Skip to content
Home » தீரா காதலே – 3

தீரா காதலே – 3

பிரியதர்ஷனும் நிகிலும் மெர்ஸியை காண அவள் வீட்டிற்கு வர அங்கு அவர்களை வரவேற்றது தாழிடப்பட்ட பூட்டு. அக்கம் பக்கம் விசாரித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள்.

பிரபாவிடம் நிகில் என்னவென்று விசாரிக்க காலையில் மெர்ஸி அலறி மயங்கி விழுந்தது பற்றி சொன்னாள். பிரியதர்ஷன் ஆராய்ச்சியாக அவளைப் பார்க்க பிரபா கவனமாக பார்வையை வேறு பக்கம் திருப்பினாள். நிகிலும் அதை கவனித்தான்.

சிறிது நேரம் கழித்து மருத்துவர் வெளியே வரவும்
” டாக்டர் அவங்களுக்கு என்ன ஆச்சு? இப்ப எப்படி இருக்காங்க? அவங்க கிட்ட நாங்க பேசலாமா?” என்று பிரியதர்ஷன் கேட்டான்.

“அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் அண்ட் ரெஸ்ட்லெஸா இருக்காங்க. எதையோ பார்த்து பயங்கரமா அழுது இருக்காங்க அது என்ன ஏதுன்னு தெரியல அவங்க முழிச்சா தான் என்னன்னு கேட்க முடியும். எப்ப முழிப்பாங்கனும் சொல்ல முடியாது. அவங்க த்ரீ டேய்சா எதுவும் சாப்பிடல போல. இப்ப இருக்கிற கண்டிஷனுக்கு அவங்களுக்கு மன அமைதி தேவை. ரெஸ்ட் எடுக்கட்டும் கண் விழிக்கும்போது நீங்க போய் பாருங்க”

” ஓகே தேங்க்யூ டாக்டர் “

பிரியதர்ஷன் நிகில் இருவரும் அங்கு போடப்பட்டிருந்த ஸ்டீல் பென்ஞ்சில் அமர்ந்தார்கள். பிரபா என்ன செய்வது என்று தெரியாமல் அவளது கணவனுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி வந்து பார்க்குமாறு சொல்லிக் கொண்டிருந்தாள். ஒரு அரை மணி நேரம் சென்றிருக்கும்.

“இல்ல இல்ல இப்படி நடந்து இருக்க கூடாது நான் மீட்டிங் போகாமல் இருந்திருந்தால் என் தீபக் என்ன விட்டு போயிருக்க மாட்டான். நான் தப்பு பண்ணிட்டேன். நானும் உன் கூட வந்துடறேன். நீ இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம் ” என்று கத்திக் கொண்டிருந்தாள் மெர்ஸி. மூவரும் உள்ளே வரவும் கையில் மாட்டியிருந்த சலைன் ஊசியை பிடுங்கி எறிந்து ஆக்ரோஷமாக நின்றிருந்தாள்.

பிரபா மெர்ஸியின் கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்து கட்டிலில் அமர வைத்தாள்.
” என்ன நெனச்சிட்டு இருக்க மெர்ஸி? இப்ப நீ தனியா இல்ல உன் வயித்துல தீபக்கோட குழந்தை இருக்கு மறந்துட்டியா?”

” பிரபா நான் ஒரு அன்லக்கிடி. நான் அன்னிக்கே மீட்டிங் போற முன்னாடி இத சொல்லி இருந்தா எனக்கு தீபக் கிடைச்சிருப்பான். சர்ப்ரைஸா வந்து சொல்லி சொல்லிக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள அவசரப்பட்டு இப்படி பண்ணிட்டானே” என்று அழுதாள்.

பிரியதர்ஷனும் நிகிலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவளின் சத்தம் கேட்டு அங்கு வந்த மருத்துவர்
” ஓகே ரிலாக்ஸ் மெர்ஸி. இந்த டைம்ல நீங்க இப்படி நடந்துகிறது பேபிய அபக்ட் பண்ணும். எதுவா இருந்தாலும் கொஞ்சம் நிதானமாக பேசலாம் ஓகே” என்று பேசியபடியே மயக்க ஊசியை அவளுக்கு செலுத்தினார். கொஞ்சம் கொஞ்சமாக மயங்க ஆரம்பித்தவள் பிதற்றினாள் மயக்கத்தின் ஊடே
“எனக்கு பயமா இருக்கு தீபக். அகெய்ன் கால் வந்தா நான் என்ன செய்வேன். என் தீபக் நீ எவ்வளவு கஷ்..” என்றவாறு மயங்கி விட்டாள்.

இதையெல்லாம் அருகில் இருந்த பிரியதர்ஷனும் நிகிலும் பார்த்து கொண்டு தான் இருந்தார்கள்.

பிரியதர்ஷன் ” அவங்க மொபைலை எடுத்து கொடுங்க மிஸஸ் பிரபா”

” ஆங்.. சார்.. அது வந்து அவளோட பெர்மிஷன் இல்லாமல்..”

“வாட் பெர்மிஸனா ஓகே நானே எடுத்துகிறேன்”

மெர்ஸி கையிலிருந்த அலைபேசியை உடும்பு பிடியாக பிடித்திருந்தாள். தர்ஷன் முயற்சி செய்தும் அதனை கைப்பற்ற முடியவில்லை.

“அவ முழிச்சதும் வாங்கலாமே சார்” பிரபா.

“என்ன எனக்கே அட்வைஸா வாட் ஐ டூ ஐ நோ” தர்ஷன்.

“அப்படி எல்லாம் இல்லை சார் அவ ஹெல்த் கண்டிஷன் இப்ப ..”

“வில் யூ சட்அப் பிளிஸ். ரெண்டு பேரும் ஏதோ என்கிட்ட மறைக்கிறீங்க நீங்களா சொன்னா பெட்டர் இல்லனா விசாரணை பண்ண அழைச்சிட்டு போக வேண்டி வரும்” காட்டமாக பதிலுரைத்தான் தர்ஷன்.

“நோ சார் எதுவும் எனக்கு தெரியாது” குரலே உள்ள போயிருந்தது பிரபாவுக்கு.

மருத்துவர் “இன்ஸ்பெக்டர் ஐ டிடின்ட் எக்செப்ட் யூ . ரெண்டு பேரும் பிரக்னட்டா இருகாங்க. அவங்க கிட்ட இவ்வளவு ரூடா பேசவேண்டாம். அண்ட் திஸ் இஸ் ஹாஸ்பிடல். பேஷன்ட்க்கு டிஸ்டர்ப் இல்லாமல் என்கொயரி பண்ணுங்க. பேஷன்ட் மெர்சிக்கு ஹை பிரசர் இருக்கு அவங்க ஹஸ்பெண்ட் அனாடமி முடிஞ்சி பாடியை வாங்கும் போதும் இப்படி தான் பிரஷர் அதிகம் ஆகி மூர்ச்சை ஆகிடாங்க. அதுக்கு அப்புறம் உள்ள சடங்குகள இதோ இவங்களும் இவங்க ஹஸ்பெண்ட்டும் தான் பாத்துகிடாங்க. சோ கொஞ்சம் கைண்டா நடந்துகோங்க இன்ஸ்பெக்டர். அவங்க இப்ப வரைக்கும் என் பேஷன்ட் தான்.”

“சாரி டாக்டர்”

இருவரும் மருத்துவமனை விட்டு வெளியே வந்தார்கள்.

நிகில் ” தர்ஷா என்ன ஆச்சு உனக்கு ? ஏன் இப்படி நடந்துகிற?”

“ACP கால் பண்ணார்டா. சூசைட் கேஸஸ் நிறைய பைல் பண்ணிருகீங்க பட் ரீசன்ல எதுவுமே மென்ஷன் பண்ணல ஏன் என்ன பிரச்சனை அங்கு வேறு ஏதாவது பிராப்ளமானு கேட்டார். இவங்க ரெண்டு பேரும் என்னாடானா ஏதோவொரு விஷயத்தை என்கிட்ட மறைக்கிறாங்கனு உள்ளுணர்வு சொல்லுது. அட்லீஸ்ட் மொபைலையாது வாங்கலாம் பாத்தா அதுவும் முடியல கண்டிப்பா அந்த மொபைல்ல ஏதாவது க்ளூ கிடைக்கலாம். மே பி குழந்தை இல்லைனு கூட பிரச்சினை வந்திருக்கலாமே”

“இருக்கலாம்டா பட் கொஞ்சம் வெயிட் பண்ணு. அவங்க ரெண்டு பேரும் ரெகவர் ஆகி வீட்டுக்கு வரட்டும் பொறுமையா என்கொயரி பண்ணலாம்”
சரியென்பதாக தலையசைத்தவன் குழப்பத்தினோடே கிளம்பினான்.

பிரபா மீண்டும் தன் கணவனுக்கு அழைத்து சீக்கிரமே வரும் படி சொன்னாள். அவளாலும் ரொம்ப நேரம் அங்கு உட்கார்ந்து இருக்க முடியாததால் அருகில் இருந்த ஒரு படுக்கையில் அவளையும் ஓய்வெடுக்க சொல்லி மருத்துவர் சொன்னார்.

***

மெர்ஸி கண் விழிக்கவும் அவர்களை அழைத்து கொண்டு போகும் வழியில் உணவையும் வாங்கி கொண்டு பிரபாவின் கணவன் வீட்டில் விட்டு விட்டு உடனே வெளியேறி விட்டான்.

உணவு உண்டபின் ஓய்வாக வரவேற்பறையில் அமர்ந்திருந்த போது பிரபா மெதுவாக பேச்சினை ஆரம்பித்தாள்.

” மெர்ஸி உங்களுக்கு நடுவில் என்ன நடந்தது என்ன பிரச்சனை எனக்கு தெரியாது. நீயா சொல்ற வரைக்கும் நான் எதுவுமே கேட்டுக்க மாட்டேன். பட் ஒன்னு மட்டும் மைண்ட்ல நல்லா நிபாகம் வச்சிக்க உனக்கு பிடிக்குதோ இல்லையோ உன்னால முடியுமோ முடியாதோ ஒரு பாவமும் அறியாத இன்னும் இந்த பூமியை கண்கொண்டு பாக்காத அந்த ஜீவனுக்காக நீ வாழ்ந்து தான் ஆகனும். எத்தனையோ பேர் குழந்தை இல்லாமல் எப்படி எல்லாம் வேதனைபடுராங்க தெரியுமா? இதுக்கு மேல எதுவும் நான் சொல்றதுக்கு இல்லை நீ புரிஞ்சிப்பனு நம்புறேன்”

ஆமோதிப்பதாக தலையை அசைத்தவளிடம் “சரிடா நான் கிளம்புறேன். நீ.. தப்பா எதுவும் பண்ணிக்க மாட்டதானே” என்று அவளின் கைகளில் அழுத்தம் கொடுத்தபடி கேட்டாள்.

இல்லை என்பதாக மறுத்தவள் “உன் மடில கொஞ்ச நேரம் தலை வச்சிக்கவா” என்று கேட்டு மடியில் படுத்தவள் தன் மனபாரத்தை அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று சிந்தித்து மெல்ல பேச ஆரம்பித்தாள்.

“தீபக் எப்போதும் என்ன நடந்தாலும் அதை ஒரு குறிப்பாவோ நோட்ஸ்வோ எழுதுற பழக்கம் உள்ளவன். அப்படி தான் டைரி எழுதுறது. அதுல எல்லாம் எழுதி இருக்கான் நான் தான்.. அவன் ஏதோ வேலை டென்ஷன்ல இருக்கான்.. சரி ஆகிடுவானு நினைச்சி கவனிக்காமல் விட்டுட்டேன் ஆனா..” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே

” எக்ஸ்கியூஸ்மீ மேம்” என்று கதவை தட்டியவாறு தர்ஷனும் நிகிலும் வந்து நின்றார்கள்.
“ஆக்சுவலி நான் ஹாஸ்பிடல்ல அப்படி நடந்து இருக்க கூடாது ரியலி வெரி சாரி… உக்காருங்க எழுந்துக்க வேணாம்… ம்ம் நாங்க வரும் போது ஏதோ பேசிட்டே இருந்தீங்க.. டைரி எழுதுறது பத்தி .. யார் டைரி தீபக்கோடதா … நாங்க பாக்கலாமா?”

“சார் பிளிஸ் நான் உயிரா நினைச்ச தீபக்கே இப்ப இல்லாமல் போயிட்டான் எனக்குனு இருக்கது அவனோட சில நினைவுகள் தான் பிளிஸ் என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க”

“நீங்க என்ன பிராப்ளம்னு சொன்ன தான் நாங்க ஸ்டெப் எடுக்க முடியும் இப்படி எதுவுமே சொல்லாமல் இருந்தா நாங்க எந்த ஆக்ஸனும் எடுக்க முடியாது”

“என் தீபக்க உங்களால் திருப்பி தர முடியுமா சார்? முடியாதுல தயவுசெய்து கிளம்புங்க” என்று மெர்ஸி கத்தினாள்.

தர்ஷன் கோவத்தில் ஏதோ சொல்ல வர நிகில் அவனை இழுத்து கொண்டு வெளியே வந்தான்.

***

காவல் ஆய்வாளர் அறை

தர்ஷன் தரை தேயும் அளவிற்கு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். நிகில் அமைதியாக அவனை பார்த்து கொண்டு நாற்காலியில் அமர்ந்து இருந்தான்.

“வர வர போலிஸ் டிபார்ட்மெண்ட்ட மதிக்கவே மாட்ராங்க அவ்வளவு தூரம் இறங்கி போய் கேட்டும் பதில் சொல்லாமல் …” என்று தன் கோவம் தணிய முஷ்டியால் மேஜையை தட்டினான்.

“நமக்கு நம்ம டியூட்டி கன்சர்ன் அவங்களுக்கு எமோஷன் கன்சர்ன். ஏதோவொரு விஷயம் இருக்கு” நிகில்.

“எக்ஸாட்லி” என்று சொல்லியவன் நினைவு வந்தவனாக
” லாஸ்ட் டூ மன்த்ஸ் சூசைட் கேஸ் எதலாம் குளோஸ் ஆகாமல் இருக்கோ அதலாம் என் டேபிளுக்கு எடுத்துட்டு வா” என்றவாறு அங்கு இருக்கும் அறிவிப்பு பலகையில் சில குறிப்புகளை எழுதினான்.

காவல் துறையில் ஒரு குற்றம் பதியபடும் போது இறுதி பரிசோதனை அறிக்கையில் அதற்கான காரணம் சொல்லப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு எந்த வித காரணமும் இன்றி தற்கொலை செய்து கொண்டவர்களின் அறிக்கை பட்டியலை தான் எடுத்து வர சொல்லி இருந்தான்.

நிகில் எடுத்து வரவும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பத்து நபர்கள் வீதம் எவ்வித காரணம் இன்றி தூக்கிட்டு இறந்ததாக இருந்த அறிக்கைகளை தனியே எடுத்து அவற்றை ஆராய்ந்து கொண்டிருந்தான். எதுவுமே பிடிபடவில்லை. அமர்ந்தவாறு நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடி நிதானித்தான். ஏதொவொன்றை தெரிந்தே தான் விட்டு விட்டதாக மனம் சொல்லியது. வெகு நேர சிந்தனைக்கு பின் ” ஐ காட் இட் ” என்று நிமிர்ந்து அமர்ந்தான் தர்ஷன்.

நிகில் ஆர்வமாக பார்க்க “தீபக் கேஸ் விஷயத்தில் நமக்கு அந்த டைரி கிடைச்சிதுனா அது மூலமா நமக்கு ஏதாவது க்ளூ கிடைக்கலாம் அத வச்சு அதர் கேஸ்க்கும் லீட் கிடைக்க சான்ஸ் இருக்கு”

“பட் அந்த டைரி அவங்க தரமாட்டாங்களேடா “

“எஸ் அதான் என்ன பண்ணலாம்னு சொல்லு”

“சொல்லுவேன் ஆனால் நீ அடிக்க கூடாது

“பஸ்ட் நீ சொல்லு. என்ன அவங்க கிட்ட போய் கேக்க போறியா?”

“யார் அவங்க கிட்ட போய் கேக்க போறாங்க. நாமளே போய் எடுத்துக்க வேண்டியதான்”

“யூ மீன் …”

“இத விட்டா பெட்டர் ஆப்ஸன் உன்கிட்ட இருக்கா?”

“ஓகே அப்படினா நீயே எக்ஸ்கியூட் பண்ணிடு”

பின்னாடி நகர்ந்து கொண்டே
“ஹலோ சார் ஐடியா தான் சொல்ல முடியும் எக்ஸ்கியூட் பண்றது எல்லாம் உங்க வேலை” என்று நிகில் வெளியே ஓட பார்க்க, இரண்டே எட்டில் அவனை பிடித்தவன் “ஐடியா சொன்னது நீதானே அப்ப நீதான் எக்ஸ்கியூட் பண்ற”

“இது உனக்கு தேவையாடா நிகில்” என்று தன்னைத்தானே கேட்டு கொண்டவன் தர்ஷனின் பார்வையில் “ஓகே சார்” என்று கிளம்பினான்.

***

பார்த்த சாரதி நகர்

மெர்ஸி வீடு

அலைபேசியில் அழைப்பு வந்ததற்கான அறிகுறியாக அழைப்பு கானம் இனிமையாக இசைக்க இத்தனை நாட்கள் ரசித்த ரசனை சிறிதும் இன்றி ஒரு வித நடுக்கமும் பயமும் மனதில் பரவி வியர்வை சுரப்பிகளை தூண்டி விட்டு வியர்வையில் குளித்தவள் வேண்டா வெறுப்புடன் அழைப்பினை எடுத்தாள். மறுபக்கம் பேச பேச மெர்ஸியின் முகம் கலக்கத்தை பூசிக்கொண்டது. விழிகளில் கண்ணீர் ததும்பி வழிந்தது.

“ஓகே ஐ ஹேவ் டூ டைம் பிளிஸ்”

” “

“ஐ வில் அரேன்ஞ்”

” “

“ஓகே”

” “

“ஓகே”
அலைபேசியை அணைத்து வைத்தவள் செய்வதறியாது அழுதாள்.

சிலரின் இழப்பு வலி..
சிலரின் இழப்பு வலிமை…
இரண்டையுமே தந்தவன் நீயடா…
மஞ்சம் அணைக்க மனம் ஏங்கிட
இனி நீ இல்லை என்பதை
எங்ஙனம் மனதை உணர்த்த செய்ய….
மரணதேவனிடம் மண்டியிட்டு
உனை சேரவா..?
நிதர்சனத்தை ஏற்றுகொண்டு
மழலையோடு வாழவா..?

%
Add Your Title Here…

தீரா தேடலுடன்…

8 thoughts on “தீரா காதலே – 3”

  1. Kalidevi

    Super epi alagana love apdi love pani irukuravangala thankadavul nijathulaum pirichiduranga. Antha mari iruku ithula but etho oru secret iruku enathu waiting to read next epi

  2. CRVS 2797

    அச்சோ பாவம் மெர்ஸி…! அப்படி என்ன தான் தீபக்கை பத்தி மறைக்க முயலுறாங்கன்னு தெரியலை. கவிதை சூப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *