Skip to content
Home » தேநீர் மிடறும் இடைவெளியில்-18

தேநீர் மிடறும் இடைவெளியில்-18

அத்தியாயம்-18

  பாதர் சார்லஸ் கெவினிடம் நலம் விசாரித்து உரையாடினார்.
  “பாண்டிசேரிக்கு ரீனாவையும் அழைச்சுட்டு வந்திருக்கலாம் கெவின்.” என்று சாந்தமாய் கேட்டார்.

  ‘அந்த ஓடுகாலி எங்க ஓடிப்போனாளோ. இங்க வந்து அழுதுயிருப்பானு பார்த்தா, இவன் கூட இல்லை. நடுவுல போதை மருந்து எடுத்துக்கிட்டது தப்பா போச்சு. அவளை சாதாரணமா நினைச்சிட்டேன். இப்ப இங்க இந்த கிழவன் வேற அவளை பத்தி விசாரிக்கறான். காணோம்னு சொன்னா என்ன ஏதுனு விசாரிச்சு போலீஸ் கம்பிளைன் தருவானோ?” என்று உள்ளுக்குள் முனங்கி, “இல்லை பாதர் அங்க அவளுக்கு நிறைய வேலையிருக்கு. நானுமே அலசரமா வேலை விஷயமா வந்தேன்.” என்று மழுப்பினான். இங்கு வந்தபோது இவரை தவிர்க்க மறைந்து நின்றான். ஆனாலும் மாட்டிக்கொண்டான்.

  அதற்கு பாதர் சார்லஸோ, ”இருக்கட்டும் கெவின். அதுக்காக ஊருக்கு போனப்பிறகு ஒரு போன் கூட பண்ணலை. இங்க இருந்தவரை வாரம் தவறாம சன்டே சர்ச்க்கு வந்துடுவா. நீங்க போனதும் ஒரு போன் கூட இல்லை. இரண்டு தடவை மெஸேஜ் மட்டும் பண்ணிருந்தா. நல்லாயிருக்கேன் பாதர்னு அதுக்கூட நான் நலம் விசாரிக்கவும் நேரம் கழிச்சு பதில் தந்தா.” என்று வருத்தமாய் உரைத்தார்.

  ரீனாவின் போனை தான் கெவின் வைத்திருந்தான். அவன் தான் ரீனாவை போல பதில் அனுப்பினான்.

  ரீனா காணவில்லை என்றதும் நேராக பாண்டிசேரி வந்தான். ஆனால் பாதரிடம் அடைக்கலமாய் வரவில்லை என்று அவர் பேச்சிலேயே அறிந்து திரும்பிவிட்டான். அதன் பின் ‘ஓடுகாலி என்னிடம் மாட்டக்கூடாதுனு மறைஞ்சு வாழறா‌’ என்று சலித்துக்கொண்டு ஒரு பக்கம் தேடினான். அந்த நேரம் சார்லஸ் பேச குறுஞ்செய்தியிலேயே பதில் தந்தான்.
  இங்கு வரும் பொழுது கூட எதச்சையமாக ரோட்டில் சந்தித்த சார்லஸ் ரீனாவின் நலத்தை கேட்டு பார்த்தார். ரீனாவுக்கு அவள் செய்யும் பூவேலைப்பாடு பிசினஸ் அமோகமாக செல்வதால் விடுமுறை கிடைப்பதில்லை என்று அண்ட புளுகு ஆகாச புளுகை கதையாக கதைத்தான்.

சார்லஸ் என்ன ரீனாவை பெற்ற தந்தையா? ஆசிரமத்தில் வளர்ந்த ரீனாவை வீடு தேடி சென்று பார்த்து நலம் விசாரிக்க, அவருக்கு ஆசிரமத்தை நிர்வகிக்கவும், ஞாயிறு தோறும் இயேசுவின் புகழை பரப்பவும் நேரம் சரியாக அமையும்.
  இதில் சர்ச்சில் திருமணம் செய்து வைப்பவரும் அவரே. அதனால் அவர் நேரம் ஒதுக்கி ரீனாவை காண வரமுடியவில்லை. அப்படியிருந்தும் தொலைப்பேசியில் பேசினார். அதற்கு கெவின் பதிலளிப்பான் என்று ஆருடமா தெரியும்.
   போனில் பேச மறுக்கின்றாளென்று அவராகவே புரிந்துக்கொண்டார். கெவின் சற்று போதையின் பிடியில் இருப்பதை ரீனா சொல்லாமல் போனாலும் ஓரளவு அங்கிருந்தவர்கள் சொன்னதால் அறிந்தக்காரணம்.

இன்று கூட ரோட்டில் சந்திக்காமல் இருந்தால் கெவின் அவன் வேலையில் மூழ்கியிருப்பான்.

  தற்காலிகமாக ஒருத்தியோடு லிவ்இன் ரிலேஷன்ஷிப் என்ற போர்வையில் வாழ்கின்றான். அதனால் ரீனாவின் தேவை அதிகம் தேவைப்படவில்லை. ‘நேர்ல என்னைக்காவது மாட்டுவா. அப்ப புரட்டி எடுக்கறேன்’ என்று மிதப்பாய் இருந்தான். அதனால் சார்லஸிடம் பதவிசனமாய் பேசி கழண்டுக்கொண்டான்.

   நாட்கள் பறந்தோடியது…
 
  ரீனா கெவினை விட்டு மறைந்து வாழ ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆனது.

  இங்கு ரீனாவான ரம்யா சுதர்ஷனன் அன்பில் திளைத்திருந்தாள்.

  மனதிற்குள் தினமும் ரம்யாவுக்கு நன்றி உரைத்தாள்.
  இந்த மூன்று மாதத்தில் அவளது திருமண வாழ்வில், அத்தனை மாற்றம்.
  கெவின் எல்லாம் கேடுகெட்டவன். பெண்ணை மதிக்க தெரியாத மடையன், சுதர்ஷனன் பெண்ணை ஆராதிப்பவன், அன்பானவன் என்று பிரித்தறிந்து, ஏதோ காதலித்து சுதர்ஷனனை மணந்தவளாக மாறிப்போனாள்.

  ஏனோ அவளுக்கு சுதர்ஷனன் பணத்தில், வீட்டுக்கு அடக்கமான பெண்ணாக உலாவவே பிடித்திருந்தது. சொல்லப்போனால் ரீனாவாக இருந்த காலத்தில், விரைவில் வேலைக்கு சென்று தன் வயிற்றை தானே பசித்தீர்க்க பாடுபட்டு உழைத்தவளுக்கு, இந்த வீட்டில் சமைத்து கணவனுக்கு ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்வதும் மாமிய்ரை கவனிப்பதும் இன்பமாக நினைத்தாள்.

  சாதாரண மனைவி, அதுவும் அன்பான சுதர்ஷனனின் மனைவி என்ற அடையாளத்தோடு வாழ்வது பேரானந்தமாய் இருந்தது.

   முதல் மாதம் தீப்சரண் வீட்டில் விருந்துக்கு சென்றனர். அங்கே அவ்வீட்டின் மருமகளாக சஞ்சனா வந்து ஒரு வாரத்தில் நடைப்பெற்றது.
   அடுத்து சுவாதி வீட்டில் விருந்துக்கு இரு தோழியையும் அழைத்து விட்டாள்.

  பீச் பங்களாவில், ஒரு நாள்‌ முழுக்க நேரம் செலவழிக்க சஞ்சனாவுக்கு விருப்பமே. ஆனால் ரீனாவான ரம்யாவுக்கு பிடிக்காது. ஆனால் விருந்து உபசரிப்புக்கு அழைத்தால் போக வேண்டுமே.
  சுதர்ஷனன்-ரம்யா வேறு வழியின்றி சம்மதம் கூறிவிட்டார்கள். இந்த தீப்சரண் தான் ‘லீவு தரமாட்டேங்கறாங்க டா’ என்று நாட்களை கடத்திக்கொண்டே இருக்கின்றான்.‌

  பைரவ் அதற்காக கவலைப்படவில்லை‌. சுதர்ஷனன், அதோடு ரம்யா பெயரில் உள்ள அந்த பொண்ணு வருவதை அவன் விரும்பவில்லை.
   ரம்யா போன்றவளை பார்த்தால் குற்றவுணர்வும், பயமும் பெருகுவதை தவிர்க்கவே, பைரவ் ‘எப்ப வந்தாலும் முன்கூட்டியே எனக்கு இன்பார்ம் பண்ணிடு சுவாதி’ என்று கூறி அவளது வயிற்றில் கைவைத்தான்.

   பைரவின் உயிர் சுவாதி வயிற்றில் வளர்வதில் திக்குமுக்காடி உள்ளான். அதனால் ரம்யாவை பற்றி சற்று மறக்க முயன்றான்.‌
 
     அன்று தீப்சரணும் சஞ்சனாவும் விருந்துக்கு வருவதாக உரைத்துவிட்டனர்.

   அதனால் சுதர்ஷனனும் மறுக்க வழியின்றி நண்பனோடு, தன் மனைவியை அழைத்து சென்று வந்திடலாமென நினைத்தான். ஏனெனில் தனியாக ரம்யாவோடு சுதர்ஷனன் சுவாதி வீட்டுக்கு செல்வது அரிது என்று அவனுக்கு புரிந்தது.

   அதனால் விருந்துக்கு தயாரானார்கள்.

  அதே ஈ.சி.ஆர் ரோட்டில் பயணம். ரீனாவுக்குள் பயபந்து பிரவாகித்தது. சுதர்ஷனனை கெட்டியாக பிடித்துக்கொண்டாள். “ஏ மியா குட்டி. பைக்ல ஏறியதும் அணைச்சிட்டு வாடின்னா மறுத்த. இப்ப ஈ.சி.ஆர் வந்ததும் அணைச்சிக்கற” என்று சில்மிஷமாய் ஆரம்பித்தான்.

  “இல்லைங்க… விபத்து நிகழ்ந்த ரோடுனு பயம்” என்று கூற, அச்சோ நீ என் மேல காதலில் அணைச்சேன்னு நினைச்சேன். பூனைக்குட்டி டிஸ்அப்பாயிண்ட் பண்ணிட்ட” என்று இலகுவாய் பேசி அழைத்து வந்தான்.

     பைரவ் வீட்டில் ரம்யா நுழையவும், அவனுக்குள் திக்திக் நிமிடங்களாக மாறியது.

  மறந்த விஷயங்கள் எல்லாம் மீண்டும் கண்முன் விரிந்தது.
  ‘இதுக்கு தான் இவ சங்காத்தமே வேண்டாம்னு இருந்தேன்’ என்றது பைரவ் மனம். ‘தோழிக்கு விருந்து வைப்போம் மருந்து வைப்போம்னு இந்த சுவாதி இருக்காளே’ என்று கர்ப்பஸ்திரியை திட்டினான்.

    ரீனாவுக்கும் கடலை கண்டதும் பாண்டிசேரி நினைவு வராமல் இல்லை. ஆனால் சுதர்ஷனன் கைப்பிடியில் கெவினை எல்லாம் மறந்துவிட்டாள்.
தீப்சரணும் சுதர்ஷனனும் நண்பர்கள் என்பதால் இருவரும் பேசுவதற்கு குறைச்சலில்லை. சுவாதி கர்ப்பமாக இருப்பதால் பைரவ் பார்த்து பார்த்து பணியாட்கள் மூலமாக உணவை தயாரிக்க மெனு கொடுத்துவிட்டு, மேற்பார்வையாக வெல்கம் டிரிங் ஸ்டாடர்ட் கொரிக்க கொடுத்தான்.
  கடலில் கால் வைத்து பழங்கதைகளை பேசி சிரித்து, சரணும் சஞ்சனாவும் நீரில் ஆடினார்கள்.

  சுதர்ஷனன் ரீனாவை அழைத்தற்கு அவளோ ”இல்லைங்க… குர்தி ஈரமாகிடும். ஜீனும் நனைந்திடும். எனக்கு ஈரத்தில் நசநசன்னு இருக்க பிடிக்காது. அதோட ஒத்துக்காது.” என்று மறுத்தாள்.

ஆஸ்துமா இருப்பதால் அவனுமே பிடிவாதம் பிடிக்கவில்லை.
   மணலில் வீடு கட்டி, சுவாதியோடு பேசி மகிழ்ந்தார்கள்.
சுவாதியிடம் குழந்தைக்காக நன்றாக சாப்பிட கூறினாள். பைரவிடம் கூட ஓரிரு வார்த்தை பேசினாள்.

   மதியம் உணவும் தடபுடலாக ஒரு நட்சத்திர ஹோட்டலை போல ஜமாய்த்திருந்தனர்.

  சஞ்சனாவோ ”முன்னயெல்லாம் ரம்யா வெஜிட்டேரியன் தான் சாப்பிடுவா. இப்ப எல்லாம் நான்வெஜிடேரியன் கூட நல்லாவே சாப்பிடறா” என்று கூற, ரீனாவுக்கு திக்கென்றது. ரம்யா ஒரு வேளை வெஜிட்டேரியனாக‌ வளர்ந்தாளோ என்று நினைக்க, சுதர்ஷனனோ ”விபத்து நடந்து உடலை தேற்ற அத்தை நான்வெஜிட்டேரியனை சாப்பிட கொடுத்து பழகிட்டாங்க சஞ்சனா.” என்று ரம்யாவுக்கு பதிலாக சுதர்ஷனன் கூறினான்.

    ‘கடவுளே என் முகமூடியை கிழிச்சிடாத. காலத்துக்கும் இதே முகமூடியோட என்னை வாழவிடு” என்று சிலுவை போட, அதை பைரவ் கவனித்தான்.

  பைரவ் இதற்கு முன்னும் ரம்யா போன்றவள் சிலுவை போடுவதை கவனித்திருந்தான். இன்று அவன் கவனித்து விட்டதை ரீனாவும் கவனித்துலிட்டாள்.  

  ‘எ… எம் மதம்மு சம்மதம்” என்று கஷ்டப்பட்டு சிரித்தாள்.

  பைரவோ ‘இவளுக்கு மொத்தமா மறந்துட்டாளா? இல்லை மறக்கற மாதிரி நடிக்கறாளா?’ என்று “ரம்யா.. ரம்யா?” என்று கூப்பிட்டான்.
 
  “எ..என்ன பைரவ்” என்று எச்சிலை கூட்டி விழுங்கினான்.

 “ஏதாவது பழைய நினைவு ஞாபகம் வந்ததா?” என்று கேட்டான்.

  ரீனாவிடம் மௌனம் எஞ்சியது. “இ‌ல்லை.” என்று கூறிவிட்டு சுதர்ஷனனை தேடினாள்.

  அவன் தீப்சரணோடு கதையளபந்துக் கொண்டிருந்தான்.

  “எவ்வளவுக்கு எவ்வளவு என்னை வெறுத்து ஒதுக்கினாளோ இப்ப அந்தளவு காதலிக்கறா சரண். இந்த வாழ்க்கை போதும். ஒருவேளை காலேஜ் படிக்கறப்பவே ரம்யா என்னை விரும்பறதா சொல்லியிருந்தா, நான் வெறிக்கொண்டு உழைச்சிருக்க மாட்டேன். காலை இரவுன்னு இரண்டு ஷிப்ட் வேலை செய்து வீடு வாசல்னு வாங்கியிருக்க மாட்டேன். சுதர்ஷனன் இப்ப சொந்த வீடு, பைக் வாங்கியிருக்கேன். பேங்க் பேலன்ஸ் இருக்கு. அடுத்து சொந்தமா கார் வாங்க போறேன். எல்லாமே ரம்யா என் காதலை மறுக்கவும் என்னிடம் இல்லாததை பெற எடுத்த முயற்சியா மாத்திக்கிட்டேன்.” என்றா பேசினான்.‌

  “பெருமையா இருக்கு டா. இதே மத்தவங்க என்றால், பாரு காரு‌பணம் வீடு வாங்கிட்டேன்னு ரம்யாவை இகழ்ந்திருக்கலாம். ஆனா நீ ரம்யாவை யோசித்து அவ பேசியதிலும் நியாயம் இருக்குன்னு புரிஞ்சு நடந்த. கார் என்னடா கார். வாழ்க்கையில் இதே காதல் நட்பு உறவு சந்தோஷம் இதான் முக்கியம். நீ எப்பவும் இப்படி சந்தோஷமா இருக்கணும்” என்றான் தீப்சரண்.

  சுதர்ஷனனின் பள்ளிக்காலத்தில் பழகியவன். அவனது நிலைமையை அறிந்து பழகியவன். இன்று முன்னேறியதற்கு ரம்யாவும் ஒரு காரணம்.
  அவளது தெளிவான தேவையை அவள் விளக்கினாள்‌ அதோடு சுதர்ஷனனும் அதை அவமானமாக நினைக்காமல், தன்னை உயர்த்தவே முனைந்தான்.
  இப்பொழுது நைட் ஷிப்ட் போவதில்லை.
 
  மூன்று ஜோடியும் அடுத்து மாயாஜாலில் படம் பார்க்க பைரவ் டிக்கெட் எடுத்திருந்தான்.
  எல்லாம் சுவாதியின் வற்புறுத்தலில் எடுத்தது.
  சுவாதி கர்ப்பமாக இருப்பதால் வீட்டிற்குள்ளே கண்ணும் கருத்துமாய் பைரவ் பார்த்துக்கொள்ள, வெளியை எங்கும் அழைத்து செல்லவில்லை. அதன் காரணமாக தோழிகளோடு படம் பார்க்க ஆசைப்பட்டாள்‌.
  அதன் காரணமாக அங்கு வந்திருந்தனர்.

பைரவ் பார்வை யாரிவள் இவளுக்கு பழைய நினைவு வரவில்லையா? என்று வழக்கம் போல ரம்யா போன்றவளை ஏறிட்டான். பைரவ் போலவே அங்கே மற்றொரு கண்கள் அவளை கண்டதும் கோபம் கொப்பளிக்க பார்வையிட்டது. அது கெவின் என்று தனியாக சுட்டிக்காட்ட அவசியமில்லாமல் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

கெவின் ரீனா பக்கத்தில் ஆவேசமாய் வந்தவன், “இங்க தான் இருக்கியா? என்னடி இது நெற்றில பொட்டு, குங்குமம் என்ன மதத்தையே மாத்திட்டியா?
  அடிப்பாவி? தாலியா?” என்று நெஞ்சு பக்கம் இருந்த தாலி மீது கை வைக்க சென்றான்.

மற்றொரு கை தடுக்க முனைந்தது.

-தொடரும்.

16 thoughts on “தேநீர் மிடறும் இடைவெளியில்-18”

  1. அச்சோ மாட்டிக்கிட்டாள் 😩 சுதர்சன் கெவினை ஒரு நாலு
    அடியாவது அடிக்கட்டும்
    மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக சிறப்பு சிஸ் அடுத்த பகுதிக்கு மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்

  2. Ada pavi unga kannula pattutala Iva😤
    Dai sutha avana adichu norukku da …ivanlam oru alu yarum atharavu illatha poona pathu payriya yokiyan mari Ivan nalla valkai kudukkara range ku nadanthukkaran 😡 deepu ne police thana un power katti avana thuki rendu nall uilla vai da ….

  3. Kalidevi

    Pochi ivan kanula matikitta ipo ithula irunthu eppadi thapika pora . apo eranthathu reena nu mathiduvangala aanalume kandu pidikanume body ah athula bhairav matuvan . ithellam iruku but nalla fast ah move aeitu irunthuchi story crt time ku kevin vanthutan adutha move ? papom

  4. Kalidevi

    Pochi ivan kanula matikitta ipo ithula irunthu eppadi thapika pora . apo eranthathu reena nu mathiduvangala aanalume kandu pidikanume body ah athula bhairav matuvan . ithellam iruku but nalla fast ah move aeitu irunthuchi story crt time ku kevin vanthutan adutha move ? papom

  5. M. Sarathi Rio

    தேநீர் மிடறும் இடைவெளியில்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 18)

    அச்சோ….! பல நாள் திருடன், ஒருநாள் பிடிபடுவான்ங்கிறது இதைத்தானோ….? சுதர்ஷணன், பைரவ் & சரண் கிட்ட கூட தப்பிச்சிடுவா போல, இந்த கெவின் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது போலவே…?

    இப்ப என்ன செய்யப் போறா.?
    ரம்யா மாதிரியே பொய்யை மெயின்டெய்ன் பண்ணினாலும், அப்ப ரீனா எங்கன்னு கெவின் கம்ப்ளையிண்ட் கொடுத்தாலும்,
    ரம்யா எங்கன்னு மத்தவங்க கேட்டாலும், எப்படியும் மாட்டிடுவா போலவே…?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *