Skip to content
Home » தேநீர் மிடறும் இடைவெளியில்-7

தேநீர் மிடறும் இடைவெளியில்-7

அத்தியாயம்-7

    பைரவ் தனது ஈசிஆர் வீட்டுக்கு வந்து ஒரு குளியலை போட்டான்.

    மெத்தையில் அசதியில் படுக்க வந்ததும், ரம்யாவோடு நடந்த கூடல் நினைவு வந்தது.

    இனிக்க இனிக்க நினைத்து பார்த்து ரசிக்கும் விதமாக கொண்டாட வேண்டிய நாளாக மகிழ வேண்டியது. இப்படி அழ வைத்து சென்று விட்டாளே என்று குலுங்கி அழுதான்.

   ரம்யா உபயோகப்படுத்தின பெர்ஃப்யூம் வாசம் கூட அந்த மஞ்சத்தில் இன்னும் வீசுவதாக தோன்றியது பைரவிற்கு.

   இதை நினைத்து நினைத்து பார்த்து அழுவதற்கான நேரமல்ல இன்ஹலரை தேடும் நேரம்‌ என்று கண்ணீரை துடைத்து தேடி பார்த்தான்.

   கட்டிலுக்கு அடியில் கப்போர்டில், எங்கும் தென்படவில்லை. இங்கு வந்து நின்றது மட்டும் நினைவில் இருந்தது. அதன் பின் கையிலிருந்த இன்ஹலரை தவறவிட்டு அவளை ஆராய்ந்து உலுக்கியதில் இன்ஹலர் எங்கு மாயமானதென்று யூகிக்க முடியாது தவித்தான்.

   எதற்கும் ஹாலுக்கும் அறைக்கும் நிறைய முறை ரம்யாவின் உடமைகள் உள்ளதா என்று அலசிவிட்டான். கண்ணில் சிக்காமல் தடயம் அவனை இக்கட்டில் தள்ளியது.

   அந்த ஒரு தடயம் போதுமே ரம்யாவுடையதென்று வெளிச்சம் போட்டு காட்டா. பிறகென்ன இங்கு ரம்யா வந்ததாக எல்கேஜி குழந்தை கூட கண்டறிந்துவிடும்.
  போலீஸ் கண்டறியாதா?

   மேலும் மேலும் தேடியவன் ஒரு கட்டத்தில் துவண்டு அவளுக்காக அழுகையில் மதுவை நாடினான். ஏதோவொரு போதை அவனை ஆட்பிடியில் வைத்துக் கொண்டால் சற்று இன்ஹலரை மறந்து நிம்மதியடைவான் என்ற நினைப்பு. ஆனால் மெத்தையில் ‘ரம்யா உன்னை நான் விருப்பியிருக்க கூடாது. ரம்யா உன்னிடம் என்‌ காதலை சொல்லிருக்க கூடாது. ரம்யா நீ இங்க வந்திருக்க கூடாது. நான் தான் புத்தியில்லாம உன்னை படுக்க கட்டாயப்படுத்தினா, நீ என்னை அறைந்து ஓடியிருக்கணும். என்னை ஏன் ஏற்றுக்கொண்ட? இப்ப பாரு செத்து மண்ணுல புதைந்துட்ட’ என்று புவம்பினான்.

    சுவாதி அங்கிருந்தால் இந்த உளறலுக்கு ஏற்றவாறு பிரிவு நிகழ்ந்திருக்கலாம். அவள் தான் இல்லையே.
 
   இங்கு பைரவ் மெத்தையில் போதையில் வீழ்ந்திருக்க, ரம்யா வீட்டிலோ, “அக்கா ஸ்கூட்டியை ஷெர்லி வீட்டில் வச்சிட்டு காலையிலேயே கிளம்பிட்டாளாம்மா. அதுக்கு பிறகு ஸ்கூட்டி எடுக்க அக்கா வரலையாம்.

   அதோட வண்டியை எடுத்துட்டு போகவும் யாரும் வரலையாம்மா. அந்த பக்கம் வந்தப்ப அக்கா ஸ்கூட்டியில் அவ போன் இருந்ததை அந்த ஆன்ட்டி பார்த்து உங்க நம்பருக்கு கூப்பிட்டுயிருக்காங்க. நான் இன்னிக்கு ஜீபே மூலமாக பீஸ் கட்ட உங்க போனை எடுத்துட்டு போனதால் அவங்க என்னிடம் பேசினாங்க. அக்காவோட போனை நான் வாங்க போனேன். அப்படியே அக்காவோட ஸ்கூட்டியை ஷெர்லி அப்பா ரெடி பண்ணவும் நானே வண்டியை கொண்டுவந்துட்டேன். நான் அக்காவோட இரண்டு பிரெண்ட்ஸ்கிட்டயும் போன் போட்டேன். சுவாதி அக்கா ஊர்லயே இல்லை. சஞ்சனா அக்கா மட்டும் தான் இங்க இருக்கா. அவ எதுக்கும் ரிசப்ஷன்ல போன் பண்ணி கேட்க சொன்னா. நைட் வரை பாருங்க. இல்லைன்னா மாம்பலம் போலீஸ் ஸ்டேஷன்ல தீப்சரண் இருப்பார் அவரிடம் பேசி ஐடியா கேட்கறேன்னு சொல்லிருக்காங்க.
   எனக்கென்னவோ இப்பவே அக்காவை தேடி அவரிடம் சொல்லலாம் அம்மா‌” என்று கவிதா இறைஞ்சிக் கொண்டிருந்தாள்.
  
    ஆனந்தியோ மணி ஆறு ஆகவும், காலையில் உங்க அப்பா மேல அக்காவுக்கு கோபம். விஷாலும் வீட்டுக்கு வரலை. உங்கப்பனும் இன்னமும் வீட்டுக்கு வரலை. இரண்டு பேர்ல யாராவது ஒருத்தர் வரட்டும். போலீஸுக்கு‌ அப்பறம் போகலாம். அதுக்குள்ள ரம்யா வந்துடுவா” என்று ஆனந்தி மகள் மீது நம்பிக்கையாக கூறினார்.

   கவிதாவோ அக்காவுக்கு ஆஸ்துமா இருக்கு, அதை சொல்லி புரியவைக்க முயற்சித்த நொடி, அம்மா ஏற்கனவே பதறிட்டு இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போமென காத்திருந்தாள் கவிதா.

  நேரம் கடந்தது மட்டுமே மிச்சம். சஞ்சனா போனில் அழைத்து, “என்னடி ரம்ஸ் வந்துட்டாளா?” என்று கவிதாவிடம் கேட்க, இல்லையே அக்கா” என்று சோகமான குரலில் கவிதா பதில் தந்தாள்.

  “சரி… கொஞ்சம் வெயிட் பண்ணு. தீப்சரணிடம் கேட்டுப்பார்க்கறேன்.” என்று துண்டித்து அவனுக்கு அழைத்து விசாரிக்க, தீப்சரண் போன் எடுக்கவில்லை. ஸ்டேஷன் நம்பருக்கு அழைத்து பேச, அங்கே “சார் வேலை விஷயமா வெளியே போயிருக்கார் மேடம். நீங்க எதுக்கும் காணாம போனவங்களோட குடும்பத்துல இருந்து யாராவது வந்து கம்பிளைன் கொடுக்க சொல்லுங்க. அபிஷியலா பார்த்துக்கலாம்.” என்றார்.

   சஞ்சனாவுக்கும் அதுவே சரியென்று தோன்ற கவிதாவிடம் உரைத்தாள்.
“சரிங்க அக்கா அம்மாவை கூட்டிட்டு வர்றேன்.” என்று கவிதா போனை அணைத்தாள்.

   ஆனந்தியோ, “உங்க அக்கா தொலைந்து போகறவ இல்லைடி.” என்று நம்பிக்கையாக கூறினார்.

  ”அய்யோ அம்மா அக்கா தொலைந்துட்டானு சென்னேனா? அவளுக்கு என்ன ஆபத்தோ. எனக்கென்னவோ போலீஸிடம் போறது பெட்டர்” என்றாள் ஆணித்தரமாக.
  
   ரம்யாவின் தொலைப்பேசியில் ரம்யாவுக்கு வந்த காதல் மெஸேஜ் எல்லாம் கவிதா திருட்டுத்தனமாக இடைப்பட்ட நேரத்தில் வாசித்தாள். எதற்கும் ரம்யா இசைந்து பேசியதாக எதுவும் இல்லை. மாறாக சில நேரம் திட்டும் சில நேரம் அமைதியாகவும் இருந்ததை கவனித்தாள்.

  அதென்னவோ அக்காவின் பெர்ஸனல் மெஸேஜ் எல்லாம் ஒன்றுவிடாமல் படிக்கவே இத்தனை நேரம் கூடியது சஞ்சனாவிற்கு. அதில் ஏதோ இடறியது. யாராவது அக்காவிற்கு காதல் என்று குடைச்சல் தந்து அக்காவுக்கு ஆபத்தாக அமைந்துவிட்டாதா என்று பதறினாள். 

இப்பொழுது எல்லாம் காதலிக்க மறுத்தால் கடத்தி கற்பழித்து விடுவதை இவளும் அறிவாளே.

ஆனந்தி கணவரை ஏறிட அவரோ அரை போதையில் இருக்கவும் தலையில் அடித்து கவிதாவை அழைத்து ரம்யா ஸ்கூட்டியில் மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்கள். சஞ்சனா அப்படியே வருவதாக கூறியிருக்க அவர்களுக்கு சிறு தெம்பு பிறந்தது.

கவிதா போலீஸ் ஸ்டேஷன் வர விரைவாக வண்டியை செலுத்தினாள். ஆனால் அங்கே கையில் நீண்ட துப்பாக்கி ஏந்தி வெளியே நின்ற காவலதிகாரியை பார்த்ததுமே தைரியம் வற்றியது. போலீஸ் என்றாலே நடுக்கம் உண்டு. அதுவும் இந்த நேரத்தில், இது போல ஸ்டேஷன் வந்து நிற்பது எல்லாம் அச்சத்தில் முகம் வெளிறியது ஆனந்திக்கு.
நிறைய சினிமாவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாலே மேலும் பிரச்சனை பெரிதாக தானே காட்டுகின்றனர். சிறு பெண் கவிதாவை இங்கு அழைத்து வந்ததால் பதறினார்.

கவிதா ஓரளவு படிக்கின்ற பெண்ணாக தைரியத்தை மறைத்து கொண்டாள்.
அங்கிருந்த போலீஸ் என்ன ஏதேன விசாரிக்க, “அக்கா.. இன்னும் வீட்டுக்கு வரலை. கம்பிளைன் கொடுக்கணும்” என்றாள். ஆனந்தியை விட கவிதாவால் பேச முடிந்தது.

“வீட்ல ஆம்பளைங்க இல்ல?” என்ற கேள்விக் கேட்டார்.

ஆனந்தி தலைகுனிய, அப்பா குடிச்சிட்டு வீட்ல போதையில் இருக்கார் சார். அண்ணா எங்கயோ ஊர் சுத்த போயிருக்கான். எங்க வீட்டுக்கு அக்கா தான் எல்லாம். அவளை காணோம்.” என்றாள்.

“உள்ள எஃப்ஐஆர் எழுத ரைட்டர் இருப்பார் போய் கம்பிளைன் கொடுங்க. சார் வெளியே இருக்கார் வந்துடுவார்.” என்று அவரிடம் விசாரித்தவர் உரைத்துவிட்டு டீ குடிக்க சென்றார்.

கவிதா அன்னையை அழைத்து உள்ளே வந்து அமர்ந்து புகாரை தந்தாள்.

எஃப்ஐஆர் எழுதுபவர் பெயர் ஊர் விலாசம் என்ன செய்கின்றார் என்று கேட்க, ஒவ்வொன்றாய் கவிதா கூறினாள். இன்று அக்கா எழுந்தது முதல் அவள் சென்றதும், ஷெர்லி வீட்டில் வண்டி போன் வகட்டுவிட்டு கிளம்பியதையும் கூறினாள்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “ஏன்மா… உங்க அக்கா வண்டி ஸ்டார்ட் ஆகலை விட்டுட்டு போனா ஓகே. போனை எப்படி மறந்திருப்பா? உங்க அக்கா எவனையாவது காதலிச்சு ஓடிப்போயிருக்குமா? ஏன்னா… இந்த காலத்து பசங்க போனை தானே உசுரா வச்சிக்கறிங்க. என்னவோ உயிரே அதுல தான் இருக்குன்னு, எங்க பாரு எப்ப பாரு கையில வச்சிட்டு இருக்கிங்க. உடம்புல ஒரு பார்ட்டா வாழுது.” என்று கேட்டார்.

“அய்யோ சார்.. என் மக யாரையும் விரும்பா மாட்டா. அவ ரொம்ப நல்ல பொண்ணு. ஓடிலாம் போக மாட்டா.” என்று அழுதார் ஆனந்தி.
சொக்க தங்கம் போல தானுண்டு தன் வேலை உண்டு என்று ரம்யா இருப்பாளே‌. அவளை ஓடிப்போனதாக பழிசுமத்தவும் ஆனந்தி வாய் விட்டு கதறி அழுதார்.

“ஏம்மா நான் என்ன புதுசா சொல்லறேன். உலகத்துல நடக்கறது தானே” என்றார்.

இந்த நேரத்தில் போனை பற்றி கூற கவிதாவுக்கு தயக்கம் பிறந்தது. அதே நேரம் “யோவ் அந்த பொண்ணு யாரையும் விரும்பலை. எனக்கு நல்லா தெரியும். நீங்க தானே ரம்யா அம்மா ஆனந்தி? நீ கவிதா ரம்யாவோட தங்கச்சி?” என்று கேட்டு தன்னிருக்கைக்கு வந்தமர்ந்தான் தீப்சரண்.

அவன் நடை உடையில் பதற்றமும், கடமையும் இருந்தது. இருக்கையில் ராஜ தோரணையில் வீற்றுக்கொண்டு கம்பீரமாக பேசினான். இரவு நேரம் வீட்டிற்கு செல்லாமல் சஞ்சனாவல் இங்கே விசாரிக்க வந்தான்.

“நான் சஞ்சனாவோட வுட்பி. பதறாதிங்க… ரம்யாவோட இன்றைய ஆக்டிவிட்டிஸை பொறுமையா சொல்லுங்க.” என்று கேட்டான்.

கவிதா மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்து உரைத்தாள்.

“அக்கா காலையிலேயே ஒரு காலேஜ் அக்காவுக்கு மேக்கப் பண்ண போயிட்டா சார். அங்க மேக்கப் முடிந்து வேற அப்பாயின்மெண்ட் பொறுத்து வேற பிளேஸுக்கு போவா. இல்லையா ப்யூட்டி பார்லரில் போயிருப்பா.

ஆனா அக்கா அங்க வரலையாம். காலையில் அக்கா காலேஜ் பொண்ணுக்கு மேக்கப் பண்ண போன இடத்துல வண்டி ஸ்டார்ட் ஆகலைனு அங்கயே விட்டுட்டு ஆட்டோவுல போயிருக்கா. ஸ்கூட்டில போன் விட்டுட்டு இருக்கா. அவங்க பார்த்து அம்மா நம்பருக்கு கால் பண்ணினாங்க. இன்னிக்கு பீஸ் கட்ட அம்மா போனை எடுத்துட்டு போனேன். அதனால் நான் அட்டன்‌ பண்ணினேன். காலேஜிலயிருந்து நேரா அவங்க வீட்டுக்கு போய் ஸ்கூட்டியை போனை கலெக்ட் பண்ணிட்டேன். அக்கா எங்க போச்சுன்னு தெரியலை. எப்பவும் ஆறு ஏழுக்கு வந்துடும். இப்ப மணி ஒன்பதரை ஆகுது பயமாயிருக்கு சார்.
சாதாரணமா லேட்டா ஆச்சுன்னா நான் பயப்பட மாட்டேன். இங்க பாருங்க சார், அக்கா போன்ல யாரோ அக்காவை காதலிப்பதா மெஸேஜ் பண்ணிருக்கார். தொடர்ச்சியா மெஸேஜ் பண்ணியதுக்கு அக்கா எந்த ரெஸ்பான்ஸும் பண்ணலை. அதனால அக்காவை ஏதாவது பண்ணிட்டாரோனு பக்குன்னு இருக்கு” என்று கவிதா பேச ஆனந்தி ‘அய்யோ… என் ரம்யா.. என் தங்கமே” என்று அலற, தீப்சரணோ இருக்கையில் ஒய்யாரமாக சாய்ந்தவன் கவிதாவிடமிருந்து போனை வாங்கி மெஸேஜை பார்த்தான்.

‘ஷிட்’ என்று முகம் வெளிற துவங்கியது.

“இது ஏதாவது தெரிந்தவங்க கிண்டலுக்கு ஆரம்பிச்சி இருக்கலாம். வேற ஏதாவது ரீசன் சந்தேகிக்கறிங்களா? இல்லை இரண்டு மணி நேரம் தானே காணோம். நாளை பத்து மணி வரை பாருங்க. அப்பயும் வரலைன்னா மிஸ்ஸிங் கேஸா பார்த்துக்கறேன்.” என்று தீப்சரண் கூறினான்.

கவிதாவுக்கு குழப்பமெடுத்தது. ஆனந்தியோ என் பொண்ணு வந்திருப்பா. வீட்டுக்கு வந்திருப்பா” என்று புலம்ப, கவிதாவோ அசையாது ஏதேதோ சிந்தித்து முடிவெடுக்க தெரியாது குழம்பினாள். என்னயிருந்தாலும் சிறு பெண் அல்லவா?!

“சரிங்க சார்… வெயிட் பண்ணி பார்க்கறேன்” என்று ரம்யா போனை கேட்டாள்.

“இந்த போன்… என்னிடம் இருக்கட்டும். எதுக்கும் நான் யார் என்னனு பார்க்கறேன்.” என்றான்.

ரம்யா போனை தீப்சரணே வைத்துக்கொள்ளவும் அதற்கும் தலையாட்டி இரண்டெட்டு நகர்ந்தாள் கவிதா.

தீப்சரண் நிம்மதி பெருமூச்சு விட்டான். போனை தன் கால் சட்டை பேக்கெட்டில் அவசரமாக திணித்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

11 thoughts on “தேநீர் மிடறும் இடைவெளியில்-7”

  1. That message culprit is deepsaran. That’s y he kept three mobile. Sipping a cup of tea held into murder. Apt title. Intresting

    1. M. Sarathi Rio

      தேநீர் மிடறும் இடைவெளியில்..!
      எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
      (அத்தியாயம் – 7)

      அச்சோ…! இந்த கவிதா பொண்ணு போனை தீப்சரண் கிட்ட ஏன் கொடுக்கணும்..?
      எனக்கென்னவோ, அந்த லவ் மெஸேஜ் எல்லாம் போட்டவன் இந்த தீப்சரணாத்தான் தெரியுறான். அதைத்தவிர, சஞ்சனாவை பக்கத்துல வைச்சுக்கிட்டே, ரம்யாவை முறைச்சு முறைச்சு பார்த்தவன் தானே…? அது சரி, அந்த போன்ல இருக்கிற மெஸேஜை இப்ப இவன் டெலீட் பண்ணா கவிதாவுக்கு இவன் மேல டவுட் வரும் தானே…?

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *