Skip to content
Home » தீரா காதலே – 17

தீரா காதலே – 17

தீரா காதலே – 17


மூன்று நாட்கள் கழித்து காலையில் அனைத்து ஊடகங்களிலும் முக்கிய தலைப்புச் செய்திகளாக மோசடி வழக்கு பற்றிய தகவல்கள் வெளியாகின.


//லோன் ஆப் செயலிகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட ஏழுபேர் கொண்ட கும்பல் பெங்களூரில் கைது . மேலும் பீகார் மற்றும் அரியானாவில் தேடுதல் வேட்டை நடக்கிறது//


//பாதிக்கப்பட்ட 45000 பேர் மீட்பு//


//கைது செய்த மோசடி கும்பலிடமிருந்து 10 செல்போன்கள் 8 லேப்டாப்கள் மற்றும் 30 சிம்கார்டுகள் பறிமுதல்//


//மேலும் 150 சவரன் தங்க நகைகளும் 20 அசையா சொத்துக்களும் கைப்பற்றப்பட்டது//


//நாள் ஒன்றுக்கு ரூபாய் ஒரு கோடி வரைக்கும் பணப்பரிவர்த்தனை செய்யபட்டதாக தகவல்//


//கடன் பெற்றவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டல்//


//செல்போன் எண்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியும் UPI Id களை மாற்றி பயன்படுத்தியும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்//


//பொதுமக்கள் லோன் ஆப் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என்று அறிவுறுத்தல்//


//பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகாரளிக்கும் பட்சத்தில் வங்கிக்கணக்கை முடக்கி பணத்தைக் கைப்பற்றலாம்//


//கீழ்க்கண்ட லோன் செயலிகள் RBI-இன் அனுமதி பெறாத செயலிகள்.
Instanova
Cashearly
Walnut
Ring
Doslee
Getrupeedot.com
Luckmini
Cash
Krazyrupee
Mykesh app
Crazyrupee
Goldbowl
Etc…


இவற்றை தவிர்த்திடும்படி மக்களுக்கு எச்சரிக்கை//


பிரேக்கிங் நியூஸ் ஒளிப்பரப்பாகிய அதே நேரத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரியதர்ஷன் நிகில் அன்பினி மூவரும் அமர்ந்திருக்க பத்திரிக்கையாளர்களும் செய்தித் தொலைக்காட்சி நிருபர்களும் தங்களுக்கு தேவையான செய்திதுணுக்குகளுக்காக அவர்களிடம் கேள்வி கேட்டு கொண்டிருந்தனர்.


“எங்க பாத்தாலும் சைபர் க்ரைம்னு சொல்றாங்களே அப்படினா என்ன மேடம்?”


“ஒரு தனி நபர் அல்லது குரூப் ஆப் பீப்பிள்ஸை இன்றைய டெக்னாலஜி மூலமா அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் உடல் மற்றும் மனதை துன்புறுத்தும் குற்றங்கள் அனைத்தும் சைபர் க்ரைம் குற்றங்கள்னு சொல்வாங்க.

இன்னும் தெளிவாக சொல்லனும்னா நாம் யூஸ் பண்ற மொபைல் இண்டர்நெட் அண்ட் அதர் டிஜிட்டல் டிவைஸ்களை அட்டாக் பண்றது.. தகவல்களை திருடுவது.. அழிப்பது இதலாம் தான் “


“எந்த குற்றங்கள் எல்லாம் சைபர் க்ரைமில் அடங்கும் சார்?”


” இன்னைக்கு இருக்கிற டிஜிட்டல் வேல்டுல குற்றங்களும் டிஜிட்டல் டிசைனா தான் நடக்குது…


எக்ஸாம்பிள்க்கு சொல்றேன்… நாம ஆன்லைனில் ஒரு ஆர்டர் பண்றோம் ஆனால் அந்த பொருளுக்கு பதிலாக வேறு பொருளை அனுப்புறது…


நம்மோட செல்போன் நம்பரை தெரிஞ்சி வைத்துக்கொண்டு போன்கால் மெஸஜெஸ் செண்ட் பண்ணி டிஸ்டர்ப் பண்றது…


நம்ம டிஜிட்டல் டிவைஸ்ல வைரஸ் அட்டாக் பண்ற மாதிரி லிங்க் ஷேர் பண்றது…


Online Transaction-இல் உங்கள் பணத்தை திருடுவது…


டேட்டாஸ் ஹேக் பண்றது…


இது எல்லாமே சைபர் கிரைம்ஸ்தான்” என்று பிரியதர்ஷன் விவரமாக சொன்னான்.


“ஓகே சார். காலையில் வந்த பிரேக்கிங் நியூஸ் பத்தி.. ?


“கம்ப்யூட்டர் டெக்னாலஜியோட டெவலப்மெண்ட் ரொம்ப அபரிமிதமாக இருக்கு. அதோட வளர்ச்சியை யார் நினைச்சாலும் தடுக்க முடியாது…


எந்தளவுக்கு நன்மை தருதோ அதே அளவு தீமையும் அதில் அடங்கியிருக்கு. அதோட கரும்புள்ளி தான் அழிவு தரும் இந்த லோன் ஆப். அதனால் இப்போது பல உயிர்கள் பலியாகியிருக்கு…


லோன் கொடுக்கிறோம்னு சொல்லி பணம் அதிகமாக கேட்டு மிரட்டல் கொடுக்கிறாங்க. அதிலிருந்து மீள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்ததான் இந்த பிரஸ்மீட்”


“சைபர் கிரைம்காக தனி பிராஞ்ச் இருக்கா சார்?


“எஸ் சைபர் காவல் நிலையங்களும் சைபர் லேப்களும் தனியொரு காவல்பிரிவில் தான் செயல்படுது. டிஜிட்டல் குற்றங்கள் பற்றிய புகார்கள் ஆன்லைன் மோசடிகள் எல்லாம் இவங்க என்கொயரி பண்வாங்க”


“இந்த சைபர் க்ரைம்ல இருந்து தப்பிக்க வழி இருக்கா மேடம்?”


“ஓடவும் முடியாது ஒளியவும் முடியாதுன்றதற்கு சரியான சான்று தான் இந்த சைபர் க்ரைம்ஸ்…


இது இண்டர்நெட் யூஸரை மட்டும் அட்டாக் பன்றது இல்லை யூஸ் பண்ணாதவங்களையும் கூட விடுரது இல்லை. எல்லாம் நம்ம ஆக்டிவிட்டியில்தான் இருக்கு”


“என்ன சொல்றீங்க மேடம்? இண்டர்நெட் யூஸ் பண்ணாதவங்களையும் இந்த குற்றங்கள் தொடருமா?”


“யெஸ். இண்டர்நெட் இல்லைனா என்ன நார்மல் மெஸஜெஸ் இருக்கே…


Congratulations for attending interview with salary 23500rs. Please whatsapp at https://wa.me/916925812249 for more details Gameing Room


வெளிநாடுகளில் வேலை வாங்கி தருகிறோம்…


அரசு திட்டத்தில் மானியம்…


வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு…


நிவாரண நிதி…


வேலைவாய்ப்பு முகாம்…


கப்பலில் வேலைவாய்ப்பு…


சிறப்பு பரிசு கிடைக்கும்…


இது போன்ற மெஸஜெஸ்களை அனுப்புவாங்க. இன்னும் நம்பிக்கை வர fake mail id & fake website தந்து நேரத்திற்கு தகுந்த பொய்களை சொல்லி நம்பிக்கை ஏற்படுத்தி முன்பணம் சேவைக்கட்டணம்னு சொல்லி பணம் கட்ட சொல்வாங்க. கட்டியபிறகு தான் ஏமாந்ததை உணர்வாங்க.”


“உங்கள் எண்ணிற்கு பரிசு விழுந்துள்ளதுனு மெஸஜ் வந்தால் என்ன செய்யனும் சார்?”


“அப்படி வந்தாலே அது ஏமாற்றுவேலைனு புரிஞ்சிக்கனும். எப்போதும் மெஸஜெஸ்ல வரக்கூடிய URL-ஐ விசாரிக்காமல் கிளிக் பண்ணவே கூடாது. அதிலிருந்து வைரஸ் அட்டாக் ஆகலாம்… உங்களோட டேட்டாஸ் ஹேக் பண்ணலாம்…
சோ இது மாதிரி மெஸஜெஸ்களை கண்டுக்காமல் இருக்கதுதான் நல்லது.

சப்போஸ் லிங்க் ஓபன் செய்திங்கனா அதில் கேட்கப்படுகிற உங்களோட மொபைல் எண், பேங்க் டீடெய்ல்ஸ், OTP Number, ATM Number-னு எதையும் ஷேர் பண்ணாதீங்க”


“பேங்க் பெயரை சொல்லி கூட ஏமாத்துராங்களா?”


“பேங்க் மேனேஜர் பேசுரேன் உங்க ஆதார் நம்பரை செக் பண்ணணும் நம்பர் சொல்லுங்க…


KYC செக் பண்ணணும்…


ஆதார் கார்டையும் பான்கார்டையும் கனெக்ட் பண்ணணும் பான்கார்டு நம்பர் சொல்லுங்க…


டெபிட் கார்டு நம்பர், OTP Number சொல்லுங்கனு கேட்டா தயவுசெய்து சொல்லாதீங்க….


இன்னும் சிலர் என் பேங்க் அக்கௌன்ட்லதான் கேஷ் இல்லையேனு கேஷுவலா இருப்பாங்க. ஆனால் உங்கள் OTP நம்பர் மூலமா பேங்க்ல லோன் வாங்கி ஏமாற்றுற வேலைகள் கூட நடக்குது…


அவங்க கேட்கிற டீடெய்ல் சொல்லவில்லை என்றால் பேங்க் அக்கௌன்ட்டை குளோஸ் பண்ணிடுவோம்னு சொல்லி மிரட்டினால் கூட நேரில் போய் விசாரிக்காமல் சொல்லாதீங்க…


ATM Card Debit Card & Credit Cards-ஆல் நடக்கும் குற்றங்கள் அனைத்திற்கும் காரணம் ஒருவகையில் பேங்க் அக்கௌன்ட் கூட நம்ம செல்போன் நம்பரை அட்டாச் பண்ணதோடு அதற்கு ஆன்லைன் டிரான்சக்ஸன் பன்றதுக்காக இண்டர்நெட்டோட அட்டாச் பண்ணதால தான் நூதன முறையில் நிறைய குற்றங்கள் நடக்குதுனு நான் சொல்வேன்”


“ஓகே சார் இதுக்கு பேங்க் சைடுல இருந்து என்ன மாதிரியான ஆக்ஸன் எடுத்துருகாங்க?”


“Beware of fraud KYC calls,SMS,etc. claiming to be from Banks. Report cyber fraud at helpline


RBI never asks for personal/bank details of members of public. Beware of fake RBI logos and messages. -RBI


TRAI ஒருபோதும் மொபைல் எண்களின் சரிபார்ப்பு/ துண்டிப்பு/ அவற்றின் சட்டத்திற்குப் புறம்பான செயல்களைப் புகாரளிக்க எந்தவொரு காலும் கொடுக்காது அல்லது எந்தவொரு குறுஞ்செய்தியையும் அனுப்பாது. TRAI இன் பெயரில் வரும் அத்தகைய செய்திகள்/அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். TRAI இலிருந்து வந்ததாகக் கூறிக் கொள்ளும் எந்தவொரு கால் (அழைப்பு) அல்லது குறுஞ்செய்தியும் மோசடி என்றே கருதப் பட வேண்டும், மேலும் இவை குறித்து நீங்கள் தேசிய ஸைபர் கிரைம் அறிக்கையிடல் போர்டல் (www.cybercrime.gov.in) அல்லது ஸைபர் கிரைம் ஹெல்ப்லைன் (1930) ஆகியவற்றிற்குப் புகார் அளிக்கலாம்


Do not click on unknown links offering cashback, attractive returns, quick loans, job offers or requests for money. -RBI


தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகள், அதிக வருமானத்தை வழங்கும் முதலீட்டு இணையதளங்கள் மற்றும் அவசர தேவைக்காக சமூக ஊடகங்கள் மூலம் பணம் கேட்டு வரும் கோரிக்கைகளை எப்போதும் சரிபார்க்கவும். -RBI


Cyber Crime Wing, Tamil Nadu Alert- Don’t share your OTP,CVV,Password/PIN to anyone. Report cybercrimes @www.cybercrime.gov.in or Call 1930. Follow @tncybercrimeoff – Cyber Crime team, Tamil Nadu.


இது மாதிரியான மெஸஜெஸ்களை கஸ்டமர்க்கு அனுப்பி அவர்னெஸ் கொடுக்கிறாங்க”


“சிபில் ஸ்கோர் பற்றி…”


“Credit Information Bureau (India) Limited-ன்றது தனிநபர் மற்றும் நிறுவனங்களின் அனைத்து லோன் ஆக்டிவிட்டிஸை மெயின்டன்ஸ் பண்ணும் ஒரு கடன் தகவல் நிறுவனம்(Credit Information Company).


வங்கிகள், வங்கி சாரா நிதிநிறுவனங்கள் அவங்க கஸ்டமர் லோன் டீடெய்ல்ஸை இந்த நிறுவனத்தில்தான் சப்மிட் பண்வாங்க..

அதை வைத்துதான் அந்த கஸ்டமர்களுக்கு Credit Information Statement-ஐ பப்ளிஷ் பண்வாங்க. அந்த ஸ்டேட்மெண்ட்டை பொறுத்து அதற்கு Credit Score கொடுப்பாங்க. அதைதான் இந்த நிறுவனத்தோட பெயரான CIBIL எனும் பேரில் CIBIL Score னு சொல்றாங்க”


“மொபைல் போன் மூலமா என்னமாதிரியான மோசடிகள் நடக்க வாய்ப்பிருக்கு மேடம்?”


“ஆக்சுவலி ரகசியமா வைத்திருக்கும் எதற்குமே ஒரு லாக் தேவைப்படும் ஆனால் செல்போன் பேசுறதுக்கு தானே.. அங்கு எதுக்கு லாக் ஆப்ஷன் வருது?


ஏன்னா நம்ம நேரில் பழகும் ஒருத்தங்களை விட நம்ம செல்போனுக்கு நம்மளை பற்றி நல்லா தெரியும். அத்தனை ரகசியங்களும் அடங்கி இருக்கதால தான் லாக் போட்டு வைக்றோம்…


இன்னைக்கு லவ் பண்றாங்க.. நெருக்கமா போட்டோஸ் எடுக்கிறாங்க.. வீடியோ எடுக்கிறாங்க… ஒரு சந்தர்ப்பத்தில் பிரேக்அப் ஆகுது உடனே அந்த போட்டோஸ் வீடியோஸை இண்டர்நெட்ல அப்லோட் பண்றாங்க…


அடுத்ததா இண்டர்நெட் மூலமா சோசியல்மீடியாவில் ‘நான் அவசர சூழலில் மாட்டியுள்ளேன் இந்த அக்கௌன்ட்க்கு பணம் அனுப்பு’னு யாராவது சொன்னால் அவங்களுக்கு கால் பண்ணி பேசி கன்பார்ம் பண்ணியபிறகு டிரான்ஸர் பண்ணுங்க. ஏன்னா உங்கள் நண்பர் போல பேக் அக்கௌன்ட் மூலமா உங்ககிட்ட பேசி ஏமாத்துவாங்க…


உங்கள் போன் தொலைஞ்சிடுச்சா உடனே அந்த நம்பரை ஸ்டாப் பண்ணி வைங்க. அதிலிருக்கும் E-Mail, Facebook, Instagram, Twitter போன்றவற்றை லாக்அவுட் அல்லது பாஸ்வேர்ட் மாற்றி லாக்அவுட் செய்து வைங்க.


காவல்நிலையத்தில் கம்ப்ளைண்ட் பண்றது முக்கியம். ஏன்னா உங்கள் செல்போன் மூலமா ஏதாவது சமூக விரோதச்செயல் நடந்திருந்தால் உங்கள் கம்ப்ளைண்ட் தான் உங்களை காப்பாற்றும்.”


“ஐடென்டி வைத்து என்னென்ன குற்றங்கள் நடக்கலாம் சார்?”


“ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, கிரேடிட்கார்டுகளை ஜெராக்ஸ் எடுக்க கொடுக்கும் போது எக்ஸ்ட்ரா காபி எடுக்கபட்டிருக்கானு செக் பண்ணணும். அதைகூட தவறான வழியில் பயன்படுத்த வாய்ப்பிருக்கு.


ஜெராக்ஸ் காபியை நாம் பகிரும் போது பின்பக்கம் இன்ன நோக்கத்திற்காக தான் பகிர்கிறோம்னு கையெழுத்து போட்டு கொடுக்கிறது இதுக்காக தான்.

போலி சிம் வாங்கி போலி பேங்க் அக்கௌன்ட் தொடங்கி மோசடி செய்ய இதனை பயன்படுத்துவாங்க சோ கவனமா இருக்கனும்”


“சைபர் மோசடியில் சிக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம்?”


“இண்டர்நெட்&டிஜிட்டல் டெக்னாலஜியை பொறுத்தவரை நம்மோட ஆக்டிவிட்டி இல்லாமல் தவறு நடக்க வாய்ப்பே இல்லை..


பப்ளிக் பிளேஸஸ்ல கிடைக்கும் ஃப்ரி WI-FIஐ யூஸ் பண்றதை அவாய்ட் பண்ணுங்க…


கஸ்டமர்ஸ்ஸோட KYC Details, Bank Account Number, Credit Card Debit Card Number-ஐ பேங்க்ல ஒருபோதும் மெஸஜெஸ் வழியாகவோ போன் பண்ணியோ கேக்க மாட்டாங்க அப்படி கேட்கும்பட்சத்தில் அவாய்ட் பண்ணிடுங்க…


அன்நெசசரி ஈமெயில்ஸ் அன்நெசசரி மெஸஜெஸ் பர்ஷனல் டீடெய்ல் கேட்கும் ஈமெயில் மெஸஜெஸ்க்கு ரிப்ளை பண்ணாதீங்க…


தெரியாத வெப்சைட்லிருந்து வரும் link, photos, videos, spam emails-ஐ கிளிக் பண்ணாதீங்க…


சோசியல் மீடியாவில் உங்களோட பர்ஷனல் டீடெய்ல்ஸ், மொபைல் நம்பர், வீட்டு அட்ரஸ், பேங்க் டீடெய்ல்ஸ் எல்லாம் ஷேர் பண்ணாதீங்க…


உங்கள் பர்ஷனல் டீடெய்ல்ஸ் இருக்கும் டெக்னாலஜி டிவைஸ்(mobile, laptop) எதுவாக இருந்தாலும் பாஸ்வேர்ட் செட் பண்ணும் போது லெட்டர்ஸ், நம்பர்ஸ், ஸ்பெஷல் லெட்டர்ஸ்(! * # $) வைத்து யூனிக்கா செட் பண்ணுங்க…


இப்ப கிட்ஸ் கூட இண்டர்நெட் யூஸ் பண்றாங்க. சோ கண்டிப்பாக Parent Monitoring-ஐ செட் பண்ணி வைங்க… அதோட தேவையில்லாத வெப்சைட் யூஸ் பண்றது அதிலிருந்து கேம்ஸ் டவுன்லோட் பண்றது இதை தவிர்க்க சொல்லி கொடுங்க…


யூஸ் பண்ணாத மெயில் ஐடி, ஷாப்பிங் ஆப் அக்கௌன்ட், சோசியல் மீடியா அக்கௌன்ட்ஸ்ஸை நிரந்தரமாக டெலிட் பண்ணிடுங்க… “


“ஹேக்கிங் பத்தி?”


“நாம யூஸ் பண்ற ஆண்ட்ராய்ட் மொபைல் ஐபோன்களிலெல்லாம் சில நேரங்களில் அப்டேட் செய்ய சொல்லி நோட்டிபிகேஷன் வரும். நம்ம போன்ல உள்ள ஆப்களுக்கு சைபர் செக்யூரிட்டி கொடுப்பது இதன் மூலம்தான். இப்படி அப்டேட் பண்ண சொல்லி நோட்டிபிகேஷன் வந்தால் நீங்கள் பயன்படுத்தும் செயலியில் சைபர் செக்யூரிட்டி த்ரெட் கண்டுபிடிக்கபட்டு அதற்கான தீர்வை தான் அப்டேட் பண்ண சொல்லி அனுப்பி இருப்பாங்க…


நாம யூஸ் பண்ற எல்லா சாப்ட்வேரும் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் மூலமா டிசைன் பண்ணப்பட்டவைதான். அதுல ஏதாவது லூப் இருந்தால் ஈஸியா ஹேக் செய்துடுவாங்க. அந்த சாப்ட்வேர்ல இருக்கும் பிளாக்லூப்பை நிறுவனங்கள் முன்பே கண்டுபிடித்து அதற்கு செக்யூரிட்டி ப்ரோக்ராம் டிசைன் பண்ணி யூஸர்க்கு கொடுப்பாங்க. இதை சைபர் செக்யூரிட்டி அப்டேட்னு சொல்வாங்க…


Haveibeenpwned என்ற டூலை யூஸ் செஞ்சு உங்கள் டிஜிட்டல் டிவைஸ் ஹேக் ஆகியிருக்கா ஹேக் பண்ண ட்ரை பண்ணியிருக்காங்களானு செக் பண்ணலாம்…


Bank Account, Personal Details, Important Documents, Digital Sign, Property Details-களை ஸ்மார்ட்போன், லேப்டாப், கம்யூட்டர், மெயில்களில் சேவ் பண்ணி வைப்பதற்கு பதிலாக Pendrive , Hard disk போன்றவற்றில் சேவ் பண்ணி வைப்பது பாதுகாப்பானது…


முகநூலில் செட்டிங் & தனியுரிமை(Settings & Privacy) என்ற ஆப்ஷனுக்குள் சென்று, செயல்பாட்டுப் பதிவு(Activity log)-ஐ கிளிக் செய்ய வேண்டும்…”


“சைபர் க்ரைம் குற்றங்களை பற்றி எந்த வழியிலெல்லாம் புகாரளிக்கலாம் மேடம்?”


“நீங்க இருக்கும் ஏரியாவிற்கு பக்கத்திலிருக்கும் எந்த காவல்நிலையத்திலும் கம்ப்ளைண்ட் ரிஜிஸ்டர் பண்ணலாம்…


நேரடியாக வரமுடியாத பட்சத்தில் இந்தியாவில் https://cybercrime.gov.in/ – www.cybercrime.gov.in – இந்த வெப்சைட்டில் போய் கம்ப்ளைண்ட் ரிஜிஸ்டர் பண்ணலாம். காவல்துறையே உங்களை தொடர்புக்கொண்டு விசாரிப்பாங்க…


இலங்கை நாட்டினர் https://cert.gov.lk/ -இந்த வெப்சைட்டில் கம்ப்ளைண்ட் ரிஜிஸ்டர் பண்ணலாம்…


ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டவராயின் 1930 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக்கொண்டால் மோசடிபேர்வழியின் பேங்க் அக்கௌன்ட்டை முடக்கி வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்…


சைபர் மோசடிகளுக்கு அவசர அழைப்பு எண் 112 க்கு அழைத்து கம்ப்ளைண்ட் அளிக்கலாம்…


OTP அல்லது வேறு வகை மோசடியால் பேங்க்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு விட்டால் மோசடி செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் கம்ப்ளைண்ட் செய்ய National Cyber Crime Helpline – 155260 க்கு அழைத்து சொன்னால் மோசடிபேர்வழியின் பேங்க் அக்கௌன்ட் முடக்கப்படும்…


சைபர் க்ரைம் தொடர்பாக ஏதேனும் டவுட் அல்லது கம்ப்ளைண்ட் செய்வதில் டவுட் இருக்குமாயின் அரசு உதவி எண் 155260 க்கு அழைத்து அனைத்து டவுட்களையும் கிளியர் பண்ணிக்கலாம்..


யூஸ் செய்யாத Yahoo, Rediffmail – மெயில், ஷாப்பிங்&டிக்கெட் புக்கிங் வெப்சைட்டில் உள்ள அக்கௌன்ட்ஸை நீக்குவது எப்படினு AccountKiller.com அல்லது JustDeleteMe வெப்சைட் மூலமா தெரிஞ்சிக்கலாம்…”


“இதிலிருந்து மீள நிரந்தர தீர்வு இல்லையா?”


“டிஜிட்டல் இந்திய டிரஸ்ட் ஏஜென்சி(DIGITA) Verified சான்று இல்லாத கடன் செயலிகள் அங்கீகரிக்கப்படாதவை என்று எதிர்காலத்தில் வரலாம் என்று நம்புவோம்.”


அத்துடன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிறைவுற்றது. மூவரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மகிழ்ச்சியில் கிளம்பினர்.


ஒரு வாரம் கடந்த நிலையில் அன்பினி மெர்ஸி கிறிஸ்டினாவின் வீட்டிற்கு சென்று தீபக்கின் லாக்கெட் மற்றும் அவளது தங்கசங்கிலியை திருப்பி கொடுத்து விட்டு வந்தாள்.


காவல் ஆணையர் அலுவலகம்


மூவரும் வரதராஜனிடம் தங்கள் வழக்கு சம்பந்தப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பித்துவிட்டு அடுத்த வழக்கிற்கான அனுமதியை வேண்டி நின்றனர்.


“வெல்டன் மை சிஷ்யாஸ்… ம்ம்ம் அடுத்த வழக்கை ஆரம்பிக்க அனுமதி தரேன். குட்லக்” என்று வழியனுப்பினார்.


தீரா தேடலுடன்…


பின்குறிப்பு:


இத்துடன் அத்தியாயம் முடிந்தது. மேலும் இது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள கீழுள்ளவைகளை வாசித்து பாருங்க…


சைபர் குற்றங்கள்:


Cyber Bullying(இணையவழி கொடுமை)


Cyber Stalking(இணைய பின்தொடர்தல்)


Obscene and Offensive content(ஆபாசம் மற்றும் புண்படுத்துதல்)


Computer Fraud(கணிணி மோசடிகள்)


Spam Mails (கோரப்படாத மின்னஞ்சல்)


Identity Theft(அடையாள திருட்டு)


Information warfare(தகவல் போர்)


Phishing fraud(தூண்டுகளவு)


Computer Virus(கணினி நச்சுநிரல்)


Denial of Service attacks(சேவை மறுப்புத் தாக்குதல்)


Malware(தீப்பொருள்)


Destruction of information(தகவல்களை அழிப்பது)


Data Hijack(டெக்னாலஜி தகவல்களை திடுருவது)


Misuse of other people’s information or photos(மற்றவர்களின் தகவல்களையோ புகைப்படங்களையோ தவறாக பயன்படுத்துவது)


Hacking (இணையவழி ஏமாற்றுதல்)


Virus/Worm attacks & DOS attack
Pornography(சட்டத்திற்கு புறம்பான பாலியல் குற்றங்கள்)


Cyber terrorism, IPR Violations, Credit Card Fraud, EFT Frauds (இணையவழி பொருளாதார குற்றங்கள்)


Death threats via email & internet call(மின்னஞ்சல்&இணையவழி கொலைமிரட்டல்)


Stealing other people’s email and social media accounts and spreading defamation(மற்றவர்களின் மின்னஞ்சல் சமூகவலைதள கணக்குகளை திருடி அவதூறு பரப்புவது)


(பொதுமக்கள் குறைதீர்ப்பு இயக்குநரகம் (அமைச்சரவை செயலகம்) அமலாக்க இயக்குநரகம், FIU, வருமான வரி இயக்குநரகம் (புலனாய்வு) மத்திய பொருளாதார புலனாய்வு பணியகம் (CEIB), TRAI)-(Directorate of Public Grievances (Cabinet Secretariat) Enforcement Directorate, FIU , Directorate of Income Tax (Intelligence) The Central Economic Intelligence Bureau (CEIB),TRAI)


//ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரிடம், பணம் முதலீட்டுக்கு 1 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, ‘சன்மேலான்’ செயலியில் 2.02 லட்சம் மோசடி செய்த சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த பிரவீன்குமார், 31, என்ற வாலிபரை கைது செய்தனர்


//கேளம்பாக்கம் அடுத்த தையூரைச் சேர்ந்த 35 வயதுடைய நபரிடம், ஆன்லைனில் 20 லட்சம் ரூபாய்க்கு லோன் தருவதாக கூறி, பல தவணையாக, 4.22 லட்சம் ரூபாய் ஏமாற்றிய டில்லியைச் சேர்ந்த ராமசந்திரன், 33, விஜய், 29, ஆகியோரை பிடித்துள்ளனர்


//செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் பெயரில் போலி முகநுால் கணக்கு துவக்கி, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் ‘கறக்க’ முயன்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, 16 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டு, இளம்சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்


//மேல்மருவத்துார், மதுராந்தகம் பகுதியை சேர்ந்த இருவர், வேலைக்காக ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். அதிலிருந்து, அவர்களது ‘இ – மெயில்’ முகவரி திருடிய சிலர், போலந்து நாட்டில் வேலை தருவதாக கூறி ஆன்லைனில், 8.16 லட்சம் ரூபாய் ‘ஆட்டை’ போட்ட, டில்லியைச் சேர்ந்த நவீன்குமார், 24, ரூம்சந்த், 31, ஆகிய இருவரை கைது செய்தனர்இதேபோல் பல ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை பல மாநிலங்கள், மாவட்டங்களுக்கு சென்று போலீசார் கைது செய்துஉள்ளனர்.


இது போன்ற செய்திகளில் உங்கள் பெயரோ உங்களுக்கு தெரிந்தவர்கள் பெயரோ வராமல் இருக்க வேண்டும் என்றால் எப்போதும் விழிப்புணர்வுர்வுடன் இருங்கள் பிறருக்கும் பகிருங்கள்.

பொறுமையாக இதுவரை வாசித்தமைக்கு நன்றி.

5 thoughts on “தீரா காதலே – 17”

  1. Kalidevi

    Superb oru nalla information oda story end aguthu nadakuthu inyha niraya evlo uyir poguthu sila thavarana pathaila poiduranga . Thairiyama intha mari nadantha police la complaint pannanum . Congratulations

  2. CRVS2797

    சூப்பர்ப்..சூப்பர்ப்… சூப்பர்ப்…
    மிக மிக அருமையான பதிவு
    மற்றும் பயனுள்ள பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *