துஷ்யந்தா-1
விலையுயர்ந்த அந்த கார் காம்பவுண்டில் வரவுமே அங்கிருந்த பணிப்பெண் வீட்டாட்களிடம் யாரோ வருவதை எடுத்து கூறினர்.
கையில் நான்கு பக்கம் மஞ்சள் பூசி கண்கவரும் பத்திரிக்கையை தாங்கி தோழி பிரகதி வீட்டுக்குள் வந்தாள் தீபிகா.
பிரகதி தாய் பத்மாவதி தான் தீபிகாவை வரவேற்றார். “எப்படியிருக்கிங்க ஆன்டி. பிரகதி இருக்காளா?” என்று தீபிகா வந்து கேட்டதும், “உள்ளயிருக்கா மா. மாலா பிரகதியிடம் அவ தோழி தீபிகா வந்துயிருக்கானு சொல்லி வரச்சொல்லு” என்று பணிப்பெண்ணிடம் கட்டளையிட்டார். அமர சொன்தும் ஒய்யாரமாக அமர்ந்தாள் தீபிகா.
“என்ன மா… கல்யாணப் பத்திரிகை மாதிரி இருக்கு.” என்று பத்மாவதி கேட்டதும் “எனக்கு கல்யாணம் ஆன்ட்டி. பத்திரிக்கை கொடுக்கலாம்னு வந்தேன்.” என்றவளிடம் மாலா ஆப்பிள் பழச்சாறை எடுத்து வந்து நீட்டினாள்.
“பிரகதியிடம் சொல்லிட்டியா?” என்று பத்மாவதி கேட்ட தோரணையில் “சொல்லிட்டேன் மா. ஐந்து நிமிஷத்துல வர்றேனு சொன்னாங்க. குளிச்சிட்டு இருக்காங்க.” என்றவள் பதில் தந்துவிட்டு கிச்சனில் அடைந்து கொண்டார்.
படிக்கட்டில் டக்டக்யென்ற பாதகை ஓசை கேட்டது. மான் போன்று துள்ளியபடி படிக்கட்டில் வரும் பிரகதியின் கார்குழல் தோள்வரை புரண்டு சிலுப்பி இருக்க, “ஏ… தீபிகா வா வா.” என்று வரவேற்றாள்.
“எப்படி டி இருக்க. ஆளே கொஞ்ச நாள் காணோம்.” என்று அருகே அமர்ந்தாள்.
“வீட்ல எனக்கு கல்யாணம் பேசினாங்க பிரகதி. கல்யாணம் முடிவானதும் வீட்ல வெளியே போக விடலை. இப்ப கூட பத்திரிக்கை வைக்க தான் வெளியே வந்திருக்கேன்.” என்றாள்.
“கல்யாணமா? என்றவளிடம் “ஆமா பிரகதி. கல்யாணத்துக்கு வந்திடு. அடுத்த வாரம் கல்யாணம். ஆன்ட்டி பத்திரிக்கை வாங்கிக்கோங்க.” என்று அழைப்பிதழை கொடுக்க பத்மாவதி பெற்று கொண்டாள்.
“கண்டிப்பாக கல்யாணத்துக்கு நீங்களும் பிரகதியும் வந்திடுங்க ஆன்ட்டி.” என்று கொடுக்க பத்மாவதி பத்திரிக்கையை தொட்டு தழுவ, பிரகதி அவசரமாக பிடிங்கி மாப்பிள்ளை பெயரை பார்த்தாள்.
சசிதரன் என்ற பெயரை காணவும் நெற்றி சுருக்கி தீபிகாவை காண அவளோ எல்லாம் மறைத்து “பிரகதி நேரத்துக்கு வந்துடு. அம்மாவோட வரணும். நான் இன்னும் நம்ம பிரெண்ட்ஸுக்கு கொடுக்கணும். அப்ப கிளம்பறேன் பிரகதி” என்று எழுந்து கொள்ள, ஒட்ட வைத்த முறுவலோடு வழியனுப்பினாள்.
பத்மாவதியோ பத்திரிக்கையை ஓபன் செய்தவர் “உங்கப்பா இருந்திருந்தா உனக்கும் திருமணம் செய்து அழகு பார்த்திருப்பார். நீ என்னடானா படிக்கணும் அதுவும் கடல் கடந்து போகணும்னு சொல்லிட்டு இருக்க” என்று நொடித்து கொண்டார் பத்மாவதி.
“மா… நான் என்ன வருஷக்கணக்கா படிக்க போறேன். ஒரு வருஷம் மா. கண்ணை மூடி திறக்கறதுக்குள் ஓடிடும்” என்று கூறினாள்.
“ஏதாவது பதில் சொல்லிடு. ஏ பிரகதி கல்யாணம் எந்த தேதி பார்த்தியா. நீ சிட்னி போகிற அதே நாள்” என்று கூறவும் பிரகதி வாங்கி பார்த்தாள்.
“என்னடி சலித்துக்கற” என்று பத்மாவதி கேட்டதும் “மா அவ என் பிராண்ட் இன்பாவை லவ் பண்ணினா. அவன் ஒதுங்கி ஒதுங்கி இருந்தப்பவும் இவ தான் காதல் கத்திரிக்கானு சுத்தினா. இப்ப அவனை விட்டுட்டு அப்பா பார்த்துட்டாங்கனு யாரையோ சசிதரன் என்பவனை கல்யாணம் பண்ண ரெடியாகிட்டா. இதுல வெட்கமே இல்லாம பத்திரிக்கை வேற.” என்று தூக்கியெறிந்தாள்.
“பிரகதி என்ன இது. என்னயிருந்தாலும் கல்யாணப் பத்திரிக்கை. இப்படி தூக்கியெறியாதே. நல்ல நாள் பார்த்து, நல்ல நேரம் பார்த்து, பெரியவங்க பேசி முடிவெடுத்து, கோவிலில் சாமி முன்ன வச்சி எடுத்து வந்து உறவுக்கு சொந்தக்காரங்களுக்குனு கல்யாணத்துக்கு வருவாங்கனு நம்பி வந்து வச்சிட்டு போயிருக்கா.” என்று பத்மாவதி கடிந்தவாறு திருமண பத்திரிக்கையை எடுத்து பெயர்களை பார்த்தாள்.
“எல்லாம் பெரிய இடம் மா. இப்படி தான் மாப்பிள்ளை பார்க்கறாங்கனு யெரியும்ல. பிறகெதுக்கு காதலிக்கணும். அவன் மனதை கலைக்கணும். அவனுக்கு போன வாரம் சிட்னுக்கு போறதால் ட்ரீட் தர கூப்பிட்டப்ப, ஒரே பீலிங்கா பேசினான்.
தடுக்கலாம்னா ரொம்ப பெரிய இடம்னு அவனும் பயந்துட்டான். இவளும் சரியா ஆதரவுயில்லாம இருக்க அவன் ஒதுங்கி அழுவறான். என்ன இழவு காதலோ” என்று பிரகதி டிவியை போட்டு விட்டு தன் மனதை மாற்ற முயன்னாள்.
“ஏன்டி அப்போ கல்யாணத்துக்கு போகலையா?” என்று பத்மாவதி கேட்டதும் ”ட்ரை பண்ணறேன். அநேகமா போக மாட்டேனு நினைக்கிறேன்.” என்றவள் பாடலை போட்டுவிட்டு டேபிளிலிருந்த திராட்சையை எடுத்து வாயில் போட்டாள்.
தித்திப்பு உடலெங்கும் தர பத்திரிக்கையை மறந்தாள். பத்மாவதியோ பத்திரிக்கையை கையில் வைத்திருந்தாலும் வாசனை திரவியம் மூக்கை துளைத்தது.
ஜரிகை வைத்த பார்டரும் பட்டு இழையை சேர்த்து வைத்த கார்னர்களும், நடுவில் மின்னும் விநாயகருமாக என்று, ஒரு பத்திரிக்கையே ஐந்நூறு ரூபாக்கு மேல் மதிப்பை கொண்டு இருந்தது.
பத்மாவதி அதற்குள் இருந்த பெயர்களின் வரிசையை காணவும் கண்கள் விரிந்தது.
பெரிய குடும்பத்தில் தீபிகா வாக்கப்பட்டு போவது பெரியவர்களுக்கு சந்தோஷம் கொடுக்க தான் செய்யும். என்ன இந்த பிள்ளை விரும்பியதாக கூறியவனை கட்டிக்க முடியாத கவலை இருப்பது போலவும் தெரியவில்லை. பிறகென்ன பிரகதிக்கு.
பத்திரிக்கையை கண்டதும் பத்மாவதிக்கு தனது மகளுக்கு திருமணம் செய்ய காலமும் நேரமும் எப்பொழுது அமையுமோ என்ற கலக்கம் நெஞ்சில் அழுத்தியது.
கணவர் சிதம்பரம் இருந்தவரை எதையும் யோசிக்காத பத்மாவதி பிரகதி பன்னிரெண்டாம் வகுப்பு அடியெடுத்து வைத்த தருணம் சிதம்பரம் இறந்திட பூமியே கரும் சூழ்ந்ததாக அரண்டார். ஆனால் செய்த வேலைக்கு ஈட்டிய வருமானம் இரட்டிப்பாக கை சேர பாங்க்கில் டெபாசிட் செய்திட அதுவே பிரகதி படித்து கல்லூரி சேர்ந்து தேவையை நிறைவேற்றயென்று சகலமும் இன்னலின்றி பத்மாவதி கணக்கிட்டு வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்.
ஒற்றை வாரிசென காலங்காலமாக வந்ததாலோ என்னவோ உறவினர் என்பது மருந்துக்கும் வாய்க்கவில்லை. தனியாளாக சுற்றத்தாரின் பழக்கம் மட்டும்.
வரன் என்று ஆரம்பித்தால் மேற்படிப்பு சிட்னியில் படிக்க வேண்டுமென அடம் பிடித்து சேர்த்து வைத்தவையை அதற்கு உபயோகித்து விட்டாள். திருமணம் செய்ய பணத்துக்கு எங்கடி போவேன் என்று பேச்சுக்கு கிண்டல் மொழிந்த நேரம் நான் படிச்சி என்னோட கேரக்டருக்கு புரிந்தவனா பார்த்து லவ் பண்ணிக்கறேன் மம்மி. இல்லைனா இரண்டு வருடம் போகட்டும் எவனும் என்னிடம் மாட்டலைனா நீயா யாரையாவது தலையில் கட்டு என்று கண் சிமிட்டி கொஞ்சினாள்.
பத்மாவதிக்கும் மகளை அயல் தேசத்திற்கு படிக்க அனுப்ப துளியும் வருர்தவில்லை. எல்லாம் சிதம்பரம் மகளை வளர்க்க கண்ட கனவுகளில் இதுவும் ஒன்று. மகள் அயல் நாட்டில் படிக்க சென்று வரவேண்டுமென்பது. அதனாலேயே நிறைவேற்றி அழகு பார்க்கவே தாய் மனம் பூரித்தது.
இதோ இன்னும் நான்கு நாட்களில் எல்லா ஏற்பாடும் சரியாய் முடிந்து புறப்பட போகின்றாள். அந்த நாளில் தீபிகாவின் திருமணம்.
இடத்தை இன்னுமொருமுறை பார்த்து கொண்டு, ப்ரிட்ஜ் மீலே மூடும் கவரில் பத்திரிக்கை, பில் போன்று வைக்க தோதுவானதில் வைத்தார்.
பிரகதி சிட்னி செல்லும் நாளும் வந்தது.
“மா.. கிளம்பு… பை எடுத்து வச்சிட்டியா?” என்று அவசரப்படுத்தினாள் பிரகதி.
“என்ன பிரகதி கல்யாணத்துக்கு போகலைனு சொன்ன. முதல் ஆளா கிளம்பிட்ட.” என்று பத்மாவதி கேட்டார்.
“எந்த கல்யாணம்?” என்று நெற்றி சுருங்க கேட்டதும், “உன் பிரெண்ட் தீபிகா கல்யாணம் டி” என்றார்.
“ஓ… இன்னிக்கு தான்ல… அம்மா நான் போகலை.” என்று அடுக்கினாள்.
“அப்ப எங்க கிளம்ப சொன்ன” என்றார் பத்மாவதி.
“மா… நான் சிட்னி போயிட்டா நீ தனியா என்ன செய்வனு இந்தியாவுக்குள் கோவில் டூர் போக ஏற்பாடு செய்தேனே. நீ கூட ஒரு வருடம் ஜாலியா காசி இராமேஸ்வரம் ரிஷிகேஷ் அப்பறம் நிறைய பேர் சொல்லி அங்க சுத்த போறேன்னு சொன்ன. என்னை விட உனக்கு தான் முதல்ல பிளைட் ஏறணும். கிளம்பு கிளம்பு.” என்று கிண்டலாக மொழிந்தாள்.
“ஓ… நான் தானே போகப் போறேன் அது வரை நீ என்ன பண்ண போற. தனியா… பேசாம உன் பிரெண்ட் தீபிகா கல்யாணத்துக்கு ஒரு விசிட் பண்ணிட்டு பிரெண்ட்ஸ் கூட நேரம் செலவு செய்துட்டு கிளம்பலாமே.” என்று கூற பிரகதி அங்கும் இங்கும் நடந்து சரியென்றாள்.
கேப் புக் செய்ய பத்மாவதி இந்தியாவில் உள்ள கோவில் சுற்றுலா பயணம் செய்ய ரிஷிகேஷ்கு பயணம் மேற்கொண்டார்.
தாயை வழி அனுப்பி விட்டு ஹாலில் தனியாக அமர்ந்தாள். இந்த வீட்டில் தந்தையோடு தங்கள் சிறு கூடு எவ்வளவு அழகாக காட்சி தந்தது. இன்றோ வெறுமையாக காட்சியளிக்க பிடிக்காமல் தீபிகா திருமணத்திற்கு சென்றாள்.
சிம்பிளான சேலை அதே நேரம் மிடுக்காக தோற்றம் தந்து இரசனையாய் கட்டி மண்டபம் சென்றாள்.
பெரிய மண்டபம் வாசலில் விஐபி வரும் வழியென்று தனியாக இருந்தது. தீபிகாவுக்கு வந்த வாழ்வு மலைக்க வைத்தது. மனதில் ஏதோ அவள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் சரி அந்த இன்பா பாவம்.’ என்று அவனுக்காக வருத்தபட்டாள்.
பிரகதியை நன்கு அறிந்த தீபிகாவின் தந்தை அவளை மணமகள் அறைக்கு கூட்டி சென்றார்.
என்னடா இது நமக்கு தனி வரவேற்பு எல்லாம் இருக்கே என்று குதுகலித்து அறைகதவில் நுழைய “என்னை குழப்பி பிரைன் வாஷ் செய்து கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சிட்டிங்க. ஆனா எனனவோ அருவருப்பா இருக்கு. இன்பாவை கல்யாணம் பண்ணி வையுங்களேன்” என்று தீபிகா அவளின் தாயிடம் கூறி மாலையை வீசியதை கண்டாள்.
“என்ன கீதா இது. கதவை திறக்கற நேரம் இவ பேசியதை மாப்பிள்ளை வீட்ல கேட்டா என்ன நடக்கும்னு தெரியுமா இல்லையா. இப்படி பொறுப்பேயில்லாம இருக்க” என்று கதவை தாழிட்டார்.
பிரகதிக்கு திடுக்கென இருந்தது. அப்படின்னா தீபிகாவை பிரைன் வாஷ் செய்து திருமணம் நடத்தறாங்களா. என்று குழம்பினாள்.
“என்ன பிள்ளை பெத்து வச்சிருக்கிங்க. எது சொன்னாலும் அந்த இன்பா என்ற பையனை பற்றி பேசறா. இது மட்டும் சசிதரன் வீட்டு ஆட்கள் காதுல விழுந்தது அவ்ளோ தான். எப்பேற்பட்ட குடும்பம் வீடு தேடி வந்து சம்மந்தம் பேசி முடிக்கிறாங்க.” என்று திட்டியபடி மாலையை கழுத்தில் வலுக்கட்டாயமாக போட்டு கையில் பூங்கொத்தை திணித்தாள்.
“இங்க பாரு தீபிகா. சசிதரன் உன்னை பிடிச்சிருக்குனு கல்யாணம் செய்ய பேசி இந்த இடத்துல வந்து நிற்கறோம். இந்த கல்யாணத்துக்கு விதுரன் வர்றார் தெரியும்ல. அவரோட மேற்பார்வையில் தான் இந்த திருமணமே நடக்குது.” என்று கூறி தீபிகா தந்தை “இங்க பாரு உன் தோழி வந்திருக்கா. அவளிடம் கல்லூரில கட் அடிச்ச அனுபவமா பேசி அந்த பயலை மறந்துட்டு கல்யாணத்துக்கு தயாராகு. நீயோ நானோ நினைத்தா கூட இனி திருமணத்தை நிறுத்த முடியாது. சசிதரனோட ஒன்று விட்ட தம்பி விதுரன் பென்ஸ் காரில் ஏறி திருமணத்துக்கு இங்க தான் வந்துட்டு இருக்கறதா செய்தி வந்துடுச்சு.” என்று இலகுவாக இடியை இறக்கிவிட்டு “தயாரா இரு” என்று புறப்பட்டவர் “ஏம்மா உன் சிநேகிதிக்கு நல்ல புத்தி சொல்லு. இவ்ளோ ஆடம்பரமா மண்டபம் பிடிச்சி கல்யாணம் செய்ய பார்த்தா காலேஜில் லவ் பண்ணியவனை விரும்பறதா உலறுறா பாரு.” என்று கடந்தார்.
கீதாவும் வரவேற்க செல்வதாக கூறி அறையிலிருந்து வெளியேறினார்.
“உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலையா தீபிகா” என்று பிரகதி கேட்க, அவள் தோளோடு கட்டி கொண்டு இன்பாவை மறந்து எப்படி கல்யாணத்துக்கு சம்மதிப்பேன் பிரகதி. அவன் என்னடானா இது பெரிய இடம் அது இது என்று எங்கயிருந்தாலும் நல்லாயிருனு சினிமா வசனம் பேசிட்டு போயிட்டான். நான் பார்க்கறவங்க பார்வைக்கு பெரிய இடம் வந்ததும் இன்பாவை கழட்டி விட்டதா பேசி கெட்ட பெயர் வாங்கிட்டு இருக்கேன்.” என்று அழுதாள்.
பிரகதிக்கு கஷ்டமாக போனது. தானும் அப்படி தானே எண்ணினோமென.
“இப்ப இன்பா வந்து தில்லா கூப்பிட்டா அவனோட திருமணம் செய்து அவனுக்கு ஆதரவா இருப்பியா?” என்று கேட்டாள் பிரகதி.
“கண்டிப்பா. ஆனா இன்பா வரணுமே” என்று அழுதாள்.
கண்ணை துடை நான் இன்பாவிடம் பேசறேன். இதே மேடையில் நீ இன்பா கல்யாணம் பண்ணறிங்க. அந்த சசிதரன் என்ன பண்ணறான்னு நானும் பார்க்கறேன்.” என்று இன்பாவை போன் செய்து தெம்புட்டி வரவழைத்தாள்.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
Super super😍😍😍
Wowww… Enoda first hero indha vidhu paiyan…. Naan ppla padika aarambicha first story and my first Hero….. One of my favourite story….
super superb starting aduthu namma hero entry
Super 😍 nanum 1st thapa ninachuttan deepi 😤