Skip to content
Home » தொடுவானமாய் உனை பார்க்கிறேன்-1

தொடுவானமாய் உனை பார்க்கிறேன்-1

தொடுவானமாய் உனை பார்க்கிறேன்-1

    "டேய் கேசவா !!! கொஞ்சம் பொறுமையா  படி ஏறுடா!!! நேக்கு முடியல!!  கால் எல்லாம் வலிக்கறது"!!.. 

என்று கூறினாள் …..

“ஏன் அத்தை இப்படி என்ன படுத்தி எடுக்கற ?? உன்னால முடியவில்லை தான… ஆத்துல யே இருக்க வேண்டியது தானா… வாரா வாரம் ஆச்சுன்னா இது ஒரு வேலையா வெச்சுண்டு இருக்க” என்று கத்தினான் கேசவன்…..

“கத்தாதடா கேசவா!!!நோக்கு சீக்கிரம் கல்யாணம் ஆக தான் வாரா வாரம் இந்த வேண்டுதல்” …. என்று கூறிய அம்புஜம் அத்தைக்கு வயது 55….நம் நாயகனின் அத்தை…. நம் நாயகன் கேசவன் ஊர் ஸ்ரீரங்கம்…… வயது 27 …..பிராமண குடும்பத்தில் பிறந்தவன்….. மீதி கதையின் ஓட்டத்தில் சரி சண்டையை பார்க்கலாம் வாங்க…

” இப்போ அது ஒன்னு தான் நேக்கு கொறச்சல்… வேலை வித்து இல்லாம உன்னோட தமையன் சொல்ற மாதிரி தெண்டமா ஊர் சுத்திண்டு இருக்கேன்… கடுப்ப கிளப்பாம போ அத்த”…….

” ஏண்டா அம்பி அதான் மெட்ராஸ்ல வேலைக்கு சேர சொல்லி கடுதாசி வந்துதோன்னோ நீ போலயா அங்க”.????.

“அத்த அது சென்னை பேர் மாத்தி ரொம்ப வருஷம் ஆறது” … நீ இன்னும் மெட்ராஸ் சொல்லி சுத்திண்டு இருக்க”….. அப்புறம் அது கடுதாசி இல்ல இமெயில் “…..

” என்னவோ போட கேசவா நேக்கு இது எல்லாம் ஒண்ணும் புரியரது இல்ல ” … நேக்கு தெரிஞ்சது எல்லாம் நீயும் நம்ம ஆத்து மனுஷாலும் தான் ” .. என்று கூறிய அத்தையை தோளோடு அணைத்துக் கொண்டான் கேசவன்….

” டேய் தொடாதடா என்ன.. எவ்ளோ மடி ஆச்சாரமா கோவில் வந்துண்டு இருக்கேன் என்ன தொட்டுண்டு இருக்க”…

” ரொம்ப தான் பண்ற அத்த நீ ” நானும் கார்த்தாலயே ஸ்தானம் பண்ணிட்டு தான் கோவிலுக்கு வந்தேன்… நானும் மடி தான் விழுப்பு( தீட்டு) ஒண்ணும் இல்ல”….

” கோவில் வந்து பொய் சொல்லாதடா கடன்காரா… கார்த்தால வரும் போது அந்த ரகு சண்டாளன் உன்ன தொட்டு தொட்டு பேசினான் தான நான் தான் பாத்துண்டே இருந்தனே”…..

“ஏன் அத்த உனக்கு எப்படி அத்த அவ்ளோ தூரத்துலயும் கண் நன்னா தெரியரது “.??.. ” அப்புறம் படி ஏறும் போது கை குடுடா கேசவா ஏற முடியல சொன்னியோன்னோ அப்ப விழுப்பு தெரியலயா நோக்கு”…….

“மறந்து போய்டேண்டா”…

” உனக்குன்னா மட்டும் ஒரு நியாயம் இல்லையா ” அது சரி அத்த ஒரு வேலை எனக்கு இந்த இன்டர்வியூல வேல கிடைச்சு சென்னைல இருந்து ஒரு நல்ல பொண்ணு நம்ப ஆத்து மாட்டுப்பொண்ணா வந்தா நீ என்ன அத்த செய்வ”?????

” டேய் அறிவு கெட்டவனே என்ன பேச்சு பேசிண்டு இருக்க கன்றாவியா..!!!! அதுவும் கோவில்ல வந்து அபிஷ்டு ” ….உன் வாயில வசம்ப வைச்சு தேய்க” !!!!!! கேசவனை திட்டிக் கொண்டே படி வேகமாக ஏறினாள் அம்புஜம் அத்தை….. அதுதான் நடக்க போகிறது என்று அறியாமல்…..

இருவரும் பேசிக்கொண்டே படி ஏறிவர மூச்சு வாங்க சிறிது நேரம் நின்று விட்டு கோவில் உள்ளே சென்றனர் இருவரும்…..

” பகவானே இந்த பையனுக்கு நல்ல புத்திய குடு … தெர்ஞ்சோ தெரியாமலோ என்னவோ பேசிட்டான்…. இந்த குடும்பத்துக்கு எந்த கஷ்டமும் வராம பாத்துக்கோ
பிள்ளையாரப்பா”…..

அதற்குள் கோவில் குருக்கள் வர

” என்ன மாமி எப்பவும் போல மருமான் பேருக்கு தான அர்ச்சனை”!!!…..

“ஆமாம் குருக்களே மருமானுக்கு மெட்ராஸ்ல உத்யோகம் கெடச்சு இருக்கு அதான்”……

” அதுக்கென்ன குடுங்கோ பேஷா பண்ணிடலாம்”…….

” டேய் தத்து பித்துன்னு ஒளராம நன்னா பகவான சேவிச்சுக்கோ”….. நான் எப்படி இப்ப போறனோ அப்படியே புத்தி மாறாம திரும்பி வரணும்னு” … என்று சொன்ன அத்தையை பார்த்து தலையாட்டி வைத்தான் கேசவன்……..

இந்த சென்னை வேலை தான் அவன் தலையெழுத்தை பிரட்டி போட போவது அறியாமல் இருவரும் பிள்ளையாரை வணங்கிவிட்டு ஓரிடத்தில் அமர்ந்தனர்…..

தொடரும்…….

4 thoughts on “தொடுவானமாய் உனை பார்க்கிறேன்-1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *