Skip to content
Home » தேன்மொழி பேசிடும் பைங்கிளியாள் 19

தேன்மொழி பேசிடும் பைங்கிளியாள் 19

நால்வரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க அவர்களின் வாயை பார்த்தப்படி அமர்ந்து இருந்தாள் பிருந்தா.”டேய் ஆதவா‌ சும்மாவே எம்புட்டு நேரம் இப்படியே பேசிட்டு கெடக்குறது நல்ல மாங்காவா பார்த்து பறிச்சு போடு எல்லாரும் சாப்பிடலாம்…” என்ற கீர்த்தனா தன் வீட்டுக்கு சென்று சில பொருட்களுடன் வெளியே‌ வந்தாள்.சரி என்று மரத்திற்கு ஏறியவன் அனைவருக்கும் மேலே இருந்த படி அவசரமாக பறித்து போட்டவன் கடைசியாக “ஹேய் பிருந்தா இந்தா இதை நீ பிடி…” என்று தூக்கி போட அவளோ அது எங்கு தன்னில் விழுந்து விடுமோ என பயந்து பின்னால் நகர அது கீழே விழுந்து நசுங்கி போனது.”ஒரு மாங்காவை பிடிக்க தெரியலே ஆனா பேச வாயை திறந்தா நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” என பாய்ந்தான் தேவன் அவனின் பேச்சில் சட்டென கண்கள் கலங்கி விட்டது.”டேய் தேவா… பொம்பள பிள்ளைக்கிட்ட என்னடா எகுருற பழக்கம் இது சரியில்லை சொல்லிப்புடேன் அவளுக்கு தான் அது ஒன்னும் பழக்கம் இல்லலே பொறவு அவக்கிட்ட கொடுத்தா அவே எப்படி பிடிப்பா போ போய் அதை கழுவிட்டு வாடா…” என்றவளை அவன் முறைக்க…”என்னடா பார்வை வேண்டி கெடக்கு கண்ணை நோண்டிபுடுவேன் போய் வெரசா நான் சொன்ன வேலையே முடிடா…”  என்றவள் உப்பு கல், மிளகாய் தூள், மிளகு என சேர்த்து அம்மியில் அரைத்து தூளாக எடுத்தாள் பிறகு தேவன் கழுவி கொண்டு வந்த மாங்காவை அம்மியில் வைத்து தட்டி அதோடு அரைத்த உப்பு மிளகாய்த்தூளையும் சேர்த்து தட்டி ஆள் ஆளுக்கு கொடுக்க மூவரும் ரசித்து உண்பதை கண்ட பிருந்தாவிற்கு எச்சில் ஊறியது சாப்பிட ஆசை பிறந்தது கேட்க தயங்கி அத்தனை பேரின் வாயையும் அமைதியாக பார்த்தப்படி இருந்தவளை காண சுரேஷிற்கு ஏதோ போல் இருந்தது.”பிருந்தா எடுத்துக்கோங்க…” என நீட்ட தயங்கி நிற்க “நாங்க திங்கிறப்போ நீ பாட்டுக்கு எங்க வாயை பார்த்துக்கிட்டு கெடந்தா எங்க வயிரு என்னாவது…”  என மாங்கா தூண்டுகளை நீட்டினாள் கீர்த்தனா அவளை முறைத்தப்படியே அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாது வாங்கி சாப்பிட்டவளுக்கு மாங்காவின் ருசி தன்னிலை மறக்க வைக்க அவர்களுடன் சேர்ந்து காலி பண்ண தொடங்கி விட்டாள்.”கீர்த்தி இப்போ தான் பசியிலே இருந்த வயிறு அமைதியாகி இருக்கு…” என்ற தேவனுக்கு ஒப்புதலாக தலையசைத்தான் ஆதவன்.”ஏன்டா இப்படி சொல்லுறீயே மத்தியானம் சாப்பிடலயா? இல்ல புதுசா வந்தவியே ஒழுங்கா சமைச்சு போடலயா?…” என கவலையாக கேட்டவளிடம்,”அது எங்களுக்கு பிடிக்கலே கீர்த்தி…. ஒரு வாய் தான் சாப்பிட்டோம் அப்பறம் எந்திரிச்சு போயிட்டோம்…” என்ற தேவனின் முகம் ஒவ்வொரு பாவனையை காட்டியது.”எங்களுக்கு நீயும் அத்தையும் சமைக்கிற சாப்பாடு தான் பிடிக்கும் உனக்கே தெரியும் நாங்க எங்க வெளியே போனாலும் சாப்பிடுறதுக்கு சரியா வீட்டுக்கு வந்திடுவோம் அது எதுக்காகன்னு நினைக்கிற அந்த ருசிக்கு அதுலயும் அண்ணா ஆப்பு வெச்சிட்டாரு அவரு நல்லாவே இருக்க மாட்டாரு…” என ஆதங்கமாக சொன்ன தேவனின் முதுகில் பட்டென ஒன்று வைத்தாள் கீர்த்தனா.”அந்தாளு உங்க நல்லதுக்கு என்ன எல்லாம் பண்ணி கெடக்காகஅம்புட்டையும் ஒரு சோத்துக்காக மறந்துடுவியலாடா சாபம் எல்லாம் போடுறீயே அப்புடியே ஒன்னு விட்டா தெரியும்…” என முறைத்தவளை சுரேஷ் மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தவன் ம்ம்… என இதழில் ஒட்டிய ஒரு புன்னகையுடன் தலையசைத்தான் ஆனால் தப்பி தவறி அந்த புன்னகையை அவள் பார்க்கும் விதமாக காட்டி விடவில்லை பிறகு அவனின் கை காலை முறித்து விடுவாளே பாதகத்தி…”ஆனாலும் இவளுக்கு ரொம்ப தான் பில்டப் கொடுக்குறீங்க அத்தான்ஸ் வந்தவங்க நல்லா தானே சமைச்சு இருக்காங்க ஏன் நான் கூட தானே சாப்பிட்டேன்…” என்றாள் பிருந்தா.”கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைன்னு சொல்லுவாங்க கேள்வி பட்டு இருக்கியா என் அத்தை மகளே… அது உனக்கு கணக்கச்சிதமா பொறுந்தும் எங்க கீர்த்தனா சமைக்கிற சாப்பாட்டோட ருசி எப்படின்னு இன்னைக்கு நம்ம வீட்டுலே உன்னை தவிர ஒருத்தரும் சாப்பிடாம இருந்ததுலே தெரியலே…” என்ற தேவனின் பேச்சில் “என்னடா சொல்றீங்க ஒருத்தருமா சாப்பிடலே‌…” என கேட்டவளிடம் தலையசைத்தனர் இருவரும் இவளுக்கு கவலை அதிகரித்தது.இரவு பாட்டிக்கு தேவையானதை செய்து கொண்டு இருந்தவள் பாட்டியுடன் பேசிக்கொண்டு இருந்தாலும் அத்தனை பேரையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள் பகல் சமைத்தது தீண்டபடாமல் அப்படியே இருப்பதையும் அத்துடன் இரவு உணவை செய்ய கேட்ட அந்த பெண்ணை அத்தனை பேரும் வேண்டாம் என்று தடுத்து அவளை வீட்டுக்கு போக சொல்லி விட்டிருந்தனர் அதே நேரம் வெளியே வேலைக்கு சென்ற சர்வா இன்று சோர்வாக தான் வந்தான்.இன்று நிர்வாகம், நிதி தொடர்பான பல வேலைகளுக்கும், மீட்டிங் என அலைந்து திரிந்து அனைத்தையும் முடித்து விட்டு வந்து இருந்தவன் குளித்து முடித்து சாப்பிட வந்து அமர்ந்து பத்து நிமிடம் ஏனும் கடந்து இருக்கும் வீட்டில் இருப்பவர்கள் யாரும் வந்த பாடுதானில்லை…சுற்றும் முற்றும் ஒருப்பார்வை பார்த்தான் அத்தனை பேரும் ஹாலில் தான் அமர்ந்து இருந்தனர் ஒவ்வொரு வேலைகளுடன் “யாருக்கும் சாப்பாடு வேண்டாமாகும் இருந்த இடத்தை விட்டு அசையாம உக்கார்ந்து இருக்கிறவ எந்திரிச்சு வாங்க…” என்றவனின் குரலில் உள்ள அழுத்தம் சாப்பிட முடியா விட்டாலும் அத்தனை பேரையும் வந்து உட்கார வைத்து இருந்தது அவர்களுக்காக பரிமாற போனவளை தடுத்தது அவனின் குரல்.”அம்மா, சித்தி எல்லாருக்கும் பரிமாறாம உக்கார்ந்தா எப்படி…” என்றவன் இவள் பக்கம் பார்வையை திருப்பி “உனக்கு என்ன புள்ள இங்கனே வேலை போ போயி உன்ற வேலை என்னவோ அதை பாரு…” என விரட்டி விட அவனை முறைத்துப் பார்த்துவிட்டு எனக்கென்ன வந்தது என திரும்பி கிட்ஷன் நோக்கி நடந்தவள் பாட்டி தாத்தா இருவருக்கும் மரக்கறி சூப் செய்ய தொடங்கி இருந்தாள்.அதன் வாசத்தில் அடிக்கடி ஆதவன் தேவன் கழுத்து கிட்ஷனை நோக்கி திரும்பினாலும் அண்ணனுக்கு முன்னால் எதையும் செய்ய தயங்கி வேண்டா வெறுப்பாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.தாத்தா பாட்டி இருவரும் அவள் கொண்டு வந்து கொடுத்ததை ரசித்து ருசித்து குடிக்க மற்றவர்களுக்கு அய்யோ என்றிருந்தது அன்று யாருமே பாதியளவு கூட சாப்பிட்டு இருந்திருக்க மாட்டார்கள் இவ்வளவு ஏன் சர்வா கூட ஒழுங்காக சாப்பிடவில்லை அத்தனை பேருக்கும் அன்று இரவு சுந்தரி கையால் பால் குடித்த பின்பு தான் தூக்க வரும் என்பது போல் இருந்தது அத்துடன் அன்று இரவு அனைத்தையும் சுத்தப்படுத்தும் வேலை கூட வீட்டு பெண்களுக்கு தான் அதை எல்லாம் செய்யும் போது ஜெயந்தியின் புலம்பலை கேட்டு மற்றவர்களுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம்.அத்தனை பேரும் தங்கள் அறைக்குள் புகுந்து கொண்ட நேரம் பாட்டியின் தேவைகளை முடித்து விட்டு வெளியே வந்தவளின் கண்களில் வீணாகிய உணவுகள் தென்பட்டது அச்சோ என வருத்தப்பட்டவளுக்கு தோட்டத்தில் ஃபோனில் தீவிரமாக யாருடனோ பேசிக்கொண்டு இருந்த சர்வாவின் மேல் பார்வை பதிய நேராக அவனிடம் சென்றாள் அவள் வந்ததை அறிந்து அழைப்பை துண்டித்தவன் என்ன? என்பது போல் திரும்பி பார்த்தவனிடம் “இனிமே நானே சமைச்சிக்கிடுதேன் அவகளே வேலைக்கு வர வேணான்னு சொல்லுங்க…” என்றவளிடம் முகத்தை  அழுத்தமாக பார்த்தவன்.”இனிமே அதுக்கு அவசியம் இல்லை நீ உன்ற வேலையே பாரு…” “பைத்தியம் மாட்டுக்கு பேசாதியே அவகே எல்லாரும் பசியிலே கெடக்காக ஒழுங்கா சாப்புட கூட இல்லை…” “அதை பத்தி நீ வெசனப்படாதே புதுசா ஏதாவது ஒன்னை ஏத்துக்க சங்கடமா சிரமமா தான் கெடக்கும் பொறவு பழகிடும் இனி இங்கனே கெடந்து கஷ்டப்படனும்னு ஒன்னு அவசியம் இல்லை இதுலயாவது என்ற பேச்சை மீறி ஏதும் செய்ய மாட்டேன்னு நெனக்கிறேன்…” என்று அங்கிருந்து செல்ல போனவனை அவசரமாக தடுத்தாள்.”நில்லுங்க நீங்க இதை எதுக்காவ செய்றீயேன்னு என்னிக்கு ஒன்னும் புரியாம இல்லை உங்க ஆத்தாக்காரி வாயாலே தான் நானு அப்போ அப்போ பேசிப்புடுதேன் அம்புட்டு தான் மத்தபடி எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல இனி நானே சமைச்சிக்கிடுதேன்…””உனக்கு சில தேவை கெடக்கிறது எனக்கு புரிஞ்சதுக்கு பொறவு தான் இந்த முடிவை எடுத்து கெடக்கேன் குறுக்க வராதே அம்புட்டு தான் நீ செய்யிற வேலைக்கு எத்தனையோ தடவை கூலி கேட்டு கெடக்குற அதை அப்போ பெருசா எடுத்துக்கலே நானு ஆனா இன்னொருத்தன் கிட்ட கையேந்தி நிக்க போக முடிவு எடுத்தலே அதான் நானு இப்படி ஒரு முடிவை எடுத்தேன் ஏன்னா என் குடும்பத்துலே ஒருத்தி நம்ம வீட்டு வேலையை செஞ்சுப்புட்டு சம்பளம் கேட்கிறதை என்னியலே ஏத்துக்கவோ மத்தவே சொல்லுறதை உண்மையாக்கவோ முடியாது…” என்றவனின் பேச்சில் சட்டென நிமிர்ந்து பார்த்தவள்.”உங்க வீட்டு ஆளுங்க பாசம் வெச்சிருந்தாலும் அவகளே பொறுத்தவரைக்கும்நான் இந்த வீட்டு வேலைக்காரி தான் அது என்னிக்கு மாறாது எதையாவது பேசோனும்னு பேசாதீயே…” என்றவளின் பேச்சு அவனை கையோங்க வைத்திருந்தது ஓங்கிய கையை அதிர்ச்சியாக பார்த்த நேரம் சர்வா… என கத்தினார் சுந்தரி.”என்னடா பண்ணுற…” என கேட்டு அருகில் வந்தவரை கண்டு கொள்ளாமல் அவன் பார்வை இவளை தான் முறைத்துக் கொண்டு இருந்தது.”அவே தான் புரியாத மாட்டுக்கு பேசிட்டு கெடக்கான்னா நீயி கையை ஓங்குற அவே அப்புடி பேச யாரு காரணம் நம்ம வீட்டு ஆளு தானே அவளை வார்த்தையாலே சொல்லி குத்திக்கிட்டே கெடந்தா அவளும் என்ன தான் செய்வா உன்ற கோவத்தை இவக்கிட்ட காட்டாதே…””இதையே எத்தனை தடவை தெரியுமா சொல்லிக்காட்டிட்டு கெடக்கா அத்தை ஊருலே எவனாவது பேசினா கண்டுக்காம வரவே இங்கனேயும் அப்படியே கெடக்குற தானே ஏதோ ஒரு முடிவுலே தான் சுத்திக்கிட்டு கெடக்கா உடம்பு முழுக்க திமிரு அதேன் வாயும் கூடுது மூளையும் கண்டமேனிக்கு யோசிக்க தோனுது இனிமேலும் எதையாவது ஏடாகூடமா யோசிச்சு பண்ணு அங்கனே உன்ற நெரிச்சு போடுறேன்…” என்றவன் இருந்த கோபத்தை எல்லாம் காட்டி விட்டான் அது சுந்தரிக்கு புரிந்தது எங்கோ ஆரம்பித்தது எங்கோ வந்து விட்டது என்று ஆனால் அவள் வழக்கம் போல அவனை புரிந்து கொள்ளவில்லை என்பது தான் கவலைக்கிடமாகி போனது…

8 thoughts on “தேன்மொழி பேசிடும் பைங்கிளியாள் 19”

  1. Avatar

    அவ எப்ப புரிஞ்சு,..? அதன்படி நடந்து…? அதுக்குள்ள பொழுதே விடிஞ்சிடும்.

  2. Kalidevi

    Unaku inga velai seiyavum pidikala inga varavum pidikala ipo ethuku feel yarum sapdalanu nee velaiku poi sambarikanumnu tha sarva una vara vena velai seiyavena solran konjam purinjiko porumaiya . Avanum kovatha tha kamikiran neeum pada pada nu pesura

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *