துஷ்யந்தா-25
ஆதித்யா விதுரன் சென்ற பின்னர் பிரகதியிடம் என்னவென்னவோ சொல்லி பார்த்து தோற்று விதுரன் அலுவலகம் படையெடுத்தார்.
“என்னடா விதுரா… கணவன் மனைவியா பத்து மாதம் வாழ்ந்துட்டு அதுக்கு அர்த்தமேயில்லாம விவாகரத்துல வந்து நிற்கறிங்க. அப்பறம் இந்த பத்து மாதம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன?” என்றான்.
“இந்த பத்துமாதமும் திருமண வாழ்வை வாழலைனு அர்த்தம் தாத்ரு” என்றவன் கோப்பையில் மேற்பார்வையிட்டவாறு பதில் தந்தான்.
“என்னடா சொல்லற… அப்ப நீயும் பிரகதியும் கணவன் மனைவியா வாழலையா?” என்று கேட்டார்.
கோப்பையை மேஜை மீது வைத்து, “விதுரன் கொலை கூட செய்திருக்கான். ஆனா ரேப் பண்ண மாட்டான். ஏன் தாத்ரு கையை காலை கட்டி ஒரு பொண்ணோட விருப்பமில்லாம அவளை அணுக நான் என்ன ரேப்பிஸ்டா.” என்று எதிர் கேள்வி கேட்டான்.
“சசியோட தீபிகா கட்டாய திருமணம் தான் ஆனா அவன் வாழ்கையில அடுத்த மாதமே யுகேன் தங்கினானே… அதெப்படி டா.? பிரகதி பிடிவாதம்னு தெரியும். அப்படின்னாலும் ஒரே அறையில…” என்றவர் இதுக்கு மேல் என்ன கேட்க? எனபதாய் இருந்தார்.
“தாத்ரு… தீபிகா பணத்தை நேசித்தா… அவளுக்கு மனதிடம் குறைவு. சசியோட தீண்டலும் செல்வாக்கும் இரவுக்கும் பகலுக்கும் அவளை கண்ணை கட்டி கட்டுலுக்கு அடிப்பணிய வச்சிருக்கலாம்.
பிரகதிக்கு மனம் திடம் அதிகம் தாத்ரு. பணத்தை முதல் நாளே அவ மண்டையில ஏற்றிக்கலை.
தீபிகா திருமணம் முடிச்சி சசி வீட்டை பார்த்தே வாயை மூடிட்டா. இங்க பிரகதி அவளுக்கு கொடுத்த நகையை எல்லாம் ஒரு பொருட்டாவே மதிக்காம தூக்கிப்போட்ட.. இன்குளூடிங் தாலியை கூட. அவளோட திங்க்ஸ் தாண்டி நம்ம வீட்டு நகையை கூட அவ ஆசையா தொட்டு பார்க்கலை.(தாலி மற்ற நகையை கட்டிலேயே கழட்டி வைத்தப்ப ஐ லைக் இட் என்று கூறியிருப்பான்)
அப்படியிருக்க… கணவன் மனைவி என்பது எல்லாம் எந்த மூலைக்கு… விடுங்க தாத்ரு… அவ கேட்டதை கொடுத்துடலாம். டிவோர்ஸ் என்பது சாக்லேட் மாதிரி ஆகிடுச்சு. பிடிச்சா வாழறாங்க பிடிக்கலையா டிவோர்ஸ் வாங்கிட்டு அம்மா வீட்டுக்கு பெட்டியை கட்டறாங்க.” என்றவன் உள்ளம் பத்மாவதியை நினைத்தது.
“பிரகதியால அவங்க அம்மா வீட்டுக்கு போக முடியும். ஆனா அம்மா? பத்மாவதி அம்மாவை எப்படியாவது பேச வச்சி கொடுத்திருக்கணும் தாத்ரு… என்னால முடியலையே..” என்றான் வருத்தத்துடன்.
“டேய்… அந்த வருத்தத்தை மனசுல வச்சிட்டு தான் அவ கேட்டதும் டிவோர்ஸ் தர தாராளமா சொல்லிட்டியா? வேண்டாம் டா. சசி என்னோட தம்பி பேரன் அதுக்கே என்னால தாங்க முடியலை. நீ என் பேரன் டா. இந்த வாழ்க்கையை நீ வாழ தான் நான் குத்துகல்லாட்டம் இருக்கேனா?” என்றார் ஆதித்யா.
“தாத்ரு… சசி வாழ்க்கையை தான் திரும்ப சரிசெய்தாச்சே. டோண்ட் வோர்ரி. எல்லாம் பார்த்துக்கலாம்.” என்றான் சாதாரணமாக.
ஆதித்யா இதற்கு மேல் வற்புறுத்த செய்யவில்லை. இருவர் பிடிவாதமும் அறிந்தவர். சொல்லிப் பார்த்தாயிற்று இருவருக்குமே புத்திமதி கூற வேண்டியதில்லையே.
இரண்டு மாதங்கள் முடிந்தது.
பிரகதி நிம்மதியாய் தனது லக்கேஜை எடுத்து வைத்து நிமிர்ந்தாள்.
பட்டு அதனை எடுத்து வந்து ஹாலில் வைக்க, ஆதித்யா வெறும் பார்வையாளராய் இருந்தார்.
இதற்கு மேல் தடுக்க அவரால் இயலாதவொன்று.
விதுரனோ அலுவலகம் செல்ல தயாரானவன்.
“இது மியூட்சுவல் டிவோர்ஸ் பேப்பர். உன்னிடம் ஒரு காபி இருக்கட்டும்.” என்று நீட்டினான்.
“தேங்க்ஸ்.” என்று வாங்கி தனது கைபையில் வைத்து கொண்டாள்.
ஓலோ புக் செய்ய தயாரானவளை, “நான் ஆபிஸ் போற வழில உன்னை டிராப் பண்ணிடறேன். லாஸ்டா கதிர் வண்டியோட்ட, நான் உன்னை வழியனுப்பியதா இருக்கட்டுமே.” என்றான் விதுரன்.
“நோ தேங்க்ஸ்” என்றாள் பிரகதி.
“கண்டிஷனோட கடைசி பேச்சுல இதுவும் சேர்த்திருந்ததா எனக்கு நியாபகம். உனக்கு நினைவுயில்லைனா அகைன் சொல்லட்டா?” என்றான் குறும்பாக.
“ஒரு மண்ணங்கட்டியும் வேண்டாம். டிராப் மட்டும் பண்ணு” என்று அவனிடம் கத்திவிட்டு தாத்தாவிடம் வந்தாள்.
“ஐ அம் சாரி தாத்தா. நான் கிளம்பறேன்” என்றாள்.
“போயிட்டு வர்றேனு சொல்லுமா.” என்றார்.
“இல்லை தாத்தா.. இனி இங்க அடியெடுத்து வைக்க நான் தயாராயில்லை.” என்றார்.
“வைப்ப மா… இந்த கிழவன் இறந்தா நீ வருவ… வரணும். இது கட்டளையில்லைமா வேண்டுக்கோள்” என்றார். பிரகதி பதில் தராமல் வெளியேறினாள்.
கதிரோ கார் கதவை திறந்து விட்டு, “ஒரு முறை நல்லா யோசிங்க மா.” என்றார்.
“கதிர் நீங்க இவரோட ஹீரோயிசம் முகத்தை மட்டும் பார்த்துயிருக்கிங்க. அதனால இப்படி பேசறிங்க. ஒரு மர்டரை பண்ணி வச்சிருக்கான். கொலைக்காரனோட வாழ என்னால முடியாது. ப்ளிஸ் எனக்கு ஒரு அண்ணா இருந்தா உங்களை மாதிரி இருப்பாருனு மதிக்கறேன். என் வீட்ல விட்டுடுங்க.” என்று பேச வந்தவரை தடுத்து விட்டாள்.
விதுரன் எதையும் காதில் வாங்காமல் தனது கம்பனியின் தற்போது நிலவரத்தை பார்வையிட்டு கொண்டு வந்தான்.
பிரகதி வீடு வந்ததும் கார் கதவை திறந்து இறங்கியவள் மரியாதைக்கு கூட விதுரனை அழைக்கவில்லை. ஆனால் அவனோ பின் தொடர்ந்து வந்தான். கதிரும் பட்டுவும் பிரகதியின் உடைமைகளை எடுத்து வந்து வைத்தனர்.
“காபி கிடைக்குமா?” என்றான். பிரகதியோ பட்டுவை பார்த்து போட கூறவும், அவ்விடம் விட்டு கிச்சன் பக்கம் சென்றாள். நேற்றே பட்டு வீட்டை தூய்மைப்படுத்தி மளிகை பொருட்களை வாங்கி வைத்திருந்தாள். பிரகதி வந்து தங்க அனைத்தும் தயார்படுத்தியே வந்து சேர்ந்திருந்தாள்.
“நான் உன் வீட்டை சுத்தி பார்க்கலாமா?” என்று கேட்டு பதில் தரும் முன் மாடிக்கு அடியெடுத்து வைத்தான்.
“அதான் பதில் நோ சொல்லாமலே ஏறிட்டியே அப்பறம் என்ன கேட்கற.” என்றாள்.
“நான் இல்லாம தனியா இருக்க போற. இதுவரை என்னோட அருகாமை என் வாசம் என் சுவாசம் என்று ஒரே ரூம்ல வாழ்ந்துட்டியா… அதான் இங்க எப்படினு பார்க்கலாம்னு. நாட் பேட்… நம்ம ரூமோட கம்பேர் பண்ணினா மூன்றில் ஒரு பாகம். எனிவே ஸ்வீட் ட்ரீம்ஸ் வருமானு தெரியலை. பட் எனக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ் வரும்.” என்றவன் அவளை தன் பக்கம் இழுத்து இதழை முத்தமிட்டான்.
பிரகதி அடிப்பதை எல்லாம் பொருட்படுத்தாமல் சிறிது நேரம் ஆக்கிரமித்து விடுவித்தவன் என்னை விட்டு போற… இது கூட நினைவுப்படுத்தாம இங்கயிருந்து போனா… எப்படி? இந்த ரூம்ல இது மட்டும் தான் நினைவு வரணும் உனக்கு.” என்று அழுத்தமாய் கூறி நகர்ந்தான்.
ஹாலில் வந்தவனிடம் காபியை நீட்ட, “ஸ்வீட் சாப்பிட்டு காபி குடிச்சா நல்லாயிருக்காது. உங்க பிரகதிக்கே கொடுங்க. அவ தான் இப்ப வேற சுவையை தேடிட்டு பிரஷ் பண்ணிட்டு இருப்பா” என்று சென்றான்.
பட்டுக்கு குழப்பமெடுக்க பிரகதி அறைக்கு வந்து பார்க்க, விதுரன் கூறியது போல பிரஷ் செய்து கொண்டிருந்தாள்.
எதுவும் கேட்கவும் அஞ்சி காபியை வைத்து விட்டு கீழே இறங்கிவிட்டாள்.
அன்றைய இரவு பிரகதி அவளது அறையில் நிம்மதியாய் இருந்தாள்.
விதுரன் அவனது அறையில் உறக்கமின்றி தவித்தவன் பிரகதியின் போனிற்கு அந்த வீடியோவை அனுப்பி விட்டு காத்திருந்தான்.
அவன் எதிர்பார்த்தது போலவே இரண்டு நொடியில் போன் செய்து விட்டு கத்து கத்தினாள்.
“இடியட்… முதல் தடவை சேலை கட்டியப்ப டிரஸ் மாற்றியதை வீடியோ எடுத்து வச்சிருக்க… நான் அப்ப உன் ஓய்ப் தானே. ஓய்பை கூட இப்படி தான் பண்ணி வைப்பியா? டெலிட் பண்ணு டா.” என்று கத்தினாள்.
“நீ யாருடி என்ன மிரட்ட. பிரப்பிட்டான வீடியோ. நான் இரசிக்க வச்சிருக்கேன். என்ன நான் மட்டும் இரசிச்சா உனக்கு தெரியாதே. நான் இரசிக்க உன் வீடியோ இருக்குனு நீ தெரிந்துக்க வேண்டாம்.” என்றான்.
“ஓ… என்னை வெறுப்பத்தி சந்தோஷப்படறியா… ஜஸ்ட் சேரி தானே கழட்டினேன். நீயே வச்சிக்கோ. ஐ டோண்ட் மைண்ட். கம்பிளென் தந்து கம்பி என்ன வைக்கிறேன்.” என்றதும் “ஹாஹா சூப்பர் ஜோக்.. நான் இப்பவே டெலிட் பண்ணிடுவேன்” என்றான்.
“என்னை நிம்மதியா இருக்க விடமாட்டியா?” என்று திட்ட, நீ நிம்மதியா இருக்க. அந்த ரூம்ல தூங்க முடியாம தவிச்சி துடிப்ப” என்றதும் போனை கத்தரித்தாள்.
சுவிட்ச் ஆப் செய்து விட்டு உறங்க ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் காலையில் போனை ஆன் செய்ய விதுரனிடம் லிப் எமோஜி போட்டு “👄குட் மார்னிங் டெவில் குயின்” என்று அனுப்பினான்.
“யு டெவில் கிங்” என்று போனை மீண்டும் ஆப் செய்து விட்டு புது போன் மற்றும் புது சிம் வாங்கினாள்.
போன் சிம்மை தனது வீட்டிலேயே விட்டு விட்டு பூட்டிவிட்டு பட்டுவிடம் வீட்டை பத்திரமா பார்த்துக்கோ பட்டு. நான் கிளம்பறேன்.” என்று ஒரு லக்கேஜை எடுத்து புறப்பட்டிருந்தாள்.
பட்டு எதுவும் கேட்கவில்லை. மாதம் சம்பளம் வரப்போகின்றது. பாவம் அம்மா இல்லாத பிள்ளை படித்த ஊருக்கே போகின்றாளென முடிவெடுத்து வழியனுப்பினாள்.
அங்கிருந்து கிளம்பி அனிலிகாவின் முன் வந்து நின்றாள்.
அனிலிகா ஒரு வருடம் கழித்து வந்தவளை கட்டி அணைத்து வரவேற்றாள்.
“உன்னோட மாம் டேட் எங்க?” என்றதும் “அவங்க இங்க இல்லை பிரகதி. அவங்க வேற வேற மேரேஜ் பண்ணிட்டு போயிட்டாங்க.” என்றாள் சலனமேயில்லாமல்.
கூல்ட்ரிங்க்ஸ் எடுத்து கொடுத்து சொன்னவளை அதிர்ந்து பார்க்க, “யா… பிரகதி. தம்பி பற்றி உனக்கு தெரியுமே. எப்ப பாரு துறுதுறுனு. பெட் மேச் வச்சான். தண்ணிக்குள்ள ரொம்ப நேரம் இருப்பதா… அவனோட பேட் டைம் தாக்கு பிடிக்க முடியலை. இறந்துட்டான்… அதோட அப்பா உன்னால தான்னு அம்மாவை திட்ட, அம்மா உன்னால தான்னு அப்பாவை திட்ட சண்டை பெருசாச்சு.
தனி தனியா மேரேஜ் பண்ணிட்டு என்னை தனியா விட்டுட்டு போயிட்டாங்க. எனக்கு தான் ஆல்ரெடி ஸ்வீட் சிக்ஸ்டின் மேல தாண்டிடுச்சே.” என்ற நேரம் பிரகதிக்கு புரிந்தது. அனிலிகாவும் தன்னை போல தனிதீவாக இருக்கின்றாளேயென்ற எண்ணம் வந்தது.
“டோன்ட் ஓர்ரி அனிலிகா. நான் சப்போர்ட் இருப்பேன் மா. மனிதனுக்கு ஒவ்வொரு விதத்துல ஒவ்வொர் சோகம்” என்றாள்.
“ஒரு விதத்துல தீபிகாவை நினைச்சா சந்தோஷமா இருந்தது. பார்றேன்… குழந்தைக்காக சசிதரனோட வாழ ஆரம்பிச்சிட்டா.” என்று அனிலிகா கூற பிரகதி அமைதியாய் மாறிப்போனாள்.
அடுத்த நாள் விதுரன் பட்டுவிடம் எப்ப போனா? என்று கேட்டு தலையை தாங்கினான்.
எப்படியும் அனிலிகா கூட இருப்பா.. என்று நம்பினான். ஆனாலும் பிரகதியை தேடி விளையாட்டு காட்டவில்லை.
நாட்கள் சென்றால் தன்னை தேடி வருவாளென நம்பினான்.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Intresting
Atheppedi avala thoonga kooda vidama torcher pannavan… analika va thedi ponathu theriama erukkum🤔🤔🤔 may vittu pidika nenaikirano????? Egarly waiting for next ud’s
Nice epi👍👍
vitu poitla ipo vithur nilamai than mosam