Skip to content
Home » தொடுவானமாய் உனை பார்க்கிறேன்-2

தொடுவானமாய் உனை பார்க்கிறேன்-2

தொடுவானமாய் உனை பார்க்கிறேன் 2

“அத்தை உன்கிட்ட ஒண்ணு கேட்கவா??? மறைக்காம நேக்கு உண்மைய சொல்லுவியா”????

” கேளுடா கேசவா உன்னாண்ட என்னிக்கு நான் பொய் பேசி இருக்கேன் … இந்த ஜீவனமே நீ போட்ட பிச்சை டா கொழந்த (குழந்தை) உன்கிட்ட நேக்கு மறைக்க என்ன இருக்கு சொல்லு “????

” ஏன் அத்த பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிண்டு இருக்க..???அது எல்லாம் எதுவும் இல்ல …. நான் இல்லன்னா உன்ன வேற யாரவது நன்னா பார்த்துண்டு இருப்பா”…….” நீ பேச்ச மாத்தாம நான் கேக்கறத்துக்கு பதில் சொல்லு”…!!!.

” என்ன கேக்க போற?? உனக்கு என்று பதில் சொல்லணும்”???

” நோக்கு கல்யாணம் ஆகும் போது அத்திம்பேரை (அத்தை வீட்டுக்காரர், அக்கா வீட்டுக்காரர் இரண்டு பேரையும் இப்படித்தான் கூப்பிடுவாங்க) நோக்கு புடிச்சு இருந்துதா”????

” உன்னோட அத்திம்பேரை நான் கல்யாண நேரத்துல மாங்கல்ய தாரணம் செய்யறச்சே தான் பார்த்தேன் “….

” என்ன அத்த சொல்ற அதுவரைக்கும் நீ அத்திம்பேரை பாக்கவே இல்லையா “???

“இல்லடா கேசவா நம்ம ஆத்துல அது எல்லாம் வழக்கம் கெடையாது”….

” சரி நம்ம ஆத்து கல்யாணம் வழக்கம் சொல்லு அத்த நேக்கு “…..

” என்னடா இப்படி கேக்ற.. இன்னிக்கு நோக்கு என்னமோ ஆயிடுத்து “!!!கார்த்தாலைல (காலைல) இருந்து நீ நடந்துக்கறது ஒன்னும் சரியா படல பார்த்கோ …. நாழி ஆயிடுத்து வா ஆத்துக்கு போலாம்”….

” அதெல்லாம் ஆகல நீ சொல்லு… நான் கேட்கிறேன் இல்லன்னா வேற யாரயாவது நல்ல பொண்ணா நம்மளவா இல்லாம அழச்சிண்டு வந்துடுவேன் “….

” டேய் அபிஷ்டு என்னவோ ஒளரிண்டு இருக்க… அதுவும் கோவில வச்சு என்ன பேசிண்டு இருக்க “????

” நீ சொல்லு “

“இப்ப நோக்கு என்ன தெரியணும்”???

” நோக்கு விவாஹம் எப்படி நடந்தது… எத்தனை நாள் நடந்தது… நம்ம வழக்கம் எத்தன நாள் “….

” அது இருக்கும்டா கொழந்த … காசு இருக்கறவா அஞ்சு நாள் பண்ணுவா… இல்லாதவா மூனு நாள் பண்ணுவா”…. நேக்கு அஞ்சு நாள் நடந்ததுடா… நம்ம ஆத்துல
ஜே ஜே ன்னு ஒரே மனுஷாதான்… ஊசி விழுந்தா கூட தேட எடம் இருக்காது….

” நம்ம ஆம் (வீடு) தான் பெருசு ஆச்சே…. அவ்ளோ ஜனமா நம்ம கிட்ட இருந்தா” ….

“ஆமாம் கேசவா நம்ம ஜனம் நம்ம அக்ரஹாதத்து ஜனம் எல்லாருக்கும் போஜனம் நம்ம ஆத்துல தான்”….. நேக்கு விவாஹம் பந்த கால்ல ஆரம்பிச்சு மொத்தம் முப்பத்து அஞ்சு சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தது”….

” முப்பத்து அஞ்சா என்ன அத்த சொல்ற”…. (எங்க பாட்டி சொன்னது தான் பா சத்தியமா இது எல்லாம் இப்ப நடக்குதான்னு எனக்கு தெரியாது)…..

“ஆமாம் என்ன என்னனு சொல்றேன் கேட்டுக்கோ … இது எல்லாம் நோக்கு செய்ய எனக்கு ரொம்ப ஆசைடா கொழந்த”……. பந்த கால் முகூர்த்தம் அதுல இருந்து மங்கல ஆர்த்தி வரைக்கும் இருக்கும்”…

..
நாளைக்கு எல்லாத்தையும் சொல்லிடறேன் பிரண்ட்ஸ்…

தொடரும்……

3 thoughts on “தொடுவானமாய் உனை பார்க்கிறேன்-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *