Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -24

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -24

துஷ்யந்தா-24

     
      பிரகதி வீட்டுக்கு வந்தப்பின் ஏதோவொரு மகிழ்வு சாரலில் நனைய தோன்றியவளாக மழையை எதிர்ப்பார்த்தாள்.

      உடனடியாக ஏதேனும் சந்தோஷத்தை பகிர எண்ணி அனிலிகாவிடம் பேச முயன்றாள். ஆனால் அனிலிகாவோ போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது.

    மனதின் சந்தோஷத்தை அடக்க முடியாமல் அங்கிருந்த ஸ்விம்மிங்புலில் விழுந்தாள்.

    மனதின் ஆனந்தத்தை நீரோடு மிதந்து அனுபவித்தாள்.

     தன் தோழன் இன்பா வாழ்வு நலம் பெற்று விட்டதென. தோழி தீபிகா தான் எண்ணமும் செயலும் அவளுக்கு தகுந்த மாதிரி உள்ளது.
அவளுக்குமே நல்ல வாழ்வை அவளாக கெடுத்து கொள்வதால் இனி தீபிகாவை பற்றி கவலை கொண்டு விதுரனை திட்டவோ சண்டையிடவோ செய்ய தேவையில்லை.

    அம்மாவையும் அவன் நல்லபடியாக பார்த்துக் கொள்கின்றான். அவனாக அம்மாவின் நிகழ்வில் கெடுதல் நினைக்கவில்லையே என்ற எண்ணம் எல்லாம் நிம்மதியாக போனது.

      “ரொம்ப நேரம் தண்ணில இருந்த கோல்ட் பிடிக்கும். வெளிய வர்றியா?” என்றான் விதுரன். இவன் எப்பொழுதிலிருந்து தன்னை பார்க்கின்றான் என எண்ணிக் கொண்டே வெளியே வந்தாள்.

     “உள்ள வேலைக்காரங்க இருப்பாங்களா.. அச்சோ டிரஸ் எல்லாம் ஈரமாக்கிட்டேன்.” என்றான்.

     “அவங்களை எல்லாம் அப்பவே போக சொல்லிட்டேன். டெவில் குயின் யோசிக்காம போகலாம்.” என்றான் சிரிக்காமல் அதே நேரம் மென்மையாக.

      “அதானே ‘டெவில் கிங்’ வந்துட்டா எல்லாரும் தலைதெறிக்க ஓடுவாங்களே.” என்று ஓய்யாரமாக நடந்தாள்.

     “சேலை மாற்று.” என்றவன் அறைக்கு வெளியேவே இருக்க, சேலையை கழட்டி விட்டு மற்றொரு இரவாடையை எடுத்து கொண்டு சென்றாள்.

     குளித்து உடை மாற்றி தலை துவட்டி வந்தவளிடம் சூப் மட்டும் எடுத்து நீட்டினான். இதெப்படி வந்தது? என்பதாய் பார்வை பதிக்க கேட்டு நின்றாள்.

    “நீ தண்ணில விழுந்தப்பவே ஏற்கனவே சூப் ரெடி பண்ண சொல்லிட்டேன்.” என்றவன் உடை மாற்ற சென்றான்.    

    ஹாலில் சூப்பை ஊதியபடி “தாத்தா எங்கே?” என்றாள்.

     “தாத்ரு கொள்ளு பேரனை பார்க்க போயிருக்கார்.” என்றான் மொட்டையாக. சொல்லும் பொழுது ஏதோ மறைப்பதாக தோன்றியது. ஆனால் கேட்டுக் கொள்ளவில்லை.

       மறுபடியும் சேரியே கட்டியிருக்கலாம்.” என்றவனை விரல் நீட்டி எச்சரித்தாள். அதன் பின் இனிய நாட்களாக கடந்தது. பத்மாவதிக்கு மீண்டும் ஒரு ஆப்ரேஷன் என்பதால் டெஸ்ட் எடுக்க சென்றனர். போகும் வழியில் விதுரன் யாரையோ மிரட்டி எச்சரித்தது கண்ணில்பட்டது.  

     பத்மாவதியின் உடல்நிலை காரணமாக அவர்களை வேறொரு மருத்துவ மனையில் காண வந்த நேரம் அதேயிடத்தில் தீபிகா ஸ்டெக்சரில் படுத்திருந்தாள்.

    தீபிகா… தீபிகா… இவங்களுக்கு என்னாச்சு.” என்று கேட்டாள்
 
   தீபிகா மயக்கத்தில் இருக்க,அந்த நர்ஸோ “தெரிந்தவங்களா மேம்… இவங்களுக்கு ஆப்ரேஷன். பீட் பண்ணாம இருந்திருப்பாங்க போல நெஞ்சுல பால் சேர்ந்து கட்டிடுச்சு. இப்ப ஆப்ரேஷன் மூலமா ரெக்குவர் பண்ணணும்” என்று அழைத்து செல்ல பிரகதிக்கு கவலையாய் போனது.

     தீபிகா அம்மா கீதா வரவும் “என்ன ஆன்டி இது. இப்படி ஆப்ரேஷன்… குழந்தை சரியா பீட் பண்ணலையா?” என்று கேட்டாள்.

    “குழந்தை இருந்தா தானே பீட் பண்ண… அவன் தான் குழந்தையை எடுத்துட்டு போயிட்டானே.” என்றார்.

     சசிதரன் மென்மையானவராக தானே தெரிந்தார் என முழிக்க, “என் பொண்ணு வாழ்க்கைய அழிச்ச விதுரன் அழிச்சு போவான்.” என்று பிரகதி எதிரே திட்டி செல்லவும் குழம்பிப்போனாள்.

     அன்னையை தனிப்பிரிவில் வைத்து டெஸ்ட் எடுத்திருக்க விதுரன் ”பட்டு கூட இருக்கட்டும். நீ வா” என்று இழுத்து சென்றான்.

    “எங்கம்மா கூட நான் இருக்கணும். வேலைக்காரங்க இல்லை” என்றாள்.

     “லுக்… தீபிகா இருக்கற இடத்துல நீ இருக்க கூடாது.” என்றான்.

    “உங்க குடும்பத்துல சாதாரணம் தானே. அம்மாவையே குழந்தையிடம் இருந்து பிரிக்கறது. தீபிகாவிடமிருந்து அவ குழந்தையை பிரிச்ச. இப்ப என்னை எங்கம்மாவிடமிருந்து பிரிக்கறியா. எங்கயும் வரமாட்டேன்.” என்றாள்.

      “முட்டாள் அவள் குழந்தையை எப்படி ட்ரீட் பண்ணுவானு உனக்கு தெரியாது” என்றான்.

     சற்று நேரம் நெற்றி சுருங்கி யோசிக்க, எங்கோ கீதா கத்துவது கேட்டது. “என் பொண்ணு பீட் பண்ணினா பாவம்னு குழந்தையை பிடுங்கிட்டு போயிட்டானே. உங்களுக்கு வாரிசா பெத்து போட மிஷானா தான் இருக்கணும் தெரிஞ்சா என் பொண்ணு கல்யாணத்தை நானே நிறுத்திருப்பேனே… இப்படி தாயும் பிள்ளையுமா பிரிச்சி என் பொண்ணு பால் கொடுக்கலைனு ஊரறிய பேச வச்சிட்டானே. இதுக்கெல்லாம் அந்த சசி காரணமில்லை. ஏத்தி விட்டு வேடிக்கை பார்க்கற விதுரன் தான் காரணம்.” என்று ஓயாமல் கத்தியதன் விளைவு பிரகதி விதுரனை முறைத்தாள்.

     “இங்கே வந்ததே தப்பு.” என்றவன் பத்மாவதியை இமிடியட்டா நம்ம ஹாஸ்பிடலிலேயே அனுமதிச்சு ட்ரிட்மெண்ட் பாருங்க. இங்க வேண்டாம். டாக்டர் யாரோ நம்பர் வாங்கு நான் தனியா பேசிக்கறேன்.” என்று விக்னேஷிடம் பேசுவது புரிந்தது.

     பிரகதி பார்த்திருந்த சில நொடியிலியே பத்மாவதியை அழைத்து செல்ல அவளும் பின் தொடர வேண்டியதாக சூழ்நிலை மாறியது.

    தெரிந்த ஹாஸ்பிடல் வந்ததும் பிரகதிக்கும் ஏதோ நிம்மதி தான். இனி அவர்களே எல்லாம் பார்த்து கொள்வார்கள். பட்டுவை விட்டு விட்டு கூட செல்லலாம். ஆனாலும் மனதிற்கு கேட்கவில்லை. ஆனால் ஒரு ஆள் மட்டும் இரவு இருக்க வேண்டும். என்ற அதே நிபந்தனையில் பிரகதி வீட்டிற்கு சென்றாள்.

    ஆதித்யாவிடம் தீபிகாவின் குழந்தையை சசிதரன் எடுத்து வந்துவிட்டாரா? என்று கேட்டாள்.

    “ஆமா மா” என்றார் அதில் மிதமிஞ்சிய வலி தென்பட்டது.

    தீபிகா மருத்துவமனையில் நடந்த நிகழ்வை தெரிவிக்க ஆதித்யாவோ “அவ டிவோர்ஸ் கேட்கறாமா. குழந்தையை பிரிய மனசில்லாமா சசி விதுரன் ஆலோசனையில் தூக்கிட்டு வந்துட்டான். அவ கெஞ்சி வருவானு எதிர்பார்த்தோம். ஆனா வரலை.” என்றார் வேதனையோடு.

     “குழந்தையை தூக்கிட்டு வந்தா கெஞ்சி வருவானு என்னவொரு மாஸ்டர் பிளான். ஏன் தாத்தா மென்மையா பேச்சு வார்த்தையில டிவோர்ஸ் வேண்டாம்னு சொல்ல தெரியாதா. நீங்க எப்படி வேடிக்கை பார்க்கறிங்க… உங்களிடமிருந்து இந்த பேச்சை எதிர்பார்க்கலை.” என்றவள் விடு விடுவென மாடியேறினாள்.

     மேலும் இரண்டு நாளில் பத்மாவதி வீட்டிற்கு வந்தார். ஆனால் முன்பை விட உடல்நிலை சற்றே தளர்ந்து போனது.

    அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை ஆப்ரேஷன் வயதின் ஏற்றத்தால் தாங்க முடியவில்லை. மனம் ஒத்துழைத்தாலும் உடலானது ஒத்துழைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் தோய்ந்து கொண்டிருந்தார்.

    பிரகதி அடிக்கடி அன்னைக்கு நீராகமாக ஜூஸ் போன்றே காரமின்றி கொடுத்து தந்தாள். கலையில் கீழேயிறங்கினால் இரவு தான் மீண்டும் மேலே செல்வாள். ஒரு நொடிக்கூட தாயை பிரியாது இருந்தாள்.

   அனிலிகாவிடம் இருந்து போன் வந்தது. நலனை அறிந்து கொண்டாள். இத்தனை நாள் பிரகதியே போன் செய்வாள். அனைத்தும் கூறியிருந்தால் இன்று அனிலிகாவே பேச ஆரம்பித்தது எட்வின் இலண்டன் சென்றதாக கூறுவதற்கே.

    பிரகதி கேட்டு கொண்டாள். அவளுக்கு எட்வினை முன்னவே நட்பை தாண்டி யோசிக்கவில்லை. அதனால் அவனின் பேச்சு பெரிதாய் கவலைக் கொடுக்க வில்லை.

  நடுவில் அஞ்சலி ஒரு முறை இன்பாவின் போனிலிருந்து நன்றி தெரிவித்தாள். என்ன ஏதென கேட்க, “இல்லை.. முதல்ல தீபிகா வந்தப்ப என்னை அவ்ளோ காயப்படுத்தியது இன்பா செயல். ஆனா நீங்க வந்துட்டு போனப்பிறகு இன்பாவிடம் நிறைய மாற்றம். அதுவும் உங்க அலுவலகத்துல தான் வேலை பார்க்கறார்னு கேள்விப்பட்டேன். அவர் என்னோட பேசறார்.

   எங்க இப்படியே வாழ்க்கை போயிடுமேனு நினைச்சேன். ஆனா அவரோட மனைவியா என்னை அங்கீகரிச்சிட்டார். இது போதும். நிம்மதியா இருக்கு. தேங்க்ஸ் இந்த வாழ்க்கையை என் வாழ்க்கையில வாராதுனே முடிவெடுத்திருந்தேன். கிடைச்சது நீங்க ஒரு நாள் நேரமிருந்தா வாங்க பிரகதி” என்று வைத்தாள்.

      அடுத்த பத்து நிமிடம் பிரகதி ஆனந்தம் கொண்டாளென்றாள். அதற்கு பிறகு வந்த போன் காலில் நொந்தே விட்டாள்.

    யாரோ முகம் தெரியாத பெண் போனில் அழைத்து விதுரன் மனைவியா என்று கேட்டுவிட்டு “நீயும் உன் புருஷனும் நல்லா வாழ மாட்டிங்க. என் கணவரை கொன்று என் குழந்தைக்கு அப்பா இல்லாம பண்ணிட்டானே. நீங்க எல்லாம் அடுத்துவங்க வயிற்றெறிச்சலில் வாழறவங்க. உங்களுக்கும் என்னோட வலி புரியாது. நீங்க நேசித்த உறவு செத்து அதை ஈடு செய்ய முடியாதப்ப என்னோட வலி புரியும். என் சாபம் உங்களை சும்மா விடாது.” என்று நீண்ட உரையாற்றி அழுது வைத்து விட்டாள். பிரகதிக்கு தொண்டுக்குழி ஏறி இறங்கியது.

   யாரை வதைத்தானோ அவர்கள் சாபம் என்னை ஏதோ செய்கிறதே என்று தவித்தாள்.

    இப்படியாய் சென்ற நாட்களில் அன்று விதுரன் அறையில் தீபிகாவிடமே குழந்தையை கொடுக்க சொல்லி வற்புறுத்தினாள்.

    “நீங்க சொன்னா சசி கேட்பார். ஏன் இப்படி குழந்தையும் தாயையும் பிரிக்கறிங்க. அவங்க பேமிலி எப்படியோ முடிவெடுத்துக்கிட்டோமே. நீங்க இதுவரை தலையிட்டது போதும்.” என்றாள்.

    விதுரன் இமை மூடி கேட்டவன் “சசியை நான் அண்ணாவா பார்க்கலை. ஒரே  ஏஜ் பிரகதி. மாசக்கணக்குல என்னை விட பெரியவன். ஆனா வாழ்க்கையை எதிர் கொள்ளறதில் ரொம்பவே தயங்குகின்றவன். அவனுக்கு எது நல்லது எது கெட்டதுனு எனக்கு தெரியும். உன் வேலையை பாரு.” என்று கூறிவிட்டான்.

     அந்த நேரம் பட்டு ஓடி வந்து அம்மா அம்மா என்று தட்ட பிரகதி என்னவென்று கேட்டு முடித்தாள்.

     “பத்மாவதிம்மாவுக்கு உடம்பு முடியலை. என்னவோ கைகால் சில்லிட்டு இருக்கு. நர்ஸ் உங்களை அவசரமா வர சொன்னாங்க.” என்று கூறினாள்.

   பிரகதி உடனே ஓடி செல்ல விதுரன் பின் தொடர்ந்து நடந்தான்.

   அங்கே நர்ஸ் கையில் பல்ஸை தேட, உயிரற்ற உடலாக அவருக்கு செய்தி சொன்னது.

      விதுரன் வந்து நிற்க, “தூக்கத்திலேயே உயிர் போயிருக்கு சார்.” என்று கூறி நகர்ந்தாள்.

   பிரகதி அன்னையை அணைத்து அழவும் விதுரன் கையை கட்டி வேடிக்கை பார்த்தான். அவனால் என்ன செய்ய முடியும்.

    ஆதித்யா பிரகதி தலையை வருடி விட, “உங்க ஆதரவு எதுவும் எனக்கு தேவையில்லை. உங்க பேரனால தான் என் அம்மாவுக்கு இந்த நிலைமை.” என்றாள்.
   
    “இயற்கையா மரணம் ஏற்பட்டா நான் என்ன பண்ண முடியும்.” என்றான் விதுரன்.

     “விதுரா அமைதியா இருப்பா.” என்றார் ஆதித்யா.

     “இயற்கை மரணமா… இந்த ஆசிட் குடிச்சி ஆப்ரேஷன்னு எங்கம்மா உடல்நிலை தளர்ந்ததே உன்னால தான். இல்லைனா உங்க தாத்தா மாதிரி எங்கம்மாவும் வாழ்ந்திருப்பாங்க. அட்லிஸ்ட் என் குழந்தையை கையில வாங்கி உச்சி முகர்ந்திருக்கிற அளவுக்காவது. என்னோட இன்னமும் வாழ வேண்டியவங்க இறந்ததுக்கு நீ தான் காரணம்.” என்றவளை எண்ணி முகம் திருப்பி சென்றான்.

      மற்ற சடங்குகளை ஆதித்யா கூற தர்மா அனைத்திற்கும் பணியாட்களை நியமித்தான்.
 
   விக்னேஷ் மூலமாக உஷாதேவிக்கு  இறப்பு செய்தியை கூறினான்.

    அவர்களும் வந்திருந்தார்கள். கூடவே இன்பா,அஞ்சலி என்று அஞ்சலி செலுத்த வந்தனர்.
 
   தீபிகாவும் பரமகுருவின் கட்டாயத்தால் வந்தாள். வந்தவளின் கண்களில் இன்பா அஞ்சலி தென்படவும் வயிறு எரிந்தது.

     தானாக குழந்தை யுகனை அரவணைத்து சசியோடு நின்றாள்.

   நானும் நல்ல வாழ்க்கை தான் வாழ்கின்றேன் என்று பறைச்சாற்றுவதாக நின்றாள்.

     சசிக்கும் கோமதிக்கும் தீபிகா குழந்தையை தூக்கி தங்களோடு பேசியது மகிழ்ச்சியாய் உணர்ந்தனர்.

   எவ்வளவு உண்மையான விஷயம் நல்லதுக்கும் பொல்லதுக்கும் செல்வதால் உறவுகள் மனகசப்பு அகன்று உறவை புதுபித்து கொள்கின்றனர் என்று தான் கோமதியின் மனதிற்குபட்டது.

      பிரகதி அன்னையை கொண்டு செல்ல அழுதழுது சோர்ந்தாள். விதுரன் ஆறுதலென அருகே செல்லவில்லை. ஆனால் தகனம் செய்ய மகனாய் எரியூட்டினான்.

    மகன் அற்றவருக்கு மருமகனும் மகனாக மாறலாமே என்பது போல.

    பட்டு இரண்டு மூன்று நாள் கூடவே இருந்தாள். பிரகதி தாயின் புகைப்படம் முன் அமர்திருக்க மாடிக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்தாள். பதினாறு நாள் காரியம் முடிந்து இதோ ஒரு மாதமும் முடிவடைந்தது.

      ஆதித்யா வந்து “இன்னமும் எத்தனை நாளைக்கு இப்படி அமைதியா இருப்ப டா. மனுஷங்களுக்கு பிறப்புன்னு இருந்தா இறப்பு வர தானே செய்யும்.

    உன் மனசை வேற பக்கம் திசைதிருப்புமா. ஆபிஸ் போகணும்னா போ. உனக்கு நம்ம அலுவலகம் வேண்டாம்னா கூட ஓகே. நானே விதுரனிடம் சொல்லி உனக்கு பிடிச்ச இடத்துல வேலையை நியமிக்க ஏற்பாடு பண்ணறேன். இல்லையா நீயா புதுசா பிஸினஸ் பண்ணு. மனசை வேற வழியில செலுத்து மா.” என்றார்.

  பிரகதி கற்சிலையாய் இருந்தவள் அவர் புறம் திரும்பினாள்.

   “என்னடா பார்க்கிற… உனக்கு என்ன வேண்டும் சொல்லு” என்றார்.

    “எனக்கு டிவோர்ஸ் வேண்டும் தாத்தா. உங்க பேரனிடமிருந்து நிரந்தர விடுதலை வேண்டும். வாங்கி தர முடியுமா?” என்றாள். விதுரன் வருவது படிக்கட்டின் அழுத்தமான காலடியோசையில் உணர்ந்தாள் ஆனாலும் கேட்டு விட்டாள்.

    “அச்சோ என்னம்மா நீ… தீபிகாவே முன்ன அந்த பேச்சு எடுத்து திரும்ப சசியோட சேர்ந்து வாழ ஆரம்பிச்சுட்டாளேனு சந்தோஷப்பட்டா.. நீ இப்ப ஆரம்பிக்கிற.. அதெல்லாம் வேண்டாம் டா. கொஞ்சம் அவனுக்கு அவகாசம் கொடு. உனக்கு பிடிச்ச மாதிரி மாத்திடலாம்” என்றார்.

     “இல்லை தாத்தா… எனக்கு டிவோர்ஸ் வேண்டும்.” என்றாள் உறுதியாய்.

     “டிவோர்ஸ் தானே தர்றேன். ஆனா ஒரு கண்டிசன்… அதுக்கு சம்மதிச்சா… அதுயென்னனு அப்பறம் சொல்லறேன். இப்ப எனக்கு வேற வேலை இருக்கு” என்று சென்றான்.

   ஆதித்யாவோ இருவரின் பேச்சை கேட்டு நொந்து போனார்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -24”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *