Skip to content
Home » துளி தீயும் நீயா? டீஸர்

துளி தீயும் நீயா? டீஸர்

ரஹேஜா ஐடி பார்க், மாதாபூர், ஹைதராபாத்

அந்த கட்டிடத்தில் பணிபுரியும் பலரும் அங்கிருந்த கஃபீடீரியாவில் மதிய உணவு முடித்துக் கொண்டு அவசர அவரசமாக தங்கள் அலுவலகங்களை நோக்கி சென்று கொண்டிருக்க நிதானமாக தன் உணவை ரசித்து உண்டு கொண்டிருந்தான் அவன்.

அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் பொத்தென்று வந்தமர்ந்த அவனது அலுவலகத் தோழன் அஜய் ரெட்டி,

“நீயெல்லாம் மனுஷனா டா?” என்று மேஜை மேலிருந்த காகித கைக்குட்டையை அவன் மீது வீசி எறிந்தான்.

“என்னாச்சு டா? ஏன் இவ்வளவு கோபம்?” என்று நண்பனைக் கேட்டாலும் அவன் கையும் வாயும் உணவு உண்ணும் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தது.

“நேத்து தான் பிராஜெக்ட் முடிஞ்சது. அதுக்குள்ள இன்னிக்கு காலைல புது பிராஜெக்ட்ன்னு மேனேஜர் கூப்பிட்டப்ப உன்கிட்ட நான் என்ன சொன்னேன்? ஒரு வாரமா வீட்டுக்கு கூட சரியா போகல அதுனால இந்த வீகெண்ட்டுக்கு அப்பறம் அடுத்த பிராஜெக்ட் ஓகே சொல்லலாம்
டான்னு சொன்னேனா இல்லையா?” என்று இம்முறை வாட்டர் பாட்டிலை அவனை நோக்கி எறிந்தான்.

அதை லாவகமாக பிடித்தவன், “ஆமா சொன்ன, அதுக்கு? ஆபிஸ்ல டி.எல்.ன்ற முறையில என்னைக் கூப்பிட்டு அடுத்த பிராஜெக்ட் சொல்லும்போது பண்ண முடியாதுன்னு சொல்ல முடியுமா?” என்று சாதாரணமாக கேட்டுவிட்டு கடைசி கவள உணவை உண்டு முடித்தான்.

“டேய் ஒழுங்கா தூங்கி ஒரு வாரம் ஆச்சு. முழு டீமும் இப்ப உன் மேல கொலைவெறில இருக்கு.” என்று எரிச்சலோடு கூறிய நண்பனை ஆழ்ந்து நோக்கியவன்,

“யாரையும் இன்னிக்கே முழு பிராஜெக்ட் வேலையையும் பார்க்க சொல்லலையே. ஜஸ்ட் அதோட மெத்தட்ஸ், நம்ம ஸ்கெட்டியுல் இதெல்லாம் தானே ரெண்டு நாள் செய்ய சொல்லி இருக்கேன். அதுக்கு என்ன இப்போ?” சாதரணமாக கேட்டுவிட்டு நண்பன் முகத்தை ஏறிட்டான் ஷிவா.

“டேய் கொஞ்சம் ரெஸ்ட் டா. அது புரியலையா?” என்று அஜய் மீண்டும் பல்லைக் கடிக்க,

ஓஹோ ரெஸ்ட். அதாவது ரெண்டு நாள் வருவீங்க எதுவும் செய்யாம அரட்டை மட்டும் அடிச்சிட்டு வீட்டு போயிடுவீங்க. திங்கள்ல இருந்து தான் வேலையை ஆரம்பிக்க முடியும் உங்களால.”

“ஆமா டா. இல்ல ஆபிஸ்ல சொல்லி லீவு வாங்கிக் கொடுத்தாலும் பெட்டர் தான்” என்றான் அஜய் எளிமையாக.

போன பிராஜெக்ட்ல நீங்க அதிக நேரம் பார்த்த வேலைக்கு இன்செண்டிவ் வாங்கினது போல இந்த ரெண்டு நாளுக்கு சம்பளம் பிடிச்சுக்கலாமா?” என்று நக்கலாக அஜயை நோக்கினான்.

டேய் டேய்.. ஏன் டா? லீவ் வித் சேலரி ன்னா ஓகே டா. இல்லன்னா நீ சொன்னபடி வந்துட்டு சும்மா கூட இருந்துட்டு போறோம். சம்பளத்துல கையை வைக்காத டா. என்று பதறினான்.

” அது எப்படி? வேலைக்கு நடுவுல டீம் லஞ்ச், டின்னர், வீகெண்ட்ல பார்ட்டி, பாட்டில் இதெல்லாம் மட்டும் கரெக்டா உங்களுக்கு வேணும். ஆனா ஒரு வேலை முடிஞ்சு அடுத்தது எடுத்தா செய்ய கஷ்டமா? இதென்ன என் அப்பா வீட்டு ஆபிஸா, நான் அடுத்த வாரம் வேலை செய்யறேன்னு சொல்ல, சும்மா ஒன்னும் வேலை செய்யல தானே? அவன் காசுல சந்தோஷமா இருந்தப்ப இனிச்சுது, இன்னிக்கு வேலை செய்ய சொன்னா கசக்குதா?

எப்படி இருந்தாலும் இந்த வீகெண்ட் டீம் எல்லாரும் அவுட்டிங் போறதுன்னு முடிவு பண்ணி இருந்தோம்ல இந்த ரெண்டு நாள் வேலை செய்துட்டு வெளில போன என்ன?

இங்க பாரு உனக்கும் அங்க இருக்குற எல்லாருக்கும் சேர்த்து தான் சொல்றேன், எப்படி என்ஜாய் பண்றீங்களோ அதே போல வேலையும் பார்க்கணும். இஷ்டம் இருந்தா இதே டீம்ல கண்டின்யு பண்ண சொல்லு. இல்லன்னா ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த பிராஜெக்ட் எந்த டீம் லீடர் கிட்ட போகுதோ அவன் டீமுக்கு ரெகொஸ்ட் கொடுத்து காத்திருக்க சொல்லு. வேலை செய்யற, வேலை தெரிஞ்ச எந்த்தனையோ பேர் லாங்குவேஜ், டீம் லீடர் பாலிடிக்ஸ்னால பல மாசமா பெஞ்ச்ல இருக்காங்க. நான் அவங்களை என் டீம்ல சேர்த்துப்பேன்.” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூறிவிட்டு நிற்காமல் விறுவிறுவென்று சென்று விட்டான் ஷிவேஷ்.

கேட்ட இரண்டு வரிக் கேள்விக்கு இரண்டு பக்க அளவில் எகிறி குதிக்காமல் அதே நேரம் முகத்தில் அடித்தது போல பேசி விட்டுச் செல்லும் நண்பனைக் கண்டு திருதிருத்தான் அஜய். அவன் நேர்மையான குணம் தெரிந்தும் நண்பன் என்ற உரிமையில் வாயை விட்டுவிட்ட தன் மடத்தனத்தை எண்ணி நொந்தான்.

•••

ஷிர்டி சாய் நகர், மணிகொண்டா, ஹைதராபாத்

கைபேசியில் இசைத்த தனித்துவமான கானம் சொன்னது அழைப்பது அவனது ஆருயிர் காதலி என்று.
முகத்தில் விரிந்த புன்னகையுடன் ஏற்றவன்,

“சொல்லு நிஷா. உன் முதல் நாள் ஆபிஸ் எப்படி போச்சு?” என்று அக்கறையுடன் விசாரித்தான்.

“அதுக்கென்ன உன்னைப் போலவே மிரட்டுர டி.எல் கிட்ட மாட்டி விட்டிருக்காங்க. அவனும் முதல் நாள்ன்னு கூட பார்க்காம வேலையா செய்ய வச்சுட்டான்.” என்று விட்டால் அழுது விடுபவள் போல பேசினாள் நிஷானி.

“ஆபிஸ்ன்னா அப்படித்தான் இருக்கும் நிஷா.” என்று சமாதானம் கூறியவன்,

“உங்க அம்மா போன் பண்ணி இருந்தாங்க. நீ இன்னிக்கு ஜாயின் பண்றத சொல்லவே இல்லையாமே!” என்று கண்டிப்புடன் கேட்க,

எதிர்ப்பக்கம் சற்று நேரம் அமைதியாக இருந்தவள்,

“சும்மா கல்யாணம் பண்ணி ஹைதராபாத் போறவளுக்கு இப்போ எதுக்கு வேலைன்னு கேட்டு கேட்டு ரெண்டு மாசமா என்னை டார்ச்சர் பண்ணிட்டாங்க ஷிவா.” என்று கடுப்புடன் கூறினாள்.

“அதுக்காக அம்மா கிட்ட சொல்லாமலே வேலைக்கு சேர்ந்துடறதா? அவங்க சும்மா எனக்கு போன் பண்ண, நான் எதார்த்தமா நீ முதல் நாள் ஆபிஸ் பத்தி வந்து புலம்பப் போறன்னு சொல்லவும், அப்ப தான் அவங்களுக்கு விஷயமே தெரிஞ்சிருக்கு. பாவம் இல்லையா? இப்படியா பண்ணுவ?” என்று சற்று கண்டிப்பும் அன்பும் கலந்தே கேட்டான் ஷிவேஷ்.

“ம்ச்ச் ஆபிஸ்ல முதல் நாளே கடுப்பாகி வீட்டுக்கு வந்தா அம்மா திட்டிட்டாங்க. நீயாவது நல்லா பேசுவன்னு பார்த்தா நீயும் இப்படி பேசுற. நீ நல்லவனா எல்லார்கிட்டயும் உண்மையா இருந்துட்டு போ. என்னை ஏன் இம்சை பண்ணுற? உன் அம்மா அப்பா உனக்கு சப்போர்ட் பண்றது போல எங்க வீட்ல இல்ல. இதை எவ்வளவு தடவை சொன்னாலும் நீ புரிஞ்சுக்க மாட்டேன்ற. இதுல என் அம்மாவுக்கு ஃப்ரெண்ட் ஆகி எனக்கிருந்த கொஞ்ச நஞ்ச நல்ல பேரையும் நீ காலி பண்ற. உன்னை போய் லவ் பண்ணி.. பாரு நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்.” எரிச்சலாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

நிஷாவை சிறுவயதில் இருந்தே அவன் நன்கறிவான் என்பதால் இது அவளின் குணம் என்று ஒதுக்கியவன்,

“சரி போய் ரெஸ்ட் எடு. அப்படியே உன் ரூம் டெஸ்க் ட்ரால ஒரு பார்சல் இருக்கும் எடுத்துப் பாரு.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

வேகமாக தன் அறையின் டிராவில் இருந்த வண்ணக் காகிதம் சுற்றிய அந்த பெட்டியை எடுத்துத் திறக்க, உள்ளே ஒரு செட் உடை, ஒரு ஸ்மார்ட் வாட்ச் மற்றும் அழகிய மஞ்சள் ரோஜாவும் இருந்தது.

அவள் அதனை எடுத்துப் பார்த்ததும் அவள் அருகே வந்தமர்ந்த அவளது அன்னை சத்யா,

“காலைல நீ கிளம்பினதும் கொரியர் வந்தது. அதுல ஷிவா பேர் இருக்கவும் கூப்பிட்டு என்னன்னு கேட்டப்ப தான் நீ வேலைக்கு போறத சொன்னான். நான் கோபப்பட்டப்ப, அவ விருப்பப்படி அவ இருக்கட்டுமே ஆன்ட்டி, மேரேஜ் முடிஞ்சு நான் இங்க கூட்டிட்டு வரும்போது அந்த வேலையை என்ன செய்யறதுன்னு அவளே முடிவு பண்ணுவா. ஏன் இன்னும் அவளை சின்ன பிள்ளை மாதிரி டிரீட் பண்றீங்கன்னு எனக்கு அட்வைஸ் பண்ணினான். கண்டிப்பா நீ போன் பண்ணின்னப்ப அவனை திட்டு இருப்பியே!” என்றார் மகளை அறிந்தவராக.

“அதெல்லாம் நான் சாரி சொல்லிக்கிறேன்.” என்று அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுநாள் அவ்வுடையை போட்டுக் கொள்ள அதற்கு தோதான அலங்காரப் பொருட்களை தேடச் சென்றாள்.

அவளை எண்ணி அவளது அன்னை விட்ட பெருமூச்சு அவரது கவலையை வெளிப்படுத்தியது.

•••

“நீங்க தானே அது?” என்று எதிரில் வந்து நின்று வினவிய அப்பெண்ணைக் கண்ட ஷிவா உள்ளே குறுகினாலும் காட்டிக் கொள்ளாமல் நின்றான்.

“சாரி சாரி. நான் உங்களை எதுவும் சொல்ல மாட்டேன். ஜஸ்ட் ரெண்டு நிமிஷம் பேசணும். பேசலாமா?”என்றாள் அவன் முகத்தை உற்று நோக்கியபடி.

“ம்ம்” என்று அவன் சொன்னது அவனுக்கே கேட்டிருக்குமோ என்னவோ, அவள் அவனை மூன்றாவதாக இருந்த காலி டேபிளில் அமரச் சொல்லி கைகாட்டிவிட்டு அவளும் அமர்ந்தாள்.

“நான் எல்லாத்தையும் பார்த்தேன். தெரிஞ்சுக்கவும் செஞ்சேன். எனக்கு மனசுல சில கேள்விகள் இருக்கு. அதுக்கு நீங்க உண்மையா பதில் சொன்னா, நான் உங்களுக்கு உதவி செய்ய தயாரா இருக்கேன்.” என்றாள் நிதானமாக.

‘தனக்கு உதவி செய்கிறேன் என்று அவள் சொன்னாளா?’ தன் செவிகளை நம்ப முடியாமல் கண்களை அகல விரித்து ஆச்சரியமாக அவளை நோக்கினான் ஷிவேஷ்.

“ஓ. நான் யாருன்னு சொல்லாம பேசினா உங்களுக்கு எப்படி புரியும்? ஜஸ்ட் ஐம் அவுட் ஆஃப் மை மைண்ட்.” என்று சிரித்து விட்டு,

“மைசெல்ஃப் ஜுவாலாமுகி.” என்று கை நீட்ட,

தன்னிடம் ஒரு பெண் இந்நிலையில் கைகொடுக்க வருவதை நம்ப முடியாமல் நோக்கிவிட்டு,

“ஐ ஆம் ஷிவேஷ். ஃபார்மர் எம்பிளாயி ஆஃப் டாப் நாட்ச் குளோபல் சொல்லுஷன்ஸ் ” என்று கசப்பாக புன்னகைத்தான்.

“யாஹ். ஐ ரிசர்ச்ட் அபவுட் யு. அண்ட் ஐ ஆம் எ சோஷியல் ஆக்டிவிஸ்ட்.” என்றதும் ஷிவாவின் முகத்தில் இத்தனை நேரம் இருந்த பொலிவெல்லாம் காணாமல் போய் வெறுமையும் கோபமும் குடி கொண்டது.

•••

9 thoughts on “துளி தீயும் நீயா? டீஸர்”

  1. CRVS2797

    சூப்பர், சூப்பர்… டீஸர் படிக்கும்போதே நல்லா இருக்குதே…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *