ஹவுஸ் ஓனர் எப்படி பேசுவார் னு… நீ கூட வரும் போதே அப்படி பேசுவாரு… பாவம் அண்ணே, தனியா இருக்கு னு இங்க வந்து சாப்பிட்டு போ னு அம்மா கூப்பிட்டு வந்துச்சு… அந்த ஹவுஸ் ஓனர் ரொம்ப அதிகமா பேசுனதும் வீட்டுக்கு வந்து சாப்பிட கூட யோசிக்குது…” என்று சோகமாக சொல்ல
“நானும் அதை நினைச்சு தான் டி கவலையா இருக்கேன்… ஊருக்கு வரலாம் னு கிளம்புனா அம்மா மிளகாய் பொடி வத்தல் வடகம் ஊறுகாய் னு நிறைய ரெடி பண்ணி வச்சுருக்காங்க… பாப்பாவையும் இந்த ஐட்டங்கள் எல்லாத்தையும் நான் மட்டும் தனியா எப்படி தூக்கிட்டு வரது? நான் ஃபோன் பண்ணா உன் நொண்ணன் ஓவரா சீன் போடுவான்… நீயே அவனை வரச்சொல்லு…
ஈவ்னிங் கிளம்பினா நாளைக்கு காலையில வந்திடுவான்…” என்று ரூபா சொல்ல
“ம்ம் சரி டி… லஞ்ச் டைம் முடிய போகுது… அண்ணனுக்கு மெசேஜ் போடுறேன்…” என்று சொல்லி விட்டு அணைத்தாள் தென்றல்.
“ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங் கேரக்டரா இருப்பாங்க போலயே உங்க அண்ணி…” சித்ரா சொல்ல
“ஆமா… அவ என்னோட சின்ன வயசு ஃப்ரண்ட் கூட… அதான் அவ பொண்ணோட சேர்த்து என் பொண்ணுக்கும் சேர்த்து சேமிக்கிறேன் னு எங்க அண்ணனை படுத்தி எடுப்பா…” என்று பேசியபடி மதிய உணவை முடித்துக் கொண்டு இருப்பிடம் வந்தனர் தென்றல் மற்றும் சித்ரா.
“கேட்குறேனு தப்பா நினைக்காதீங்க தென்றல் குழந்தை இருக்கு னு சொல்றீங்க… அப்போ உங்க கணவர்?” என்று கேட்டு நிறுத்த
“என் குழந்தையோட அப்பா இப்போ இல்ல…” என்று இறுகிய குரலில் சொல்ல அவளின் மனக்காயத்தை கிளறியதற்காக மன்னிப்பு வேண்டினாள் சித்ரா.
– தொடரும்…
– நன்றியுடன் DP ✍️
interesting