துஷ்யந்தா-32
பிரகதி முடிவாக கிளம்புவதாக அனைத்தும் பேக் செய்து எடுத்து வைத்தாள்.
“என்ன பண்ணற… குழந்தையை கூட்டிட்டு திரும்ப வருவல? பிறகு எதுக்கு எல்லா திங்க்ஸும் எடுத்து வைக்கிற?” கேட்டாள் அனிலிகா.
“உனக்கு இன்னும் புரியலை… குழந்தையை தூக்கிட்டு போனது விதுரன். இனி இங்க வரவிடமாட்டான். அவன் வீட்டுக்கு போறது ஒன்வே பாதை.” என்று கூறினாள்.
“போலிஸ்ல கம்பிளென் கொடுப்போம் பிரகதி. கோர்ட் மூலமா உன் குழந்தை உனக்கு கிடைக்கும். அவசரப்படாதே. அதுவும் பெண் குழந்தை தாயிடம் வளரணும்னு என்றது ரூல்ஸ்.” என்றுரைத்தான் எட்வின்.
“ஒன்னும் பண்ண முடியாது எட்வின். கசந்த உண்மை அது தான் நிஜம். அதனால நான் போறது தான் சரி.
என்ன… முன்ன அவனை நான் அவனை படுத்தி எடுத்திருக்கேனே தவிர பழி வாங்கலை. இந்த பிரகதி நிம்மதியா வாழ்ந்தவளை குழந்தையை தூக்கிட்டு போய் என் மனசுல பழியை விதைக்கிறான். இனி நான் அவனோட டெவிலா முழுசா… மாறப்போறேன். அவன் என்னை படுத்திய பாட்டை அவனுக்கு திரும்ப கொடுப்பேன்.” என்று கிளம்பினாள். நினைத்ததற்கு மாறாக மாறுவாளென அறியாமல்.
அனிலிகா எட்வின் இருவருமே பிரகதியை வழியனுப்பி வைத்தனர்.
தற்போது குழந்தையின் நினைவில் விமானம் ஏறியப்பின் அழுதாள்.
பத்து மாத குழந்தை. அவளை யார் பார்த்துக் கொள்கின்றனரோ. கேர்டேக்கர் வைத்து பராமறிப்பான். ஆனாலும் என்னை தேடி அழுவாள்.
இங்கு ஆதித்யாவை காண வந்தப்பொழுது அனிலிகாவிடம் விட்டு விட்டு வந்தாலும் குழந்தை தன்னை தேடியதை எத்தனை முறை அனிலிகா கூறினாள்.
அப்பொழுது எட்டு மாத குழந்தை என்பதால் பழங்களை வேகவைத்து மற்றும் செரலாக் போன்றவற்றை கொடுத்து குழந்தை அனிலிகாவிடம் இருந்தாலும் முகத்தை பார்த்து தன்னை தேடியது எட்வின் எத்தனை முறை போன் செய்தான்.
நேற்று குழந்தையை தூக்கி சென்றதில் இன்று மாலை வரவும் ஒரு நாள் ஆனது. புது இடம் புது மனிதரிடம் குழந்தை என்ன செய்கின்றாளோ? குழந்தைக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால்…
குழந்தைக்கு என்ன கொடுத்திருப்பார்களோ? அழுதழுது தன் குழந்தை மூச்சு வாங்கி அன்னையை போல மருத்துவமனையில் சேர்த்திருப்பானோ இப்படி தான் அச்சம் சூழுந்து ஆட்டி படைத்தது.
அப்படியேதேனும் நடந்தால் விதுரனை மீண்டும் கத்தியெடுத்து குத்தவும் தயங்க மாட்டாள். போன முறை போல கை கட்டி வேடிக்கை பார்ப்பவள் அல்ல இந்த பிரகதி.
விமானப் பணிப்பென் வந்து ஆர் யூ ஓகே மேம்?” என்று கேட்கும் அளவிற்கு பிரகதி கண்ணீர் வெளியேறியிருந்தது.
“யா..” என்று கண்ணீரை கைக்குட்டையால் ஒற்றி எடுத்தாள்.
அடுத்த நாள் காலை சென்னைக்கு லேண்டாகியிருந்தாள்.
வேகமாக லக்கேஜை எடுத்து வெளிவந்து நின்ற கணம் கதிர் நின்றிருந்தார்.
முகமெல்லாம் முத்து பல் வரிசை தெரிய தன்னை அழைத்து வர வந்தவரை பிரகதி எதிர்பார்க்கவில்லை.
ஆனால் திட்டமிட்டவனுக்கு தான் வருவது தெரியாதா? அவனின் காரோட்டியை அனுப்பியுள்ளான். விதுரனுக்கு தான் வருவேன் என்று தெளிவாக தெரிகிறது.
கதிர் காரோட்ட அமர்ந்தவள் போனில் இறங்கிவிட்டதாகவும், தான் வருவேனென விதுரன் காரை அனுப்பியதாகவும் அனிலிகாவுக்கும் எட்வினுக்கும் குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“எதுனாலும் போன் பண்ணு” என்று எட்வின் அனுப்பினான். ஓகே டியர் டேக் கேர்” என்று அனிலிகா அனுப்பினாள்.
“நீங்க திரும்ப வருவது ரொம்ப சந்தோஷமா இருக்கு மேம்.” என்றான் கதிர்.
நான் எங்கயா வந்தேன். அவன் வரவழைச்சிட்டான் என்று கடுப்பில் நிமிர்ந்தாள்.
“மேம் சாருக்கு குழந்தை பிறந்த விஷயத்தை மறைச்சது வருத்தமா இருக்கு.” என்றார்.
“கதிர் இங்க நானா வரலை. உங்க சார் இப்பவும் என் பொண்ணை கடத்தி தூக்கிட்டு வந்து மிரட்டி தான் வரவச்சிருக்கார்.” என்று கடுப்பில் மொழிந்தாள்.
“அவர் குழந்தையை கடத்தலை மேம். அவரோட பொண்ணு அவரோட இருக்க ஆசைப்பட்டிருக்கார்.” என்றான் திருத்தமாக.
உங்களை எல்லாம் திருத்த முடியாது.” என்று கைகட்டி சாய்ந்து கொண்டாள்.
வீட்டிற்கு வந்ததும் வாசலில் காலெடி எடுத்து வைக்க சங்கடமாக நின்றாள்.
கதிரோ பெட்டியை எடுத்து கொண்டு வர தாமதமாக ஆனது.
“வலது இடது எதுனாலும் ஓகே. உனக்கு என்ன பார்மாலிடிஸ். ஜம்ப் பண்ணி கூட வரலாம்.” என்றது விதுரன் குரல்.
பல்லை கடித்து குழந்தையை வாங்கி அப்படியே செல்ல வேண்டுமென்று துடித்த மனதை அடக்கி நிமிர்ந்தாள்.
விதுரனின் இடது கையில் தன் குழந்தையும் வலது கையில் கூலிங்கிளாஸை மாற்றியபடி மாடியிறங்கி வந்து கொண்டிருந்தவனை கண்டு பற்றி கொண்டு வந்தது.
குழந்தை முகமலர்ச்சியோடு இருப்பதை கண்டதும் உள்ளே நுழைய தயங்கி வீம்பு செய்ய ஆரம்பித்தாள்.
“நானே உள்ள வருவதற்கு முன்ன ஒரு டச் கொடுக்கணும்னு இருந்தேன். நாட் பேட்… நீயே வராம நிற்கற.” என்றவன் வாக்கரில் குழந்தையை அமர வைத்துவிட்டு தன் பேக்கெட்டிலிருந்து, பிரகதி இங்கிருந்து போன பொழுது கழட்டி வைத்த மாங்கல்யமும் மெட்டியையும் தற்போது எடுத்து அவள் முன் காட்டி, உன்னோட பிளாட்டின அசசரிஸை எல்லாம் எடுத்துட்டு இதை கழுத்துல மாட்டிக்கிட்டு, உள்ள வரணும். ரூல் நம்பர் ஒன்” என்றான்.
பிரகதி நிமிர்ந்து என்ன கண்டிஷனை திரும்ப நினைவுப்படுத்தறியா என்றது போல எரித்தாள்.
“ஓகே நீ ஜெர்னரி பண்ணி டயர்டா வந்துயிருப்ப. நானே மாட்டி விடறேன்.” என்றவன் தாலியை அணிவித்தான்.
அணிவித்தவன் அடுத்த நொடி பிளாட்டின செயினை அறுத்தும் எறிந்தான்.
“எவன் எவன் ரெகமண்ட் பண்ணின ஜாப்ல நீ உழைச்சி வாங்கினாலும் எனக்கு பிடிக்கலை.” என்றான். மெட்டியை போட மண்டியிட்டவன் ஆனால் போட பிடிக்காதவனாய் எழுந்தான்.
லாஸ்ட் டைம் உன்னோட திமிரு எனக்கு நிமிர்வா பட்டுச்சு எனக்கும் பிடிச்சிருந்தது. அதனால உன் கால் மடில வச்சி போட்டு விட்டேன். பட் திஸ் டைம்… என் குழந்தையை பற்றி மூச்சுவிடாம இருந்ததால் உன்னோட திமிர் எனக்கு திமிராவே படுது. அதனால நீயே போட்டுட்டு உள்ள வர்ற.” என்று திணித்தான்.
அதனை கையில் வைத்து கடுப்போடு பார்த்து ஹாண்ட் பேகில் போட்டுவிட்டு குழந்தையை நோக்கி ஓடினாள்.
அன்னையை கண்டதும் மகிழ்ந்த குழந்தை சிரிக்க, அள்ளி அணைத்து முகமெங்கும் முத்தமிட்டாள்.
அப்பொழுது உடல் அணலாக கொதிக்க, “தன்வீயை என்ன பண்ண? உடம்பு கொதிக்குது.” என்றாள்.
“ஏய்… வந்ததும் என் மேல தப்பு கண்டுபிடிக்கற… அம்மாவை விட்டு குழந்தை இருந்தா என்னாகும். ஜஸ்ட் பீவர்.” என்றான்.
“வாட்…. ஜஸ்ட் பீவர்னு சொல்லற… சே.. உன்னிடம் போய் செண்டிமெண்ட் பேசறேன் பாரு.” என்று குழந்தையை தூக்கிட கொண்டு வெளியே நடந்தாள்.
“எங்க ஓடற… என் குழந்தையை கொடுத்துட்டு போ. குழந்தை திரும்பி உன்னிடம் கிடைக்காது.” என்றான்.
“டாக்டரிடம் காட்டாம இருக்க..” என்று வெளிக் கதவருகே நடக்க மேக்னா ஒரு டாக்டரோடு வந்து கொண்டிருந்தார்.
மேக்னா பிரகதியை பொருட்படுத்தாமல் குழந்தையை வாங்கி குழந்தை மருத்தவரிடம் கொடுத்தாள்.
அங்கிருந்த பெரிய சோபாவில் குழந்தையை கிடத்தி ஆராய்ந்து பார்த்தார்.
“ஜஸ்ட் பீவர்… எழுதி கொடுத்த டானிக் கொடுங்க உங்க லிட்டில் குணமாகிடுவா.” என்று கூறவும் நன்றி கூறி விதுரன் விடைக் கொடுத்தான்.
மேக்னாவோ விதுரனிடம் “விதுரன் குழந்தையை கொடுத்துட்டு நிற்காதே.” என்று கூறி விட்டு நகர்ந்தாள்.
பிரகதிக்கு எரிச்சலாய் இருந்தது. இப்படி எல்லாம் அவமானம் நேரவேண்டுமாயென்று.
குழந்தையை தூக்கி கொண்டு கீழே இருக்கும் அறைக்கு போக முடிவெடுக்க, மூன்று கதவும் தாழிடப்பட்டது.
“நான் இங்க தங்கனும்னா எனக்கு கீழே அறை அரேஞ்சு பண்ணுங்க.” என்றாள்.
“முடியாது என் குழந்தை என்னோட தான் இருக்கணும். என் கூடவே..” என்று தூக்கி கொண்டு மாடிக்கு விரைந்தான்.
மருந்து சீட்டில் எழுதியது விதுரன் மூலமாக தர்மாவுக்கு செல்ல, அவன் வாங்கி கொண்டு பிரகதியிடம் நீட்டினான்.
அதனை எடுத்து கொண்டு மாடிக்கு சென்றாள்.
“நீ வெளியே போ” பாப்பாவுக்கு சாப்பிட கொடுக்கணும்” என்றாள்.
“இப்ப தான் ஹாட் வாட்டரோட செரலாக் கொடுத்தேன்.” என்று குட்டி மெத்தையில் குழந்தையை விட்டு, விளையாட்டு பொம்மைகளை எடுத்து போட்டான்.
“நான் பசி அமர்த்தணும். தயவு செய்து போ அங்க” என்றதும் நேற்றிலிருந்து அமுதம் கொடுக்காததால் சேலை பக்கவாட்டு மார்பகம் ஈரமாகியது.
விதுரன் அது புரியாமல், “நான் குழந்தையோட தான் இருப்பேன்.” என்றான் பிடிவாதமாக.
“நான் பீட் பண்ணணும். நீ இருக்கணும்னு அவசியமில்லை. ஏன் என்னை சித்திரவதை செய்யற. ஒரு தாய் குழந்தைக்கு பாலுட்டறது நிம்மதியா கொடுக்கணும். பயத்தில இல்லை… என் குழந்தையை பிஞ்சிலேயே பயந்தாங் கொள்ளியா மாற்றிடாதே.” என்று கத்தினாள்.
விதுரன் அமைதியாய் எழுந்திருந்தான். “ஐ அம் சாரி. நீ பீட் பண்ணுவனு நினைக்கலை. என் குழந்தை பால்ல தான் வீரமா வளரணும்னு இல்லை. ஆல்ரெடி என்னோட ரத்தத்துக்கு பயமின்னா என்னனு தெரியாது.” என்று மிடுக்காக பதில் தந்து வாசல் வரை சென்றவன், நான் இருக்கும் போதும் பீட் பண்ணலாம் தப்பில்லை. என் பார்வை தப்பா இருக்காது. உன் எண்ணம் என்னை தப்பா நினைக்கும்” என்றவன் வெளியேறி விட்டான்.
தன்வீக்கு அமுதம் பருக கொடுத்ததும் தன்னிலிருந்து ஒரு உணர்வு வெளியேற துவங்கியது.
அது தாய்மையின் ஆனந்தமா? வரமா? பிறவி பயனா? இத்தியாதி இதென வரையறுக்க இயலாத உணர்வை அடைந்தாள்.
பால் குடித்து முடித்த சமயம் தன்வீ உறங்க துவங்கியிருந்தாள்.
அவளை தொட்டிலில் போன்றதொரு சிறு மெத்தையில் போட்டு விட்டு அம்மெத்தையின் பக்கவாட்டு ஜன்னல் கதவை தாழிட்டாள். குழந்தை எழுந்தோ, உருண்டோ வெளியே விழாமல் இருக்க அது உபயோகமாக இருந்தது. இது தன் வீட்டில் இருப்பதை போன்றே உள்ளதே என்று அதன் பின்னரே குழந்தை தன்வீயின் உடைமையான விளையாட்டு பொருட்கள் முதல் மெத்தை, வாக்கர், கவனித்தாள். எல்லாம் அவள் முன்பு உபயோகித்தவை போன்றதையே வாங்கி வைத்திருக்கின்றான்.
குழந்தைக்கு திடுக்கென புது இடமென வராமல் இருக்க பார்த்து பார்த்து அலைந்து வாங்கியிருப்பானோ என்று புரிந்தது.
கண்களை துடைத்து பயணக் களைப்பில் குளிக்க சென்றாள். பாத்டப்பில் தண்ணீர் முழுமையாக பிடித்து வைத்து விதுரன் அவளை அதில் தள்ளி விளையாடிய நிமிடங்கள் இரண்டு மூன்று நொடி நினைவிலிருந்து வெளியே வர செய்தது.
அதனை புறம் தள்ளி ஷவரில் குளித்து வெளியே வர, விதுரன் குழந்தையை இமைக்காமல் பார்த்து ரசித்தான்.
“என் குழந்தைக்கு எந்த மச்சமும் இருக்காது. வேண்டுமின்னா… டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து உன் குழந்தை தான்னு முடிவெடு.
ஓ… உனக்கு தான் அவ ஏற்கனவே உன் ரத்த வகையினு தெரிஞ்சு போச்சே. அப்ப ஏற்கனவே டிஎன்ஏ டெஸ்ட் பார்த்து தான் வச்சியா?” என்றாள் சுறுக்கென.
“தீபிகாவும் வேறயொருத்தனோட பிள்ளையை பெற்றுக்கலை. நானுமே..”
விதுரன் ஆவேசம் அடைந்தவன் எழுந்து அவள் அடுத்து பேச வரும் முன் அறைந்து நின்றான்.
“நானுமே…” என்றதும் மீண்டும் அறை விழுந்தது.
“நானும் வேறயொருத்தனோட குழந்தையை சுமக்கலை.” என்று அடிவாங்கியும் பதில் கூறி மூச்சிரைக்க அமர்ந்தாள்.
விதுரனுக்கு அங்கு இருக்க பிடிக்காமல் மடமடவென அறையிலிருந்து வெளியேறியிருந்தான்.
-விதுரகதி தொடரும்.
- பிரவீணா தங்கராஜ்.
Interesting👍👍
Sema twist. Vithuran unexpected man. How he find the kid? Intresting
wonderul epi interesting