Skip to content
Home » தேநீர் மிடறும் இடைவெளியில்-20(முடிவுற்றது)

தேநீர் மிடறும் இடைவெளியில்-20(முடிவுற்றது)

அத்தியாயம்-20

ரம்யாவான ரீனாவுக்குள் ‘ரம்யா என்ன ஆனாள்?’ என்று யோசித்தாள். தனிமையாக இருக்கும் தருணம் எல்லாம் இதே சிந்தனை. இதில் ‘கெவின் திரும்ப வருவானா? பைரவ் ஏன் தனக்கு ஆதரவாய் பேசினார்’ என்ற வாரங்கள் சென்ற பின்னும் கேள்விக் குடைந்தது.

சுதர்ஷனன் சட்டை பட்டனை திருகி, “ஏங்க சுவாதி சஞ்சனா என் பெஸ்ட் பிரெண்ட்ஸ். அது போட்டோல பார்த்தாலே தெரியுது. உங்க பிரெண்ட் தீப்சரண், சுவாதி ஹஸ்பெண்ட் பைரவிடம் இதுக்கு முன்ன நான் எப்படி பேசுவேன்?” என்று கேட்டுவிட்டு பயந்தாள்.

சுதர்ஷனன் உதட்டை வளைத்து பிடித்து, “தீப்சரணை நீ காணாம போன ஒரு நாளைக்கு முன்ன தான் அவனை நேர்ல பார்த்த. அதுக்கு முன்ன சஞ்சனா விரும்பறது மட்டும் உனக்கு தெரியும். மத்தபடி அவனை நீ நேர்ல பார்த்ததில்லை.

பை..ரவ்.. அப்படியில்லை‌. அவரிடம் நீ டிஸ்டன்ஸோட தான் பழகுவ.” என்று முத்தமிட, “ஏன் அப்படி? அவருக்கு முன்னவே கல்யாணமாகிடுச்சே. அப்படின்னா அவரை நான் முன்னவே பார்த்து பழகியிருக்கணும்ல?” என்று கேட்டாள்.

“ம்ம்.‌.‌ பழகியிருக்க. ஆக்சுவலி அவர் சுவாதியை விரும்பறதுக்கு முன்ன உன்னை தான் லவ் பண்ணினார். நீ என்னை விரும்பி நோ சொன்னதை வச்சி, சுவாதி அவரிடம், நீ ‘அவரை விரும்பமாட்ட’னு சொல்லிருக்கா. அவர் இரண்டு மூன்று முறை உன்னிடம் காதலை சொல்ல ட்ரை பண்ணி வந்து ப்லாவ் ஆகிடுச்சு. அவரா உன்னிடம் லவ் பிரப்போஸ் பண்ணலை‌.

உனக்கு அப்பறம் அவரை சுவாதி காதலித்து மணந்துட்டா. இந்த சுவாதி அதை ஒருமுறை உன்னிடம் இலைமறையா சொல்ல, நீ அவரிடம் அதிகம் பழகமாட்டனு சஞ்சனா இதை சரணிடம் ஒன்ஸ் சொல்லிருந்தா. அவன் என்னிடம் பேசறப்ப சொன்னான். அதனால் தான் பைரவ் உனக்கு மெடிக்கல் ஃபில் பே பண்ண முன் வந்தப்ப பணத்தை மறுத்துட்டேன். அவர் ஹாஸ்பிடல்ல நின்றப்பவும் உன்னை பார்த்துக்க நாங்க இருக்கோம் நீங்க கிளம்புங்கன்னு துரத்தியது.
இந்த காரணத்தால தான் அவர் தொழிற்சாலை திறப்பு விழாவுக்கு அதிக நேரம் இருக்க மாட்டேன்னு சொன்னேன். ஏன் அவங்க வீட்டு விருந்துக்கு கூட நோ சொன்னது.

அவன் விரும்பியது யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கான். எல்லாம் தெரியும். என்ன செய்ய, தெரிந்ததா காட்டிக்கிட்டா உங்க நட்பு கெடும்னு வேடிக்கை பார்ப்பேன்.

நாட் பேட்… பைரவ் முன்ன மாதிரி இல்லை. முன்ன அவன் கண்ணுல உன்னை பார்த்தா காதல் வழியும். ஏன் காமம் கூட சொட்டும். இப்ப அதெல்லாம் அவன் கண்ணுல தெரியலை. உனக்கு அவனை தெரியுதா இல்லையானு தான் கழகு மாதிரி கூர்ந்து பார்க்கறான்.

இப்ப எதுக்கு அவனை பத்தி? அவனிடம் முன்னவே நீ டிஸ்டன்ஸ் விட்டு தான் பழகுவ. இனியும் அதையே மெயின்டெயின் பண்ணு” என்று கழுத்தில் கட்டிக்கொண்டான்.

“சும்மா… மத்தவங்களை தெரிந்துக்க கேட்டேன். எனக்கு தான் எதுவும் நினைவு வரமாட்டேங்குதே.” என்று முகபாவணை மாற்ற முயன்றாள்.

“ஏன்… பைரவ் ஏதாவது பேசினாரா? அன்னைக்கு… மாயாஜால்ல… வெளியே நின்றப்ப யாரோ பேச வந்தப்ப, பைரவ் தான் பதில் தந்தார். நீ கூட, போன் எடுத்து காட்டின. நானா என்ன ஏதுனு கேட்கலாம்னு பார்த்தேன். ஆனா படம் போடறப்ப தேவையில்லாம பேச்சு வேண்டாம்னு ஒதுக்கிட்டேன். அப்பறம் கூட கேட்க தோணலை. ஏதாவது என்றால் நீயா சொல்லிருப்பன்னு நினைச்சேன். ஆமா.. என்ன பேசினிங்க” என்று கேட்டதும் தானாக மாட்டிக் கொண்டதை போல விழித்தாள்.

“அது.. யாரோ ஒருத்தன் என்னவோ கேட்டான். நான் பதில் சொல்லறதுக்கு முன்ன பைரவ் உதவி செய்தார். அவன் அப்படியே போயிட்டான்.‌ பைரவ் அதை தவிர, எதுவும் பேசலை.” என்றாள்.

சுதர்ஷனன் அதை கேட்டு யோசனையாக தலையாட்ட, “ஏங்க.. அவர் என்னோட பேசறதை மொத்தமா தவிர்க்கவா?” என்று கேட்டாள்.

“பச் அதெல்லாம் வேண்டாம். என்னனா என்ன என்ற லிமிட்டா பழகிடலாம். சுவாதிக்காக சிலதை பார்க்கணும்ல” என்று கூற, ஆமா என்பதாய் சொல்லிக்கொண்டாள்.

‘இந்த பைரவ் ரம்யாவை விரும்பிருப்பதால் தான் என்னை அடிக்கடி வித்தியாசமாக பார்க்கின்றாரா?’ என்று நிம்மதி அடைந்தாள்.

ரீனாவுக்கு தான் தன்னை ரம்யா இல்லை என்ற விதத்தில் பைரவ் காண்பதாகவே தோன்றியதால் இந்த விஷயம் ஏற்புடையதாக இருந்தது. இந்த ஐயம் தெளியவும், சுதர்ஷனனின் மார்போடு ஒன்றிக்கொண்டாள்.
அவனுமே உச்சந்தலையில் முத்தமிட்டு இறுக்கி அணைத்துக் கொண்டான்.


   இங்கு பைரவோ கெவின் கூறியதை வைத்து, ரீனாவை பற்றிய விவரம் பைரவிற்கு ஓரளவு தெரிந்துப் போனாலும், நேரிடையாக ஒருமுறை யாருமறியாமல், பாண்டிசேரி வந்து விசாரித்தான்.

  தன்னை பற்றி எல்லாம் அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் நாசூக்காய் விசாரித்தான்.
எல்லாமே கெவினை பற்றி கேட்க, ‘அவனா சார் முதல்ல குடிப்பழக்கம் மட்டும் இருந்துச்சு. எப்ப டிரக்ஸ் சவகாசம் கிடைச்சதோ ஆளே மாறிட்டான். இதுல அந்த பொண்ணை அடிப்பான் உதைப்பான். பாவம் சார் அந்த பொண்ணு பாதர் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சார்னு, அவரிடம் சொல்லாம மறைச்சது. இப்ப வேற ஊருக்கு போயிட்டாங்க. அங்கயாவது சந்தோஷமா இருந்தா சரி.” என்று கெவினை பற்றி மாறி மாறி குற்றம் சாட்டும் விதமாய், அதே விஷயத்தை புலம்பி தள்ளினார்கள்.

  பாண்டிசேரியிலிருந்து கெவினிடம் தொடர்பு கொண்டு பாதர் பேசுவதாக கூறி ரீனாவிடம் பேச வேண்டும் என்று நச்சரித்தான். எத்தனை காலத்துக்கு ரீனா இருப்பதாக நடிக்கின்றான் என்ன சொல்லி சமாளிக்கின்றான் என்றெல்லாம் அறிந்திடும் ஆசையில் இருந்தான் பைரவ்.

  கெவின் அப்படி இப்படி சமாளித்து பேச, பைரவின் துருவிதுருவி கேட்ட கேள்விக்கு எரிச்சலடைந்து, “பாதர் அவ வேலைக்கு போயிட்டா. சும்மா சும்மா நச்சரிக்காதிங்க. அவ உங்களோட சப்போர்ட் இருப்பதால் தான் தலையில் ஏறி ஆடுறா. அதான் உங்களை தவிர்க்க பார்க்கறேன். அவளுமே என் சொல்லுக்கு கட்டுப்பட்டு, உங்களிடம் பேசாம இருக்கா. புரிஞ்சுக்கோங்க.” என்று கூறி துண்டித்து விட்டான். பைரவ் சிரித்துக்கொண்டே ‘அடப்பாவி, பொண்டாட்டி காணோம் என்றால் போலீஸ்ல புகார் தரணும். ஆனா இவன், அவன் மேலயே அந்த பொண்ணு புகார் தந்துடும்னு அவ என்னமோ கூடவேயிருப்பதா பொய் சொல்லிட்டு திரியறான்.

  ம்ம்ம்… இருக்கட்டும் இதுவும் நல்லது தான். என்னைக்காவது பிரச்சனை வந்தா, அப்ப இதெல்லாம் யூஸ் ஆகும். ரம்யா உயிரோட இருக்க சுதர்ஷனன் தீப்சரணே சாட்சி.

ரீனா உயிரோட இருக்க, இந்த கெவின் சொல்லற பொய்கள் எனக்கு வசதியானது. என்னைக்காவது பிரச்சனை எழும்பும் போது, இந்த நாட்கள் வரை ரீனா கெவின் கூடவேயிருந்தானு பாதர் சொல்வார்.’ என்று நிம்மதிக் கொண்டான்.‌

தனக்கு கிடைத்த இதே நிம்மதி அந்த பெண் ரீனாவிற்கும் கிடைக்க வேண்டுமல்லவா?!
அவளுமே எப்பொழுது வேண்டுமென்றாலும் ரம்யா வரலாம் தான் துரத்தப்படலாமென்ற அச்சம் சூழ்ந்தே சுதர்ஷனனோடு வாழ்வாள். அந்த அச்சத்தை தூரயெறிய வேண்டும் என்று சிந்தித்தான்.

  அதே கையோடு ரீனாவை தேடி வந்தான். ரீனா சுதர்ஷனன் அம்மா சாரதாவோடு கோவிலுக்கு வந்திருந்தார்கள்.

 தனது பேனாவில் மடமடவென சிலதை எழுதினான். எழுதியதை மடித்து, சாரதா இல்லாத சமயம் பார்த்து, ஒரு குழந்தையிடம் கொடுத்து ‘அந்த அக்காவிடம் தாங்க’ என்று பெரிய சாக்லேட்டை தந்தான். குழந்தையும் சாக்லேட்டை வாங்கிக்கொண்டு ரம்யாவை தேடி வந்து சுரண்டி தந்தது.

‘ஹாய் ரீனா, எப்படியிருக்க? சுதர்ஷனனை கல்யாணம் செய்ததால் அதிகப்படியான சந்தோஷமும், எங்க ரம்யா திரும்பி வந்து, அவ வாழ வேண்டிய இடத்துல ரீனாவான நீ இருப்பதை தெரிந்து சுதர்ஷனனும் மத்த உறவுகளும் உன்னை கரிச்சு கொட்டுவாங்கனு பயத்துல இருப்ப.

நீ பயப்பட வேண்டாம். ரம்யா எப்பவும் திரும்ப வரமாட்டா. ஆமா….. நான் எப்பவும் வரமாட்டேன்.

உனக்கு இந்நேரம் தெரிந்திருக்குமே?! எனக்கு ஆஸ்துமா இருக்கு. தாம்பத்தியத்தில் நான் முழுமையா ஈடுபாட முடியாது… ஐ அம் அன்பிட். அதனால் இல்லறவாழ்வில் எனக்கு ஆர்வம் சுத்தமாயில்லை.
அதோட எத்தனை காலத்துக்கு குடிக்கார அப்பா, அழுமூச்சி அம்மா, தம்பி தங்கை படிப்பு அவங்க வளர நான் உழைக்கறது? எனக்கு தனியா இருக்க தோணுது‌. புது உலகம் தேடி, யாருக்காகவும் நான் வாழாம, எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு தியானம் செய்யற ஆசிரமத்துல சேர்ந்திருக்கேன். மாதம் மாதம் ஏதாவது ஊருக்கு போய் தியானம் செய்து இறைவனோட ஒன்றாக கலக்குற அந்த இறைவழிபாட்டில் என்னை அர்ப்பணிச்சிக்கிட்டேன்.

இதெல்லாம் வீட்ல சொல்லிட்டு கூட போயிருக்கலாம். ஆனா எங்க சொல்ல விடுவாங்க. என் வாயை அடைச்சி, என் மனசுல இருப்பதை கூட சொல்ல விடமாட்டாங்க. நீ என்‌மக என் உயிர்.. மயிர்னு ஸ்டுபிட் வசனத்தை பேசுவாங்க
வீட்ல சொல்லிட்டு கூட வந்திருப்பேன். ஆனா அது செட்டாது.
எப்பவும் என்னை பார்த்து கண்ணீர் உகுத்தி பிடிச்சி வச்சிப்பாங்க. சுதர்ஷனனை கட்டிக்க சொல்லி டார்ச்சர் செய்வாங்க. என்னால முடியவே முடியாது. அதான்… சொல்லாம கொல்லாம பறந்துட்டேன்.

நாம இல்லாம என்னடா பண்ணறாங்கன்னு எட்டி பார்க்க இரண்டு மாசம் முன்ன கவனிக்க வந்தேன். ஷாக் ஆகிட்டேன். எஸ்.. என்னை போல நீ.

யார் நீ? என் இடத்துல நீ இருக்கன்னு பகீர்னு இருந்தது. ஆனா விபத்து நடந்து நினைவு இல்லாம இருப்பதாக கேள்விப்பட்டேன். அதோட சுதர்ஷனன் உன்னை தாங்கறான்.
நல்லவேலை விட்டதுனு புறப்பட நினைச்சேன். அப்ப தான் நினைவு வந்து நீ போயிடுவியோனு தோணுச்சு. உன்னை இந்த இரண்டு மாசமா கண்கானிச்சேன். அந்த உண்மை கண்டுபிடிச்சேன். உனக்கு விபத்து நடத்து நீ எந்த நிகழ்வையும் மறக்கலைனு புரிஞ்சுது.

அந்த உதவாக்கர கெவினுக்கு பயந்து நடிச்சது புரிந்தது.
தப்பில்லை…. அப்படிப்பட்டவனோட நீ கஷ்டப்படணும்னு தலையெழுத்து இல்லை. நீ சுதர்ஷனனோட வாழு. ரம்யாவாவே வாழு. இந்த ரம்யா உன்னை தப்பா எடுத்துக்க மாட்டா. அவ ஆன்மா சுதர்ஷனனோட வாழ்வது சாந்தமாகும். சோ நீ பயப்படாத உன் வாழ்க்கையை பாரு. அதை சொல்ல தான் இந்த லெட்டர்.

அப்பறம் இந்த லெட்டர் வச்சி என்னை தேடாத. நான் பறந்திருப்பேன். இந்த லெட்டர்ல இருக்கற எழுத்தும் நீ படிச்சி முடிக்க காய்ந்திடும். இப்பவே முதல் வார்த்தை ஹாய் ரீனா மறைந்திருக்கும்.” என்று படிக்க மேலே கண்கள் சென்றது லெட்டரில் குறிப்பிட்டது போல அந்த வார்த்தை மாயமாக மறைந்திருந்தது.

அவசரமாய் கீழே மிச்சம் மீதி வாசிப்பை தொடர்ந்தாள்.

“பதறாத..‌. குழம்பாத… ரிலாக்ஸா என் வாழ்க்கையை ரீனாவா இல்லாம ரம்யாவா வாழு. இது தான் உனக்கு நான் முதலும் கடைசியுமா சொல்ல வந்தது. டாட்டா.

இப்படிக்கு,
வாழ்க்கையை சரியா வாழ தெரியாம வாழ்ந்து, வாழ்வை துறந்த ரம்யா.” என்றிருந்தது.

ரீனாவுக்குள் அந்த லெட்டர் திருப்பி திருப்பி பார்த்தாள். அவசரமாய் போனை தேடினாள்.

மறைந்திருந்து கவனித்த பைரவோ, ‘ஸ்டுபீட் ரீனா. போட்டோ எடுத்து தொலைக்காத’ என்று மனதோடு போராடினான்.

கோவிலுக்கு வருவதால் போன் வீட்டில் வைத்திருந்தாள் ரீனா. அதனால் தன்னிடம் இதை கொடுத்த குழந்தையை தேடினாள். “அக்கா… ஒருத்தங்க உங்களிடம் கொடுக்க சொன்னாங்க” என்று கூறிவிட்டு சென்றதால் குழந்தையும் இல்லை.

சாரதாவும் மகனுக்கு குழந்தை பிறக்க வேண்டி பிரசாதம் வினியோகம் செய்தார்.

அதில் இன்னமும் பிஸியாக, தெரிந்த ஒருவரிடம் கதையளந்திருந்தார்.

பேப்பரை முன்னும் பின்னும் கவனிக்க எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மாயமானது. அந்த மை அவ்வாறாக தயாரிக்கப்படுபவை. எழுதி சற்று நேரத்தில் காய்ந்து காணாமல் போய்விடும். அதனால் சாட்சிகளின்றி மாயாமானது.

சுற்றிமுற்றி ரம்யாவை தேடினாள். ரீனாவை பொறுத்தவரை ரம்யா தன்னை கவனிக்கின்றாள் என்று நினைத்தாள்.

கண்டறிய முடியாமல் கோவிலிருக்கும் திக்கில் தாலியை எடுத்து முத்தமிட்டு கைகுப்பினாள்.
அவளை பொறுத்தவரை ரம்யாவிடம் நன்றி தெரிவிக்கின்ற முயற்சி அது.

கண்ணீர் மழை சுரக்க, சாரதா வேகமாய் வந்தார். “என்னாச்சு ரம்யா?” என்று கண்ணீரை துடைத்து கேட்டு காகிதத்தை வாங்கி பார்த்தார். வெற்று காகிதம் என்றதும் அதை தூரயெறிந்துவிட்டு, “என்ன?” என்று உலுக்க, “ஒன்னுமில்லை அத்தை” என்று சமாளித்தாள்.

“என்னமோ ஏதோனு பயந்துட்டேன். உன்னை கண்மணி போல பார்த்துக்க சொன்னான் உன்‌ புருஷன் நீ அழுவற‌. முதல்ல கிளம்புவோம். அவனிடம் உன்னை ஒப்படைக்கின்றேன்.” என்று அழைத்து சென்றார்.

ரம்யா சென்றாள். ஆம் இனி ரீனா அல்லவே அல்ல. ரம்யா மட்டுமே.
அதுவும் சுதர்ஷனனின்‌ இல்லத்தரசி, காதல் மனைவி, ரம்யா மட்டுமே.

விரைவில் சாரதா வேண்டுதலுக்காக ஒரு பேரன் பேத்தி உதிப்பது மட்டுமே பாக்கி.

பைரவ் இருந்து ரீனா செல்வதை கண்டு, பொறுமையாக காரை
இயக்கினான்.

‘நேற்று வந்த ரீனாவுக்கு குற்றவுணர்வு நீங்கி சுதர்ஷனனோட வாழ வழி செய்துட்டு இருக்கேன் ரம்யா. ஆனா நான்… ஒரு இயற்கை மரணத்தை, காலத்துக்கும் மறைச்சதாவே மனதில் உறுத்தலோடு வாழணும்.

இறைவா… நியாயம்னு ஒன்னு இருந்தா, என்னை நிம்மதியா வாழ வை. எனக்கு வேற ஒன்றும் வேண்டாம்.’ என்று கடவுளிடம் வேண்டுதலை வைத்து பைரவ் மறுபக்கம் அவன் தொழிற்சாலைக்கு தான் செல்கின்றான். ரம்யாவை சமாதி கட்டிய இடத்தில் அவளுக்கு பிடித்த கிருஷ்ணனை வைத்திருக்கின்றான்.
அதற்கு மலரை செலுத்துவது போல ரம்யாவிடம் மானசீகமாக மன்னிப்பை யாசிக்க செல்கின்றான்.

ரம்யா மன்னிப்பாளா? தேநீர் மிடறும் இடைவெளியில் அவளது தவறும் உள்ளதே.

-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.

Lovable readers: கதை பிடிச்சிருக்கா?
சும்மா ஒரு குட்டி த்ரில்லர் கதை.
எப்பவும் ஒரு மெயின் கதை ஒரு குட்டிக்கதை எழுதுவேன்ல. ஆலகால விஷம் எழுதறப்ப உயிரில் உறைந்தவள் நீயடி கதை எழுதினேன். அதோட இந்த கதை கரு இப்ப எழுதியாச்சு. உங்க ஆதரவும் அன்பும் எப்பவும் வேண்டும். தினசரி ஊக்கம் தருவோருக்கு என் மனமார்ந்த நன்றி. லவ் யூ. உங்களால் மட்டுமே அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களம் எழுதணும் என்ற ஆர்வம் வருது. அடுத்து பிப்ரவரி 14 அப்ப மனமெனும் ஊஞ்சல் குறுநாவல் பதிவிடுவேன். கீப் சப்போர்டிங்.

நார்மல் சைலண்ட் ரீடர்ஸ்: அப்பறம் ஒரு ரெக்வஸ்ட் கதை படிக்க வர்றவங்க உங்க பெயரை ரிஜிஸ்டர் செய்து வாசிங்க. இலவசமாக வாசிக்கறவங்க அட்லீஸ்ட் ரீஜிஸ்டர் பண்ணலாம். முடிந்தால் கமெண்ட்ஸ் பண்ணுங்க.

பார்ஷியாலிட்டி readers: எங்க இவ கதையை படிச்சி ரிவ்யூ போட்டா பேசப்படும் எழுத்தாளராக மாறிடுவேன்னு கதை நல்லா இருந்தா கூட கமுக்கமா இருப்பிங்க. எப்பவும் போல அப்படியே இருங்க. நோ பிராப்ளம். 😉 ஏன்னா முகநூல்ல கவனிக்கறேன். எழுத்துபிழையும் கதையேயில்லாத கதைக்கும் உங்க ஆதரவு சும்மா தூள் பறக்கு. இருக்கட்டும்.. கடவுள் கொடுப்பதை யாராலையும் தடுக்க முடியாது. எனக்கானதை கடவுள் அருள் புரிவார்.

28 thoughts on “தேநீர் மிடறும் இடைவெளியில்-20(முடிவுற்றது)”

  1. Reena Ramya ah va life long kutraunarchi illama vazhurathu ku bairav ellam seiyuthutan . reena mathavagaluku mattumae ramya ah va irundhava ippo avalukumae ramya than .
    Bairav oda kutraunrachi kalla pokkula maraiyalam yen na ramya oda irapu la erandhu pona ramya oda part um iruku and aval oda aasthma um serndhu ava vazhkai mudiya karanam ah aagiduthu .avalukku nimathi ah na vazhkai irapu la than iruku nu kadavul decide pannitaru pola.
    Story asusual super sis first la irundhu last varaikkum nalla thrilling ah pochi sis

  2. Really shock athukuilla story mudichathukku , ana ithuvum nallathu thaan evlo kalathukku bayathodavum , kutraunarchiodavum valarathu …..
    Athukku ipti oru mudivu 3 nappum , kudumbama enaikkum santhosama irrupanga, athoda ramya voda ivlo yrs kastathukku palana Ava family um ipo urupattu eni ellarum onna olachu mayla vanthuruvanga ….
    Ramya kum avaluku mudiyatha onna thappoo sariyo bhariv nala kidachu Ella kastathula irrunthum viduthalai aagitta ….
    Ovoru manusangalukum Inga ovoru mari relief aagirukanga …. good pravee ka 🤗❤️🥰🤩 ungaloda intha different kind of storys ellam super aavum epavum poola unga panila viruvirupavum pooguthu 😎👌🏻🔥 keep rocking ka😎🥰❤️

  3. Super sis… Innum thrilling ah kondu poi erunthu erukalam… But ithuvum nallathaa erukku… Nice story neat finishing…. Waiting fot feb 14 for ur new story

  4. Super sis semma story 👍👌😍 reena ku oru nalla life kedachadhu la happy but endha life a ramya vazha mudiyalaiye nu varuthamavum eruku endha theneer midarum edaivelaiyil ramya panna thappu ku Ava life a poiduchu🙄 kadavul yaaruku yedhu kedaikanum nu nenaikiraro adhu dhan kedaikum🙏 keep rocking sis waiting for your next story 🥰❤️😍

  5. மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக சிறப்பு நல்ல முடிவு இதே மாதிரி இன்னும் நிறைய வித்தியாசமான கதைகள் எழுதுங்க 🌹😊👍

  6. Azhagana ending sis superrrrrrrrr

    Reena vum bayamillama intha life ah vaazhalaam, bairav um pannatha thappukku bayanthutte irukka venaam.

    Sudharshan Reena santhosama irukkanum

  7. M. Sarathi Rio

    தேநீர் மிடறும் இடைவெளியில்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 20 Final)

    எதிர்பார்த்தேன். இப்படித்தான் முடிவு இருக்கும்ன்னு. ரீனாவுக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சாச்சு. பைரவ் பிஸிக்கலா தப்பிச்சாச்சு.
    பட்… மென்ட்டலி கடைசி வரைக்கும் ஃபீலிங் பண்ணிட்டேத்தான் இருக்கணும். ரம்யாவை அவன் கொல்லலை, அவளாத்தான் இறந்தா. ஆனாலும், சில நிமிட சபலங்களின் விளைவு இப்படிப்பட்ட அமைதியான தண்டனைகளைத்தான் கொடுத்திட்டு போகும் போலயிருக்கு. அதாவது சைலண்ட் கில்லிங் மாதிரி.

    எஸ், சுவாதியோட கல்யாணமாகியும் ரம்யா பார்த்து சபலப்பட்டதும் இல்லாத
    அவளோட ஒன்டே நைட்டும் வாழ்ந்தது தப்புத்தான். அதற்குத்தான் பைரவ் ஃபாக்ட்ரியிலேயே ரம்யாவோட பாடியை புதைச்சு, அது மேல கண்ணன் சிலையை வைச்சு தன் தப்பை உலகத்தோட கண்ணுல இருந்து எனடன தான் மறைத்தாலும், அந்த கண்ணன் சிலையை கையெடுத்து தொழூம் போதெல்லாம் தன்னையறியாமலே செய்த குத்தத்துக்கு சாமி கிட்டே மன்னிப்பை யாசிப்பதையும் தவிர்க்க முடியாது, ரம்யாவோட நினைவுகளையும் அதாவது மனைவிக்குத் தெரியாமல் ரம்யாவோடு கழிந்த அந்த ஒன்டே நைட் தப்பையும் மறக்க முடியாத வாழ்நாள் தண்டனை இது. எஸ், கூடவே இருந்து கொல்வது தானே மனசாட்சியின் வேலை.

    அதே மாதிரி, தோழியின் கணவனோடவே உறவு வைத்துக் கொண்டதற்காக, நட்புக்கு இழைத்த துரோகத்திற்காக இது ரம்யாவுக்கும் கிடைத்த தண்டனை தான்.

    எஸ்… பாவத்தின் சம்பளம் மரணம் மட்டுமில்லை, வாழ்நாள் தண்டனையும் தான்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  8. Kalidevi

    Superb superb endinga koduthutinga sisy kadaisila bhairav avanoda mogathula thappu panalum ipo oru nallathu panitan athula avanum thapikiran irunthalum oru ponnoda life pathi therinchitu avalum nimmathi illama tha vazhranu avaluku oru thelivu koduthutan ipo reena ramya va ve nalla padiya life la irupa. Avanuku oru kitta unarchi Iruku athu rendu perume than reason antha time la avanuku antha unmai theriyathu athanala illana vera mari poidum . Ramya eranthum oru ponnuku life koduthutu poi iruka atha crt ah set Pani koduthutan bhairav athuku mannipum ketute irupan nimmathi koduparu antha kadavum

    Super superb sisy unga kathaiya padika aarvam varathe intha Mari oru different different content tha onnu onukum oru thanithuvam irukum msg irukum .
    Congratulations sisy 💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    Next continue panatha story thodara mudiutha parunga waiting for alaparai kalyanam and unnil tholainthen

    1. நல்ல விறுவிறுப்பான கதையா இருந்தது சிஸ். பைரவ், ரம்யா செயல்களுக்கான பலன் தான் மரணமும் குற்றவுணர்ச்சியும்..

  9. நல்ல விறுவிறுப்பான கதையா இருந்தது சிஸ். பைரவ், ரம்யா செயல்களுக்கான பலன் தான் மரணமும் குற்றவுணர்ச்சியும்..

  10. Priyarajan

    1st epi la irunthu kadaisi varaikkum oru ethirparpode vachitinga….. spr spr spr……
    Enkita mobile illa sis apo apo avaroda mobile use panren….illaina ongoing la padichi iruppen….. spr spr spr

  11. அருமை …அருமை…இந்த ரீனா ..அந்த ரம்யா பற்றி தெரிஞ்சிக்க முயற்சி எடுப்பான்னு நினைச்சேன்….but route மாறி போச்சு….முடிவு நல்ல இருந்தது தோழி…. அருமையான முடிவு….👌👌👍🌹🌹🌹💝💝💝💝

  12. Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  13. Super super super super super super super super super super super super super super super super super super super super ❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *