Skip to content
Home » தேநீர் மிடறும் இடைவெளியில்-12

தேநீர் மிடறும் இடைவெளியில்-12

அத்தியாயம்-12

தீப்சரண் அவனது பைக்கில் விரைவாக ஸ்டேஷன் வந்ததும் அங்கேயிருந்த விஷாலை கண்மண் தெரியாமல் அடித்தான்.

”எங்கடா உங்க அக்கா ரம்யா? தங்கச்சி குளிக்கறதை எட்டி பார்த்ததுக்கு தானே உன்னை ரம்யா தீட்டினா. அவளை என்ன பண்ணின. இரண்டு நாள் ஆளை காணோம். கொலைப்பண்ணிட்டியா?” என்று எட்டி உதைத்து மிதித்து அடித்து துவைத்தான்.

அவனுக்கு பின்னால் வந்த சுதர்ஷனன் ஸ்டேஷன் வந்தப்போது, விஷால், “நான் ஏன் என் அக்காவை கடத்தி கொலைப் பண்ணும். நான் எந்த தப்பும் செய்யலை‌ கவிதா என் தங்கை சார். நான் எப்படி? சார் தப்பா பேசாதிங்க. ரம்யா அக்காவும் அம்மாவும் தப்பா நினைச்சா நான் என்ன செய்யறது.” என்று அடிவாங்கியும் விளக்க முயன்றான்.

சுதர்ஷனன் நண்பனை தடுத்து, "டேய்... எனக்கு என் ரம்யா வேணும். இவனை அடிச்சி என்ன சாதிக்க போறோம்‌." என்று நண்பனை தள்ளி நிறுத்தி, "விஷால் இங்க பாரு, ரம்யாவை காணோம். அவ உன்னை கண்டிச்சதுக்கு அவளை ஏதாவது பழிவாங்கறியா?" என்று பயத்துடனே கேட்டான்.‌

“அய்யோ சார்… அக்கா காணாம போனதே நீங்க சொல்லி தான் தெரியும்‌. அப்படியிருக்க நான் ஏன் அக்காவை கடத்தி கொலை செய்யணும்.

அக்காவிடம் நானே என் நிலையை எப்படி புரிய வைக்கறதுன்னு இரண்டு நாளா தவிச்சிட்டு இருக்கேன். கவிதா குளிக்கறப்ப எட்டி எல்லாம் பார்க்கலை சார்.
எங்க வீட்ல இரண்டு பாத்ரூம் தான்‌. அப்பா ஒரு பாத்ரூம்ல வாந்தி எடுத்து வச்சிருந்தார். அங்க போனா குமட்டுச்சு. என்ன தான் அம்மா அவசரமா க்ளீன் பண்ணினாலும் எனக்கு அந்த வாடை பிடிக்கலை. அதனால் இன்னொரு பாத்ரூம் ப்ரீ தானேனு கதவை திறந்தேன்.
அங்க தங்கச்சி கவிதா குளிக்கறது தெரியாது சார். அந்த பாத்ரூம் தாழ்பாள் வேற லூசா இருந்தது. நான் வேகமா திறக்கவும் அந்த நேரம் திறந்தது. அப்ப கூட சட்டுனு கதவை மூடினேன்.
கதவு தாழ்பாள் உடைந்து கிடக்கேனு தான் அங்க நின்று இரண்டு செகண்ட் என்ன பண்ணறதுன்னு யோசிச்சேன்.

அம்மா தான் அதை தப்பா நினைச்சு கத்தவும், அக்காவும் என்னை பிடிச்சு அடிச்சு திட்டினா. எனக்கு அந்த நேரம் கவிதா வந்து என்னை தப்பா எடுத்துப்பாளோனு பயந்து தான் ஓடி வந்தேன்.
அம்மாவிடம் நான் அப்படி பண்ணலைம்மானு அழுதேன். அவங்க முதல்ல திட்டினாங்க. அப்பறம் அவங்க தான் அவசரப்பட்டுட்டேனானு புலம்பினாங்க. அக்கா கூட என்னை அடிக்கடி விசாரிச்சதா சொன்னாங்க.
எனக்கு தான் கவிதாவிடம் அம்மா அக்கா ஏதாவது சொல்லி அவ என்னை தப்பா நினைச்சு திட்டுவாளோனு சங்கடமா இருந்தது.

நான் ரம்யா அக்காவிடம் ‘நான் உன் தம்பிக்கா நான் கவிதாவை அப்படி பார்க்க நினைக்கலை. அது ஏதாச்சமா கதவு திறக்க அப்படி நடந்துச்சு’னு சொல்லிடலாம்னு நேத்தெல்லாம் ப்யூட்டி பார்லர் இருந்த தெருவுல வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ரம்யா அக்கா வரலை.
மத்தபடி நான் கவிதாவை தப்பா பார்க்கலை. ரம்யா அக்காவை கடத்தி கொலை செய்ய நினைக்கலை‌. ஏன் என்னை எல்லாரும் தப்பா நினைக்கறிங்க.” என்று அழுதான்.

சுதர்ஷனன் தீப்சரணை பார்வையிட, அவனோ, “என்னடா கதை விடறியா?” என்று நெருங்கினான்.
“சார்.. இந்த படிப்பு, இந்த டிரஸ் இதோ கழுத்துல போட்டிருக்கற தங்க செயின், ஏன் இந்த ஹேர் கட் கூட அக்கா செய்தது. அவ எங்களுக்காக அவ லைப்பை யோசிக்காம படிக்க வைக்கிறா. நான் தலை நிமிருற வரை அவ கஷ்டப்படுவதை அவ மனசால ஏற்றுக்கொண்டு செய்யறா.
நான் பி.இ முடிச்சிட்டு அக்கா பொறுப்பை நான் சுமப்பேனே தவிர, தப்பா எல்லாம் போக மாட்டேன் சார்.” என்று தேம்பினான்.

இம்முறை அவன் பேச்சில் அழுகை அடங்க மறுக்க, அந்த நேரம் ஆட்டோவில் ஆனந்தியும் மதுகிருஷ்ணாவும் வந்திறங்கி விஷால் பேசியதை கேட்டனர்.

“டேய்… விஷால்” என்று ஆனந்தி கூப்பிட, “அம்மா… ஏன் அம்மா அவசரப்பட்டு கத்துன. இப்ப பாரு கவிதாவுக்கு தெரிந்தா என்‌ முகத்துல முழிப்பாளா? அக்கா எங்கம்மா போனா? அவளிடம் நான் தப்பானவன் இல்லைன்னு சொல்லனும்மா” என்றான்.‌

"நீங்க ஏன் வந்திங்க?" என்று தீப்சரண் கேட்க, "சார் இரண்டு நாள் இவன் வரலை‌. ரம்யாவும் இப்ப காணலை. இவன் இங்க வர்றான் என்றதும் கவிதாவை சஞ்சனா சுவாதி பொறுப்புல விட்டுட்டு ஓடிவர்றேன். இவனை நேர்ல பார்த்து பேசலாம்னு. இவன் இப்படி சொல்லறான். எம் பொண்ணு எங்க சார் போயிருப்பா?" என்று கேட்டார்.

தெரியாத வினாவிற்கு அங்கே யார் பதில் சொல்வார்?

அதன்பின் சுதர்ஷனனோ “ரம்யா வேற எங்கயாவது போனாளா? இல்லை நெருங்கின சொந்தம்பந்தம்? ஏதாவது யாருடனாவது சண்டை சச்சரவு இருக்கா?” என்று கேட்டான்.

“அவ யாரிடமும் எந்த சண்டையும் போடமாட்டா தம்பி. அவ உண்டு அவ வேலையுண்டுனு இருப்பா.” என்றார்.

தீப்சரணோ போலீஸ் தொப்பியை கழட்டி மேஜையில் வைத்து, “ஒருத்தர் காணோம்னா யார் மேலயாவது சந்தேகம் விழும். ஆனா சந்தேகம் விழற ஆட்கள் எல்லாருமே ஏதாவது காரணத்தோட சந்தேகத்தை களைந்துட்டா, அந்த காணாம போனவங்க என்ன தான் ஆனாங்க? இல்லை விபத்து நிகழ்ந்து?” என்று யோசித்தவன், “ஏட்டு…. மிஸ்ஸிங் கேஸ் விட்டு தள்ளு. ஏதாவது ஆக்சிடெண்ட் கேஸ் பதிவாகியிருக்கா?” என்று கேட்டான்.

“நம்ம ஏரியாவுல இல்லை சார். வேற ஏரியாவுல ஏதாவது விபத்து நடந்து பெண் காயம், அல்லது இறந்தாங்களானு விசாரிக்கறேன்.” என்று ஸ்டேஷன் போனை சுழற்றினார்.

“சென்னையில் நிறைய விபத்து நிகழுது. அதுல ஏதாவது ரம்யா மாட்டியிருக்காளானு செக் பண்ணுவோம்.” என்று தீப்சரண் சற்று விஷாலை ஆசுவசப்படுத்தினான்.
தண்ணீரை புகட்ட, சுதர்ஷனனோ “இங்க பாரு.. உங்க அக்கா இப்ப இருந்தா உன்னை புரிஞ்சிருப்பா. நீ ஒருவேளை தப்பே செய்தாலும் மன்னிச்சி, இனி அது மாதிரி செய்யாம இருக்க அறிவுரை செய்திருப்பா.
அதனால் இரண்டுல எது நடந்தாலும் நீ மாறி நல்லபடியா அக்கா தங்கையோட வாழணும். அதனால் எதையும் யோசிக்காத. வீட்டுக்கு போய் கவிதாவிடம் இயல்பா பேசு.
அப்பறம் ரம்யா இல்லாத இந்த சமயம், நீ தான் அவ ஸ்தானத்துல இருந்து, குடும்பத்தை வழிநடத்து.

வெளிநாட்ல எல்லாம் பதினைந்து வயசுலயே பிள்ளைங்க சம்பாதிக்க ஆரம்பிச்சு தன்னை தானே பார்த்துக்கவும் செய்வாங்க. அப்படி பார்த்தா நீயும் பார்ட்டைம் ஜாப் பார்த்து நல்லா படிச்சு உன்னையும் வீட்டையும் சரியா பார்த்துக்கோ. குடும்ப தலைவரா அப்பா தான் பார்க்கணும்னா வீடு சூனியமா போகும். பொறுப்பு என்பது குடிக்காரனை திருத்தறதுக்கு உபயோகப்படுத்த வேண்டாம். அது நம்ம வேலையும் இல்லை. அவன் அவனுக்கு பொறுப்பு வந்தா அவனவன் திருந்தனும். திருந்தலையா…. போய் தொலை சனியனேனு விட்டுட்டு நம்ம சரியா இருந்திடணும். புரிஞ்சுதா” என்றதும் விஷால் தலையை ஆட்ட, மதுகிருஷ்ணன் துவண்டவராக மாறினார்.
இந்த நேரத்தில் நான் மாற முயல்கின்றேன் என்று கூறினால் கூட அபத்தம் என்று புரிந்து வெளியேறினார்.

தீப்சரணோ விஷாலையும் செல்ல கூறினான். ஆனந்தியோ, மகனை அழைத்துக் கொண்டு செல்ல நடை எடுத்து வைத்தார். விபத்து என்ற பட்டியலை எடுக்க காவல்துறைக்கு நேரம் எடுக்குமென்று, எதுவென்றாலும் உடனடி தகவலை வழங்க வேண்டி கோரிக்கை வைத்து சென்றார்.

“ரம்யா ஏதோ ஆட்டோல லாங் ஏரியாவுக்கு தானே போனதா அந்த ஷெர்லி வீட்ல சொன்னாங்க. ரொம்ப தொலைவில் எங்க போயிருப்பா? சுவாதிக்கு மேக்கப் போட போறதும் கேன்சல் ஆகியிருக்கு. பிறகு எங்க?” என்று தீப்சரண் புலம்பினான்.

சுதர்ஷனனோ “ஒரு விஷயம் இப்ப தான் நினைவு வருது சரண். மேக்கப் போடும் போது ரம்யா போனை எடுத்து பார்க்க மாட்டா. என்னிடம் ஒருமுறை சாட் பண்ணினப்ப எதுக்கும் ரியாக்ஷன் வரலைன்னு கேட்டதுக்கு இந்த பதில் சொல்லிருந்தா.
அதோட சைலண்ட்ல போட்டிருந்தா?” என்று வினவினான்.‌

“அப்படியிருந்தா சுவாதி வீட்டுக்கு தான் போயிருக்கணும். அவ தான் அங்க வரலையே.” என்று கூறினான்.

“அந்த ஏரியாவும் தூரம் தானே?” என்று சுதர்ஷனன் கேட்க, தீப்சரணோ “டேய் நான் முதல்லயே நினைச்சேன். நீ தான் அவ போன்ல அப்பவே பார்த்திருப்பா அதனால் தெரிந்திருக்கும்னு சொன்ன?” என்று நகம் கடித்தான்.

“சரி எதுக்கும் போன்ல கேன்சல் ஆனது தெரியாம, சுவாதி வீட்டுக்கு போக நினைச்சு அங்கயும் போகலைன்னா, அந்த ஏரியா பக்கம் விபத்து நடந்ததா கேளு. பர்டிகுலரா ஈ.சி.ஆர் பக்கம் விபத்து நடந்து ஏதாவது பொண்ணு ஹாஸ்பிடல்ல சோர்ந்திருக்கான்னு” என்றதும் சரண் அந்த ஏரிய காவலதிகாரியின் உதவியை நாடினான்.‌

என்ன நாடினாலும் ரம்யாவை பற்றி அவர்கள் அறிவது கடினம் தானே?

அப்பொழுது தான் நோட்டிபிகேஷன் சத்தத்துடன் நாளை நடக்குவிருக்கும் தொழிற்சாலை திறப்பு விழா ரத்து என்று சுவாதி எண்ணிலிருந்தா தீப்சரணுக்கு குறுஞ்செய்தி வந்தது.

“என்னடா இது. இந்த தொழிற்சாலை திறக்க அந்த பைரவ் சுவாதி ரொம்ப மெனக்கெட்டாங்க. இப்ப விழாவையே கேன்சல் பண்ணிருக்காங்க. ரம்யா மிஸ் ஆனதாலயா?” என்று தீப்சரண் கேட்க, சுதர்ஷனனோ “ரம்யாவுக்காக சுவாதி யோசிக்கலாம். ஆனா பைரவ் எப்படி சம்மதிச்சார்?

இப்ப நீயா இருந்தா என்னுடைய பிரெண்ட் ரம்யா சஞ்சனா பிரெண்ட். அதனால் நாம ஏதாவது மெனக்கெடலாம். அவருக்கு இந்த தொழிற்சாலை திறப்பு விழா தள்ளி வைப்பதா போட்டிருக்கார்னா ஏதாவது காரணம் இருக்குமா?” என்று கேட்டதும், “இரு… அங்க தானே சஞ்சு இருக்கா கேட்டு வைக்கறேன். அப்படியே விஷால் வந்தா நார்மலா இருன்னு இன்பார்ம் பண்ணிடறேன். கவிதாவிடம் எதையும் உலறிடப்போறா.” என்று கால் செய்து சஞ்சனாவிடம் தனித்து வரவழைத்து பேசினான்.

சஞ்சனாவும் “சரிடா… கவிதாவிடம் நாங்க எதுவும் விஷால் பத்தி பேசவேண்டாம்னு ஆனந்தி அம்மாவிடமும் சொல்லிடறேன்.‌
சுவாதி அவர் கணவரோட பிஸினஸ் ஓபன் செய்யற டேட் மாறியதுக்கு காரணம் சுவாதியோட அம்மா ரீசண்டா மயங்கி விழுந்ததால் டிராவல் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டா. அவங்க அப்சட்.
பைரவ் சுவாதியோட அம்மாவுக்காக தள்ளி வச்சிருப்பார். வீட்ல பெரியவங்க என்று இருப்பது அவங்க மட்டும் தானே‌” என்று எடுத்துரைத்தாள்.

அதுவும் சரியாக தோன்ற பேசிவிட்டு வைத்து, தீப்சரண் சுதர்ஷனனிடம் உரைத்தான்.

அதே நேரம் ஏட்டு “சார்…இரண்டு விபத்து வேற வேற இடத்துல நடந்திருக்கு. ஒன்னு ஸ்பாட் அவுட். இன்னொன்னு எமர்ஜன்சி கேஸ்னு ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்கு.” என்றான்.

“எதுக்கும் அந்த போட்டோஸ் அனுப்ப சொல்லு பார்ப்போம்.” என்று கூற, அப்படியே ஏட்டு அந்தப்பக்கம் உள்ள அதிகாரியிடம் கூறினான்.‌

அதன் பின் போட்டோஸ் சில நிமிடத்தில் வரவும், அதை பார்த்து “சுதர்ஷனன் ரம்யா தான்டா” என்று காட்டினான் சரண்.
சுதர்ஷனோ ஆனந்தம் கொண்டவன் சில அதிர்வை தாங்கி, இறந்துப்போனதா சொன்ன பொண்ணா? இல்லை விபத்து நடந்து ஹாஸ்பிடல்ல இருக்கற பொண்ணாடா?” என்று பயந்து கேட்டான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

தொடர்ந்து வாசிக்கும் அன்பானவர்களுக்கு நன்றி.

12 thoughts on “தேநீர் மிடறும் இடைவெளியில்-12”

  1. Acho sis semma twist oda mudichiteengaley ramya uyiroda erukala ellaiya yedhavudhu maatram erukuma Ella yerandhadhu ramya dhana🙄🤔🧐 seekirama next epi podunga sis 🙏

  2. M. Sarathi Rio

    தேநீர் மிடறும் இடைவெளியில்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 12)

    எனக்கு சிரிக்கிறதா, அழறதான்னே தெரியலை..? ஆனாலும் சிரிச்சிகிட்டே அழுதுறேன், இல்லையில்லை
    அழுதுட்டே சிரிச்சிடறேன்.
    ஏன்னா, ஒருத்தன் அழகா பாடியை யாருக்கும் தெரியாம பூசி மறைச்சிட்டான்னா, இன்னொருத்தன் ரொம்ப சொன்சியராத்தான் இன்வெஸ்டிகேட் பண்றான்.
    ஆனா, கொலைகாரனை ஐ மீன் ரம்யா பாடியைத்தான் கண்டே பிடிக்க முடியலை. இப்ப என்னடான்னா, ரோட் ஆக்சிடன்ட்ல இருந்த தகவல் வந்திருக்குங்கறாங்க.
    இதுல சுதர்ஷணன் வேற ஆக்கிசடன்ட் ஆகி செத்ததா, இல்லை அட்மிட் ஆனதான்னு கேள்வி வேற கேட்குறான்…
    என்னாத்தை சொல்ல போங்க.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. அநியாயமா இப்படி ஒரு அப்பாவியை தப்பா நினைச்சுட்டோமே!!… ரம்யாவா???… எப்படி ஃபோட்டோ வர முடியும்???… அடுத்த எபிக்கு வெயிட்டிங் கா!!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *