Skip to content
Home » தீரா காதலே – 8

தீரா காதலே – 8

வெள்ளி ஆம்பல் மலர் தன் எஜமானன் பரிதியிடம் பெற்ற ஒளிச்சுடர்களை மேதினியெங்கும் உலாவ விடும் அந்திமாலை நேரம். தனலில்லா ஒளிச்சுடர்கள் வளைந்து நெளிந்து அலைகள் மீது மோதி ஒளிவெள்ளமாய் கரைகாதலனை கூச்சமின்றி முத்தமிட்டு செல்லும் இயற்கை பேரழகை ரசித்தபடி கடற்கரை மணலை அலைந்து கொண்டு அமர்ந்திருந்தாள் ஆதினி.

காத்திருந்த மணித்துளிகளில் மனம் இயற்கை எழிலில் லயித்திருக்க அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி வரவும் எடுத்து பார்த்தாள். தீரா புகைப்படம் அனுப்பியதாக புலனத்தில் அறிவிப்பு வந்திருந்தது. அதனை பார்த்து சிரித்து கொண்டிருக்க கொஞ்சம் தள்ளி தீரா வந்து கொண்டிருந்தான்.

அருகில் வரவும் ஆதினி பொய்கோப முகத்தை காட்டினாள்.

“வாங்க சார் என்ன இந்த பக்கம்? இவ்வளவு நேரம் தனியா நான் மட்டும் இந்த அலைகளோடு பேசிட்டு இருந்தேன் இப்ப நீங்களும் வந்து ஜாயின் பண்ணிகிறீங்களா?”

மெலிதாக சிரித்தான்.

“என்ன இளிப்பு ? பஸ்ட் மீட்டுக்கே இவ்வளவு லேட்டா வந்தா எப்படிங்க சார்..?”

“ஒரு சின்ன வேலை வந்துருச்சு ஆது அத முடிச்சிட்டு வரதுக்குள்ள டைம் பாஸ்டா ஓடிருச்சி” சிரித்து கொண்டே பேசியவனை முறைத்து வைத்தாள்.

“ஓ அப்படியா லவ் லா 143 செக்சன் ஏ என்ன சொல்லுது தெரியுமா?”

“லவ்லா வா அப்படினா ” கேலியுடன் வினவினான்.

“ம்ம்ம்.. ல்ல்லவ்… லா… அப்படினா காதல் விதினு அர்த்தம் இது கூட தெரியாம தான் பஸ்ட் சைட்லயே லவ்வுனு தாங்குனீங்களாக்கும் ” என்று அவன் தாங்கி பிடித்ததை அபிநயம் காட்டி கேலியுடன் வினவி பழி தீர்த்தாள்.

“ஓ பஸ்ட் மீட்ல எப்படி ஒருத்தர பிடிக்கும்னு உனக்கு டவுட். அத டேரக்டா கேக்காம சுத்தி வளைச்சி கேக்ர”

மூக்கை சுருக்கியவள் “ஆமா கேக்கனும்னு தோணுச்சி தான் ஆனால் நான் ஒன்னும் சுத்தி வளைச்சு கேக்கல இப்ப சொல்லுங்க”

“ஓகே ஓகே கூல் கூல் அதிருக்கட்டும் ஏதோ காதல் விதினு சொன்னியே அத பத்தி சொல்லு தெரிஞ்சிப்போம்” என்று மணலில் அமர்ந்தான்.

“காதல் விதி 143ல நிறைய விதிமுறைகள் இருக்கு. அதுல ஒன்னு டைம்க்கு வரது ” என்று பழிப்பு காட்டினாள்.

தீராவின் பிறைநிலவு யோசனை ரேகைகளை நீந்தவிட்டது. அதனை பார்த்தவள்

“ஹேய் தீரா ஐ ஜஸ்ட் கிட்டிங் நாட் சீரியஸ்”

“இட்ஸ் ஓகே நான் யோசிச்சது வேறு . ஆக்சுவலி உன்கிட்ட பேசனும்னு தான் வர சொன்னேன் எப்படி ஸ்டார்ட் பண்றது தெரில ” பீடிகையுடன் ஆரம்பித்தான்.

“நான் வேணா கன் சூட் பண்ணட்டுமா 123னு “

கலகலவென சிரித்தவன் தன் முதுகை தழுவி இருந்த பேக்கில் இருந்து ஒரு பரிசுப்பொருளை எடுத்து கொடுத்தான். பிரிக்குமாறு கண்களால் சைகை செய்தவன் அவள் பிரிப்பதை பார்த்திருந்தான்.

உள்ளே ஆல்பம் சைசிற்கு அதிருக்க அதை திறந்தால் சிறிதும் பெரிதுமாக நாட்குறிப்புகள் எழுதும் நோட்டுகள் பிணைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுகளை வெளிப்படுத்தும் அட்டைபடங்களோடு வண்ணமயமாக இருந்தன. அதற்கு வலபக்கம் வண்ண பேனாக்களும் பிணைக்கப்பட்டிருந்தன. அதனைக்கண்டவள் விழிகள் விரிய உதடுகள் ‘வாவ்’ என்றது.

“லெட் சீ ஆதினி நீ சொன்ன போல லவ்லா படி என்னால உன்னை நேரத்திற்கு வந்து மீட் பண்ண முடியாது ஏனா நாம மீட் பண்ண போறதே இல்லை ” தீரா தீர்க்கமாக உரைத்திருந்தான்.

“வாட்” என்ன சொல்ல வருகிறான் இவன் என்ற பார்வையோடு பார்த்திருந்தாள்.

“எஸ். அதுக்கு தான் இந்த கிப்ட் உனக்கு தோணும் போது இதில் எழுது முக்கியமா கவிதைகளா எழுது”

“தீரா சொல்ல வரத டேரக்டா சொல்லுங்க நீங்களா வந்து ப்ரபோஷல் பண்ணீங்க இப்ப பாக்க முடியாதுனு சொல்றீங்க என்ன இதலாம்” சற்றே குரலில் எரிச்சல் மண்டியது.

“லிசன் ஆதினி எனக்கு கமிட்மெண்ட்ஸ் இருக்கு அதலாம் பினிஷ் பண்ண ரெண்டு வருஷம் ஆகும். அதுக்கு அப்புறம் நாம மேரஜ் பண்ணிக்கலாம்” மென்மையாகவே எடுத்து சொன்னான்.

“ம்ம்ம்”

“என்னமா கோவமா? உன்னை ஏமாத்திடுவேனு நினைக்கிறியா? என்ன பாரு இங்க” என்று அவள் முகத்தை திருப்பி தன்னை பார்க்க செய்தான்.

“எனக்கு அம்மா மட்டும் தான் ஆதினி. சிஸ்டருக்கு மேரஜ் பண்ணி கொடுத்துட்டேன். அவ கூட தான் அம்மா இருகாங்க நான் ஹாஸ்டல்ல இருக்கேன். மேரஜ் பண்ணி கொடுக்கும்போது கொஞ்சம் லோன் வாங்கி இருந்தேன் அதலாம் செட்டில் பண்ணிட்டா அப்புறம் நாம நம்ம லைப்ப பாக்கலாம் அதுக்கு தான் சொன்னேன்”

” “

” நீ .. நீ.. என் அப்பா மாதிரி ஆது . அப்பா இருந்தவரைக்கும் என்ன சந்தோஷமா பாத்துகிடாங்க. அவர் இருக்கும் இடம் கலகலனு இருக்கும். எப்போதும் என்னோடு பேசி இந்த சமூகம் பத்திய புரிதல் மனுஷங்கள பத்திய புரிதல் எல்லாம் அப்பா எனக்கு நிறைய சொல்லி தந்துருகாங்க. வீட்டில் நான் அப்பா நதீரா மூணு பேரும் டான்ஸ் பண்வோம் ஜாலியா இருக்கும். அப்..பா போன..துக்கு அப்புறம் நதீரா அம்மாவோட அரவணைப்புல இருந்துகிட்டா. நா.. நான் தனியா வீட்டை மேனஜ் பண்ண என்னை நானே மாத்திகிட்டேன்” சொல்லி கொண்டிருக்கும் போதே விழிகள் பளபளத்து நீர் கோர்த்திருந்தது. ஆதினி தன் கைகளால் தீராவின் கைகளில் அழுத்தம் கொடுத்தாள்.

” இதுவரை நான் தனியா இருந்துட்டேன் சோ இனிமே ஹாப்பியா இருக்கனும் அதுவும் அப்பா கூட இருந்தபோது இருந்த மாதிரி. நீ அப்படி தான் ஜாலியா இருக்க அதனால் தான் எனக்கு உன்னை பாத்ததும் பிடிச்சது. கொஞ்ச நேரம் உன்னோட டிராவல் செய்ததே இவ்வளவு சந்தோஷத்தை எனக்கு தந்திச்சினா என் லைப் புல்லா நீ இருந்தா அந்த சந்தோஷம் என்கூடயே நிறைஞ்சி இருக்கும் இந்த தனிமை ஓடிபோயிடுமே” என்றவாறு அவள் கைகளை தன் நெஞ்சில் வைத்துக்கொண்டான்.

” “

“சரி உனக்கு என்ன பிடிச்சிருக்கானு சொல்லவே இல்லையே ” என்று பேச்சை மாற்றினான்.

“எங்க சொல்ல விட்டீங்க நீங்க அதான் எல்லாம் நீங்களே முடிவு பண்ணீடீங்களே “

“அப்படினா உனக்கு என்ன பிடிக்கலயா” அவள் கைகளிலிருந்து தன் கையை எடுத்து வினவ

அவன் கைகளை அழுத்தமாக பிடித்து புன்முறுவல் பூத்தவள்

” கண்களும் பேசும்னு இந்த கண்களை பார்த்துதானே தெரிஞ்சிகிட்டேன்.

நிலவை மட்டும் காதல் செய்தவள்
நிலாகாதலனை காதல் விலக்கு செய்தேன்
உன் விண்மீன் கண்களை கண்டபின்…!
விழிகளும் காதல் மொழி பேசிடுமோ..?
நேசகாதலை நெஞ்சில் தூவி உன் ரசிகையாய் மாற்றி விட்டதே…!
என்ன மாயம் செய்தாயடா..?
காதல் மாயக்காரா “
என்று சிறு வெட்கப்புன்னகையுடன் அவன் விழிபார்த்து காதல் மொழிந்தாள். பின் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பி போனார்கள்.

தன் தனிமை ஓடிபோயிடும் என்று சொல்லிய தானே அவளுக்கு தனிமையை பரிசளிக்க போகிறோம் என்றுணரமால் காதல் மொழி பேசிக்கொண்டிருந்தான்.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை இப்படி கடற்கரையில் சந்தித்து பரிசுகளை பரிமாறி கொள்வார்கள். அலைபேசியில் அலாவளாவி கொள்வார்கள் ஆனால் ஒருபோதும் தங்கள் பேச்சு எல்லையை கடந்தது இல்லை. இதுவரை மூன்று முறை சந்தித்து இருக்கிறார்கள்.

ஒரு வருடம் கடந்த வேளையில் ஆதினி தந்தை ராஜனின் நண்பர் ரூபத்தில் விலையில்லாமல் பிரச்சினை தேடி வந்தது. அவர்கள் கடைசி முறை கடற்கரையில் சந்தித்ததை பார்த்து அவளின் தந்தையின் காதில் போட்டு வைக்க அவர் தீராவை பற்றி அறிந்து கொண்டார். அவளின் வருகைக்காக வரவேற்பறையில் காத்திருந்தார். வேலை முடிந்து வீடு திரும்பிய ஆதினி தந்தையை கண்டதும் வந்து அணைத்து கொண்டாள்.

“டாட் என்ன இங்கே இருக்கீங்க இந்நேரம் உங்க ஒய்ப் கூட கொஞ்சுற டைம்மாச்சே ” என்று கேலி பேசினாள்.

“அதிருக்கட்டும் எஸ்டர்டே ஈவ்னிங் எங்கே போயிருந்த?” கடுகடுவென்று கேட்காவிடிலும் கேட்கப்பட்ட வினாவின் ஆதிக்கத்தினால் ஆதினி ஒரு நொடி வார்த்தைகளை மென்று முழுங்கி

“அ..அதான் சொன்னேனே டாடி ப்ரெண்ட் ப்ர்த்டே பார்ட்டிக்கு போயிட்டு வந்தேன்”

‘பளார்’ என்று அறைந்தவர் “எப்ப இருந்து பொய் சொல்ல கத்துகிட்ட?”

கன்னத்தில் ஐவிரலும் பதிய விழிகள் கண்ணீரால் நிறைந்து தந்தை முகம் காண முடியாமல் தலைகுனிந்தாள். மகள் அடிவாங்கியதும் தாய் சுஜாதா ஓடிவந்து ” என்ன ஏதுனு விசாரிக்கமால் இப்படி அடிச்சீட்டீங்களேங்க”

“என்பொண்ணு என்கிட்டபொய் சொல்ல மாட்டானு நினைச்சேன் என்கிட்ட எதையும் மறைக்க மாட்டானு நினைச்சேன் ஆனா ” என்று நிறுத்தியவர் தளர்ந்து சோபாவில் அமர்ந்தார்.

“ஏன்டி நீ இப்படி மாறிட்ட? பாரு உங்கப்பாவ”
தலை குனிந்து அழுதவள் என்ன பேசுவது என்று யோசிக்க அலைபேசி அழைப்பு கானம் பாடியது.


🎶காதலே ஓ காதலே காதலே ஓ காதலே🎶

விழி விரித்து நிமிர்ந்தவள் தந்தையின் பார்வை வீரியத்தை தாங்க முடியாமல் அழைப்பை துண்டித்து விட்டு ராஜனின் அருகே தரையில் அமர்ந்தவள் ” டாடி ஹி இஸ் அ ஜென்டில்மேன் உங்கள மாதிரி என்ன நல்லா பாத்துபாங்க என்ன ஹர்ட் பண்ண மாட்டாங்க நம்புங்க டாடி” என்று அழுதாள்.

” சோ உன் லைப்கான முடிவை நீயே டிசைட் பண்ணிட்டு வந்து எங்க கிட்ட இன்பார்ம் பண்ற அப்படி தானே” நிதானமாக கேட்டார்.

“நோ டாடி நீங்க மீட் பண்ணி பாருங்க உங்களுக்கே புரியும்”


” நாங்க உயிரோடு இருக்கும் போதே உன் லைப்கான பெரிய முடிவை நீ எடுத்திடுவியா? பெத்தவங்கள கஷ்டபடுத்தி சந்தோஷமா வாழ்ந்திடலாம்னு கனவு கானாத ஆதினி. அந்த பையன கட்டிகிட்டு உன் தலைல நீயே மண்ணள்ளி போட்டுக்காத. அவனுக்கு பேமிலி பேக்ரவுண்ட் கிடையாது. சொன்ன புரிஞ்சிப்பனு நம்புறேன்” என்றுரைத்து எழுந்து அறைக்கு செல்ல

” டாடி ஒன் செகண்ட். எ..என் வாழ்க்கை அவரோடு தான் அதில் எந்த மாற்றமும் இல்லை”என்று திடமாக பதில் அளித்து தன் அறையினுள் நுழைந்தாள். அவளின் பதிலை கேட்டு இருவரும் வருத்தத்துடன் அவர்கள் அறை சென்றனர்.

அறையினுள் நுழைந்த ஆதினி தரையில் மடங்கி அமர்ந்து ” சாரி டாடி எனக்கு வேறு வழி தெரில என்ன மன்னிச்சிடுங்க “என்று அழுது தீர்த்தாள்.

மீண்டும் அழைப்பு வரவே எடுத்து அனைத்தையும் அழுதுகொண்டே பேசியவள் மறுநாள் தீராவின் அன்னையுடன் வீட்டிற்கு வந்து பேசுமாறு உரைத்தாள்.

மறுநாள் காலை எழும் போதே தலை வலி உயிரை பிளந்தது. இரவெல்லாம் உறக்கம் இன்றி கண்ணீரில் கழித்தவள் அதிகாலை தன்னை மறந்து உறங்கியதன் விளைவு தலைவலி இலவச இணைப்பாக வந்தது. எழுந்து வந்து சமையலறை செல்ல சுஜாதா முகம் கொடுக்காமல் வெளியே வந்து அமர்ந்து கொண்டார். ஆதினியே கடுங்காப்பியை கலந்து குடிக்கவும் தலைவலி கொஞ்சம் மட்டுபட்டது. அலுவலகத்தில் விடுமுறை சொல்லி வீட்டிலயே இருந்தாள்

காலை பதினொரு மணி.


வீட்டின் அழைப்பு ஒலி ஒலிக்க தொடர்ந்து தீராவின் குரலும் ஒலிக்க வெளியே வந்து நின்றாள் ஆதினி.
ராஜனிடம் தீரா தன்னை அறிமுகம் செய்து கொண்டிருந்தான்.


“ஹலோ அங்கிள் ஐ அம் தீரா .. ஆதினியை மேரஜ் பண்ணிக்க ஆசபடுரேன். நான் மைக்ரோசாப்ட் கம்பெனியில் ஒர்க் பண்ரேன். அம்மா மட்டும் தான் அப்…”


போதும் என்பதாக கையை உயர்த்தி பிடிக்க
ஆதினி “டாடி ” என்று அருகே வர
ராஜன் தீராவை சோபாவில் அமருமாறு சைகை செய்தார். இருவரும் அமர்ந்து கொள்ள ஆதினி நிம்மதி பெருமூச்சுடன் ஓரமாக நின்று கொண்டாள்.


“உங்க பேமிலில பொண்ணு கேக்க பெரியவங்கனு யாரும் இல்லையா? “
என்று வினவி அர்த்த பார்வையை ஆதினியிடம் வீசினார்.

அவளோ தீராவின் பதிலை ஏதிர்பாக்க
“அம்மா இருகாங்க அங்கிள். சிஸ்டர்க்கு உடம்பு சரியில்லைனு ஹாஸ்பிடல் போயிருகாங்க அங்கிள். எஸ்டர்டே … ஆதினி சொன்னா.. அதான் உங்களிடம் கலந்து பேசிடலாம்னு நானே வந்தேன்”

அந்நேரத்தில் ராஜனின் நண்பர் கோபால் வீட்டில் நுழைந்தவர் “டேய் ராஜன் நம்ம சொந்தத்தில் ஒரு சம்மந்தம் இருக்கு நீ பேசி பாரு உனக்கு பிடிச்சா முடிச்சிடலாம்”என்று புகைப்படத்தோடு வந்தவரை ஆதினி அதிர்ச்சியில் பார்க்க ‘நான் பார்த்து கொள்கிறேன்’ என்று தீரா கண்களை திறந்து மூடவும் அதனை ராஜன் கவனித்து கொண்டார்.

” என்னப்பா விருந்தாளி வந்த நேரம் வந்துபுட்டேனோ பொறவு வரட்டுமா?” என்று வினவி கிளம்பி விட்டார்.

தீராவும் ஆதினியும் எதிர்பார்ப்புடன் ராஜனின் முகம் பார்க்க
” வீட்டில் கலந்து பேசிட்டு சொல்றேன்பா ” என்றுரைத்து எழுந்து அறைக்குள் சென்றுவிட்டார். உடன் சுஜாதாவும் செல்ல விழிநீருடன் தீராவை ஏறிட்டு பார்த்தாள் ஆதினி. சிறு தலையசைப்புடன் தீராவும் கிளம்ப அங்கேயே அமர்ந்து இருந்தாள் ஆதினி.

யாரும் அவளிடம் பேசவில்லை அவளும் முயற்சி செய்யவில்லை. அலுவலகத்திலும் விடுப்பு சொல்லி வீட்டிலேயே இருந்தாள். ஆதினி இருந்தால் எப்போதும் கலகலவென இருக்கும் வீடு களையிழந்து இருந்தது. ஒரு வாரம் கழிந்த நிலையில் சுஜாதா ஆதினியின் அறைகதவினை தட்டி உள்நுழைந்தார்.


“அப்பா கூப்பிடுராங்க என்னனு கேளு”


“அந்த பையன் வீட்டில் சம்மதம் சொல்லி வந்து பேச சொல்லு” என்று எங்கயோ பார்த்து ராஜன் சொல்ல


“டாடி” என்று கட்டி கொள்ள வந்தவளை தடுத்தவர்


“அந்த தகுதியை இழந்துட்டனு மனசில பதிய வச்சிக்கோ. இதுக்கு மேல நீங்களா முடிவு பண்ணி அசிங்கபடுத்திடகூடாதேனு தான் இப்பவும் சரினு சொல்றேன் ” என்றவாறு வெளியேறினார். அதனை கேட்டு ஆதினி அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

தீரா காதலுடன்…

5 thoughts on “தீரா காதலே – 8”

  1. Avatar

    Oru appa va avaroda varuthamum nyamam tan….enna panradhu… story super sis…. story writing and story pic um super…. waiting for next ud

  2. Kalidevi

    Avar kovamum crt than dheera un amma va kuptu vanthu pesi irukalam irunthalum avane vanthu unga kitta pesi irukan athuku oru virupam solirukalam status matume irunthu ena pana pothu

  3. CRVS 2797

    அப்ப…. ஆதினி பீச்சுல தீரா கிட்ட பேசும்போது, அப்பா இருந்தவரைக்கும் சந்தோஷமா இருந்தோம்,.. அப்பா போனப்பிறகு தங்கச்சி நதீரா அம்மா சுஜதாவோட க்ளோஸாயிட்டப்பிறகு, குடும்ப பொறுப்பால நான் தனியாளாயிட்டேன்னு ஏன் சொல்றா…? இப்ப திரும்ப அப்பா எப்படி
    வராரு ? கல்யாணத்துக்கு வேண்டா வெறுப்பா எப்படி சம்மதிக்கிறாருன்னு புரியலையே…????
    😤😤😤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *