அத்தியாயம்-5
ரம்யாவை நகர விடாமல், பைரவ் அவள் கரத்தை பிடித்து “உன்னை விரும்பறேன் ரம்யா. இப்பவும் விரும்பறேன். சுவாதி அடிக்கடி சொல்வா நீ சொந்த வீடு தம்பி தங்கை படிப்பு முடிந்தா மட்டும் உன்னை பத்தி யோசிப்பதா.
ஆக்சுவலி நான் முட்டாள்தனம் பண்ணிட்டேன். நீயும் ரம்யாவும் நடந்து வர்றப்ப உன்னை பார்த்து தான் காதலில் விழுந்து உன்னிடம் பேச முயற்சி செய்ய, சுவாதியை பிரெண்ட்டா பழக ஆரம்பிச்சேன்.
ஆனா அவ என்னை முதலிலேயே என்னை விரும்பி தான் பழகினா.
அவளிடம் உன்னை விரும்புவதா சொல்லி எனக்காக உன்னிடம் பேச சொன்னேன். அப்ப தான் அவ ‘பைரவ் ரம்யா எல்லாம் ஏற்கனவே சுதர்ஷனன் என்ற ஒருத்தனை விரும்பினா, ஆனா தன் குடும்ப சூழலுக்கு இந்த காதல் ஒத்துவராதுன்னு தூரயெறிந்துட்டதா சொன்னா. அந்த சுதர்ஷனனை காதலிச்சும் கல்யாணம் பண்ணாதவ, நீங்க வந்து காதலிச்சு கல்யாணம் செய்வதா சொன்னா ஏற்றுப்பாளா?’னு கிண்டலா கேட்டா. அதோட காதல் கல்யாணத்தை பற்றி உன் அபிப்ராயம் உன் வாயல ஒரு நாள் கேட்டேன். எஸ்… இப்ப யாராவது ஒரு பணக்காரன் வந்து உன்னை காதலிச்சு கல்யாணம் செய்வதா இருந்தா உன் ரியாக்ஷன் என்ன? என்று சுவாதி உன்னிடம் ஒரு நாள் கேட்டாளே.. நீ அதுக்கு பதில் பேசியதை சுவாதி எனக்கு கால் பண்ணி கேட்க வச்சா.
நீ எந்த கல்யாணமா இருந்தாலும் மறுத்துட்ட. அப்ப எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான். நல்லவேளை காதலை சொல்லி உன்னிடம் அசிங்கப்படலைன்னு.
பட் நாள் செல்ல செல்ல சுவாதி என்னை காதலிப்பதா சொல்லவும் என்னை புரிந்தவள் என்ற ரீதியில் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.
இப்ப இரண்டு வருடமாகுது. உன்னை இந்த இரண்டு வருடத்துல கல்யாணத்தை பற்றி வேற மாற்றமேயில்லாம இருக்க. உன்னிடம் காதலை சொல்லியிருந்து நீ எனக்கு ஒரு கட்டத்துல எஸ் சொல்லியிருந்தா?! தேவையில்லாம அவசரப்பட்டுட்டேனோனு மனசுல அடிக்கடி வருத்தப்பட்டிருக்கேன்.” என்றான் பைரவ்.
ரம்யாவோ சுவாதி இதையெல்லாம் தன்னிடம் உரைத்ததில்லையே. பைரவ் உன்னை விரும்புறார் அதற்கு பதில் என்று கேட்டிருந்தால் அதற்கேற்றது போல சிந்தித்து இருப்பாள். யாரோ இல்லாத பணக்காரனை பற்றி கேட்ட கேள்விக்கு பதிலை வழங்கினாள்.
இன்று பைரவ் தான் அந்த கேள்வியை தன்னிடம் கேட்டவன் என்று தெரிந்தால் ஒரு வேளை யோசித்திருப்போமோ? என்று பெண் மனம் துவண்டது. பைரவ் இதுவரை நல்ல மனிதனே. அவன் மீது எந்த பழி சொல்லும் அவள் கேள்விப்பட்டதில்லை.
ஏன் சமீபகாலமாக தன் பாரத்தை களைந்து, தோள் சாய ஒரு துணைய ஏற்றிருக்க வேண்டும். முன்பு தன்னை காதலித்த சுதர்ஷனனிற்கு சம்மதம் அளித்திருக்கலாம். இல்லை… இதோ இந்த பைரவ் காதலிப்பதாக கூறியதாக வந்து நின்றிருந்தால் ஏற்றிருப்போமோ? எல்லாரும் விரும்பும் சராசரி ஆசைகளான காதல் திருமணம் தனக்கும் நிகழ்ந்திருக்கும்.
கடவுள் பலமுறை தன்னை இக்கட்டிலிருந்து மீட்டு மூச்சுவிட நினைத்திருப்பார். தவறாக நினைத்து தட்டி கழித்து விட்டோமோ? என்று எண்ணியவள் மௌனமாக இருந்தாள்.
சுவாதியாவது தன்னிடம் உரைத்து பைரவை ஏற்றுக்க வைத்திருக்கலாம். ஆனால் அவள் தனக்கான இந்த இடத்தில் வந்துவிட்டாள். ஒருவிதத்தில் தன் இடத்தை சுவாதி பறித்துவிட்டாளா?’ என்று விபரீதமான எண்ணம் உதித்தது. ‘இதோ பைரவ் கூறியது போல நான் பைரவின் காதல் மனைவியாக கூட இந்த மஞ்சத்தில் வாழ்ந்திருப்பேன். பலவித குழப்பமான சிந்தனையில் தள்ளப்பட்டிருந்தாள்.
அதனால் பைரவ் அவள் கன்னம் பற்றி ”ஐ லவ் யூ ரம்யா, ஸ்டில் ஐ லவ் யூ” என்று முத்தமிட அதை உணராது போனாள்.
அவள் உணரும் தருணம் பைரவின் ஆழ்ந்த முத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டிருந்தாள்.
அதன்பின் மெதுமெதுவாக அவனது ஆளுகையில் தன் மேற்சட்டை பொத்தான்கள் அவிழ்க்கப்பட்டிருந்தாள்.
“பைரவ் என்னை விடுங்க நான் போகணும். சுவாதிக்கு என்னால துரோகம் செய்ய முடியாது. அவ என் டியரஸ்ட் பிரெண்ட்” என்று மல்லுக்கட்ட, அதற்கு செவிமடுக்காதவன், இத்தனை நாள் காதலித்த பெண் தனது அறையில் தனது மெத்தையித் தன் கைப்பிடிக்குள் இருக்க, கலவி பாடத்தை போதித்திருந்தான்.
யாரிடமும் இது போன்ற நெருக்கமும், முத்தங்களும் தீண்டல்களும் அனுபவித்திராத ரம்யாவுக்கு பைரவின் ஒவ்வொரு தீண்டலும் முத்தமும் தவிர்க்க முடியாமல் ஒரு கட்டத்தில் ஏற்க ஆரம்பித்தாள்.
ஒருவேளை மறுத்து மல்லுக்கட்டி விலகியிருந்தால் பைரவின் மூளை விழித்திருக்கும். அவனும் சுதாரித்திருப்பான்.
அங்கே தவறுகள் இடையூறின்றி நடந்தேறியது.
எல்லாம் நிகழ்ந்தப்பின் ரம்யா தனது நிலையை எண்ணி அழுதாள்.
வாய் விட்டு தோழிக்கு துரோகம் இழைத்ததாக புலம்பவில்லை. ஆனால் கண்ணீர் வழிந்தது.
பைரவோ மன்னிப்பு கேட்கவில்லை, மாறாக, “இப்ப நடந்ததற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் ரம்யா. நான் விரும்பின பொண்ணுக்கூட சந்தோஷமா இருந்தேன். இது என்னை பொறுத்தவரை வரம். இப்ப கூட சொல்லு. சுவாதியை விவாகரத்து கொடுத்து வீடு வாசல் பேங்க் பேலன்ஸ் நிரப்பினா போயிடுவா. நீ நான் திருமணம் செய்துப்போமா?” என்று கரத்தை பற்றி கேட்டான்.
ரம்யா பைரவை ஆழமாக பார்த்துவிட்டு, “யாருக்கு யாருனு முடிவு செய்து கடவுள் திருமண பந்தத்தில் நுழைக்கறார் பைரவ். அதை நல்லவிதமா நாம ஏற்று நம்ம துணைக்கு உண்மையா இருக்கணும்.
நீங்க சுவாதிக்கு உண்மையா இல்லை. காரணம் என்னால் தான். உங்க மனசுல நான் இருந்தேன்னு தெரிந்ததும் சுவாதி என்னை எட்டி நிறுத்தி பழகியிருக்கணும். ஆனா அவ எப்பவும் போல என்னிடம் பழகினா. ஏன்னா அவ உங்க மேல நம்பிக்கை வச்சிருந்தா. அந்த நம்பிக்கை இன்னிக்கு போயிடுச்சுனு அவளுக்கு தெரிய வேண்டாம். உங்களுக்கும் எனக்கும் இங்க நடந்தது ஒரு விபத்தா நினைக்கறேன். ஏன்னா நானுமே இங்க நடந்த விபத்தில் சரிபங்குக்குரியவள். அதனால் நீங்க குற்றவுணர்வு படவேண்டாம். ஆனா இது தான் நம்மளோட கடைசி சந்திப்பா இருக்கணும். இனி நான் சுவாதி கூப்பிட்டா கூட இந்த இடத்துக்கு வரமாட்டேன். ‘வரவர ரம்யா நான் பார்லர் செய்ய கூப்பிட்டா கூட வரமாட்டேங்குறா’ என்று என்னை தவறா நினைச்சா கூட பரவாயில்லை. எனக்கும் அவளுக்கும் இருக்குற நட்பு உடைந்தாலும் இந்த விபத்து தெரிய வேண்டாம்.
நான் புறப்படறேன். தப்பும் தவறுமா விவாகரத்து அதுயிதுன்னு அவளிடம் பேசாதிங்க. இரண்டு வாரம் என் நினைப்பு உங்க மனசுல உலாத்தும். பிறகு சுவாதி தான் நிரந்தரம் என்று மூளையில் பளிச்சுனு உண்மை புரியும்.” என்றாள் அயர்ச்சியாக. லேசாக இதை கூறிமுடிக்கவே மூச்சு முட்டியது.
“அப்ப… நீ என்னை ஏத்துக்க மாட்டியா? நமக்குள் இந்தளவு எல்லை மீறியப் பிறகும் ஏற்றுக்க மாட்டியா?” என்று கேட்டான்.
“ஏற்றுக்க மாட்டேன் பைரவ். இந்த உறவு காதலா மாறாது. அதோட… எனக்கு காதல் கல்யாணத்தில் சுத்தமா விருப்பமில்லை. அதுக்கு முக்கிய காரணம் என் குடும்ப சூழ்நிலை இல்லை. என்னுடைய உடல். எனக்கு ஆஸ்துமா இருக்கு பைரவ். கல்யாண வாழ்வுக்கு நான் செட்டாக மாட்டேன். இப்பவே பாருங்க மூச்சு முட்டுது. நான் கிளம்பறேன்.” என்று ஆடைகளை அணிய துவங்கினாள்.
மேல் சட்டை பொத்தனை மாட்டியபடி.
”ரொம்ப டயர்டா இருக்க ரம்யா. இப்பவே போகணுமா? இன்னிக்கு சுவாதி இரண்டு நாள் வரமாட்டா. நீ இந்த இரண்டு நாள் என் கூட இருக்கலாமே?” என்றதும் ரம்யாவோ, “இப்ப நடந்ததே தப்புன்னு சொல்லறேன். இரண்டு நாளா.? பைரவ்… நீங்க என்னை கேவலப்படுத்த பார்க்கறிங்க. திஸ் இஸ் தி லிமிட்.
இப்ப புரியுதா.. இது ஜஸ்ட் என்னோட உங்களுக்கு தோன்றிய ஈச்சை எண்ணங்கள். காதல் எல்லாம் காணாம போயிடுச்சு. இப்ப அந்த காதலால் கிடைக்குற தருணத்தில் வாழணும் என்ற சீப்பான எண்ணத்துல போகுது.” என்று எழ அயர்ச்சியாகவே இருக்க எழமுடியவில்லை.
“நிறுத்து ரம்யா… எனக்கு புரியுது… ரியலி சாரி… கொஞ்சம் ரெஸ்ட் எடு. ஷல் வீ ஹேவ் எ கப் ஆப் ஆஃப் காபி. கடைசியா?” என்று கேட்டான். அவள் இவனது காதலை குற்றம் சுமத்தி பேசவும் ஆவேசம் வந்து பேச்சை தடைபடுத்தினான்.
அவனது கெஞ்சலான பார்வைக்கு தன்னையே மீண்டும் கொடுக்க தோன்றியது. ரம்யாவுக்கு இது புது அனுபவம் அல்லவா. ஆனால் தவறுகள் ஒரு முறை நடக்கப்பெறுவது. அதுவே தொடர்ந்தால் அது குற்றம் என்று அவள் அறிவுக்கு தெளிவாக தெரியும். மீண்டும் மீண்டும் தவறை செய்ய ஒரு காலமும் ரம்யா தயாராகவில்லை.
“காபி வேண்டாம் பைரவ் டீ கொடுங்க” என்று கூறினாள். காலையில் பூரி சாப்பிட்டது. அதன் பின் தண்ணீர் ஒரு டம்ளர் குடித்து இங்கே வந்தது. சற்று தேநீர் அருந்தினால் தேவலாமென தோன்றியது.
ரம்யா கேட்டதும் பைரவ் அங்கிருந்து கீழே சென்று தேநீர் தயாரிக்க ஆரம்பித்தான். அடிக்கடி மாடி படியை ஏறிட்டான்.
ரம்யா தானாக கீழே வருவதாக தெரியவில்லை.
பைரவிற்குள் பேராசை மொட்டுவிட்டது. அவன் காதலித்த பெண் ரம்யாவுக்கு அவனை பிடித்துள்ளதாக தப்பர்த்தம் எண்ணினான்.
மடமடவென தேநீரை கப்பில் ஊற்றி மாடிக்கு எடுத்து சென்றான். அங்கே கால் கீழே வைத்தாலே ரத்தம் பேண்டெயிட் தாண்டி தரையில் பதிந்திருக்க ரம்யா முகம் சுணங்குவதை கண்டான். இவ்ளோ நேரமும் ரத்தம் பஞ்சில் ஊறி பேண்டெயிட் வரை வெளியேறியிருந்தது. கலவியிலும், நாகரிகமான வார்த்தை போரிலும், அதை கவனிக்க தவறியிருந்தார்கள்.
“டாக்டரை வரவழைக்கவா ரம்யா?” என்று பைரவ் பதறினான்.
“எனக்கு இங்கிருந்து என் வீட்டுக்கு போக கார் புக் பண்ணுங்க. அது போதும். டாக்டர் எல்லாம் வேண்டாம். என்னால காலை கீழே வைக்க முடியலை. கார் வந்துட்டா கஷ்டப்பட்டு போயிடுவேன்.” என்றாள்.
“எதுக்கு அவசரம்? நான் தான் சுவாதி இரண்டு நாள் கழிச்சு வருவானு சொன்னேனே. இப்ப என்ன? டாக்டரை கூப்பிடறேன் இங்க இரு.” என்று தேநீரை கொடுத்தான்.
“ப்ளிஸ்… நான் இங்க இருக்கற ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு தான் ஆபத்து. கார் புக் பண்ணுங்க” என்றாள் கட்டளையாக.
அவள் அவனகடமிருந்து தேநீரை வாங்கி மிடறு மிடறாய் பருக, பைரவ் ஏற்கனவே போட்ட பேண்டெயிட் எடுத்து நீக்கி மருந்து போட்டு மீண்டு பக்குவமாய் கால் கட்டத் துவங்க, காலை இழுத்தாள்.
“ரம்யா… காலை ஒழுங்கா காட்டு. கட்டுப்போட்டுட்டா சரியாகிடும். என்னால இந்த நிலைமையில் உன்னை அனுப்ப முடியாது. எனக்கு நீ திரும்ப வேண்டும். இன்னிக்கு உன்னை எங்கயும் போக விடமாட்டேன். நான் சுவாதிக்கு விவாகரத்து கொடுத்துட்டு உன்னை கல்யாணம் செய்ய போறேன். நீ இனி என் காதலி மட்டுமில்லை மனைவியும் நீ தான்” என்று கன்னமும் நீங்காத கலவி போதையில் நிமிர, ரம்யா மெத்தையில் விழுந்து மூச்சுக்கு போராடினாள். அங்கே பாதி குடித்த தேநீர் கோப்பை மெத்தையில் மீதி தேநீர் சிதறியிருக்க ரம்யாவுக்கு மூச்சு திணறியது.
“ஏ… ரம்யா… என்னாச்சு?” என்று பதற, ”எ… எ..னக்கு ஆஸ்..துமா. என்னால யாரையும் கல்யாணம் செய்து வா…வாழ முடியாது. கீ…கீழே… என்னோட இன்..ஹேலர் இருக்கு. கொண்டு வாங்க… ப்ளீஸ்” என்றாள். அதை சொல்லி முடிப்பதற்கே சிரமமாக இருந்தது.
பைரவ் வேகவேகமாய் மாடியிலிருந்து கீழே வந்து ரம்யாவின் கைப்பையை ஆராய்ந்தான்.
அதில் இன்ஹேலர் இருக்க எடுத்துக்கொண்டு மாடியறைக்கு ஓடினான்.
ரம்யாவை நெருங்கும் சமயம், அவளது நெடிய மூச்சு திணறலே அவன் கண்டது. அதன் பின் அவளது வெறித்த பார்வையை கண்டு கைகள் நடுங்க அவள் அருகே சென்றான்.
ரம்யா… அவ்விடத்தில்…. நிலைக்குத்திய பார்வையில் அவனையே வைத்தக்கண் எடுக்காமல் பார்வையிட்டிருந்தாள்.
பைரவ் மெதுவாக அவள் நாசியில் கைவைத்து பார்த்தான்.
“ரம்யா.. ஏ விளையாடாதே.” என்று உலுக்க, அங்கே அசைவற்ற உடலில் ரம்யா கிடந்தாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
உண்மையான ரீடர்ஸ்… 👇
எந்த ஜெனர் என்று புரிதா? க்ரைம் த்ரில்லர் கதை. 😁 லவ் ஸ்டோரி இல்லை. அடுத்தடுத்த எபிக் ஆதரவு தரவும். குறுநாவல் தான். கமெண்ட்ஸ் வந்தா ஆட்டமெடிக்கா கதை அப்டேட் வந்துடும். நிறைய வேலை நிறைய ஊர்சுற்றல் அத்தை வீடு அப்பா வீடு என்று சுற்றி சுற்றி எழுதாம சோம்பேறி ஆனது என்னவோ நிஜம். இனி பழைய பிரவீணாவா வந்து கதை தருவேன். என் கதையை தொடர்ந்து வாசித்து கருத்தளித்து ஊக்கம் தரும் வாசகரீடர்ஸுக்கு அன்பான நன்றிகள்.
எழுதுற இடத்துல நிறைய அரசியலை சந்திக்கவும் எரிச்சலா வருது. அதுவுமே சம்டைம் எழுதவிடாம சஞ்சலத்தை தருது. இனி சஞ்சலமோ அரசியலோ தூக்கி போட்டு எனக்காக வந்து வாசிப்பவருக்கு கதை தருவேன்.
எழுத்தாளர் திருடர்களே… 👇
ப்ளீஸ்… நீங்க என்னுடைய பிக் பேன் என்று சொல்லிக்கொண்டு என் எழுத்தை என் கதையை திருடாதிங்க. நிறைய புக்ஸ் படிங்க. நிறைய கதையை உங்க கற்பனையில் கொடுங்க. அதுக்கான செய்திகளை அலசி எழுதுங்க. கேவலமா என் கதையை எடுத்து உல்டா பண்ணாதிங்க. திங்க் டிபரெண்ட். யோசித்தா அழகான கதை வித்தியாசமா எழுத வரும். ஒவ்வொரு விஷயமும் அலசி ஆராய்ந்து செய்தி சேகரிச்சு உண்மையா பொய்யா ஆராய்ந்து எழுதறேன். குறுட்டாம் போக்குல கிறுக்கி தள்ளறது இல்லை. கொஞ்சம் சமூக அக்கறையோட நேர்மையா எழுதறது என் பாலிசி. என்னிடமிருந்து கதையை சுடாதிங்க.
புரிதா……. (திருடற எழுத்தாளருக்கு இந்த பேராகிராப்)
பார்ஷியாலிட்டி வாசகர்களே👇
அன்பு பார்ஷியாலிட்டி வாசகர்களே…. நீங்க கதையை சத்தமில்லாம வாசித்துவிட்டு உங்க அபிமான ரைட்டருக்கு கன்டன்ட் எழுத தருவது தெரியும். ப்ளீஸ் அதை செய்யாதிங்க. அவங்க அவங்க நாலேட்ஜிக்கு எது வரீதோ அதை எழுதுவாங்க. நீங்க உங்களின் பரம எழுத்தாளருக்கு இங்கிருந்து கான்சப்ட் சொல்வதால் உங்க மீதான என் அபிப்ராயம் மாறுது. அதோட முகநூலில் 18+ ஆட்களுக்கு கமெண்ட்ஸ் பண்ணுறிங்க. என்னிடம் மட்டும் வந்து என்ன கிசுகிசுன்னு வாட்சப்ல வந்து நல்லாயிருக்கு சொல்லறது. இதை வன்மையாக கண்டிக்கறேன். அப்பறம் உங்க அபிமான ரைட்டருக்கு புத்தகம் போட நீங்க உதவுங்க. நான் ஏன் உதவனும். என்னிடம் எந்த உரிமையும் வச்சிக்காதிங்க. ஏன்னா 18+ கதைக்கு கமெண்ட்ஸ் போட்டுட்டு என்னிடம் உதவியை மட்டும் கேட்டா என் பதில் இப்படி தான் இருக்கும்.
நீங்க காரியவாதியா இருங்க. நான் நேர்பட பேசும் சுபாவம் கொண்டவள். என்னிடம் உண்மையான அன்பகற்கு மட்டும் அடிபணியும் மனசு. இந்த மாதிரி பார்ஷியாலிட்டி அனகோன்டா வேலை பார்த்தா எப்படி? எனக்கு இதான் பதில் வரும். (வாசகர் என்ற போர்வையில் சில எழுத்தாளரை நம்ம கதை வச்சி அவங்களை ஊக்கு விக்கற ரீடர்ஸுக்கும் சில கசப்பான ரீடர்ஸுக்கும். உண்மையான ரீடர்ஸ் இதை கடந்துடுங்க. நான் உங்களை சொல்ல மாட்டேன்.)
Sema twist. Excellent sis. Don’t give up. Also don’t give too much attention to your criticisers. Because they are very jealous people. You keep rocking sis. We are wait for your awesome writing.
Eagerly waiting for next update👍
Super sis nice epi 👍👌 romba thrilling ah pogudhu story eagerly waiting for next epi sis😘😍
Aiyo..intha twist ah sathiyama expect pannala
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தேநீர் மிடறும் இடைவெளியில்..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 5)
அட ராமா..! நான் இந்த ரம்யாவை ஹீரோயின்னு நினைச்சேனே. இப்படி பொசுக்குன்னு அற்பாயுசுல போயிட்டாளே…? இப்ப கொலை பழி பைரவ் மேல விழுமா..?
இல்லை பைரவ் உஷாரா பாடியை மறைச்சிடுவானா…?
தெரியலையே..?
அது சரி, இந்த சுவாதி பைரவ் கிட்ட ரம்யாக்கு காதல்ன்னா வெறுப்புன்னு மட்டும் சொன்னாலே, ரம்யாக்கு இருக்கிற இந்த ஆஸ்துமா வியாதியை சொல்லலையோ..?
சொல்லியிருந்தா, இப்படி வாலண்ட்ரியா வந்து வாண்டட் ஆகியிருக்க மாட்டானோ…? எதெப்படியோ… கதையோட போக்கு சூப்பரா இருக்கு.
எனக்கு இப்பவெல்லாம் க்ரைம் நாவல்ஸ் ரொம்பவே பிடிக்குது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Ippo varaikkum ithu enna journar nu kandupidika mudiyala sis
Enna ithu indha ramya ipadi erandhu poita ah appo iva heroine illaya ah
Sooper
Unexpected twist
Ipdi oru twistaa ethirpaakkave illa sis, romba shock aagitten 😲😲😲😲
Interesting ithuku Mela tha kathaiye polaye ena twist vachi irukinga sisy