அத்தியாயம்-9
Thank you for reading this post, don't forget to subscribe!அண்ணாமலை வீட்டுக்கு வந்ததிலிருந்து இயல்பாய் நடமாடினார். ஆனால் அடிக்கடி மகளை உன்னிப்பாய் கவனிக்க ஆரம்பித்தார்.
வள்ளியோ, வாட்டர் பாட்டில் சாப்பாடு குழம்பு அப்பளம் பொரித்து ஹாலில் சாப்பாட்டை எடுத்து வைத்து, “துஷாரா அந்த தம்பி அழைச்சிட்டு வா” என்று கூறினார்.
துஷாராவோ “அங்க யாரும் இல்லை.” என்றாள்.
“அட அப்பளம் வேற அந்த தம்பிக்கு பிடிக்கும்னு நிறைய பொறிச்சிட்டேன்” என்று குறைப்பட்டுக் கொண்டார்.
“ஜஸ்ட் இருபத்தெட்டு நாள் நம்ம வீட்ல இருந்திருப்பாரா? ரொம்ப தான் பண்ணறம்மா. இஷ்டத்துக்கு அப்பளத்தை பொறிச்சிட்டு வேஸ்ட்டாக்குற. இங்க இப்ப யாரும் இல்லை, மறந்துட்டு வேலையை பாருங்க” என்று அப்பளத்தை கொரித்தாள்.
அண்ணாமலைக்கு மகள் தன் மனைவிக்கு கூறுகின்றாளா? அல்லது அவளுக்கே அவள் ஹர்ஷாவை மறக்க மனதிற்கு கூறி கொள்கின்றாளா? என்று தோன்றியது.
மறக்கும் அளவிற்கு என்றால் அவள் மனதில் சிறு சலனத்தை விதைத்து விட்டானா?
ஹர்ஷா பார்க்க அழகானவன், வெளிநாட்டுக்காரன், பண்பாக தெரிகின்றான், மதிப்பு மரியாதை தந்து பேசுகின்றான். அதற்காக காதலிக்கின்றேன் என்று கூறியதற்கு பெண்ணை தரமுடியுமா? ஆனால் அவன் துஷாராவை பெண் கேட்டு விட்டானே.
ஒரே பெண்ணை பெற்றெடுத்து அவளை தூர தேசம் கட்டி தரவா வளர்த்தது. அவளை கண்ணுக்கு பக்கத்தில் வைத்திருக்க அல்லவா மனம் எடுத்துரைக்கின்றது. அதனால் தானே மருதமுத்து அழைத்து வந்த வரனை மணக்க சம்மதம் உரைத்தேன் என்று மனசாட்சி வரிசைக் கட்டி வந்து காரணத்தை அடுக்கியது.
‘உன் மகள் சொன்னாளா? பெண் பார்த்து சென்றவனை பிடித்து உள்ளது, மணக்கின்றேன்’ என்று நொடியில் பல்டியும் அடித்தது.
அடுத்த நொடியே ஹர்ஷா வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற தமிழன், அவன் தாய் தந்தை துஷாராவை ஏற்க மாட்டார்கள் என்று முடிவுகட்டினார். அதோடு ஏணி வைத்தாலும் எட்டாத இடம். பேராசை வேண்டாம் ஹர்ஷா தன்னிடம் உரைத்து சென்றுவிட்டான். மகளும் அமைதியாக இருக்க, பெண் பார்த்த வரனையே முடிப்போம் என்று முடிவுக்கட்டினார்.
உணவெல்லாம் விழுங்கி அவரவர் உறங்க சென்றனர்.
வள்ளி ஓயாமல் ஹர்ஷாவை பற்றி பேசி புலம்பி தலையணை உறையை மாற்றினார்.
‘இந்நேரம் போயிருப்பாரா? பாவம் அவங்க அம்மா அப்பா வந்துடுவாங்களா? எதுக்கு தான் கால் சரியாகமலே போனாரோ.” என்று பேசிக்கொண்டு படுத்துறங்க, மகளை காண வந்தார்.
அவளோ ஹெட் செட்டை மாற்றிக்கொண்டு, பாடலை ‘ஹம்’ செய்திருந்தாள்.
நெஞ்சில் கைவைத்து இதுவரை சிந்தித்து குழம்பிய மனம் தெளிந்து மீண்டும் தங்கள் அறைக்கு வந்தார்.
இன்றைய நாளின் அலைச்சல், வயதின் ஏற்றம் என்று சட்டென உறக்கம் கண்ணை சுழற்றியது அண்ணாமலைக்கு.
அடுத்த நாள் காலையில் எழுந்து வேலைக்கு செல்ல, துஷாரா கல்லூரிக்கு செல்லவும் இயல்பான நாட்களாக கடந்தார்கள்.
இங்கு ஆஸ்திரேலியா வந்திறங்கிய ஹர்ஷாவை தாங்கி பிடித்து அழைத்து செல்ல அப்பா தாமோதரனும் அம்மா நான்சியும் வந்தார்கள்.
தாமோதரனுக்கு மட்டும் ராம்கி கிண்டலாய், ”சைட் அடிச்ச பொண்ணா வீட்லயே தங்கறான் அங்கிள். அதான் போன் எடுக்க மாட்டேங்கறான்.” என்று கூறியிருந்தான்.
“என்னடா இப்பவே வந்துட்ட? நீ திரும்ப காலை உடைச்சிட்டு அங்கேயே கிடப்பன்னு நினைச்சேன்” என்று சிரித்து மகனை கவனமாக பார்த்து அழைத்து வந்தார்.
“பச்.. அங்கயே இருந்தேன் உங்க மகனை நீங்க இழக்கலாம். அந்தளவு என்னை பைத்தியம் ஆக்கியிருப்பா” என்று கடுகடுத்தான்.
நான்சி என்ன ஏதென்று விசாரிக்க காரில் ஏறியதும் தாமோதரன் ‘ஹர்ஷா ஒரு பெண்ணை சைட் அடித்த கதை’யை கூறினார்.
நான்சி பின்னாலிருந்த மகனிடம் “ஆர் யூ பால் இன் லவ் ஹர்ஷா?” என்று கேட்க, “எஸ் மாம். ஐ லவ் துஷாரா. ஸ்டில் ஐ லவ் ஹேர்” என்று கூறிவிட்டு காதலில் விழுந்த விவகாரத்தை கதை கதையாக கூறினான். துஷாராவுக்கு பெண் பார்த்து திருமணம் முடிவாக, அங்கிருக்க பிடிக்காமல் வந்துவிட்டதை உரைத்தான்.
”நீ அவசரப்பட்டு வந்துட்ட ஹர்ஷா. கொஞ்சம் காத்திருந்திருக்கலாம். லீவ் இட்.. அவங்க அப்பாவிடம் துஷாராவை விரும்பியதை ஏன் சொன்ன?” என்று கேட்டார்.
காதலிப்பவளிடம் சொன்னது சரி. அவள் தந்தையிடம் ஏன் கூறினான்.
“தெரியலை மாம். அந்த நேரம் அவரை விட்டு கிளம்பறப்ப அழுகையை கன்ட்ரோல் பண்ண முடியலை. மனசுலயிருந்ததை சொல்லிட்டேன்.
எப்படியும் அந்த அங்கிள் துஷாராவிடம் கேட்க மாட்டார். என்னனு தெரியலை. சொல்லாம வந்திருந்தா ஏதோ மனஅழுத்தம் கூடியது. அதான்… மனசுல வச்சிக்காம சொல்லிட்டேன். அவருக்கு இங்க வந்ததும் ரீச் ஆனதை சொல்லணும். ஆனா… சொல்ல தோணலை.” என்று கார் ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்த்தான்.
அவன் முகம் சோகத்தை தாங்கியிருக்க, நான்சியும் தாமோதரனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.
அதன் பின் வீட்டுக்கு வந்ததும் ஹர்ஷாவை கவனித்து கொண்டார்கள். கால் பிராக்சர் கொஞ்சம் கொஞ்சமாய் சரியாகியது.
ஹர்ஷாவின் மனம் மட்டும் மாறாமல் இருந்தது.
இங்கு வந்ததும் துஷாராவுக்கு அழைக்க கை பரபரத்தது. ஆனால் அண்ணாமலைக்கு அழைத்து ஆஸ்திரேலியாவுக்கு லேண்ட் ஆகிட்டேன் சார். அம்மா அப்பா விமான நிலையத்துக்கே வந்துட்டாங்க. சேப்பா வீட்டுக்கு வந்தாச்சு. வள்ளி ஆன்ட்டி கேட்டா சொல்லிடுங்க. துஷாரா கேட்க மாட்டா… ஆனாலும் அவ இருக்கறப்ப சொல்லிடுங்க சார். நான் அவளை தொந்தரவு பண்ண மாட்டேன்” என்று கூற “நல்லது தம்பி கொஞ்ச நாளைக்கு காலை ரொம்ப ஊனாதிங்க. வைக்கறேன் தம்பி” என்று அணைத்துவிட்டார்.
ஹர்ஷாவுக்கு அதன் பின் போனில் அவரிடம் பேச தயக்கம். நண்பனிடம் மட்டும் பேசுவான். இப்படியே இரண்டு மாதம் கழிந்தது. காலும் ஓரளவு சரியானது. மிகப்பெரிய பிராக்சர் இல்லை. அதனால் இந்த மூன்று மாதத்தில் தாங்கி பிடித்து ஸ்டிக் உதவியின்றி நடக்க முடிந்தது.
தான் தனியாக யார் உதவியின்றி நடப்பதை அண்ணாமலையிடம் தெரிவிக்க நினைத்தான். ஆனால் அவராக தனக்கு அழைத்து பேசாதது, தானாக பேசி சங்கடம் தருவதை தவிர்க்க நினைத்தான்.
ராம்கியிடம் மட்டும் “நீ சென்னை எப்ப போவடா? திரும்ப அந்த நேரு ஸ்டேடியத்தில் கலை நிகழ்ச்சி எப்ப வைப்பாங்க?” என்று சம்பந்தமின்றி கேட்டான்.
“தெரியலை மச்சி. ஆனா நீ சென்னைக்கு திரும்ப வருவடா. ஏன்னா எனக்கு கல்யாணம். பொண்ணு பூர்வீகம் மதுரை. ஆனா சென்னையில் இருக்கு. அதனால சென்னையில கல்யாணம்.” என்று கூறினான்.
இங்கு வந்து மூன்று மாதம் ஆகின்றதை அறிந்தவன், இந்நேரம் துஷாராவுக்கு கல்யாணம் முடிந்திருக்கும்’ என்றெண்ணினான்.
துஷாரா எண்ணிற்கு அழைக்க மனம் பிராண்டியது. அவள் வேறொருத்தன் மனைவி என்ற நிலையில் இருந்தால்? என்ற வினா பிறக்க போனை அணைத்து நின்றான்.
அண்ணாமலையிடம் பேச நினைத்தான். சின்னதாக நலம் விரும்பும் விதமாக, ஆனால் அவரையும் தொந்தரவு செய்ய பிடிக்காமல் தவித்தான்.
ராம்கியின் திருமண நாட்களுக்கு வாட்ஸப்பில் ஹர்ஷாவின் பெற்றோர்களுக்கு இன்விடேஷன் சென்றது.
தன் மகனின் கல்லூரி கால நண்பன், அதுவும் தமோதரன் இந்தியாவை விட்டு இங்கு வந்து பல வருடமானதால் ராம்கி திருமணத்திற்கு செல்ல திட்டமிட்டார்.
கூடவே நான்சியையும் அழைத்தார். தமிழ்நாட்டை சுற்றி பார்க்க போகலாம் என்று ஆசைக் கூட்டினார்.
நான்சியோ மகன் சென்ற இடத்தில் செல்ல விருப்பப்பட்டார். அவனுமே வந்ததிலிருந்து இலக்கின்றி நடமாடுகின்றானே. இப்படி எங்கேயாவது சென்றால் என்ன? என்று தோன்ற இந்த வாய்ப்பை பயன்படுத்தி கெண்டார்கள்.
ஆஸ்திரேலியாவில் இருந்தபடியே வலைத்தளம் மூலமாக சென்னையில் ராம்கிக்கு நடக்கவிருக்கும் திருமண மண்டபத்தின் இடத்திற்கு பக்கத்தில் ஒரு ஹோட்டலில் ரூமை புக் செய்து விட்டான் ஹர்ஷா.
சென்னை செல்கின்றோம் என்றதும் முதலில் நினைவு வந்தது அண்ணாமலை சார் வீட்டுக்கு போகலாமா? என்பது தான்.
ஆனால் எந்த முகத்தை வைத்து கொண்டு செல்வான்.
தகப்பனிடமே உங்க பொண்ணை விரும்புகின்றேன் என்று சொல்லிவிட்டு வந்தவனாயிற்றே.
ஆனாலும் இங்கு வந்ததை போனிலாவது தெரிவிக்க நினைத்து சென்னை வந்ததை தகவலாக கூறினான்.
“அப்படியா தம்பி நேரம் கிடைச்சா அம்மா அப்பாவை அழைச்சிட்டு வாங்க” என்று கூறினார்.
”சரிங்க அங்கிள். அம்மா உங்களிடம் நேர்ல தேங்க் பண்ண நினைச்சாங்க. அதனால் கல்யாணம் முடியவும் அழைச்சிட்டு வர்றேன்.” என்று கூறினான். “ஆங் சரிங்க தம்பி” என்று அண்ணாமலை துண்டித்தார்.
‘ஆங் அங்கிள் துஷாராவுக்கு கல்யாணம் முடிஞ்சதா” என்று போன் துண்டித்தபின் கேட்டு தலையில் அடித்து கொண்டான்.
துஷாராவை பொண்ணு பார்த்த அன்றே கல்யாணத்தை எவ்ளோ குயிக்கா வைக்கணுமோ வச்சிடலாம் என்று பேசி சிரித்தது அன்று படுத்தபடுக்கையில் கண்மூடி செவியில் கேட்டதால் இந்நேரம் துஷாரா மணமாகி வேறு வீட்டிற்கு சென்றிருப்பாள் என்று ஹர்ஷா எண்ணம்.
ராம்கி திருமணம் நாளை என்பதால் இன்றே துஷாரா வீட்டிற்கு செல்ல அவசரப்பட்டான் ஹர்ஷா.
நான்சி முதல் முறை சென்னை வந்ததால் அவருக்கு வெயில் தாளவில்லை. சொல்லப்போனால் சென்னை வெயில் தற்போது தட்பவெட்ப நிலையால் அடிக்கடி குளிர்ந்து மழையை தருகின்றது. அப்படியிருந்தும் இவ்வாறு வெயில் வாட்டுவதாக புலம்பி தள்ளினார் நான்சி.
தாமோதரனோ ”அப்படின்னா நீ ஹோட்டல்ல ரெஸ்ட் எடு. நான் நம்ம பையனுக்கு விபத்து நடந்தப்ப பார்த்துக்கிட்ட அண்ணாமலையை பார்த்துட்டு வந்துடறேன்” என்று மகனோடு புறப்பட, “இல்லை இல்லை. எனக்கு அவங்களை பார்க்கணும். வெயிலோ மழையோ. ஐ டோண்ட் கேர். என்னையும் அழைச்சிட்டு போங்க” என்று நான்சி பதில் தந்தார்.
மகன் மனதை பறிக்கொடுத்த இடம், முடித்தால் அந்த பெண் துஷாராவை புகைப்படத்திலாவது பார்த்திட துடித்தார். அதே போல மருமகளை தேடலாமென்ற எண்ணம்.
அதனால் கணவர், மகன் அழைத்து செல்லவும், பின் தொடர்ந்தார் நான்சி.
-தொடரும் .
பிரவீணா தங்கராஜ்
Waiting for next epi 😍
Nice update 👍👍👍👍
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 anegama Ramki ku partha ponnu thushara friend nu nenaikuren 😃 parpom eppdiyum marriage ayiruka koodadhu pa kadavule 🙏🤔
பிரிவு தாக்கினாலும்
எதார்த்தம் உணர்ந்து
காலத்தின் போக்கில் செல்ல
பிரபஞ்சம் வழி நடத்தி செல்கிறது காதலை நோக்கி….
பார்ப்போம் பெண்
பார்ப்பது போல
பெற்றவர்களுடன் செல்ல
பார்த்ததும் வெளிநாட்டிற்கு பார்சல் தான் பாவை 🤩…..
Harsha family members id good 👍
தென்றல் நீ தானே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 9)
அச்சோ…! துஷாரா குடும்பமே ரொம்ப ரொம்ப நல்ல குடும்பம்ன்னு நினைச்சா, அதை விட இந்த ஹர்ஷா குடும்பம் ரொம்ப நல்ல குடும்பமா இருக்குதே. அதுலேயும் ஹர்ஷா சான்ஸேயில்லை. துஷாரா கிட்டயும், அவங்கப்பா கிட்டயும் பேசணும்ன்னு நெஞ்சளவு ஆசை வைச்சிட்டு, எக்காரணம் கொண்டு துஷாரா பேரையோ, அவங்கப்பவோட மனசையோ உடைச்சிடக் கூடாதுன்னு பார்க்குறானே…. ஆஹா, இந்த மாதிரி மாப்பிள்ளை வலை வீசி தேடினாலும் இந்த பூலோகத்துலயே கிடைக்க மாட்டான் போலவே.
பேசாம நாம எல்லாரும் சேர்ந்து, துஷாரா ஃபேமிலிக்கும் ரைட்டர் மேடத்துக்கும் ஒரு பாட்டு மூலமா
ரெக்கொஸ்ட் கன்வே பண்ணலாமா ?
“மாமா, உன் பொண்ணை கொடு….
அட ஆமா சொல்லிபுட்டோம் ”
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super super very natural story. Going super sis.
Avaluku kalyanam aagirukathu. Athavale evangale ponnu ketra poranga
Harsha ku innum athae love iruku aana dushara ah va disturb panna koodathu nu othungi irukan at tha same time annamalai sir kita yum pesi avar ah sangadapaduthavum virumbala ah even avan parents um rombha excited ah irukaga dushara ah photo ah la aachum parthu athae pola ponnu parkkalam nu vara ga
Anga yenna twist erukko avanukku????
Interesting😍😍