Skip to content
Home » தீரனின் தென்றல்-45

தீரனின் தென்றல்-45

தீரனின் தென்றல் – 45

Thank you for reading this post, don't forget to subscribe!

“ஏய் தென்றல்… என்னடி சொல்ற? நீ கல்யாணம் வேணாம்னு பிடிவாதம் பிடிக்க அத்தை எப்படி டி காரணமாகும்?” ரூபி அதிர்ச்சியாக கேட்க பொன்னியும் மொத்தமாக அதிர்ந்து போய் நின்றிருந்தார்.

“தென்றல்… என்ன இது? அம்மா நீயும் ஆதீ சாரும் சேர்ந்து நல்லா வாழத்தானே ஆசைப்படுறாங்க…” சித்ரா சொல்ல

“அம்மா ஆசை அது தான் சித்ரா… அம்மாக்கு மட்டும் இல்ல என்னை கம்பல் பண்ண மாட்டேன் னு சொன்னாலும் உங்க எல்லாரோட ஆசையும் கூட அதுதான்… ஆனா நான் அதை சொல்லலை.. உங்களுக்கு தெரியாது என் அம்மா நாலு வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாங்க தெரியுமா?” கண்ணீரோடு தென்றல் கேட்க

“ஏய்.. என்னடி சொல்ற? அப்போ இருந்த அதே அத்தை தானே இப்போவும் இருக்கு…” ரூபி சொல்ல

“அதே அம்மா தான் ரூபி.. ஆனா அம்மாவோட அடையாளங்கள்…” என்று கூறிய தென்றலுக்கு குரல் கமற வார்த்தை தடை பட்டது. பொன்னிக்கு மகள் கூற வருவது புரிந்து கண்ணில் தேங்கிய நீர் பெருக்கெடுக்க கண்ணை மூடி இமை தட்டி வெளியேற்றினார் கண்ணீரை…

“உங்களுக்கு தெரியாதுல சித்ரா… எங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் லவ் மேரேஜ்… ரெண்டு பேர்க்குள்ளேயும் அவ்வளவு லவ் கேரிங் நான் பார்த்துருக்கேன் என் அம்மா காலையில எழுந்ததும் குளிச்சிட்டு நம்மளை மாதிரி ஸ்டிக்கர் பொட்டு இல்ல.. குங்குமம்.. விரல் நிறைய எடுத்து நெத்தி நிறைய வைச்சுப்பாங்க… அம்மாக்காக அப்பா தினமும் முழம் முழமா பூ வாங்கி கொடுப்பாரு… நான் அதை கிண்டல் பண்ணா கூட

‘இது தான்டி என்னோட அடையாளம்… என் உசுரு போனாலும் என் அடையாளத்தை மாத்த முடியுமா’னு அம்மா என்கிட்ட சண்டைக்கு நிற்பாங்க… ஆனா.. இப்போ…” என்று தேம்பிய படி தென்றல் நிறுத்த ஆதீரனுக்கும் அத்தை நிலையை பார்த்து கண்ணீர் வந்தது.

“தென்றல்.. எல்லாம் விதி னு கடந்து போறதை விட்டு ஏன் தென்றல் இந்த மாதிரி பேசிட்டு இருக்க?” சித்ரா ஆறுதல் கூறுவதற்காக கூற

“நான் கேட்குறேன் னு தப்பா நினைக்காதீங்க சித்ரா.. உங்க லைஃப் ல நடந்த எதுக்குமே மதன் அண்ணா பொறுப்பு கிடையாது… ஆனாலும் அவரோட காதலை ஏத்துக்க முடியாம உங்களோட பழைய வாழ்க்கை உங்களை தடுக்குது தானே… அப்படி இருக்கும் போது என்னோட மொத்த காதலையும் ஒரே வார்த்தையில கொன்ன ஒருத்தனை நான் எப்படி ஏத்துக்க முடியும்?

அப்படியே ஏத்துக்கிட்டாலும் கூட என் அம்மாவோட சுமங்கலி அடையாளத்தை பறிச்ச நானே அவங்க முன்ன பூவோட பொட்டோட வாழ எனக்கு கூசுது சித்ரா… இத்தனை நாளா இவன் மேல இருந்த கோபத்தால மட்டும் இல்ல… என் மனசுல இருந்த குற்றவுணர்ச்சி உறுத்தினதுனாலயும் தான் நான் குங்குமம் வைச்சுக்கிறதையும் பூ வைச்சுக்கிறதையும் தவிர்த்துட்டு இருந்தேன்…” என்று தென்றல் முடிக்க யார் என்ன சொல்லி எப்படி சமாதானம் செய்ய என்று புரியாமல் குழம்பி நின்றனர் அனைவரும்.

இத்தனை நாட்கள் அருகில் இருந்தும் கூட மகளின் இந்த உணர்வை புரிந்து கொள்ளாமல் விட்டோமே என்று வருந்திய பொன்னி அருகில் வந்து தென்றல் அருகில் அமர்ந்து மெல்ல பேச்சை துவங்கினார்.

“தென்றல்… நீ சொல்ற மாதிரி உன் அப்பா சாவுக்கு நீயோ இல்ல ஆதீ தம்பியோ காரணம் இல்லடி.. நான் சொல்றதை கொஞ்சம் காதை திறந்து வைச்சு மூளையில ஏத்திக்கோ தென்றல்… உன் அப்பா சாக காரணம் அவர் மட்டும் தான்… அவரு மதுரைக்கு போய்ட்டு வந்தது வைத்தியம் பார்க்க தான்கிறது முன்னாடியே சொல்லி இருந்தா நாம கொஞ்சம் சுதாரிப்பா இருந்திருக்கலாம் ல..

அது மட்டும் இல்ல… உன் அத்தை பூரணி மதினி அவங்க புருஷனை பத்தி ‘என் மகனுக்கு பக்குவமா எடுத்து சொல்லுங்க அண்ணா.. அவனாவது வாழ்க்கையை புரிஞ்சு பொறுப்பா இருக்கட்டும்’ னு எத்தனையோ தடவை உங்கப்பா கிட்ட கேட்டாங்க..‌ ஆனா உங்க அப்பா தான் ‘ஏற்கனவே என் மருமகனுக்கு நிறைய பொறுப்பு இருக்கு. அதோட கொஞ்சம் தன்மானம் பார்க்குற பையன்… மாமா பணத்துல வாழ்றோம்னோ இல்ல அவனை பெத்தவன் தப்பானவன்னோ தெரிஞ்சா மனசு வெசனப்படும் வேண்டாம்’ னு சொல்லி தட்டிக் கழிச்சாரு…

இல்ல அன்னைக்கே ஆதீரனுக்கு அவங்க அப்பா பத்தி தெரிஞ்சிருந்தா அந்த தம்பி ஏன்டி உன் அப்பா பத்தி தப்பா நினைக்க போகுது… கொஞ்சம் யோசி தென்றல்…” பொன்னி எவ்வளவு சொல்லியும் தென்றல் அசைவதாக இல்லை..

“ம்கூம் இனி இவளுக்கு பொறுமையா பேசுனா ஆகுது… இவளை அடக்க நாம கொஞ்சம் சாமி ஆடுனா தான் ஆச்சு…” என்று மனதில் நினைத்து கொண்ட பொன்னி “ஏய்… இந்தாடி இப்போ என்னதான் நினைச்சுட்டு இருக்க உன் மனசுல ஆங்?” என்று கோபமாக கேட்க மிரண்டு பார்த்தாள் தென்றல்.

“ஏன்டி அப்பா… அப்பா னு உருகுறியே அந்த அப்பா இருந்திருந்தா உன்னை இவ்வளவு தூரம் பேசிவிட்டு அமைதியா இருந்திருப்பாரா டி? ஒரு வேளை அன்னைக்கு வந்த நெஞ்சு வலி ஒரு நாள் தள்ளி அந்த மனுஷனுக்கு வந்திருந்தா இன்னேரம் உன்னையும் அவர் மருமகனையும் சேர்த்து வைச்சுட்டு போயிருப்பாரு… அப்போ என்னடி பண்ணிருப்ப?

இதோ பாரு தென்றல்… இத்தனை வருஷம் உன் பிடிவாதத்துக்கு நாங்க படியலை… உன்னை நீ ஆசைப்படுற மாதிரி வைச்சுக்க உங்கப்பா ஆசைப்பட்டாரு..‌ அந்த ஒரு காரணம் தான்… ஆனா நீ தனியா இருந்து என்ன சந்தோஷமாவா இருந்த?

சரி எப்படி எப்படியோ வாழ்ந்தவங்க இப்போ குழந்தைக்காக ஒரே நேர்கோட்டுல வாழனும்… அதுக்கு முறையா அங்கீகாரம் கொடுக்க இந்த கல்யாணத்தை விட்டா என்ன வழி இருக்கு? இனி இந்த சமூகத்துல உன்னையும் உன் பொண்ணையும் தப்பா பேசாம மரியாதையா கடந்து போகனும் னா நீ ஆதீ தம்பியை கல்யாணம் பண்ணி தான் ஆகனும்… இது நான் மட்டும் இல்ல… உங்கப்பா இருந்திருந்தா ஆதீரனை முதல் நாள் பார்த்த அன்னைக்கே கையில மஞ்ச கயிறை கொடுத்து கட்ட சொல்லிருப்பாரு.. தெரியும் ல… ஒழுங்கா நாங்க சொல்ற முகூர்த்தத்துல கல்யாணத்துக்கு தயாராகு..” என்று உத்தரவாக கூறிவிட்டு இன்னொரு அறைக்குள் சென்று விட்டார் பொன்னி.

தன் தாயா தன்னை இப்படி பேசியது என்று தென்றல் அதிர்ச்சி மாறாமல் பார்த்துக் கொண்டு இருக்க அனைவுருமே இந்த புது வர்ஷன் பொன்னியை கண்டு வியந்து போயினர்.

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

1 thought on “தீரனின் தென்றல்-45”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *