Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -34

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -34

துஷ்யந்தா-34

     இரவு அறைக்கு வந்த நேரம் பிரகதி தயங்கி நின்றாள். அவளின் கால் விரல்கள் நடுங்கி முன்வர, உடை மாற்றி வந்தவன் “என்ன சடனா சேரி?” என்றான்.

   “நீங்க தான்.. பச்..” என்று எண்ணங்களை வெளியிட முடியாதவளாய் நின்றாள்.

     “ஓ… டிவோர்ஸ் வேண்டும்னு.” என்று விதுரன் அவளை உச்சியிலிருந்து பாதம் வரை அணு அணுவாய் இரசித்தான்.

       “அமைஸ்சிங்… சாரி சேரி ஓர்க், உன்னோட அலங்காரம் இதெல்லாம் சொன்னேன்.” என்றவன் வெறுப்பாய் கட்டிலில் விழுந்தான்.

      பிரகதி நிற்கவா அமரவா… இவன் என்ன ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் நெடுமரஜானாக சரிந்து கிடக்கின்றான்.

     “நீ தானே தயாராக சொன்ன?” என்றாள்  வார்த்தை நெஞ்சு குழி வரை வந்து விட்டது. வெட்கம் விட்டு கேட்கவும் முடியவில்லை.

   விதுரன் பார்வையில் அது வெட்கமாக செல்லுமோ அருவருப்பாக சென்று விடுமோ என்று அஞ்சினாள்.

   ஆனால் அவனுக்கோ தீபிகாவை சற்று முன் சசி வீட்டில் பார்த்த விதம் கண் முன் வந்து, இவளுக்கும் டிவோர்ஸ் தான் வேண்டுமா? என்ற அதிருப்தி மட்டும் உழன்றது.

   பிரகதி அமைதியாய் அதன் பின் எப்பொழுதும் போல வலது பக்கம் விதுரனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டாள்.

       விதுரன் இரண்டு விநாடி எண்ணங்களின் புள்ளியில் பயணித்து பிரகதியை கவனித்தான்.

      என்னயிருந்தாலும் அவளை ஏமாற்ற மனமில்லை. அதே நேரம் முதல் கூடலுக்கு இசையவும் தற்போது முரண்பட்டது.

      மெல்ல அவன் இடக்கரத்தை இடையில் வளைத்து தன் பக்கம் நெருக்கினான்.

    இவன் என்ன கண்டுக்கலை. என்னை ஏங்க வைக்க ட்ரை பண்ணறானா. பிரகதி நீயா அலங்காரம் பண்ணி வந்து அசிங்கப்படறியே.. என்று உள்ளுக்குள் சோகமானவள் திடீரென விதுரன் கரம் வெற்றிடையில் ஊர்ந்திடவும், அவன் வேறு தன்னை அவனோடு நெருக்க கண்டு இதயம் படபடத்தது.

      “முதல் நாளே பயமுறுத்த விரும்பலை பிரகதி ஸ்டெப் ஸ்டெப்பா போகலாம். இன்னிக்கு அணைச்சிக்கறேன்.” என்று அவளை தலையணையாக பாவிக்க ஆரம்பித்தான்.

       அவனின் கைகள் வெற்றிடையை உரச, வெட்ப மூச்சுக்காற்று முதுகை சூடாக்க, பிரகதி நெளிந்தாள்.

    “அன்கம்பர்டெபிளா இருக்கா? அப்படியிருந்தா சொல்லிடு.” என்று கூறவும் தானாக தலை இல்லையென பதில் தந்தது.

     ஆனாலும் நெளிந்து கொண்டேயிருந்தாள்.

    விதுரனுக்கு மெத்தென்ற தலையணையை அணைத்த இதம் உணர உறங்கிட செய்தான்.

    பிரகதி நெடுநேரம் நெளிந்து பின்னர் அவனின் கரங்களை தீண்டினாள். ஏதோ ஜென்ம ஜென்மமாய் பற்றிய கரமாக தோன்ற பகலில் கேட்ட துஷ்யந்தா பாடலை மனதிலே ஓட்டிக்கொண்டே இமை மூடினாள்.

      அதிகாலை விதுரன் மார்பில் தலை வைத்து உறங்கியிருந்தாள்.

      லப்டப் ஓசை அந்த நிசப்தத்தில் தெளிவாய் கேட்க அவன் நெஞ்சில் காதை வைத்து அனுபவிக்க துவங்கினாள்.

    விதுரனோ விழித்துக் கொண்டிருந்தான் ஆனாலும் அவளை எழுப்பவோ அவன் எழுந்துக் கொள்ளவோ மனமின்றி அவளின் அருகாமையை விரும்பினான்.

     நெடுநேரமாகவும் விதுரனுக்கு தர்மா போன் அழைப்பு வரவும் விலகினான்.

       பிரகதியும் கூடவே எழுந்தவள் கையை பிசைந்து நின்றாள்.

     “தர்மா.. கிளம்பிடுவேன்… நோ நோ ஷெட்டுலை மாற்றிடாதே. இரண்டு இடத்துலயும் கால் பதிச்சிடலாம்.” என்றான்.

   அந்தபக்கம் தர்மாவோ ஏதோ கூற “அதெல்லாம் பார்த்துக்கலாம்.” என்று வைத்தான்.

     மடமடவென கிளம்பியவன் எப்பொழுதும் காட்டும் ‘டெவில் கிங்’ முகத்தை கூட காட்டவில்லை. பிரகதி மெத்தையிலேயே அவன் செய்கைகளை கவனித்தாள்.

    அவளுக்கு அப்போது அந்த வரிகள் தான் நினைவு வந்தது. என்னையறிந்தால்… என்ற அஜித் படத்தில்

     ‘எந்த பக்கம் நிற்கின்றாயோ… அந்த பக்கம் கண்கள் போகும்,
முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆகும்…’ என்ற வரியில் உதடு முறுவல் பூ பூக்க, விதுரன் திரும்பினான்.

   இவயெதுக்கு என்ன பார்த்து சிரிக்கிறா… என்றவன் பிம்பத்தை கண்ணாடியில் ஒருமுறை பார்க்கவும் செய்தான். எதுவும் வித்தியாசம் தெரியாது போக அவளை திரும்ப பார்த்தான்.

    பிரகதி வெட்கம் கொண்டு சடனாக போர்வை போர்த்தி முகத்தை மறைத்து படுத்து கொள்ள, விதுரன் தலையை உலுக்கி புறப்பட்டிருந்தான்.

       தன்னை அவள் இரசிக்கின்றாளென அவன் அறியாமல் போனான்.

பிரகதியோ பொறுமையாக எழுந்தமர்ந்து டிவோர்ஸ் கேட்டுட்டு அவனை ரசிக்கிற என்ன பிரகதி பைத்தியம் பிடிச்சிடுச்சா. அம்மா இறந்ததில் இவன் மட்டும் தான் இனினு உன் மனசு அவன் பக்கம் சாயுதா? இல்லை அம்மாவே இரண்டு மூன்று முறை விதுரன் மாடியேறவும் மேல போ என்று முக மலர கூறியதன் மாற்றமா? அம்மாவுக்கு அவனை பிடிச்சிருக்கு… அவனை பார்த்து கடைசியா பயப்படலை. சந்தோஷமா பூரிச்சி நின்றாங்க.

     பச் எனக்குமே இப்ப எல்லாம் விதுரன் என்ற தனிப்பட்டவனை பிடிக்குது என்று தனியாக மெத்தையில் உருண்டாள்.

     பிறகு கீழே வந்த நேரம் ஆதித்யா வரவேற்றார்.

   “என்ன தாத்தா… அவர் ஏதோ டென்ஷனா சுத்தற மாதிரி இருக்கு.” என்று கேட்டாள். அவளிடம் என்ன சொல்வது? விதுரன் சென்ற பொழுது பிரகதியிடம் எதுவும் கூறி அவளை வேற கவலைப்பட வைக்காதிங்க தாத்ரு. தீபிகாவா இவளுக்கு போன் பண்ண மாட்டா. அதனால பிரகதியாவது நிம்மதியா இருக்கட்டும்.’ என்ற விதுரனின் பேச்சை முன்னிலை படுத்தி கொண்டு தவிர்த்தார்.

   “அவனுக்கு என்னம்மா டென்ஷன்.. என்னோடதும் ரன் பண்ணினான். இப்ப சசியோடதும் என்று ஒரே நேரத்துல இரண்டு மீட்டிங் அடுத்தடுத்து. இனண்டுமே வேற வேற இடம். இங்க முடிச்சிட்டு அங்க போவதற்கே நேரம் பம்பரமா இருக்கு. சசி மட்டும் கொஞ்சம் தைரியமா நின்றா, இவன் சற்று நிம்மதியா இருப்பான். எங்க…? பேச பயந்தே தவிர்க்க விதுரன் போறயிடமெல்லாம் வம்பு பேச்சும் வீம்பும் வளர்ந்து தான் தொழிலும் வளருது.” என்றார்.

   நேரம் காலமெல்லாம் தெரியாமல் பிரகதி மனமோ ‘காதலும் வளருது’ என்று எண்ண அதற்கு பின் அங்கு நின்றால் தன் முகச்சிவப்பு காட்டி கொடுக்குமென்று எங்கயாவது வெளியே செல்ல யோசித்தாள்.

     தன் வீட்டிற்கே சென்று சற்று நேரம் உலாத்தினாள்.

    மாலையானதும் வீட்டுக்கு வந்தப்பொழுது விதுரன் கால் மேஸ் கால் போட்டு படம் பார்த்திருந்தான்.

     ஆதித்யாவோ “இதோ பிரகதி வந்துட்டா.” என்று கூறி சாப்பிட அமர்ந்தனர்.

        பிரகதி உரிமையாய் பரிமாறி சாப்பிட எடுத்து வைக்க, வியப்பாய் உண்டான்.
   அவள் இதுவரை இப்படி செய்ததில்லை. ஆதித்யாவோ மனம் குளிர, “நீ நல்லாயிருக்கணும் டா” என்று சாப்பிட்டு அறைக்கு சென்றார்.

     விதுரன் அறையில் தனியாக நடந்தவன் முன் அக்ரிமெண்ட் பேப்பர் அருகே பேனாவோடு மற்றொரு பேப்பரும் இருந்தது.

      பிரகதியின் கையெழுத்து போட்டிருந்து. கூடவே இதே ரூல்ஸ் உங்களுக்கும் இருந்தா நல்லது. இங்க வந்து ஆபிஸ், தீபிகா பற்றி பேச கூடாது. அராஜகமா அரக்கனாட்டும் நடக்க கூடாது. ஓகேனா ஓகே… ஓகேயில்லைனா ஓகேயில்லை… என்று முடித்திருந்தாள்.
  
   அதனை படித்தவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

     இறுக்கமானவனுக்கு மனம் தளர்வு கண்டதும் அவளை தேடினான்.

    அவளோ மாடியில் என்னவோ புலம்பிக் கொண்டே நடப்பதை கண்டு நெருங்கினான்.

     “நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீ என்ன உன் லாங்வேஜ்ல கத்தற. எனக்கு புரியலை. உன் ஹப்பியும் அப்படிதானா?” என்று அங்கிருந்த ஒரு பறவையிடம் கேள்விக் கேட்டு அதட்டிக் கொண்டிருந்தாள்.

    “என்னை யாரோட கம்பேர் பண்ணற?” என்ற விதுரன் குரலில் பிரகதி திரும்பினால் என்றால் விதுரன் குரல் கேட்டு அந்த பறவை பறந்திருந்தது.

     “பாரு… ஒரு குருவியை கூட விட்டு வைக்கலை நீ. நீ வந்ததும் பறந்துடுச்சு. எனக்கு பிரெண்டா யாரை தான் இருக்க விடுவ” என்று சலித்தாள். அந்த பறவை சென்ற திசையை வெறித்து கொண்டு.

     “எதுக்கு பிரெண்டா யாரை யாரையோ தேடற. நானே இருக்கேன்.” என்றவன் திண்டில் அமர்ந்தான்.

     “நீயா… பச். நீ நான் சண்டை தான் போடுவோம். என்னோட ரசனையை பகிர வாழ்க்கையை சுவாரசியம் கூட்ட உனக்கு நேரமிருக்காது.” என்று கூறியவளின் கன்னம் பற்றி திருப்பியவன் இதழை முற்றுகையிட்டான்.

    முதலில் இதழில் ஒற்றி எடுத்திடும் செயலில் பிள்ளையார் சுழியாய் ஆரம்பித்தான்.

    ஆனால் தன் இணையான ஜோடியை சந்தித்த மகிழ்வில் பிரித்திட மனமின்றி உதடுகள் வன்மையாய் கொய்ய துவங்கியிருந்தான்.

      பிரகதி மறுக்காமல் இசைந்து கொடுக்கவும் நெடுநேரமானது இதழ்கள் விடைப்பெற.

    கும்மிருட்டாய் காட்சியளிக்க, பிரகதி தன்னிலை அடைந்த அடுத்த நொடி, ”அய்யோ… இருட்டு… பேய் வரும் வாங்க கீழே ஓடிடலாம்” என்று அஞ்ச, மாடியில் ஒளி விளக்கை உயிர்பித்தான்.

       சுற்றி இவர்கள் இருக்கும் பகுதிக்கு இடைவெளியிட்டு வீடுயிருக்க, இங்கே இருவரின் செயல்கள் அப்பொழுது தான் பிரகதிக்கு புரிபட்டது.

    “அச்சசோ.. இப்ப நடந்தது யாராவது பார்த்திருப்பாங்க தானே?” என்று பயந்து கேட்டாள்.

    “இங்கயிருந்து எல்லா வீடும் தள்ளியிருக்கு. அதுவுமில்லாம மாடில இருக்கோம். புள்ளியாய் தெரிய வாய்பிருக்கலாம். ஆனா கிளாரிட்டியா நாம நிற்கறது தெரியாது.” என்றான்.

     அவனும் கீழே அவளருகே அமர்ந்து கொண்டான். பிரகதியோ கைகள் பிசைய சற்று முன் நடந்த நிகழ்வை எண்ணி நாணினாள்.

      “இங்க உட்கார்ந்துட்ட பிறகு ஏதோ தனி தீவுல இருக்கற மாதிரி இருக்கு. சுற்றி காற்று, வானம், நிலா, இருட்டு, மக்கள் இருக்கறதே தெரியலை. போட்டிங் ல இருக்கற பீல் தெரியுது. என்னோட மாடில இப்படியொரு வீயூ ரசிப்பேனு நினைக்கவேயில்லை. தேங்க்ஸ்” என்றான்.

      அவன் கூறியதை வைத்து வானம் காற்றின் குளுமை, கருமை தாளில் தூரத்தில் வெள்ளை நிலா பளிச்சென தெரிய இரசித்தாள்.

    விதுரன் அவளை தன்பக்கம் திருப்பி கண்களில் எதையோ தேட, அவளின் வெட்கம் கலந்த மொழியை தவிர எதிர்ப்பு இல்லாமல் போக சம்மதமாக முத்தத்தின் மொத்த யுத்தங்களை நிகழ்த்தினான்.

         இரவு முழுவதும் பனிமழையில் காதல் புயலிலும் கரை சேர மறுத்திருக்க நள்ளிரவு தாண்டியே ஒருவருக்கு ஒருவர் போர்வையாய் மாறி உறங்கினார்கள்.

   அடுத்த நாள் காலையில் விதுரன் முதலில் எழுந்தவன், வானத்தை கண்டு சோம்பல் முறித்து எழ முற்பட தாலியோடு அவன் செயின் பிணைந்து முடிச்சிட்டு கிடந்தது.
 
      தனது செயினை கழட்டி அவள் கழுத்திலேயே போட்டுவிட்டு அவன் உடையை எடுத்தணிந்தவன் அவளின் சேலையை அவளோடு சுருட்டி தூக்கினான். முதல் முறை சோபாவிலிருந்து தூக்கிய கணம் ‘எங்கயாவது அசையுதா பாரு’ என்று திட்டிய நினைவை எண்ணி சிரித்து கொண்டான்.

     அறையில் வந்து மெத்தையில் உறங்க வைத்து விட்டு குளிக்க சென்றான்.

     பிரகதி அதன் பின் பத்து நிமிடம் கழித்து உடல் அசதியில் முறுக்கி தலையணையை கட்டிப்பிடிக்க சட்டென இமை திறந்தாள்.
  
      பாதியாடை இருக்க மீதியாடை சேலையும் போர்வையாய் சுருட்டி தன் மீதிருக்க, எடுத்து வேகமாக அணிந்தாள்.

       இப்ப அவன் வந்தா ஷையா இருக்குமே. நான் என்ன பண்ண? என்று குழந்தையாய் நெளிந்தாள்.

    அவன் வரும் ஓசையில் போர்வை போர்த்தி இறுக கண் மூடிக் கொண்டாள்.

     அவனோ சேலை அணிந்தவளை கண்டு இதழோரம் பூரித்த நகைப்பை மறைத்து அலுவலகம் புறப்பட்டான்.

     என்றுமில்லாமல் தாத்ருவிடம் “தாத்ரு.. எனக்கு ஹாப்பியா இருக்கு. தலை கால் புரியலை.” என்றவனை விசித்திரமாக பார்த்தார்.

    ஆதித்யாவுக்கு ஒன்றும் விளங்காமல் போக பிரகதியை எதிர்பார்த்தார்.

     “எங்கடா பேத்தியை காணோம்?” என்று கேட்டு வைத்தார்.

      “ம்ம்.. எவ்ளோ லேட்டா வர்றாளோ நான் அவ்ளோ ஹாப்பி தாத்ரு.” என்று உரைத்தான்.

    “என்ன டா பேசற?” என்று கேட்டவருக்கு, “உங்க குட்டச்சி ஜோடி சொல்லலையா… இது விதுரன் சீக்ரேட் அப்படி தான்” என்று அளவில்லா ஆனந்தத்தோடு புறப்பட்டான்.

     “என்ன சீக்ரேட்டோ…  ஆனா நீ இப்படி இருப்பது பார்க்க சந்தோஷமா இருக்கு டா” என்றான் அம்முதியவர்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

4 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -34”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *