Skip to content
Home » தேநீர் மிடறும் இடைவெளியில்-13

தேநீர் மிடறும் இடைவெளியில்-13

அத்தியாயம்-13

சுதர்ஷனன் நெஞ்சில் பால் வார்க்கும் விதமாக விபத்துக்குள்ளாகி எமர்ஜென்சி பிரிவில் இருக்கின்ற பெண் என்ற தகவல் வரவும், இறைவனுக்கு நன்றி செலுத்தினான்.

தீப்சரண் மற்றும் சுதர்ஷனன் இருவரும் அந்த இடத்திற்கு விரைவாக செல்ல, அதற்கிடைப்பட்ட நேரத்தில் ரம்யா வீட்டிலும், ரம்யாவின் தோழிகளிடமும் ரம்யா விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.
அதோடு தீவிர அவசரப் பிரிவில் இருப்பதாக கூறினார். நேற்றிரவு ஹைவேஸில் அவளை கார் மோதி தூக்கி வீசப்பட்டு இப்பொழுது இந்நிலை இருப்பதாக தகவல் தெரிவிக்கவும் ரத்த உறவுகள், நட்புகள் உடனடியாக சூழ்ந்து வந்திருந்தனர்.

இங்கே பைரவிற்கு அதீத குழப்பம், அதெப்படி இறந்தப் போன ரம்யா உயிருடன் இருப்பதாக சரண் கூறுகின்றான்.
ஒருவேளை தன் வீட்டில் வந்ததை கண்டறிந்து இவ்வாறு நாடகம் நிகழ்ந்துகின்றானா என்று பயந்தான். போலீஸ் தன்னை மோப்பம் பிடித்துவிட்டதா? சுவாதி கேன்சலாகாமல் இங்கே வந்தது தெரிந்துவிட்டதா?

ஆனால் ரம்யா இறந்ததை பலவிதமாக ஊர்ஜிதப்படுத்தி, இரண்டு மணி நேரம் அவள் முன் அழுது கரைந்து, அவளை மனமின்றி போர்வையால் மூடிவிட்டு, அவளது உடைமைகள் எரிக்கப்பட்டு, கழிவுநீர் தொட்டியில் சாம்பலை கரைத்து, அவளை தன் அறையில் தன் மடியில், அழுது ஓய்ந்து, அதன் பின் காரில் ஏற்றி தொழிற்சாலைக்கு சென்று, அவன் கையால் புதைத்தது வரை நன்றாக நினைவில் இருக்க, இது யார் ரம்யா? என்று பயப்படாமல் இருக்க முடியுமா?
அப்படியே ரம்யா வந்ததாக இருந்தாலும், அவளை கற்பழித்திடவில்லை‌. அவளுமே ஒரு கட்டத்தில் சம்மதித்து நிகழ்ந்ததே‌. அதனால் எதையும் கையாளளாமென ஒரு குறுட்டு தைரியத்தில் கூடவே அவன் காரிலேயே ரம்யா உறவுகளை ஏற்றி வந்தான்.

ஆனந்தி உலகத்தில் உள்ள கடவுளுக்கு நன்றி தெரிவித்திருந்தார். குடும்பத்தின் ஆணிவேரே ரம்யா என்று வாழ்பவர் ஆயிற்றே.
கவிதாவும் அக்கா கிடைத்த சந்தோஷத்தில் புன்னகைத்தாள். அவளுக்கு ரோல்மாடல், அன்னைக்கு நிகரானவள் ரம்யா தானே.
மதுகிருஷ்ணா அவருமே மகள் கிடைத்த திருப்தியில் இருந்தார். இனியாவது குடிப்பழக்கத்தை நிறுத்தும் எண்ணத்தில் அவர் நிரந்தர முடிவெடுத்துவிட்டார்.

விஷாலோ அக்காவிடம் கவிதாவோடு அவனுக்கு ஏற்பட்ட சங்கடமான சூழ்நிலைக்கு, தன் நடத்தை காரணமில்லை என்று விளக்கம் சொல்லி புரிய வைக்கணும் என்ற எண்ணத்தில் இருந்தான்.

சுவாதியும் சஞ்சனாவும் தன் தோழி கிடைத்துவிட்டால், இப்பொழுது எந்த கண்டிஷனில் இருக்கின்றாளோ என்று பேசிக்கொண்டு வந்தார்கள். உயிருக்கு ஆபத்தில்லாத கட்டத்தை தாண்டவே மருத்துவரிடம் ஆலோசனை பெற துடித்தார்கள்.

பைரவ் தன் பயத்தை வெளிக்காட்டாமல், மௌனமாய் காரை இயக்கினான்.

இங்கு மருத்துவமனை வந்து அரக்கபறக்க வந்து சேர்ந்தார்கள். வரும்பொழுதே கண்ணீரை உடைப்பெடுத்து பொழிந்தனர்.

சுதர்ஷனன் ரம்யா உறவுகளிடம் “அவ இன்னமும் அன்கான்சியஸ்ல இருக்கா.” என்று தீவிர சிகிச்சை பிரிவுக்கு வெளியே அமர்ந்து பதில் தந்தான்.

சரணோ, ” அவ எங்கன்னே தெரியலைனு இரண்டு நாள் பைத்தியம் பிடிச்சிடுச்சு. இப்ப கிடைச்சிருக்கா அதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்க. அதை விட்டு‌… இங்க அழாதிங்க. ரம்யாவுக்கு சரியாகிடும்” என்று ஆறுதலாக பேசினான்.

அதன் பின் மருத்துவமனையில் தான் அங்கிருந்தவர்கள் வாசமிட்டது. ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் கழிந்தது. எவர் முகத்திலும் மலர்ச்சி இல்லை. எந்த நொடி என்னவாகுமோ என்று பதபதப்பாக இருந்தனர்.

பைரவ் நாளை நடக்கவிருந்த தொழிற்சாலை திறப்பு விழா ரத்தானதில், அறிந்தவர் தெரிந்தவர், ஆளாளுக்கு விசாரித்து போனை போட, பைரவ் மாமியாருக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தையே உரைத்தான். மருத்துவமனையில் பைரவிற்கு தொடர்ச்சியாக அலைப்பேசி அழைப்பு வந்தவண்ணமிருக்க, பைரவும் அதனை நிராகரிக்காமல் பேசி பதில் தந்து தன் பதட்டத்தை மறைத்துக் கொண்டிருந்தான்.

சுவாதி இதெல்லாம் கவனித்தவள், பைரவை தனியாக அழைத்து, “நீங்க வேண்டுமின்னா வீட்டுக்கு போங்க பைரவ். நான் ரம்யா பேமிலி கூட இருக்கேன். உங்களுக்கு ஹாஸ்பிடல் அட்மாஸ்பியர் பிடிக்காது இல்லையா?” என்று அவனை அனுப்ப நினைத்தாள்.

ரம்யாவை பைரவ் விரும்பியது எல்லாம் சுவாதி மட்டும் அறிந்ததால், அதனால் இங்கிருப்பவர்களில் பைரவ் மூன்றாம் மனிதன். அவன் இங்கே இருக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் கிடையாது.

தீப்சரண் அவன் நண்பன் சுதர்ஷனனுக்காகவும், அவன் ஏரியாவில் ரம்யா மிஸ்ஸிங் கேஸ் பதிவானதாலும் கூடவே இருக்கின்றான்.’ என்று பைரவை போக கூற, பைரவோ ரம்யா என்பவளை பற்றி அறியாமல், வீட்டிற்கு செல்ல இயலுமா? அப்படி சென்றால் தான் அவனால் நிம்மதியாக இருக்க முடியுமா?

“இல்லை சுவாதி உன் பிரெண்ட் கண் திறக்கவும் போறேன்” என்று உள்ளதைக் கூறினான்.

சுவாதிக்கு தான் பைரவ் ரம்யாவை விரும்பியது தெரியுமல்லவா! அதனால் அவன் கூடயிருந்தாலும் அமைதிக்காத்தாள்.
ஆனால் ரம்யாவிற்கு ஏதேனும் நிகழ்ந்தால், பைரவ் தன் காதலை வெளிப்படுத்தி மாட்டிக்கொண்டால்? சுவாதி இவ்வாறு எல்லாம் நினைத்து, அதை வெளிப்படையாக பைரவிடம் கூறி கூட அனுப்ப நினைத்தாள்.
அவனோ “சுவாதி… அதெல்லாம் நான் என்னை வெளிப்படுத்த மாட்டேன். அதோட நீ தானே என் மனைவி. இதுக்கு மேல அவளை எப்படி நேசிக்கறது? இதுல அவளை விரும்பின சுதர்ஷனன் வேற இங்க தானே இருக்கார். என்னை கண்ட்ரோல் பண்ணிப்பேன். ரம்யா ஜஸ்ட் உன் பிரெண்ட்” என்று நிதர்சனத்தை கூறினான். அந்த நிதர்சனம் இப்பொழுது தான் அவன் மரமண்டைக்கு உரைத்தது.

இந்த வார்த்தையை கேட்டு அவன் மனசாட்சி நக்கலடித்திருக்க வேண்டும். இதே ரம்யாவிற்காக தானே சுவாதியை விவாகரத்து கொடுத்து விடுவதாக காதல் மயக்கத்தில் பேசினாய். என்ன முரண்பாட்டான வார்த்தையடா? என்று சிரித்திருக்கும். ஆனால் இந்த நிலைமையில், அவன் பேசியதில் சுவாதி மனம் உவகைக் கொண்டது.

அவளுக்குமே பைரவோடு வாழ்ந்தாலும் பைரவ் மனதில் ரம்யா இருக்காளே என்ற தவிப்பு ஒரத்தில் தேங்கியிருந்தது. இன்று இந்த நிலையில் பைரவ் இப்படி பேச அகம் மகிழ்ந்தாள்.

இப்படியாக எல்லாருடைய மனதில் ஒவ்வொரு எண்ணத்தை விதைத்து ‘ரம்யா என்ற பெண்ணாக’ இவர்கள் பெயரிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடந்துக் கொண்டிருக்கும் பெண் காயத்துடனும் மருந்து உபகரணங்களுடனும், கிழிந்த நாறாக கிடந்தாள்.

நேரங்கள் நகர, கண் முழிக்க நாற்பத்திரெண்டு மணி நேரம் அவகாசம் தந்தனர் மருத்துவர்.

ஏதோ விபத்தில் தூக்கியெறியப்பட்டு இருப்பதாக தான் மருத்துவர் கூறி சென்றார்.

தீப்சரணுக்கும் வீட்டிலிருந்து அழைப்பு வந்துவிட்டது.
என்னயிருந்தாலும் அடுத்த வாரம் நிச்சயம் நடக்கவிருப்பவன் அல்லவா. அதோடு சஞ்சனாவையும் அவள் பெற்றோர் அழைக்க, வேறு வழியின்றி கிளம்பி, காலை வருவதாக ஆனந்தியிடமும் கவிதாவிடமும் உரைத்தார்கள்.

கவிதாவோ “இந்தளவு உதவியதே பெரிய விஷயம் அக்கா. நீங்க வீட்டுக்கு போங்க” என்று கூறினாள்‌. ஆனந்தியும் இனி நாங்க பார்த்துக்கறோம்மா” என்று திடமாய் பேசி வணங்கினார்.

இவர்கள் சென்றதும் சுவாதியையும் கிளம்ப கூறினான் விஷால்.

சுதர்ஷனனும் “நீங்களும் போங்க சுவாதி. என் ரம்யாவை நான் பார்த்துக்கறேன்” என்றான். இங்கே சஞ்சனா ஏற்கனவே பைரவிற்காக கிளம்பிடலாமா என்று சிந்தித்தவளே. அதனால் தயங்காமல் புறப்பட முற்பட்டாள்.

பைரவ் கிளம்பும் போது கூட “ஹாஸ்பிடல் பில் நாம பே பண்ணிடலாம் சுவாதி” என்று செவியில் உதிர்க்க, விஷாலிடம் அதை தெரிவித்தாள் சுவாதி.

அவன் சரியென்று கூற வரும் சமயம், சுதர்ஷனனோ “சுவாதி.. ரம்யாவுக்கு நான் இருக்கேன். நான் இந்த ஹாஸ்பிடல் பில் பே பண்ணிடுவேன். நீங்க இந்தளவு உதவ வந்ததே போதும்‌. அதோட ரம்யாவை இந்த முறை நான் துளியும் விட்டு நகரதா இல்லை” என்றுரைத்தான்.

அதை கேட்ட பைரவோ சுதர்ஷனனை கூர்ந்து ஆராய, சுதர்ஷனனும் பைரவை தான் ஆராய்ந்தான்.

தீப்சரண் கிளம்பியப்பின் ஆண் என்ற இடத்தில் விஷால் மதுகிருஷ்ணன், பைரவ் மூவர் தான் அங்கேயிருந்தார்கள்.
அதில் பைரவ் சற்று வித்தியாசமாய் நடப்பதாக தோன்றியது. தன் காதலிக்கு இவர் ஏன்‌ பதறுகின்றானென்று ஒர்நொடி தோன்றி மறைந்தது. அதன் வெளிப்பாடே இந்த ஆராயும் பார்வை.

சுவாதி பைரவ் இருவரும் சென்றதும், சுதர்ஷனன் அவ்விடத்தில் ரம்யாவை பாதுகாக்கும் பணியிலும் அவளுக்கு மருந்து மாத்திரை என்று செவிலியர் கேட்க, தேவைப்பட்டதை வாங்கி கொடுக்கும் பொறுப்பிலும் விஷாலோடு ஐக்கியமானான்.‌

கவிதாவும் ஒன்றிரண்டு வார்த்தை சுதர்ஷனனோடு பேசினாள். மரியாதை நிமித்தமாக அக்காவை விரும்புபவரை மாமா’ என்று அழைத்தாள். சுதர்ஷனன் கூட அந்த அழைப்பை வெகுவாக ஏற்றான். இனி ரம்யா எழுந்து வந்து காதலிக்கின்றேன் என்ற வார்த்தை உதிர்த்தால் போதும் என்ற பரவசம் அவனுக்குள்.

இரவு உணவை விஷாலும் சுதர்ஷனனும் பைக்கில் சேர்ந்து சென்று வாங்கி வந்து தந்தார்கள்.
இதில் மருத்துவமனையில் இத்தனை பேர் தங்க வேண்டாமென்று கூற, ஆனந்தியையும் மதுகிருஷ்ணனை வீட்டுக்கு அனுப்பினான்.

“ஆம்பள பசங்க நாங்க இரண்டு பேர் இருக்கோம். ரம்யா கண் திறந்தா கவிதா பக்கத்துல இரீந்து பார்த்துப்பா. நீங்க போங்க” என்று வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தான்.

ரம்யா உடனடியாக கண் திறக்கவில்லை.

அடுத்த நாளும் காத்திருக்க வைத்தாள்.
அவனுக்கு ரம்யா இறந்து விட்டாளா புதைத்தோமே, பிறகு இது யார்? என்ற குழப்பம் அதிகரித்தது.

அதற்காக புதைத்த இடத்தை தோண்டி மீண்டும் பார்க்க இயலுமா? இடத்தை சிமெண்ட் வைத்து மூடி, மேலே அழகிய வேலைப்படுக் கொண்டு பூசி வைத்து விட்டாயிற்று. இவன் தோண்டி துருவி காணும் நேரம், சுவாதி தொழிற்சாலையில் வந்தால் அவ்வளவு தான்.

இந்த ரம்யா கண்விழித்தால் தெரிந்திட போகின்றது என்று ரம்யாவாக இருந்தவளின் விழி திறப்பிற்கு சுதர்ஷனனை விட பைரவ் அதிகமாக எதிர்பார்த்தான்.

எதிர்பார்த்தவர்களை ஏமாற்றாமல் மெதுமெதுவாக இமையை அங்கும் இங்கும் உருட்டி, ரம்யா கண் திறந்தாள். பளிங்கு போன்ற மருத்துவ அறைகள். அதில் சுற்றி மருத்துவ உபகரணங்கள் அவளை மருத்துவமனையில் இருப்பதாக காட்டிட, சி..சிஸ்டர்’ என்ற வார்த்தையை உதிர்த்தாள்‌

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

13 thoughts on “தேநீர் மிடறும் இடைவெளியில்-13”

  1. Super sis nice epi 👌👍😍 edhu ramya ellaiyo vera yara erukum🧐🤔 oruvela avala mathiriye erukura ponna parpom enna nadakudhunu🤨

  2. M. Sarathi Rio

    தேநீர் மிடறும் இடைவெளியில்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 13)

    அய்யய்யோ..! அப்ப அது நிசமாவே ரம்யா தானோ..? ஒரே மாதிரி ஏழூ பேரு இருப்பாங்கன்னு சொல்லுவாங்களே..? ஒருவேளை, அந்த ஏழூல ரெண்டாவதோ…? இவங்க விட்டா நம்ம மூளையையும் சேர்த்து குழம்பு வைச்சிடுவாங்க போலயே..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Sssppppppaaahhhh sathiyama mudiyala sis, ippove kanna kattuthe

    Ramya thaana ithu, illa vera yaarumaa🙄🙄🙄🙄🙄🙄

  4. Inthu epti 🤔 apo pothachathu yaru ?
    Athu unmaiya ramya na apo ithu yaru ? Accident la unconscious aagi face mari ramya mari irrukura vayra ponna ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *