தீரனின் தென்றல் – 47
Thank you for reading this post, don't forget to subscribe!அந்த அம்மன் கோவில் முன்பு வந்து நின்ற காரில் இருந்து இறங்கினர் ஆதீரன் தென்றல் அபூர்வா மதன் சித்ரா பொன்னி மற்றும் சக்தி… குமாரும் ரூபியும் ஏற்கனவே ஏற்பாடுகளை கவனிக்க கோவிலுக்கு வந்திருக்க ‘இவர்களை முகூர்த்த நேரத்திற்கு சற்று முன்பு அழைத்து வருகிறேன்’ என்று பொன்னி சொல்லி இருந்தார்.
இறங்கியவர்களை ரூபியும் குமாரும் உள்ளே அழைத்துச் செல்லும் நேரத்தில் அன்று நடந்ததை பார்க்கலாம்…
சித்ரா மதன் திருமணம் நடக்கும் என்றால் தனக்கும் திருமணத்திற்கு சம்மதம் என்று சொல்லி விட்டு தென்றல் சென்றிட தலை குனிந்து பதிலின்றி அமர்ந்திருந்தாள் சித்ரா.
“சரி.. அதான் அவளே சொல்லிட்டு போய்ட்டாளே… அத்தை ஒரே நாள்ல ரெண்டு கல்யாணம் னு நீ கோவில்ல பேசுடு.. சித்ரா மதன் சார்… நீங்களும் தயாராகிடுங்க…” என்று சர்வ சாதாரணமாக ரூபி சொல்ல
“ரூபா.. என்ன நீ.. நீ பாட்டுக்கு இப்படி சொல்ற? நான் எப்படி கல்யாணம்.. அதெல்லாம் முடியாது ரூபா… உனக்கு தெரியாது..” சித்ரா மறுக்க
“அதெல்லாம் எல்லாமே தெரியும் சித்ரா… மதன் தம்பி தென்றல்கிட்ட உங்களை பத்தி சொன்னப்போவே எங்க எல்லாருக்கும் தென்றல் சொல்லிருக்கா.. ஆனா அதை பத்தி பேசி உன் மனசை நோகடிக்க கூடாது னு அமைதியா இருந்தோம்… இப்போ என்ன சித்ரா… மதனை கல்யாணம் பண்ணிக்க என்ன தடுக்குது உன்னை… அந்த ஒருநாள்.. அதுவும் நீ வாழாத உன் வாழ்க்கையில அடுத்தவங்க முடிவு எடுத்த அந்த ஒருநாளை நீ கடந்து வரனும் ல சித்ரா…” பொன்னி எடுத்து கூற
“இல்லமா.. அந்த நாளை நான் கடந்து மட்டும் இல்ல என் கடந்தகால வாழ்க்கை மொத்தமும் நான் மறந்துட்டேன்.. எங்களோடது காதல் கல்யாணம்னே வைச்சுக்கலாம் ம்மா… எனக்கு இவர் குடும்பத்தோட சம்மதம் மட்டும் வேணும் னு கேட்டேன்…” என்று சித்ரா சொல்ல
“ம்க்கும்… இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது னு சிம்பாளிக்கா சொல்றா…” என்று மதன் சலிப்பாக முணுமுணுக்க
“சும்மா இரு மதன்… இதோ பாருங்க சித்ரா… உங்களை ஒரு சகுனத்தடையா பாக்குற அவங்களுக்கு முன்ன நீங்களும் மதனும் கல்யாணம் பண்ணி நல்லபடியா வாழ்ந்து காட்டுங்க.. அதுதான் சரி…” என்று குமார் பேச யோசனையோடு மதன் முகத்தை நிமிர்ந்து ஏறிட்டாள் சித்ரா.
ஆதீரன் இதில் எதுவும் பேசவே இல்லை… எங்கே ஏதாவது பேசினால் தன்னுடைய திருமணத்தை நிறைவேற்றிக் கொள்ள பேசுகிறானோ என்று சித்ரா நினைக்க கூடும் என்று அமைதி காத்தான்.
“என் வாழ்க்கை ல சந்தோஷமா இருக்க இத்தனை பேர் ஆசை படுறீங்க… உங்க மகிழ்ச்சிக்காகவும் தென்றலோட முடிவுக்காகவும் எனக்கு சம்மதம்..” என்று சித்ரா சொல்ல இன்பமான அதிர்வில் அவளை விழி கொட்டாது பார்த்தான் மதன்.
அதன் பிறகு காலம் தாழ்த்தினால் இரு மணமகளில் யாராவது மனம் மாறிவிடுவரோ என்ற படபடப்பில் அதிக முனைப்போடு தங்கள் திருமண வேலைகளில் ஈடுபட்டனர் மணமகன்கள் இருவரும்…
என்னதான் தென்றல் நடப்பதெல்லாம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தாலும் எப்போ என்ன செய்வாளோ என்ற பதட்டத்தில் தான் ஆதீரன் இருந்தான். முகூர்த்த புடவை வாங்க மதன் சித்ராவிற்கு பிடித்ததை தேர்ந்தெடுக்க சித்ரா ஏற்றுக் கொண்டாள் மகிழ்வாக…
அதே போல ஆதீரன் தென்றலுக்கு தேர்வு செய்ய அவனை முறைத்து விட்டு கடந்துவிட்டாள் எதுவும் பேசாமல்… பின்னர் வழக்கம் போல அபூர்வாவை வைத்து “இந்த ட்ரெஸ் தான் தெட்டு உனக்கு அழகா இருக்கும்” என்று சொல்ல வைத்து அதே புடவையை வாங்க செய்து விட்டான்.
இப்போது தான் தேர்ந்தெடுத்த புடவையில் தென்றல் வர அவளை ஓரக்கண்ணால் ரசித்தபடியே அபூர்வாவை தூக்கிக் கொண்டு நடந்து வந்தான் ஆதீரன். அபூர்வாவிற்கும் சக்திக்கும் என்ன நடக்கிறது என்று சரியாக புரியாவிட்டாலும் “ஐ… எங்க அம்மா அப்பாவுக்கு கல்யாணம்” என்று குதூகலிப்போடு இருந்தனர்.
ரூபியும் குமாரும் இவர்களை திருமணம் நடைபெறும் சன்னதி முன்பு அழைத்து வர சித்ராவின் தம்பி திணேஷ் வந்திருக்க “டேய் திணேஷா…” என்று ஆச்சர்யமாக சித்ரா பார்க்க
“அக்கா…” என்று அவளை தோளோடு அணைத்து விடுவித்தான் திணேஷ். “போக்கா… எத்தனை தடவை பழசை எல்லாம் மறந்துட்டு ஒரு கல்யாணம் பண்ணு னு சொல்லிருப்பேன்… ஆனா இப்போ கல்யாணம் பண்ணிக்க போகும் போது கூட என்கிட்ட நீ சொல்லவே இல்லை… மதன் சார் தான் சொன்னாரு..” சிறு கோபத்தோடு திணேஷ் அக்காளை குறைபட்டுக் கொள்ள
“திணேஷ்… இன்னும் என்ன சார்… மாமா னு கூப்பிடு னு அன்னைக்கே சொன்னேன் ல..” உரிமையாக அதட்டினான் மதன்.
“சரி வாங்க… நேரம் ஆகுது அப்புறமா எல்லாம் பேசிக்கலாம்.” என்று பொன்னி அழைக்க அடுத்து திருமணத்திற்கான சடங்குகள் அனைத்தும் ஐயர் செய்ய ஆதீரன் தென்றல் கழுத்திலும் மதன் சித்ரா கழுத்திலும் பொன்தாலி அணிவித்து தங்கள் காதலிகளை மனைவியாக மாற்றிக் கொண்டனர்.
“மாப்பிள்ளைங்க ரெண்டு பேரும் அவா அவா மனைவிக்கு குங்குமம் இட்டுட்டு அவங்க கை பிடிச்சு கோவிலை சுத்திட்டு வாங்கோ…” என்று சொல்ல ஆதீரன் தென்றல் நெற்றியில் குங்குமம் வைத்து அவள் கண்ணோடு கண் நோக்க எந்த உணர்வும் பிரதிபலிக்காமல் வெறுமையாக நின்றாள் தென்றல்.
மதன் சித்ரா நெற்றியில் குங்குமம் வைத்து அவளை பார்த்து புன்னகை சிந்த கண்கள் கலங்க காதலோடு பார்த்தாள் அவனை… பின்னர் ஐயர் கூறியபடி மணமகள்கள் கோவிலை வலம் வர ஆதீரன் தன் மகளை தன்னோடு தூக்கிக் கொண்டான்.
குமார் ரூபிணி சக்தியோடு மணமக்கள்களோடு சேர்ந்து கோவிலை வலம் வர “கால் வலிக்குது” என்று பொன்னி ஓய்வாக அமர்ந்து கொண்டார்.
கோவிலை வலம் வந்து விட்டு மீண்டும் சாமி தரிசனம் செய்து முடிக்க “அப்பா.. பசிக்கு…” என்று அபூர்வா சொல்ல “ஆமா… எனக்கும்…” என்று சக்தி துணை சேர்ந்து கொள்ள
“கொஞ்சம் பொறுங்கடி… வீட்டுக்கு போய் இவங்களுக்கு பால் பழம் கொடுத்துட்டு உங்களுக்கும் சாப்பிட ஏதாவது செய்து தரேன்…” என்று பொன்னி கூற
“அத்தை இதுக்கு மேல வீட்டுக்கு போய் சமைக்க நேரமாகிடும்… நாம போற வழியிலே ஒரு ஹோட்டல் ல சாப்பிட்டு போகலாம் அத்தை…” ஆதீரன் சொல்ல
“அதில்ல மாப்ளை… முதல்ல வீட்டுக்கு போகலாம்… உங்களுக்கு பால் பழம் கொடுக்கனும் ல….” என்றிட
“அதனால என்ன அத்தை… ஹோட்டல் ல ஒரு டம்ளர் பால் வாங்கிடலாம் இதோ அர்ச்சனை பண்ண வாழைப்பழம் இருக்கு வேற என்ன?” ஆதீரன் சொல்ல
“ஆமா அம்மா.. இன்னைக்கு ஒரு நாள் எல்லாரும் ஹோட்டல் ல சாப்பிடலாம்… இன்னைக்கு கிச்சனுக்கு லீவ்…” குமார் சொல்ல “சரி” என்று பக்கத்தில் இருந்த உணவகத்திற்கு அனைவரும் செல்ல
“நான் கிளம்பறேன் அக்கா” என்று கூறிய திணேஷையும் வற்புறுத்தி தங்களோடு அழைத்துச் சென்றான் மதன்.
உணவகத்தில் முதலில் குழந்தைகளுக்கு உணவை வரவழைத்திருந்தான் ஆதீரன் அதன் பின்னர் பால் மற்றும் பழத்தை சாப்பிட சொல்லி இவர்களை கூற
“என்னால எச்சில் பால் எல்லாம் குடிக்க முடியாது…” என்று தென்றல் திட்டவட்டமாக கூற
“இட்ஸ் ஓகே… என் வொய்ஃப் மிச்சம் வைக்கிற பாலை நான் குடிச்சுக்கிறேன்… வித் ப்ளஷர்..” என்று குறும்பாக தென்றலை பார்த்து ஆதீரன் கூற அவனை முறைத்தாள் தென்றல்.
“என்ன தென்னுக்குட்டி… என் எச்சிலை நீ சாப்பிடறதும் உன் எச்சிலை நான் சாப்பிடுறதும் நமக்கு ஒன்னும் புதுசு இல்லையே… என்ன கொஞ்சம் அதிகமா கேப் வந்திருச்சு நமக்குள்ள..” என்று தென்றல் காதருகில் குனிந்து ஆதீரன் குறும்பாக கூற தீயாக முறைத்தாள் அவனை….
அதை ரசித்தபடி பட்டும் படாமல் அவள் இதழ் முத்தமிட்ட அவள் எச்சில் படிந்த டம்ளரில் இருந்த பாலை முழுவதும் காலி செய்து இருந்தான் ஆதீரன்.
இன்னொரு டம்ளரில் வரவழைக்கப்பட்டிருந்த பாலை மதன் சித்ரா தம்பதி காதலோடு பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த இரு தம்பதிக்கும் ஏற்கனவே தயாராக வைத்திருந்த ஆரத்தியை எடுத்து வந்து வரவேற்றாள் ரூபிணி.
ஆதீரன் தென்றல் திருமணத்தை அறிவிக்கும் விதமாக தங்கள் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் அப்பார்ட்மெண்ட்ஸ் ல் இருந்த கம்யூனிட்டி ஹாலில் மாலை விருந்திற்கு ஏற்பாடு செய்து இருந்தான் ஆதீரன்.
அதில் தன் மனைவி மகளை அனைவருக்கும் கர்வத்தோடு அறிமுகம் செய்து வைத்தான் ஆதீரன்.
விருந்து எல்லாம் முடிந்து வர மதன் மற்றும் சித்ராவிற்கு மதன் ஃப்ளாட்டில் இரவு சடங்குக்கு குமாரும் சித்ரா தம்பி திணேஷூம் உடனிருந்து எல்லா ஏற்பாடும் செய்ய ஆதீரன் தென்றலுக்கு தென்றல் தங்கி இருந்த ஃப்ளாட்டில் ஏற்பாடு செய்யப் பட்டிருக்க அபூர்வாவை தன்னோடு அழைத்துக் கொண்டு பொன்னி ரூபிணி குமார் சக்தி திணேஷ் அனைவரும் ஒரு நாள் சித்ரா ஃப்ளாட்டிற்கு சென்று விட
“ஆஹா… கும்பலா இருந்தாலே முறைச்சே சாகடிப்பா… இப்போ சிங்கிளா சிக்கி இருக்கோம்… என்ன பண்ண போறாளோ…” என்று சிங்கத்தின் குகைக்குள் செல்லும் மான்குட்டி போல மிரட்சியுடன் தென்றல் இருந்த அறைக்குள் சென்றான் ஆதீரன்…
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
Wow super. Intresting