துஷ்யந்தா-43
பிரகதி காலையில் மிகவும் சோர்வாக கீழே இறங்கினாள்.
அனிலிகா எட்வின் இருவரும் காபி குடித்து கொண்டே பிரகதியை கண்டனர்.
“தன்வீ எழுந்துக்கலையா?” என்று கேட்டாள் அனிலிகா.
“ம்… இல்லை. விதுரன் அவள் முழிச்சா எழுப்பி விடுவார்” என்று கூறினாள் பிரகதி.
“ஏய்… என்னப்பா டல்லா இருக்க. விதுரனுக்கு நாங்க வந்தது பிடிக்கலையா?” என்று கேட்டாள். எட்வினுக்கும் அதே தோன்றியது. தன் முகத்தில் குத்து விட்டானே.
“சேசே… அப்படியில்லை. அவன் பாட்டுக்கு தூங்கறான். அவனுக்கு என்ன அவன் நினைப்பது எல்லாம் நடக்குதே.” என்றாள். அதில் என்னவோ பொருள் பொதிந்து இருந்தது போல அனிலிகவுக்கு.
இந்த வாழ்வை இனி மாற்ற இயலாது. “பிரகதி கேக் மாவு இங்க இருக்கா?” என்று அனிலிகா கேட்டாள்.
“தெரியாதே… எதுக்கு மா?” என்றாள்.
“வாட் பிரகதி தன்வீ பெர்த்டே வரப்போகுது. நான் தானே கேக் செய்வேன்னு சொன்னேன்.” என்றாள்.
பிரகதி காலெண்டரில் பார்வை பதித்தாள்.
“அதுக்கு அவசியம் இல்லை. ஆல்ரெடி ஹோட்டலில் பெர்த்டே டெகரேஷன் முதல் எல்லா ஏற்பாடும் விக்னேஷ் கவனிச்சுக்க சொல்லிட்டேன்.” என்று தன்வீயை தூக்கி கொண்டு விதுரன் வந்தான்.
விதுரனின் தலை முடியை பிஞ்சுக் கைவிரலில் கலைத்து கொண்டே தன்வீ சேட்டை செய்தாள்.
பிரகதியோ இவனுக்கு நினைவுயிருக்கு எனக்கு மறந்திருக்கே. அச்சோ… என்று வருந்தினாள். அவளுக்கு இங்கு வந்ததிலிருந்து தலைகால் புரியவில்லை. தலைக்குள் விதுரன் என்பவன் மட்டும் ஆட்சி செய்கின்றான். தன்வீ அவள் பாட்டிற்கு சமத்தாக மாறியிருந்தாள்.
“உங்களுக்கு எப்ப” என்று நிறுத்தினாள்.
தான் எங்கே இருந்தோம் என்று எப்படியோ அறிந்தவன். பிறந்த நாளை அறியாமல் இருப்பானா?
“என் பொண்ணு பிறந்த நாள் கூட தெரிந்துக்காம இருப்பேனா. அவள் உருவானதை தான் என்னால கண்டுபிடிக்க முடியலை. ம்ம்… உன் வயிறு ஒட்டி இருந்தது. ஒவ்வொரு மாசம் பிறை நிலா மாதிரி வளர்ந்து முழுமதியா ஆகியிருக்கும்ல?” என்றவன் பெருமூச்சை வெளியிட்டான்.
குழந்தையின் அசைவை தன்னால் அறியமுடியாது செய்து விட்டாளே என்ற சினம் துளிர்த்தது.
“அனிலிகா தன்வீ பிறந்ததிலருந்து கேக் அவ கையால செய்யணும்னு ஆசைப்பட்டா.” என்றாள் பிரகதி.
“எவ்ளோ பெரிய கேக் செய்வா..” என்று எதிர் கேள்வி கேட்டான்.
அவன் கேள்வி கோபத்தை கொடுத்தாலும் பொறுமையை இழுத்து பிடித்து 2kg அளவுக்கு கேக் செய்வா. அதுக்கு மேலயா ஆள் இருக்காங்க?” என்றாள் சலிப்போடு.
“மேபீ… இருக்கலாம். ஆல்ரெடி வளைகாப்பு பெயர் சூட்டுவிழா நடத்த முடியலை. சோ கிராண்டா பெர்த்டே கொண்டாடுவேன். உனக்கு என்ன கேக் அனிலிகா செய்யணுமா. செய்ய சொல்லு. மார்னிங் வீட்ல செலிபரேட் பண்ணுவோம். நான் நினைச்சா என் பொண்ணுக்கு தினமும் பெர்த்டே கொண்டாடுவேன்.” என்றான் ஆணவமாக.
நீ தானே என்பது போல முறைத்து வைத்தாள்.
“அவளுக்கு சௌமி பற்றி இவனின் அபிப்ராயம் மனதை வாட்டியது. பற்றாத குறைக்கு விதுரனோ “முக்கியமா சித்தி சசிக்கு சொல்லிடு. பிறகு இன்பாவோட வீட்டுக்கும் சொல்லு. அவங்க மொத்தமா வரணும். பிகாஸ் சௌமி வந்துட்டா மேரேஜ் அனவுன்ஸ் பண்ணலாம்னு இருக்கேன்.” என்று கூறவும் பிரகதிக்கு சுர்ரென்று எரிச்சல் மண்டியது.
“நீயா… முடிவெடுக்கற. அவ வீட்ல கேட்க வேண்டாமா? என்ன நினைச்சிட்டு இருக்க. போர்ஸ் பண்ணி மேரேஜ் செய்து என்ன சாதிப்ப?” என்றாள்.
“நான் போர்ஸ் பண்ணி மேரேஜ் செய்து தன்வீ மாதிரி குட்டி ‘டெவில் ஏஞ்சலை’ உருவாக்கியிருக்கேன்” என்றான் கிண்டலாய்.
அதற்கு பிரகதியோ, “எப்பபாரு எடக்கு மடக்காவே பேசாதே. எனக்கு ஆண் துணையா அப்பாவோ அண்ணா தம்பியோ இல்லை. சௌமிக்கு அண்ணன் இருக்கான். உன்னிடம் எத்தனை அடிவாங்கியும், என் இருப்பிடம் கூற தயங்கினவன். அவன் தங்கைக்கு ஏதாவது ஆபத்துனா சும்மா இருக்க மாட்டான்.” என்று முகம் திருப்பினாள்.
தன்வீயோடு விளையாடி கொண்டிருந்த விதுரனுக்கு இவள் பேச்சு எரிச்சலை கிளப்பியது. “ஏய்… என்ன ஆபத்து? நாங்க என்ன புலியா சிங்கமா கடிச்சி கொதறி எடுக்க மனுஷன் தானே. ஒரு குழந்தையை பார்த்துக்கிட்டு மனைவியா இருக்க தான் சொல்லறேன்.
குழந்தை கூட பெயருக்கு பார்த்துக்கட்டோம். மனைவியா இருந்து சப்போர்டா இருந்தாலே போதும். ஒரு பொண்ணு துணையா தனக்குனு இருக்கா என்று ஒரு ஆணுக்கு புரிஞ்சாலே ஏழுமலை ஏழு கடலை தாண்டுவான்.” என்று கூறவும் பிரகதிக்கோ தற்போது எரிச்சலானது.
என்னிடமே எப்படி பேசறான் என்றவள் மனம் விதுரனை தாண்டி சசியை எண்ணவில்லை. ஒரு வேளை அப்படி யோசித்தால் சரியாக பயணித்து குழப்பம் தீர்ந்திருப்பாள்.
சிலருக்கு சில நேரம் குழப்பமான மனநிலையில் தெளிவான சிந்தனை வயப்படமாட்டார்கள். பிரகதி அந்நிலையில் சுழன்றிருந்தாள்.
விதுரனுமே பிரகதி சௌமியாவை தனக்கு ஜோடி சேர்த்து பயந்து போவாளென அறிந்திடவில்லை.
“நாம பேச ஆரம்பித்ததும் உன் பிரெண்ட் அனிலிகா தலைதெறிக்க ஓடுது. என்ன மிருகம்னு அறிமுகப்படுத்தி வச்சியா இல்லை டெவில் கிங்னா? என்னவா இருக்கட்டும். எட்வினும் குத்து விட்டதுல அங்குட்டு போயிட்டான்.
நான் டெவில் கிங் இல்லை துஷ்யந்தானு சொல்லு. அப்பறம் சௌமி வீட்ல நானா பேசிக்கறேன். நீ எதுவும் தலையிடாதே.” என்று உணவை விழுங்கி கையலம்பி எழுந்து செனறான்.
தன்வீயோ இவளிடம் கை மாறியவள் தந்தையை வெளியே செல்வதை கண்டு சிணுங்க ஆரம்பித்தது. தன்வீ தற்போது வெளியே செல்ல துடிக்கும் குட்டி வாலாக மாறிக் கொண்டிருந்தாள்.
“செல்ல குட்டி… அப்பா ஆபிஸ் முடிச்சி வந்ததும் ஷாப்பிங் போகலாம்” என்று முத்தம் வைத்தவன் பிரகதி கன்னத்திலும் ஈரம் வைத்து புறப்பட்டான்.
தன் கையால் துடைத்தபடி “இது என்ன வகை?” என்று குழம்பினாள்.
விதுரனோ சௌமியாவை தேடி சசியின் அலுவலகத்தில் விரைந்தான்.
சௌமியா பணிப்புரிய வைத்த இடம் அங்கு தானே. வேலைக்கு எடுத்ததும் விதுரன் கூறியது ‘சசி திக்குவாய். அவனால் முடியாத நேரத்தில் நீ உதவி செய். பெரும்பாலும் பொறுமை முக்கியம். எங்க ஆபிஸ் வேலையே ஊத்தி மூடி அழிஞ்சா கூட கவலையில்லை. அவனோட தன்னம்பிக்கை வளரணும். உன் ஹெல்ப் அதுக்கு தான்.’ என்று தெளிவாய் கூறியிருக்க இதோ இரண்டு மீட்டிங் சசி வைத்து முடித்தாள். அப்படியும் ஒரு முறை எனக்கு ரொம்ப திக்குது. ப்ளிஸ் என்று பாதியில் ஓடிவிட்டான். சௌமியாவே மற்றவையை பேசி முடித்தாள். அவளுக்கு அவன் தெளிவாய் எடுத்த நோட்ஸ் முலம் கோப்பைகள் மூலமாகவும் புரிந்தது.
பற்றதாகுறைக்கு விதுரனிடம் ஏதேனும் சந்தேகம் கேட்டால் அவன் வழி கூற அதன் படி முடித்து கொள்வாள்.
சசி பெரும்பாலும் மாற முயன்றான். தீபிகா விட்டு சென்ற கணம் விதுரன் திட்டி தீர்த்து பேசிய முறைகள் அவனை அலுவலகம் வர வைத்தது. மனைவியே இழந்த பிறகு இழக்க என்ன உள்ளதென தன் குறையா அல்லது வாழ்வா என்று ஒரு கை பார்க்க ஆரம்பித்தான். என்ன அப்பொழுதும் இயல்பு தலை தூக்கியது. விதுரனுக்கு முரட்டு குணம் போல இவனின் மென்மை குணம் வருவது தானே.
சில நேரம் பாதியில் ஓடி வந்து தனியாக அழுவான். சௌமியா ஆறுதல் கூற வந்தாலும் ப்ளிஸ் தனியா விடுங்க.” என்று கத்தரித்தான்.
விதுரன் வந்த நேரம் சௌமியா நம்பரை அழுத்தி காதில் வைத்து நிமிர எதிரில் நின்றதும் பயந்து போனை தவறவிட்டாள்.
“சாரி சார். உங்களுக்கு தான் கால் பண்ணினேன். அவர்… அவர் கிளம்பிட்டார். சார்… எப்ப பாரு பாதில போனா.. நான் எப்படி சார் ஹான்டில் பண்ணுவேன். என் நாலேட்ஜ்கு இது அதிகம் சார். இன்னிக்கு நான் லீவு எடுத்துக்கறேன் சார்” என்று உரைத்தாள்.
விதுரனோ கையை கட்டி “நான் அவனிடம் பேசறேன் மா. சௌமியா… நீங்க இன்னிக்கு வீட்டுக்கு போங்க” என்றதும் “தேங்க்ஸ் சார். எனக்கும் என்னவோ மாதிரி இருக்கு” என்று பையை எடுத்து வைத்தாள்.
“சௌமி… நான் ட்ராப் பண்ணறேன்” என்று கூறினான். அவனை விநோதமாக பார்த்தாள். “இல்லை நீ சோர்வா இருக்கற மாதிரி இருக்கு” என்றான்.
சௌமியா சரியென்று தலையாட்டினாள்.
அவளுக்கு விதுரனை கண்டு முதலில் பயந்தாள். ஆனால் அதன் பின் விளையாட்டாய் விதுரனே அடிக்கடி பேச்சு கொடுத்து பேசி இலகுவாக்க சௌமியா பயத்தை விடுவித்திருந்தாள்.
கதிர் வண்டி ஓட்ட விதுரன் சௌமியா இருவரும் பயணமானார்கள். விதுரன் யோசனையோடு சாய்ந்திருந்தான்.
விக்னேஷ் போன் வந்ததும் யோசனை கலைந்து எடுத்தான்.
“சார் இன்பாவை ஆபிஸூக்கு லீவ் போட்டுட்டு கூட அழைச்சிட்டு வர்றேன். எதுக்கு என்னனு கேள்வி கேட்டுட்டே வர்றார்” என்றான் விக்னேஷ்.
“உங்க வீட்டுக்கு தான் பயப்பட வேண்டாம்னு சொல்லி கூட்டிட்டு வா” என்று அணைத்தான்.
சௌமியா நன்றி நவில்ந்து இறங்க கூடவே விதுரன் இறங்கினான்.
“ஷல் ஐ கம்?” என்று வினாவாய் கேட்டு பார்க்க சௌமியா ஒர் கணம் தடுமாறி திணறி “வாங்க சார்” என்றாள்.
வீடு பூட்டியிருக்க தன் அன்னைக்கு போன் போட்டாள்.
“அம்மா எங்க இருக்க? வீடு பூட்டியிருக்கு” என்று கேட்டாள்.
“குழந்தைக்கு தடுப்பூசி போட வந்திருக்கோம். என்ன டி?” என்றதும் “நான் வீட்டுக்கு வந்தேன்.” என்றாள்.
“அப்படியா சாவி மாடத்துல இருக்கு. பாரு. டோக்கன் நம்பர் கூப்பிடறாங்க. நான் போயிட்டு வர்றோம்.” என்று கத்தரித்தனர்.
சௌமியாவுக்கு சங்கடமாய் போனாலும் விதுரனிடம் ‘அம்மாவும் அண்ணியும் குழந்தைக்கு தடுப்பூசி போட போயிருக்காங்க சார்.” என்று கதவை திறந்தாள்.
“நோ பிராப்ளம் சௌமி. அவங்க வர்றவரை வெயிட் பண்ணறேன்.” என்றான்.
சௌமியாவுக்கு எதுக்கு காத்திருக்கணும். இவருக்கு தலைக்கு மேல வேலை இருக்கும் என்று குழம்பி, குடிக்க நீரை நீட்டினாள்.
விதுரன் கண்ணாடி குடுவையை வாங்கி பருகி கொண்டு சௌமியாவை பார்த்து சிரிக்க சௌமியாவுக்குள் என்னவோ விதுரன் செல்வதாக இல்லையென புரிந்தது.
இதுவரை தற்போதைய பழக்கம் பொடிபொடியாக சென்று அண்ணாவை அடித்து மிரட்டிய விதுரன் கண் முன் வந்தது போல பாவித்தாள்.
அச்சம் சூழ, கையை பிசைந்தாள். அதே நேரம் வாசலில் கார் சத்தம் கேட்க சௌமியா எட்டி பார்த்தாள். விக்னேஷ் கூடவே இன்பா என்றதும் பயம் கரைய, அண்ணா…” என்று வாசல் செல்ல அவனே வந்தான்.
தற்போது சௌமியா மனதில் இந்த விதுரன் அப்ப வந்தது ஏதோ காரணகாரியம் இருக்குமோ? என்று கணித்தாள்.
என்னாச்சு விதுரன் சார்? சௌமியா வேலையில் தப்பு செய்தாளா?” என்று இன்பா சௌமியா முன் கேட்டான்.
“சேசே அப்படியில்லை. உங்களை எல்லாம் பார்த்து பேசிட்டு அப்படியே தன்வீ பெர்த்டேவுக்கு அழைப்பு தொடுத்துட்டு போக இருந்தேன்.” என்றான்.
இன்பாவுக்கும் சௌமியாவும் சீரான மூச்சு வெளியாகியது.
“ஓ… விக்னேஷ் அழைச்சிட்டு வரவும் பயந்துட்டேன்” என்றான் இன்பா.
“தர்மாவை வச்சி அழைச்சா பயப்பிடுவிங்கனு தான் விக்னேஷை அனுப்பினேன். ஆன்டி வந்ததும் பேசலாமா?” என்றான். இன்பாவுக்கு என்ன பேசப்போறார் இவர் என்று சௌமியாவை பார்க்க அவளோ விழித்து நிற்க “உட்காருங்க இன்பா” என்று இன்பா வீட்டில் அவனையே அமர சொன்னான்.
அரைமணி நேரம் போகவும் சௌமியாவுக்குள் என்னவோ விதுரன் திட்டம் வகுத்து வந்ததாக பட்டது.
அம்மா அண்ணி குழந்தையோடு வரவும் குழந்தை சின்ன சிறு குட்டியாக இருக்க தூக்க பயந்து தூரத்திலே இரசித்தான்.
அஞ்சலி ஏற்கனவே விதுரனை கண்டிருக்கின்றாள். விஜியலட்சுமியும் இன்பாவை மிரட்ட வந்தப்பொழுது பார்த்தது. தற்போதும் அதே அச்சத்தில் வரவேற்று வணக்கம் வைத்தார்.
“உட்காருங்க” என்று கூறியவன் இன்பாவையும் விஜியலட்சுமியிடமும் மாறி மாறி பார்த்து விஜயலட்சுமியிடம் நேரிடையாக பேசினான்.
“நான் இங்க வந்தது உங்க பொண்ணை இரண்டாவதா கல்யாணம் பண்ணி வைப்பிங்களானு கேட்க தான்” என்றதும் சௌமியா இன்பா அஞ்சலி விஜயலட்சுமி, அனைவரும் ஸ்தம்பித்தனர்.
“தம்பி… என்ன கேட்கறிங்க? பிரகதி கேட்டா கவலைப்பட போறா” என்றார் விஜயலட்சுமி பதட்டத்துடன்.
“ஆன்டி… நான் கேட்கறது என் அண்ணன் சசிதரனுக்கு. தீபிகா இறந்து குழந்தை வச்சிட்டு இருக்கான். குழந்தை இருக்கேனு யோசிக்காதிங்க. எங்க சித்தி இல்லை கேர்டேக்கர் வச்சி பார்த்துப்போம். எங்களுக்கு சசியோட சௌமியா மணக்கனும் அதுக்கு தான் கேட்க வந்தேன்” என்றான்.
சௌமியாவுக்கு இது அதிர்ச்சி. இன்பாவுக்கோ கோபத்தை மூட்டியது. விஜயலட்சுமியோ சௌமியாவுக்கு திருமணம் என்றால் சந்தோஷம் தான். ஆனால் அது சசிதரனா? அவன் திக்குவாயென கேள்விப்பட்டு இருக்கின்றாரே என்று இன்பா தாய் சௌமியை ஏறிட்டார். ஒரு வேளை காதல் கீதலென இவள் ஆரம்பித்துவிட்டாளா? என்று திகைத்தார்.
“என்ன விதுரன் சார் பழைய அராஜகம் தலை தூக்குதா? என்ன அடிச்சாலும் வாங்கிட்டு போவான்னு திரும்ப ஆரம்பிக்கறிங்களா?
என் தங்கையை யாருக்கு கட்டிக் கொடுக்கணும்னு எனக்கு தெரியும். நீங்க தயவு செய்து எங்க வீட்ல எந்த முடிவும் எடுக்காதிங்க” என்றான்.
“பழைய அராஜகம் தலை தூக்கினா உன்னிடம் பேசிட்டு இருக்க மாட்டேன் இன்பா. ஆபிஸ்ல சௌமியாவிடம் கேட்டு சசியை தாலி கட்ட வச்சிருப்பேன்.
இப்ப தன்மையா கேட்பது உங்க தங்கை முடிவெடுக்க அவகாசமும் தெளிவான பதிலும் கிடைக்கும்னு தான்.
நான் ஒன்னும் தீபிகாவை கட்டாயப்படுத்தி சசிக்கு கட்டி வச்சதா என்னை பேசறிங்க. உங்களை வேண்டாம்னு சசியை மணக்க ஒப்புதல் கொடுத்து தீபிகா நகை வாங்க வந்த நாட்களை மனசுல வச்சி தான் கடைசி நிமிடம் பச்சோந்தியா மாறியதற்கு நான் என்னோட திமிரில் பதில் கொடுத்தேன்.
இப்ப சௌமியாவுக்கு யோசிக்க டைம் தர்றேன்.
அவ மேரேஜ் அவயிஷ்டபடி முடிவெடுக்கட்டும். எங்க சசிக்கு என்ன குறைச்சல்? குழந்தை கையில இருக்கு. சௌமி மனசு வச்சா அவங்க குழந்தையா மாறும். இல்லைனா கேர்டேக்கர் பார்த்துப்பாங்க.
என்ன அவனுக்கு தான் திக்கும். ஏன் அவன் சாதிக்க மாட்டானா.? இல்லை அதை குறையாவே பார்க்கறிங்களா?
இல்லை கடந்த கால காதலியோட கணவனுக்கு உங்க தங்கையை அவனுக்கு கொடுக்கணுமானு யோசனையா?” என்றான்.
இன்பாவோ “விதுரன்… உங்கண்ணா உங்களுக்கு உசத்தி தான். எல்லாருக்கும் இல்.” என்றதும் அஞ்சலி முன் வந்தாள்.
“இங்க நான் பேசலாமானு தெரியலை. பொண்ணோட அண்ணா, பொண்ணோட அம்மா இரண்டு பேர் இருக்கறப்ப வீட்டுக்கு வந்தவ நான் பேச கூடாது தான். ஆனா இது முடிவுயில்லை. சௌமியாவுக்கு விருப்பமானு ரெண்டு பேருமே கேளுங்க. அவளோட முடிவை இரண்டு பேரும் மதிப்பளிங்க. நீங்களா பழைய பகையை வச்சி இங்க பேசாதிங்க. அந்த பொண்ணு பெயர் எடுத்தாளே எனக்கு எரியுது.” என்று கூறி சௌமியாவை பார்த்து நிறுத்தினாள்.
சௌமியா அதே அமைதி. இன்பாவோ “முடியாதுனு சொல்லி அனுப்பு சௌமியா. வேலைக்கும் வரமாட்டேனு அப்படியே சொல்லிடு. அங்கயே இருப்பதால நம்மை அவங்க இஷ்டத்துக்கு ஆட வைக்க பார்க்கறார்.” என்று இன்பா முறுக்கினான்.
விதுரனுக்கோ “யோசித்து சொல்லுமா. ஆனா இதுக்கு வேலைக்கும் சம்மந்தம் இல்லை. என்னால பெர்சனல் வேற ஆபிஷியல் வேறனு பார்க்க முடியும். சசியிடம் நான் இதை கேட்கலை. ஏன்னா என் சொல் கேட்பான்.” என்று நடையிட்டான்.
“சௌமியா பணக்காரங்க பிரைன் வாஷ் பண்ணிடுவாங்க உள்ள போ” என்றான் இன்பா.
இம்முறை விதுரன் கால்கள் நின்று விட்டது.
பொறுமையாய் திரும்பி இன்பாவை நெருங்கினான். அதில் இன்பா இரண்டடி பின் நகர்ந்தான்.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Vithur hn sis kaga yosichi tha intha mudivu Pani irukan inba verum sasi kaga mattum pakala avanoda porumaiya sothikatha
Super👍😍😍😍😍😍
Super vithuran. Intresting
Kuda irrunthu sowmi pakkara nala kandipa sasi ya purinjurupa + kolanthaikana yosanaium irrukum ana inba oda parvaila athu niriya mixed feelings aa irrukum