அந்த மனிதர் இடையில் இறங்கி விடவே மீண்டும் கொண்டாட்டத்திற்கு தாவினார்கள் யுவதிகள் நடனமும் கேலியும் பாடல்களுமாய் என்று மகிழ்ச்சியாக நேரம் கழிய சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அமர்ந்து பேசினார்கள். பேச்சு காதல் பக்கம் தாவியது. நடனம் ஆடிய யுவதியிடம் ஒருவள் காதலை பற்றி சொல்ல சொன்னாள்
” காதல் என்பது என்ன
அழகான உணர்வா..?
உணர்வை உணர்தலே காதலின் வடிவம்..!
காதல் என்பது என்ன
எழுதாத ஒப்பந்தமா..?
வாழ்க்கையை வாழ்தலே காதலின் வடிவம்..!
காதல் என்பது என்ன
தெய்வீகமானதா..?
தன்னவன்(ள்) மீதான ஆழமான அன்பே காதலின் வடிவம்..!
காதல் என்பது என்ன
புனிதமானதா..?
வனப்பு வண்ணம் பருவம் என எதுவுமே இல்லாததே காதலின் வடிவம்..!
காதல் என்பது என்ன
அமரத்துவமானதா..?
காதல் வானில் தான் இந்த மேதினி இயங்குகிறது
நேசமழை ஒன்றே அதன் பற்றுகோல்..!”
அவள் பேச பேச பேருந்தின் இயங்கு சத்தம் தவிர மிக அமைதியாக அனைவரும் கேட்டு கொண்டிருந்தனர். அத்தனை பேரும் அவள் சொன்னதை தான் ரசித்து கொண்டிருந்தார்கள். அதில் அவனும் ரசனையோடு அவளைதான் பார்த்திருந்தான்.
ஒருவர் பொருளை ஒளித்து வைத்து விளையாடுவது தான் அது. ஓடி கொண்டிருந்தபோது கவிதை மொழிந்த யுவதி தடுமாறி கீழே விழ போக அவள் கீழே விழாதவாறு பிடித்துக்கொண்டான் ஒரு ஆடவன். இவள் தடுமாற்றத்துடன் பார்க்கையிலே அவன் அலைபேசியை எடுத்து அவளை சுயமி எடுத்துக் கொண்டே,
” சுயமிக்கு இணையாக மட்டும் அல்ல..
வாழ்க்கை துணையாகவும் வரவா அன்பே..”
என்று அமர்த்தலாக மொழிந்தவாறே சுயமி கிளிக்கிவிட்டு அவளை நேராக நிறுத்தினான். நண்பர்கள் அனைவரும்
” ஹோஓஓ ” என்று கூச்சலிட
அவளோ ” ஷட்அப் மேன் ஆர் யூ கிரேஸி?”
” மீள முடியாத புதைகுழியில்
விழுந்து விட்டேன்
உன் கன்னக்குழியில்..
மீள ஆசை இல்லை
இன்னும் மூழ்கவே விரும்புகிறேன்
என் காதல் நீயடி..”
என்றவாறு முழந்தாலிட்டான்.
அவளோ ” ஹோ ஷிட் கெட் அப் மேன். கீழ விழாமல் பிடிச்சதுக்கு தேங்க்ஸ்” என்று நகர போனவளை
” ஜஸ்ட் அ மினிட். பையன் கொஞ்சம் பிளாக்தாங்க ஆனால் தங்கமான பையன்ங்க நல்லா பாத்துப்பான்” என்றவாறு காலரை தூக்கி விட்டான்.
” ஓஹ்
காதலுக்கும் நிறத்திற்கும் என்ன சம்மந்தம்..?
மனசை பாரடா இதயத்தில் வாசம் செய்வோம்..” என்று தானும் அமர்த்தலாக மொழிந்தபிறகே தான் என்ன சொன்னோம் என்று புரியவர நாக்கை கடித்து கொண்டாள்.
வாவ்…! வெரி இனடஸ்ட்ரெஸ்டிங்.
கவிதைகள் சூப்பர்.
சூப்பர். .. கவிதைகள் அருமை
MARK 7. தீரா காதலே
தவமிருந்தேன் கண்ணே
தினம் உனை காண
திரும்பி எனை பார்த்திட
தேவதை என கண்டேன்
தரணி போற்றும்
காதலை
திகட்ட திகட்ட காதல் கொள்வோம் பெண்ணே
தீரா காதலே….
Nice started
Wow sis spruuu