Skip to content
Home » தேநீர் மிடறும் இடைவெளியில்-10

தேநீர் மிடறும் இடைவெளியில்-10

அத்தியாயம்-10

   தீப்சரணோடு அங்கே சுதர்சனன் வந்திருந்தான்.
  அவன் கண்களில் கலக்கமும் சோர்வும் அப்பட்டமாய் தெரிந்தது.
   அவனை கண்டதும் சஞ்சனா கோபம் தீப்சரணை நாடியது.
   “என் பிரெண்ட் எங்க இருக்கா? மரியாதையா சொல்ல சொல்லு சரண்.” என்று சஞ்சனா மொழிய, “ஏய்… பல்லை தட்டினேனா, அவன் ரம்யாவோட பெயர் சொல்லாம சாட் பண்ணிருக்கான். மத்தபடி அவனுக்கு ரம்யா எங்கன்னே தெரியலை. ரம்யா குடும்பத்தில் எந்தளவு அவளை காணாம தவிக்கறாங்களோ அதே அளவு என் பிரெண்ட் சுதர்சனனும் தவிப்பது உண்மை.
  சும்மா ஒரு பொண்ணு காணோம் என்றதும் முதல் அக்யூஸ்டா அவனை காதலிக்கறவனை சந்தேகப்படாத.” என்று நண்பனுக்காக தீப்சரண் வாதிட்டான். தீப்சரணும், சுதர்ஷனனும் பள்ளிகாலத்து நண்பர்கள். இடையில் கல்லூரியில் பிரிந்தவர்கள்.
 
   “பின்ன யாரை சந்தேகப்பட? உன்னை சந்தேகப்படவா? உன் பிரெண்ட் லவ்வர் என்று தெரிந்தும் ரம்யாவை ஸ்ட்ரா போட்டு ஊறியற மாதிரி பார்த்த?” என்று ரம்யாவை நேற்று சைட் அடித்ததை தற்போது நினைவு வைத்து கேட்டாள்.

“அப்படியே செவுள்ல விட்டேன் காது கேட்காது சஞ்சனா. வரும்போதே உன்னிடம் சொன்னேன். உன் பிரெண்ட் ரம்யா சில விஷயத்தை பிரெண்ட்ஸ் உங்களிடமே மறைக்கறானு. நீ என்ன சொன்ன. ரம்யா அதெல்லாம் எதையும் மறைக்க மாட்டா. அவ லைப்ல எல்லாத்தையும் ஷேர் பண்ணிருக்கா. இன்க்ளூடிங் சுதர்ஷனன் காதலிச்சதை கூட முன்ன சொன்னா என்று ஜம்பமா சொன்ன.

  அதுக்கு நான் என்ன சொன்னேன். அது அப்பம்மா, இப்ப மறைக்கறானு சொன்னேன். சுதர்சனன் சாட் பண்ணியதை அவ உன்னிடம் சொல்லலை என்பதை தான் பூடகமா சொல்ல வந்தேன்.
  ஆனா நீ காதுல வாங்கலை. அப்ப தான் பெட் கட்டினேன். உன் பிரெண்டை வழிமறைச்சு நாம பேசுவோம். என்னை அறகமுகப்படுத்து. நான் அவளை ஒரு தேர்ட் கிரேட் ஆளு மாதிரி சைட் அடிச்சி பொறுக்கியா பிஹேவ் பண்ணறேன். அதை உன்னிடம் சொல்லறாளா பாருன்னு சவால் விட்டேன்.

அவ உன்னிடம் என்னை பத்தி சொன்னாளா? இல்லையே… அதுக்கும் நீ என்ன சொன்ன? நம்ம நிச்சயம் ஆகறதால எந்த குழப்பமும் வேண்டாம்னு அவ இருந்திருப்பா. மேபீ அகைன் மீட் பண்ணி நான் கேட்கறப்ப சொல்வா. அப்ப என் வுட்பி ஃபன் பண்ண செய்தான்னு சொல்லிடறேன். பட் அவ எதையும் மறைக்கலைன்னு சொன்ன. இப்ப நான் பார்த்ததுக்கு என் மேலயே பழியை தூக்கி போடுற. நல்லா வருவடி நீ” என்று தீப்சரண் வெடித்தான்.

  சுதர்ஷனனோ “இப்ப உங்க சண்டையை நிறுத்தறிங்களா? ரம்யா காணோம். அவ எங்கயிருக்கானு ஏதாவது ஐடியா இருக்கா. அதை சொல்லுங்க. முன்ன தான் அவ வேண்டாம்னு ஒதுங்கினப்ப, முட்டாள்தனமா நானும் ஒதுங்கினேன். அதுகூட அவ என் மனைவியா வந்தப்பிறகு கஷ்டப்படக்கூடாதுன்னு முன்னுக்கு வரும் வரை அவளை டிஸ்டர்ப் பண்ணலை. இப்ப பணம் காசு வீடு வாசல்னு வாங்கியிருக்கேன். ரம்யாவை கல்யாணம் செய்து என்னோட வீடான ‘ரம்யா பேலஸ்’ல அவளை ராணியா வாழ வைக்க ஆசைப்படறேன்.
   திரும்ப அவளை சந்திக்கும் போது வித்தியாசமான நபரா சந்திக்க தான் புதுசா வாங்கின பிரைவேட் நம்பர்ல அவளோட சாட் பண்ணியது.
    உங்களோட நிச்சயதார்த்தம் நடக்கறப்ப அவளிடம் என்னை வெளிப்படுத்திக்க நினைச்சேன். அதுக்குள்ள காணோம்னு சரண் நேத்து சொன்னான். நேத்துலயிருந்து  எவ்ளோ துடிக்கறேன் தெரியுமா? சாட் பண்ணியது நான். நான் ஏன் ரம்யாவை கடத்தப்போறேன். அவளுக்கு ஏதோ ஆபத்துன்னு மனசுல படபடன்னு துடிக்குது.

   நானே சரணிடம் அவ எங்கப்போனானு புலம்பிட்டு இருக்கேன். இதுல என்‌மேல சந்தேகப்பட்டா எப்படி?” என்றதும், சஞ்சனா தலையில் கைவைத்து உலுக்கினாள்‌.

   “இந்த ரம்யா எங்க தான்‌ போனாளோ?” என்று சஞ்சனா துவளவும், “சரண் நீ கேளு” என்று நினைவுப்படுத்த துவங்கினான் சுதர்ஷனன்.

  “என்ன கேட்கணும்?” என்று சஞ்சனா கேட்க, “இரண்டு நாளுக்கு முன்ன ரம்யாவுக்கு மிட்நைட்ல சாட் பண்ணினேன். அப்ப என்ன மூட்ல இருந்தாளோ என்னிடம் வாய்ஸ் மெஸேஜ்ல பேசினா. அதை கேளு” என்று ஒலியை கூட்டி ரம்யா அனுப்பியதை ஒலிக்க வைத்தான்‌.

ரம்யா வாய்ஸ் மெஸேஜ்: லுக் மிஸ்டர் உங்களுக்கு ஜோள்ளு விட வேற ஆளே கிடைக்கலையா? நானே நொந்துப் போயிருக்கேன். உங்க ஆண்கள் இனத்தில் பொண்ணுங்களை சதையா தான் பார்ப்பிங்க. அந்த சதை கிடைச்சதும் இந்த காதல் கத்திரிக்கா எல்லாம் சுத்த வேஸ்ட்.’ என்று அனுப்பியிருக்க, அதற்கு சுதர்ஷனனோ “என்ன பிரச்சனை ஏன் குரலில் இந்தளவு ஆக்ரோஷம். நான் ஜஸ்ட் ஏதோ முகம் தெரியாத ஆள் தானே. என்னிடம் உன் கவலையை சொல்லு‌.” என்று அனுப்பியிருந்தான்.

“என்ன கவலை.? என் தங்கை கவிதா குளிக்கும் போது என் தம்பி விஷால் ஒளிஞ்சு நின்று பார்த்திருக்கான். அவனை அடிச்சி விளாசி தள்ளியிருக்கேன். போதுமா… இதுல நீ வேற மானே தேனேனு என்னை இம்சிக்கற. பொண்ணுங்க என்றாலே உங்களுக்கு வெறும் உடம்பு தான் முதல்ல தெரியும் இல்லை” என்று கத்துவதை கேட்டு முடிக்க, அதற்கு கீழ் ஒரு ஆடியோ சுதர்ஷனன் வாய்ஸ் மெஸேஜ் அதை தட்டினாள்‌ சஞ்சனா.

சுதர்ஷனன் வாய்ஸ் மெஸேஜ்: இங்க பாரு ரம்யா… நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஆண்களுக்கு பெண்கள் மீது வர்ற முதல் தாக்கம் அழகு தான். அது அக்காவா தங்கையா அம்மாவா இதெல்லாம் பார்க்காதானு நீ அடுத்து கேட்ப. அதுக்கும் சேர்த்தே பதில் சொல்லிடறேன். உன் தம்பியும் உன்னை மாதிரி தான் யாரையும் காதலிக்க கூடாது, எந்த பொண்ணையும் பார்க்க கூடாது, அக்கா நம்மளுக்காக வாழறானு பொறுப்பா இருப்பான். ஆனாப்பாரு… வயசுன்னு ஒன்னு நம்மளை ஆட்சிப்படுத்தும். அதுவும் காலேஜ் செகண்ட் இயர் படிக்கற பையன்.. இப்ப அவனுக்கு பொறுப்பை தாண்டி பெண்கள் மீது ஒரு இன்ட்ரஸ்ட் வந்திருக்கும். அதனால் அங்கயும் இங்கயும் சைட் அடிச்சிருப்பான்‌ உன் தங்கை குளிச்சப்ப பார்த்தான்னு சொன்னல்ல? அது எதார்த்தமான நிகழ்ந்த சூழ்நிலையா? இல்லை அவனா சூழ்நிலையை உருவாக்கி பார்த்தானா செக் பண்ணு.

எதார்த்தமான சூழ்நிலையில் தெரியாத்தனமா பார்க்க நேர்ந்திருந்தா அவனை நீ அடிச்சது தப்பு. இப்ப அவன் நம்மளை அக்கா அம்மா தப்பா நினைச்சிருப்பாங்கன்னு பீல் பண்ணுவான்.
இல்லை அவன் வேண்டுமின்னே பார்த்திருந்தா அவனை கூப்பிட்டு உட்கார வச்சி அவனுக்கு புத்திமதி சொல்லு. இது பருவக்கோளாறு ரம்யா‌. சரியான வழிக்காட்டுதல் கொடுத்தா அவன் இப்பவே அவனோட ஆக்டிவிட்டிஸை மாத்திப்பான்.
ஆனா அதுக்கு நேர்மாறா வீட்டை விட்டு துரத்தினா அவன் இதை விட மோசமானவனா மாறிடுவான்‌. உனக்கு புத்திமதி தேவைப்படாது இருந்தாலும் சொல்லறேன். யாரையும் உடனே ஒதுக்காத. காதலும் காமமும் தப்பில்லை ரம்யா. பொறுப்புகள் நிறைய இருக்குன்னு நம்ம மனதிலும் உடலிலும் ஏற்படுற உணர்ச்சியை சாகடிக்காதே‌. புரிஞ்சுதா?” என்று பேசியிருந்தான்‌.

சஞ்சனா தீப்சரண் அந்த ஆடியோ வாய்ஸ் கேட்டதும் அடுத்து ரம்யா ஆடியோவும் ஆட்டோமெடிக்காக ஒலித்ததை கேட்டனர்.

“நீங்க.. நீங்க… எ…எனக்கு தெரிந்த நபர் தானே. நீங்க.. என்னை.. இதுக்கு முன்ன நான் உங்களிடம் நேர்ல பழகியிருக்கேனா? ப்ளீஸ்… சொல்லுங்க. என்னால என் லைப்ல ஆச்சரியத்தையோ அதிசயத்தையோ கேட்கலை‌. சாதாரண விஷயம் என் வாழ்க்கையில் நடந்தா போதும். நீங்க… நீங்க.. யாரு?” என்று கேட்டிருந்தாள்.

சுதர்ஷனனோ சஞ்சனாவிடம் திரும்பி "இந்த வாய்ஸ் மெஸேஜ் கேட்டதுமே ரம்யாவுக்கு என்னை அடையாளம் தெரிந்துக்கிட்டானு லேசா டவுட் வந்தது. ஆனாலும் நான் என்னை காட்டிக்கலை. இரண்டு வாரத்துல உன் வாழ்வில் நிறைய மாற்றம் வரும் ரம்யா. அதை ஏற்றுக்க தயாராயிரு. இப்ப நான் யாருனு என்னை பத்தி யோசிக்கறதை நிறுத்து. உன்‌ தம்பியிடம் நிதானமா பேசு. எல்லாம் சரியாகிடும். கவிதாவிடம் விஷால் பத்தி சொல்லாத. சரியா? குட் நைட் டியர்'னு டெக்ஸ் மெஸேஜ் சொல்லிட்டு விட்டுட்டேன். ரம்யா என்ன நினைச்சாளோ அவளுமே அப்பறம் என்னிடம் நீ யாரு என்ன எதுவும் கேட்கலை.

ரம்யாவை நான் உயிரா விரும்பறேன் சஞ்சனா. அப்படியிருக்க அவ காணாம போனதுக்கு இந்த சாட்டை வச்சியெல்லாம் என் மேல சந்தேகப்படாத. வேற ஏதாவது காரணம் இருக்கானு யோசிங்க.” என்று கூறினான்.

சஞ்சனா லேசாக தெளிவுப்பெறும் நேரம், “என்னடா யோசிக்கறது? இந்த விஷால் தான் ஏதாவது செய்திருக்கணும். அவ அக்காவை காணோம். அவனையும் காணோம். அவனை கண்டுபிடிச்சு நாலு உதை போட்டா சொல்லுவான்.” என்று தீப்சரண் பொங்கினான். சஞ்சனா நிச்சயம் நிறுத்தவா என்பது போல பேச காரணமாக அமைந்த ரம்யாவின் மிஸ்ஸிங் கேஸை கண்டறியும் வேகம் அவனுக்குள்.

"அவன் எங்கனு தெரியுமா சஞ்சனா?" என்றா கேட்டதற்கு, "இப்பவரை ஆனந்தி அம்மா அதை பத்தி மூச்சு விடலையே. கவிதாவும் அவனை தேட சொல்லலை. எதுக்கும் நேர்ல விச்ரித்தா தான் தெரியும்." என்று கூறவும் தீப்சரணோ அங்கு ஆர்டர் செய்த பழச்சாறை ஒரே மடக்கில் குடித்து, "உடனே வா... இன்னிக்கே விசாரிச்சிடுவோம்." என்று எழுப்பினான். 

சஞ்சனா சுதர்ஷனனும் அதுவே சரியாக தோன்றியது.
காலத்தை நெட்டி முறித்தால் யாருக்கு என்ன செய்தி காத்திருக்க வைக்குமோ என்ற பயத்தை கிளப்பியது.

மூவரும் ரம்யா வீட்டை நோக்கி படையெடுத்தனர்.


இங்கே வீடு முழுக்க இன்ஹேலரை தேடி ஓய்ந்து, போனான் பைரவ். நாளை தொழிற்சாலையை திறப்பு விழா. சுவாதியின் அம்மாவிற்கு இப்பொழுது பரவாயில்லை. ஆனாலும் ஏனோ நொழிற்சாலை திறக்கும் நாளை தள்ளி வைத்தால் நல்லதாக பைரவிற்கு தோன்றியது. அவன் இருக்கும் மனநிலைக்கு இயல்பாய் தொழிற்சாலையில் நடமாட முடியாதே. 

இதில் ஹாலில் அவன் குனிந்து தேடும் நேரம் அவன் முன் ஹீல்ஸ் அணிந்த சுவாதி கால் தென்பட, திடுக்கிட்டு போனான்.

”என்னங்க தேடறிங்க?” என்று அவள் வந்து கேட்க, “அது..அது… என்னோட என்னோட… மோ… மோ..திரம். கையில் திருகிட்டு இருந்தேன் கீழே விழுந்துடுச்சு.” என்றான். சமயோஜிதமாக பொய்யை கூறினான்.

“ஆமா… நீ என்ன வந்துட்ட?” என்று கேட்டதும், “இரண்டு நாள்ல வந்துடறதா சொன்னேனே. அம்மாவுக்கு ஓகே.. ஆனாலும் நாளைக்கு பங்ஷனுக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டேன்.” என்று சோகமானாள்.

பைரவோ “ஏன்மா.. அம்மாவுக்கு அந்தளவுக்கு உடம்பு முடியலைன்னா. நாம திறப்பு விழாவை தள்ளி வைப்போம்.” என்று சடாரென கூறினான்.

சுவாதியோ ஆச்சரியமாக, “பைரவ்.. உண்மையா தான் சொல்லறிங்களா?” என்று ஆச்சரியப்பட்டாள்.

“பச் உன் பிரெண்ட் ரம்யா மிஸ்ஸாகிருக்கா. அத்தைக்கும் உடம்பு சரியில்லை. உன் மனநலத்தை பார்க்கணும். நீ நிம்மதியா நடமாட முடியாதே. முதல்ல ரம்யா கிடைக்கட்டும். அத்தையும் திறப்பு விழாவுக்கு வரும் சூழ்நிலை அமையட்டும். இப்ப என்ன பொறுமையா திறந்துக்கலாம்.” என்று கூறினான்.‌

சுவாதியோ ஆச்சரியம் விலகாமல், “கூப்பிட்ட கெஸ்ட், பிரெண்ட்ஸ் இன்வெயிட் பண்ணின ஆட்கள் எல்லாருக்கும் என்ன சொல்விங்க. புட் அரேஜ்மெண்ட் டெகரேஷன் எல்லாம் வேஸ்ட் ஆகாதா?” என்று விழா கேன்சல் ஆனால் ஏற்படும் நிலையை விவரித்தாள்.
“அதெல்லாம் பரவாயில்லை முதல்ல நிம்மதி வேண்டும். நமக்கு இந்த பேக்டரில லாபம் வந்து தான் பணம் கொட்டப்போகுதா? முதல்ல ரம்யா கிடைக்கட்டும். அரெஜ்மெண்ட் நடக்குதோ இல்லையோ அவரவருக்கு பணம் கொடுத்தாச்சு. அதனால் நிகழ்ச்சி நடத்தற டேட் நம்ம இஷ்டம் தான்‌ என்ன வரவேண்டிய கெஸ்டிடம் இன்பார்ம் பண்ணணும்” என்று அழுத்தமாய் உரைத்தான்.

சுவாதியோ ஒருதலையா பைரவ் ரம்யாவை விரும்பினார். முன்னால் காதலியான ரம்யா காணோம்னு தன் தொழிலில் முன்னேற்றத்திற்கான ஏற்பாட்டை கூட கேன்சல் செய்யறார். இந்தளவு விரும்பியிருக்கார் நான் ரம்யாவிடம் இவர் அவளை விரும்பியதை சொல்லிருக்கணும். என் கல்யாணம் முடிந்தப்பிறகு சொன்னது தப்பு. ஒருவேளை ரம்யா பைரவை ஏற்றுயிருந்தா இந்த வீட்டு ராணி அவளா இருப்பா. பைரவோட மனைவியா இருப்பா? எனக்கு என்‌ பைரவ் கிடைச்சிருக்க மாட்டார் ‘ என்று படியில் ஏறிவந்து அறைக்கு வந்து, பலவித எண்ணத்தில் உழன்றவள் வாஷிங் மெஷினில் இருந்த போர்வையை உதறி பால்கனியில் உலர்த்தினாள்.

கனநேரத்தில் அந்த போர்வையிலிருந்து ரம்யாவின் இன்ஹேலர் பறந்து கார்டனில் குதித்ததை பைரவ் மட்டுமே காண நேர்ந்தது.

பைரவோ ‘கடவுளே..‌ போர்வையோட இன்ஹேலரை வாஷிங்மேஷினில் போட்டு துவைச்சிருக்கேன். நேத்தே போர்வையை காயப்போட்டிருந்தா இன்ஹேலரை பார்த்து எரிச்சி புதைச்சிருப்பேன். இப்ப தான் கண்ணுலபடுது. இப்ப சுவாதி பார்க்கும் முன்ன எடுக்கணும்.’ என்று பதட்டமானான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்‌.

9 thoughts on “தேநீர் மிடறும் இடைவெளியில்-10”

  1. M. Sarathi Rio

    தேநீர் மிடறும் இடைவெளியில்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 10)

    அச்சோ.! ரம்யாவை சுதர்ஷனன் & பைரவ் ரெண்டு பேருமே காதலிச்சும் இருந்திருக்காங்க, கல்யாணம் கட்டிக்கவும் ட்ரை பண்ணிருக்காங்க… ஆனா, அவளுக்கு அந்த கொடுப்பினை இல்லை போல. அதன் ரெண்டு பேரையுமே மிஸ் பண்ணதோட இப்ப அவளே மிஸ்ஸாகிட்டா.
    இதுக்குத்தான் பெரியவங்க சொல்லுவாங்க.. ஆசையிருக்கு அம்பாரி மேல போக, ஆனா அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்கன்னு. ஆனா, ஒரு விதத்துல பைரவ் அவளை முழுமையா அனுபவிச்சு ரம்யாவுக்கு அந்த திருப்தியை மட்டும் கொடுத்திட்டான்.

    அது சரி, விஷால் உண்மையாவே கவிதாவை அப்படி பார்த்தானா என்ன…?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Ungala nambi oruthar mela doubt padave mudiyaathu sis, paavam deepsaran

    Sudharshan kooda oru azhaghana life vaazhnthurukkalaam, athukkulla ipdi aagiduche

    Bairav eppo maattuvano

  3. Deepasaran sorry da aniyayam ah unna doubt pattutom .
    Ramya ah va sudharsan bairav rendu perum unmai ah vae virumbi irukaga aana ava ipadi erandhu poita inga sudharsan ava enga nu theriyama thavichitu irukan anga Bairav ava erandhu poita nu varuthapattutu irukan enna panrathu

  4. Avar avar pakkathuku yosichu ipo oruthi uyir poiruchu 😑😒
    Nan kuda police aa thappa ninachuttan 😤 frnd kaga ellam panirukan antha frnd um nallavana irrukan ….
    Oru phone marathiyala ipo ivlo nadanthuruchu ….life la kadasi varai thanakunu yantha santhosamum pakkama poitta ramya 😑

  5. Kalidevi

    Intha alavuku ramya va virumbi irukanga rendu perum aana Ava yaraium virumbama vituta but kadavul sonna antha luck ithu thanu avaluku therinji iruku pola kadaisiya sila santhosatha ava anupavichitu poita ipo inhaler eduthu marachiduvana bhairav

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *