துஷ்யந்தா-15
விதுரன் ஆறடிக்கு இருக்க பிரகதி தள்ளாடி தூக்கிய கண்ணாடியை அவன் தலையில் போட முயன்று அவன் நெஞ்சில் போட இரண்டு கைகளை வைத்து தடுத்தவனின் கைப்பட்டும் பிரகதி பிடி தளரவிடவும் கண்ணாடி உடைந்தது.
விதுரன் கையில் கண்ணாடி சில் குத்தி முடிக்க, “யூ டூ டெவில்” என்று கூறி முகம் சுணங்கினான்.
அப்பொழுது தான் அணிந்த இரவாடை சிவப்பு வண்ணத்தை பூசிமுடிக்க, பிரகதி அதன் பின்னே தான் செய்த தவறை உணர்ந்தாள். அவளுக்கு மனது கேட்கவில்லை. அடங்கி போக மறுப்பவள் என்றாலும் இளகிய பெண் மனம் தான் செய்த தவறால் வருந்தியது.
“என் போன்ல டாக்டர் சுதன் நம்பர் இருக்கும் கால் பண்ணு” என்றான்.
பிரகதி விழிக்க, “முதல்ல கிளாஸ்ல கால் வைக்காமா பெட்ல ஏறி உட்கார்.” என்றவன் கீழே பார்க்காமல் நடக்க அவன் வீட்டில் உபயோகிக்கும் செருப்பை அணிந்திருப்பதை கண்டாள். தனது காலை கிளாஸ் துண்டு இல்லாத இடத்தில் வைத்து மெத்தையில் ஏறி அமர்ந்தாள்.
அதற்கு விதுரனே போன் செய்து “சுதன்… கிளாஸ் பீஸ் குத்திடுச்சு வீட்டுக்கு வாங்க.” என்றான்.
“….” அந்தபக்கம் என்ன பேச்சோ, “டேய்… அதெல்லாம் ஆழமா போகலை.. மேலோட்டமா தான். வந்து அதை மட்டும் எடுத்துட்டு செக் பண்ணு.” என்று அதட்டினான்.
அப்பொழுதே அது அவனுக்கு தெரிந்த டாக்டரா என்று பிரகதி ஹாயாக அமர்ந்தாள்.
முடிந்தளவு கண்ணாடி பீஸை அவனே எடுத்து விட முயன்று இருக்க, “என்ன டெவில்லு சொல்லிட்டு… நீ தான் ‘டெவில் குயின்’ வேலையை பார்க்கிற. விட்டா கொன்றுயிருப்ப.” என்றவன் கண்ணாடி பீஸை எடுத்து முடித்து நிமிர குருதி சொட்ட துவங்கியது.
பிரகதியோ அவன் ‘டெவில் குயின்’ என்ற போதே திரும்பியிருந்தாள்.
‘யாரை டெவில் குயின்னு சொல்லறான். அவன் டெவில் மாதிரி பிகேவ் பண்ணிட்டு என்ன சொல்லறான்.
கம்பர்டேபிள் இல்லைனாலும் நெருங்கிடுவானாமே…’ என்று முனங்கி திரும்ப விதுரன் கைக்கு கட்டு போட முடியாது தவித்தான்.
தரையில் பார்க்க இரத்தம் சொட்டி கொண்டிருந்தது. பிரகதி பதட்டத்துடன் இறங்க முனைய விதுரன் முகமோ சற்றும் வலியை காட்டிக் கொள்ளாமல் இருப்பதை கண்டு ”என்னை டெவில் குயின்னு சொல்லறான். இவனை பார்த்தா தான் டெவில் கிங் மாதிரி இருக்கு” என்று சத்தமாகவே கூற, விதுரன் சிரிக்க எரிச்சலில் முட்டி கட்டி திரும்பினாள்.
அங்கும் எதிரே கண்ணாடியில் விதுரன் தோற்றம் தெரிந்தது.
மூஞ்சை பாரு… என்று திட்ட விக்னேஷிற்கு சுதன் போன் செய்து ‘இப்ப என்ன ஆச்சு கண்ணாடில குத்திருக்காம்’ எனறு கேட்க புரியாது பதறி அடித்து வருவதை கண்டாள்.
விக்னேஷிற்கு விதுரன் கோலம் கண்டு பதறினான். அதுவும் பிரகதி திரும்பி இருக்க, சற்று பிரகதி மீதே சினமானது.
“சார் என்ன சார் இவ்ளோ பிளட் லாஸ் ஆகியிருக்கு? ஹாஸ்பிடல் வாங்க சார்.” என்று கூப்பிட்டான்.
“நானே கூப்பிட நினைச்சேன். மச் பெட்டர். சுதன் வந்திட்டு இருக்கான்.” என்று கூறிவிட்டு கையை வலியை பொறுத்து கொள்ள, சற்று நேரத்திலேயே சுதன் வந்தான்.
இதுவரை பெட்ரூம் வரை யாரையும் விட்டதில்லை. சும்மா வீட்டை வேடிக்கை பார்க்க வரும் போது சுதன் வந்தது “என்னடா இது இரத்தம். ஹாஸ்பிடலுக்கும் வர மாட்ட.” என்று ஆராய்ந்து பார்த்து கண்ணாடி சில் இல்லையென்றதும் கட்டி முடித்தான்.
கட்டு போடும் போது இதற்கு முன் இப்படி ஆனதை சொல்லி பேச அந்த கதையை கேட்டுக்கொண்டிருந்தாள் பிரகதி. ‘அடிக்கடி செய்வான் போல டெவில் கிங்’ என்று திட்டியது அவள் உள்ளம்.
அதற்குள் இரவு பொழுதே வந்தாயிற்று. அறையும் வேலைக்கார பெண் வந்து சுத்தம் செய்ய வைத்தான் விக்னேஷ்.
விக்னேஷிற்கு பிரகதி அசைவற்று அமர்ந்திருப்பது பிடிக்கவில்லை. மேலும் விதுரனின் விசுவாசி என்ற நிலை தாளாது பிரகதி முன் வந்து, “மேம் சொல்லறேன்னு தப்பா நினைக்காதிங்க. சாருக்கு இப்படி பிளட் லாஸ் ஆகியிருக்கு. கொஞ்சம் ஓடிவந்து கட்டு கட்டியிருக்கலாம். இப்படி வேடிக்கையை பார்க்கறிங்களே” என்று தன்மையாய் வெகு நிதானமான மென்மையாகவே மனம் தாளாமல் கேட்டுவிட்டான்.
“உங்க சார் என்ன ரொம்ப நல்லவன் பாரு. மிரட்டி கல்யாணம் பண்ணினவனை தலைக்கு அடிக்க எய்ம் பண்ணி மிஸ்ஸாகி கையில தடுத்துட்டானேனு நானே கவலையில இருக்கேன் தெரியுமா? இதுல நானே கட்டு கட்டணுமா… போயா..” என்று சாதாரணமாக கூறினாள்.
விதுரன் அவள் சொன்ன விதத்திலும் கடைசியில் உச்சரித்த ‘போயா..’ என்றதிலும் புன்னகை சிந்தினான்.
விக்னேஷிற்கு என்ன? அடிப்பட்டதுக்கு இவங்க தான் காரணமா? சார் எப்படி சும்மா இருக்கார்? என்று பார்வை பதித்தான்.
அனைவரும் சென்றதும் விதுரன் “கைல அடிபட்டிருக்குனு விடமாட்டேன். பீ ரெடி” என்று கண் சிமிட்ட, பிரகதி வலது இடதென தலையை திருப்பி தலையணையை வைத்து மொத்தினாள்.
“ஏய்… கை… கை…” என்று அதில் படாதாவாறு தன் அகன்ற மார்பில் அடிவாங்கி அவளை அணைத்து தன் கை வளைவுக்குள் கொண்டு வந்திருந்தான்.
சில நொடிகள் கண்கள் கலந்து முடிக்க, இடையில் கை வைத்து “சேரி கட்டிருக்கலாம். ஹிப்ல டச்சாகியிருக்கும்” என்றவனின் பேச்சு தன் சுடிதார் உடையில் யோசித்தவள் அவன் கை இடையில் அழுத்தம் பெற்றதும் தட்டி விட்டவள் கீழே சென்றாள். சாப்பிட எடுத்து வைத்து அமரவும் உணவை சாப்பிட்டாள்.
விதுரன் இரண்டு கையும் கட்டு போட்டு இருக்க உணவை ஸ்பூனில் அலசியபடி இருந்தான்.
பிரகதி வேகமாக சாப்பிட்டு திருமண பரிசு இருக்கும் அறைக்கு சென்றாள்.
அங்கே எதையோ தேடுகின்றாளென அறிந்து சாப்பிட்ட படியே அவளை தேடி வந்தான்.
ஸ்பூனில் இரண்டு வாயை அள்ளி உண்டு “என்ன தேடற?” என்றான்.
“பார்த்தா தெரியலை… கிப்ட்” என்றாள்.
“யார் கொடுத்த கிப்ட் தேடற?” என்றான்.
“ம்ம்… உங்க தாத்தா கொடுத்த கிப்ட்” என்றாள். விதுரனோ “ஓய்… என்ன கொழுப்பா?” என்றான்.
“நோ… அவர் என்னவோ கொடுத்தாரே அதை தேடறேன்.” என்றாள்.
விதுரனோ “அது எங்க தாத்தா என்னோட மனைவிக்கு கொடுத்தது. நீ இன்னமும் மனைவியா ஆகலையே. ஏதோ கோல்ட் டிசைன் போட்டுட்டா… நீ என் பொண்டாட்டியா?” என்றான்.
பிரகதி திரும்பி அவனை காண அவனோ குரலில் இருந்த கடுமை முகத்தில் காட்டாமல் உணவை எடுத்து விழுங்கினான்.
“அதான் மாட்டுக்கு போட்ட மூக்கிணாங்கயிறாட்டும் தாலியென்ற பெயரில் சாவடிக்கிறியே.” என்றாள்.
“தட்ஸ் எ கோல்ட்… நீ கூட அதை வீசியெறிந்ததா ஞாபகம்.” என்றான்.
இடைவெளியிட்டு “லுக் எனக்கு தாலி செண்டிமெண்ட் இல்லை. அப்படி இருந்தா நீ தூக்கியெறிந்தப்பவே கன்னம் பழுக்க நாலறை விட்டிருப்பேன்.” என்றான் கூலாக.
பிரகதியோ தேடுதலை நிறுத்திவிட்டு, “உனக்கு அந்த செண்டிமெண்ட் இருந்தா நானும் தாலியை தாலியா மதிச்சிருப்பேன். நீயே இன்பா கட்டியதை கழட்டி சசிதரனை கட்ட வைக்கலை. அப்படியிருக்க நான் ஏன் மதிக்கணும். உனக்கு இந்த செண்டிமெண்ட் இல்லைனு எனக்கு நல்லாவே தெரியும். நீ விம் போட்டு விளக்க வேண்டியதில்லை.” என்றாள்.
“அப்ப எங்க தாத்தா சொத்து மட்டும் என்ன அல்வாவா… நீ தேட. லாக் தி டோர்” என்றான் கர்ஜினையாக.
பட்டென அடித்து மூடிவிட்டு வெளியேறியவள் டிவியை போட்டு பார்க்க ஆரம்பித்தாள். விதுரன் அறைக்கு சென்றப்பின்னும் செல்லாமல் அமர்ந்து படத்தை இரசித்தவள் அரை மணி நேரத்திற்கு பின்னரே, யாரும் இல்லாத உணர்வு வர கிச்சன் அறையென்று விழியாலே தேடினாள்.
யாருமில்லை என்றதும் வேகமாக மாடிபடியில் ஏறி வந்தவள் விதுரன் அறையில் டிவி பார்க்க கீழே பார்த்த அதே படம்.
“சர்வெண்ட்ஸ் எல்லாம் எங்கே?” என்றாள்.
“அவுட் ஹவுஸ் போயிருப்பாங்க. நீ என்ன நினைச்ச… இங்கயே எல்லாரும் இருப்பாங்கன்னா…
நான் வீட்டுக்கு வந்துட்டா அவங்க சைன் அவுட் பண்ணிடணும். அதே மாதிரி நான் எழுந்து கீழே போகறதுக்கு முன்ன வந்து பிரிப்பரா இருப்பாங்க. அவுட் அவுஸ் நம்ம வீட்டுக்கு பின்னாடி இருக்கு.” என்றவன் கவனம் திரையிலேயே இருந்தது.
“அப்போ இந்த டூடேஸ் அவங்க யாரும் இல்லையா?” என்றாள்.
“இல்லை நீ நான் மட்டும் தான். எக்ஸ்ட்ரா இன்பர்மேஷன் கொடுக்கவா… இங்கிருந்து நீ கத்தி கூப்பிட்டா கூட யார் காதுலயும் விழாது.” என்று பதில் தந்தான். அவள் எண்ணியதும் அதே தான். அவர்கள் இருப்பதால் தான் விதுரன் தன்னிடம் இப்படி கண்ணியம் காக்கின்றானோ என்ற எண்ணம் பிரகதி மனதில் இருந்தது. அவர்கள் பத்து பேர் இருப்பார்கள் ஒருத்தராவது கூப்பிட்டால் எட்டி வந்து நிற்பார்கள் என்று எண்ணினாள். இன்று அப்படியில்லை என்றதும் உறக்கம் போனது.
சோபாவில் உறக்கமின்றி போனை நோண்டி இரவு பொழுதை கடத்த முயன்றாள். விதுரனோ படத்தை தீவிரமாக பார்த்தான்.
“முந்தைய நாளும் நேற்றும் எப்படி தூங்கின. அதே மாதிரி பயமின்றி தூங்கலாம் பிரகதி. ஏன் சோபா மட்டுமில்லை. பெட்ல கூட பயமில்ல தூங்கலாம். ஒவ்வொன்றுக்கும் நேரம் காலம் என்று இருக்கு.” என்றவன் போர்வை எடுத்து உறங்கினான்.
பிரகதி கொட்ட கொட்ட விழித்து ஜன்னலை வெறித்தாள். கீழே போகவோ, மற்றொரு அறைக்கு போகவோ பயந்து நடுங்கினாள்.
விதுரன் கண்டால் இரவில் மட்டும் பயம் அதே போல பிரகதிக்கு காஞ்சூரியன் பேய், இருட்டு என்றாலும் பயம். அதனால வெளியே தனித்து போக அஞ்சி சோபாவில் காலை நீட்டினாள்.
“கண்ணாடி தலையில போட்டு சாவடிக்க பார்த்தும் நிம்மதியா தூங்கறான்.” என்று முணங்கினாள்.
உறங்காமல் பிரகதி பேசுவதை கேட்டவனுக்கு சிரிப்பு வந்தது அடக்கி கொண்டான். சிரித்தால் மேலும் உறங்க நேரம் கடத்துவாள் என்ற காரணமே.
காலையில் எழுந்து கிச்சன் வந்த கணம் காபி நீட்டினாள் பணிப்பெண்.
“நீங்க நைட் இங்க ஸ்டே பண்ணமாட்டிங்களா? அப்போ எங்க ஸ்டே பண்ணறிங்க?” என்று கேட்டாள்.
“அவுட் ஹவுஸ் மேம். பேக் சைடுல நாலு ரோவா இருக்குமே அங்க.” என்றாள்.
காபியை எடுத்து கொண்டு மாடிக்கு ஓடி சென்று எட்டி பார்த்தாள்.
இது நாள் வரை ஏதோவொரு வீடென்றல்லவா நினைத்தாள். பணியாட்களுக்கு தங்குமிடமா? என்று விழி விரித்தாள்.
காம்பவுண்ட் நிறம் வைத்தாவது அது அவள் வீட்டினுள் இருப்பதென அறியாமல் போனாளே என்று தன்னையே திட்டினாள்.
கூடவே ஸ்விம்மிங் புல் இருக்க இது யாருது…? என்று யோசித்தாள்.
“என்ன அவுட் ஹவுஸுக்கு அறையில இருந்து கத்தினா கேட்குமானு செக் பண்ணறியா?” என்றான்.
“சே… சே… இங்கிருந்த காம்பவுண்டை நான் இப்ப தான் பார்க்கறேன். இந்த ஸ்விம்மிங் புல்… யாரோடது…?” என்றாள். விதுரன் முறைக்க… “ஓ… உங்களோடதா?” என்றான்.
“ம்ம்… என்னோடது தான்.” என்றவன் “முன்ன நேரம் கிடைக்கும் இப்ப ஓர்க் முடிக்கவே நேரமில்லை. சசி வந்தா மச் பெட்டர். அவன் எங்க வர்றான். திக்குதுனு ஒதுங்கிட்டான்.” என்று பேசினான்.
போன் வரவும் எடுத்து நம்பரை பார்க்க அது எட்வின் என்றதும் அதனை அட்டன் செய்ய திணறினாள். அதனால் அவனையே பார்த்து கொண்டிருக்க, ” என்ன பார்க்கற… பார்த்தா ஹீரோ மாதிரி இருக்கேன். பண்ணறது எல்லாம் வில்லன் வேலை மாதிரி இருக்கா.” என்றான்.
ஆமா என்று அன்னிச்சையாய் தலையசைத்தவள் சுதாரித்து “இது நேத்து நான் நினைச்சது” என்றவள் “ஓ… கதிர் சொல்லிருப்பார். ஸ்பை தானே.” என்றாள்.
பிரகதி செல்ல விதுரன் அலுவலகம் கிளம்ப ஆயத்தமானான். ஆனால் கை பட்டன் போடும் பொழுது எல்லாம் வலி சுறுக்கென தைத்தது. நேற்றை விட இன்று வலி கூடுதலானது.
அதனால் அலுவலகம் தவிர்த்து வீட்டில் இருந்தான்.
கோப்புகளை பார்வையிட்டவாறு விக்னேஷ் இருக்க தர்மா வந்து சேர்ந்தான்.
இவனை வந்தப்ப பார்த்தது பிறகு கண்ணுக்கு முன்ன வரலை, நேத்து கூட இருந்தான். ஆனா அத்தளவு என் முன்ன வந்து தொலையலை. இன்னிக்கு என்னவாம் என்று ஹாலின் மற்றொரு பக்கம் தனியாக இருந்த சோபாவில் அமர்ந்தாள்.
தர்மா பம்மிக்கொண்டு வந்து விதுரனிடம் பேசி பணிகளை வரிசையாய் கூற விதுரன் ஏதோ கேட்க “ரெடி சார் மறுத்தா… ஆசிட் வீச்சு தான்” என்று பதில் தந்தான்.
“நீ போ… விக்னேஷ் இருக்கட்டும்” என்று கூறினான்.
“சார் நான் உங்க கூட இருக்கேன் சார்.” என்றான்.
விலங்காதவனே உன்னை வச்சி மொத்தமா சொதப்பவா? என்ற எண்ணம் உதித்தது. விதுரன் தர்மாவை சில நேரம் உபயோகிப்பதால் அமைதி காத்து “போடா.” என்று அனுப்பினான்.
“விலங்காதவன் சார்… இங்க வாங்க சார்” என்றாள். மொத்த வீட்டு பணியாட்களும், விக்னேஷும் பிரகதியை திரும்பி பார்க்க, விதுரன் மட்டும் கூலிங் கிளாஸை மாட்டி அவளை காணாது ஆனால் கவனித்தான்.
“எ..என்.. என்ன மேம்?” என்றான் அருகே வந்து, பளாரென ஒரு அடி வைத்து கையை உதறினாள்.
“வந்த அண்ணிக்கு இந்த மரியாதை இருந்தது இல்லைல… அன்னிக்கே போட்டிருப்பேன். எங்கம்மா உடல்நிலையை யோசித்து அப்ப மூளை ஸ்டக் ஆகிடுச்சு. தர்மானு பெயரை வச்சிட்டு அதர்மம் பண்ணிட்டு சுத்தற போடா” என்றாள்.
பிரகதி திரும்பி பார்க்க பணியாட்கள் அவர்கள் அவர்கள் பணியை பார்த்திட முனைந்தனர்.
தர்மா கன்னத்தில் கை வைத்து விதுரனை ஒரவிழியில் பார்த்து விரைந்தான்.
விக்னேஷ் கையப்பம் வாங்கி விட்டு ஸ்டெரேயின் பண்ணாதிங்க சார் டேக் ரெஸ்ட்” என்று புறப்பட்டான்.
நேரம் செல்ல அன்னைய காண புறப்பட தயாரானாள். ரெடியாகி விதுரன் அருகே வந்தவள் பையை மாட்டி புறப்பட, காரில் ஏறும் நேரம் சரியாய் வந்து இடைப்புகுந்து விதுரன் ஏறினான்.
“என்ன பார்க்கற… ஏறு…” என்றான்.
கதிர் வண்டியோட்ட முன்னும் பின்னும் காரை தவிர்த்து விதுரனும் பிரகதியும் இதில் பயணம் செய்ய மற்றொரு கார் பின் தொடர்ந்தது.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super. Very intresting devil king and devil queen. Good combination
eni devil king and queen oda konjam sandai kalantha kadhal athula romance ellam irukuma